சேக்ஸ்பியர் நாடக மைந்தர்களோ செவாலியர் விருதுக் கலைஞர்களோ ஒரு போதும் நிகழ்த்த முடியாத அழுகை இது. இந்த அழுகையின் இரகசியம் அடிமைத்தனம்!
யூதர்களை மறைத்துவைப்பவர்களுக்கு மரணதண்டனை அறிவிக்கப்பட்டிருந்தது. மறைத்துவைக்கப்பட்ட ஒரு யூதனுக்காக, அந்த வீட்டில் உள்ள எல்லாரும் ஒருவர் பாக்கியில்லாமல் கொல்லப்படுவார்கள் என்பது உத்தரவு.
நாம் கவுண்டர் வெறியை மட்டுமல்ல எந்த என்கவுண்டரையும் ஆதரிக்க வில்லை. ஆனால் ஆதிக்க சாதிவெறியின் அழுகுணியாட்டத்தை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்கிறோம்.
கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியின் காலப்பதிவு இக்கவிதை. உங்கள் அரசுக்கல்லூரியின் நினைவுகளையும் தேவைகளையும் எழுதத்தூண்டினால் மகிழ்ச்சி!
நாட்டை வைத்து சூதாடும் உங்கள் 'மகாபாரத'க் குப்பையை நாட்டுப்பற்றுள்ள பகத்சிங் சூறாவளி
இனி துடைத்தொழிக்கத்தான் செய்யும். ராமபாணம் தலை தூக்கினால் பெரியார்-அம்பேத்கர் செருப்புகள் துரத்தும்!
"பாலது நெய்யது பையது பெல்ட்டது சகலமும் உனதொரு கருணையில் எழுவது"
குன்கா ராமாயணத்தில் அவர் மட்டுந்தான்நோக்கினார், குமாரசாமி ராமாயணத்தில்
"அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்".
ஆடத்தெரியாத பரதக் கலைஞி, ஆட்டம் மோசம் என்றதும் பார்ப்பவர்களின் கண்களை பறித்தால்தான் அடுத்த முறை ஆடுவேன் என்று சொன்னால் ஒத்துக் கொள்வீர்களா?
புரட்சிக்குக் குறைவாக எதையும் ஏற்காத பிடிவாத புரட்சியாளரின் பிறந்த நாளை எப்படிக் கொண்டாடுவது?
பார்ப்பனக் காலைச் சுற்றுவதற்கு பாபாசாகேப் படம் எதற்கு? பஞ்சாயத்து தலைவராகவே உட்கார முடியாத ஜனநாயகத்தில் பாராளுமன்ற காவடி எதற்கு?
கூலித் தொழிலாளிகளின் மனிதக் கறியை பார்த்த மாத்திரத்திலேயே நியாயம் பேசுகிறார்கள்; " அவன்தான் வந்தா சுடுவோம்னானே இவன் ஏன் அங்க போனான்?"
ஆற்றைக் கொல்லும் 'ரத்தத்தின் ரத்தமான' நரிகள். முதலமைச்சர் நாற்காலியில் மூட்டை' பூச்சி. அத்தனைக்கும் காவலிருக்கும் அய்.ஏ.எஸ். மலைப்பாம்புகள். கால் வைக்கும் இடங்களில் காக்கி அட்டைகள்.
கொல்லப்பட்ட மூன்று எழுத்தாளர்களில் இருவர் முசுலீம், ஒருவர் இந்து. அனைவரும் நாத்திகர் எனும் ஒரே காரணத்தால் முசுலீம் மதவெறியர்கள் கொலை செய்திருக்கின்றனர்.
நடாயி அவனுக்காக அன்னைக்கு அழலை. ஒருவேளை இன்னைக்கு அவ தனக்காக அழலாம். செத்தவனுக்கு வருசத்துக்கு ஒருதரம் தானே கண்ணீர் அஞ்சலி வருது; நடாயி வாழ்க்கைக்கு?
எந்த சாதியைச் சேர்ந்த திருமணமான பெண்ணாக இருந்தாலும், அவளுடைய முதல் பிள்ளைக்கு ஒரு நம்பூதிரிதான் அப்பனாக இருக்க வேண்டும்-ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கர்