நெடுவாசல் ஹைட்ரோகார்பன் : வளர்ச்சியா அழிவா ?
வேத காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது என்று உளறும் பாஜக பண்டாரங்கள்தான் மக்கள் அறிவியலாளர்களா என்று கேட்கிறது. அதற்கு உலகெங்கும் போராடிய மக்களும் அறிவியலாளர்களும் முன்வைத்திருக்கும் கேள்விகளுக்கு பாஜகவோ அவர்களது ஆண்டையான அமெரிக்காவிடம் கூட பதிலில்லை.
திருத்துறைப்பூண்டி போலீசின் காலில் மிதிபடும் ஜனநாயகம்
தாங்கள் நடத்தும் திருத்துறைப்பூண்டி பொதுக்கூட்டம் பொதுமக்கள் மத்தியில் வன்முறை போராட்டத்தினை தூண்டும் விதமாகவும், பொதுக்கட்டம் குறித்து வெளியிட்டு வரும் அறிக்கைகள், சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வன்முறையை தூண்டும் விதமாகவும் உள்ளதால் இதனால் ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.
விவசாயி வீட்டில் இழவு : யார் குற்றவாளி ? இயற்கையா ? அரசா ?
தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அடிப்படை கட்டுமான வசதிகளை இலவசமாகவோ, மானியமாகவோ செய்து கொடுத்து, அவர்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்துவரும் ஆட்சியாளர்கள், விவசாயிகளைத் தம் சொந்தக் கையை ஊன்றி கரணம் போடும்படிக் கைகழுவி விடுகிறார்கள்.
நெடுவாசல் விவசாயிகளின் போராட்டம் வெல்லும் ! – மக்கள் அதிகாரம்
நாடு முழுவதற்குமான கார்ப்பரேட் தொழில்களுக்கான மின் உற்பத்திக் குவிமையமாக (Power Cluster) தமிழகத்தை மாற்றும் பெரும் சதித்திட்டத்தின் ஒருபகுதியாக நமது காட்டுவளம், கடல் வளம், நீராதாரம் அனைத்தையும் சூறையாடுகின்றனர். - மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி
வறட்சி நிவாரணம் : காகிதத்தில் எழுதி நக்கச்சொல்லும் அரசாங்கம் !
தமிழக அரசு அறிவித்திருக்கும் பயிர் இழப்பீடு தொகையும், காப்பீடு தொகையும் கைக்குக் கிடைப்பதற்குள் விவசாயிகள் செத்துச் சுண்ணாம்பாகி விடுவார்கள்.
விவசாயி பயிரை வளர்க்கவில்லை பிள்ளையை வளர்க்கிறான் !
கடன்காரன் வந்து வீட்டு வாசல்படியில் நின்று கத்தும்போது நாண்டுகிட்ட சாகலாம் போலத் தோணும். வேறு வேலைக்குப் போவோம், அல்லது வீட்டை விற்று, கடனை அடைத்துவிட்டு வாடகை வீட்டுக்குப் போவோம்
நுண்கடன் நிறுவனங்கள் : தனியார்மயம் உருவாக்கிப் பரப்பும் விஷக்கிருமிகள் !
"அடுத்த விவசாயம் செய்வதற்கு வரவிருக்கும் பருவமழைக்காக பத்து மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரையில் இந்த வறட்சியை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?" என்ற கேள்விக்கு பெண்களிடமிருந்து வரும் ஒரே பதில் “தெரியலைங்க” என்பது மட்டும்தான்.
விவசாயிகளுக்கு என்ன செய்யப் போகிறோம் ! திருத்துறைப்பூண்டி பொதுக்கூட்டம்
மத்திய மாநில அரசுகளை பணிய வைத்த தமிழக மக்களின் ஜல்லிக்கட்டு மெரினா போராட்டம், எப்படி போராட வேண்டும் என அனைவருக்கும் கற்றுக்கொடுத்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளில் செய்ய முடியாததை ஐந்து நாட்களில் செய்யவைத்தது தமிழக மக்கள் போராட்டம்.
