Sunday, August 3, 2025
முகப்பு பதிவு பக்கம் 519

போலீசு ராஜ்ஜியத்தை முறியடிப்போம் – சென்னை ஆர்ப்பாட்டம் செய்தி – படங்கள் !

6

மெரினாவில் அமைதி போராட்டத்தை கலவரமாக்கிய
போலீசு அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்! கைது செய்!

சென்னை, குமணன்சாவடியில் 30.01.17 – மாலை 4 மணிக்கு மக்கள் அதிகாரத்தின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் தொடங்கிய நிமிடம் முதல்  போலீசு தனது கெடுமிடியைத் தொடங்கியது. மக்கள் யாரையும் கூட்டத்திற்குள் அனுமதிக்கவே கூடாது என்பதிலும் கூட்டத்தை சீக்கிரம் முடிக்கவேண்டும் என்று டார்ச்சர் செய்வதையுமே வேலையாகக் கொண்டு இருந்தது. முன்தினம் ஆர்ப்பாட்ட இடத்தில் வைத்த இரண்டு பிளக்ஸ் பேனர்களை இரவோடு இரவோடு பிய்த்து எறிந்துவிட்டது. கொடி கட்டக்கூடாது. மேடையெல்லாம் போட கூடாது. மைக் செட் வைக்க கூடாது என எதாவது சொல்லி கொண்டேயிருந்தது.

இதை தாண்டியும் பள்ளி மாணவர்கள் போராட்டத்திற்கு வந்தனர். பள்ளி மாணவர்கள் போராட்டத்திற்கு வர கூடாது என போலீசு தடுத்தது. தோழர்கள் பேசி வர வைத்த போது, நாளைக்கு பள்ளிக்கு வா! போட்டோ எடுத்துள்ளேன், தொலைத்து விடுவேன் என்று போலீசு மிரட்டியது. எங்களிடம் உன் பாச்சாவெல்லாம் செல்லாது என உற்சாகமான மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் நடந்தது குமணன்சாவடி பேருந்து நிறுத்தம் என்பதால் பேருந்து நிலையத்தில் அதிகமான மக்கள் நின்று கவனித்தனர். வாகனங்களில் செல்பவர்கள் நின்று கேட்டுவிட்டு சென்றனர்.  கடை வீதி என்பதால் வியாபாரிகள், பொது மக்கள் என பலர் கவனித்தனர். போலீசு ராஜ்ஜியம்… எழுந்து நின்ற தமிழகமே! எதிர்த்து நில்! அனைவரையும் நின்று கவனிக்க வைத்தது.

PP Chennai protest (16)இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் அதிகாரம் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல்செழியன் தலைமை தாங்கினார்.

அவர் தனது தலைமை உரையில் மெரினா கடற்கரையில் மாணவர்களின் போராட்டத்தை எப்படி அரசு ஒடுக்குகிறது என்பதுதான் முக்கியம் .போராடிய  பெண்களின் ஆடைகள் கிழிக்கப்பட்டன. ஓடி தஞ்சம் புகுந்த வீடுகளை உடைத்து போலீசு தாக்கியது. எதிரி நாட்டு படைகள், ஊருக்குள் புகுந்ததைப்போல போலீசு அட்டூழியம் செய்தது. போலீசு கேட்கிறது “மக்களும் தான் எங்களை தாக்கினர்” அதற்காக எங்களைப் பற்றி பேச மாட்டீர்களா? என்று கேட்கின்றனர். மக்கள் போலீசை தாக்கியது என்பது தற்காப்பு தாக்குதல் தான். காவல்துறையை சேர்ந்தவர்களே உங்களை உங்கள் மேல் அதிகாரி தாக்க சொன்னால் எங்கள் சகோதர சகோதரிகளை அடிக்க முடியாது என்று சொல்லமுடியுமா என்று கேள்வி எழுப்பினார்.

கார்த்திகேயன் – மக்கள் கலை இலக்கிய கழகம்

PP Chennai protest (1)முத்துகுமார் தீக்குளிப்பின் போது மாணவர்கள் திரண்டனர். நாங்கள் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டோம்.  மீண்டும் 2017 ஜனவரியின் போது மாணவர்கள் போராட்டம் தொடங்கியுள்ளது. ஜல்லிக்கட்டுக்காக தொடங்கிய போராட்டம், காவிரிப் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை, தண்ணீர் பிரச்சனை பற்றிய போராட்டமாக மாறியது. மக்களுக்கு போலீசு மீது எப்போதுமே பயம் இல்லை. திருடனை விட பெரிய திருடன் போலீசு தான். மெரினாவில் நடந்த போராட்டத்தில் போலீசு ஒன்றும் மாணவர்களை பாதுகாக்கவில்லை. இளைஞர்கள், முஸ்லீம்கள், மாணவர்கள் தான் செயின் போட்டு போராடியவர்களை பாதுகாத்தனர். விவேகானந்தர் மண்டபத்தில் உட்கார்ந்து போராடியவர்களுக்கு மக்கள் கொண்டு வந்த கொடுத்த சாப்பாடு, பிஸ்கட்டை பிடுங்கி தின்றவர்கள் தான் இந்த போலீசு.

சிங்கம் 3 படம் தள்ளி வைக்கப்பட்டிருகிறது. போலீசு பற்றி மக்கள் தெரிந்து கொண்டு விட்டனர். இப்போ வெளிவந்தால் படம் ஊத்திக்கும் என்று தள்ளி போட்டுள்ளனர். ஒரு போலீசு அடிவாங்கியதை போல அவர்களே ரெடி செய்து வாட்ஸ்அப் பில் அனுப்புகின்றனர். இது பற்றி அந்த போலீசே இது ஓவர் தான் என்கிறார். இனி போலீசு ராஜ்ஜியத்தை ஒழித்து மக்கள் தங்கள் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும் .

அஜிதா – பெண்கள் விடுதலை முன்னணி – இணை செயலாளர், சென்னை

PP Chennai protest (3)மெரினா கடற்கரையில் நடந்த மாணவர், மக்கள் போராட்டம், திறந்தவெளி பல்கலை கழகம் போல இருந்தது. கற்கவும் கற்றுக் கொடுக்கவும் முடிந்தது. இளைஞர்கள்தான்  இந்த போராட்டத்தில் பெண்களை பாதுகாத்தனர். ஒரு பெண், முகம் தெரியாத நபருக்கு தனது போர்வையை போர்த்தினார். போராட்டம் நடந்த ஆறு நாட்களுக்கு போலீசு இல்லை. அனைவரும் பாதுகாப்பாக இருந்தனர். 7 வது நாள் அவிழ்த்து விடப்பட்ட வெறிநாயைப் போல போலீசுகாரர்கள் மக்களை அடித்தனர். போலீசு மட்டுமல்ல இந்த அரசே நமக்கு தேவை இல்லை என்பதை இச்சம்பவங்களே உணர்த்துகின்றன

பி. சுகுமார் – சி.பி.ஐ – மாநில குழு உறுப்பினர், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்

போலீசை கண்டித்து இப்போது போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. சமூகத்தில் இன்னும் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. காவிரி, பணமதிப்பிழப்பு நீக்கம், வேலையில்லா திண்டாட்டம் வரை நாம் போராடிய வேண்டிய பிரச்சனை நீள்கிறது.

காக்கிச்சட்டை அணிவதற்கு முன்பு மனிதர்களாகத்தான் உள்ளனர், அணிந்த பின்பு தான் மாறுகின்றனர். திருமண வீட்டில் சீப்பை ஒளித்து விட்டால், திருமணம் நின்றுவிடும் என்று நினைத்தது போலீசு.

PP Chennai protest (4)இது தை மாதம் நடந்ததால்  இது “தை புரட்சி” . மாணவர்கள் போராட்டத்தை வேவு பார்த்தது போலீசு. 10 லட்சம் பேர் மெரினாவில் போராடினார்கள். ஒரு கோடி பேர் தமிழகம் முழுவதும் போராடினார்கள்.

தனது மகன், தனது அண்ணன், தனது பேரன் என்றுதான் தமிழக  மக்கள் அடிப்பட்டவர்களுக்காக போலீசை எதிர்த்து போராடினார்கள். இந்த போராட்டத்தில் சாதி இல்லை, மதம் இல்லை, மொழி இல்லை, எவ்வித வேறுபாடும் இல்லை. 200 பேரை கைது செய்தது போலீசு, ஆனால் 47 பேர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். மீதி பேர்கள் எங்கே? அவர்கள் தினமும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

பிரின்ஸ் என்னரசு பெரியார் – திராவிடர் கழகம், மாநில இளைஞரணி செயலர்

என்னதான் அமைதிப்போராட்டமாக இருந்தாலும், ஒரு ஸ்டண்ட் சீன் இல்லையானால் முழுமைபெறாது என்று போலீசு மக்களை அடித்தது. போராட்டம் என்பது ஜாலியாக இருக்காது அடிதடியாக தான் இருக்கும் என மாணவர்களுக்கு பாடம் கற்பித்த போலீசுக்கு நன்றி. போலீசு இரண்டு காமிராக்களை வைத்து வீடியோ எடுக்கின்றது. ஆனால் 1000 கேமாராக்கள் அவர்களை வீடியோ எடுத்தது அவர்களுக்கு தெரியாது. போலீஸ்காரர்கள் மனநோயாளியை போல இரவில் பார்த்த வாகனகளையெல்லாம் அடித்து நொறுக்கினார்கள். இதை இரண்டு பெண்கள் மாடியில் இருந்து  படம் பிடித்தார்கள். இப்படிதான் பலர் போலீசின் அட்டூழியங்களை அவர்களுக்கே தெரியாமல்  படம் பிடித்தனர்.

PP Chennai protest (14)இன்று தோழர் என்று சொன்னால் பிரச்சனையா? சாதி, மதம், இனம் கடந்தது தோழர் என்ற வார்த்தை. பெரியார் ரஷ்யாவிற்கு சென்று திரும்பிய போது திரு என்று அழைப்பதற்கு பதிலாக அனைவரையும் தோழர் என்று அழைக்க சொன்னார்.

கருப்பு சட்டை எங்கள் பக்கம், சிகப்பு சட்டை எங்கள் பக்கம், காக்கி சட்டை எங்கள் பக்கம் என கோஷம் போட்டவர்களை தான் அடித்தது போலீசு. இது வெறும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டமா? இல்லை. தண்ணீர் எப்படி 100 டிகிரி கொதிநிலையில் ஆவியாகுமோ? அதுபோல 100-வது டிகிரியாக ஜல்லிக்கட்டு பிரச்சனை. யார் சமூக விரோதி? ஆரியமே சமூகம், ஆரியர்களே மக்கள் என்றால், நாங்கள் சமூக விரோதிகள் தான். மக்கள் போராட்டம் ஒன்றே அனைத்துக்கும் தீர்வு என்று பேசினார்.

முனுசாமி – சி.பி.ஐ(எம்.எல்) – மாநிலக் குழு உறுப்பினர்.

மெரினாவில் போலீசு நடத்திய வன்முறைக்குப் பின்னரும் மாணவர்களுக்கு ஆதரவாகப் போராடிய மக்கள் மீது போலீசு அடக்குமுறை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதை மக்கள் போராட்டத்தின் மூலம் தான் வெல்ல முடியும்.

ராஜூ – மக்கள் அதிகாரம், மாநில ஒருங்கிணைப்பாளர்

போராடுபவர்களை போலீசு தாக்குவது புதிதல்ல. வழக்கறிஞர்கள் போராட்டத்தில் நீதிமன்றத்திலேயே ஆறுமுகம் என்ற நீதிபதியை அடித்தனர். உன்னை பார்த்தால் நீதிபதி மாதிரி தெரிவில்லையே என்று கூறி போலீசு நீதிபதிகளையும் வழக்கறிஞர்களையும் அடித்தது. போலீசை பற்றி நாம் சொல்வது வேறு, போலீசே தன்னை நல்லவன் என்று சொல்வதில்லை. சிங்கம் சூர்யா போல ,வேட்டையாடு விளையாடு கமல் போல போலீசு ரொம்ப நல்லவன் என்று சொன்னால் மக்கள் நம்புவார்களா? இந்த குமணன்சாவடி எஸ்.பி ரொம்ப நல்லவர் லஞ்சம் வாங்க மாட்டாரு என்று நாம் சொன்னால் மக்கள் நம்புவார்களா?

PP Chennai protest (6)ஜல்லிக்கட்டு அல்ல, டெல்லிக்கட்டு என்று மெரினாவில் திரண்டது மாணவர் படை. இடதுசாரிகளை விட மாணவர்கள், இளைஞர்கள் தான் மோடியை பற்றி அதிகம் கழுவி கழுவி ஊற்றினார்கள். ஏன், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில்  கீழடியில் தொல்லியல் ஆய்வுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

பிழைப்பு தேடி ஆந்திராவிற்கு போகிறவர்கள் தெலுங்கு பேசுகிறார்கள், டெல்லிக்கு போகிறவர்கள் ஹிந்தி பேசுகிறார்கள். கேரளாவிற்கு போகிறவர்கள் மலையாளம் பேசுகிறார்கள். ஆனால் சமஸ்கிருதம் யாருக்காவது பேச தெரியுமா? சொல்லி கொடுக்க கூடாது என்று வைத்துள்ளான். நம்மவர்கள் இரண்டு வார்த்தை மட்டும் சுவாகா, நமகா மட்டும் கற்றுள்ளனர். இந்த புழக்கத்தில் இல்லாத சமஸ்கிருததிற்கு பல கோடி ஒதுக்கீடு. தமிழ் புறக்கணிக்கப்படுகிறது.

போலீசை ஏவியது தமிழ்நாடு அரசு அல்ல, மோடி அரசு தான். இங்கு மக்களின் கொந்தளிப்பை பார்த்து பொறுத்து கொள்ள முடியாமல் தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் ஒரு மாணவனை சுற்றி எல்லா பாதுகாப்போடும் உள்ள அதிரடிப்படை போலீசு தாக்குகிறது.  ஒரு மீனவ பெண் கேட்கிறார். “உனக்கு தைரியமிருந்தால் ஒண்டிக்கு ஒண்டி வாடா” என்கிறார். பத்து பேர் சேர்ந்து ஒருவனை அடிப்பது வீரமா? கோழைத்தனம்.

“தோழர் என்று பேசினால் போனை கட் செய்து விடுங்கள்” என்று கோவை கமிஷனர் பேசுகிறார். போலீசு பயிற்சியில் இது தான் கற்று தருகிறார்களா? இல்லை இது ஆர்.எஸ்.எஸ் பயிற்சியில் தான் கற்று தர படுகிறது. எல்லாரும் சமம். போலீசை எதிர்த்து போராடினாலும் அனுமதி தரவேண்டும் என்று தான் சட்டத்தில் உள்ளது. அது தான் ஜனநாயகம். யாரோ பின்லேடன் படத்தை வைத்திருந்தார்,   ஜனவரி 26-ஐ கருப்பு நாளாக அனுசரிப்போம் என அட்டை வைத்திருந்தனர் என கூறி மக்கள் அனைவரையும் அடிப்பதற்கு போலீசு காரணம் கூறுகிறது.

போலீசை கண்டு அஞ்சி போராட்டம் ஓயாது. அது நெருப்பை பொட்டலம் கட்டுவதைப் போல கொள்கைக்காக போராடுபவர்களை கூலிக்காக அடிப்பவர்களால் ஒடுக்க முடியாது.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை. தொடர்புக்கு : 91768 01656.

மக்களை விடுதலை செய் – போலீசைக் கைது செய் ! மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி !

0

PP Logo

பத்திரிகைச் செய்தி

31-01-2017

ஜல்லிக்கட்டுப் போராட்டம் :
ஓரவஞ்சனையை எதிர்க்கும்-உரிமைகளை மீட்கும் குறியீடு !
மக்களை சாதி, மதமாக பிளவுபடுத்தும் சதிகள் முறியடிப்பு!

அன்புடையீர் வணக்கம்!

தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடக்கிறது. ஜனவரி 23 தொடங்கிய போலீசாரின் வன்முறை வெறியாட்டம் இன்று வரை தொடர்கிறது. சென்னை, மதுரை, கோவையில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள், மாணவர்கள் கைது செய்யப்பட்டு அடித்து சித்ரவதைக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போலீசின் தாக்குதலுக்காளான நூற்றுக்கணக்கானோர் தலைமறைவாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த வீட்டிற்கு வராமல் அச்சத்தில் வெளியில் இருக்கின்றனர்.

மெரினாவை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடையுத்தரவு, போலீசை கண்டித்து போஸ்டர் ஒட்டத்தடை, போலீசை கண்டித்து பேச தடை, பிரச்சாரம் செய்தால் பொய் வழக்கில் சிறை, என காவல் துறையின் அடக்குமுறை இன்று வரை தொடர்கிறது. ஏன் இந்த வன்மம்?.

தமிழகத்தின் உரிமைகள் தொடர்ந்து நசுக்கப்படுவதற்கு எதிராக குமுறிக்கொண்டிருந்த மக்கள் ஜல்லிக்கட்டில் மாணவர்கள் முன்னெடுத்த போராட்டத்தில் மெரினாவில் அலைகடலென திரண்டனர். திருச்சி, மதுரை, சேலம், ஈரோடு, கோவை, என தமிழகம் முழுவதும் மக்கள் பல வடிவங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். வேறுவழியின்றி ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

jp

“மக்கள் பிரச்சினையை தீர்ப்பதில் நீங்கள் தோற்று விட்டீர்கள். யாருடைய வக்குறுதிகளையும் நம்ப மாட்டோம். நாங்களே பார்த்து கொள்கிறோம், அரசியல் கட்சிகள் வேண்டாம், எந்த தலைவரும் வேண்டாம் என” மாணவர்களும், இளைஞர்களும், உறுதியாக போராடினர். ஒருவர் மீது ஒருவர் பழிபோடுவதோ, அலைக்கழிப்பதோ, ஏமாற்றுவதோ மத்திய மாநில அரசுகளுக்கு இனி சாத்தியமில்லை என்ற நிலையால் ஐந்தாண்டுகளாக இழுத்தடித்த பிரச்சினை 5 நாட்களில் முடிந்தது.

காவிரி நீர் மறுப்பு, மீத்தேன், அணு உலை, கெயில் குழாய் பதிப்பு. புதிய கல்விக் கொள்கை, சமஸ்கிருத திணிப்பு, நீட் தேர்வு, தமிழக மீனவர் பிரச்சினை , விவசாயிகள் சாவு, வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம், என அனைத்திலும் டெல்லி அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. இவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழகமெங்கும் பங்கேற்ற வரலாற்றுப் போராட்டமாக மாறியது. போலீசு தலையீடின்றி மெரினாவில் பெரும் மக்கள் திரள் தன்னைத்தானே ஒழுங்குபடுத்தி கொண்டு  ஏழுநாட்கள் போராடியது, உலகமே உற்றுப்பார்க்க முன்னேறியது. தமிழகத்தின் ஒட்டு மொத்த சமூகமும் அணிவகுத்தது. இதுதான் மக்கள் அதிகாரம்.

