விழுப்புரத்தில் ஜெயா – வீட்டுக் காவலில் தோழர் ராஜு !
விழுப்பரத்தில் ஜெயலலிதா பிரச்சாரத்திற்கு வருவதால் மக்கள் அதிகார ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன், தோழர் ரஞ்சித் ஆகியோரை காலை 6-00 மணிக்கு வீட்டில் வைத்து கைது செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.
மக்கள் முதல்வர் – கேலிச்சித்திரம்
பள்ளி மாணவர்களிடம் "மக்கள் முதல்வர் - பொருள் விளக்குக" என்று கேட்டால் எப்படி விளக்குவார்கள்? கேலிச்சித்திரம்!
களச் செய்திகள் – 27/04/2016
திருவள்ளூரில் லெனின் பிறந்தநாள், திருச்சியில் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரம்.
தி.மு.க.வையும் அ.தி.மு.க.வையும் சமப்படுத்துபவர்களின் நோக்கமென்ன ?
தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் சம்பபடுத்துவதன் பின்னே, திராவிட இயக்க அரசியல் மற்றும் கொள்கைகளின் சுவடுகூடத் தமிழகத்தில் இல்லாமல் ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற பார்ப்பனக் கும்பலின் சதி மறைந்திருக்கிறது. இதனை நிறைவேற்ற துக்ளக் சோ தொடங்கி போலி கம்யூனிஸ்டுகள் வரை வெவ்வேறான அரசியல் சக்திகள் வெவ்வேறான பாத்திரத்தை ஆற்றுகின்றன.
சமூக நீதி அரசியல் சாதியை ஒழித்ததா, வளர்த்ததா ?
இட ஒதுக்கீட்டின் மூலம் அதிகாரமிக்க பதவிகளைப் பெற்றவர்களும் ஓட்டுக் கட்சித் தலைவர்களும் ரியல் எஸ்டேட் முதலாளிகள், கல்வி வள்ளல்கள் போன்றவர்களும்தான் சாதியை நிலைநாட்ட வெறித்தனமாக முயற்சிக்கின்றனர்.
மக்கள் நலக் கூட்டணி: அம்மா எங்களை ஏன் கைவிட்டீர் ?
மக்கள் நலக்கூட்டணி, அ.தி.மு.க.வின் பி டீம் என அழைக்கப்படுவதற்குத் தகுதியானது என்பதை வை.கோ, போலி கம்யூனிஸ்டுகளின் கடந்த கால வரலாறு நிரூபிக்கிறது.
தமிழகமெங்கும் டாஸ்மாக் முற்றுகை – படங்கள்
திருச்சி, மதுரை, விழுப்புரம், கோவை- டாஸ்மாக் மண்டல அலுவலகங்கள் முற்றுகைப் போராட்டம் செய்தி, புகைப்படங்கள்.
அம்மா போங்கு – புதிய பாடல் வீடியோ !
“மூடு டாஸ்மாக்கை” என்ற மக்களின் கோரிக்கைக்கு, “ஓபன் தி டாஸ்மாக்” என்று திமிராகப் பதிலளித்த அம்மாவின் போங்காட்டத்தை அம்பலப்படுத்துகிறார் கோவன். புதிய பாடல் வெளியீடு.
இன்று டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகை
சென்னை தாளமுத்து நடராசன் மாளிகை, எழும்பூர், சிட்கோ-துவாக்குடி திருச்சியில் இன்று காலை 11 மணிக்கு டாஸ்மாக் அலுவலகங்கள் முற்றுகை.
போயசுத் தோட்டம்: ஊழலின் தலைமைச் செயலகம் !
தி.மு.க.வின் ஊழல், குடும்ப ஆட்சிக்கு மாற்றாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயா, ஊழலில் யாரும் எட்டவே முடியாத உச்சத்தைத் தொட்டு விட்டார்.
நரகலில் நல்லரிசி தேடாதீர் !
தமது உரிமையையும் அதிகாரத்தையும் நிலைநாட்டிக் கொள்ளும் போராட்டத்தில் மக்களை ஈடுபடுத்துவதுதான், நரகலில் நல்லரிசி தேடும் இந்த அவல நிலையிலிருந்து அவர்களை விடுவிக்கும்.
மூடு டாஸ்மாக்கை ! குமரியில் கிளம்பிய போராட்ட நெருப்பு !
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் கடைகளை அடைக்க அதிகாரம் இல்லை என்று கூறிய அதே அதிகாரிகளை இரண்டு நாட்களுக்கு கடையை மூட வைத்தது மக்கள் போராட்டம்.
படிப்படியான மதுவிலக்கு – ஜெயாவின் ஆணவப் பேச்சு !
படிப்படியான மதுவிலக்கு என்பது மக்களை மடையர்களாகக் கருதும் ஆணவப் பேச்சு! முதல்வர் ஜெயாவின் தேர்தல் நாடகம்! - ஏப்ரல் 20 அன்று டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகை போராட்டம்.
தேசத்துரோக வழக்கை எதிர்த்து தருமபுரியில் ஆர்ப்பாட்டம்
மாநாட்டின் கோரிக்கையான டாஸ்மாக்கை மூடுவது என்பதைப் பரிசீலிக்காமல், பேசியவர்களை மிரட்டுவது, ஒடுக்குவது என்பது, டாஸ்மாக்கால் ஆதாயம் அடையும் சாராய முதலாளிகளுக்கும் ஊழல் ஆட்சியாளர்களுக்கும் ஆதரவாகச் செயல்படுவதாகும்.
அம்மாவின் வந்தனோபசார கடைசி ஆட்டம் !
தமிழக அரசின் கடன் சுமை அதிகரித்திருக்கிறதென்றால், பிடுங்கப்பட்ட வரிப் பணமும், வாங்கப்பட்ட கடனும் கரைந்து போனதற்குக் காரணம் ஜெயா-சசி கும்பல் அடித்திருக்கும் கமிசன் மற்றும் கொள்ளை.