கார்ட்டூனிஸ்ட் பாலாவை விடுதலை செய்! – பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம் !
கார்ட்டூனிஸ்ட் பாலாவின் மீதான வழக்கை உடனடியாக திரும்பப் பெற்று அவரை விடுவிக்க வேண்டும். மேலும், சட்ட விதிகளை மீறி அராஜகமான முறையில் கைது நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எடப்பாடியின் குண்டர் ஆட்சியில் கார்ட்டூனிஸ்ட் பாலா கைது ! – வீடியோ Updates !
கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்ட நெல்லை காவல்துறையினர் உடனடியாக சென்னைக்கு விரைந்து வந்து பாலாவைக் கைது செய்து தரதரவென்று இழுத்துச் சென்றுள்ளனர்.
டெங்கு : செயலிழந்த எடப்பாடி அரசும் மாநகராட்சியுமே குற்றவாளிகள் !
கடந்த 3 ஆண்டு மோடி ஆட்சியிலும் அவரது கைப்புள்ளைகள் EPS – OPS ஆட்சியிலும் டாலர் சிட்டியான திருப்பூர் தொழில் வளர்ச்சி இன்றி காலிக் கூடாரங்களாக மாறி வருகிறது, குப்பைகளின் வளர்ச்சியினால் திருப்பூரில் நோயளிகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டு வருகிறது.
அரசியல் அராஜகங்களுக்கு முடிவு கட்டுவோம் ! தஞ்சை பொதுக்கூட்டம் !
மத்தியிலும் மாநிலத்திலும் பா.ஜ.க, அ.தி.மு.க கும்பல்கள் அரங்கேற்றி வரும் மக்கள் விரோதக் கொள்கைகளையும் அராஜகங்களையும் அம்பலப்படுத்தி, தற்போது நிலவும் அரசுக்கட்டமைப்பில் மக்கள் பிரச்சனைகள் எதையும் தீர்க்க முடியாது என்பதை வலியுறுத்தி தஞ்சையில் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
கந்து வட்டி கொடுமைக்கு தமிழகமே பலி!
ஒவ்வொரு மாவட்டத்திலும் பணத்தை வசூலிப்பதற்கென்று தனி பாணியை கையாளுகிறார்கள். அனைத்து இடங்களிலும் வெளிப்படையாகவே கந்து வட்டித் தொழில் நடைபெறுகிறது.
அரசியல் அராஜகங்களுக்கு முடிவு கட்டுவோம் ! – சென்னை எம்.ஜி.ஆர். நகர் பொதுக்கூட்டம்
கல்வி கொடுப்பேன், மருத்துவம் கொடுப்பேன், சுகாதாரம் கொடுப்பேன், பேச்சுரிமை, சங்கம் சேரும் உரிமை, வியாபாரம் செய்யும் உரிமை எல்லாம் தருவேன் என்று ஏற்று கொண்டு, இந்த அரசு எல்லாவற்றையும் பறிக்கிறது. மேலும் மேலும் வரி விதித்து மக்களின் ரத்தத்தை உறிஞ்சுகிறது.
கந்துவட்டி படுகொலையைக் கண்டித்தால் சிறை ! கரூர் போலீசின் அராஜகம்
கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் பிருத்திவிராஜ் மற்றும் மாவட்ட காவல் துறையினர் மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது தொடர்ந்து அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வதும், தொடர்ந்து பொய் வழக்கு போடுவதும் வாடிக்கையாக உள்ளது.
கந்துவட்டி படுகொலை : கலெக்டர் – எஸ்.பியை கைது செய் ! நெல்லை ஆர்ப்பாட்டம் !
பேருந்திலிருந்து தோழர்கள் இறங்கியதும் பாய்ந்து வந்து சுற்றிவளைத்தது போலீசு. பேனரைக்கூட முழுமையாக விரிக்கமுடியாத நிலையில் சாலையில் அமர்ந்தபடி அங்கேயே போராட்டம் தொடங்கியது.
