கோத்ரா சம்பவத்தை ஒட்டி, "இன்று மகாத்மா உயிரோடிருந்தால் உண்ணாவிரதமிருந்திருப்பாரா? மோடியை சந்திக்க சென்றிருப்பாரா?" என்பதை தலைப்பாக கொடுத்து மாணவனை விவாதிக்க சொன்னால் அது வரலாறு.
கண்காட்சியில் பங்குபெறும் நிறுவனங்கள், மற்றும் 'பாரதமாதாவை' பிளந்தெறிந்துகொண்டிருக்கும் கார்ப்பரேட்டு கம்பெனிகளின் பெயர்களை எல்லாம் அதில் எழுதி தொங்கவிட்டு அதற்கு சனாதன தர்ம விருட்சம் என்று பெயரிட்டுள்ளனர்.
நித்ய சைதன்ய யதி மட்டும் டிகிரி பாதுகாப்பை வைத்துக் கொண்டு சாமியார் ஆகும் போது சிம்பானந்தா சினிமாவை வைத்துக் கொண்டு ஆன்மிகம் பேசுவதில் என்ன தவறு?
ஒரு நாள் ஒரு மாணவன் தவறு செய்து விட்டதாக என்னிடம் கொண்டு வந்தார்கள்? "ஏனப்பா விதியை மீறி விட்டாய்?" என்று கேட்டேன். "யார் போட்ட விதி?" என்று கேட்டான் அம்மாணவன்.
விளைந்து கொடுத்த காவிரிப் படுகைமேல் வெட்டு விழுந்தால், வெளியேறப் போவது மீத்தேன் அல்ல - எங்கள் விவசாயி வர்க்கத்தின் நெருப்பு! உழவு நடந்தால் ஊரே வாழும் - மீத்தேன் இழவு நடந்தால் ஊரே சுடுகாடாகும்!
பெரியார் கல்லூரி தமிழ்த் துறை மாணவர்கள் நமது அமைப்பின் கருப்பு பேட்ஜை பெற்றுக்கொண்டு அனைத்துத் துறை மாணவர்களிடமும் கொடுத்து எதிர்ப்பை பதிய வைத்தார்கள்.
ஓம்பிரகாஷின் அரசியல் நண்பர்கள் பலரும் அந்தப் பெண்ணை சீரழித்துள்ளனர். அவளால் இப்போது மொத்தம் 17 பேர்களை அடையாளம் காட்ட முடிகிறது. அதில் ஒருவர் நான்கு முறை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வென்றவர்.
“என்னப் போல மைனராட்டம் போடாம யோக்கியமா புழைச்சவனுக்கும் இதுதான் கதி. அவங்களும் எழந்த நெலத்த திரும்ப வாங்குவோமான்னு கனவு கண்டுட்டு இருக்காய்ங்க தெரியுமா?"
ஐ.டி துறை வாசகர்களுடன் வினவு சந்திப்பு - ஆகஸ்ட் 13, 2014 (நாளை) மாலை 4 மணி முதல் 7 மணி வரை. இடம்: சிறுசேரி சிப்காட் வளாகத்துக்கு வெளியில் பேருந்து நிறுத்தம் அருகில்
மறுகாலனியாதிக்க கொள்கைகளை எதிர்ப்பின்றி நடத்துவதற்கு அரசே திட்டமிட்டு பரப்புகின்ற நுகர்வு வெறி கலாச்சாரத்தை வேரறுக்க பெண்கள் விடுதலை முன்னணி சென்னையில் போராட்டம்!
காலி இடங்களை ஓரளவாவது நிரப்ப வேண்டுமென்பதற்காக சுயநிதிக் கல்லூரிகள் தமது சேர்க்கை காலத்தை நீட்டியிருக்கின்றன. பல்வேறு முறைகளில் மாணவர்களை சேர்க்க பிரச்சாரமும் செய்து வருகின்றன.
மாக்ஸ்முல்லர் பவனில் எட்டு மாதங்களில் கதேயின் புத்தகத்தை மூல மொழியில் படிக்குமளவுக்கு ஜெர்மன் மொழியை கற்றுத் தருகிறார்கள். இரண்டு கோடை விடுமுறைகளில், ஆக 120 மணி நேரத்தில் ஆங்கிலத்தை கற்றுத்தந்து விட முடியும்.
"தேவுடியாள இருந்தேன்னா உன் வீட்டு கக்கூசு வரைக்கும் கழுவிட்டு இருந்துருக்க மாட்டேய்யா. இருந்த எடத்துல சம்பாரிச்சுட்டு போயிருப்பேன்."
காஷ்மீர் தேர்தல்களில் மக்கள் அதிகம் பங்கேற்பதை வைத்து அங்கே போராட்டம் நீர்த்துப் போனதாக கூறும் வாதத்தை தகர்க்கிறார் நவ்லாகா. இது உண்மையெனில் அங்கே ஆறு லட்சம் படை வீரர்கள் எதற்கு?
"பார்ப்பனரல்லாதவர் அர்ச்சகராகலாம், மரபு பழக்கவழக்கத்தின்படி பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்பதை ஏற்க முடியாது" என உச்ச நீதிமன்றம் 2002–ம் ஆண்டு தீர்ப்பளித்தது.





















