Friday, May 9, 2025
முகப்பு பதிவு பக்கம் 12

மாநகராட்சி விரிவாக்கம்: கார்ப்பரேட் நகர உருவாக்கமும் உழைக்கும் மக்கள் வெளியேற்றமும்

ஒவ்வொரு ஆண்டும் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்தும் கார்ப்பரேட்டுகளுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் தி.மு.க. அரசு.

2021-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்தே ஊராட்சிகளை பேரூராட்சியாகவும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும் ‘தரம்’ உயர்த்துவது, ஊராட்சிகளை நகராட்சிகளுடன் இணைத்து மாநகராட்சியாக்குவது, ஏற்கெனவே உள்ள மாநகராட்சிகளின் எல்லைகளை விரிவுபடுத்துவது என நகர விரிவாக்கப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 2024-இல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி நகராட்சிகளுடன் அருகிலிருந்த கிராம மற்றும் நகரப் பஞ்சாயத்துகளை இணைத்து மாநகராட்சிகளாக உருவாக்கியது. இப்புதிய மாநகராட்சிகளை உருவாக்கிய ஐந்து மாதத்திற்குள்ளாகவே தற்போது மீண்டும் நகர விரிவாக்கத்திற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தி.மு.க. அரசு.

சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சி, கடலூர், திண்டுக்கல், மதுரை, ஓசூர், சேலம், திருப்பூர், ஆவடி, கும்பகோணம், தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் சிவகாசி என தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 25 மாநகராட்சிகளில் 16 மாநகராட்சிகளின் எல்லைகளை விரிவாக்குவதற்கான அரசாணைகளை அந்தந்த மாநகராட்சிகள் வெளியிட்டுள்ளன. இதற்காக 147 கிராமப் பஞ்சாயத்துகளும், ஒரு நகரப் பஞ்சாயத்தும் மாநகராட்சிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இத்துடன், புதிதாக சங்ககிரி, கோத்தகிரி, அவினாசி, பெருந்துறை, கவுந்தபாடி, போளூர், செங்கம், கன்னியாகுமரி, சூலூர், மோகனூர், நரவரிகுப்பம் மற்றும் வேப்பம்பட்டு ஆகிய 13 நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், 14 மாவட்டங்களைச் சேர்ந்த 25 கிராமப் பஞ்சாயத்துகள் நகரப் பஞ்சாயத்துகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 12 மாவட்டங்களைச் சார்ந்த 29 கிராமப் பஞ்சாயத்துகள் நகரப் பஞ்சாயத்துகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தரமான அடிப்படை வசதிகளை வழங்குவது – அதாவது சாலைவசதி, பாதாள சாக்கடை, தரமான-பாதுகாப்பான குடிநீர் மற்றும் மின் விளக்குகள், உள்கட்டமைப்பு வளர்ச்சிக்குத் திட்டமிடுவது, இதனூடாக வளங்களைத் திறம்படப் பயன்படுத்துவதே இந்த மாநகர விரிவாக்கத்தின் நோக்கம்” என தெரிவித்துள்ளது.

குடிநீர், சாலை வசதி, சுடுகாடு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்துத்தரக்கோரி தமிழ்நாட்டின் பெரும்பாலான கிராம மக்கள் போராடிக்கொண்டுதான் இருக்கின்றனர். அரசு நினைத்தால், மக்கள் கோரும் அடிப்படை வசதிகளைப் போர்க்கால அடிப்படையில் செய்து கொடுக்க முடியும். ஆனால், மக்களின் கோரிக்கைகளும் போராட்டங்களும் ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பெரும் பேசுப்பொருளாகினால் தவிர, மக்களின் கோரிக்கைகளை அரசு கண்டுகொள்வதில்லை. சமீபத்தில், “ஜி தமிழ்” தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “சரி-க-ம-பா” ரியாலிட்டி நிகழ்ச்சியில் திண்டிவனத்திலிருந்து கலந்துகொண்ட அரசு பள்ளி மாணவியின் அம்மணம்பக்கம் கிராமத்தில் போக்குவரத்து வசதி இல்லை என்பது வெட்டவெளிச்சமாகியதையடுத்து தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் ஓடோடிச் சென்று பேருந்து பயணத்தைத் துவக்கி வைத்தது, இதற்கு சிறந்த சான்றாகும்.

இந்த உண்மைகளையெல்லாம் மறைத்துவிட்டு, ஊராட்சிப் பகுதிகளை மாநகராட்சியுடன் இணைத்தால்தான் மக்களுக்கான அடிப்படை வசதிகளையெல்லாம் செய்துத்தர முடியும் என தி.மு.க. அரசு கூறுவது நயவஞ்சகமானதாகும். உண்மையில், தி.மு.க. அரசின் நகர விரிவாக்கத் திட்டத்திற்கு பின்னால் உழைக்கும் மக்கள் விரோத – பிரம்மாண்டமான கார்ப்பரேட் திட்டம் ஒளிந்துள்ளது.

கார்ப்பரேட்மயமாகும் கட்டமைப்புகள்

2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை அடைவது என்று இலக்கு நிர்ணயித்துள்ள தி.மு.க. அரசு, அதற்காக பல்வேறு கார்ப்பரேட் நல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றில் உள்கட்டமைப்பு திட்டங்களில் கார்ப்பரேட்டுகளின் முதலீடுகளை ஊக்குவிப்பது முக்கியமானதாகும். கடந்த காலங்களில் தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்களில் சொற்ப அளவிலேயே தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள நிலையில், அந்த நிலையை முடிவுக்கு கொண்டுவந்து கார்ப்பரேட் முதலீடுகளை தீவிரப்படுத்தும் வகையில் திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது தி.மு.க. அரசு.

அதனடிப்படையில், மாநகராட்சிகளில் செயல்படுத்தப்படும் உள்கட்டமைப்புக்கான வளர்ச்சித் திட்டங்கள் அரசு-தனியார் கூட்டு (Public-Private Partnership) அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ள தி.மு.க. அரசு, அதனை நடைமுறைப்படுத்தியும் வருகிறது. குறிப்பாக, நகரப் போக்குவரத்து, திடக்கழிவு மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவை அரசு-தனியார் கூட்டு அடிப்படையில் செயல்படுத்தவே திட்டமிட்டிருக்கிறது தி.மு.க. அரசு. இத்திட்டங்கள் யாவும் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே செயல்படுத்தப்படுகின்றன என்பதையும் வெளிப்படையாக அறிவித்துள்ளது.

எனவே, அரசு மக்களுக்கு செய்யக்கூடிய சேவைகள் அனைத்தையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப்பதற்காகவும், அதன்மூலம் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன என்பது தெளிவாகிறது. சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நகரங்களின் உள்கட்டமைப்புகளை கார்ப்பரேட்மயமாக்கும் பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில், இதற்குள் பிற பகுதிகளையும் கொண்டுவந்து அதன் எல்லைகளை விரிவுப்படுத்துவதற்காகவே தொடர்ச்சியாக நகர விரிவாக்கம் மேற்கொள்ளப்படுகிறது.

பரந்தூர் விமான நிலையத்திற்காக தங்கள் வாழ்விடங்களையும் விளைநிலங்களையும் கைப்பற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாண்டுகளாகப் போராடிவரும் மக்கள்.

குறிப்பாக, அரசு மக்களுக்கு செய்துத்தர வேண்டிய அடிப்படைக் கடமைகளான குடிநீர்-மின்சாரம் விநியோகத்தை கார்ப்பரேட்மயப்படுத்தி வருகிறது தி.மு.க. அரசு. இதற்காக தமிழ்நாடு முழுவதும் மூன்று தவணைகளில் கிட்டத்தட்ட மூன்று கோடி மின்சாரத்-திறன் மீட்டர்களைப் பொருத்துவதற்கு அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. மின்சாரத்துறை ஒப்பந்தத்திற்காக மாநில அரசுகளுக்கு அதானி லஞ்சம் கொடுத்ததை அமெரிக்க நீதிமன்றம் அம்பலப்படுத்தியதையடுத்து, தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு-அதானி கள்ளக்கூட்டு தோலுரிக்கப்பட்டதால் அதானி நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனினும் திறன் மீட்டர்கள் பொருத்துகிற திட்டம் நடைமுறையில்தான் இருக்கிறது. இந்த திறன் மீட்டர்கள் பொருத்துவதானது சோதனை அடிப்படையில் முதலில் மாநகராட்சிகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. சிறு,குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் உச்சநேர மின்சாரப் பயன்பாட்டை ஆராய்வதற்காக நேர அடிப்படையிலான திறன் மீட்டர்கள் பொருத்துவதற்கான அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இதனை வருகின்ற ஏப்ரல் மாதத்திலிருந்து குடியிருப்புகளுக்கும் அமல்படுத்தப் போவதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருக்கிறது.

மேலும், தரமான-பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்காக ஊராட்சிகளை மாநகராட்சிகளுடன் இணைப்பதாக கதையளக்கும் தி.மு.க. அரசு, கோயம்புத்தூர் மாநகராட்சியில் குடிநீர் விநியோகத்தை “சூயஸ்” (SUEZ) என்ற கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. பிற மாநகராட்சிகளிலும் குடிநீர் விநியோகத்தை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கத் துடித்துக் கொண்டிருக்கிறது.

தி.மு.க. ஆட்சியில் ‘ஆக்கிரமிப்பு அகற்றம்’ என்ற பெயரில் விரட்டியடிக்கப்படும் உழைக்கும் மக்கள்.

