கிறங்கடிக்கும் கீழடி: வி.இ.குகநாதன் | மீள்பதிவு
எல்லாவற்றையும் விட ஒரு மொழியின் தொன்மையினை விடத் தொடர்ச்சியே முதன்மையானது. எனவே முடிந்தளவிற்குத் தமிழை வாழ்க்கையில் பயன்படுத்துவதுடன், இதனை வருங்காலத் தலைமுறைகளிற்கும் கடத்தவும் வேண்டும்.
தை முதலே தமிழ்ப் புத்தாண்டு : வி.இ.குகநாதன் | மீள்பதிவு
தமிழர் புத்தாண்டு தை முதல் நாளா? அல்லது சித்திரையா? என்ற விவாதம் தொடர்ந்து வருகிறது. அதற்கான இலக்கிய மற்றும் அறிவியல் ஆய்வு பார்வையை முன் வைக்கிறது இக்கட்டுரை.
மகளிர் தினம் : வெறும் கொண்டாட்டமல்ல.. உரிமையை மீட்கும் நாள்! | மீள்பதிவு
கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, சம ஊதியம் போன்ற எல்லாவற்றிலும் போராட வேண்டிய நிலையில் உள்ள இவ்வேளையில் மகளிர் தினம் கொண்டாட்டத்தை முன்னெடுப்போம் உரிமைகளை கோரி...
மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் யுஜிசி
மத்திய அரசின் மூலம் நியமிக்கப்பட்ட ஆளுநர், தான் விரும்பும் எந்தக் கல்வியாளர் அல்லாத நபரையும் மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களாக ஆக்கும் ஆபத்து உள்ளது.
காலம் உருவாக்கிய தலைவர் இமானுவேல் சேகரன்
தற்பொழுது தேவேந்திர குல வேளாளர் மக்கள் மத்தியில் அதிகமாய் பரவிக் கொண்டிருக்கும் ஆண்ட பரம்பரை மனநிலை என்ற கொடிய நோயை அன்றே எதிர்த்து “ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வுரிமை கழகம்” ஒன்றை உருவாக்கி அதன்மூலம் சாதி மறுப்பு திருமணம், விதவை மறுமணம் போன்ற சனாதனத்தின் கொடூர விளைவுகளை போக்கத் துணிந்தது நின்றார், இமானுவேல் சேகரன்.
தேசியக்கொடியும் சாதியும் – பாகம் 1 | என் நினைவுக் குறிப்பு – 4 | கருணாகரன்
இதுவரை கோவில் திருவிழா, காதணி விழா, திருமண விழா போன்ற தனிமனிதர்களின் நிகழ்ச்சிக்காக சந்தோசங்களுக்காக மட்டும் போஸ்டர் ஒட்டிய இந்த மக்கள் முதல் முறையாக தங்களின் உரிமைக்காகவும் போஸ்டர் ஒட்ட தொடங்கினர்.
மலையகம் 200
மனிதர்கள் வாழாத மத்திய இலங்கைப் பகுதிக்குள் கொண்டுசெல்லப்பட்ட இம்மக்களின் குருதியிலும் வேர்வையிலும் கண்ணீரிலும் சாலைகள், தொடர் வண்டிப் பாதைகள் உள்ளிட்ட இலங்கையின் உள்கட்டுமானங்கள் உருவாயின.
உடைக்கப்படாத சுவர்கள்; பூட்டிய கதவுகள் | என் நினைவுக் குறிப்பு – 3 | கருணாகரன்
எங்களது கால்பட்ட இடம் தீட்டுப்பட்டுவிட்டது என்று அவர்கள் சொல்லிய போது நான் என் கால்களை பார்த்தேன். என் கால்கள் அப்படி கேவலமாக எதையும் மிதித்து கொண்டோ எதையும் செய்து கொண்டோ அங்கே வரவில்லை. அந்த கால்கள் மிகவும் சுத்தமாக இருந்தது, அதுவும் செருப்பு போட்டுக் கொண்டு.
பழவேற்காடை அழிக்கப்போகும் அதானியின் துறைமுக விரிவாக்கம்
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்திக் கொடுத்துவிட்டால் ஒன்றிய அரசிடமிருந்து சுற்றுச்சூழல் அனுமதியோ, தேசிய காட்டுயிர் வாரிய அனுமதியோ பெறுவது அதானி நிறுவனத்திற்கு மிகவும் எளிய காரியாமாகி விடும்.
கல்வி ஒரு மாயை.. | என் நினைவுக் குறிப்பு | களம் -2 | கருணாகரன்
... எனது அக்காவிடம் இதனைப் பற்றி சொல்ல அவள் சொன்னால் இது இப்படித்தான் இருக்கும், காரணம் அவங்க எல்லாம் மேல் சாதியை சேர்ந்தவர்கள் நாம அவங்களுக்கு கொஞ்சம் கீழே இருக்கிறோம், அதனால கொஞ்சம் கீழ்தரமா தான் தெரியும்...
கல்வியும் சாதியும்.. என் நினைவுக் குறிப்பு -1 | கருணாகரன்
அவர் எங்கள் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த என் சித்தியை பார்த்து பெயர் சொல்லிக் கூட அவரை அழைக்காமல் ஏதோ ஒரு வார்த்தையை, அதுவும் ஒரு தரம் கெட்ட வார்த்தையை போட்டு அழைக்க, அது என்னை திக்குமுக்காட செய்தது.
நிலக்கரிச் சுரங்கம் தோண்ட அதானிக்கு உதவிய மோடி: அம்பலப்படுத்திய வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ்
ஹஸ்தேவ் நிலக்கரிச் சுரங்கத்தின் (Phase 2) திட்டப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமானால், 2,700 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காடுகள் நிலக்கரிச் சுரங்கத்திற்கு அழிக்கப்படும்.
மலையகத் தமிழ் மக்களை “இலங்கை வாழ் இந்தியத் தமிழர்” என குறிப்பிடுவது திட்டமிட்ட உள்நோக்கமுடையது | இலங்கை பு.ஜ.மா.லெ....
மலையக தேசிய இனம் இலங்கையின் பொருளாதாரத்திற்கும் அபிவிருத்திக்கும் மிகப்பாரிய பங்களிப்பை நீண்டகாலமாகவே செய்து வருகின்றனர். அவர்கள் இலங்கையின் குடிமக்கள் என்பதை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி ஆணித்தரமாக வலியுறுத்துகிறது.
சோசலிசம் அல்லது கம்யூனிசம் என்றால் என்ன? | சு.விஜயபாஸ்கர்
சுரண்டலற்ற, தங்கள் பொறுப்பையும், கடமையையும் உணர்ந்த, ஒருவரை ஒருவர் ஏய்த்துப் பிழைக்கும் பண்புகள் இல்லாத குடிமக்களை உருவாக்குவதே சோசலிசத்தின் லட்சியம்.
ரிஷி சுனக் – வந்தேறியின் வெற்றியா? வரவிருக்கும் நெருக்கடியின் அடையாளமா? | சு.விஜயபாஸ்கர்
முதலாளித்துவம் உருவாக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு முதலாளித்துவ உலகில் இருந்து வராது. மாறாக பிரச்சினைகளை திசை திருப்பும் அல்லது “வலது சாரித் தீவிரவாதம்” போன்று வேறு பிரச்சினைகளை உருவாக்கும். எண்ணெய்ச் சட்டியில் இருந்து எரியும் அடுப்புக்குள் குதிப்பதற்கு ஒப்பானது அது.