இந்த அரசு அமைப்புகளை நம்பி, பின் தொடர்ந்து பிரச்சினைகளை தீர்க்க முடியாது. ஏனென்றால் ஒட்டு மொத்த அரசு கட்டமைப்பும் தான் வகுத்த சட்டங்களை, கொள்கைகளை தானே ஏற்று அமுல்படுத்த முடியாமல் நெருக்கடியில் சிக்கியதுடன்  ஆளும் அருகதையை இழந்து விட்டது. இந்த போராட்டத்தின் விளைவாக தமிழக வணிகர் சங்கங்கள் மார்ச் மாதம் முதல் கோக், பெப்சி விற்க மாட்டோம் என அறிவித்திருக்கிறார்கள். மாணவர்கள் புறக்கணிப்பால் பல பள்ளி, கல்லூரிகளில் கோக் பெப்சி விற்பது நின்று போயுள்ளது.

தலையாரி முதல் தலைமைச்செயலாளர் வரை கிரிமினல்மயமாக, ஊழல்மயமாக மக்கள் விரோதமாக மாறியதை நாள்தோறும் வெளிவரும் செய்திகள் உறுதிபடுத்திக் கொண்டே இருக்கின்றன. கல்வித்துறை முதல் கலால் துறை வரை பல துறைச் செயலாளர்கள் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவால் நியமிக்கப் பட்டவர்கள். துறைவாரியாக மொத்தமாக வசூல் செய்து போயசுக்கு கொடுத்தவர்கள். இந்த அரசே சட்ட விரோதமானது. ஷீலா பால கிருஷ்ணன், ராமாநுஜம் போன்ற ஓய்வு பெற்ற அதிகாரிகளால் சட்டப்புறம்பாக வெளி அதிகார மையத்தால் நடத்தபட்டு வருகிறது.

எங்கே போய் சொல்வது? யாரிடம் சொல்வது? என மக்கள் பிரச்சினைகள், கோரிக்கைகள் வரிசையாக தீர்க்கப்படாமல் முற்றிய நிலையில் நிற்கின்றன. அதன் குறியீடாகவே  ஜல்லிகட்டு போராட்டம் வெடித்தது. சாதி மத பேதங்கள் கடந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நம்பிக்கையும், உற்சாகமும் ஏற்படுத்திய போராட்டத்தின் அழகை, ஆசிட் ஊற்றி சிதைத்துவிட்டது தமிழக காவல் துறை.

மெரினாவில் போலீசு தாக்குதலுக்கு காரணம் சமூக விரோத சக்திகள் ஊடுருவி விட்டனர் என சொல்லப்படுகிறது. அலங்காநல்லூரிலும், தமுக்கத்திலும், கோவையிலும் நடத்திய தாக்குதலுக்கு என்ன காரணம்? காளைக்கான இத்தகைய அமைதிப் போராட்டம், நாளை காவிரிக்கான போராட்டத்திலும் தொடரக்கூடாது என்பதுதான் அரசின் அச்சம், பீதி. ஜனவரி 23 அன்று போலீசார் நடத்திய வன்முறை தாக்குதலின் நோக்கம் முக்கியமானது.

போலீசின் தாக்குதல், ரப்பர் குண்டு, கல்வீச்சு, கண்ணீர் புகை, தீ வைப்பு, சித்ரவதை, சிறை, என்ற சுவடுகளும் மக்கள் மனதில் ஆறாத ரனமாக இருக்க வேண்டும். இத்தகைய அடக்கு முறைகளை உலகமே பார்க்க வேண்டும். அப்போதுதான் போலீசின் மீதான அச்சம் பொது மக்களுக்கு இருக்கும். போலீசு பார்க்காத விசாரணை கமிசனா?  “எங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. எந்த ஆட்சியாளர்கள் வந்தாலும் போலீசு தயவில்லாமல் ஆள முடியாது.” என்று கடந்த காலங்களில் குற்றம் செய்த போலீசார் யாரும் எதற்கும் தண்டிக்கபட்டது இல்லை.

மோடி அரசின் நோக்கங்களை நிறைவேற்றவே, தமிழக காவல் துறை வன்முறையை நிகழ்த்தியுள்ளது. தமிழகத்தில் காக்கி உடையில் காவி புகுந்து விட்டது என்பதை காவல் துறை அதிகாரிகளின் பேச்சுக்களும் உறுதி செய்கின்றன. மாநில உரிமைகளுக்கான போராட்டமாக  ஜல்லிகட்டில் வெடித்தது. சாதி மத பாகுபாட்டை ஏற்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி.யின் சதி தோல்வி அடைந்தது. தமிழர் பண்பாட்டை அழிக்க முயல்வது. இஸ்லாமியர்கள் பெருமளவில் கலந்து கொண்டது, மாநிலம் முழுவதும் மோடியை கடுமையாக விமர்சிக்கபட்டது  என அனைத்திலும் டெல்லி மோடி அரசுக்கு எதிராக நடந்தது. இந்த போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி ஊடுருவி ஒன்றும் செய்ய முடியவில்லை.  பழி தீர்க்கவே காவல் துறையை கூலிப்பைடையாக ஏவி தமிழக மக்களை தாக்கியுள்ளது.

அரசின் கொள்கை முடிவுகளில் அரசியல் நடவடிக்கைகளில் மக்களை பங்கேற்க விடாமல், இந்த அமைப்பு முறை முற்றிலும் புறக்கணித்து வெறும் பார்வையாளர்களாக, வாக்காளர்களாக மட்டுமே வைத்திருக்கிறது. மத்திய மாநில அரசுகள் சட்டரீதியாக மட்டுமல்ல, தார்மீக ரீதியில்கூட மக்களை கட்டுப்படுத்தும் அருகதையை இழந்து விட்டன. அதிகார வர்க்கமும், போலீசும் மக்களுக்கு தேவையற்றதாக மாறியதுடன் எதிராகவும் மாறிவிட்டது என்பதை மீண்டும் மெரினா போரட்டத்தில் போலீசு நிருபித்து உள்ளது.

  1. ஜல்லிக்கட்டு போராட்டத்தை வன்முறையாக மாற்றியதற்கு அரசும், காவல் துறையும்தான் காரணம், பொறுப்பு. நீதிவிசாரணை நடத்தப்பட்டு குற்றம் செய்த போலீசார் தண்டிக்கப்பட வேண்டும்.
  2. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தமிழகம் முழுவதும் கைதானவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். காயம் பட்டவர்களுக்கும் உடமைகளை இழந்தவர்களுக்கும் உடனே இழப்பீடு வழங்க வேண்டும்.
  3. தமிழக முதல்வரும், காவல்துறையும் பெரும் திரளான மக்கள் அமைதியாக போராடியதை மதித்து போற்றி பாதுகாக்காமல் பின்லேடன் படம், தனித் தமிழ்நாடு என ஜோடிக்கப்பட்ட ஆதாரங்களை காட்டி பொய் பிரச்சாரம் செய்வது, சமூக விரோதிகள் என பொதுவாக சொல்லி சில அமைப்புகள் பெயரை கசியவிட்டு பழிபோடுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
  4. ஜனநாயக விரோதமாக சென்னையில் பல இடங்களில் போடப்பட்ட144 தடையுத்திரவை நீக்குவதோடு, காவல்துறையின் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீதி கேட்டு, நிவாரணம் கேட்டு நடைபெறும் பிரச்சாரம், ஆர்ப்பாட்டம், பொது கூட்டத்திற்கு தமிழக அரசு தடை விதிக்க கூடாது.
  5. முதல்வர் அறிவித்துள்ள விசாரணை கமிசன் என்பது போதாது, குற்றம் செய்த போலீசார் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். கலவரத்தில் சம்பத்தப்பட்ட உயரதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும்.
  6. ஜல்லிகட்டு போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், ஆதரவளித்த மீனவர்கள் என பலரையும் பழி தீர்க்கும் போலீசின் அடக்கு முறைகளுக்கு எதிராக மாணவர் சமூகம் குரல் கொடுக்க வேண்டும்.

பங்கேற்பாளர்

  1. வழக்கறிஞர் சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்
  2. தோழர்.த.கணேசன்,மாநிலஒருங்கிணைப்பாளர்,பு.மா.இ.மு.
  3. வழக்கறிஞர்.சரவணன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம். சென்னை.
  4. தோழர்.கற்பக விநாயகம், பு.ஜ.தொ.மு. ஐ.டி.ஊழியர்கள் பிரிவு.
  5. திரு. வாசுதேவன், மாணவர். பச்சையப்பன் கல்லூரி.

தோழமையுடன்

வழக்குரைஞர்.சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்

தகவல் :
மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு. 99623 66321

ஹிட்லரின் புதிய அவதாரம் அமெரிக்க அதிபர் டிரம்ப் ! கேலிச்சித்திரங்கள்

41

அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்ட் டிரம்ப் 20.01.2017 அன்று பதவியேற்றார். ஒரு அதிபர் பதவியேற்றபோது, அதை எதிர்த்து நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம்  நடந்திருப்பது அமெரிக்க வரலாற்றிலேயே இது தான் முதல் முறை.

பதவியேற்ற ஒரு வாரத்திலேயே 7 நாடுகளைச் சேர்ந்த குடியுரிமை பெற்ற இசுலாமியர்கள் தங்கள் நாட்டுக்குள்  நுழையக்கூடாது என்று திமிர்த்தனமான அறிவிப்பையும், கூடவே 120 நாட்களுக்கு எந்த அகதிகளும் அமெரிக்காவில் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற அறிவிப்பையும் வெளியிட்டு ஐரோப்பா உள்ளிட்ட ஒட்டுமொத்த  நாடுகளின் எதிர்ப்பையும் விலையில்லாமலேயே வாங்கிக் கட்டிக்கொண்டார். போதாத குறைக்கு அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் டிரம்பின் அறிவிப்புக்குத் தடைவிதித்து விட்டது.

இதுகுறித்த கேலிச்சித்திரங்கள்….

emperor-has-no-clothes-trumpஇசுலாமியருக்கெதிரான அமெரிக்க அதிபர் டிரம்பின் இனவெறி அறிவிப்பால் தலைதாழ்ந்து  நிற்கும் சுதந்திரதேவி சிலை.

trump1-post

நான் நல்லவனாக இருக்க முயற்சிக்கிறேன் – ஒரு மிருகத்தின் வாக்குமூலம்trump2-post

சாகச வீரன் சூப்பர்மேன், டிரம்பிடமிருந்து சுதந்திர தேவியைக் காக்க முயல்கிறார்

trump3

சுதந்திர தேவியின் சிலையை, தன்னுடைய ஆசான் ஹிட்லர் போன்று மாற்ற முயற்சிக்கும் டிரம்ப்

trump4

அமெரிக்க ஒருமைப்பாடு குறித்து சொந்த மக்களையே அச்சுறுத்தும் டிரம்ப்

trump5

இசுலாமியர் வெறுப்பைத் தூண்டுவது, எங்கள் அமைப்பை வளர்க்க மிக்க உதவி செய்யும் என டிரம்பிற்கு  நன்றி கூறும் ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்.

trump6

இனவெறி, மதவெறியின் ஊற்று டிரம்ப் என்பதை விளக்கும் டவர்

trump7

ஹிட்லர் வேறு வடிவில் வந்துவிட்டான் டிரம்பாக…..

trump8

டிரம்ப் டவர்..இங்கே இசுலாமியர்களுக்கு அனுமதி கிடையாது

trump9

இசுலாமியருக்கு இங்கே பாதுகாப்பில்லை…எனவே தான் இந்த அறிவிப்பு…

trump10

இணையுங்கள்:

மெரினாவில் மீண்டும் எழுவோம் ! மகஇக புதிய பாடல்

0
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
வழங்கும்

வருவோம் மீண்டும் வருவோம் !
மெரினாவில் மீண்டும் எழுவோம் !
– பாடல்

மெரினாவில் சில நூறு பேருடன் தொடங்கிய ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தமிழகத்தின் பல லட்சம் மக்களை இணைத்து மோடிக்கு எதிரான டெல்லிக்கட்டாக மாறியது. தமிழக மக்கள் மத்தியில் குமைந்து கொண்டிருந்த காவிரிப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு, கூடங்குளம், மீனவர் பிரச்சினை, சமஸ்கிருதத் திணிப்பு, பணமதிப்பழிப்பு, நீட் தேர்வு, பொங்கலுக்கு விடுமுறை ரத்து என அனைத்துப் பிரச்சினைகளையும் ஜல்லிக்கட்டு போராட்டம் இணைத்தது. மக்களின் வலிமையை அவர்களுக்கே உணர்த்தியது.

ஒரு வாரம் பிரதமர், முதல்வர், கமிஷ்னர் என யாருடைய அதிகாரமும் இங்கு செல்லாது எனக் காட்டியது இந்தப் போராட்டம்.  இனியும் இதை அனுமதித்தால் மக்களின் அதிகாரமே நிரந்தரமாகி விடும் என அஞ்சிய அரசு தனது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது. நேற்று வரை நண்பன் போல வேசமிட்ட காவல்துறை 23.01.2017 அன்று தனது அரிதாரத்தைக் கலைத்து, உண்மையான கொடூரமான முகத்தை வெளிப்படுத்தியது.

மாணவர்களை சுற்றிவளைத்து தாக்க ஆரம்பித்தது. தாக்குதலில் இருந்து தப்பி வந்தவர்களுக்கு அடைக்கலம் தந்த மீனவ மக்களை நொறுக்கியது. கண்ணில்பட்ட அனைவரையும், அனைத்தையும் வெறிநாய் போலக் குதற ஆரம்பித்தது. ஆனாலும் அவற்றைத் தாண்டி மீனவ மக்ககள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது போராடியவர்களைக் காத்து நின்றனர்.

இன்று மெரினாவில் போராட்டத்தைக் கலைத்து விட்டதாக அரசு கருதலாம். ஆனால் மக்கள் இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டுவிட்டனர். அந்த மாணவர்கள் மீண்டும் வருவார்கள். மெரினா மீண்டும் உதயமாகும்.

வருவோம் மீண்டும் வருவோம் !
மெரினாவில் மீண்டும் எழுவோம் !

பாடல் வரிகள்

வருவோம் மீண்டும் வருவோம் !
மெரினாவில் மீண்டும் எழுவோம் !

எழுந்து நின்றது தமிழகம் – இது
இளமை ஈன்றதோர் புதுயுகம்
எங்கள் பெண்ணின் முகம் முழுதும் ரத்தம்
பணியாமல் நின்றதா குற்றம்
பார் கண்ணைப் பார் அதில் தெரிகிறதா துளி அச்சம்
கணக்கு இருக்கிறது இன்னும் மிச்சம்                  (வருவோம்)

எரித்தது நீ ! உடைத்தது நீ – தமிழ்ப்
பெண்ணின் கருவினை சிதைத்தது நீ!
எரிகிறது தமிழ் பூமி – சொல்
யாரடா தேசத் துரோகி?                               (வருவோம்)

எங்கள் உயிர் காக்க உங்களைத் தந்த
மீனவ உறவே வருவோம்
கடலின் விளிம்பிலே தவித்த எங்களைக் – கரை
சேர்த்த சொந்தமே வருவோம்                        (வருவோம்)

அடித்தாலும் அடங்காது இது வேற தமிழ்நாடு
அலங்கா நல்லூ…ரு இனி இல்லை.. உன்னோடு
நின்றது பார் சென்னை
ஓட விட்டது பார் உன்னை
பத்து பேர் நீங்கள் பத்து பேர் – எங்கள்
ஒற்றை மாணவன் உனக்கு நேர்.                        (வருவோம்)

பார் உன்னைப் பார்
குடிகள் இல்லாத குடியரசு – வெறும்
தடிகளே உனது அணிவகுப்பு
மின்னும் மீண்டும் மின்னும் மெரினாவின்
மின்மினிகள் மின்னும்                                  (வருவோம்)

வருவோம்…மீண்டும் வருவோம்
மெரினாவில் மீண்டும் எழுவோம்!  –    ம.க.இ.க பாடல்

தொடர்புக்கு :
மக்கள் அதிகாரம்

பாடல், இசை, தயாரிப்பு :
மக்கள் கலை இலக்கியக் கழகம், 
தமிழ்நாடு

தடயமில்லாமல் எரிப்பது எப்படி ? போலீசுக்கு சில ஆலோசனைகள் !

2

போலீசுக்கு சில ‘உருப்படியான’  ஆலோசனைகள் !

