சுப்ரீம் கோர்ட்டு நெருக்கடி முற்றுகிறது ! பாசிச அபாயம் நெருங்குகிறது !
தற்போது பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கும் நீதிபதிகள் புரட்சிக்காரர்கள் அல்ல. அவர்கள் பெரிதும் மதிக்கின்ற மரபுகளையெல்லாம் மீறி பிரச்சினையை சந்திக்கு கொண்டு வந்திருக்கிறார்கள் என்றால் நிலைமையின் தீவிரம் என்ன என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆதார் பாதுகாப்பு ஓட்டைகளை அம்பலப்படுத்திய பத்திரிக்கை மீது வழக்கு !
ஆதார் தகவல்கள் யார் வேண்டுமானாலும் பெற முடியும் என்பதை அம்பலப்படுத்திய ட்ரிப்யூன் பத்திரிக்கை மற்றும் அதன் செய்தியாளர்கள் ரச்சனா கைரா (Rachna Khaira) மீது டெல்லி சைபர் பிரிவு போலீசார் மூலம் வழக்கு போட்டுள்ளது.
பேரிடர் : புயலா – அரசா ? புதிய கலாச்சாரம் ஜனவரி வெளியீடு !
மழை, புயல், சுனாமி முதலான இயற்கைச் சீற்றங்களால் கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கையை விட, அரசாலும் அதன் மறுகாலனியாக்க திட்டங்களாலும் கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகம்.
ஒக்கி புயல் பேரழிவு குறித்த உண்மை அறியும் குழு அறிக்கை !
நிகழ்ந்த மனிதப் பேரழிவுக்கு யார் காரணம்? என்ற கேள்விகளுக்கு விடைகாணும் நோக்கில் கீழ்க்காணும் நபர்கள் கொண்ட உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.
பேருந்து தொழிலாளிகளுக்காக தமி்ழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
போக்குவரத்து கழகம் நட்டமடைந்ததற்கு இரவு பகலாக உயிரை பணயம் வைத்து பணி செய்த தொழிலாளிகள் எந்தவிதத்திலும் காரணமல்ல. ஊழல் - முறைகேடு நிர்வாகம் செய்த அதிகாரிகள் மற்றும் அரசுதான் காரணம்.
ஐநூறு ரூபாய் கொடுத்தால் இலட்சக்கணக்கான ஆதார் தகவல்கள் கிடைக்கும் !
ஒரு ரூ.300 செலுத்தியவுடன், கொடுக்கப்படும் ஆதார் எண்ணைக் கொண்டு அதற்கான ஆதார் அட்டையை அச்சிடும் மென்பொருளையும் வழங்கியிருக்கிறார் அந்த ஏஜெண்ட்.
கல் குவாரிக்காக விவசாயிகளை விரட்டும் அரசு ! – PRPC ஆய்வறிக்கை !
“அந்த நிலத்தை நீ வைத்து மயிரா புடுங்கப் போற? அதான் கேட்கிற பணத்த தருறேன்னு சொல்லுறார்ல குடுக்க வேண்டியது தானே? உன்னால தான மத்தவனுங்களும் நிலத்த குடுக்க மாட்டேன்கிறான்’ என்று சொல்லி அடித்தார்கள்.”
குமரி கடற்கரையை அழிக்க வரும் சரக்குப் பெட்டக வர்த்தகத் துறைமுகம் !
”சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தலாம் என்று கருதி பாஜகவுக்கு ஆதரவாக நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வருவார்கள் என்று அவர் கருதுகிறார். ஆனால் அவரது கனவு பலிக்காது. பாதிப்பு எல்லோருக்கும் தான் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்"
கதிராமங்கலம் நிலத்தடிநீர் ஆய்வறிக்கை – முனைவர் சேதுபதி
கதிராமங்கலத்தில் எந்த ஒரு சிறு அல்லது பெரு தொழிற்சாலைகளோ அல்லது சாயப்பட்டறைகளோ இல்லை. ஆதலால் இங்கு நிலத்தடிநீர் திடீரென குறைவதற்கும், மாசுபடுவதற்கும், பெட்ரோலிய/ஹைட்ரோ கார்பன் நிறுவனங்களைத் தவிர வேறு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை.
தோழர் கோபட் காந்தியை சிறைப்படுத்திக் கொல்லாதே ! விடுதலை செய்!
தற்போது கைது செய்யப்பட்டுள்ளது குறித்து அவர் தனது கைப்பட ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். தன்னை விசாரணைக் கைதியாக நிரந்தரமாகவே சிறையில் வைத்து, சட்டப்படியே கொலை செய்கின்ற நோக்கத்துடன்தான் தற்போது கைது செய்திருக்கிறது என்று அக்கடிதத்தில் குற்றம் சாட்டியிருக்கிறார் கோபாட் காந்தி.
ஒக்கி : குஜராத்தில் தெருத்தெருவாக சுற்றிய மோடி மீனவ கிராமத்திற்கு வர மாட்டாராம் !
சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் மாநில தேர்தலுக்காக வார்டு கவுன்சிலரைப் போல் குஜராத்தில் தெருத்தெருவாக அலைந்த மோடியால் மீனவர்கள் கிராமங்களுக்குக் கூட வர முடியாதாம்.
நீதித்துறை நாட்டாமை : எதிர்த்து நில் ! புதிய ஜனநாயகம் டிசம்பர் 2017 மின்னூல்
இந்த இதழில் வெளியான கட்டுரைகள் : ஆர்.கே.நகர் அசிங்கமே இந்து ராஷ்டிரம்!, மீனவர் துயரம்: உறங்காதே தமிழகமே, போராடு!, நீதித்துறை நாட்டாமை: எதிர்த்து நில்!, ராஜீவுக்கு போஃபர்ஸ்! மோடிக்கு ரபேல்!!, பணிந்தால் பதவி! மறுத்தால் மரணம்!! , அக்டோபர் புரட்சி: உலகின் விடிவெள்ளி!....
மீனவர்கள் போராட்டம் : மக்கள் அதிகாரம் தோழர்கள் சித்ரவதை செய்யப்பட்டு சிறை !
மீனவ தாய்மார்களின் கண்ணீருக்கு நீதி வேண்டும். அலை அலையாக தமிழகத்தின் கரங்கள் குமரி நோக்கி நீளட்டும். போராட்டத்தின் கோரிக்கையை உண்மையாக பரிசீலித்து நிரந்தர தீர்வு காணாமல், போராடுபவர்களை மிரட்டவே இந்த கைது நடவடிக்கை.
கொன்றது ஒக்கி புயலா ? அரசுக் கட்டமைப்பா ? குழித்துறையில் ரயில் மறியல்
பேரிடர்மீட்புக் குழுக்கள் மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. மக்களின் வரியில் கொழுத்த கடலோரக் காவல் படை கடற்கரை எங்கும் குவிந்துள்ளது இருப்பினும் இவை எவையும் மீனவர்களை மீட்க செல்லாதது தற்செயலானதா?
ஹதியா – ஜி.எஸ்.டி. – தேசபக்தி : மாலன் பொங்குவது ஏன் ?
டீயை விட டீ கிளாஸ் சூடாக இருப்பதில் வியப்பேதும் இல்லை. உள்ளே இருக்கும் டீயின் சூட்டை டம்ளர் தனதாக்கிக்கொள்கிறது. மாலனும் அவ்வாறுதான். அவர் பா.ஜ.க.வுக்கோ, ஆளும் அ.தி.மு.க.வின் பா.ஜ.க. பிரிவுக்கோ ஓர் இன்னல் என்றால் உள்ளம் குமுறி மனதாற பாதிக்கப்படுகிறார்.