போக்குவரத்து தொழிலாளர்களை வஞ்சிக்கும் அரசு !
தொழிலாளர்கள் மக்களையும் இணைத்துக்கொண்டு மக்களின் பிரச்சினைக்காகவும், தங்களின் உரிமைக்காகவும் போராடுவது ஒன்றே வெற்றிக்கு வழிவகுக்கும்.
கோவணத்தையும் புடுங்கியாச்சு இனி புடுங்க ஒன்னுமில்ல – குருமூர்த்தி ஒப்புதல்
கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் போது நிதியமைச்சகத்துக்கும் அதன் இரகசியப் பிரிவுக்கும் இடையே தகவல்தொடர்பு பிரச்சினைகள் ஏற்பட்டதால் தான் கருப்புப் பண முதலைகள் தப்பித்துக் கொண்டனர் என்கிறார் குருமூர்த்தி
என்னது மறுபடியும் முதல்ல இருந்தா ?
2015 - 16 நிதியாண்டைக் காட்டிலும், 2016 - 17 நிதியாண்டில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 5.4 இலட்சமாக அதிகரித்திருந்தாலும், அவர்களுள் யாரும் பெரிய பண முதலைகள் கிடையாது.
சாதி அரசியலைத் தூண்டும் பாஜகவின் நரித்தனம் !
இந்துத்துவ அரசியல் மூலம் பார்ப்பன மேலாண்மையைத் தன்னிடம் வைத்துக் கொண்டு, சாதிச் சண்டைகளை கிருஷ்ணசாமி, ராமதாஸ் போன்ற பிழைப்புவாதிகளுக்கு அவுட்சோர்ஸ் செய்திருக்கிறது.
பணமதிப்பழிப்பு : மீசை வைத்தால் வீரன் ! மீசையை மழித்தால் ஞானி !
நான்கு இலட்சம் கோடி ரூபாய் பெறுமான கருப்புப் பணத்தை வங்கிக்குள் வரவிடாமல் தடுத்துவிடுவோம் என அப்பொழுது பேசியவர்கள், இப்பொழுது அத்துணை பணமும் வங்கிக்குள் கொண்டுவந்துவிட்டதுதான் எங்களது வெற்றி எனக் கூசாமல் கூறுகிறார்கள்.
சிக்கியது வெள்ளை ! தப்பியது கருப்பு !! – மோடியின் பணமதிப்பழிப்பு !
மலையைக் கெல்லி எலியைப் பிடித்த பழமொழியோடுகூட ஒப்பிடத் தகுதியில்லாதது மோடியின் நடவடிக்கை. மக்களிடமிருந்த சிறுவாடு காசைக்கூட விட்டுவிடாமல் உறிஞ்சிக்கொண்ட மோடியின் நடவடிக்கை, ஒரு சுண்டெலியைக்கூடப் பிடிக்க வக்கின்றித் தோற்றுப்போய் நிற்கிறது.
பெட்ரோலிய விலை உயர்வு – மோடியின் கிழிந்த கோவணத்திற்கு ஒட்டு !
இப்படி மக்களிடமிருந்து கொள்ளையடித்த காசில் தான் மோடி தனது விளம்பரங்களுக்கு மட்டும் ஆயிரம் கோடிக்கும் மேல் செலவழித்துள்ளார்; நாடு நாடாக சுற்றுலா சென்று வருகிறார்.
எம்.எல்.ஏ. நீக்கம் : வெற்றித் தீர்ப்பா ? வடிவேலு வாங்கிய ’கப்’பா ?
ஜெயலலிதாவுக்கும் சங்க பரிவாரத்துக்கும் இடையிலான ஒற்றுமைகளில் தலையாயது என்ன தெரியுமா? கரண்டு கம்பங்களுக்கு நாய் அளிக்கின்ற மரியாதையை ஒத்த மரியாதையை நீதிமன்றம் உள்ளிட்ட எல்லா நிறுவனங்களுக்கும் அளிப்பது தான் !
அரசியல் 420-யும், ஆன்மீக 420-யும் – மோடி, ராம் ரகீம்சிங்
சோப்புக்குமிழிகளைப் போல பஞ்ச் டயலாக்குகளை மட்டுமே அன்றாடம் ஊதிவிடும் ஒரு மனிதனை, பிரதமர் என்று ஏற்கக்கூடிய நாட்டில், ராம்ரகீம் கடவுளாவது சாத்தியமே என்றும் தோன்றுகிறது.
உயிரையும் கல்வி உரிமையையும் பறிக்கும் பார்ப்பனீயம் – மதுரை ம.உ.பா. மையம் அரங்கக் கூட்டம் !
கன்னடப் பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் படுகொலையைக் கண்டித்தும் ஏழை மக்களின் கல்வி உரிமையை வேட்டையாடும் நீட் தேர்வை எதிர்த்தும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரைக் கிளை சார்பில் 16.09.2017 அன்று மாலை 6:00 மணி அளவில் கண்டன அரங்கக் கூட்டம் நடைபெற்றது.
செத்தும் கெடுத்த ஜெயா ! – அழுகி நாறும் அதிமுக !
பொதுச்சொத்தைத் திருடுவதும் அரசு சன்மானங்களைப் பங்கு போடுவதும் தவிர, வேறு கொள்கை எதையும் அறியாத கிரிமினல்கள், எம்.எல்.ஏ.- க்களாக அமர்ந்திருக்கும் அரசாங்கம் இது. இந்த இழிநிலைக்குத் தமிழக அரசியலைத் தள்ளிய குற்றவாளிகளான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை அம்பலப்படுத்த வேண்டிய தருணம் இது.
விவசாயிகளுக்கு 50 காசு தள்ளுபடி ! கேடி ஆதித்யநாத்தின் மோசடி !
எகத்தாளமாக விவசாயிகளை நோக்கி சில்லறைக் காசுகளை வீசுவதற்கு பதில், அவர்களது விளைச்சலுக்கான முறையான விலை நிர்ணயத்தைச் செய்தாலே தாங்கள் வாங்கிய கடனை முறையாக கட்ட முடியும்.
பெஹ்லு கான் கொலையாளிகளை பாதுகாக்கும் ராஜஸ்தான் அரசு !
பெஹ்லு கான் தாக்கப்பட்ட அந்த காணொளிக் காட்சி உண்டாக்கிய உள்ளக் கொதிப்பை விட அந்தக் கொலையாளிகள் எந்தச் சிராய்ப்பும் இன்றி விடுவிக்கப்படுவது அதிகமான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
லாட்டரி மாஃபியா மார்ட்டினுக்கு தமிழக பா.ஜ.க. பாதுகாப்பு !
மோடி போன்ற உயர் மட்ட அளவில் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகள் ஸ்பான்சர் செய்கிறார்கள் என்றால் இங்கே உள்ளூர், மாநில அளவில் மார்ட்டின் போன்றோர் ஸ்பான்சர் செய்கிறார்கள்.
நீட் தேர்வை ரத்து செய் ! – தமிழகம் தழுவிய பிரச்சாரம் !
ஏற்கனவே ‘ஒரே நாடு ஒரே வரி’ என ஜி.எஸ்.டியை திணித்து மாநிலங்களின் பொருளாதார உரிமையை பறித்துவிட்டார்கள். அடுத்து ‘ஒரே நாடு ஒரே மொழி – கலாச்சாரம்’ என இந்தி – சமஸ்கிருத்தத்தை திணிக்க முயற்சிக்கிறார்கள்.