மூக விரோதிகளை போலீஸ் மீனவர் குப்பங்களில் பிடித்திருக்கிறார்கள். வாழ்த்துகள். பல உத்திகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். அவற்றை பார்த்து உலகமே சிலாகித்து கொண்டிருக்கிறது. இன்னும் சிறப்பான சில யோசனைகள் காவல்துறை நண்பர்களுக்காக:

  1. marinaபெயர் பேட்ஜ், தோள் பட்டை நட்சத்திரங்களை ஒளித்து வைத்த சம்யோசிதத்துக்கு பாராட்டுகள். இருந்தும் முகங்கள் தெரிந்து விடுகிறது. ஆதலால், சமூகவிரோதிகளை பிடிக்க செல்லுகையில் முகமூடிகள் அணிந்து கொள்ளலாம். நிறைய பாணி முகமூடிகள் இருக்கின்றன. ‘மூடர் கூடம்’ பட குரங்கு குல்லாய் பாணி, மிஷ்கினின் ‘முகமூடி’ பட பாணி, ஆங்கில படம் Dark Knight-ல் வரும் ஜோக்கர் முகமூடி பாணி என! ஆனால், பெயர் பேட்ஜ்கள் ஒளித்து வைப்பவர்கள், காக்கி சட்டை இல்லாமல், வேறு சட்டையில் வந்திருந்தால் எந்த சந்தேகமும் வந்திருக்கிறாதே ! ஏதேனும் சட்ட சிக்கல் இருக்கிறதா என தெரியவில்லை.
  1. சமூக விரோதிகள் வாழும் வீட்டு பெண்களிடம் பேண்ட் ஜிப்பை திறந்து காட்டி இருக்கிறார்கள். அற்புதம். அதற்கு அஞ்சாதவர்கள் எவருமே இருக்க முடியாது. இருப்பினும், தெளிவாக அச்சத்தை உருவாக்க முனையலாம். Pulp Fiction படம் போல் வசனத்திலேயே, அனைத்தையும் பேசி, கூச வைத்து, அதற்கு பிற்பாடு காட்டி ஆண்மையை நிரூபித்தால் இன்னும் dramatic‍‍‍‍‍‍ ஆக இருக்கலாம். முக்கியமாக, erectile dysfunction கோளாறு இருக்கிறதா என பரிசோதித்து கொள்ளுங்கள். இல்லையெனில் American Pie பட காமெடி ஆகிவிடும்.
  1. வெள்ளை பாஸ்பரஸ் உத்தி, கனா கண்டேன் படத்தில் வில்லன் காரை எரிக்க ஸ்ரீகாந்த் பயன்படுத்தும் உத்தி ! சிறப்பு. இந்த மாதிரி out of box thinking-தான் ஸ்காட்லேண்ட் யார்டுக்கு நிகரானோர் என்ற பெருமையை பெற்று தந்திருக்கிறது. க்ளோரின் ட்ரைஃப்ளோரைடு, க்ளோரின் வாயு போன்று இன்னும் பல ரசாயன உத்திகளை கண்டுபிடிக்க பயன்படுத்த முடியும். இப்படியான ஆராய்ச்சிகளுக்கு அரசு தனி இலாகா உருவாக்கலாம். ஹிட்லரே உருவாக்கி இருந்தார். நாம் எந்த வகையில் குறைந்து போய்விட்டோம் ?
  1. பேப்பரில் தீயை பற்ற வைத்து ஆட்டோவில் போடுவதும் குடிசையில் போடுவதும் ஓகேதான் எனினும் இன்னும் கொஞ்சம் நவீனம் இருக்கலாம். மலை பிளக்க பயன்படுத்தும் டைனமைட் போன்றவற்றை ஒயர் வழியே பொருத்தி கொளுத்தலாம். குப்பம் வரை சென்று நேரத்தை வீணடிக்க கூட தேவை இல்லை. ஸ்டேஷனில் லேடி கான்ஸ்டபிளிடம் கடலை போட்டபடியே லிவரை அழுத்தினால், குப்பத்தில் மீன் மார்க்கெட்டை துவம்சம் செய்து விடலாம்.
  1. மதுரை போலீஸ், பைப் குண்டு கண்டெடுத்து இருக்கிறார்களாம். கண்டெடுப்பது என முடிவான பிறகு, ஏன் பைப் குண்டு? பிளாஸ்டிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் போன்ற நவீன ரகங்களை வைத்து, கண்டெடுக்கலாமே ! ஒரு பசூக்கா, ஷாட் கன், ஸ்னைப்பர் என போர் ஆயுத ரகங்களை கூட கண்டெடுக்கலாம். நம் மக்களை நாமே குறைத்து சொல்லக்கூடாது அல்லவா ?
  1. jallikattu-protestமுக்கியமான விஷயம், பகலில் சமூக விரோதிகளை பிடித்தல் கூடாது. வெளிச்சம், மொபைல் போன் கேமரா என சீக்ரெட் ஆப்பரேஷன் வெளிவந்து விடும். மற்ற சமூக விரோதிகள் உஷாராகி உண்ணாவிரத போராட்டத்துக்கு தயாராகி விடுவர். பதிலாக, சூது கவ்வும் பட என்கவுண்ட்டர் ஸ்பேஷலிஸ்ட், நைட் விஷனை மாட்டி, இருட்டு அறையில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா கூட்டத்தை முரட்டு குத்து குத்துவாரே, அதுபோல் இரவில் சென்று சமூக விரோதிகளை குத்தி கும்மியடிக்கலாம்.
  1. கற்களை எரியும்போது இன்னும் கொஞ்சம் நுணுக்கம் தேவைப்படுகிறது. தூர இருந்து எறிவதால் பேஸ் பவுலிங் வேலைக்கு ஆகாது. ஸ்பின் முயற்சி பண்ணலாம். அதுவும் லெக் ஸ்பின் போடுவது போல், லெக் பக்கத்து க்ரீஸ்ஸில் நுழைந்து, ஆஃப் ஸ்பின் இறக்கினால், பேட்ஸ்மேன் குழம்பிவிடுவார். தலையும் க்ளீன் போல்ட் ஆகும். ஒருவேளை மூளை தெரியும் அளவுக்கு பிளந்து விட்டால் தெர்ட் அம்பையர் டிஸிஷனுக்கு விட்டுவிடலாம். ஜார்ஜும் அமல்ராஜும் பார்த்து கொள்வார்கள்.
  1. கர்ப்பிணிகளை அடிப்பதற்கு முன் ஸ்கேன் ரிசல்ட்ஸ் பார்த்துவிடுவது நல்லது. அப்போதுதான் கர்ப்பத்தின் காலம் தெரிந்து, உயிர் போக வைக்கும் இடத்தை கண்டு சரியாக மிதிக்கலாம். குழந்தையின் உயிர் மட்டும் போவது வீண். தாயின் உயிரையும் சேர்த்து ஒரே மிதியில் போக்குவதுதான் நல்ல போலீஸுக்கு அழகு. ப்ரொமோஷன் சாத்தியங்களை கூட்டும்.
  1. நாம் எதிர்பாராத வகையில் நம் மீதும் கற்கள் எறியப்படலாம். ஆகவே, டாஸ் போடும்போதே பேட்டிங்கா ஃபீல்டிங்கா என சரியாக முடிவெடுக்க வேண்டும். இல்லையெனில் நம் தலைகள் க்ளீன் போல்ட்டாகும் வாய்ப்புகள் அதிகம் என்பதையும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்.
  1. வாயில் ரத்தம் வந்தால் பற்கள் உடைந்திருக்கலாம். தவடை பெயர்ந்திருக்கலாம். அந்த மாதிரி காயத்தை வைத்து கொண்டு வசன காட்சி ஒளிப்பதிவு செய்ய கூடாது. நம்பகத்தன்மை கெட்டுவிடும். தலை, நெற்றி, கை என வேறு பகுதிகளில் ரத்தம் தடவ வேண்டும். வசனமில்லாமல் வெறும் பெர்ஃபார்மன்ஸ் காட்சி என்றால் வாயில் ரத்தம் வரலாம். வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் போல் கையில் கட்டு போட்டுக்கொண்டு ஹார்ட் அட்டாக் என சொல்லக்கூடாது. ‘அவார்டா கொடுக்குறாங்கோ… இப்படி ஆக்ட் பண்றியே’ என கமலை போல் மக்கள் கேட்டுவிடுவார்கள்.

உபரி யோசனை:

சம்பவத்தின்போது ஒரு உளவுத்துறை ‘பி.சி.ஸ்ரீராம்’ அதிகாரி ஹேண்டி கேமுடனேயே ஓடி வந்து கொண்டிருந்தாரே, அவரிடம் உங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை வாங்கி, எடிட் செய்து ஒரு போர்ட்ஃபோலியோ போட்டு கொள்ளலாம். ஆட்சி மாறும்போதோ அல்லது பதவி மாற்றப்படும்போதோ அதை போட்டு நம் பெருமைகளை காட்டி பதவியை தக்க வைத்து கொள்ளலாம்.

இசை தேவைப்பட்டால் ஆதி உதவுவார். ஓண்ணா மண்ணா பழகிட்டு இதை கூட செய்யலேன்னா எப்படி ?

நன்றி : Rajasangeethan John, ஃபேஸ்புக்கில் இருந்து.

***

டற்கரையில் பல பேர் குழு குழுவாக படுத்து தூங்கி கொண்டிருந்தனர். குழுவுக்கு நடுவே மண் பறித்து, பள்ளம் தோண்டி கொள்கிறார்கள். அட்டை பெட்டி, கட்டை, சுள்ளி போன்றவற்றை போட்டு தீ மூட்டுகிறார்கள். இரவு நேர பனியை விரட்டி கொள்கிறார்கள். பல கிலோ மீட்டர்கள் நீண்ட கரையில் பல நூறு பேர் தூங்கி கிடப்பார்கள்.

Marina_night-postசேவைசாலைக்கு வந்தால், ஒவ்வொரு குழுவிலும் ஒருவர் மைக் பிடித்து பேசி கொண்டிருப்பார். தூக்கம் அப்பினாலும் கூட்டத்தில் இருப்பவர்கள் கரகோஷம் எழுப்பி கொண்டிருப்பார்கள். ஆண், பெண், தலைவர், அவர், இவர் என்றெல்லாம் பேதம் இருக்கவில்லை. எவர் வேண்டுமானாலும் மைக் பிடிக்கலாம். பேசியவர்களும் ஜல்லிக்கட்டோடு தங்கள் ஆதங்கத்தை குறுக்கி கொள்ளவில்லை.

காவிரி, கூடங்குளம், நீட் என சமூக ஊடகம்தான் அங்கே மைக்கில் பேசி கொண்டிருந்தது. இந்திய அரசுகளின் தொடர் வஞ்சனை சுட்டி காட்டப்பட்ட போதுதான் கரகோஷம் கொப்பளித்தது. பேசிய எவரும் மேடை பேச்சாளர் இல்லை. அப்படியான பேச்சுகளை பட்டிமன்றங்களிலும் நம் வீட்டு அம்மாக்களிடமும் நீங்கள் கேட்டிருக்கலாம். வார்த்தை அலங்காரங்கள் இருக்கவில்லை. உண்மையும் வஞ்சிக்கப்பட்ட கோபமும் மாத்திரம் இருந்தன.

மொத்த நிகழ்வையும் வரலாற்றுடன் பொருத்தி பார்த்து, அரசியல் சாத்தியங்களை அலசும் intellectual brainstorming session-களும் நடந்தன. ஆனால் அவர்களை intellectualகளாக நீங்கள் முன்பு யோசித்திருக்க மாட்டீர்கள்.

நீள முடி வளர்த்து திரியும் ஓர் இளைஞனாகவோ நாடக பட்டறைகளில் நடிக்கும் சமூகத்திலிருந்து துண்டான வேறு தள நபராகவோ பார்த்திருப்பீர்கள். அவர்களும் அங்கேதான் கிடந்தார்கள். நிறைய விவாதித்தார்கள். பேக்குகளை தலைக்கு வைத்து, பெஞ்சுகளில் படுத்து கொண்டார்கள். அங்கு நடக்கும் எல்லாவற்றையும் அமைதியாக பார்த்து உள்வாங்குவார்கள். சந்தேகமோ முரணோ ஏற்படின் கேள்வி கேட்பார்கள். பல தனி நபர் விவாதங்களை நடந்தன. கருத்துகள் உருவாகின.

கடற்கரைக்கு செல்லும் வழி நெடுக மாணவர்கள், இளைஞர்கள், திருநங்கையர் என பலர் நின்று நெரிசலை கட்டுப்படுத்துவார்கள். அத்தனை நெரிசலிலும் உங்கள் கேள்விகளை செவிமெடுத்து பதிலுரைப்பார்கள். கேள்வி கேட்பவர்களும் எந்தவித கல்மிஷ குறும்பும் இல்லாமல் மதிப்போடுதான் கேள்வி கேட்பார்கள். சம்பந்தமே இல்லாமல் ஒரு குடும்பம் சாலையோரத்தில் நின்றுகொண்டு, வாகனதாரிகளுக்கு குடிநீர் பாட்டில்களை இலவசமாக வழங்கி கொண்டிருப்பார்கள். வாகனத்தில் போகிறவரும் தான் குடித்து மிச்ச பாட்டிலை தூக்கி எரியாமல், தண்ணீர் கேட்கும் பக்கத்து வாகன குழந்தைக்கு கொடுப்பார்.

jallikattu-modi-protestநான்கு முக்கிய குழுக்கள் மைக் பிடித்தன என்றால், இன்னும் பலவை சிறுகூட்டங்களோடு மைக்கில் பேசிக்கொண்டிருந்தன. இன்னும் சிறிய குழுக்கள் பல தங்கள் அளவில் பத்து, பதினைந்து பேராக உட்கார்ந்து கோஷங்கள் எழுப்பி கொண்டிருந்தனர். மாட்டின் மணல் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தன. மனுநீதி சோழனின் ஆராய்ச்சி மணி கட்டப்பட்டிருந்தது. அரசுகளுக்கு கோரிக்கைகளை கட்டி தொங்கவிடும் மரம் இருந்தது. மைம் ஷோக்கள் நடத்தப்பட்டன. சிலம்பம் ஆடப்பட்டது. ஆண், பெண் என்ற வேறுபாடு இன்றி கூட்டங்களில் நடனம் நிகழ்ந்தது.

கரையில் எங்கேனும் சென்று புகைபிடிப்போம் என்று நினைத்தவர் கூட அங்கிருந்த கூட்டத்தை கண்டு தயங்கினர். நெரிசலில் நடந்து செல்லும் பல பெண்கள் தெரியாமல் உரசி விட்டாலும் தன்னிச்சையாக ஒதுங்கி வழி விட்டோம். உண்பண்டங்கள் தொடர்ந்து வாகனங்களில் வந்து இறங்கி கொண்டே இருந்தன. சிறுநீர் கழிக்க பொறுமையாய் வரிசைகளில் காத்து நின்றனர். ஒரு குழந்தை தன் தலையில் கொம்புகளை மாட்டி, ‘வேணும் வேணும்.. ஜல்லிக்கட்டு வேணும்’ என முழங்கி கொண்டிருந்தது.

மாவோவின் நெடும்பயணம் படித்திருக்கிறேன். Occupy Wallstreet-ம் கேள்விப்பட்டிருக்கிறோம். அங்கெல்லாம் இவை சாத்தியப்பட்டதா என தெரியவில்லை. ஆனால் மெரினாவில் சாத்தியப்பட்டிருக்கிறது. இருபத்து நான்கு மணி நேரங்களும் அரசியல் வரலாற்று வகுப்புகள். பண்பாட்டு நிகழ்வு கொண்டாட்டங்கள். விவாதங்கள். அதிலும் நிலவொளியில் அரசியல் விவாதங்கள் எல்லாம் அத்தனை அழகானவை.

இரவில் திருவிழாக்களுக்கு சென்று, தங்கி, விடிகாலை வேளைகளில் வீட்டுக்கு திரும்பும் ஞாபக மிச்சத்தை மெரினாவில் பிரதியெடுத்து கொண்டிருந்தனர். தங்கள் பணம் தேடும் நுகர்வு வாழ்வுகள், அரசியலிலிருந்தும் சமூகத்திலிருந்தும் என்னதான் அப்புறப்படுத்தியிருந்தாலும், அவற்றை நோக்கி மீண்டும் ஓடிவரும் விழைவு கரையெங்கும் நிரம்பியிருந்தது. நற்சிந்தனையும் ஒழுக்க பண்புகளும் தூக்கி பிடிக்கப்பட்ட இடத்தில் நம் அழுக்கு சிந்தனைகளை ஒதுக்கி நல்லவற்றையே எடுத்து பாவித்தோம். பல தனி விவாதங்களில் நம்மிலிருந்து வேறொரு நம்மை கண்டெடுத்து அடைந்தோம்.

இந்த போராட்டத்துக்கு நமக்கு ஜல்லிக்கட்டு தேவை என்ற கோரிக்கை இருக்க வேண்டியதில்லை. இது ஒரு இயங்குதளம். நீங்களும் நானும் கற்பனையில் விரும்பி யாசிக்கும் ஒரு சமூக தளம். பூம்புகாரின் இந்திரவிழாவை ஒட்டி போராட்டம் நடந்திருந்தால் இப்படித்தான் இருந்திருக்கும். தவறுகள் நடப்பின் அங்கேயே தட்டி கேட்கப்பட்டன. உணர்த்தப்பட்டன. திட்டம் போட்டு நம்மை வீழ்த்தி, நம் மனங்களுக்குள் இருந்த அறச்சிந்தனையை மழுங்கடித்து, வெற்று மனிதர்களாக மாற்றி போட்ட சமூக போக்குக்கு எதிரான கேவல்தான் இப்போராட்டம்.

jallikattuதொடங்கப்பட்டபோது கூட இந்த வடிவம் எவருக்கு தோன்றி திட்டமிடப்பட்டிருக்காது. ஆனால், மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கிய பின், அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறுசிறு வழிகாட்டுதல்களை கொண்டு மட்டுமே இத்தனை நேர்த்தியை, யதேச்சையாக உருவாக்க முடிகிறதெனில், அந்த யதேச்சையை நமக்குள் எங்கோ ஓர் ஓரமாக நாம் பாதுகாத்து வைத்து வந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை.

அரசை இந்த போராட்டங்கள் அச்சுறுத்தவே செய்யும். வரலாற்றில் இடம்பெறுகிறதோ இல்லையோ ஜல்லிக்கட்டு நடைபெறுகிறதோ இல்லையோ நம் அகங்கள் தாங்கி இருக்கும் இனக்குழு வாழ்க்கையின் நினைவை இந்த போராட்டம் மீட்டெடுத்தது. அந்த நினைவை அறிவுதளத்தில் இருந்து விவாதித்து உரிமை பேசினோம். ஒரு போராட்டத்தை அழகிய நினைவாக இப்போது உருவாக்கி கொண்டுவிட்டோம். நினைவு என்பது பல நினைவுகளை தொடர்ந்து உருவாக்க வல்லது.

பேதங்கள் ஏதும் இல்லாத, அறிவு சார்ந்த அழகு சமூகத்தின் ஆறு நாட்கள் அவை!

நன்றி : Rajasangeethan John, ஃபேஸ்புக்கில் இருந்து.

***

காவல்துறை பற்றி சொல்லப்படுவது உண்மை தானா?

ஏதோ ஒன்று உந்தித் தள்ள, இன்று அலுவல் முடிந்ததும் நேராக நடுக்குப்பம் சென்றுவிட்டேன். வெந்து தணிந்த மீன் மார்க்கெட்டை மாநகராட்சியினர் துப்புரவு செய்து கொண்டிருந்தனர். காவல்துறையின் காட்டுமிராண்டித்தனத்திற்கு சிறு குழந்தை கூட சாட்சி கூறுகிறது. போலீசார் தீ வைத்ததை கண்கூடாக பார்த்திருக்கிறார்கள் ரோட்டை ஒட்டியுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாழும் பெண்கள். வீட்டுக்கு ஒருவர் தையல் போடுமளவு ரத்த காயத்துடன்.

