விபூதி பட்டைகளுக்கும் நாமங்களுக்கும் பின்னால்... அவர்கள் அணிந்திருக்கும் பூணூல் எந்த பெண்ணையும் அழைத்துவிடலாம் என்கிற அதிகாரத்தையும் வழங்கிடுவதாக நினைக்கிறார்கள்.
மீ டூ விசயத்தில் யார் பக்கம் நிற்பது? என்ற குழப்பம் முற்போக்கு-பிற்போக்கு என்ற சட்டகங்களைத் தாண்டி பரவலாக உள்ளது. அக்குழப்பங்களுக்கு விடைகாண விவாதியுங்கள்..
கடவுள் இதயத்தில் குடியிருக்கிறார், அறிவிலும் குடியிருக்கிறார் - ஆனால், நிச்சயமாக தேவாலயத்தில் அல்ல; தேவாலயம் கடவுளின் கல்லறை; கடவுளின் சமாதி!
இப்புத்தகத்தில் ஜான் பெர்க்கின்ஸ் தனது வாழ்வு அனுபவங்களை அமெரிக்க பேரரசு உருவாகி வந்த வரலாற்று உண்மையோடு தொடர்புபடுத்தி விவரிக்கிறார்.
அவர்கள் மனிதர்களைச் சித்திரவதை செய்வார்கள் என்றா நினைக்கிறாய்?... அவர்கள் ஆன்மாவையே நொறுக்குகிறார்கள். அதுதான் மிகுந்த வேதனை தருகிறது. அவர்கள் தமது தீய கரங்களால் உன் ஆத்மாவைத் தொடும்போது...
எனக்கு எல்லாம் பழகிப் போய்விட்டது. மரத்துப் போய்விட்டது. அந்தத் துன்பங்களையெல்லாம் நினைத்துப் பார்ப்பதும் வீணான நேரக் கொலைதான். இதுதானம்மா வாழ்க்கை!
குழந்தைகளுக்காக, ஒரு துண்டு ரொட்டிக்காக, வீட்டு வாடகைக்காக நீ மாடாய் உழைக்கப் போவாய். நாம் எடுத்துக் கொண்ட கருமத்திலிருந்து நீ மட்டுமல்ல, நீங்கள் இருவருமே விலகிப் போய்விடுவீர்கள்.
நெருக்கடி நிறைந்த அந்தச் சின்னஞ்சிறு அறையிலே எல்லா உலகத் தொழிலாளர்களோடும் ஆத்மார்த்தமாகக் கொள்ளும் ஒட்டுறவு உணர்ச்சி பிறந்தது: அந்த உணர்ச்சி தாயையும் கூட அடிமைப்படுத்தியது.
காதலைப் பாலியல் வெறியாகவும், மகிழ்ச்சியைக் களிவெறியாட்டமாகவும் துயரத்தை விரக்தியாகவும் மடைமாற்றி விடுவதன் மூலம் மக்களின் இசைரசனையையும் வாழ்வியல் மதிப்பீடுகளையும், அதனூடாகச் சமூக உணர்வையும் சிதைப்பதில் திரையிசை வெற்றி பெற்றுள்ளது.
நாம் முட்டாள்கள் அல்ல; நாம் மிருகங்கள் அல்ல... வயிற்றை நிரப்புவதோடு திருப்தி அடைந்துவிடுவதற்காக மட்டுமல்லாமல் கெளரவமுள்ள மனிதர்களாக வாழ விரும்புகிறோம்.
தன் வீட்டுக்கு வரப்போகும் அந்த அதிசயமான, பயங்கரமான மனிதர்களைப் பற்றி எண்ணும் போதெல்லாம் அவள் பயத்தால் செத்துக் செத்துத்தான் பிழைத்தாள். அவர்கள்தான் அவளது மகனையும் அந்தப் புதிய மார்க்கத்திலே புகுத்திவிட்டவர்கள்...
நான் தடை செய்யப்பட்ட புத்தகங்களைப் படிக்கிறேன். இவை ஏன் தடை செய்யப்பட்டிருக்கின்றன, தெரியுமா? இவை நம் போன்ற தொழிலாளரைப் பற்றிய உண்மையைச் சொல்லுகின்றன.
கொட்டாய்க்குள்ள இருந்தவங்க பூட்டிட்டாங்க. வந்தவன் கதவ முடிஞ்சமட்டும் அடிச்சு நொறுக்கிப்பார்த்துட்டு வெளிப்பக்கமாத் தாப்பா போட்டிட்டு நாலாப்பக்கமும் கொளுத்திட்டான்.
உன் அப்பா உனக்கும் சேர்த்துக் குடித்துத் தீர்த்துவிட்டார். அவர் என்னைப் படாதபாடு படுத்தினார். உன் தாய் மீது கொஞ்சமாவது நீ பரிவு காட்டக் கூடாதா?
எத்தனை பேருக்கு பதட்டம்? தமிழகத்தின் முற்போக்கு முகம், ஆணாதிக்கத்தின் உள்ளே போய் வசதியாகப் பதுங்கிக் கொள்கிறது.