இதற்காக, பிப்ரவரி-மார்ச் 2025 வரை காலவரையறை முடிவு செய்யப்பட்டு, சென்னை, மதுரை, திருச்சி ஆகிய மாநகராட்சிகளில் குடிநீர் விநியோகத்திற்கான திறன் மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் நிறைவு பெற்றால், ஒரு சொட்டு தண்ணீரைக் கூட காசு கொடுத்துதான் வாங்க வேண்டும். இது மறுகாலனியாக்கத்தின் உச்சமாகும்.

அதேபோல் நகரப் போக்குவரத்துத்துறையும் தொடர்ந்து கார்ப்பரேட்மயமாகி வருகிறது. அரசு-தனியார் கூட்டில் கட்டப்பட்டு, பராமரிப்பிற்கு கார்ப்பரேட் நிறுவனத்திடம் 15 ஆண்டுகால ஒப்பந்தத்திற்கு விடப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத் திட்டம் இதற்கு துலக்கமான எடுத்துக்காட்டாகும். சமீபத்தில் கூட, சென்னையில் முதன்முதலாக தனியார் சிற்றுந்துகளை (Mini Bus) இயக்க தி.மு.க. அரசு அனுமதியளித்துள்ளது. அதேசமயத்தில், ஏற்கெனவே ஓடிக்கொண்டிருக்கும் அரசு சிற்றுந்துகளின் (Small Bus) கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

இவையன்றி, சென்னை மாநகராட்சியில் சுடுகாடு கட்டுவதற்கான ஒப்பந்தம் கார்ப்பரேட்டிற்கு வழங்கப்பட்டிருப்பது; அரசு-கார்ப்பரேட் ஒப்பந்தத்தின் பேரில் ஆற்றங்கரையோரத்து பூர்வக்குடி மக்கள் துரத்தியடிக்கப்பட்டு பூங்காக்கள் கட்டப்படுவது; மருத்துவத்துறையில் கட்டணப் பிரிவு உருவாக்கப்படுவது; மாநகராட்சி வசமிருந்த கழிவு மேலாண்மை கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்க்கப்பட்டு தூய்மை பணியாளர்கள் சுரண்டப்படுவது என மருத்துவத்துறை முதல் சுடுகாடு வரை உள்கட்டமைப்புகள் அனைத்தும் கார்ப்பரேட்மயமாகிக் கொண்டிருக்கின்றன.

நகர விரிவாக்க அறிவிப்பின் மூலம் வருங்காலங்களில் இது சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும். நகர விரிவாக்கம் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என தி.மு.க. அரசு தேனொழுகப் பேசுவதற்கு பின்னால் நகர ”உள்கட்டமைப்புகள் கார்ப்பரேட்மயமாக்கம்” எனும் அபாயகரமான, மக்கள் விரோதத் திட்டம் மறைந்துள்ளது.

பறிபோகும் விவசாய நிலங்கள்

நகர உள்கட்டமைப்புகள் கார்ப்பரேட்மயமாக்கம் மட்டுமின்றி நகர விரிவாக்கம் மூலம் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நோக்கமும் தி.மு.க. அரசிற்கு உள்ளது.

சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள டைடல் பூங்கா போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான கட்டமைப்புகளை 2 மற்றும் 3-ஆம் தர வரிசையில் உள்ள சேலம், தூத்துக்குடி, தஞ்சாவூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் மாதிரி அடிப்படையில் சிறிய டைடல் பூங்காக்களை (நியோ டைடல் பார்க்) உருவாக்கத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தி வருகிறது அரசு. சேலம் மாநகராட்சியில் (கருப்பூர்), தூத்துக்குடி, திருச்சி மாவட்டங்களில் நியோ டைடல் பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவைதவிர ராணிப் பேட்டை மற்றும் தூத்துக்குடியில் மின்சார வாகனத் தயாரிப்பிற்கான தொழிற்சாலைகள் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. இவையெல்லாம் வெறும் முன்னோட்டம் மட்டுமே. எட்டுவழிச்சாலை, பாரத் மாலா, சாகர் மாலா, துறைமுகங்கள் விரிவாக்கம் போன்ற பல்வேறு ஒன்றிய – மாநில அரசுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தக் காத்திருக்கின்றன.

இந்த கார்ப்பரேட் நலன்களிலிருந்து, விரிவாக்கப்படும் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள், பொது நிலங்கள் அனைத்தும் கையகப்படுத்தப்படும் பேரபாயம் இருக்கிறது. தமிழ்நாட்டில் தீவிரமாகிவரும் நகரமயத்தால் விவசாய நிலங்களின் பரப்பளவு ஆண்டிற்கு ஆண்டு சுருங்கிக் கொண்டே வருகிற சூழலில் மாநகராட்சி விரிவாக்கத்தால், நிலங்களின் மதிப்பு உயர்ந்து விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுவது தீவிரமாகும், உணவு உற்பத்தியும், விவசாயம் சார்ந்த துணைத் தொழில்களும் பாழாக்கப்படும். பெரும்பான்மை மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிற, வாழ்வாதாரமாக உள்ள இந்தத் தொழில்கள் பாழாக்கப்பட்டால் இத்தொழில்களிலிருந்து பல லட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர் தொழிலாளர்களாகத் துரத்தியடிக்கப்படுவார்கள்; விவசாயத்திலிருந்து வெளியேறும் தொழிலாளர்களை உட்கவர்வதற்கான போதிய தொழிற்துறை தமிழ்நாட்டில் கிடையாது. இது, வேலையின்மையைத் தீவிரமாக்கும். மேலும், இது வடமாநிலப் புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் மூலைமுடுக்கெங்கும் நிரம்பியுள்ள சூழலில், சமூக நெருக்கடிக்களைத் தீவிரமாக்கும்.

அதுமட்டுமின்றி, விவசாய நிலங்களும், பொதுநிலங்களும், ஏரி, குளங்களும், நீர்வழிப்பாதைகளும் நகரமயத்திற்கு தொடர்ந்து பலியாகி வருகின்றன. குறிப்பாக பாதாள சாக்கடைத் திட்டமும், விரிவாக்கப்படும் சாலைகளும், நீர்நிலைகளையும் நீர்வழிப்பாதைகளையும் அழித்தே உருவாக்கப்படுகின்ற சூழலில் தமிழ்நாடு முழுவதும் சூழலியல் நெருக்கடிகள் தீவிரமாகும். இதற்கு, முறையாகத் திட்டமிடப்படாத நகரமயமாக்கத்தால் சென்னை மாநகரம் ஒவ்வோர் பருவமழைக் காலத்திலும் பேரிடர்களால் பாதிக்கப்படுவதும், மக்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதே சான்று.

மேலும், மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட முப்பதாண்டு காலத்தில் ரியஸ் எஸ்டேட் மாஃபியாக்கள் புற்றீசல்கள் போல முளைத்திருக்கின்றனர். இந்த மாநகராட்சி விரிவாக்கமானது, இந்த மாஃபியாக்கள் கொழுக்கவே துணைபுரியும்.

ஏற்கெனவே கார்ப்பரேட் நலனுக்காகத் சிப்காட் மூலம் திருவண்ணாமலை, நாமக்கல் மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்துவதற்கான தமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதும் நாமறிந்ததே.

இவ்வாறு நிலம் கையகப்படுத்துவதற்காக மக்கள் போராட்டங்களைத் தடுப்பதற்காக, விவசாயிகள், எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் எதிர்ப்புகளையும் மீறி அவசர அவசரமாக நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை அரசிதழில் வெளியிட்டு நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதன்மூலம், கண் துடைப்பிற்குக்கூட மக்களிடம் கருத்துக்கேட்க அவசியமின்றி கார்ப்பரேட்டுகள் விரும்புகிற நிலத்தை, மக்களிடமிருந்து பறித்துக் கார்ப்பரேட்டுகளுக்கு கொடுக்க முடியும்.

தமிழ்நாட்டை மறுகாலனியாக்குகிற இந்த மக்கள் விரோத- கார்ப்பரேட் ஆதரவுத் திட்டங்களை ‘மக்கள் நலனு’க்காக செய்வதாக நயவஞ்சக நாடகமாடுகிறது தி.மு.க. அரசு. ஆக, மனித முகம் கொண்ட மறுகாலனியாக்கம்தான் திராவிட மாடல்.

ஒட்டச் சுரண்டும் திராவிட மாடல்!

மக்களை ஒட்டச் சுரண்டி கார்ப்பரேட்டுகளின் லாபவெறிபிடித்த தொந்தியை நிரப்புவதற்காகவும், மாநிலங்களை ஒன்றிய அரசின் சிற்றரசுகளாக மாற்றுவதற்காகவும் ஒன்றிய பாசிச மோடி அரசு ஜி.எஸ்.டி. என்ற வரி பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனை எதிர்ப்பதாக சொல்லும் தி.மு.க. அரசோ, மோடி அரசிடமிருந்து முறையாக வரிப்பகிர்வை பெறுவதற்கும் ஜி.எஸ்.டி-ஐ ரத்து செய்வதற்கும் போராடாமல் தமிழ்நாடு மக்கள் மீது வரி உயர்வையும், கட்டண உயர்வையும் சுமத்தி வருகிறது.

