மக்கள் நலனுக்காக தனியார் பள்ளிகள் மீது கட்டுப்பாடு விதிக்கும் சட்டமாகவும், ஏழை மாணவர்கள் தனியார் பள்ளியில் படிக்க வழிசெய்வதாக்கவும் RTE சித்தரிக்கப்படுகிறது, இது மாபெரும் மோசடி.
கொத்தடிமைத் தொழிலாளி வெள்ளையன் மீது சம்மட்டியை திருடிவிட்டதாக குற்றமும் சுமத்தி, வாயில் மலத்தை தினித்துள்ளான் கல் குவாரி முதலாளி துரை
மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்தவர்கள் நியாயமற்ற முறையில் அடிக்கடி தாக்குதல்களுக்கு ஆளாகும் நபர்களாகிவிட்டனர். பாதிக்கப்பட்ட குழுக்களான அவர்கள் பாதுகாப்பின்றி, எவ்வித சட்ட, சமூக காப்புமின்றி உள்ளனர்.
தாழ்த்தப்பட்டவரை கொடியேற்ற விடாமல் தீண்டாமையை அனுசரித்த கள்ளர் சாதிக் கும்பலை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் உள்ளே தள்ளவேண்டிய போலீசு கட்டப்பஞ்சாயத்து பேசியுள்ளது.
குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் பாடுகிறார்கள். முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். கண்ணடிக்கிறார்கள். பெற்றோர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், “குரல்ல பீல் பத்தல” என்று விமர்சிக்கிறார்கள்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் சூரிய பிரபா மில் இயங்கி வருகிறது. இந்த மில்லில் 18 வயதுக்கும் குறைவான பெண்களை சுமங்கலி திட்டத்தின் கீழ் கொத்தடிமைகளாக அடைத்து வைத்து வேலை வாங்குகின்றனர்.
எதன் பொருட்டு இந்தக் கதையை சொல்ல வந்தானோ அதை மறுத்தே கதையின் முடிவு இருக்கிறது. இதை கண்டு பிடிக்க முடியுமென்றால் ஜெயமோகன் போன்றவர்களையும் புரிந்து கொள்ளும் சக்தியை வரித்துக் கொண்டவராவீர்கள். முயன்று பாருங்களேன்!
சட்லெஜ் நதியில் கரைந்த சாம்பல் முல்லைப் பெரியாறில் முழங்கும்போது, லாகூர் சிறையில் முழங்கிய குரல்கள் இடிந்தகரையில் எதிரொலிக்கும்போது, அவர்கள் இல்லையென்று எப்படிச் சொல்வது?
பகத்சிங், காங்கிரசின் துரோகத்தால் அணைக்கப்பட்ட விடுதலைத் தீயை விசிறி எழச் செய்த சூறாவளி. விடுதலைப் போராட்ட உணர்வை இளைஞர்களின் இதயத்தில் விதைத்திட தன் மரணத்தையே செயல்திட்டமாக மாற்றிக் கொண்ட போராளி.
தன்மானமுள்ள மாணவர் நாங்கள் ரவுடிகள் அல்ல ! பொறுக்கிகள் அல்ல ! இந்தி திணிப்பை எதிர்த்து நின்றோம் ! ஈழத்தமிழர்களுக்காக களம் கண்டோம் ! கல்விக் கொள்ளையர்களின் கொட்டம் அடக்க வீதியில் இறங்கினோம் ! சிறை சென்றோம் !
அல்லாவின் மீதும், அவர் கூறிய சகோதரத்துவத்தின் மீதும், அதைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் தன் மதத்தின் மீதும் ஏன் கோபம் வரவில்லை. எப்படி இந்த நிலையிலும் அல்லாவுக்கு நன்றி சொல்ல முடிந்தது?
உணர்ச்சி எதுவாயிருந்தாலும் அதன் ஆயுள் குறைவாய் இருக்க வேண்டுமென்பதை வீடியோ கேம் விளையாட்டுக்கள் நிலைநாட்டியுள்ளது. குறுகிய நேர அளவில், காதல், காமம், கொலை வெறி, வன்முறை ஆகிய உணர்ச்சிக் கலவைக்குள் சிறுவர்களை பிடித்துத் தள்ளுவதில் எது வெல்கிறதோ அதுவே சந்தையைக் கைப்பற்றுகிறது.
இன்றைக்காவது எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வேலைக்குக் கிளம்ப வேண்டும் என்ற உமாவின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. கணவனின் பார்வையில் நொடிக்கு நொடி கடுகடுப்பு ஏறிக்கொண்டிருந்தது.
உழைக்கும் பெண்கள் தமது அடிப்படை உரிமைக்காக போராடி ரத்தம் சிந்திய நாளான மார்ச் 8 அன்று திருச்சியில் பெண்கள் விடுதலை முன்னணி நடத்திய ''குருதியில் மலர்ந்த பெண்கள் தினம்'' அரங்குக் கூட்டத்தின் செய்திப் பதிவு
அவ்வளவு கூட்டத்திலும் கூட பேருந்தில் ஒரு இருக்கையில் மட்டும் ஒருவருக்குப் பக்கத்தில் யாரும் அமராமல் வந்த வேகத்தில் உட்கார்ந்திருப்பவரை நோட்டம் பார்த்தவாறு நகர்ந்து போயினர்.