Sunday, October 26, 2025

உத்தராகண்ட்: இஸ்லாமிய பள்ளி சிறுவன் மீதான கொடூரத் தாக்குதல்

0
அர்சலனன் என்கிற அச்சிறுவன் ஒரு நாள் விடுமுறை எடுத்துவிட்டு அடுத்த நாள் பள்ளிக்குச் சென்றுள்ளான். இதற்காக சிறுவனின் வகுப்பு ஆசிரியர் ராகேஷ் சைனி சிறுவனின் முழங்கையில் எலும்பு முறியும் அளவிற்கு ஈவிரக்கமின்றி கம்பால் அடித்துள்ளார். பள்ளியின் முதல்வர் ரவீந்திரனோ தனது ஷூவை சிறுவனின் முகத்தில் வைத்து அழுத்தியுள்ளான்.

கொடூர ஆயுதங்களால் குத்தி கிழிக்கப்படும் காசா குழந்தைகள்

0
காசாவின் மக்கள்தொகையில் 40 சதவிகிதத்திற்கும் அதிகமாக குழந்தைகளே உள்ள நிலையில், அவர்களில் பலர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனைக்கு வருகிறார்கள். மூளையில் சிறு துண்டுகள், மார்பில் தோட்டாக்கள் மற்றும் குண்டு வெடிப்புகளால் சிதைந்த கைகால்களுடன் வரும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம் குறித்து மருத்துவர்கள் விவரித்துள்ளனர்.

ஒடிசா: பா.ஜ.க. ஆட்சியில் தொடரும் பெண்கள் மீதான பாலியல் கொடூரங்கள்!

கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ஒடிசா முழுவதும் 50-க்கும் மேற்பட்ட பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் சிறுமி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் என 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

வக்ஃப் திருத்தச் சட்டம்: பாசிச கும்பலுக்கு பச்சைக்கொடி காட்டும் உச்சநீதிமன்றம்

0
பாசிச கும்பலின் எதிர்ப்பிற்கு ஆளாகாமல் இருப்பதற்கு சட்டத்தை இரத்து செய்யாமல், சில விதிகளுக்கு மட்டும் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனை எவ்வாறு இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவான நடவடிக்கை என்று வரவேற்க முடியும்? இது இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியாகும்.

மயிலாடுதுறை இளைஞர் சாதி ஆணவப் படுகொலை: தி.மு.க. அரசே குற்றவாளி!

0
தான் தலித் ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தாலும், தன்னுடைய மகள் தலித் இளைஞனை காதலித்து திருமணம் செய்வதை சகித்துக்கொள்ள முடியாத ஆதிக்க சாதிவெறி காரணமாகாவே, விஜயா தனது மகன்கள் மூலம் வைரமுத்துவை ஆணவப் படுகொலை செய்துள்ளார்.

வக்ஃப் சட்டம்: உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவு | இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி | தோழர் ரவி

வக்ஃப் சட்டம்: உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவு | இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி | தோழர் ரவி https://youtu.be/4ZWTG2oFhJc காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

நேபாளத்தில் கிளர்ந்தெழுந்த “ஜென் சி” | தெற்காசியாவைக் குறிவைக்கும் அமெரிக்கா! | தோழர் அமிர்தா

நேபாளத்தில் கிளர்ந்தெழுந்த Gen Z | தெற்காசியாவைக் குறிவைக்கும் அமெரிக்கா! | தோழர் அமிர்தா https://youtu.be/JaS2kz-b7Sk காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

சென்னை: தலித் சிறுவன்மீது சாதிவெறியர்கள் கொலைவெறித் தாக்குதல்!

0
சரவணனும் அவனுடைய சகோதரர் லோகேஷ் இருவரும் சாதிவெறி தலைக்கேறி சிறுவனின் ஆடையைக் கழற்றி நிர்வாணப்படுத்தி, சிறுவன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். சரவணன் என்பவன் சிறுவனின் சாதியைக் குறிப்பிட்டு இழிவான முறையில் வசைபாடிக் கொண்டே அடித்துள்ளான்.

ஐ.ஐ.எம். உதய்பூரில் இஸ்லாமிய மாணவன் மர்ம மரணம்

0
“அந்த அறையின் உயரத்தைப் பார்த்தால், ஒரு குழந்தை கூட தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ள முடியாது. என் சகோதரர் உயரமாகவும் பெரியவராகவும் இருப்பார். அந்த மின்விசிறியில் அவர் தொங்குவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை” என்று ஐ.ஐ.எம். உதய்பூர் நிர்வாகத்தின் முகத்திரையைக் கிழித்தார்.

மோடி அரசின் E20 திட்டம்: கேள்விக்குறியாகும் உணவுப் பாதுகாப்பு

0
தற்போது அமல்படுத்தப்படும் E20 திட்டத்திற்கு கரும்பிலிருந்து 55 சதவிகிதம் எத்தனாலும், அரிசி போன்ற தானியங்களிலிருந்து 45 சதவிகிதம் எத்தனாலும் எடுக்கப்போவதாக மோடி அரசு கூறியுள்ளது. ஏற்கெனவே, இத்திட்டதிற்காக 2024-2025ஆம் ஆண்டில் 52 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை மோடி அரசு ஒதுக்கியுள்ளது.

நெல்லை சிறப்பு வரிவசூல் முகாம்: வரிகள் மக்களுக்கான திட்டங்களாக மாறுவதில்லை!

நெல்லை மாநகரம் 'ஸ்மார்ட் சிட்டி' ஆனபின் சொத்துவரி உள்ளிட்ட வரிகள் கூடியுள்ளது. ஆனால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை.

உத்தரப்பிரதேசம்: தலித் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் சாதிய அடக்குமுறைகள்!

0
பா.ஜ.க-வை சேர்ந்த யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தில் தலித் மக்கள் தன்னுடைய பணத்தைத் திருப்பிக் கேட்டதற்காகவும், பொதுசாலையில் ஆடு அசுத்தம் செய்ததற்காகவும் ஆதிக்கச் சாதிவெறியர்களால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

கத்தார் மீது வான்வழித் தாக்குதல்: இஸ்ரேலின் ரவுடித்தனம்!

இத்தாக்குதலானது ஹமாசுடனான அமெரிக்காவின் பேச்சுவார்த்தையின் போலித்தன்மையை அம்பலப்படுத்துவதாக அமைந்துள்ளது.

பழங்குடிகள், சுற்றுச்சூழலை காவு கொடுக்கும் ‘கிரேட் நிகோபார் திட்டம்’

166 சதுர கி.மீ. பரப்பில் ரூ.92 ஆயிரம் கோடி மதிப்பில் துறைமுகம், பன்னாட்டு விமான நிலையம், அனல் மின்நிலையம், நகரியம் (Township) முதலானவற்றைக் கட்டமைக்கும் இந்தத் திட்டத்தால், அந்தமானில் வசிக்கும் பழங்குடியினருக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படலாம் எனப் பலரும் எதிர்ப்புக் குரல்களை எழுப்பியுள்ளனர்.

இஸ்ரேலிய இனவெறி பாசிஸ்டுக்கு சிவப்பு கம்பளம் விரித்த மோடி அரசு!

0
மேற்கத்திய நாடுகளால் தங்களது நாட்டிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள இனவெறி பாசிஸ்டான இஸ்ரேல் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச்-ஐ தான் செப்டம்பர் 8 ஆம் தேதியன்று பாசிச மோடி அரசு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளது.

அண்மை பதிவுகள்