மாநிலத்திற்கான ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை, அவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றால் சொத்துவரி, மின்சாரக் கட்டணம் ஆகியவற்றை உயர்த்த வேண்டும் என்று ஒன்றிய அரசு நிர்பந்திப்பதாக கண்ணீர் வடிக்கும் தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை இரண்டு முறை சொத்துவரியையும் மூன்று முறை மின்சாரக் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டில், தமிழ்நாடு முழுவதும் 25 முதல் 150 சதவிகிதம் வரை சொத்துவரியை உயர்த்தியது. கடந்த 2024 அக்டோபர் மாதம் மாநகராட்சிகளில் சொத்துவரியை ஆண்டுக்கு ஆறு சதவிகிதம் உயர்த்துவதற்கான தீர்மானம் மாநகராட்சிகளின் மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. மாநகராட்சிகளில் மட்டுமின்றி உள்ளாட்சிகளிலும் ஆண்டுக்கு ஆறு சதவிகிதம் சொத்து வரியை உயர்த்திக்கொள்ளவும் அனுமதியளித்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

திருச்சி மாநகராட்சியில் ஏற்கெனவே இருந்த 65 வார்டுகளிலிருந்து ரூ.148 கோடி வரி வருவாய் கிடைத்தது. ஆண்டுதோறும் ஆறு சதவிகித வரி உயர்வால் திருச்சி மாநகராட்சியின் வருவாய் ரூ.160 கோடியாக உயரும் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில், திருச்சியில் மட்டும் புதிதாக 35 வார்டுகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டால் இந்த வருவாய் இன்னும் பல கோடி ரூபாய் வரை அதிகரிக்கும். இதேபோல மீதமுள்ள 24 மாநகராட்சிகளின் வரி வருவாயும் அதிகரிக்கும்.

அதுமட்டுமின்றி, சொத்துவரி உயர்வால் குடிநீர் வரி, கழிவுநீர் அகற்று வரி, குப்பை வரி என பல வரிகள் உயரும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்த சொத்துவரி உயர்வால் மாதந்தோறும் குடிநீர், கழிவு நீர், குப்பை ஆகியவற்றிற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இவற்றுடன், தொழில்வரி, தொழில் உரிமக் கட்டணம், கல்வி செஸ் வரி (ஆண்டு சொத்து மதிப்பில் ஐந்து சதவிகித உயர்வு), நூலக செஸ் வரி என இவற்றையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டால், தமிழ்நாடு மக்களிடமிருந்து பல கோடி ரூபாயை சொத்துவரியாக பகற்கொள்ளையடிக்கிறது தி.மு.க. அரசு.

இந்த சொத்து வரியிலிருந்து யாரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக புவிசார் தகவல் அமைப்பு தொழில்நுட்பம் மூலம் வரைபடம் உருவாக்கப்பட்டு மாநகர-நகர-உள்ளாட்சிப் பகுதிகளில் உள்ள சொத்துகளின் விவரங்கள் திரட்டப்படுகிறது. இதன் முதல் மாதிரியை பொன்னேரியில் செயல்படுத்தியது தமிழ்நாடு அரசு. கடந்த 2023-ஆம் ஆண்டு சென்னை பெருநகரத்தில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால், டிஜிட்டல் வரைபடத்தில் உள்ள சொத்திற்கேற்ப வரியைக் கட்ட வேண்டும். அதாவது, மாநகராட்சிகளின் சொந்த வருவாயைப் பெருக்க வேண்டும் என்ற இந்திய ரிசர்வ் வங்கி பரிந்துரையின்பேரில் இந்த முறை அமல்படுத்தப்படுகிறது.

இந்த சொத்துவரி உயர்வுக்கு முன்பாக, கடந்த ஜூலையில் மின்சாரக் கட்டணமும் (யூனிட்டிற்கு 25 பைசா முதல் 55 பைசா வரை) உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே அறிவித்துள்ளபடி ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து குடியிருப்புகளுக்கு உச்சநேர மின்கட்டணத்தை அமல்படுத்தினால், மக்களை ஒட்டச்சுரண்டுவதாக இருக்கும். குறிப்பாக இந்த உச்சநேரக் கட்டணத்தை அமல்படுத்தினால், மின்சாரக் கட்டணம் சுமார் 10 முதல் 20 சதவிகிதம் வரை உயரும் என்று கடந்த 2023-ஆம் ஆண்டில் கூறியிருக்கிறார் அன்றைய ஒன்றிய மின்சாரத் துறை அமைச்சாரான ஆர்.கே. சிங்.

மேலும், தமிழ்நாட்டில் ஒரு கோடி மக்கள் 100 யூனிட் இலவச மின்சாரத்தைப் பயன்படுத்துகிற சூழலில் திறன்மீட்டர் பொருத்துவதே தேவையற்றது என்கிறார், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினரான திரு.எஸ்.நாகல்சாமி. அனைத்துக் குடியிருப்புகளுக்கும் திறன் மீட்டர் பொருத்தப்பட்டால் 100 யூனிட் இலவச மின்சாரம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதும் கேள்விக்குறியே!

இவையெல்லாம், மாநகராட்சி விரிவாக்கத்தால் ஏற்படும் நேரடி பாதிப்புகளாகும். மறைமுகமாக வாடகை உயர்வு, மின்சாரக் கட்டணம், தண்ணீர் கட்டணம், காய்கறி-மளிகை விலை உயர்வு என அனைத்து விலை உயர்வுகளும் மக்கள் மீதுதான் விழும். கல்வி மற்றும் மருத்துவ செலவினங்கள், எகிறும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி நிற்கும் நிலையில், அவர்களிடம் மேலும் வழிப்பறி செய்வதாகவே இந்த வரி உயர்வு அமையும்.

போராட்டமே தீர்வு:

இத்துணை மக்கள்விரோத தன்மை கொண்ட நகர விரிவாக்கத்தைத்தான் உள்கட்டமைப்பு வளர்ச்சி, நகரமயமாக்கல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகிறது தி.மு.க. அரசு. ஆனால், சமூகப் பொறுப்பற்ற சிறு கும்பலிடம் உற்பத்தி சக்திகளை குவித்து மேற்கொள்ளப்படும் இந்த உள்கட்டமைப்பு திட்டங்களும் நகரமயமாக்கலும் மக்களுக்கு பயனளிப்பதாக அல்லாமல், உழைக்கும் மக்களுக்கு எதிரானதாகவே உள்ளது.

1990-களில் விவசாய நெருக்கடியால் மக்கள் கிராமங்களை விட்டு வெளியேறியது அன்றைய சூழலில் நகரமயமாக்கலுக்கான முக்கிய அம்சமாக இருந்தது. அப்போது மக்களை உள்வாங்கி கொள்ளும் கட்டமைப்பு இல்லாதது நெருக்கடியை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, தற்போது மேற்கொள்ளப்படும் நகரமயமாக்கலும் உற்பத்தியின் விளைவாகவோ புதிய வளர்ச்சியை ஏற்படுத்துவதாகவோ அல்லாமல் வெறும் குவிதலாக மட்டுமே உள்ளது. வேலைவாய்ப்பு, சுகாதாரம், ஆரோக்கியம் என எதையும் கணக்கில் கொள்ளாத, கேடுகளின் மையமாகவும் மேலிருந்து திணிக்கப்படுவதாகவும் உள்ளது. மேலிருந்து திணிக்கப்படுகின்ற-கார்ப்பரேட் சேவையை மட்டுமே பிரதானமாக கொண்டுள்ள இந்த நகரமயமாக்கலை உழைக்கும் மக்களால் உள்வாங்கிக்கொள்ள முடியாது.

மேலும், சேவைத் துறையிலிருந்து அரசு விலகல், வரிச் சுரண்டல், விலைவாசி-கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை தன்னகத்தே கொண்ட இந்த நகரமயமாக்கலால் மக்களின் வாழ்க்கை செலவினம் அதிகரிக்கும். இந்திய பெருநகரங்களோடு ஒப்பிடுகையில் குறைந்த வாழ்க்கை செலவினத்தை கொண்டுள்ள தமிழ்நாட்டின் சென்னை போன்ற நகரங்கள் உழைக்கும் மக்கள் வாழ முடியாத அதிக வாழ்க்கை செலவினத்தை கோருகின்ற நகரங்களாக மாற்றப்படும். இதனால் சமூக நெருக்கடி தீவிரமடைவதோடு உழைக்கும் மக்கள் புலம்பெயர்வதும் அகதிகளாவதும் தீவிரமடையும். பாசிச மோடி அரசின் கார்ப்பரேட்மயமாக்கத்தையும் பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்ப்பதையும் எதிர்ப்பதாக கூறிக்கொண்டே அதனை வேறு வழிகளில் நடைமுறைப்படுத்துகிறது தி.மு.க. அரசு.

அம்மையப்பன் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களை திருவாரூர் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் அதிகாரம் தோழர்களுடன் இணைந்து போராடிவரும் மக்கள்

இந்நிலையில்தான், தி.மு.க. அரசின் மாநகராட்சி – நகராட்சி விரிவாக்க அறிவிப்பு வெளியான உடனே, தங்களது கிராமங்களை மாநகராட்சி – நகராட்சியுடன் இணைக்கூடாது என்று திருச்சி, மதுரை, கும்பகோணம், கரூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், சேலம், கடலூர், விழுப்புரம் என தமிழ்நாடு முழுவதும் மக்கள் போராட்டங்கள் வெடித்தன. சாலைமறியல், கடையடைப்புப் போராட்டம், கிராம நிர்வாக அலுவலகம் முற்றுகை என பலவழிகளில் மக்கள் போராடி வருகின்றனர். ஊராட்சிப் பகுதிகளை மாநகராட்சி – நகராட்சியுடன் இணைப்பதால் வரி உயரும், 100 நாள் வேலை கிடைக்காது, தொகுப்பு வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படாது போன்ற வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்வைத்து மக்கள் போராடி வருகின்றனர். உயர்த்தப்படும் வரி உயர்வுக்கு ஏற்ப மக்களின் சம்பளம் உயர்கிறதா? என்பதே போராடும் மக்களின் உள்ளுணர்வாக இருக்கிறது. பல்வேறு ஜனநாயக சக்திகளும் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றனர். சி.பி.ஐ(எம்) கட்சி தனது மாநில மாநாட்டில் மாநகராட்சி விரிவாக்கத்திற்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றியிருக்கிறது.

