பெங்களூரு: நடைபாதை வியாபாரிகளை அகற்றுவதற்கு எதிராக 500 ஆர்வலர்கள் கடிதம்
பெருநகரங்களிலிருந்து உழைக்கும் மக்களை விரட்டியடிக்க வேண்டுமெனில், அம்மக்களுக்கான மலிவான வாழ்வாதாரக் கட்டமைப்பைத் தகர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் தெருவோர வியாபாரிகள் வெளியேற்றப்படுகின்றனர். இது, பூர்வகுடி மக்களாலும் உழைக்கும் மக்களாலும் கட்டியெழுப்பப்பட்ட பெங்களூரு நகரத்தை கார்ப்பரேட்டுகளுக்கும் மேட்டுக்குடிகளுக்கும் தாரைவார்க்கும் சதித்திட்டத்தின் அங்கமாகும்.
நெல்லை ராதாபுரத்தில் தார் தொழிற்சாலை அமைப்பதற்கு மக்கள்-விவசாயிகள் எதிர்ப்பு!
இக்கிராமத்தில் பல ஆண்டுகளாக விவசாயம் நடைபெற்று வருகிறது. தொழிற்சாலை அமைவிடத்தில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வடக்குக்குளம் மழைநீரைச் சேமித்து, சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கும் நிலத்தடி நீர் வளத்திற்கும் முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. இங்கு தார் தொழிற்சாலை செயல்பாட்டிற்கு வந்தால் விவசாய நிலங்கள், பயிர்கள், மண் வளம், நிலத்தடி நீர் வளம் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
மேற்குவங்கம்: மார்க்சிய ஆய்வாளர் ராகுல் சாங்கிருத்தியாயன் சிலையை அகற்றிய காவி கும்பல்
பாசிச கும்பல் திட்டமிட்ட சதியின் பேரில், கடந்த ஜூலை 13 அன்று இரவு அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை செயலிழக்கச் செய்து, தெருவிளக்குகளை அணைத்துவிட்டு தோழர் சாங்கிருத்தியாயனின் சிலையை உடைத்து அகற்றியுள்ளது.
செங்கல்பட்டு: ஊனைமாஞ்சேரி, நல்லம்பாக்கம் ஊராட்சிகளில் இயங்கும் சட்டவிரோத கிரஷர்களைப் பறிமுதல் செய்!
சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல் மூடி போடாமலும், தண்ணீர் ஊற்றி அரைக்காமலும் திறந்தவெளியில் சக்கை கற்கள், ஜல்லி கற்கள், எம்சாண்ட் அரைப்பதால் இதிலிருந்து கரும்புகை மற்றும் நச்சுத்தன்மை வாய்ந்த புகை வெளியேறுகிறது. இதனால் ஊனைமாஞ்சேரி, கொளப்பாக்கம், நெடுங்குன்றம் நல்லம்பாக்கம், கீரப்பாக்கம் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சுவாச கோளாறு மற்றும் கேன்சர் உள்ளிட்ட பல்வேறு நோய்களினால் பாதிக்கப்படுகின்றனர்.
ஆகாஷ் கொட்டடிப் படுகொலையின் 100-வது நாள்: புரட்சிகர அமைப்புகளின் வலுவானதொரு கண்டனம்!
தலித் மக்களிடமும், முன்னேறிய உற்பத்தி சக்திகளிடமும் ஏற்பட்டிருக்கும் சமூக எழுச்சியின் ஓர் அங்கமாக ஆகாஷ் அமைந்துள்ளார். உள்ளூரில் காணும் அநீதிகளைத் தட்டிக் கேட்பது, ஆதிக்கச் சாதிவெறியர்களுடன் துணிந்து நேருக்கு நேர் மோதுவது என அவர் செயல்பட்டுள்ளார். சாதி கடந்து காதலித்த தலித் இளைஞர் கவின் ஒரு பக்கம் என்றால், சாதிவெறியர்களுக்கு எதிராக களத்தில் மோதிய ஆகாஷ் இன்னொரு பக்கம்.
கள்ளக்குறிச்சி கணையார்: ஆக்கிரமிப்பு என்று கூறி வீடுகளை இடிக்கும் அரசு
இந்த இடத்தை நீர் நிலை பிடிப்பு என்று சொல்லி மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை மக்கள் அதிகார கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. வீடுகளை இடிப்பதை உடனடியாக நிறுத்தி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.
புதிய தலைமுறை ஊடகவியலாளர் விஜயன் மீதான போலீசு அடக்குமுறை – ம.அ.க. கண்டனம்
தனக்கு வேண்டாதவர்கள் மீது பல்வேறு வழக்குகளைப் போட்டு கைது செய்வதில் ஜெயலலிதாவை மிஞ்சக் கூடிய வகையில் விஜய்யின் செயல்பாடுகள் இருக்கின்றன. ஊடகவியலாளர் விஜயன் சட்ட விரோதமாக விசாரணைக்கு அழைக்கப்பட்டு சட்டவிரோதமாக போலீசால் தடுத்து வைக்கப்பட்டதை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
கும்மிடிப்பூண்டியில் மீண்டும் தொழிற்சாலை விபத்து: ஆலை நிர்வாகமும், அரசுமே குற்றவாளிகள்!
விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது தெரிந்தும் நிறுவனத்தை அலட்சியமாகக் கையாண்ட அரசும், பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாமலும், குறிப்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்த பின்பும் விதியை மீறி ஆலையை இயக்கிய ஆலை நிர்வாகமுமே முதன்மையான குற்றவாளிகள்.
19-ஆம் ஆண்டில் வினவு: பாசிச எதிர்ப்பில் தொடரும் பயணம்..
அன்பார்ந்த வாசகர்களே, நேயர்களே!
உழைக்கும் மக்களின் இணையக் குரலாய் ஊடகத்துறையில் ஒலித்துக் கொண்டிருக்கும் “வினவு” வலைத்தளம் ஜூலை 17, 2026 அன்றுடன் அதன் 19-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
அரசு விழாக்களில் இசுலாமிய விரோத வந்தே மாதரம் பாடல் கட்டாயம்! மோடி அரசின் சர்வாதிகார நடவடிக்கையை முறியடிப்போம்!
இஸ்லாமிய மக்களுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மோடி அரசு இப்பொழுது வந்தே மாதரம் பாடலை கட்டாயம் ஆக்குவதுடன் அப்பாடலைப் பாட மறுப்போருக்கு எதிராக வந்தே மாதரம் ‘அவமதிப்பு’ என சட்டத் திருத்தம் மேற்கொண்டு அதன் மூலம் சிறுபான்மை மக்களையும் ஜனநாயக சக்திகளையும் ஒடுக்கவும் ஒழிக்கவும் சதி செய்து வருகிறது.
மீண்டும் பரவியது டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம்! கோடாலி கிராம மாணவர்கள் போராட்டம் பரவட்டும்!
கோடாலி டாஸ்மாக் கடை மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதை மக்கள் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகவே மக்கள் அதிகாரக் கழகம் கருதுகிறது. எனினும் இதுவரை போராடிய மக்களின் கருத்துகளுக்குச் செவி சாய்க்காத வி.ஏ.ஓ., ஆர்.டி.ஓ. உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீஸ் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
🔴நேரலை: நக்சல்பாரிப் புரட்சியாளர் தோழர் கதிரவன் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி
🔴LIVE: நக்சல்பாரிப் புரட்சியாளர் தோழர் கதிரவன் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி
நாள்: 15.07.2026
நேரம்: காலை 10:30 மணி
இடம்: ஆலங்குளம் முதல் நிறுத்தம், தொலைபேசி நகர் 2-வது தெரு, குலமங்கலம் சாலை, மதுரை.
https://youtube.com/live/aBBrYDxRG1M
இறுதி ஊர்வலம்:
https://www.facebook.com/vinavungal/videos/1346535676991424
நேரலையைப் பாருங்கள்!...
நக்சல்பாரிப் புரட்சியாளர் தோழர் கதிரவனுக்கு சிவப்பஞ்சலி!
தோழர் கதிரவனின் பங்களிப்பை அவர் வகித்த பொறுப்புகளின் பட்டியலால் மட்டும் அளவிட முடியாது. சாதியாதிக்கம் நிறைந்த ஒரு வட்டாரத்தில் உழைக்கும் மக்களோடு இணைந்து அமைப்பைக் கட்டியதும், சாதாரண கிராமப்புற இளைஞர்களை அரசியல் உணர்வும் கம்யூனிசத் தியாகப் பண்பும் கொண்ட தோழர்களாக வளர்த்ததும், கலை இலக்கியத்தை மக்களின் போராட்ட ஆயுதமாக மாற்றியதும் அவரது அரசியல் வாழ்க்கையின் மகத்தான பங்களிப்புகளாகும்.
தோழர் கதிரவன் அவர்களுக்கு சிவப்பஞ்சலி! | தோழர் சிகப்பி
எங்கள் வர்க்க உணர்வும் போராட்ட உணர்வும் வற்றவில்லை. அவற்றை வற்றாமல் வளர்ப்பதற்கு தோழர் கதிரவனின் திட்டமிடலும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பும் தான் காரணம். அந்த பத்து நாள் அனுபவம் மேலும் பல சிறைகளுக்கு என்னை போக ஊக்கமளித்தது. சிறையில் 'நாம் என்ன செய்யவேண்டும்' என எனக்கு கற்றுத்தந்தது தோழர் கதிரவன் தான்.
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் கதிரவன் அவர்களுக்கு சிவப்பஞ்சலி || Live Blog
நக்சல்பாரி புரட்சியாளர் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மேனாள் பொதுச் செயலாளர், மூத்த தோழர் கதிரவன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இன்று (13.07.2026) காலை 11:30 மணியளவில் மறைந்தார்.
தோழரின் பங்களிப்பு குறித்த...

























