காவிரி : செப்டம்பர் 16 முழு அடைப்பை வெற்றி பெறச் செய்வோம் !
பி.ஜே.பி. சங் பரிவார் கும்பல் கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கும், பார்ப்பனிய எதிர்ப்புப் பாரம்பரியமிக்க தமிழகத்திற்கு எதிராகவும் திட்டமிட்டே இனவெறியைத் தூண்டி வன்முறையை தலைமை ஏற்று நடத்தி வருகிறது
ஒகேனக்கல் : காவிரிக் கரையில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
கர்நாடகாவில் தமிழர்களை அடிக்கும் கன்னட வெறியர்கள், பன்னாட்டு நிறுவனம் தண்ணீரை எடுத்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார்களே அவர்களை அடிப்பார்களா? பன்னாட்டு நிறுவனங்கள் தண்ணீரை விற்று காசக்குவதற்காக காங்கிரசு, பி.ஜே.பி அணை பாதுகாப்பு மசோதா என்று கொண்டு வந்து இருக்கிறார்கள்.
இங்க வந்து நல்லாருக்கேன்னு ஒருத்தரும் சொல்ல முடியாது !
தங்குறத்துக்கு ரூம் இருக்கு. ஆனா நாங்க பெரும்பாலும் ஆஸ்பத்திரி ஸ்டெச்சர்ல இல்ல, வண்டிலதான் தூங்க முடியும். ரூமுக்கு போய் தூங்கல்லாம் நேரமே கெடையாது, குளிச்சு, கக்கூஸ் போக மட்டும் தான் ரூம்.
பண்டோனி – கிட்னியை விற்கும் குஜராத் கிராமம்
குஜராத மாநிலம் பண்டோனி என்ற கிராமத்தில் மட்டும் கடந்த ஒரு வருடத்தில் 11 நபர்கள் கிட்னி விற்றுள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஹிரநந்தனி வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜாவித் கான் என்ற தரகர் மூலம் தான் இது நடந்துள்ளது.
மோடியின் கார்ப்பரேட் கல்விக் கொள்ளை ! செப் 8 தஞ்சை கருத்தரங்கம்
பெரும்பான்மை உழைக்கும் மக்களின் கல்வி உரிமையை பறித்து சமஸ்கிருத - வேத கலாச்சார திணிப்பின் மூலம் நாட்டை பார்ப்பனிய மயமாக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-ன் இந்து ராஷ்டிர கனவை தகர்த்தெறிவோம்! பெசன்ட் அரங்கம், தஞ்சாவூர் செப்டம்பர் 8, 2016 மாலை 5.30
புதிய கல்விக் கொள்கையல்ல – கல்வி மறுப்புக் கொள்கை !
ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே அனைவருக்கும் தேர்ச்சி என்பது தொடங்கி இந்தி-சமஸ்கிருதத் திணிப்பு, கல்லூரிக் கட்டண உயர்வு என்ற ஐந்து தலை நாகப்பாம்பாக வருகிறது, புதிய கல்விக் கொள்கை.
அகில இந்திய வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம் !
உழைக்கும் மக்களின் எதிரியாக உள்ள மோடி அரசை தூக்கியெறிவதும், அதற்காக தொழிலாளர்களை அரசியல் உணர்வை பெற வைப்பது அவசியமாகவும், முக்கியக் கடமையாகவும் உள்ளது உணர்ந்து என்பதை இந்த செப்டம்பர் 02 ஆர்ப்பாட்ட நாளில் வீதியில் இறங்குவோம்.
மாட்டுக்கு ஆம்புலன்ஸ் – மனிதனுக்கு பாடை : இந்திய நீதி !
மாட்டுக்கு ஆம்புலன்ஸை வழங்கி, மக்களை பாடை தூக்கி நடக்கச் சொல்லும் இந்த அரசமைப்புக்கு நாம் பாடை கட்டும் நாள் எப்போது?
களச் செய்திகள் – 31/08/2016
விவசாயம் - நெசவு - சிறுவணிகம் சிறுதொழில்களை அழித்து காண்டிராக்ட் சுரண்டலை தீவிரப்படுத்துகின்ற கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவு கட்டுவோம்! செப்டம்பர் 2 கண்டன ஆர்ப்பாட்டம் கும்மிடிப்பூண்டி, ஆவடி, காஞ்சிபுரம்
மலேரியாவிடம் தோற்கிறது இந்திய ‘வல்லரசு’ !
மலேரியாவின் தாக்கத்தை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இந்திய நோய்கண்காணிப்பு அமைப்பு எனும் பெயரளவு கண்காணிப்பு அமைப்பின் மூலம் இறப்பவர்களின் எண்ணிக்கையை ஆண்டுதோறும் 1000 க்கும் மிகாமல் இருக்குமாறு ப் பார்த்துக் கொள்கிறது, இந்திய அரசு.
செப் 1 சென்னை பொதுக்கூட்டம் மற்றும் களச் செய்திகள்
புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக சென்னையில் பொதுக்கூட்டம், விருத்தாசலம், கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம், காவிரி நீர் உரிமையை பாதுகாத்திட சீர்காழியில் சாலை மறியல்..
புதிய கல்விக் கொள்கைக்கு சொம்படிக்கும் தி இந்து – ஆய்வுக் கட்டுரை
இந்து நாளேடு முதலில் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது போல தமிழ்நாட்டின் முக்கியமான கல்வியாளர்களிடம் கட்டுரையை வாங்கி போட்டுவிட்டது. பின்னர் பத்ரி, கேக்கே மகேஷ் போன்றவர்களின் கல்விக் கொள்கை ஆதரவு கட்டுரைகளை பிரசுரிக்கிறது.
அமெரிக்க ஆசியுடன் மோடியின் ” பருப்புடா ” – சிறப்புக் கட்டுரை
பயறுவகைகளின் பற்றாக்குறை தொடர்ந்து நீடித்துவருவது, பற்றாக்குறை உள்ளபோதே ஏற்றுமதிக்கு அரசு அனுமதிப்பது, உள்நாட்டுத்தேவையை ஈடுகட்ட வெளிப்படையான வாய்ப்புகள் இருந்தும் அரசு அலட்சியமாக அதை புறக்கணிப்பது, எல்லாமே மத்திய அரசால் திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது!
மேக்கேதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசை எதிர்த்து தருமபுரியில் ஆர்ப்பாட்டம்
கெசட்டில் வெளியிட்டதை தனக்கு கிடைத்த பிறந்த நாள் பரிசு என தன்னைத்தானே புகழ்ந்து கொண்ட செயலலிதா, இன்று தண்ணீர் பெற்றுக்கொடுக்க முடியாதது குறித்து வெட்கப்படாமல் கடிதம் எழுதுகிறோம், மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறோம் என்கிற பேரில் நாடகம் ஆடுகிறார்.
புதிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் !!
காவிமயம், கார்ப்பரேட்மயம் இரண்டும் சேர்ந்த ஒட்டுரகம் தான் மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை (2016). இதன் நோக்கமே பார்ப்பனர்கள் வேதம் மட்டுமே ஓத பயன்படுத்தக் கூடிய சமஸ்கிருத்தத்தை ஆரம்பக் கல்விமுதல் ஆராய்ச்சிக் கல்விவரை திணிப்பதே; தாய்மொழிவழிக் கல்வியை மறுப்பதே.