தங்களது வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள தன்னெழுச்சியாகப் போராடும் மக்களுக்கு ஆதரவளிப்பது புரட்சிகர-ஜனநாயக சக்திகளின் தார்மீகக் கடமை எனினும், போராடும் மக்களுக்கு பிரச்சினையின் முழுப்பரிமாணத்தைப் புரிய வைப்பதும், அரசியல்-சித்தாந்த-அமைப்பு ரீதியாக மக்கள் போராட்டங்களுக்குத் தலைமையளிப்பதும், மக்கள் போராட்டத்தை மறுகாலனியாக்கம் – பாசிசத்திற்கு எதிரான போராட்டமாக வளர்த்தெடுப்பதும் புரட்சிகர-ஜனநாயக சக்திகளின் வரலாற்றுக் கடமையாகும்.


அப்பு

(புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 ஜனவரி, 1988 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 05 | 1988 ஜனவரி 16-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: திடீர் விலையேற்றம்: ஈழப் போரின் நேரடி விளைவு!
  • இந்தியாவிலுள்ள சர்வதேச எதிர்புரட்சி இராணுவப்பள்ளி
  • ஆந்திரா: ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கடத்தல்: அரசு பயங்கரவாதத்திற்கு பதிலடி
  • திருபாய் ஹிராசந்த் அம்பாணி – குமாஸ்தா குபேரரான கதை!
  • அம்பாணியின் தில்லுமுல்லுகள்
  • நுஸ்லி வாடியா பூர்வீகம்!
  • உலகம் பிறந்தது எனக்காக! ஓடும் நதிகளும் எனக்காக! பானிதார்களின் கொட்டம்
  • டெங் – ராஜீவ் – கோர்பசேவ்: யாருக்கு யார் ஆசான்?
  • நாறுது நாடாளுமன்ற ஜனநாயகம்
  • விமர்சனமா? வெறியா?
  • ஓடுகாலிகளின் அவதூறுக்கு மறுப்பு!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 01-15 ஜனவரி, 1988 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 04 | 1988 ஜனவரி 01-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: எம்ஜிஆர் உருவாக்கிய கழுதைப்புலிகளும், வெறி நாய்களும்
  • அரசியல் சக்தியாக எழ அறைகூவல் விடுக்கும் நான்காவது பிளீனம்
  • உலகத் தமிழர்களின் எதிரி ராஜீவ்
  • எம்.ஜி.ஆர்: ஒரு பாசிஸ்டின் மரணம்
  • போலிக் கம்யூனிஸ்டுகளின் வேசித்தனம்
  • பாகிஸ்தான் – வங்கதேசம்: ‘ஜனநாயகம்’ தீர்வாகுமா?
  • மணிப்பூர்: இந்தியாவின் ஈழம்?
  • அற்பக் கூலி அடிமை வாழ்வு கொத்தடிமைகளாக கூலி விவசாயிகள்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



அமெரிக்காவில் கும்பலாட்சி துவக்கம்: புதிய வகை மேலாதிக்கத்திற்கான அறிவிப்பு!

டந்த ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றுக்கொண்டார். தேர்தலில் வென்றது ட்ரம்ப் என்றாலும், அவருக்குப் பின்னணியில் இருப்பது எலான் மஸ்க்-தான் என்பது தேர்தலின் போதே அம்பலமாகிவிட்டது. பதவியேற்புக்கு முன்பிருந்தே புதிய வகையில் அமெரிக்க மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் முயற்சிகளில் இவ்விருவரும் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே ஏராளமான நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டு, “அமெரிக்கா முதன்மை” (America First) என்ற பெயரில் தனது பாசிசக் கோமாளித்தனங்களையும் மேலாதிக்க வெறியையும் வெளிக்காட்ட ஆரம்பித்தார் ட்ரம்ப்.

தினந்தோறும் பல அறிவிப்புகள், முரண்பட்ட பேச்சுகள், நடவடிக்கைகள் என எந்தத் திசையில் செல்கிறார்கள், என்ன செய்யப் போகிறார்கள் என்ற குழப்பம் இருப்பது போன்ற தோற்றத்தை ட்ரம்ப் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். கடந்த ஆட்சிக் காலத்திலும் இவ்வாறான ‘கோமாளித்தனங்களை’ ஏராளமாகச் செய்திருந்தாலும், இம்முறை அவையனைத்துக்கும் பின்னால் ஒரு பொது நோக்கம் ஒளிந்திருப்பது பளிச்செனத் தெரிகிறது.

கும்பலாட்சிக்கான அறிவிப்பு:

“இன்று, அமெரிக்காவில் அதீத செல்வம், அதிகாரம் மற்றும் செல்வாக்கு கொண்ட ஒரு சிறு கும்பலின் ஆட்சி உருக்கொள்ளத் தொடங்கியுள்ளது. இது நமது முழு ஜனநாயகத்தையும், நமது அடிப்படை உரிமைகள், சுதந்திரம், அனைவரும் முன்னேறுவதற்கான நியாயமான வாய்ப்பையும் அச்சுறுத்துகிறது” என்று முந்தைய அதிபர் ஜோ பைடன் தனது இறுதி உரையில் கூறியிருக்கிறார். அந்தளவுக்கு பெருங்கோடீஸ்வரர்களின் வெளிப்படையான ஆட்சியாக ட்ரம்பின் இப்போதைய நிர்வாகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினரின் நலனுக்காக பாடுபடுவதாகக் கூறி ஆட்சியைப் பிடித்த ட்ரம்ப், தன்னளவிலேயே சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புகொண்ட கோடீஸ்வரர். உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், “அரசாங்க செயல்திறன் துறை” எனப்படும் புதியதொரு துறைக்குத் தலைமை தாங்குவார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. கல்வி, உள்துறை, கருவூலம், வணிகம், சிறுவணிக நிர்வாகம், நாசா உள்ளிட்ட பல துறைகளுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து மதிப்பு கொண்டவர்கள் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

“மறுகாலனியாதிக்கத்தைப் புதிய வகையில் நிலைநாட்டும் திசையில் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் நிதிமூலதன ஆதிக்கக் கும்பலும் இனி பயணிப்பர்; இதற்கேற்ப அமெரிக்க அரசு எந்திரத்தை கார்ப்பரேட்டுகள் நேரடியாகவே கட்டுப்படுத்தி இயக்குவர் என்பதே ட்ரம்ப் – மஸ்க் கூட்டணி பெற்றிருக்கும் வெற்றி உலகுக்குச் சொல்லவரும் செய்தி” என “அமெரிக்க அதிபர் தேர்தல்: ட்ரம்ப்-மஸ்க் கும்பலின் வெற்றியும் – விளைவுகளும்!” என தலைப்பிடப்பட்ட டிசம்பர் 2024 புதிய ஜனநாயகம் இதழ் கட்டுரையில் கூறப்பட்டிருந்ததை ட்ரம்ப் மற்றும் அவரது கார்ப்பரேட் கூட்டாளிகள் மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ட்ரம்பின் கடந்த ஆட்சிக்காலத்தில் அவருடன் ஒத்துப்போகாத ஆப்பிள், மெட்டா உள்ளிட்ட பல கார்ப்பரேட் முதலாளிகளும் இப்போது இணக்கமான போக்கினைக் கடைபிடிக்கத் தொடங்கியிருக்கின்றனர். ட்ரம்ப் – மஸ்க் கும்பலுடனான தமது நெருக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், ட்ரம்பின் பதவியேற்பு நிகழ்வுக்கு தலா ஒரு மில்லியன் டாலர் வரை பலரும் நிதியளித்துள்ளனர். இதுவரையில்லாத அளவுக்கு 250 மில்லியன் டாலர்கள் வரை பதவியேற்பு நிதி திரண்டிருக்கிறது. மேலும், பல இலட்சம் கோடி டாலர்களைக் குவித்துள்ள எலான் மஸ்க் (டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ்), ஜெஃப் பெசோஸ் (அமேசான்), மார்க் ஜுக்கர்பெர்க் (மெட்டா), பெர்னார்ட் அர்னால்ட் (LVMH), செர்ஜி பிரின் (கூகுள்), முகேஷ் அம்பானி (ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்), மிரியம் அடெல்சன் (கேசினோஸ்), ரூபர்ட் முர்டோக் (ஃபாக்ஸ் நியூஸ், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்), டிம் குக் (ஆப்பிள்), சுந்தர் பிச்சை (ஆல்பாபெட்), சாம் ஆல்ட்மேன் (OpenAI) என கார்ப்பரேட் முதலாளிகளும் தலைமைச் செயல் அதிகாரிகளுமாய் நிறைந்திருந்தது ட்ரம்பின் பதவியேற்பு நிகழ்வு.