ஊழலை சட்டப்பூர்வமாக்கும் ராஜஸ்தான் பாஜக அரசு !
தனது அடிமைகளின் வாழ்வோ! சாவோ! அது தனது கையால் தான் இருக்க வேண்டும் என்பதுதான் கோமளவல்லி ஜெயாவின் விதந்தோதப்பட்ட நிர்வாகத்திறன். ஆனால் இராஜஸ்தானின் ‘மகாராணி’ வசுந்தரா ராஜே சிந்தியா, கோமளவல்லியை விட ஒரு படி மேலே போயிருக்கிறார்.
சாதி மட்டுமே ஒரே தகுதி – அர்ச்சகர் வழக்கில் உச்சநீதி மன்றத் தீர்ப்பு !
தங்களுக்கு கிடைத்திருக்கும் தகுதி என்பது மன்னன் அருளியது மட்டுமல்ல, அது இறைவன் அருளியது என்று நம்பவைக்கத்தான் ஆகமம், மரபு, சம்பிரதாயம் என்ற மதப்பூச்சாண்டிகள் காட்டப்படுகின்றன.
மோடியின் நர்மதா அணை பிரகடனம் : சதிகாரன் புத்திசாலி ! சகிப்பவன் குற்றவாளி !!
நர்மதா பாதுகாப்பு இயக்கம் 2000-ஆம் ஆண்டில் தொடுத்த வழக்கில், "வெளியேற்றப்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரம், மறுவாழ்வு வழங்குவது குறித்து மட்டுமே தாம் இனி தலையிடப் போவதாகவும், அணை கட்டுவதை நிறுத்தி வைக்க உத்தரவிடப் போவதில்லை" என்றுதான் நீதிபதிகள் மனச்சாட்சியின்றித் தீர்ப்பை எழுதினர்.
அனிதாக்களை 5 -ஆம் வகுப்பிலேயே தூக்கிலிடும் நவோதயா பள்ளிகள் !
குழந்தைகளை வெறும் போட்டியாளர்களாக உருவாக்கும் இன்றைய முதலாளித்துவ சமூகத்தை, இன்னும் கொடூரமான எல்லைக்கு இட்டுச் செல்லும். குழந்தைகளை உளவியல்ரீதியாகக் கொல்லும்.
அப்போலோ இட்லிக்கு முந்தைய இட்லிகள் !
ஜெயலலிதாவைக் குற்றத்திலிருந்து விடுவிக்கவியலாது என்ற இக்கட்டில் சிக்கியிருந்தது உச்சநீதி மன்றம். செத்துப்போவது ஒன்றைத் தவிர சிறைத் தண்டனையிலிருந்து தப்புவதற்கு வேறு வழியில்லை என்பதுதான் அப்போலோவில் அனுமதிக்கப்படுவதற்கு முன் ஜெயலலிதா எதிர்கொண்டிருந்த சூழல்.
நெல்லை : இசக்கிமுத்துக்களின் மரணத்திற்கு எப்போது பழி தீர்ப்போம் ?
தான் வளர்த்த பயிர்கள் கருகியதைக் கண்டு நெஞ்சு வெடித்து செத்த தஞ்சை விவசாயிகளாலும், பொறியியல் படித்த மகனுக்கு வேலை கிடைக்காத நிலையில் அவனது கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த வழியின்றி தூக்கில் தொங்கிய தாய்மார்களாலும் தான் இசக்கிமுத்துவின் முடிவைப் புரிந்து கொள்ள முடியும்.
பெல்லட் குண்டு : கண்ணில்லாத என் மகனின் கனவுகள் பொசுங்கிவிட்டன !
“எனது மகன் ஒரு அரும்பு போல இருந்தான். கண்பார்வையற்ற ஒருவனாக அவன் வாழ நேருமோ என்று கற்பனை செய்ய கூட நான் அஞ்சுகிறேன்”
