அன்று நடந்ததை கதை கதையாக சொல்கிறார்கள், அவர்கள். “மெரீனாவில் கூடியிருந்த இளைஞர்களை போலீசார் விரட்டவும், வேறு வழியின்றி நடுக்குப்பம் குடியிருப்பில் தஞ்சம் புகுந்தனர். புரட்சி நடந்த ஒரு வாரமும் எங்களுக்கு எந்த இடையூறும் வராமல், அன்பு காட்டிய அந்த பிள்ளைகள் தலையில் காயத்துடன் ரத்தம் சொட்ட சொட்ட அடைக்கலம் கேட்கும் அவர்களை எங்களால் எப்படி வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்க முடியும்? அவர்கள் சமூக விரோதிகள் என்றால் திருப்பித் தாக்கியிருக்க மாட்டார்களா? எங்களை நாடி வந்தவர்கள் அனைவரும் ஆறு நாட்களாக அமைதி காத்த இளைஞர்கள். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக எங்களை இழுத்து போட்டு அடித்தார்கள். ஆண், பெண் என்ற பேதம் எல்லாம் இல்லை. அதைக்கூட தாங்கிக் கொண்டோம், கேட்கவே கூசும் வார்த்தைகளால் எங்களை திட்டினார்கள், அது போதாதென்று எங்கள் வாழ்வாதாரத்தையே தீ வைத்து கொளுத்திவிட்டார்களே, இது நியாயமா? ”

nadukkuppam
எரிக்கப்பட்ட நடுக்குப்பம் மீன் மார்க்கெட்

” நாங்கள் அன்றாடம் காய்ச்சிகள். ஊரே கூடி போராட்டம் நடத்தும்போது நாம் எப்படி கடலுக்கு செல்வது என்று போராட்டம் நடந்த ஒரு வாரமும் கடலுக்கு செல்லவில்லை, அதன் பிறகு இன்று வரை எங்கே வெளியில் வந்தால் போலீஸ் பிடித்துவிடுமோ என்று பயந்து வெளியிலேயே வருவதில்லை. யார் வீட்டுக்குள் எப்போது போலீஸ் வருமோ என்று இரவில் கூட பயந்து பயந்து தான் தூங்குகிறோம். எங்கள் பெண்கள் ஒழுங்காக தூங்கி ஒருவாரம் ஆகிறது. ஆண்கள் தூங்காமல் காவல் இருக்கிறார்கள். இப்படியே போனால் எப்படி கடலுக்கு போவது? அடிபட்டு தையல் போடுவதற்கு கையில் இருந்த இரண்டாயிரமும் போய் விட்டது.  இனி நாங்கள் எப்படி வாழ்க்கை நடத்துவது? ”

” எங்களை விடுங்கள், எங்கள் வீடுகளில் புகுந்து இழுத்துக் கொண்டு போனார்களே, அந்த பிள்ளைகளின் கதி என்ன? இங்கேயே நாயைப் போல அடித்து பாதி உயிராகத் தான் அழைத்துச் சென்றனர். அவர்கள் உயிரோடு இருப்பார்களா என்பது சந்தேகமே. இந்த அடிக்கு பயந்து நிறைய பேர் கடலுக்குள் வேறு இறங்கி விட்டார்கள். தினமும் ஒரு பிணம் கரை ஒதுக்குகிறது. எத்தனை பிள்ளைகள் நீச்சல் தெரியாமல் இறந்து போனார்களோ? ”

” ஒரு பெண் அடைக்கலம் தேடி வீட்டுக் கதவை தட்டினார், அவரது கைகள் நடுங்கிக் கொண்டு இருந்தன. அவர் வெளிநாட்டு நிருபராம். அவருடன் இரண்டு பையன்கள். அம்மா எனக்கு ஒரு கப் காபி கிடைக்குமா என்று கேட்ட அந்த பெண்ணை எப்படி திருப்பி அனுப்ப முடியும்? அது நம் தமிழர் பண்பாடா? சாப்பாடு கொடுத்ததால் நாங்கள் சமூக விரோதியா? போராடும் பிள்ளைகளை அரவணைத்து பிடித்ததால் நாங்கள் சமூக விரோதியா?”

விடைசொல்ல முடியாத கேள்விகளாக எழுப்பிய அந்த பெண்களுக்கு ஆறுதல் சொல்லக் கூட சக்தியற்று விடைபெற்றபோது, ஒரு பெண் சொன்னதைக் கேட்டு அவரைக் கட்டியணைத்துக் கொண்டேன்.

“ஆனால் ஒன்று சொல்கிறோம் கண்ணு, இவ்வளவு நடந்த பிறகும் நாங்கள் சோர்ந்து விட மாட்டோம். அன்று அந்த பிள்ளைகளுக்கு உதவியதற்காக நாங்கள் வருத்தப்படவில்லை. நம் பண்பாட்டை காப்பாற்ற குரல் கொடுத்த மாணவர்களுக்கு உதவியதை பெருமையாகவே நினைக்கிறோம். இப்போதும் எங்களுக்கு உதவி செய்ய மாணவர்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றனர். நாங்கள் தான் பிரச்சனை ஏற்படும் என்று அவர்களை திரும்பி போகச் சொல்கிறோம். எங்கள் கையில் உழைப்பு இருக்கும் வரை எந்த குறையும் இல்லை. நாங்கள் சோர்ந்து விட மாட்டோம் ”

அணைப்பிலிருந்து விடுபடும் போது குலுங்கி அழுது கொண்டிருந்தேன் நான், “இந்த கள்ளம் கபடமற்ற மக்களையா சமூக விரோதிகள் என்று தாக்கிக்கொண்டிருக்கிறீர்கள், பாவிகளா…. ”

நன்றி : Themozhi Chelvi, ஃபேஸ்புக்கில் இருந்து.

விவசாயிகளை சாகவிட்டு வேடிக்கை பார்க்கும் அரசு – தோழர் காளியப்பன்

0

நெஞ்சு வெடித்து சாகிறான் விவசாயி …! காவிரியை தடுத்த மோடியும்,
ஆற்று மணலைக் கொள்ளையடித்த அதிமுக-ரெட்டி-ராவ் கும்பலும்தான் குற்றவாளிகள் !
இவர்கள் கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல்செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கு !

என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாணவர்களும் இளைஞர்களும் பெண்களும் ஜனவரி, 2017 மாதத்தில் டெல்டா மாவட்டங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். விவசாயிகளை நேரடியாக சந்தித்து தங்கள் முழக்கங்களை அவர்களுடையதாக்கினர். நம்முடைய இன்னல்களுக்கெல்லாம் காரணம் இந்த அரசுதான் என்பதை விளக்கினர்.

people-power-protest2டெல்டா மாவட்டத்தின் நகர்ப் பகுதிகளில் பம்பரமாய் சுழன்று 50ஆயிரத்திற்கு மேற்பட்ட பிரசுரங்களை விநியோகித்தனர். மரத்துப் போயிருந்த பலருக்கும் புரிய வைத்தனர். இப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக திருவாரூரில் புதிய ரயில் நிலையம் அருகில், 11-1-2017 அன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தர்ணா போராட்டம் நடைப்பெற்றது. இதில் பல்வேறு அரசியல்கட்சித்தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள், விவசாயிகள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர். பிரம்மாண்டமான இப்போராட்டம் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் வரை டெல்டா பற்றியெறியும் என்பதை அறிவிக்கும் விதமாக இருந்தது.

இந்த அரசின் வஞ்சகத்தால் இந்த அரசாங்கத்தினுடைய புறக்கணிப்பால் மாண்டு போன நம்முடைய விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தர்ணாவிற்கு மக்கள் அதிகாரத்தின் தலைமை தாங்கிய மாநில தலைமைக்குழுத் தோழர் காளியப்பன் தனது உரையில்
“இந்தியா முழுவதும் விவசாயிகளின் மரணம் பெருமளவில் நடந்து கொண்டிருந்த காலத்தில் கூட தமிழகத்தில் மிக விதிவிலக்காக ஒன்றிரண்டு சம்பவங்கள் தான் நடந்து கொண்டிருந்தன. ஆனால் இந்த ஆண்டு கடந்த இரண்டு  மாதத்தில் தற்கொலைகள் உள்ளிட்டு 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணத்தை தழுவியிருக்கிறார்கள். தமிழகம் ஒரு மாபெரும் விவசாய நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. தினமும் எத்தனை விவசாயிகள் மரணமடைந்திருக்கிறார்கள் என்ற செய்தியை முதன்மை செய்தியாக தாங்கியே நாளிதழ்கள் வெளிவருகின்றன. காவிரி மட்டும் அல்லாது, தமிழகத்தில் குறுக்கும் நெடுக்குமாக கன்னியாகுமரி தொடங்கி திருவள்ளூர் மாவட்டம் வரை, கடலூர் தொடங்கி ஓசூர் வரை உள்ள ஒட்டுமொத்த தமிழகத்தில் அனைத்து  விவசாயமும் இன்று மாபெரும் அழிவை சந்தித்து வருகிறது.

டெல்டா மாவட்டத்தில் விவசாயம் மட்டுமல்ல, அதுமட்டுமில்லாமல், தென்னை விவசாயம் பாழ்பட்டு போயுள்ளது. மஞ்சள் விவசாயம் கருகிப்போய் உள்ளது. பருத்தி அழிந்திருக்கிறது. கரும்பு காய்ந்து கிடக்கிறது.  சோளம், கம்பு, தமிழ்நாட்டினுடைய மொத்த உற்பத்தியும் தேங்கிப்போய் கிடக்கின்றது. ஆனால் இன்று அதிகாரிகள் தெனாவட்டாகவும் திமிராகவும் அறிக்கைவிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஒட்டுமொத்த விவசாயிகளை அவமானப்படுத்தும் வகையில் கடலூரை சேர்ந்த அமைச்சர் சம்பத் சொல்கிறார், விவசாயிகளுக்கு வயதானதால் தான் இறந்துள்ளனர் யாரும் பிரச்சனையால் சாகவில்லை என்று கூறுகிறார்.

வெள்ளமண்டி நடராஜன் என்றொரு அமைச்சர் சொல்கிறார் வறட்சியால் இன்றைய விவசாயிகள் சாகவில்லை. செத்தவங்கெல்லாம் குடும்ப பிரச்சனையில் அல்லது வயது முதிர்வு காரணமாக செத்து போயிருக்கிறார்கள் என்று மிக அலட்சியமாக பதில் சொல்கிறார்கள். இறந்து போயிருக்கும் விவசாயிகளுடைய பின்னணியை பார்த்தால் தெரியும் முப்பது வயது விவசாயியும் செத்திருக்கிறார், எழுபது வயது விவசாயியும் செத்துப்போயிருக்கிறார். ஆக எழுபது வயது தாண்டியதாலேயே அவன் செத்து போக வேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்கள். ஏனென்றால் இந்த அ.இ.அ.தி.மு.க கும்பல் இருக்கிறேதே அதற்கு உழைப்பு என்றால் என்னவென்று தெரியாமல் வாழும் ஒரு ஒட்டுண்ணி கூட்டம்.

Kaliyappan-tiruvarur
தோழர் காளியப்பன்

ஆனால் இன்றைக்கும் கிராமத்தில் போய் பாருங்கள் 75 வயதானாலும் காலையில் எழுந்து வயலுக்கு போகும் விவசாயியை நீங்கள் பார்க்க முடியும். விவசாயி சாகும்வரை உழைப்பாளியாக தான் இருக்கிறான். உழைப்பாளியாக இருந்து இந்த சமூகத்திற்கு பலன் அளிக்கிறானே தவிர, இந்த சமூகத்தை உறிஞ்சி வாழ்கின்ற ஒட்டுண்ணியைப் போல, சம்பத்தைப் போல, வீரமணியைப் போல, வெள்ளமண்டி நடராஜனைப் போல ஒட்டுண்ணி போல வாழ்கின்ற வெட்டி கூட்டமல்ல இது. வயதின் முதிர்வு காரணமாக சாவது இயற்கை அதை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று சொன்னால் ஜெயலலிதாவும் 68 வயதில் தான் செத்தார். நம்மூரில் 45, 55 வயதில் நிறைய பேர் இறந்துவிடுகின்றனர்.  ஆக 68 வயது கூட சாகின்ற வயது தான் எதற்கு 150 கோடி ரூபாய் 200 கோடி ரூபாய் செலவு செய்யவேண்டும். எதற்கு உள்ளூர் மருத்துவர் பத்தாது என்று டெல்லி மருத்துவரை கூப்பிடனும், லண்டனிலிருந்து மருத்துவரை கூப்பிடனும். இதெல்லாம் போதாது என்று சொல்லி கடவுளையே மிரட்டினார்கள் அம்மாவை காப்பாற்றவில்லை என்று சொன்னால் நடப்பதே வேறு என்று. ஆகவே இவர்கள் கொள்ளையடிப்பதற்கு அந்த கொள்ளை கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்கு ஒருவர் நீண்ட நாள் உயிரோடுயிருக்க வேண்டும். ஆனால் இந்த சமூகத்தின் உணவு தேவையை நிறைவு செய்கின்ற இந்த நாட்டு மக்களுக்கு சோறு போடுகின்ற விவசாயி 60 வயதில் 70 வயதில் இறந்தால் அவன் இயற்கையாக செத்து போயிவிட்டான் என்றும் அதை பற்றி கவலைப்படவில்லை என்று பேசுகின்ற ஒரு அமைச்சர், அந்த அமைச்சர் அங்கம் வகிக்கின்ற ஒரு மந்திரிசபை, அந்த மந்திரிசபைக்கு தலைமை வகிக்கின்ற ஒரு கிரிமினல், பொறுக்கி, திருட்டுக்கூட்டம் தான் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.

ஆனால் இந்த விவசாயிக்காக இன்று தமிழ்நாடு முழுவதும் ஏராளமான அமைப்புகள் குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இன்னும் பல்வேறு விவசாய சங்கங்கள் தோழர் காவிரி தனபால், தோழர் பி.ஆர்.பாண்டியன் இப்படி ஏராளமான கட்சிகளெல்லாம் தொடர்ச்சியாக போராடியதன் விளைவாக தான். இந்த அரசாங்கமே தமிழ்நாட்டில் டெல்டா பகுதியில் வறட்சி இருக்கிறதா இல்லையா? விவசாயம் இருக்கிறதா இல்லையா? எந்தளவிற்கு பாழ்பட்டிருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்கு அதிகாரிகள் வருகிறார்கள். தோழர்கள் ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அதிகாரிகள் வந்து எப்படி ஆய்வு செய்வார்கள், எப்படி இவர்கள் மதிப்பீடு செய்வார்கள் என்பதெல்லாம் நமக்கு தெரியும், வருவான் வயலில் கூட இறங்க மாட்டான், வரப்பில் கூட நிற்க மாட்டான். வசதியான சாலையில் உட்கார்ந்திருப்பார்கள் அதிகாரிகள் படைசூழ, வெயில் பட கூடாது என குடை பிடித்திருப்பான். சகல வசதியுடன் எட்டி நின்று பார்த்துவிட்டு ஏதோ அதிகாரிகள் சொல்கின்ற புள்ளி விவரங்களை வைத்து கொண்டு ஒரு கணக்கை சொல்வார்கள்.

தமிழ்நாட்டில் 24லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் இருக்க கூடிய இந்த டெல்டாவை மூன்று நாள் இரண்டு நாளில் ஒரு மாவட்டத்திற்கு ஒரு மந்திரி வந்து பார்த்து விட்டு போய் அறிக்கை கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் குழுவை அமைத்திருக்கிறோம். அந்த குழுவினுடைய அறிக்கை வந்ததற்கு பிறகு நாங்கள் உரிய நிவாரணத்தை பற்றி அறிவிப்போம் என்று பன்னீர்செல்வம் அறிவித்தார். அதை நம்பி தான் பி.ஆர். பாண்டியன் போராட்டத்தை கைவிட்டார். ஆனால் 10-ந்தேதி காலையில் அறிக்கை வருவதற்கு முன்னால் நிவாரணம் அறிவிக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்ட 17 பேருக்கு 3 லட்சம் ரூபாய் தருவதாகவும் அறிவித்துள்ளனர். இந்த மூன்று லட்சம் ரூபாயை எப்படி கணக்கு போடுகிறார்கள் என்று நமக்கு தெரியவில்லை. எதற்கெடுத்தாலும் 3 லட்சம் என்கிறான். 17 பேருக்கு  மட்டும் 3 லட்சம் ரூபாய் அறிவிப்பு, மற்ற மரணங்களெல்லாம் விவசாயத்தினுடைய இழப்பால் அழிவால் ஏற்பட்டது அல்ல என்று இந்த அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது. இந்த அரசாங்க அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இருக்கிறது.

யானை பசிக்கு சோளப்பொறியாக இருக்கிறது. விவசாயம் தான் இப்போதும் இந்த நாட்டின் முதுகெலும்பாக இருக்கிறது. முதுகெலும்பு முதுகெலும்பு என்று சொல்கிறார்களே, அது வளைந்திருந்தாலும், நெளிந்திருந்தாலும் வயதானாலும், இன்றைக்கும் இந்த நாட்டினுடைய முதுகெலும்பு உற்பத்தினுடைய ஆதாரம், வாழ்வாதாரத்திற்கான அடிப்படை விவசாயம் தான். இன்றைக்கும் 60% பேர்கள் விவசாயத்தை நம்பி தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு பெரிய வேலை வாய்ப்பை, வாழ்வாதாரத்தை தருகின்ற விவசாயத்திற்கு, அவர்கள் நட்டத்தை 5465 ரூ. இந்த அதிகாரிகள் இந்த கணக்கை எப்படி கொண்டுவந்தார்கள். 40, 50 வருடங்களுக்கு முன்னால் ஒரு சூத்திரம் வைத்துள்ளான். இழப்பீடு என்று சொன்னால் எப்படி கணக்கிடுவது என்று ஒரு கணக்கு வைத்திருப்பார்கள். அந்த கணக்கை வைத்து கொண்டு இன்று அறிவிக்கிறார்கள்.

ரூ.5,465 நட்டஈடு கொடுக்கிறீர்கள் என்று சொன்னால் விவசாயிகளை பற்றி இந்த அரசாங்கம் என்ன கருத்து வைத்திருக்கிறது. அவர் எப்படி சாப்பிடுவது, 20கிலோ அரிசி கொடுத்தால் சரியாகிவிட்டதா? கடந்த ஒரு வாரத்தில் நம்முடைய தோழர்கள் திருவாரூர், நாகை மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். நான்கு ஏக்கர், ஐந்து ஏக்கர் வைத்திருக்கும் விவசாயின் நிலைமை என்ன தெரியுமா ? கௌரவமாக வாழ்கின்ற ஒரு விவசாய குடும்பத்து பெண்மணி சொல்கிறார், எல்லாம் போச்சு வழியே இல்லை. ஒரே வழி தான் இருக்கிறது பிச்சையெடுப்பது தான் ஒரே வழி. பிச்சையெடுக்க கூட நாங்கள் தயார். போடுவதற்கு யாரும் தயாராக இல்லை. இப்படி ஒரு குரலை டெல்டா மாவட்டத்தில் ஒரு பெண் சொல்கிறார் என்றால் அதை விட இந்த தேசத்திற்கு அவமானம் எதுவும் கிடையாது. இந்த ஆட்சியாளர்கள் நாக்கை பிடிங்கி கொண்டு சாக வேண்டும். விவசாயிகளின் துயரம் இவ்வளவு கொடூரமானது என்று எவனுக்காவது தெரியுமா? விவசாயியை போய் பார்த்தால் தான் தெரியும், அவனிடம் போய் கேட்டால் தான் தெரியும்.

people-power-protestவிவசாய குடும்பத்தில் ஒரு பெண் சொல்கிறார், வீட்டில் காசு இல்லை, கணவரிடம் கேட்டால் தற்கொலை செய்து கொண்டு செத்துவிடுவேன் என்கிறார். கொஞ்சம் யோசித்து பாருங்கள் ஒரு விவசாய குடும்பத்தில் இருக்கும் ஒரு பெண் தன்னுடைய குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் புருஷனுக்கு சோறு போடணும், வயதான மாமியார் மாமனாருக்கு சோறு போடணும், எல்லா பொறுப்பும் அந்த பெண்ணுக்கு இருக்கு. அந்த பெண்ணுக்கு வருமானம் கிடையாது. கணவனுடைய வருமானம் தான் புருஷனிடம் காசு கேட்டால் நீ என்னிடம் காசு கேட்டால் நான் தற்கொலை செய்து கொண்டு சாவேன் என்கிறான்.