கடந்த காலங்களில் ட்ரம்ப் உள்ளிட்டோரின் பொய்ப் பிரச்சாரங்களை அம்பலப்படுத்திய உண்மை கண்டறியும் முறையைக் கைவிடுவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், ட்ரம்புக்கும் குடியரசுக் கட்சிக்கும் நெருக்கமாக இருக்கும் சிலரை தனது நிறுவனங்களின் உயர்பதவிகளில் அமர்த்தவும் செய்திருக்கிறார் மார்க் ஜூக்கர்பெர்க். இதன்மூலம், ட்ரம்ப்- மஸ்க் கும்பலின் பொய்ப்பிரச்சாரங்கள் தங்கு தடையின்றி பெருக்கெடுத்து ஓடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், தொடர்ச்சியாக பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் எதிர்கொண்டுவரும் தொழிற்சங்கப் பிரச்சினைகள், தொழிலாளர் போராட்டங்களைத் திசைதிருப்பும் வகையில் பிளவுவாத அரசியலை முன்னெடுத்துள்ளது ட்ரம்ப் – மஸ்க் கும்பல். இதையெல்லாம் கணக்கில் கொண்டே, ஜனநாயக முகமூடிகளைக் கழற்றி எறிந்துவிட்டு, ட்ரம்ப் – மஸ்க் கும்பலின் பின்னால் அணிவகுத்து கும்பலாட்சிக்குத் தயாராகி வருகின்றனர் அமெரிக்க தொழில்நுட்ப – தொழிற்துறைக் கார்ப்பரேட்டுகள். இதையொட்டிய பல்வேறு உத்தரவுகளில் ட்ரம்ப் கையெழுத்திட்டு, முதல்நாளே தனது சேவையைத் துவங்கியிருக்கிறார்.

முதல்நாள் உத்தரவுகளின் உள்ளடக்கம்:

  • பன்முகத்தன்மை, சமவாய்ப்பு, உள்ளடக்குதல் (DEI) கொள்கை ரத்து
  • ஜனவரி 6 (வெள்ளை மாளிகை கைப்பற்றல்) கலவரக்காரர்களுக்கு மன்னிப்பு வழங்குதல்
  • ஆண் – பெண் என்ற இரண்டு பாலினங்களை மட்டுமே அங்கீகரித்தல். திருநங்கைகள் உள்ளிட்ட மூன்றாம் பாலினத்தோருக்கான அங்கீகாரத்தை ரத்து செய்தல்.
  • கூட்டாட்சி ஊழியர் நியமனக் கொள்கையை மாற்றுதல்
  • காலநிலை மாற்ற ஒப்பந்தங்களில் இருந்து வெளியேறுதல்
  • எரிசக்தி கொள்கை என்ற பெயரில் புதைபடிவ எரிபொருள் உற்பத்தியை ஊக்குவித்தல்
  • குடியேற்றம் மற்றும் குடியுரிமை தொடர்பான விதிகளைத் திருத்துதல்
  • அமெரிக்காவின் தெற்கு எல்லையில் அவசரநிலை பிரகடனம் மற்றும் ராணுவம் குவிப்பு
  • உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறுதல்
  • பிற நாடுகளுக்கான நிதி உதவிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல்

போன்ற பல உத்தரவுகளில், பதவி ஏற்றுக்கொண்ட முதல் நாளிலேயே கையெழுத்திட்டுள்ளார் ட்ரம்ப்.

டிரம்ப் பதவியேற்பதற்கு எதிராக கிளர்ந்தெழுந்த அமெரிக்க மக்கள்.

“அமெரிக்கா முதன்மை” என்ற முழக்கத்தை மையமாக்கி, ட்ரம்ப் தனது அரசியல் திட்டங்களை அறிவித்து வருகிறார். இது ஹிட்லரின் “ஜெர்மனி முதன்மை” என்ற முழக்கத்துடன் ஒப்பிடத்தக்கது. ட்ரம்பின் முழக்கத்தின் உள்ளே எலான் மஸ்க் தலைமையிலான கார்ப்பரேட் நிதிமூலதனக் கும்பலின் நலன்கள்தான் பிரதானமாக இருக்கின்றன. இவை பாசிசத்திற்கான அடிப்படையை உருவாக்குகின்றன. இந்த சிறிய கார்ப்பரேட் கும்பல், தங்களது வளர்ச்சியையும் ஆட்சியையும் நிலைநிறுத்துவதற்காக, சமூகத்தை பிரித்து, இனவாதம் மற்றும் மதவெறியை ஆயுதமாகப் பயன்படுத்தி, மக்களை எதிரிகளாக்கி மோதவிடும் வேலையில் இறங்கியுள்ளது.

உதாரணமாக, பன்முகத்தன்மை, சமவாய்ப்பு, உள்ளடக்குதல் (DEI) கொள்கை ரத்து செய்யப்பட்டிருப்பதைக் கூறலாம். இக்கொள்கையை “ஆபத்தானது, இழிவானது, ஒழுக்கக்கேடானது” என்று கூறி ரத்து செய்துள்ள ட்ரம்ப், அதற்கு மாற்றாக, “தகுதி, திறன் மற்றும் நுண்ணறிவு” (MEI) என்ற புதிய கொள்கையை முன்வைத்துள்ளார். இந்தப் புதிய கொள்கையை ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் ஏற்க மறுத்துள்ளன. ஆனால், மெட்டா, மெக்டொனால்ட்ஸ், வால்மார்ட், ஹார்லி-டேவிட்சன், ஜான் டீர், அமேசான், போயிங் போன்ற பல கார்ப்பரேட் நிறுவனங்கள், பன்முகத்தன்மை மற்றும் சம உரிமைக் கொள்கைகளைக் கைவிட்டுவிட்டு, ட்ரம்பின் புதிய கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளன. இதன்மூலம், அவர்கள் வெள்ளை இனவாதத்தை ஊக்குவித்து தொழிலாளர் வர்க்கத்தைப் பிரிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்த இருப்பதை அறிவித்துள்ளனர்.

ட்ரம்ப் மற்றும் மஸ்க் கூட்டணி, அரசு நிர்வாகத்திலிருந்து முந்தைய டி.இ.ஐ. கொள்கைக்கு ஆதரவான ஊழியர்களை நீக்கி, தங்களுடைய இனவெறிக் கொள்கையின் ஆதரவாளர்களை பதவிகளில் நியமிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது, இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசக் கும்பல், அரசு எந்திரத்தில் ஏற்படுத்திவரும் மறுகட்டமைப்புச்  செயல்பாடுகளைப் ஒத்ததாகும்.

ஜாடிக்கேற்ற மூடிகளை ஆதரிக்கும் மஸ்க்:

தனது டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களை ஆதிக்கம் பெறச் செய்யவும், அவற்றுக்கான மூலப் பொருட்களைக் கட்டற்ற முறையில் கொள்ளையடிக்கவும் உகந்த வகையில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார் எலான் மஸ்க். உள்நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் தனக்குச் சாதகமான ஆட்சிகள் – ஆட்சியாளர்கள் இருக்க வேண்டுமென விரும்புகிறார். இந்த நோக்கத்திற்கு உடன்படாத ஆட்சியாளர்களை வெளிப்படையாகச் சாடி, ஆட்சியை விட்டு நீக்க நெருக்கடி தந்து பாசிசத்தின் பாதுகாவலனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார் மஸ்க்.

ட்ரம்ப் – மஸ்க் கும்பலின் நெருக்கடிக்கு முதலில் பலியிடப்பட்டிருப்பது கனடா பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ. அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான வர்த்தகப் பற்றாக்குறையை, கனடாவுக்குக் கொடுக்கப்படும் மானியம் எனத் திரித்துப் பேசிய ட்ரம்ப், அந்த மானியங்களால்தான் கனடா வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றார். மேலும், அமெரிக்காவின் 51-வது மாகாணமாக கனடா இணைந்துகொண்டால் வரிகள் இல்லாமல் வாழலாம் என்றும் ட்ரூடோவை கனடாவின் ஆளுநர் என்றும் இழிவுபடுத்தினார். இதேபோல் எலான் மஸ்க்கும் தன் பங்குக்கு ட்ரூடோவைக் கடுமையாக இழிவுசெய்தார். அடுத்து வரும் தேர்தலில் ட்ரூடோ தோற்றுப் போவார் என்று மஸ்க் பேச ஆரம்பித்த பின், ட்ரூடோவின் கட்சியினரே அவர்மீது நம்பிக்கை இழந்து, பதவி விலகச் சொல்லி நெருக்கடி கொடுத்தனர். அதற்கு முன்பே கூட்டணிக் கட்சிகள் ஆதரவை விலக்கிக் கொண்டன. இதன் பின்னிருப்பது, கனடாவின் எண்ணெய் – எரிவாயு வளங்களையும் இயற்கை வளங்களையும் கொள்ளையிட வேண்டுமென்ற ட்ரம்ப் – மஸ்க் கும்பலின் மேலாதிக்க வெறியே.

இதேபோல, தனது மின்சாரக் கார்களுக்கு ஆதரவாக சுற்றுச்சூழல் விதிகளைத் திருத்தவும், மானியங்களைக் கொடுக்கவும் உடன்படாத ஐரோப்பிய நாடுகள் மீதும் எலான் மஸ்கின் ‘அஸ்திரங்கள்’ பாயத் தொடங்கியிருக்கின்றன. பொதுவில் ‘இடது’சாரிகளாகவும் ‘மைய’வாதிகளாகவும் அறியப்படும் இங்கிலாந்து பிரதமர், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் அதிபர்களுக்கு எதிராக கடும் அவதூறுகள், குற்றச்சாட்டுகளை வீசுவதோடு அவர்கள் பதவி விலகினால்தான் அந்நாடுகள் உருப்படும் எனவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார். இது மட்டுமின்றி இந்நாடுகளில் உள்ள தீவிர வலதுசாரி கட்சிகளை வெளிப்படையாக ஆதரித்து பரப்புரையும் செய்து கொண்டிருக்கிறார். குறிப்பாக ஜெர்மனியின் வலது தீவிரவாதக் கட்சியான ‘ஜெர்மனிக்கான மாற்று’ (AfD) கட்சியை தடைசெய்ய வேண்டுமென அந்நாட்டிலுள்ள இதர தாராளவாதக் கட்சிகள் கோரிவருகின்றன. ஆனால், எலான் மஸ்க்கோ, இக்கட்சிதான் ஜெர்மனியின் கடைசி நம்பிக்கை, அடுத்த தேர்தலில் இக்கட்சி வெற்றி பெறாவிட்டால் ஜெர்மனியைக் காப்பாற்ற முடியாது என பேசி வருகிறார்.