பயிர்க் காப்பீடு : விவசாயிக்கு சுண்ணாம்பு காப்பீட்டு நிறுவனங்களுக்கு வெண்ணெய் !
விவசாயிகளை விட, ஐ.சி.ஐ.சி.ஐ.,லாம்போர்டு, ஹெச்.டி.எஃப்.சி., இஃப்கோ-டோக்கியோ போன்ற 16 தனியார் பயிர் காப்பீட்டு நிறுவனங்களின் இலாபத்தை மட்டுமே கொள்கையாகக் கொண்டதுதான் மோடியின் தேசிய வேளாண் காப்பீட்டுக் கொள்கை.
சீர்காழி விவசாயத்தை சிதைத்த அரசு – நேரடி ரிப்போர்ட்
25 வருசமா இந்த கொள்ளிடத்துல ஆத்து மணலை ராவும் பகலுமா கொள்ளையடிச்சி தண்ணியப் பூரா உறிஞ்சிட்டானுங்க. அப்புறம் எங்கத் தண்ணி இருக்கும்?
விவசாயத்தின் அழிவு வளர்ச்சியா ? புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2017
நமது நாட்டின் ஆகப் பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரமாக இருப்பதும், மொத்த மக்கட்தொகைக்கும் சோறு போடு வதும் விவசாயம்தான். விவசாயிகளின் தற்கொலையும், விவசாயத்தின் அழிவும் நாடு எதிர்கொள்ளவிருக்கும் பேரழிவுக்கான அறிகுறிகள். இந்த அழிவைத்தான் வளர்ச்சி என்று கொண்டாடுகிறது மோடி அரசு.
இரட்டிப்பாவது விவசாய வருமானமா? விவசாயிகள் சாவா?
“இந்தியா விவசாயக் குடும்பங்களின் சராசரி மாதவருமானம் 3,800 ரூபாய்! விவசாயிகளின் சராசரி கடன்அளவோ 47,000 ரூபாய்! (சில மாநிலங்களில் இது ஒரு லட்சத்திற்கும் மேல் !) நாட்டின் 52% விவசாயக் குடும்பங்கள் கடனில் சிக்கித்தவிக்கின்றன !” என்று பல்வேறு அரசுக் குறிப்புகளே கூறுகிறது!
காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் : தீர்வு என்ன ? நேரடி ரிப்போர்ட்
பழைய முறைப்படி அவிக்கும் போது நெல் ஒரே சமமா அவியும் – காயும். நீராவில அவிக்கும் போது நெல்லோட இரண்டு பக்கங்களும் அதிகப்படியா அவியும். அப்புறம், ஆவி நெல்லுக்குள்ளே ஊடுருவிப் போயிரும். அதனால ரெண்டு பிரச்சினை இருக்கு..
போலீசு ராஜ்ஜியத்தை முறியடிப்போம் – போராட்டச் செய்திகள்
லட்சக்கணக்கான மக்கள் திரண்டு நடத்திய போராட்டத்தில் ஒரு வன்முறையோ, வழிப்பறியோ, அசம்பாவிதங்கள் இன்றி கட்டுக்கோப்புடன் நடைபெற்றது. இதனை கலவரமாக்கியது காவல்துறையினர் தான் என்றும், அவர்களை தண்டிக்கும் வரை தொடர்ந்து போராட்டத்தை நடத்த வேண்டும்
நடவுப் பாட்டு அழிந்த ஊரில் உஞ்சவிருத்திக்கு என்ன உற்சவம் ?
கார்ப்பரேட் ஆராதனை விளைநிலம் விழுங்கி கொள்ளையிடுது நாட்டை. வாய்பேச்சுக்கும் வருத்தமில்லாமல் உங்கள் நாவில் துள்ளுது 'நாட்டை'. மதகோசை முடங்கி பயிரோசை ஒடுங்கி உயிரோசை அடங்கும் புல்லினம். இதற்கொரு உணர்ச்சியில்லாமல் இதயம் மரத்தது இசையா ! நீங்கள் என்ன வகை உயிரினம் ?