பதினேழு பேருக்கு மூன்று லட்சம் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறாரே, குடும்ப செலவுக்கு பணம் கேட்டால் தற்கொலை செய்து கொண்டு செத்துவிடுவேன் என்று மிரட்டும் கணவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் சாகாமல் ஏன் இருக்கிறார்கள் என்பது தான் பன்னீர்செல்வத்தின் கேள்வி. இப்படி மக்கள் விரோத கேடுக்கெட்ட ஒரு அரசாங்கம் இன்று நமக்கு ஆட்சியாளர்கள் என்ற பெயரால் நம்மை ஏறி மிதித்து கொண்டிருக்கிறார்கள். ஒரு விவசாயி அறுவடை முடியும் வரை அவனுடைய அன்றாட செலவுகளுக்கும் கடன் வாங்குகின்றான். விவசாயத்திற்கு கடன் வாங்கியது போக, சோத்திற்கு கடன் வாங்கி இரண்டிற்கும் சேர்ந்து, இன்னும் 6 மாதத்திற்கு கடன் வாங்கி தான் செலவழிக்க வேண்டும் என்ற நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் நம் நாட்டில் ஒரு பண்பாடு வளர்க்கப்பட்டிருக்கிறது. எவ்வளவு அடித்தாலும் அடித்து விட்டு கையில் காசு கொடுத்தால் சகித்து கொள்வோம். ஆகவே இந்த மக்களை ஏமாற்றுவதற்கு ரொம்ப எளிதான வழி, அவர்களுக்கு அப்போதைக்கு அப்போது வாய்க்கரிசி போட்டால், தீனி போட்டால் போதும் அந்த தீனியை ஒரு நாள் மென்றுவிட்டு அடுத்த நாள் துயரத்தை செக்குமாடு போல் சந்தித்து வாழ்க்கையை இழுத்து கொண்டு போய்விடலாம். என்று ஒரு மந்த நிலைக்கு இந்த சமுதாயத்தை இந்த அரசாங்கங்கள் தள்ளுயிருக்கின்றன. சுயமரியாதை உணர்வு சுத்தமாக இல்லாமல் காசு கொடுத்தால் எவ்வளவு ஓட்டு வேண்டுமானாலும் வாங்கலாம். காசு இருக்கிறவன் அவன் கொள்ளையடித்தாலும் சரி ஊர் தாலியை அறுத்தாலும் சரி தமிழ்நாட்டில் கல்வி வள்ளல், ஆன்மிக செம்மல், அரசியல் வழிக்காட்டி எல்லாம் களவாணி பயலாக இருக்கிறான். அவர்கள் பின்னால் ஒரு கும்பல். தமிழ்நாட்டின் கேடுகெட்ட அரசியல் எதை காட்டுகிறது என்று சொன்னால். தமிழன் என்று சொல்லடா? தலை நிமிர்ந்து நில்லடா?  என்று ஒரு காலத்தில் பாட்டு பாடினான். இன்று  தமிழன் என்று சொல்ல முடியவில்லை. குறிப்பாக அ.தி.மு.க அரசியலை பார்த்து வெளி மாநிலங்களில் நம்மை காரி துப்புகிறார்கள்.

ஜெயலலிதா மரணமடைந்த உடனேயே தமிழ்நாட்டில் இருக்க கூடிய எல்லா அரசியல் கட்சிகளும் அவரை புனிதவதியாக மாற்றிவிட்டார்கள். ஒரு மாபெரும் வீராங்கனை போல, துணிச்சலாக மத்திய அரசை எதிர்த்து நிற்றவர் போல, சாதாரண மக்களின் பிரச்சனையை தீர்த்து வைப்பதில் ஒரு முன்னோடியை போல புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். ஒன்றரை கோடி பேர்களை அடிமுட்டாளாக, அடிமைகளாக பொறுக்கி எடுத்து உறுப்பினராக சேர்த்திருக்கிற ஒரே கட்சி அண்ணா தி.மு.க தான். தமிழ்நாட்டிற்கு ஒரு சனியன் தொலைந்தது அவ்வளவுதான். ஒரு பீடை ஒழிந்தது என்று இருக்கும் போது சசிகலா என்னும் இன்னொரு பீடையை கொண்டு வந்து வைக்கிறான். அம்மா நீங்க தான் தலைமை ஏற்கனும். இந்த கழகத்தை காப்பாற்ற அம்மா தான் வரணும். சசிகலாவை தியாகியாக மாற்றுகிறார்கள். ஊர் முழுக்க தியாகி தியாகி என எழுதி வைக்கிறான். யார் தியாகி என்று நமக்கு தெரியவில்லை. நடராஜனா, சசிகலாவா? ஆகவே இரண்டு பேருமே தியாகிகள்தான். சசிகலாவை தியாகம் செய்ததால் நடராஜன் தியாகி, நடராஜனை தியாகம் செய்ததால் சசிகலா தியாகி. இப்படி ஒரு மானங்கெட்ட நாடு உலகில் எங்காவது இருக்குமா?

manalதமிழ்நாட்டின் சீரழிந்த இந்த பண்பாடு, தமிழ்நாட்டின் உண்மையான பிரச்சனை என்ன, விவசாயிகள் பிரச்சனைகளை சந்தித்து கொண்டிருக்கிறார்களே, இந்த நாட்டின் தொழிற்துறை முடங்கி போயிருக்கிறதே ! அரசு என்பது ஒன்று இல்லாமல் போய் அரசு என்பதே குற்ற கும்பலாக மாறி போயிருக்கிறதே. இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை பற்றி சிந்தித்து பார்ப்பதை, பேசுவதை, விவாதிப்பதை விட்டுவிட்டார்கள். என்ன ஆனது இந்த தமிழகத்திற்கு ? ஆகவே நாம் கவலைப்பட வேண்டியது நம் நாட்டின் பொருளாதார பிரச்சனைகளை எப்படி களைய போகிறோம் என்று யோசிப்பதற்கு முன்னால் நம் நாட்டில் களையப்பட்டிருக்கிற இந்த சுயமரியாதை உணர்வு, அரசியல் அற்ற பிழைப்புவாதம், இந்த பொறுக்கித்தனம் இந்த பண்பாட்டிற்கு எதிராகவும் நாம் போர் தொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நாம் இந்த பண்பாட்டை ஒழிக்காவிட்டால்  எதிர்காலத்தில் இந்த தமிழகமே அடிமைகளின் மாநிலமாக தான் இருக்குமே தவிர, ஒரு சுயமரியாதை மாநிலமாக இருக்காது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு பகுத்தறிவு, சுயமரியாதை என்பது கொடிக்கட்டி பறந்தது. ஆனால் பெரியாரின் பெயரை சொல்லியே இன்று சுயமரியாதையை அழிக்கிறார்கள்.

உடனடியாக நீர்நிலைகளை சரிசெய்யவேண்டும்.  இல்லையென்றால் விவசாயத்தை யாரும் காப்பாற்ற முடியாது. நிதி ஒதுக்கவேண்டும் என்று புதிதாக பேசுகிறான். நீர்நிலைகளை பாதுகாப்பதற்கும் ஏரி குளங்களை தூர்வாருவதற்கும் கால்வாய்களை தூர்வாருவதற்கும், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ரூபாய்களை இந்த அரசாங்கள் ஒதுக்குகின்றனவே அந்த பணமெல்லாம் எங்கே போயிற்று? இன்று PWD அதிகாரிகள் எல்லா பணத்தையும் 60 வருடங்களாக தின்றுவிட்டு இன்னமும் நிதி ஒதுக்கு என்கிறானே? அப்படி நிதி ஒதுக்கினால் மறுபடியும் வேலை செய்வார்களா? என்பது ஒரு கேள்வி. மீண்டும் இந்த அரசாங்கம் நிதி ஒதுக்கும் அந்த பணமும் மீண்டும் அவர்கள் பையில் தான் போகும் என்பது தான் அவலநிலை. நேற்று வரை இந்த நீர்நிலைகளை அழிப்பதற்கு காரணமாக இருந்தது யார்? ராம் மோகன் ராவ் என்ற ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி அவன் தான் தலைமை தாங்குகிறான். அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சொல்கிறார் நான் யாரிடம் பயிற்சி எடுத்தேன் என்று சொன்னால் அம்மாவிடம் தான் பயிற்சி எடுத்தேன். ஐ.ஏ.எஸ் பயிற்சி என்பது டெல்லியிலும், மிசெளரியிலும் கொடுக்கிறான் என்று நாமெல்லாம் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் இவன் சொல்றான் போயஸ் தோட்டத்தில் தான் பயிற்சி எடுத்து கொண்டேன் என்று. சரி போயஸ் தோட்டத்தில் என்ன பயிற்சியெடுக்க முடியும்? ஒரே ஒரே பயிற்சி தான் எடுக்க முடியும் ஊர் தாலியை எப்படி அறுப்பது? அதை எப்படி உலையில் போடுவது இதை தவிர போயஸ் தோட்டத்தில் எந்த பயிற்சியும் எடுக்க முடியாது. அடாவடி, ரவுடித்தனம், ஊர் சொத்தை சூறையாடுவது என்பது தான் போயஸ் தோட்டத்தில் கற்று கொள்ள முடியும்.

இந்த ராம் மோகன் ராவ் தான் தமிழகத்தில் உள்ள எல்லா நீர்நிலைகளிலும் உள்ள மணலை கொள்ளையடிப்பதற்கு திட்டம் வகுத்து கொடுத்த மிக பெரிய கிரிமினல். இவர் யார் தமிழகத்தின் தலைமை செயலர். அந்த அதிகாரி செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக இருந்த பொழுது தான் தமிழ்நாட்டில் எத்தனை ஆறுகள் இருக்கின்றன. அந்த ஆறுகளில் உள்ள மணலை எல்லாம் கொள்ளையடித்தால் எவ்வளவு கிடைக்கும் என்று அ.இ.அ.தி.மு.கவிற்கு வழிக்காட்டி தான் இந்த கிரிமினல் கும்பல்.

எந்த கிரிமினல் கும்பல் இந்த நீர்நிலைகளை அழிப்பதற்கு காரணமாக இருந்ததோ, நீர்நிலைகளை ஆக்கிரமித்து கொள்ளையடித்தோ அந்த கும்பலுடைய சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அதிலிருந்து தான் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்கிறோம், ஜெயலலிதா கூட இதை தான் பேசினார் எனக்கு குடும்பம் என்பதே கிடையாது. நான் தனி ஆள். தமிழ்நாட்டு மக்கள் தான் என்னுடைய குடும்பம் என்று ஒவ்வொரு தேர்தலிலும் வாய்கிழிய பேசி ஓட்டு வாங்கினார். ஜெயலலிதா செத்து போயாச்சு. ஜெயலலிதா சொத்துக்கள் அனைத்தும் தமிழ்நாட்டு மக்களுக்கு தான் சொந்தம். ஆகவே கொடநாடு பங்களா பல கோடி போகும் விற்றுவிட்டு மக்களுக்கு கொடு. போயஸ் தோட்டம் ஒரு 100 கோடி ரூபாய் போகும் விற்றுவிட்டு விவசாயிகளுக்கு நட்டயீடு கொடு. சிறுதாவூர் பங்களா விற்றுவிடு, திராட்சை தோட்டத்தை விற்றுவிடு, வாரிசில்லாத சொத்து தானே. தமிழ்நாட்டு மக்கள் தானே வாரிசு. சொத்தை பறிமுதல் செய்து மக்கள் சொத்தாக மாற்று. ஆகவே நமது கோரிக்கை அரசாங்கம் உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்.

ஒரு விவசாயிக்கு குறைந்த பட்சம் 2 லட்சம் ரூபாயாவது தர வேண்டும். ஒரு ஏக்கருக்கு 20000ரூ வீதமும், வாழ்நாள் செலவுக்காக மேலும் 50000 வரை இழப்பீடு தர வேண்டும். 3000, 5000 ரூ என்பது ஒரு ஏமாற்று, மோசடி ஆகவே இதை விவசாயிகள் ஏற்க கூடாது என்று கேட்டு கொள்கிறோம்”

தகவல் :
மக்கள் அதிகாரம்

தமிழ்நாடு. 99623 66321

ஜெயா இங்கிலீஷ் பேசினால் அறிவாளியா ?

2
ஜெயாவின் பிறந்தநாளையொட்டி அவரது உருவத்தை ஒரு சிறுமியின் கையில், அவரது கதறலைப் பொருட்படுத்தாமல் பச்சைக் குத்தும் அராஜகக் கூத்து.

‘‘படப்பிடிப்பு நேரங்களில்கூட புத்தகமும் கையுமாக இருப்பார். அவரது வீட்டில் பிரமாதமான புத்தகங்கள் அடங்கிய நூல் நிலையம் இருக்கிறது என்பார்கள். அதனை அம்மா நூலகமாக மாற்றுங்கள்.’’ (தமிழ் இந்துவில் வாசகர் கடிதம், 10.12.16)

ஜெயா படிப்பாளி எனக் காட்டுவதற்கு ஊடகங்கள் உருவாக்கிய சான்று.
ஜெயா படிப்பாளி எனக் காட்டுவதற்கு ஊடகங்கள் உருவாக்கிய சான்று.

காலனிய அடிமை மனோபாவம் காரணமாக, பட்லர் இங்கிலிஷ் பேசுபவனைக்கூட அறிவாளியாகப் பார்க்கும் மூடத்தனம் நமது நாட்டு நடுத்தர வர்க்கத்தின் பொதுப் புத்தியில் உறைந்து போயிருக்கிறது. இந்த ஒரு பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டே ஜெயாவைப் பெரிய படிப்பாளியாக தமிழக மக்களின் முன் நிறுத்தியிருக்கிறது, தமிழகத்துப் பார்ப்பனக் கும்பல்.

மேட்டுக்குடி குடும்பத்தில் பிறந்து, கான்வெண்டில் படிக்கும் பணக்கார குலக்கொழுந்துகள் போலவே ஜெயாவும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் திறன் கொண்டிருந்தது வியப்பிற்குரிய விசயமல்ல. அது போல, ஒரு நடிகைக்குப் பல மொழிகள் பேசத் தெரிந்திருப்பதும் அதிசயமான விசயமல்ல. எனினும், இந்த உப்புப் பெறாத விசயத்தை வைத்துக்கொண்டு, மற்றவர்களுக்குக் கைவரப் பெறாத தனித் திறமை ஜெயாவிடம் இருப்பதைப் போலக் காட்டி, அவரை அதிபுத்திசாலியாகவும், புத்திகூர்மை மிக்கவராகவும் புகழந்து தள்ள முடியுமென்றால், ஆங்கிலம் உள்ளிட்டுப் பல மொழிகளைப் பேசக்கூடிய டூரிஸ்டு கைடுகளைக்கூட அறிவாளிகளாக, பன்மொழிப் புலமைமிக்கவர்களாகக் கூறலாம்.

ஜெயாவின் அறிவுத் தரம் என்னவென்பதை அவரது ஆட்சியின் அலங்கோலங்களே எடுத்துக் காட்டுகின்றன. அவரிடம் வெளிப்பட்ட ஆணவ, பொறுக்கிப் பண்பாடோ தமிழகத்தையே கூசிப் போக வைத்தது. கட்சி தொடங்கி சட்டமன்றம் வரையிலான நிறுவனங்களைத் தனது துதி பாடும் பஜனை மடங்களாக மாற்றியதோடு, கட்சி உறுப்பினர் தொடங்கி அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் வரையிலான ஆட்சியாளர்களையும் காலில் விழ வைத்து ரசித்தார். அம்மா, அன்னலெட்சுமி, புரட்சித் தலைவி, நிரந்தர முதல்வர் என்றெல்லாம் பலவாறாகத் தன்னைப் பற்றி, தனது முகத்துக்கு நேராக எடுபிடிகளும் விசுவசாசிகளும் புகழ்ந்து தள்ளுவதை சிரித்தபடியே ரசிக்கும் வக்கிர மனோபாவத்தைத்தான் சாகும் வரையிலும் வெளிப்படுத்தினார்.

ஜெயாவின் காழ்ப்புணர்ச்சி காரணமாகப் புறக்கணிக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலியாக உள்ள புத்தக அலமாரிகள்.
ஜெயாவின் காழ்ப்புணர்ச்சி காரணமாகப் புறக்கணிக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலியாக உள்ள புத்தக அலமாரிகள்.

தனது எடுபிடிகள் தன்னைப் புகழுவதை மட்டுமல்ல, எதிர்த்தரப்பு குறித்து அக்கும்பல் கொச்சையாக வசைபாடுவதையும் கூட ரசித்து மகிழும் கேவலமான குரூர புத்தியைக் கொண்டிருந்தார். குறிப்பாக, தி.மு.க. தலைவர் கருணாநிதியை, அவரது சாதியைச் சொல்லிக் கேவலப்படுத்திச் சட்டமன்றத்திலேயே வளர்மதி பேசியதை ரசித்து, ‘‘நயத்தக்க நாகரிகத்தை வெளிப்படுத்திய பண்பாளர்தான்’’ ஜெயா. வளர்மதியே பரவாயில்லை என நினைக்கும் அளவிற்கு, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தைக் குடிகாரன் எனச் சட்டமன்றத்திலேயே கேவலப்படுத்திப் பேசியவர்தான் ஜெயா.

போயசு தோட்டத்திலிருந்து சட்டமன்றத்திற்குப் போனாலும், பொதுக்கூட்டங்களுக்குச் சென்றாலும், தனக்காக மக்களின் நடமாட்டத்தை, போக்குவரத்தை நிறுத்தி வைத்து, மக்கள் அனைவரையும் கிள்ளுக்கீரையாக நடத்தினார். செல்லும் வழியெங்கும் தனக்காக வைக்கப்படும் பிரம்மாண்ட கட்−அவுட்டுகளை எண்ணிப் பார்த்து ரசித்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலின்பொழுது அவர் உரையாற்றிய பொதுக்கூட்டங்களில் மக்கள் வெயிலில் வெந்து, நாவறண்டு செத்தபொழுது, மேடையில் தன்னைச் சுற்றி ஏழெட்டு ஏர்−கூலர்களை வைத்துக்கொண்டு மக்களை ஏளனம் செய்தார்.