ட்ரம்ப் பதவியேற்புக்கு மற்ற நாட்டுத் தலைவர்களைக் கூப்பிடுவதிலும் இதே அணுகுமுறையைத்தான் கையாண்டுள்ளனர். இதுவரை அமெரிக்காவின் விசுவாசிகளாக இருந்தாலும் கூட இப்போது தங்களுக்கு ஒத்துவராத ஆட்களைப் புறக்கணிப்பதும், அவர்களுக்கு எதிரான ஆட்களை அழைப்பதுமாக தமது நோக்கத்தை வெளிப்படையாகவே காட்டிக் கொண்டுள்ளனர். இங்கிலாந்து பிரதமர், பிரான்ஸ் – ஜெர்மனி அதிபர்களையும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவரையும் அழைக்காமல் அங்குள்ள தீவிர வலதுசாரி கட்சித் தலைவர்களை அழைத்துள்ளனர். இன்னொரு பக்கத்தில் இத்தாலி, ஹங்கேரி, எல் சால்வடார், அர்ஜெண்டினா போன்ற நாடுகளின் வலதுசாரி ஆட்சியளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

தனது முதல் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவின் முதன்மை எதிரி என அறிவிக்கப்பட்ட சீனாவின் அதிபருக்கு முதல் அழைப்பை அனுப்பிய ட்ரம்ப், நகமும் சதையுமாக இருந்த மோடியை அழைக்கவே இல்லை. எதிரியாக இருந்தாலும், அருமண் தனிமங்களுக்கு சீனாவையே பெரிதும் சார்ந்திருப்பதால், உடனடியாகப் பகைத்துக் கொள்ளாமல் இணக்கப் போக்கைக் கையாள முடிவு செய்துள்ளனர். மறுபக்கத்தில், 2020 தேர்தலில் ட்ரம்ப் தோற்ற பிறகு அவரைக் கண்டுகொள்ளாமல், பைடனுடன் நெருக்கம் காட்டினார் மோடி. எலான் மஸ்க் விரும்பிய வகையில் மின்சாரக் கார் தயாரிப்புக்கு சலுகைகள் கொடுக்க முன்வராமல் இருந்தார். செயற்கைகோள் வழியே இணையத் தொடர்பு கொடுக்கும் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கும் போதிய வகையில் மோடி ‘சேவை’ செய்யவில்லை. இவற்றிற்கெல்லாம் மோடிக்குப் பாடம் புகட்டவே அவரைப் புறக்கணித்தனர். ஒரு வாரம் கழித்து மோடி தொலைபேசி வழியே ட்ரம்பிடம் பேசியபின், சமரசம் செய்துகொள்ளும் முடிவுக்கு வந்துள்ளனர்.

ஆர்டிக் மண்டலத்தைக் கொள்ளையிடத் துடிக்கும் ட்ரம்ப் – மஸ்க்:

துவக்கம் முதலே தமது நலனில் இருந்து அனைத்தையும் அணுகுவதன் மூலம், தங்களது ஆட்சியின் திசைவழியை வெளிப்படையாக அறிவித்திருக்கிறது ட்ரம்ப் – மஸ்க் கும்பல். மின்சாரக் கார்கள் – மின்கலன்கள் தயாரிப்பிற்கும், ராணுவ – விண்வெளி வாகனத் தயாரிப்பிற்கும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்குத் தேவையான ‘சிப்’ தயாரிப்புக்கும் அவசியமான அருமண் தனிமங்கள், கனிம வளக்கொள்ளையில் மேலாதிக்கம் செலுத்த விரும்பும் எலான் மஸ்க், அதற்கேற்ப காய்நகர்த்தி வருகிறார். அதன் தொடக்கமாகவே, ட்ரம்பைத் தூண்டிவிட்டு கிரீன்லாந்து ஆக்கிரமிப்பு பற்றி பேச வைத்துள்ளார்.

ரஷ்யா, கனடா, கிரீன்லாந்து, பின்லாந்து உள்ளிட்ட பல நாடுகளின் எல்லைகளைக் கொண்டிருக்கிறது பனிபடர்ந்த ஆர்டிக் மண்டலம். இதிலுள்ள கிரீன்லாந்து, டென்மார்க் முடியாட்சியின் கீழ் ஒரு தன்னாட்சிப் பகுதியாக இருந்துவரும் உலகின் மிகப்பெரிய தீவாகும். சுமார் 175 ஆண்டு காலமாகவே அப்பகுதியைக் கைப்பற்றிக்கொள்ளும் நோக்கில் அவ்வப்போது அமெரிக்கா முயற்சி செய்துவருகிறது.

2019-ஆம் ஆண்டில், தனது முதல் ஆட்சிக்காலத்திலேயே “அமெரிக்கா கிரீன்லாந்தை வாங்க முடிந்தால் எப்படி இருக்கும்?” என தனது ஆலோசகர்களிடம் கேட்ட ட்ரம்ப், இதை வாங்கி, அமெரிக்காவின் நிலப்பரப்பை விரிவுபடுத்த வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார். இப்போது மீண்டும், அமெரிக்காவின் பாதுகாப்பு நலன்களுக்காக கிரீன்லாந்தின் மீதான உரிமையும் கட்டுப்பாடும் அவசியம் எனக் கூறி வருகிறார். கிரீன்லாந்தை வாங்குவது பற்றி தன் ஆதரவாளர்களிடம் பேசும்போது, இது “ஒரு மிகப்பெரிய ரியல் எஸ்டேட் ஒப்பந்தமாக இருக்கும்” என்று கூறிய ட்ரம்ப், பின்னர், “நகைச்சுவையாக” கூறினேன் என்று நழுவலாக விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து, டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெடெரிக்சனுடன் ட்ரம்ப் தொலைபேசியில் உரையாடியபோது, “கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை; இது ஒரு அபத்தமான யோசனை” என்று டென்மார்க் பிரதமர் கடுமையாக விமர்சித்தார். இதனையடுத்து, நடக்கவிருந்த அதிகாரப்பூர்வ டென்மார்க் பயணத்தை ரத்துசெய்த ட்ரம்ப், “தகாத முறையில் நடந்துகொண்டார்” என்று டென்மார்க் பிரதமரை விமர்சித்தார். கிரீன்லாந்தின் தலைவர்கள் தங்களது தன்னாட்சியை வலியுறுத்தி, ட்ரம்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற மற்ற ஐரோப்பிய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஆர்டிக் மண்டலத்தின் மீதான அமெரிக்காவின் (ட்ரம்ப் – மஸ்க்) வெறித்தனமான ஈடுபாட்டுக்கு அங்குள்ள அரிய மற்றும் முக்கியமான கனிம வளங்களும், போர்த்தந்திர ரீதியான புவியியல் முக்கியத்துவமும் முதன்மைக் காரணமாக இருக்கின்றன. கிரீன்லாந்தில் அருமண் தனிமங்கள் மற்றும் யுரேனியம், தங்கம், இரும்பு தாது, தாமிரம், துத்தநாகம், டைட்டானியம் ஆகியவை ஏராளமாகப் புதைந்து கிடக்கின்றன. இவை, மின்னணு சாதனங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்கள் (எ.கா., மின்கலங்கள், காற்றாலை டர்பைன்கள்) மற்றும் இராணுவத் தொழில்நுட்பங்களுக்கு மிகவும் முக்கியமானவை.

அமெரிக்கா இத்தகைய கனிமங்களுக்கு தற்போது சீனாவையே பெரிதும் சார்ந்துள்ளது. எனவே, கிரீன்லாந்தின் அருமண் கனிம வளங்களைக் கொள்ளையிடுவதன் மூலம் சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க விரும்புகிறது. குறிப்பாக, எலான் மஸ்க் தனது டெஸ்லா நிறுவனத்தின் மின்சாரக் கார்களுக்கான மின்கலங்கள் தயாரிக்க லித்தியம், கோபால்ட் உள்ளிட்டவை மீதான ஏகபோகத்தை நிலைநாட்ட, கிரீன்லாந்து – ஆர்டிக் பகுதியைக் கைப்பற்றுவது அவசியமாக இருக்கிறது.

ஆர்டிக் பகுதியில் எண்ணெய், இயற்கை எரிவாயு, தங்கம், வெள்ளி, நிக்கல், அருமண் தனிமங்கள் மற்றும் வைரங்கள் போன்ற கனிம வளங்கள் செறிந்துள்ளன. இதனால், இப்பகுதி உலக அரசியலில் முக்கியமான பொருளாதார மற்றும் பாதுகாப்பு மையமாக மாறுகிறது. காலநிலை மாற்றம் காரணமாக ஆர்டிக் பிராந்தியத்தில் உள்ள பனி உருகி வருவதால், புதிய கனிம வளங்கள் மற்றும் கடல் பாதைகளை அணுகும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி தனது பொருளாதார மற்றும் போர்த்தந்திரரீதியான மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது. ரஷ்யா, சீனா மற்றும் கனடா ஆகிய நாடுகளும் ஆர்டிகின் வளங்களைக் கைப்பற்றும் போட்டியில் ஈடுபட்டுள்ளன.

