Monday, January 19, 2026

கார்ப்பரேட் – பா.ஜ.க. கூட்டுக் கொள்ளை: தேர்தல் பத்திரங்களுக்குப் பதிலாக அறக்கட்டளைகள்!

தேர்தல் நிதிப்பத்திரங்கள் தற்போது ஒழிக்கப்பட்டாலும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் கொள்ளை வேறு வழியில் தொடர்கிறது. சட்டம், நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என அனைத்தும் இந்த "கூட்டுக்கொள்ளைக்கு" உடந்தையாக மௌனம் காக்கின்றன.

மக்கள் திரள் வழியை உயர்த்திப் பிடித்த மாநில அமைப்புக் கமிட்டியின் பொன்விழா ஆண்டு

1
எமது அமைப்பின் பொன்விழா ஆண்டைக் கடைப்பிடிப்பதன் மூலமாக, எமது அமைப்பின் வரலாற்றுணர்வை மட்டுமல்ல, சமகால நக்சல்பாரி இயக்கத்தின் வரலாற்றுணர்வையும் எமது தோழர்களுக்கும் புரட்சிகர, ஜனநாயக சக்திகளுக்கும் கடத்துகிறோம்.

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு ஆதரவாகச் செயல்படும் டெல்லி உயர்நீதிமன்றம்!

“எனது குடும்ப உறுப்பினர்கள், வழக்குரைஞர்கள், வழக்குடன் சம்பந்தப்பட்ட சாட்சிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு ஏற்கெனவே திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த சூழலில், செங்கரின் தண்டனையை நிறுத்தி வைத்த நீதிமன்றத்தின் தீர்ப்பானது எனது குடும்பத்திற்கு மரணத்தை ஏற்படுத்துவதற்கு நிகராகும்” - டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து பாதிக்கப்பட்ட பெண்

பணி நிரந்தரம் கோரி செவிலியர் போராட்டம் || Live Blog

பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்கள் “தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம்” சார்பாக டிசம்பர் 18 முதல் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதாக...

பணி நிரந்தரம் கோரும் செவிலியர் போராட்டம் வெல்லட்டும்! | ம.அ.க.

பாசிச சக்திகள் மென்மேலும் வளரக்கூடாது என்பதில் போராடும் இயக்கங்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாடு அரசுக்கும் அந்த பொறுப்பு வேண்டும். தனியார்மய - தாராளமய - உலகமய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது,போலீசு ஆட்சியை நடத்துவது ஆகியவை பாசிச சக்திகளுக்குப் பயன்தரக்கூடியவையாகும்.

SIR உணர்த்துவது என்ன? | வேட்பாளர்களை ஒழித்து கட்ட ED,EC! | வாக்காளர்களை ஒழித்துக் கட்ட SIR

SIR உணர்த்துவது என்ன? வேட்பாளர்களை ஒழித்து கட்ட ED,EC! வாக்காளர்களை ஒழித்துக் கட்ட SIR https://youtu.be/FWb0tNIWZtU காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

கேரள சர்வதேச திரைப்பட விழா (IFFK): 19 திரைப்படங்களுக்குத் தடை விதித்த பாசிச கும்பல்

கேரள சர்வதேச திரைப்பட விழா (IFFK): 19 திரைப்படங்களுக்குத் தடை விதித்த பாசிச கும்பல் https://youtu.be/B3x0orXyNVs காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

போராடிய ஒப்பந்த செவிலியர்களைக் கைது செய்த தி.மு.க அரசு! வேண்டும் ஜனநாயகம்!

0
கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த செவிலியர்களின் சட்டையைப் பிடித்து இழுத்தும், பெண் செவிலியர்களை வலுக்கட்டாயமாக இழுத்தும் மனிதாபிமானமற்ற முறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்களை போலீசைக் கொண்டு கைது செய்து அடாவடித்தனமாக வாகனங்களில் ஏற்றிச்சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு, அங்கிருந்து ஊருக்கு போகும்படி தெரிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம்: மண்ணைக் கவ்விய காவி கும்பல்!

‘முருக பக்தர்’ மாநாட்டு தோல்விக்குப் பிறகு, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இரண்டாவது முறையாக காவி கும்பல் மண்ணைக் கவ்வியுள்ளது. தமிழ்நாடு மக்களின் பார்ப்பனிய எதிர்ப்புணர்வும், களத்தில் புரட்சிகர - ஜனநாயக சக்திகளின் தொடர் போராட்டமும் மீண்டும் வென்றுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு மரணப் பொறியாகும் எஸ்.ஐ.ஆர்.

“ஸ்பெக்ட் ஃபவுண்டேஷன்” (SPECT Foundation) என்கிற அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையானது, ஆறு மாநிலங்களில் குறைந்தது 33 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) தற்கொலை மற்றும் மருத்துவ அவசரநிலை காரணமாக உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

மேற்குவங்கம்: தெருவோர இஸ்லாமிய வியாபாரிகளை தாக்கிய ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள்

0
பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தங்களின் வாழ்வாதாரத்திற்காக இறைச்சி கடைகள், உணவு விற்பனை செய்யும் இஸ்லாமிய மக்கள் மீது காவி குண்டர்கள் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்துவதும், படுகொலை செய்வதும் தொடர்ந்து வருகிறது.

அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டமும் தி.மு.க. அரசின் துரோகமும்!

அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டதின் கீழ் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கி வருவதை தி.மு.க. அரசு பெருமையாக முன்னிறுத்தி வருகிறது. ஆனால், அந்த காலை உணவுத் திட்டத்தில் ஈடுபடுத்தப்படும் அங்கன்வாடி ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தாமலும் காலிப் பணியிடங்களை நிரப்பாமலும் துரோகமிழைத்து வருகிறது.

இண்டிகோ நிறுவனத்திடம் அடிபணிந்த மோடி அரசு!

0
கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பாசிச மோடி அரசுக்கு மக்களின் உயிரைப் பற்றியெல்லாம் கவலை இல்லை என்பது இவற்றின் மூலம் அம்பலமாகியுள்ளது. மேலும், பொதுத்துறை நிறுவனங்கள் கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்க்கப்படுவதன் கோர விளைவுகளையும் இந்நிகழ்வு வெளிக்காட்டியுள்ளது.

SIR பணிச்சுமையால் ரயில் முன் பாய்ந்து பி.எல்.ஓ. தற்கொலை

எதார்த்தத்திற்கு புறம்பாக குறுகிய காலத்திற்குள் வேலைகளை முடிக்க கட்டாயப்படுத்துவது, மிரட்டுவது, பொய் வழக்குகளை பதிவு செய்து கைது செய்வது என நவீன கொத்தடிமைகளை போல நடத்துகிறது தேர்தல் ஆணையம். மேலும், ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பட்டியலிலிருந்து நீக்கிவிட்டு, போலி வாக்காளர்களை சேர்க்க கட்டாயப்படுத்தப் படுவதும் அம்பலமாகி வருகிறது.

எஸ்.ஐ.ஆர். பயங்கரவாதம்!

வாக்காளர் பட்டியல் "சிறப்பு தீவிர திருத்தத்தின்" (SIR) அபாயம், பாசிச பா.ஜ.க. கும்பலின் நோக்கம் மற்றும் பரந்துவிரிந்த திட்டம் குறித்து வினவு வலைத்தளத்தில் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அண்மை பதிவுகள்