பொய்யும் பித்தலாட்டமும் அவரோடு ஒட்டிப் பிறந்தவை. கருணாநிதி அரசு தன்னை லாரி ஏற்றிக் கொல்ல முயற்சித்ததாக ஒரு அனுதாப சீனை உருவாக்கினார். கவர்னர் சென்னாரெட்டி தன் கையைப் பிடித்து இழுத்ததாகக் கூச்சமின்றி ஒரு அவதூறை அவிழ்த்துவிட்டார். 2016 சட்டமன்றத் தேர்தலின்போது தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றிவிட்டேன் என்றொரு அண்டப்புளுகை, மோசடியைப் பிரச்சாரமே செய்தார்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, சென்னையில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் தி.மு.க. ஆட்சியில் திட்டமிடப்பட்டுக் கட்டப்பட்டது என்பதாலும், தான் தலைமைச் செயலகம் கட்டத் திட்டமிட்டிருந்த இடத்தில் கருணாநிதி அண்ணா நூலகத்தைக் கட்டிவிட்டார் என்பதாலும், அந்த நூலகத்தைத் திருமண மண்டபமாக மாற்ற முயன்றார், ஜெயா. அவரது அந்தக் காழ்ப்புணர்ச்சி கொண்ட நோக்கத்தை சென்னை உயர்நீதி மன்றம் தடுத்தவுடன், அந்த நூலகத்தை முறையாகப் பராமரிக்காமல் படிப்படியாக அழியும் நிலைக்குத் தள்ளி வருகிறது அ.தி.மு.க. அரசு. தி.மு.க. அரசால் தொடங்கப்பட்ட செம்மொழி ஆராய்ச்சி நிறுவனத்தைக் குப்பைத் தொட்டியாகவே மாற்றிவிட்டது.

ஜெயாவின் பிறந்தநாளையொட்டி அவரது உருவத்தை ஒரு சிறுமியின் கையில், அவரது கதறலைப் பொருட்படுத்தாமல் பச்சைக் குத்தும் அராஜகக் கூத்து.
ஜெயாவின் பிறந்தநாளையொட்டி அவரது உருவத்தை ஒரு சிறுமியின் கையில், அவரது கதறலைப் பொருட்படுத்தாமல் பச்சைக் குத்தும் அராஜகக் கூத்து.

ஒரு சர்வாதிகாரிக்குரிய அதிகாரம் ஜெயாவிற்கு இருந்திருக்குமானால், யாழ்ப்பாணம் நூலகத்தைச் சிங்கள இன வெறியர்கள் எரித்துச் சாம்பலாக்கியதைப் போல, அண்ணா நூலகத்தைத் தரை மட்டமாக்கவும் தயங்கியிருக்கமாட்டார்.

பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்துக் குரல் எழுப்பப்பட்டு வரும் சூழலில், ஜெயாவோ, தனது வசதிக்காக, சென்னையில் உள்ள இராணி மேரி பெண்கள் கல்லூரியை இடித்துவிட்டு, அங்கே புதிய தலைமைச் செயலகம் அமைக்கத் திட்டமிட்டார். இதனை எதிர்த்து அக்கல்லூரி மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தத் தொடங்கினர். அப்போராட்டத்தில் முன்னணியில் நின்ற மாணவிகளின் வீடுகளைத் தேடிப் போன ஜெயா போலீசு, ‘‘போராட்டத்திலிருந்து விலகவில்லை என்றால், உங்கள் மகள் மீது விபச்சார வழக்குப் போடுவோம்’’ என மிரட்டியது. எப்பேர்பட்ட பண்பட்ட ஆட்சி!

உங்கள் நண்பர்களைச் சொல்லுங்கள், உங்களைப் பற்றிச் சொல்லுகிறோம் என்றொரு பழமொழி உண்டு. ஜெயாவிற்கும் சசிகலாவிற்கும் இடையேயான நெருக்கமான நட்பிற்கு அடித்தளம் போட்டது சினிமா வீடியோக்கள்தானேயொழிய, இலக்கிய ரசனை அல்ல. படிப்பாளி ஜெயா மறைந்துவிட்டார். வீடியோ சப்ளை செய்த வியாபாரி, தோழியாகி, போயசு தோட்டத்தின் நிர்வாகியாகி, அ.தி.மு.க.வின் தலைவியாகி, கோட்டைக்குள்ளும் நுழையக் காத்திருக்கிறார்!

–  பச்சையப்பன்
புதிய ஜனநாயகம், ஜனவரி – 2017

போலீசு வன்முறையை கண்டித்து கடலூரில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

1

போலீசு ராஜ்ஜியம்…
எழுந்து நின்ற தமிழகமே ! எதிர்த்து நில் !

ஆர்ப்பாட்டம்

நாள் : 01.02.2017
இடம் : தலைமை தபால் நிலையம், மஞ்சக்குப்பம். கடலூர்
நேரம் : மாலை 4:00 மணி

கடந்த 23-ம் தேதி ஜல்லிக்கட்டுக்காக தமிழகமெங்கும் போராடிய மாணவர்களை போலீசு கொடூரமகாத் தாக்கியது. அது மட்டுமில்லாமல் வீடுகளைக் கொளுத்துவது வாகனங்களை நொருக்குவது என வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டது.
வன்முறையில் ஈடுபட்ட காவல்துறையைக் கண்டித்து வருகின்ற 01.02.2017 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் வருக !

தலைமை :

தோழர் முராமலிங்கம், மக்கள் அதிகாரம் நகர்குழு உறுப்பினர், கடலூர்

கண்டன உரை :

  • தோழர் கு.பாலசுப்ரமணியன், மாநிலதலைவர், முற்போக்கு சிந்தனையாளர் இயக்கம், கடலூர்.
  • திரு இள. புகழேந்தி, மாநில மாணவரணி செயலாளர் (தி.மு.க), கடலூர்
  • தோழர் பால்கி, நூல் விமர்சகர், கடலூர்
  • திரு T. மதிசேகர், மாநில துணைத்தலைவர், தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரவை, கடலூர்
  • திரு திலகர், B.A.B.L., வழக்கரிஞர், கடலூர்
  • திரு பண்டரிநாதன், வட்டபொதுச்செயலார்,தனியார்பேருந்து தொழிலாளர் சங்கம், கடலூர்
  • திரு கிருஷ்ணமூர்த்தி, ஆட்டோ ஒட்டுனர் உரிமையாளர் நல சங்கம், கடலூர்
  • திரு பூங்குண்றன், மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம், பெரியப்பட்டு
  • திரு இளங்குமார், வர்ம வைத்தியம், கடலூர்
  • திரு ரவிச்சந்திரன், ராஜகுமார், மாற்றுதிறனாளிகள்நல சங்கம், கடலூர்
  • திரு ராஜேஷ், கட்டிடதொழிலாளர், கடலூர்

சிறப்புரை :

தோழர் நந்தா, மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர், குறிஞ்சிப்பாடி வட்டாரம்.

noticeதகவல் :
மக்கள் அதிகாரம்.
கடலூர் வட்டாரம். 81108 15963

நிர்மலா சீத்தாராமன் X 24-ம் புலிகேசி – வீடியோ

7

ல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பாரதிய ஜனதாவுக்கு டெல்லிக்கட்டு நடத்தினார்கள் தமிழக மக்கள். மோடி எதிர்ப்பு முழக்கம் தமிழ் மக்களின் தேசிய முழக்கமானது. ஆத்திரமுற்ற பாஜக மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை அனுப்பியது. வந்தவரோ அந்த ஆத்திரத்தை பலமடங்கு கூட்டிவிட்டார்.

Nirmala dislike
நிர்மலா சீத்தாராரமனின் பத்திரிகையாளர் சந்திப்பு வீடியோக்கள் யூ டியூப்பில் வெறுப்புக்களை அள்ளுகின்றன. இங்கே 54 பேர் விரும்புகிறார்கள் என்றால் 445 பேர் வெறுக்கிறார்கள்!

எவ்வளவுதான் பணிவாகப் பேசுவதாக நினைத்து பேசினாலும் அல்லது முயற்சி செய்தாலும் பார்ப்பனத் திமிரும், மேட்டிமைத் தனமும் தான் அவரின் பேச்சில் இயல்பாக வெளிப்படுகிறது. உடல் மொழியே மிதமிஞ்சிய அலட்சியத்துடன் மிரட்டுகிறது. அதனால் தான் அவர் பேட்டிக்கு YOUTUBE -ல் வெறுப்புக்கள் குவிந்து வருகின்றது.

“நுணலும் அதாவது தவளையும் தன் வாயாலே கெடும். பாஜக-வும் தன் கையாலே புழுதி வாரித் தூற்றிக் கொள்ளும்.”

நந்தினியை குதறிய இந்து முன்னணி மணிகண்டன் – நேரடி ரிப்போர்ட்

31

நந்தினியை குதறிய இந்து முன்னணி மணிகண்டன் – நேரடி ரிப்போர்ட் – 1

கைபேசியில் எடுக்கப்பட்ட அந்தக் காணொளித் துண்டின் காட்சிகள் நடுக்கத்தோடு விரிகின்றது. கவிழ்த்துப் போட்ட நாடாக் கட்டில் ஒன்றின் மேல் வெள்ளுடை போர்த்தப்பட்ட உடல் கிடக்கிறது. காவல் துறை அதிகாரிகள் சிலர் கலைந்து நிற்கின்றனர். ”ஐயோ சாமீய்ய்.. ஐயோ சாமீய்ய்.. ஐயோ சாமீய்ய்… கொன்னுட்டானுகளே… கொண்டுட்டுப் போன அன்னிக்கே கொன்னுட்டானுகளே” – வயதான பெண் ஒருவரின் ஓலம் அந்தக் காட்சியில் பின்னணியாக ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. கையறு நிலையில் தன்னறியாமல் ஒலிக்கும் அந்தக் குரல் நமது செவிப்பாறைகளைக் கடந்து இதயத்தைப் பிளக்கிறது.

Nandhiniயாரோ ஒருவர் வெள்ளுடை போர்த்தப்பட்ட அந்த உடலை நீல நிற தார்பாய் ஒன்றினுள் புரட்டிப் போடுகிறார். தலை குப்புற கிடத்தப்பட்டிருக்கும் அந்த உடல் சில நொடிகள் கண்களில் விழுகின்றது. முழு நிர்வாணமான அந்த உடலின் மேல் முதுகு கருத்துப் போய் அதன் மீது வெள்ளைப் புழுக்கள் நெளிந்து கொண்டிருக்கின்றன. இடது கீழ் முதுகில் காயம் பட்ட அடையாளம் தெரிகின்றது. உடலைப் புரட்டிப் போடுகிறார் அந்த மனிதர். கருநீலத் துணி ஒன்றால் அந்தப் பெண்ணின் வாய் கட்டப்பட்டுள்ளது. சற்றே மேடிட்ட வயிறு.. அவளது பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டுள்ளது.

ஐயோ ஐயோவென்ற ஓலம் அதிகரிக்க, சட்டென்று அந்த உடல் நீலத் தார்பாயால் மூடப்பட்டு அருகில் நின்று கொண்டிருந்த வெள்ளை ஆம்புலஸ் வேனுக்குள் திணிக்கப்படுகிறது. உணர்ச்சியற்ற முகங்களோடு நின்று கொண்டிருந்த போலீசு அதிகாரிகளிடம் ஒருவர் வாதிட்டுக் கொண்டிருக்கிறார்..

”சார்.. இதே ஒரு எஸ்.சி பையன் வன்னியர் பிள்ளைய அழைச்சிட்டுப் போயிருந்தா நடவடிக்கை எடுக்காம இருந்திருப்பீங்களா?” அந்தக் குரலில் வெளிப்பட்ட ஆற்றாமையின் உள்ளேயும் அவருக்கு முகம் கொடுத்து நின்று கொண்டிருந்த காவலதிகாரியின் கள்ள மௌனத்தின் உள்ளேயும் ஏராளமான அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன. பதினேழே வயதான ஒரு சிறுமியின் கனவுகளும் அவளது பெற்றோரின் நிறைவேறாத ஆசைகளும் ஏமாற்றங்களும் மட்டுமின்றி ஆதிக்க சாதித் திமிரும் இந்து பயங்கரவாத வெறியின் ஆணவமும் அந்தக் காணொளித் துண்டின் ஒவ்வொரு காட்சியிலும் உறைந்து கிடக்கின்றன.

அவள் நந்தினி.

நந்தினியின் குடும்பத்தார் அவளை “பாப்பா” என்றே அழைக்கின்றனர். பதினேழு வயதான அவள், தந்தையில்லாத அந்தக் குடும்பத்தின் கடைக்குட்டி. நந்தினிக்கு ஒரு சகோதரனும் சகோதரியும் உண்டு. மூத்த சகோதரிக்குத் திருமணமாகி விட்டது. அந்தப் பிள்ளைகளில் எவருமே மேல்நிலைக் கல்வியைக் கூட எட்டாதவர்கள்; பிள்ளைகள் தோளுக்கு வளர்ந்ததும் கூலி வேலை செய்தால் தான் சாப்பாடு எனும் அளவுக்கு வறுமை. தாய் ராசக்கிளியும் கூலி வேலைக்குத் தான் செல்கிறார்.

“இந்திரா ஆவாஸ் யோஜனா” என்கிற அரசின் வீட்டு வசதித் திட்டம் ஒன்றின் மூலம் கட்டி முடிக்கப்பட்ட அவர்கள் வீட்டில் தரைத்தளம் இல்லை; சாணியால் மொழுகப்பட்ட மண் தரை. புழங்குவதற்காக தற்காலிக தடுப்பு வைத்து இரண்டாக பிரிக்கப்பட்ட ஒரே நீண்ட கூடம் கொண்ட அந்த வீட்டில், தாயின் பராமரிப்பில் வளர்ந்துள்ளார் நந்தினி. எட்டாம் வகுப்புடன் நந்தினியின் படிப்பை நிறுத்தி விட்ட அவளது தாயார், கிடைக்கும் சிறு சிறு கூலி வேலைகளுக்கு அவளுக்கு ஒத்த வயதுடைய தோழி தேவியுடன் அனுப்பி வைத்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட நந்தினின் தாய் இராசக்கிளி
கொலை செய்யப்பட்ட நந்தினின் தாய் இராசக்கிளி

கடந்த 29-ம் தேதி தேவியுடன் வீட்டை விட்டுச் சென்ற நந்தினி 14-ம் தேதி பிணமாகத் தான் கிடைத்துள்ளார். இது வெறும் மரணமல்ல; திட்டமிட்ட பச்சைப் படுகொலை. நந்தினி ஏன் கொல்லப்பட்டாள்? யாரால் கொல்லப்பட்டாள்? எப்படிக் கொல்லப்பட்டாள்? எதற்காக கொல்லப்பட்டாள்?

சிதைக்கப்பட்ட அந்தச் சிறுமியின் உடல் புதையுண்டு போனாலும், இந்தக் கேள்விகள் முக்கியமானவை. ஏனெனில், மீண்டும் ஒரு நந்தினி கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டுமென்றால் நமக்கு இந்தக் கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டும்.

29-ம் தேதி இரவு நந்தினி வீடு திரும்பவில்லை; ஆனால், அன்று இரவு 8:30 மணிக்கு ராசக்கிளியின் அக்காள் மகள் வெண்ணிலாவுக்கு _____ என்கிற தொலை பேசி எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வருகிறது. நந்தினி தான் பேசியிருக்கிறார். தான் செந்துறை அருகில் உள்ள வெல்லூரைச் சேர்ந்த தமிழரசன் என்பவரைக் காதலிப்பதாகவும், அவரைத் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும், தனது தாயார் ராசக்கிளியை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள் எனவும் தெரிவித்து விட்டு உடனே அந்த அழைப்பைத் துண்டித்துள்ளார் நந்தினி. வெண்ணிலா இந்த விசயத்தை உடனடியாக தனது சித்தி ராசக்கிளியிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் மீண்டும் அந்த எண்ணுக்கு அழைத்துள்ளனர்; ஆனால் அந்தக் கைபேசி அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

உடனே ராசக்கிளியும், உறவினர்களும் நந்தினியின் தோழி தேவியிடம் விசாரித்துள்ளனர். தனக்கு ஏதும் தெரியாது என தேவி மறுத்து விடவே, உடனே இரும்புலிகுறிச்சி காவல் நிலையத்துக்கு ஓடியுள்ளனர். தங்கள் மகள் கடத்தப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். காவல் நிலையத்திலிருந்த அதிகாரிகள் எதுவாக இருந்தாலும் நாளை காலை வந்து பார்த்துக் கொள்ளும்படி மிரட்டி விரட்டியடித்துள்ளனர்.

பார்க்க:
♦ நந்தினியைக் கொன்ற இந்து முன்னணி – ஆவணப்படம்

மறுநாள் மீண்டும் புகாரளிப்பதற்குச் சென்ற போது, காவல் நிலையத்திலிருந்த அதிகாரி மணிவண்ணன் என்பவர், “உன் பிள்ளை எவனோடோவோ ஓடிப் போயிருச்சி… இதையெல்லாம் கடத்தல் புகாரா வாங்க முடியாது. கேர்ள் மிஸ்ஸிங் என்று எழுதிக் கொடுங்க” என்று எழுதி வாங்கியுள்ளார். பொதுவாக பதினெட்டு வயதுக்கு மேலான பெண்கள் வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறி அது புகாரானால் மட்டுமே ”கேர்ள் மிஸ்ஸிங்” என புகாரைப் பதிவு செய்வது வழக்கம் – பதினெட்டு வயதுக்கு உட்பட்ட பெண்ணை ஒருவர் பெற்றோரின் சம்மதமின்றி அழைத்துச் சென்றால் “கடத்தல்” என்றே புகார் பதியப்பட்டிருக்க வேண்டும்.

Nandini (20)
தாய் ராசாக்கிளியின் புகார் மனு

இதற்கிடையே 30-ம் தேதி தங்கள் உறவினர் ஒருவரை வெல்லூருக்கு அனுப்பி விசாரித்ததில், அந்த ஊரில் இருக்கும் ஒரே தமிழரசனும் மனநிலை சரியில்லாதவர் எனத் தெரிய வருகின்றது. ஆக, நந்தினியைக் கடத்திச் சென்றவர்கள் அவளது வீட்டாரைக் குழப்ப வேண்டுமென்பதற்காக தவறான தகவலை நந்தினியை விட்டே சொல்ல வைத்துள்ளனர் என்பது தெரிய வருகின்றது. உடனே நந்தினியின் குடும்பத்தார் தேவியிடம் விசாரிக்கின்றனர்; அவர் மீண்டும் மறுக்கவே ஊர் பஞ்சாயத்தை கூட்டி விசாரிக்கின்றனர்.

விவகாரம் பெரிதாவதைக் கண்டு பயந்த தேவி உண்மையை பஞ்சாயத்தில் தெரிவித்து விடுகிறார். இந்து முன்னணியின் செந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் கடந்த ஆறேழு மாதங்களாக நந்தினியை காதலித்ததாகவும், அவனே நந்தினியை அழைத்துச் சென்றதாகவும் தேவி தெரிவித்துள்ளார். மணிகண்டன் வன்னியர் என்பது தெரிந்தவுடன் நந்தினியின் உறவினர்கள் பதறியுள்ளனர். மணிகண்டன் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர் என்பதோடு, மணிகண்டன் கொலை செய்யவும் அஞ்சாதவன் என்பதையும் அப்படிச் செய்தாலும் அவனை தண்டனையிலிருந்து தப்புவிக்க இந்து முன்னணி என்கிற பயங்கரவாத அமைப்பு அவனுக்குப் பின் உள்ளது என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.