காலநிலை மாற்றம் ஒரு ஏமாற்று என்று கூறி பாரீஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என்று அறிவித்திருப்பதன் பின்னணியில் ஆர்டிக் மண்டலத்தைக் கொள்ளையிடும் நோக்கமே முதன்மையாக அடங்கியிருக்கிறது என்பதை இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. ஆர்டிக் பனிப்பாறைகள் எந்தளவுக்கு உருகுமோ, அந்தளவுக்கு அங்குள்ள எண்ணெய் – இயற்கை வளங்களைக் கொள்ளையிடுவது எளிதாகும். புதிய கடல்வழிகள் திறக்கும். இதுவரை மனிதன் வசித்துவரும் இடங்களை எல்லாம் பங்கீடு – மறுபங்கீடு செய்துவந்த கார்ப்பரேட்டுகள், இப்போது கால்படாத இடங்களையும் கைப்பற்ற ஆரம்பித்துவிட்டனர். புவிக்கோளத்தை அழிவின் விளிம்பில் நிறுத்தியேனும் தமது மூலதன ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் மிகக் கேடுகெட்ட, இழிந்த நிலைக்குச் சென்றுவிட்டது கார்ப்பரேட் முதலாளித்துவம்.

புதிய வகை மேலாதிக்கம்:

ரஷ்யா, சீன ஏகாதிபத்தியங்களின் எழுச்சியால் அமெரிக்காவின் ஒற்றைத்துருவ மேலாதிக்கம் சரியத் தொடங்கிவிட்ட நிலையில், அதைத் தக்கவைத்துக் கொள்வதற்கான புதிய வழிகளைத் தேடுகிறது என்பதையே ட்ரம்ப் – மஸ்க் கும்பலின் செயல்பாடுகள் காட்டுகின்றன. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, உலகை மேலாதிக்கம் செலுத்த உதவிய ஐக்கிய நாடுகள் சபை, நேட்டோ கூட்டமைப்பு, உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட பழைய ஆதிக்கக் கருவிகளைப் படிப்படியாகக் கைவிட்டு, புதிய வகை டிஜிட்டல் – செயற்கை நுண்ணறிவு வகைப்பட்ட கருவிகளைக் கொண்டு மேலாதிக்கம் செய்யும் திசையைத் தேர்வு செய்திருக்கிறது அமெரிக்கா.

கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரித்து ரஷ்யாவின் ஆதிக்கத்திற்கு முட்டுக்கட்டை போடுவதும், மின்சார வாகனங்கள் மற்றும் குறைகடத்தி சில்லுகள் தயாரிப்பில் சீனாவை மிஞ்சுவதற்கான போட்டியில் அருமண் தனிமங்களைப் பெறுவதில் ஆதிக்கம் செலுத்தவுமே கிரீன்லாந்து மற்றும் ஆர்டிக் பகுதி மீது தனது கவனத்தை திருப்பியிருக்கிறது. இதற்கேற்ப, காலநிலை மாற்ற ஒப்பந்தங்களை கிழித்து எறிந்திருக்கிறது.

இந்த வகையில் மேலாதிக்கம் செய்ய வேண்டுமானால், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பெயரளவிலான ஜனநாயகத்தைக் கூட இல்லாதொழித்து பாசிசத்தை நிலைநாட்ட வேண்டுமென அமெரிக்க தொழில்நுட்ப – தொழிற்துறை கார்ப்பரேட்டுகள் முடிவுக்கு வந்துவிட்டனர். அதனாலேயே உள்நாட்டில் கும்பலாட்சியை நிறுவுவதில் எலான் மஸ்கின் தலைமையில் பெரும்பாலான கார்ப்பரேட்டுகள் அணிவகுக்கத் தொடங்கியுள்ளன. இதன் தாக்கம் சர்வதேச அளவிலும் பல்வேறு நாடுகளில் எதிரொலிக்கும் என்பதை ஐரோப்பிய நாடுகள் மீதான எலான் மஸ்கின் கருத்துத் தாக்குதல்கள் கோடிட்டு காட்டி வருகின்றன.

எதிரிகள் புதிய திசையில் – புதிய ஆயுதங்களை ஏந்திப் பயணிக்க ஆரம்பித்துவிட்ட பிறகு, ஒடுக்கப்படும் உழைக்கும் வர்க்கமும் தனக்கான புதிய திசையை – ஆயுதங்களைத் தயார் செய்துகொள்வது அவசியமாகிறது. உள்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்.-பாஜக; அம்பானி – அதானி பாசிசக் கும்பலையும், உலக அளவில் ட்ரம்ப் – மஸ்க் பாசிசக் கும்பலையும் எதிர்கொள்ள அணிதிரள்வது பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் முன்னிருக்கும் உடனடி கடமை.


வாகைசூடி

(புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 டிசம்பர், 1987 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 03 | 1987 டிசம்பர் 16-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: வல்லரசுகளின் ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம்: சாவு வியாபாரிகளின் சமாதான நாடகம்
  • வாசகர் கடிதம்
  • கொள்ளையடித்த ராஜீவ் கும்பலுக்கு உத்தமர் வேடம் போடும் முயற்சி
  • அமைதிப்படையின் அருவெறுக்கத்தக்க கோரமுகம்
  • இலங்கை: ராஜீவ் கும்பலின் புதிய சூழ்ச்சிகள்
  • ஈழ ஆதரவு இயக்கங்கள் மீது பாசிச குண்டர்படையின் பாய்ச்சல்
  • டாக்டர் அம்பேத்கர்: முதலாளித்துவ சீர்திருத்தவாதியா? புரட்சியாளரா?
  • போலிக் கம்யூனிஸ்டுகளின் ‘புதிய’ சாராயக் கொள்கை!
  • கானத்தூர் கிராம மக்களின் போராட்டம் புகட்டும் பாடம் – அடிப்படை வசதி செய்துதராத அரசு இன்னும் எதற்கு?
  • சாதிய தலைவர்களுடன் எம்.ஜி.ஆர் பேச்சு: அரசாங்க சலுகைகளைக் காட்டி அடிவருடிகளை உருவாக்கும் முயற்சி
  • போர் வெறியர்களுக்கு மாணவர்கள் கொடுத்த புது மரியாதை!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 01-15 டிசம்பர், 1987 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 02 | 1987 டிசம்பர் 01-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: அரசியல் எதிரிகளை முடமாக்க அரங்கேறும் பாசிச சட்டங்கள்
  • டில்லி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊழியர் போராட்டம்: ஜனநாயக விரும்பிகளின் அரிதாரம் கலைந்தது
  • நடப்பது நாடாளுமன்ற ஆட்சி அல்ல பல குடும்பங்களின் ஆட்சி
  • மலேசியா: அடக்குமுறையின் பிடியில்…
  • டெல்லி – போபால்: கொலைகாரர்கள் தப்பிக்க முடியாது
  • புதிய கூலிப் பிரச்சாரகர்கள்
  • விமர்சனமும் விளக்கமும்
  • ஈழம்: சிந்தும் ரத்தம் வீண்போகாது!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-30 நவம்பர், 1987 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 01 | 1987 நவம்பர் 16-30 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஈழ ஆதரவு இயக்கங்கள்மீது மோகன் தாஸ் – தேவாரம் படைபாயும்!
  • வாசகர் கடிதம்
  • விசாரணைக் கமிஷன் மோசடிக்கு இன்னும் இரண்டு சான்றுகள்
  • ஈழம்: கருங்காலிகளாகப் போலிக் கம்யூனிஸ்டுகள்
  • நவீன யத்தப் பிரபுக்கள்
  • ரீகனிடம் சரண் – ராஜீவின் புதிய பேரங்கள்
  • ஊதாரிப் பிரதமரின் உல்லாசப் பயணம் – ராஜீவின் ஆடம்பர செலவுகள்
  • சாதியா? தகுதியா? தலைமை நீதிபதி சந்துர்கர் – சட்ட மந்திரி பொன்னையன் லடாய்!
  • புதிய ஜனநாயகத்துக்கு தஞ்சை குரவபுலம் பண்ணையின் மிரட்டல்
  • புரட்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேறுவோம்!
  • கண்காணிப்புக்கு ஒரு கையாலாகாத கமிட்டி
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 01-15 நவம்பர், 1987 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 02, இதழ் 24 | 1987 நவம்பர் 01-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: உலகப் பங்குச் சந்தையில் ‘திடீர்’ சரிவு! நெருக்கடி முற்றுகிறது
  • ரீகனின் போர்வெறி!
  • பாசிச ராஜீவ் தொடுத்த யாழ்ப்போர் கொலைகாரன் ராஜீவ்!
  • தியாகத் தோழர் பச்சையப்பனுக்கு வீரவணக்கம்!
  • பொய்கள் சதிகள் கொலைகள்
  • உலகைக் குலுக்கிய நவம்பர் புரட்சி
  • ராஜீவ் கும்பலுக்கு ஒரு போபர்ஸ்! போலி கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு ராடான் சதுக்கம்!
  • அதிகார வர்க்கத்தின் ஊதாரித்தனம் ஆண்டுக்கு இருபதாயிரம் கோடி ரூபாய் பாழ்! அரசு விரயம்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



இராம. சீனிவாசனை கைது செய் | இந்து முன்னணியின் பாடலை தடை செய்

டு கோழி நேர்த்திக்கடன் செலுத்தும் இந்துக்கள் முட்டாள்கள் என பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகி இராம. சீனிவாசனை கைது செய்ய வலியுறுத்துதல் மற்றும் இந்து மத வெறியைத் தூண்டும் இந்து முன்னணியின் இரண்டாவது பாடலை தடை செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு போலீஸ் டிஜிபி-இடம் மனு.

