சச்சின், யுவராஜ், சேவாக், சஹாரா: யாருக்கு பாடை கட்டுகிறார்கள்?
இந்திய கிரிக்கெட் அணிக்கு புரவலராக நீண்ட காலமிருக்கும் சுப்ரதோ ராய் தலைமையிலான சஹாரா குழுமம் சில்லறை வர்த்தகத்தில் இறங்கியதற்காக தயாரிக்கப்பட்ட விளம்பரம் ஒன்று இப்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது
அல்லிராணி அட்டகாசத்திற்கு பல்லக்கு தூக்கும் பத்திரிகைகள்!
அல்லிராணி ஆட்சியில் இருமுபவனுக்கும் இம்சை என்பதாக பாசிச ஜெயா சமீப காலமாக தன்னை மயிலிறகால் விமரிக்கும் தலைவர்கள் அவற்றை வெளியிட்ட ஊடகங்கள் மீது வழக்கு மேல் வழக்காய் போட்டுத் தாக்குகிறார்.
ஏர் இந்தியா- மண்ணெண்ணை: விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்பந்தம் உண்டுன்னு சொன்னது யாரு?
மேட்டுக்குடியினருக்காக ஆளே ஏறாத வழித்தடங்களில் புதிய விமானங்கள் வாங்கி பல ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தை மடை மாற்றி விடும் இந்திய அரசு, ஏழைகளுக்கு நியாய விலையில் மண்ணெண்ணெய் வழங்க வக்கற்றிருக்கிறது.
ஆனந்த விகடனும் அவாள் மொழியும்!
பொதுத் தமிழில் இருந்த மணிப்பிரவாளக் கொலை நடையை திராவிட இயக்கம் ஒழித்தது. பின்னர் பார்ப்பன எதிர்ப்பு இயக்கத்தின் சமூக போராட்டம் காரணமாக பார்ப்பனரல்லாத தமிழர்களின் மொழி பொது மொழியாக உருப்பெற்றிருக்கிறது
“எனிசி கோனியாக்”: என்ன சரக்கு இல்லை எங்கள் டாஸ்மாக்கில்…!
ஒரு நாளைக்கு 28 மணிநேரமும் உழைக்கும் புரட்சித் தலைவயின் பொற்பாத ஆட்சியில் மட்டுமே இத்தகைய சாதனைகள் நடக்கும் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொண்டு அடங்கி ஒடுங்கி நடக்க வேண்டும்.
அமெரிக்கா வீணாக்கும் உணவின் மதிப்பு – 9 இலட்சம் கோடி ரூபாய்!
ஏழை நாடுகள் பட்டினியால் சாகின்றன. அமெரிக்காவோ தின்ன முடியாமல் விரயமாக்குகிறது. உலக முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் சாதனை இது!
தென்னாப்பிரிக்கா மரிக்கானாவில் 37 சுரங்கத் தொழிலாளர்கள் படுகொலை!
மரிக்கானாவில் வேலை நிறுத்தம் செய்த 34 சுரங்கத் தொழிலாளர்களை போலீஸ் படையினர் கொடூரமாக படுகொலை செய்தனர். மேலும் 78 பேர் படுகாயமடைந்தனர். 259 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டுக் கோழிப்பண்ணை மோசடி: “சத்தியமா தமிழனை யாரும் ஏமாற்றலாம்!”
அதே மோசடி! அதே இடம்! உயிர், பொருள், உரிமையாளர்கள் மட்டும் மாறியிருக்கின்றனர். ஈமு கோழிப் பண்ணை மோசடிக்குப் பிறகு நாட்டுக் கோழிப் பண்ணைகள்!
‘கோல்கேட்’-நிலக்கரி ஊழல்: அமளிகளுக்கு பின்னால் ஒளியும் திருடர்கள்!
தனியார்மயம் என்ற தனிப்பெரும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே என மக்கள் சொத்தான நிலக்கரி வயல்களைக் கொள்ளையடிக்கிறார்கள் தரகு முதலாளிகள்.
‘அம்மாவின்’ இலவச ஆடுகள் ஐயோவென செத்து மடிகிறது!
அம்மா கொடுத்த இலவச ஆட்டில் 450-ஐக் காணோம் என்கிறார்கள் திருப்பூரில் ஆய்வு செய்ய வந்த கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள்
இட ஒதுக்கீடும் தினமணி வைத்தி மாமாவின் மனுதர்ம விஷமும்!
இட ஒதுக்கீட்டை தகுதி, திறமை என்ற பெயரில் எதிர்க்கும் ஆதிக்க சாதியினரின் வாதங்களைத்தான் வைத்தியும் முன்வைக்கிறார். ஆனாலும் பூணூலை மறைக்க முடியவில்லையே?
நிலக்கரி ஊழல்-பாராளுமன்ற அமளி: யாரும் யோக்கியனில்லை!
அதே காட்சி. அதே வசனங்கள். அதே பாத்திரங்கள். அதே சவடால்கள். வரலாறு ஒரு முறை நடந்தால் பரவாயில்லை, திரும்பத் திரும்ப நடந்தால்?
பாகிஸ்தானில் குரானை அவமானப் படுத்தியதாக சிறுமி கைது!
இந்தியாவில் இந்து மதவெறி போல பாகிஸ்தானில் முசுலீம் மதவெறி செல்வாக்கு செலுத்துகிறது. இரண்டு மதவெறிகளையும் ஒழிப்பது இருநாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும்.
இந்திய இராணுவத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு தமிழ் வீரனது போராட்டம்!
சமூகத்தில் நடக்கும் போராட்டத்தின் வீச்சு இராணுவத்தையும் பாதிக்கவே செய்யும். தமிழக வீரர் முத்துவின் போராட்டம் அதை உரக்கத் தெரிவித்திருக்கிறது.
ஏழை ‘இந்து’ மாணவருக்காக பணக்கார ‘இந்து கல்வி வள்ளல்களி’டம் போராடலாமே?
ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் மூன்று நாள் உண்ணா விரதப் 'போராட்டத்தை' 'வெற்றிகரமாக' நடத்தியிருக்கிறார்