இதற்கிடையே அரியலூர் மாவட்ட காவல் துறை உயரதிகாரிகளை அணுகும் இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராஜசேகர், தனது பெயருக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சி நடப்பதாகவும், மணிகண்டன் தங்களது அமைப்பில் இருந்து டிசம்பர் 29 தேதியன்றே விலகி விட்டாரென்றும் மனு ஒன்றை அளித்துள்ளார். “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்கிற ரீதியிலான மேற்படி மனுவை கர்ம சிரத்தையுடன் பெற்றுக் கொண்ட காவல்துறை, இன்று வரை ராஜசேகரை விசாரிக்க மறுத்து வருகின்றது.

நந்தினியின் உறவினர்கள் சிலர் காவல் துறையில் கீழ்நிலை பொறுப்புகளில் உள்ளனர். இவர்களுக்கு இந்து முன்னணியின் பயங்கரவாத முகம் நன்கு தெரியும் என்பதால் நந்தினியின் குடும்பத்தை எச்சரிக்கை செய்து உடனே மீண்டும் இரும்புலி காவல் நிலையத்தை அணுகுமாறு ஆலோசனை கொடுத்துள்ளனர். 30-ம் தேதியே மீண்டும் காவல் நிலையத்துக்கு ஓடிச் சென்ற இவர்களை அதிகாரிகளின் அலட்சியமும் திமிரும் வரவேற்றுள்ளது. சிறீரங்கத்துக்கு பந்தோபஸ்து பணிக்காக காவலர்கள் செல்ல வேண்டியுள்ளதைச் சொல்லி இந்தக் குடும்பத்தை மீண்டும் விரட்டியடித்துள்ளனர்.

Nandini (12)
மாவட்ட காவல் கண்கானிபாளரிடம் நடவடிக்கை எடுக்கக்கோரி கொடுக்கப்பட்ட புகார் மனு

அடுத்த ஓரிரு நாட்கள் ஏற்கனவே கணவனை இழந்திருந்த ராசக்கிளி உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காத்திருந்துள்ளார். காதல் விவகாரத்தில் மகள் வெளியேறியிருப்பதால், எப்படியும் திரும்பி வந்து விடுவாள்; எங்கிருந்தாலும் நன்றாக இருப்பாள் என்கிற மெல்லிய நம்பிக்கை அந்தத் தாயின் மனதில் இருந்துள்ளது. எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில் மீண்டும் ஜனவரி 3-ம் தேதி காவல் நிலையத்தை அணுகியுள்ளார். இம்முறை தேவியையும், மணிகண்டனையும் அழைத்து விசாரித்துள்ளனர்.

காவல் நிலையத்தில் வைத்து மணிகண்டன் தான் நந்தினியை அழைத்துச் சென்றதாகத் தெரிவித்துள்ளார் தேவி. மேலும் ஆறு மாதங்களுக்கு முன் மணிகண்டன் நந்தினிக்கு தொடர்ந்து ‘லவ் டார்ச்சர்’ கொடுத்ததாகவும், நண்பர்களோடு எந்நேரமும் அவளைப் பின்தொடர்ந்ததாகவும் தெரிவித்த தேவி ஒரு கட்டத்தில் மணிகண்டன் ஏதேதோ ஆசை வார்த்தைகளைச் சொல்லி நந்தினியை தன் வலையில் வீழ்த்தியதாகவும் இதன் காரணமாக நந்தினி கருவுற்றதாகவும், அந்தக் கரு ஐந்து மாதத்திற்கும் மேல் வளர்ந்து விட்ட நிலையில் தன்னைத் திருமணம் செய்து கொள்ள நந்தினி மணிகண்டனைக் கேட்ட நிலையிலேயே அவன் நந்தினியை அழைத்துச் சென்றதாகவும் தேவி காவல் நிலையத்தில் விரிவாக சாட்சியளித்துள்ளார்.

இவ்வளவு விரிவான சாட்சிக்குப் பிறகும், மணிகண்டனிடம் பெயருக்கு விசாரித்து விட்டு ஜாமீனில் அனுப்பியுள்ளனர் இரும்புலி போலீசார். அந்த விசாரணைகளில் முன்னுக்குப் பின் முரணாக மணிகண்டன் உளறியதோடு தனக்கு ஏதும் தெரியாது என்றும் மறுத்துள்ளான். இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த உடனேயே தலைமறைவாகிறான் மணிகண்டன்; அவனுக்கு ஜாமீன் கையெழுத்து போட்டு அழைத்து வந்த கிருஷ்ணமூர்த்தி என்பவன் பயந்து போய் மருந்தைக் குடித்து விடவே போலீசாருக்குத் தலைவலி துவங்குகிறது.

மணிகண்டனின் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் ஒவ்வொருவராக அழைத்து விசாரிக்கத் துவங்குகிறார்கள், இரும்புலிகுறிச்சி போலீசார். எனினும், தங்களது நடவடிக்கைகளில் மெத்தனத்தையும் அலட்சியத்தையும் போலீசார் தொடர்ந்து காட்டி வந்துள்ளனர். இதற்கிடையே நந்தினி கடத்தப்பட்ட வழக்கும் இதில் இந்து முன்னணிக்கு இருக்கும் தொடர்பும் போலீசாரின் அலட்சியமும் பொன்பரப்பி மற்றும் செந்துறை பகுதிகளில் இந்து முன்னணியின் அராஜகங்களைத் தொடர்ந்து தட்டிக்கேட்டு வந்த தோழர்கள் சிலரின் கவனத்துக்கு வருகின்றது.

Nandini (19)
மணிகண்டனை கைது செய்யக் கோரி ஒட்டப்பட்ட் BSP – சுவரொட்டி

பகுஜன் சமாஜ், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற தலித் அமைப்புகள் இந்த விவகாரத்தைக் கையிலெடுத்து சுவரொட்டி பிரச்சாரமும், ஆர்பாட்டங்களையும் செய்யத் துவங்கவே காவல் துறைக்கு நெருக்கடி அதிகரிக்கிறது. இதற்கிடையே 8-ம் தேதி மாவட்ட எஸ்.பியிடம் மணிகண்டன் மற்றும் அவனது கிரிமினல் நடவடிக்கைகளை வழிகாட்டி இயக்கும் இந்து முன்னணி மாவட்டத் தலைவர் ராஜசேகரின் பெயர்களைக் குறிப்பிட்டு புகார் அனுப்பப்படுகின்றது.

வெளியே விவகாரம் முற்றி வருவதை உணர்ந்து திசை திருப்பும் சதித்திட்டத்துடன் 12-ம் தேதி மருந்தைக் குடிக்கும் மணிகண்டனை உறவினர்கள் மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். 13-ம் தேதி இந்து முன்னணியைச் சேர்ந்தவர்களும் மணிகண்டனின் கூட்டாளிகளுமான மணிவண்ணன், திருமுருகன் மற்றும் ராஜதுரை ஆகியோரைத் தூக்கி வந்து விசாரிக்கும் காவல்துறை, 14-ம் தேதி நந்தினியின் பிணத்தை மணிகண்டனின் கிராமமான கீழமாளிகையில் அவனது உறவினர் ஒருவருக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள கிணற்றில் இருந்து கைப்பற்றுகிறது.

29-ம் தேதி நந்தினியை நண்பர்கள் துணையுடன் கடத்திய மணிகண்டன் தடயத்தையும் எடுத்துச் சென்றிருக்கிறான். அவனது செல்போன் அடுத்த ஓரிரு நாட்களில் கீழமாளிகையில் இருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள பென்னாடம் டவரின் எல்லையில் பதிவானதாக (Tower login) காவல்துறை அதிகாரி ஒருவர் தனிப்பட்ட முறையில் பகுஜன் சமாஜ் கட்சிப் பிரமுகரிடம் தெரிவித்துள்ளார்.

நந்தினியைக் கடத்திய மணிகண்டன் அவளைத் தனது சகாக்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு கருவைக் கலைக்க முயற்சித்துள்ளான். இதற்காக சில மருத்துவமனைகளுக்கு அவளை அழைத்துச் சென்றுள்ளான். ஆறு மாதக் கருவைக் கலைக்க முடியாது என்பது தெரிய வந்தவுடன், அவளைக் கொல்லும் முடிவை எடுத்துள்ளான். கடத்தப்பட்டதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து நந்தினியின் வாயைத் துணியால் கட்டி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்துள்ளான். ஒருவேளை காவல்துறையினர் புகார் கிடைத்ததும் 29-ம் தேதி இரவே தங்கள் நடவடிக்கையைத் துவங்கியிருந்தால் அந்தப் பெண் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.

மயங்கிய நிலையில் கிடந்த நந்தினியின் உடலைச் சிதைத்த மணிகண்டனும் அவனது கூட்டாளிகளும் பிளேடால் அவளது பெண்ணுறுப்பைக் கிழித்துள்ளனர்; பின்னர், பெண்ணுறுப்பின் வழியே கையை விட்டு உள்ளேயிருந்து சிசுவை எடுத்து எரிக்க முயற்சித்துள்ளனர். மணிகண்டனும் அவனது கூட்டாளிகளும் நந்தினியின் வயிற்றிலிருந்த சிசுவைத் துணியில் சுற்றி எரித்து விட்டதாகவே பகுதி மக்கள் பேசிக் கொள்கின்றனர்.

கொடுக்கூர் கிராமத்திற்கு அருகில் உள்ள கல்லுக்குழியில் வைத்து இந்த பயங்கரத்தை அரங்கேற்றிய அவர்கள், அவளது துணியை அங்கேயே எரித்து விட்டு நிர்வாண உடலை மறைக்க இடம் தேடி ஒரு வெள்ளை எஸ்.யூ.வி மாடல் ஜீப்பில் போட்டுக் கொண்டு அலைந்துள்ளனர். பின்னர் கொடுக்கூரிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கீழமாளிகையே பிணத்தை மறைப்பதற்கு தோதான இடம் என முடிவெடுத்துள்ளனர்.

Nandini (3)
கொலை செய்யப்பட்ட நந்தினி வீசப்பட்டிருந்த கிணறு

கிணற்றில் வீசினால் அதன் நாற்றம் அக்கம் பக்கத்திலிருப்பவர்களுக்கு சந்தேகம் ஏற்படுத்தும் என நினைத்து பக்கத்திலேயே ஒரு நாயை அடித்துப் போட்டு விடலாம் என முடிவெடுத்துள்ளனர். செத்த நாயின் நாற்றம் பிண வாடையை அமுக்கி விடும் எனத் திட்டமிட்டுள்ளனர். மணிகண்டனும் கூட்டாளிகளும் வெள்ளை ஜீப் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் இரவு நேரத்தில் நாயைத் தேடி அலைந்ததை கீழமாளிகை கிணற்றுக்குப் பக்கத்திலிருந்த வயதான பெண் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார். நாய் கிடைக்காமல் போகவே நந்தினியின் பிணத்துடன் கல்லைக் கட்டி எரிந்து விட்டுப் போயிருக்கிறார்கள்.

ஒரு தேர்ந்த தொழில்முறை கொலைவெறிக் கும்பலின் தொழில் நேர்த்தியுடன் நந்தினி கொல்லப்பட்டிருக்கிறாள். மனதில் எந்தக் கிலேசமோ நடுக்கமோ இன்றி அவளைக் கொன்றுள்ளனர் இந்து முன்னணியைச் சேர்ந்த பயங்கரவாதிகள். காமவெறியேறிய சொறிநாய் கூட கர்ப்பம் தரித்த பெண் நாயை உறவுக்கு நாடாது… ஆனால் இந்த மிருகங்களோ ஒரு கர்ப்பினிப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்து கேட்பவர் நெஞ்சம் பதறும் வகையில் கொன்று போட்டுள்ளனர்.

நினைத்தாலே குலை நடுங்கும் இந்தக் காரியங்களைச் செய்ய இவர்களுக்கு எப்படித் துணிவு வந்தது? இவர்களின் குற்றப் பின்னணி என்ன? இவர்களின் பின்னே யார் யாரெல்லாம் இருக்கிறார்கள்? இந்து மாபியா கும்பலான இவர்களின் உள்ளூர் மற்றும் வெளியூர் தலைவர்கள் யார்? நந்தினியின் கொலையில் மூளையாகச் செயல்பட்ட இந்து முன்னணியின் முக்கிய பிரமுகர் யார்? அவன் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை? அரியலூர் போலீசார் இவர்களின் குற்றங்களுக்கு உடன்பட்டுப் போவது ஏன்?

மிக முக்கியமாக… இந்து முன்னணிக் காமவெறிக் கொலையாளிகளுக்கு இது புதிதல்ல என்பதும் எமது விசாரணையில் தெரியவந்துள்ளது.

( தொடரும்… )

– வினவு செய்தியாளர்கள்

இரண்டாம் பாகம் :
♣ நந்தினியைக் கொன்ற இந்துமுன்னணியின் பின்னணி – நேரடி ரிப்போர்ட் 2 ( நிறைவுப் பாகம் )
♣ நந்தினியைக் கொன்ற இந்து முன்னணி – ஆவணப்படம்

ஆர்.எஸ்.எஸ் – அந்தப்புரம் : கேலிச்சித்திரங்கள்

5

ஜெய்ஹிந்த் கோஷம் போடுங்கள் !

3கூட்டத்துல பின்லேடன் படத்தை எடுத்துட்டுப் போங்க.
எல்லோர் கையிலும் தேசியக் கொடியை குடுங்க.
ABVP பசங்களை இறக்கிவிட்டு பொண்ணுங்களை சீண்டுங்க.
ஜெய்ஹிந்த் கோஷம் போடுங்க. மொத்தத்துல…
கூட்டத்துல தீவிரவாதிங்க நுழைஞ்சிட்டாங்கங்கிற கருத்தை உருவாக்கிடனும்.

_______________

மெரினா கூட்டத்தில் சமூகவிரோதிகள் நுழைந்துவிட்டனர் ! – மிக்ஸர் பன்னீர்

1-1

மெரினா கூட்டத்தில் சமூகவிரோதிகள் பின்லேடன் படத்துடன் நுழைந்ததற்கான ஆதாரம் இருக்கிறது.

எல்லாம் சரி பன்னீரு…
ஆனா பின்லேடன் படம் ஒட்டியிருந்த பைக்கு
“இந்து முன்னணிக்காரனோடதுங்கிறதை” மட்டும் மறைச்சிட்டீங்களே…?

_______________

மேகாலயா ராஜ்பவன் RSS-இன் அந்தப்புரம் !

02

ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை. 95518 69588

இணையுங்கள்:

கலவரம் செய்த போலீசை கைது செய் ! திருச்சி – சென்னையில் ஆர்ப்பாட்டம்

1

மாணவர்கள் பொதுமக்கள் மீது கொலைவெறி தாக்குதல் !
தீ வைப்பு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட காவல் துறையினரைக் கைது செய் !
பணிநீக்கம் செய் !

கண்டன ஆர்ப்பாட்டம்

10  x 3  PRPC  Print

நாள் : 30.01.2017
இடம் : விக்னேஷ் ஓட்டல் அருகில்,மத்திய பேருந்து நிலையம், திருச்சி.
நேரம் : திங்கள் மாலை 5.00 மணி.
            

தலைமை :
வழக்கறிஞர் ப.முருகானந்தம்
, B.A.,B.L.,
மாவட்ட செயலாளர் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், திருச்சி

கண்டன உரை :

  • வழக்கறிஞர். சீனிவாசன், B.COM.,B.L.,  தலைவர்
    திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்கம்
  • வழக்கறிஞர் ராஜேந்திரகுமார்,
    தலைவர், குற்றவியல் வழக்கறிஞர் சங்கம், திருச்சிராப்பள்ளி
  • வழக்கறிஞர் மருதநாயகம் ,  மூத்த வழக்கறிஞர் திருச்சி
  • வழக்கறிஞர் இரா ஆதிநாரயணமூர்த்தி.B.COM.,BL,
    (செயற்குழு உறுப்பினர்), மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் திருச்சி
  • சே.வாஞ்சிநாதன் BSC.,B.L., (வழக்கறிஞர் பணிநீக்கம்)
    மாநில ஒருங்கிணைப்பாளர் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு
  • வழக்கறிஞர் சு.  ஜோதி, B.A., B.L.,  திருச்சி.
  • காவேரிநாடன், தலைவர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், திருச்சி
  • நன்றியுறை : வழக்கறிஞர். மா.சிவசங்கர், M.A.,B.L.,
    செயற்குழு உறுப்பினர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், திருச்சி

PRPC

அன்பார்ந்த பொதுமக்களே ! வழக்கறிஞர்களே ! மாணவர்களே !

கடந்த வாரம் நடைபெற்ற மாணவர் போராட்டம் வரலாற்றில் இடம்பிடித்துள்ள ஒன்று. இப்போராட்டத்தை இந்தியாவே ஏன் உலகமே முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என்று அரசியல்வாதிகள், ஊடகத்துறையினர், அறிவுஜீவிகள், என அனைவராலும் பேசப்பட்டதை நாம் மறந்திருக்க முடியாது. அப்படிப்பட்ட போராட்டம் வன்முறை வெறியாட்டமாக மாற யார் காரணம்.? கலவரத்தை நடத்தியவர்கள் யார்?

கடந்த 16.01.2016 தொடங்கிய இந்த போராட்டத்தில் எந்த அரசியல் கட்சிகளோ அமைப்புகளோ தன்னுடைய அடையாளத்தோடு பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்களும் இந்த போராட்டத்தை ஆதரித்து பங்கேற்றுள்ளனர். இது எதுவும் யாருக்கும் தெரியாத ரகசியம் அல்ல. தொடங்கிய நாளிலிருந்தே ஜல்லிக்கட்டுக்காக மட்டுமல்லாமல் தமிழர்களின் உரிமையான காவிரி , நீட் தேர்வு , சமஸ்கிருத திணிப்பு,ம் மீனவர் பிரச்சினை போன்றவற்றையும் உள்ளடக்கியே அனைவரும் பேசினர். ஆரம்பம் முதலே காவல்துறை , போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பது போன்ற  தோற்றத்தினை மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் ஏற்படுத்தி தனது கட்டுப்பாட்டில் வைத்து கண்காணித்து வந்தது..

தொடங்கியதிலிருந்து ஆறு நாட்களாக காவல் துறையுடன் சிறு முரண்பாடுகூட ஏற்படாததுடன் காவல்துறைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களே செய்து கொடுத்திருந்தனர். இந்த நிலையில் ஏழாவது நாள்  அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் போராடிக் கொண்டிருந்தவர்களை சுற்றிவளைத்து அவர்களை களைக்க முயன்றதேன் ? ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் பற்றி வழக்கறிஞர்களிடம் கலந்தாலோசித்து கலைந்து செல்வதாகவும் அதற்கு இரண்டு மணிநேரம் மட்டும் அவகாசம் கேட்டதை கூட அனுமதிக்காமல்  அவசரகதியில் அடித்து துரத்தும் வேலையில் காவல்துறை  அராஜகமாக ஈடுபட்டதேன். என்ற கேள்விகளை அனைவரும் எழுப்புகின்றனர் ஆனால், அரசும் காவல் துறையும் தங்கள் ஜனநாயக விரோத, சட்டவிரோத செயலை நியாயப்படுத்துவதற்காக மாணவர்களையும் அவர்களை ஆதரித்து வந்த ஜனநாயக சக்திகளையும் வன்முறையாளர்களாக சித்தரிக்க முயன்றுள்ளது. இதற்காக தானே திட்டமிட்டு குடிசைகளுக்கு தீ வைத்தல், வாகனங்களை கொளுத்துதல், பொதுச் சொத்துகளை சேதப் படுத்துவது போன்ற சதிச்செயல்களில் ஈடுபட்டுள்து. குடியிறுப்பு பகுதிகளுக்குள் புகுந்து பொது மக்களைத் தாக்கி கைது செய்து பீதியூட்டி வருகிறது. இவையனைத்தும் சமுக ஊடகங்கள் வழியே பல்வேறு ஊடகங்களில் அம்பலமாகி  மக்கள் அதிர்ந்து நிற்கிறார்கள். இந்த வன்முறையை சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ், கோவை மாநகர காவல் ஆணையர் அமுல்ராஜ், மதுரை காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ், காவல் நுண்ணறிவுத்துறை இயக்குனர் ராஜேந்திரன் உள்ளிட்டோர்களை கொண்டு காவல்துறையும் அரசும்  நிறைவேற்றி இருக்கிறது.

முல்லை பெரியாறு, கூடங்குளம், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மீதான  பிப்ரவரி 19 தாக்குதல் போன்ற அனைத்திலுமே போராடியவர்கள் மீது வன்முறையாளர்கள், தீவிரவாதிகள் என்ற சாயத்தை ஊற்றி தனது கோர முகத்தை மறைப்பதில் கைதேர்ந்தது இந்த காவல்துறை.

அரசின் மக்கள் விரோத கொள்கைகளால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையையும் அரசியல், பண்பாட்டு உரிமைகளையும் இழந்து நிற்கும் மக்கள் குமுறிக்கொண்டிருக்கிறார்கள். விவசாயம் அழிந்த விவசாயிகள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். ஜல்லிக்கட்டுக்காக தொடங்கிய போராட்ட எழச்சி அத்தகைய பல பிரச்சினைகளுக்கானதாகவும் மாறிவிடக்கூடாது என்ற அரசின் அச்சத்தின் விளைவாகவே போராட்டத்தை அவசர அவசரமாக முடிக்க முயற்சித்தது. அதற்காக ஜனநாயக விரோத, சட்ட விரோத வழிமுறைகளைக் கையாள முயற்சித்துள்ளது.

அரசியலைப்பு சட்டம் ஷரத்து 14,  சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது. அந்த வகையில் இந்த கலவரத்தை ஏற்படுத்திய காவல் துறையினர் அனைவரும்  தண்டிக்க பட வேண்டியவர்களே!  தீ வைத்து தனிநபர் சொத்துக்களை சொத்தழிப்பு செய்தது, பொதுசொத்துகளை சேதப்படுத்தியது, கொடுங்காயம் ஏற்படுத்தியது, கொலைமுயற்சி மற்றும் கருவில் இருந்த சிசுவை எட்டி உதைத்து அதை கொலை செய்தது, பெண்களை மாணபங்கபடுத்தியது , உள்ளிட்ட இந்திய தண்டணை சட்ட பிரிவுகளின்படி தண்டிக்கப்பட வேண்டியவர்களே! அவர்கள் அரசியலைப்பிற்கும் சட்டத்திற்கும் அப்பாற்பட்டவர்களல்ல. அந்த வகையில் கலவரத்தில் ஈடுபட்ட காவல் துறையினர் அனைவரும் கைது செய்யப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட வேண்டியவர்களே!

நீதித்துறையே !

  • காவல் துறையால் தாக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை என்பது மட்டுமே நீதியாகாது.
  • காவல் துறை குற்றச்செயல்களில் ஈடுபட்டு கையும் களவுமாக பிடிபட்ட நிலையில் நீதித்துறை முனைவு (JUDICIAL ACTIVISM) கொண்டு வழக்குபதிவு செய் ! கைது செய்து விசாரணை செய்ய உத்திரவிடு! பணிநீக்கம் செய் !

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
திருச்சி. 94875 15406

_________________

PP Logo

போலீசு ராஜ்ஜியம் எழுந்துநின்ற தமிழகமே ! எதிர்த்து நில்!

ஆர்ப்பாட்டம்


நாள் : 30.
01. 2017
நேரம் : மாலை 4 மணி
இடம் : குமணன் சாவடி (பூந்தமல்லி அருகில்), சென்னை.

  • பொது மக்களுக்கு அச்சுறுத்தல் போலீசுதான், போராடுபவர்கள் அல்ல !
  • அமைதிப் போராட்டத்தை கலவரமாக்கிய போலீசு அதிகாரிகளை டிஸ்மிஸ் செய் ! கைது செய் !

தலைமை : தோழர். வெற்றிவேல செழியன்,
சென்னை மண்டலஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

உரைவீச்சு :

  • தோழர் இளஞ்சேகுவேரா, தலைமை நிலையச்செயலர், விசிக
  • தோழர் கே.சுகுமார் வழக்கறிஞர், மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ
  • தோழர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், மாநில மாணவரணிச் செயலர்,திக
  • தோழர் சேகர், மாநிலக்குழு உறுப்பினர்,சென்னை மாவட்டச் செயலர், சிபிஐ  – எம்.எல்
  • தோழர் அஜிதா, இணைச்செயலர், சென்னைக்கிளை,பெண்கள் விடுதலை முன்னணி
  • தோழர் கார்த்திக்கேயன், மக்கள் கலை இலக்கியக் கழகம்
  • தோழர் ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர்,மக்கள் அதிகாரம்

 தகவல் :
தோழர்.வெற்றிவேல் செழியன்
சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்.91768 01656.

மெரினா : போலீசு வன்முறையின் நோக்கம் என்ன ?

5

ஜல்லிக்கட்டிற்காக போராடிய மாணவர் – இளைஞர்கள் – மக்கள் மீது தமிழகம் முழுவதும் போலீசு கட்டவிழ்த்துவிட்டுள்ள அடக்குமுறை குறித்து மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு பேசுகிறார். இந்த அடக்குமுறை ஏன் ஏவிவிடப்பட்டது? இதை எப்படி நியாயப்படுத்துகிறார்கள்? இந்த போராட்டம் தமிழகத்தின் வாழ்வாதாரமான மற்ற பிரச்சினைகளோடு இணைந்து விடக்கூடாது என்று அரசு காட்டிய அவசரமான ஒடுக்குமுறையே இந்த அடக்குமுறை. ரவுடிகள் போல வன்முறை ஆட்டம் போட்ட போலீசார் தண்டிக்கப்படவேண்டும். தமிழக மக்கள் தமது போராட்டத்தை தொடர வேண்டும் என்கிறார் தோழர் ராஜு.

போலீசின் கொலைவெறி : திருச்சி, மதுரை, புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் !

0

போலீசின் கொலைவெறி : மதுரை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் !

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அமைதியாகப் போராடிய மாணவர்கள்-மக்கள் மீது திட்டமிட்டு வன்முறையை கட்டவிழ்த்து விட்டு தமிழகத்தில் அரசியல் சட்ட சீர்குலைவை ஏற்படுத்திய, சமூக விரோத காவல்துறை மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  நேற்று (27.01.2017) காலை 11.30-க்கு மதுரை வழக்கறிஞர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்தில் வழக்கறிஞர்கள் கனகவேல், வில்லவன்கோதை, பொற்கொடி, நாகை.திருவள்ளுவன், நீதிபதிகளின் ஊழலை எதிர்த்து போராடியதால் வாழ்நாள்தடை விதிக்கப்பட்ட வாஞ்சிநாதன் உள்ளிட்ட பலர் பேசினர். முன்னாள் செயலர் திரு.ஏ.கே. இராமசாமி கலந்து கொண்டார். குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு, பலருக்கு தகவல் சொல்ல முடியாத சூழலிலும் நிறைய வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

பேசிய அனைவரும் “அமைதியாகப் போராடிய மாணவர்கள்-மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது காவல்துறைதான் என்றும், போலீசே தீவைப்பது, பஸ்சை, இருசக்கர வாகனங்களை உடைப்பது ஆகிய வீடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளன” எனக் குறிப்பிட்டனர். அலங்காநல்லூர், மதுரை செல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து காவல்துறை சட்டவிரோதமாக போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை தாக்குவதை, மிரட்டி பொய்வழக்குப் போடுவதை அம்பலப்படுத்தினர். குறிப்பாக அலங்காநல்லூர் ஆய்வாளர் அன்னராஜ், செல்லூர் ஆய்வாளர் ராஜேந்திரன், தல்லாகுளம் ஆய்வாளர் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பலரையும் காவல்நிலையத்தில் பிடித்துவைத்து கொடூரமாகத் தாக்குவதையே வழக்கமாகக் கொண்டுள்ளதைக் கண்டித்தனர். மாணவர்கள்-இளைஞர்கள்-பொதுமக்கள் அஞ்ச வேண்டாம் என்றும், வழக்கறிஞர்கள் நாங்கள் இருக்கிறோம் எனவும், இலவச சட்ட உதவி செய்வோம்-அதற்கான குழுவை அமைத்துள்ளோம், குற்றம் புரிந்த காவல்துறை அதிகாரிகளை நிச்சயம் நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிப்போம்” என்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மேலும் குறிப்பாக இத்தாக்குதலை ஒருங்கிணைந்த முறையில் திட்டமிட்டு நடத்திய தமிழ்நாடு டி.ஜி.பி. இராஜேந்திரன், சென்னை கமிஷ்னர் ஜார்ஜ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தீவிரவாதிகள், தேசவிரோத சக்திகள் எனப் பீதியூட்டும் வேலையை உளவுத்துறை மேற்கொள்கிறது. இது எடுபடாது. மக்கள் தெளிவாக உள்ளனர். இதே போல் போராட்டத்தில் தமிழர்கள் என்ற முறையில் கலந்து கொண்ட இசுலாமிய சகோதரர்களை காவல்துறை குறிவைக்கிறது.

இதை நாம் அனுமதிக்கக் கூடாது. உண்மையில் மக்கள் விரோத, தேச விரோத சக்திகள் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி-அ.தி.மு.க-காவல்துறை-உளவுத்துறைக் கூட்டம்தான்; இவர்கள்தான் “இனிமேல் தமிழ்நாட்டில் இப்படி ஒரு போராட்டம் வேறு கோரிக்கைகளுக்கு வரக்கூடாது, “போலீசு, அரசு என்றால் மக்களுக்கு பயம் இருக்க வேண்டும்” எனத் திட்டமிட்டு வன்முறையை அரங்கேற்றியுள்ளனர்.” “இவ்வாறு சட்டத்தின் ஆட்சியை காக்கவேண்டிய அரசின் அமைப்புக்களே, திட்டமிட்டு வன்முறையில் ஈடுபடுவது அரசியல் சட்ட சீர்குலைவை தமிழகத்தில் உருவாக்கியுள்ளது, இதனால் நீதிமன்றங்கள் நேரடியாகத் தலையிட வேண்டும்” என்றனர்.

 

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை.

____________________

போலீசின் கொலைவெறியைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் !

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கொலைவெறி தாக்குதல் நடத்திய காவல்துறை மீது நடவடிக்கை எடு!

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி ஜனவரி 16 முதல் 22 வரை சென்னை , மதுரை, கோவை, திருச்சி உட்பட தமிழகம் முழுவதும்  மாணவர்கள் – இளைஞர்கள் – பொது மக்கள்  ஆதரவோடு அனைவரும் அறவழிப் போராட்டத்தை நடத்தினர். போராட்டம் வெற்றிபெறும் தருவாயில் காவல் துறை முறையான நம்பகத்தன்மையுள்ள அறிவிப்பு ஏதும் வழங்காமல் அனைவரையும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து போக வற்புறுத்தியது.

போராட்டம் வெற்றி பெற்றதா இல்லையா என்பதைக் கூட அறிய முடியாத சூழ்நிலையில் மாணவர்கள் போராட்டத்தை  பின் வாங்க மறுத்தனர். “காவல் துறை உங்கள் நண்பன், உங்கள் போராட்டத்தை ஆதரிக்கிறோம் ” என்று  பீற்றிக் கொண்டிருந்த  போலீசு  உடனே தனது காட்டு மிராண்டித்தனமான கொலை வெறித் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது.

2

பெண்களை மானபங்கப்படுத்தி அடித்து உதைத்துள்ளது. குழந்தைகள் என்றும் பாராமல் மண்டைய உடைத்து பிளந்துள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் காவல் துறையே கலவரத்தை ஏற்படுத்தி, குடிசைகளை கொளுத்தி, வாகனங்களை நொறுக்கி சேதப்படுத்தியுள்ளது. இவை ஆதாரங்களுடன் ஊடகங்களில் அம்பலப்பட்டுள்ள போதும் போலிசின் இந்த காட்டு மிராண்டி நடவடிக்கைக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆகவே கலவரத்திற்கு காரணமான  காவல்துறையினர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டி ஜனவரி 26, 2017 அன்று திருச்சி திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் மாலை 6.00 மணிக்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் அதன் தோழமை அமைப்புகளான மக்கள் கலை இலக்கிய கழகம். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி  ஆகிய அமைப்புகள் இணைந்து  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த அமைப்புகளின் முன்னணி தோழர்கள் போலீசுக்கு எதிரான கண்டனத்தை பதிவு செய்தனர். குறிப்பாக தங்களது உரிமைகளுக்காக போராடிய குடிமக்களை, குற்றவாளிகளை போல் நடத்தி அடித்து துன்புறுத்திய பிறகு குடியரசு தின விழா ஒரு கேடா? என கேள்வி எழுப்பினர்.3

மேலும் ஜல்லிக்கட்டு முழக்கம், ஆளும் வர்க்கத்துக்கு எதிரான அரசியல் முழக்கமாக மாறியது தான் இந்த ஒடுக்குமுறைக்கு காரணம் என்பதை ஆணித்தரமாக நிறுவினர். அதை தொடர்ந்து மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக வழக்கறிஞர் ஆதி நாராயண மூர்த்தி அவர்கள் ,  “போலிசு அரசாங்கத்தின் வளர்ப்பு நாய். அது அரசாங்கத்துக்கு தேவைப்படும் போது  மக்களிடம் நண்பரைப்போல் வாலைக் குழைத்து ஆட்டும், பின்னர் அதுவே மக்களை பாரபட்சம் பார்க்காமல் கடித்து குதறும் என” காவல் துறையின் அயோக்கியதனத்தை அம்பலப்படுத்திப் பேசினார்.

விவசாயிகள் சங்கத்தலைவர் ம.பா. சின்னத்துரை அவர்கள், ஜெயலலலிதா இறந்த பிறகு அதிர்ச்சியில் இறந்த தொண்டர்கள் என இழப்பீடு அறிவித்த தமிழ்நாடு அரசு, விவசாயிகள் தற்கொலைக்கு இன்னும் உரிய நிவாரணம் வழங்கவில்லை என குற்றஞ்சாட்டினார். மேலும் மாணவர்கள் விவசாயிகளுக்காகவும் களம் இறங்கி போராடுவது தங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது என்றார். இடையிடையே ம.க.இ.க தோழர்கள், போலிசின் அடக்குமுறையையும், கையாலாகாத்தனத்தையும் பாடல்கள் வாயிலாக அம்பலப்படுத்தினர்.

திருச்சியை தவிர அனைத்து இடங்களிலும் காவல் துறையினரால் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் திருச்சியில் தான் அடக்குமுறை நடக்கவில்லையே  என காவல்துறையிடமே போய் செல்பி எடுத்துக்கொண்டு ஜல்லிக்கட்டுக்கான வெற்றியை கொண்டாடுவது வக்கிரமானது. ஏனெனில் பிற இடங்களில் அடி வாங்கியதும் தமிழர்கள் தானே !

உரிமைக்காக  ஒன்றாக போராடிய நாம் , மாணவர்கள் மீதான காவல் துறையின் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போரடவேண்டும் என இப்போராட்டம் மக்களுக்கு அறைகூவல் விடுத்தது.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

செய்தி:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
திருச்சி. தொடர்புக்கு:99431 76246

____________________

போலீஸ் கொலை வெறி தாக்குதலை கண்டித்து புதுச்சேரி ஆர்ப்பாட்டம் !

​ஜல்லிக்கட்டு வேண்டும் என போராடிய மாணவர்கள் – மக்கள்  மீது போலீஸ் கொலை வெறி தாக்குதல் செய்ததை கண்டித்து ஜனவரி  24-ஆம் தேதி புதுவை அண்ணாசலை, அண்ணா சிலை அருகில் மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது . இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக அமைப்பை சேர்ந்தவர்கள் போலீசின் வன்முறை வெறியாட்டங்களை  அம்பலப்படுத்தி பேசினர்.

Pudhucery (8)
இதில் மக்கள் அதிகாரம் தோழர் பிரகாஷ் தலைமையேற்றார் அதைத் தொடர்ந்து பெரியார் திராவிட விடுதலை கழக தோழர் கோகுல் காந்தி நாத், பு.மா.இ .மு அமைப்பாளர் தோழர் பரத்,  புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணை செயலாளர் தோழர் லோகநாதன் ஆகியோர் கண்டனவுரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்
புதுச்சேரி ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​.

ஜல்லிக்கட்டு போராட்டம் : துரோகிகளுக்கு செருப்படி – வீடியோ

8

கட்டபொம்மனின் வீரத்தையும் தியாகத்தையும் நினைக்கும் போதெல்லாம் தவிர்க்க முடியாமல் துரோகிகள் எட்டப்பனும், தொண்டைமானும் சேர்ந்தே நினைவுக்கு வருகின்றனர். அதே போலத்தான் நம் வாழ்நாளில் மெரினாவில் கண்ட மிகப் பெரும் மக்கள் எழுச்சியை நினைக்கும் போது கூடவே துரோகிகள் ஆர்.ஜே. பாலாஜி, ஆதியும் வருகிறார்கள். எப்படி வரலாறு தொண்டைமானை காறி உமிழ்கிறதோ அதே போல இவர்களையும் வரலாறு காறி உமிழும். போராட்டக்காரர்கள் துரோகிகளுக்கு தந்த செருப்படியைப் பாருங்கள் பகிருங்கள்.