நாள்: 18.02.2025 | நேரம்: காலை 11:00 மணி | இடம்: மயிலாப்பூர், சென்னை

பத்திரிகையாளர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

***

18.02.2025

அனுப்புதல்:

தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்.

தோழர் திருமுருகன் காந்தி,
ஒருங்கிணைப்பாளர்,
மே17 இயக்கம்.

ச. குமரன்,
சென்னை மாவட்ட செயலாளர்,
தந்தை பெரியார் திராவிட கழகம்.

தபசி குமரன்,
தலைமை நிலையச் செயலாளர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.

முகமது கவுஸ்,
மாநில செயற்குழு உறுப்பினர்,
வெல்ஃபேர் கட்சி தமிழ்நாடு.

ரூதர் கார்த்திக்,
மைய சென்னை மண்டலச் செயலாளர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.

பெறுதல்:

தமிழ்நாடு காவல்துறை இயக்குனர்,
மயிலாப்பூர்,
சென்னை.

பொருள்

கோழி நேர்த்திக்கடன் செலுத்தும் இந்துக்கள் முட்டாள்கள் என பேசிய ராம சீனிவாசனை கைது செய்ய வேண்டி, இந்து மத வெறியை தூண்டும் இந்து முன்னணியின் இரண்டாவது பாடலை தடை செய்ய வலியுறுத்தி புகார் மனு

வணக்கம்

பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் த டிபேட் என்ற YouTube சேனலுக்கு கொடுத்த பேட்டியில் சிக்கந்தர் தர்காவிற்கு ஆடு கோழி நேர்த்திக்கடன் செலுத்தும் இந்துக்கள் முட்டாள்கள் என்று சமய வேறுபாடு பார்க்காமல் மத நல்லிணக்கத்துடன் இருக்கும் மக்களை இழிவுபடுத்தி பேசி உள்ளார். எனவே ராம சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும்.

ஏற்கெனவே இந்து முன்னணியால் கொண்டுவரப்பட்ட முதல் மதவெறி பாடல் யூடியுப் யில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது பாடல் ஒன்று வந்துள்ளது இதில் “கருணையே இல்லாமல் களத்திற்கு வாடா ” என கத்தியுடன் ரத்தம் சொட்ட சொட்ட இஸ்லாமியர்கள் மீது கொலை வெறியை தூண்டுவதாகவும் கலவரத்திற்கு வா என்று அழைப்பதாகவும் உள்ளது. இந்த மதவெறி பாடல் வெளிவந்து ஐந்து நாட்கள் ஆகியும் இதுவரை தடை செய்யப்படவில்லை; எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்பாடல் உடனே தடை செய்யப்பட வேண்டும். இப்பாடலை எழுதியவர் பாடியவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும். தொடர்ந்து சமூகத்தில் மத மோதலுக்கான பதட்டத்தை ஏற்படுத்தி வரும் இந்து முன்னணியின் தலைமை நிர்வாகிகள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 அக்டோபர், 1987 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 02, இதழ் 23 | 1987 அக்டோபர் 16-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: இந்திய ஆக்கிரமிப்பும் துரோகிகளின் மழுப்பலும்
  • வாசகர் கடிதம்
  • திபெத்: லாமாக்களின் போராட்டம் இழந்த சொர்க்கத்தை மீட்க இன்னொரு முயற்சி!
  • ஓட்டுப் பொறுக்கிகள் பேட்டை ரௌடிகள்
  • பதவிவெறியர்கள் நடத்திய யாகம் – பல லட்சம் உணவுப் பொருள் தீக்கிரை!
  • பரிசுத்தத்தின் ஊழலை எதிர்க்கும் ஊழல் அவதாரம்!
  • பெல் நிறுவனம்: கூட்டுக் கொள்ளைக்கு ஒரு தங்கச் சுரங்கம்
  • வீரம் செறிந்த மாபெரும் தெலுங்கானாப் போராட்டமும், விவசாப் புரட்சியும் போலிக் கம்யூனிஸ்டுகளின் துரோகத்தனமும் (1946—51) (சென்ற இதழின் தொடர்ச்சி…)
  • ராஜீவின் வறட்சிப் பகுதி சுற்றுப்பயணம் வறட்சி மேளா!
  • வதையின் கதை!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



ஜே.வி.பி. மீதான எமது நிலைப்பாடு | புதிய ஜனநாயகம்

ன்பார்ந்த வாசகர்களே,

இலங்கையில் 2024 நவம்பர் 14-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அனுர குமார திசநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டணி அபார வெற்றிபெற்று 159 இடங்களை கைப்பற்றி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. அதற்கு முன்னர் 2024 செப்டம்பர் மாதத்தில் நடந்த இலங்கையின் அதிபர் தேர்தலில், அனுர குமார திசநாயக வெற்றிபெற்றார்.

இதனையொட்டி, இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர், 2024 ஏப்ரல் மாத புதிய ஜனநாயகம் இதழில், “அமெரிக்க-இந்திய சதுரங்க ஆட்டத்தின் கீழ் இலங்கை” என்ற தலைப்பிலான கட்டுரையும், செப்டம்பர் மாதத்தில் அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியானபோது புதிய ஜனநாயகம் சார்பாக வினவு தளத்தில், “இலங்கை அதிபர் தேர்தல் முடிவு: வளர்ச்சி முகமூடியில் மற்றுமொரு பாசிச சக்தி!” என்ற தலைப்பிலான கட்டுரையும் வெளியிடப்பட்டது.

இக்கட்டுரைகளில் இலங்கையில் ஆட்சியைப் பிடித்துள்ள அனுர குமார திசநாயக தலைமையிலான ஜே.வி.பி. கட்சியை (Janatha Vimukthi Peramuna) சிங்கள இனவெறி, பௌத்த மதவெறி, பாசிச இயக்கம் என்று எழுதியிருந்தோம். இவ்வாறு வரையறுத்தது தவறாகும்.  உண்மையில், ஜே.வி.பி. கட்சியானது,  சிங்கள தேசியவாதத்தை உயர்த்திப் பிடிக்கும் முதலாளித்துவக் கட்சியாகவே உள்ளது.

இலங்கையில், ஆளும் வர்க்கக் கட்சிகள் மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஒரு மக்கள் எழுச்சி நடைபெறாமல் தடுக்கவும், தமது சுரண்டலையும் ஆதிக்கத்தையும் தக்கவைத்துக் கொள்ளவும் இலங்கையின் ஆளும் வர்க்கங்கள் பாசிபிச (pacifism) சதியில் ஈடுபட்டுள்ளன. அதாவது, மக்கள் கொந்தளிப்புக்கு வடிகால் வெட்டி, சில ஜனநாயக – சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தற்போதைய கட்டமைப்பைக் கட்டிக்காக்க முயற்சிக்கின்றன.

ஆளும் வர்க்கத்தின் இந்தப் பாசிபிச சதிக்கு, இடதுசாரி தோற்றம் கொண்ட அனுரா தலைமையிலான ஜே.வி.பி. கட்சியும் அதன் தேசிய மக்கள் சக்தி கூட்டணியும் உடந்தையாக இருந்து, இலங்கையின் தற்போதைய கட்டமைப்பைப் பாதுகாக்கின்றன. ஆட்சியிலுள்ள ஜே.வி.பி. தலைமையிலான மக்கள் சக்தி கூட்டணி மேற்கொண்டுவரும் ஜனரஞ்சக நடவடிக்கைகள் அனைத்தும், ஒரு சில ஜனநாயக – சீர்திருத்த அம்சங்களைக் கொண்டிருந்தாலும், அவை மக்களின் போராட்டங்களைத் திசைதிருப்பி சாந்தப்படுத்தும் வர்க்க சமரசத் தன்மை கொண்டவையே ஆகும்.

இலங்கையின் யதார்த்த நிலைமைகளை ஆழமாகப் பரிசீலிக்காமல், மேற்குறிப்பிட்ட இரண்டு கட்டுரைகளில் ஜே.வி.பி-யை பாசிச இயக்கம் என்று வரையறுத்தது தவறு என்பதை உணர்கிறோம். இத்தவறுக்காக சுயவிமர்சனம் ஏற்கிறோம். இனி இதுபோன்ற அரசியல் தவறுகள் ஏற்படாமல் இருப்பதற்கு உறுதியேற்கிறோம்.


ஆசிரியர் குழு, புதிய ஜனநாயகம்

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



பி.ஜே.பி-இன் ராம சீனிவாசனை கைது செய்! | ஜனநாயக சக்திகள் மனு

பி.ஜே.பி-இன் ராம சீனிவாசனை கைது செய்! | ஜனநாயக சக்திகள் மனு

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



தமிழ் மக்கள் முட்டாளா? தமிழர் மரபை இழிவுபடுத்திய பா.ஜ.க ராம சீனிவாசன் | தோழர் ரவி

தமிழ் மக்கள் முட்டாளா?
தமிழர் மரபை இழிவுபடுத்திய பா.ஜ.க ராம சீனிவாசன் | தோழர் ரவி

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விகடன் வலைத்தளம் முடக்கம் | கல்லறையில் கருத்துச் சுதந்திரம் | தோழர் ரவி

விகடன் வலைத்தளம் முடக்கம் | கல்லறையில் கருத்துச் சுதந்திரம் | தோழர் ரவி

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



திருப்பரங்குன்றம் யாருக்குச் சொந்தம்? உண்மையை உடைக்கும் பண்பாட்டு சூழலியலாளர் | தமிழ்தாசன்

திருப்பரங்குன்றம் யாருக்குச் சொந்தம்?
உண்மையை உடைக்கும் பண்பாட்டு சூழலியலாளர் | தமிழ்தாசன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram