Monday, September 16, 2024
முகப்புசமூகம்சாதி – மதம்நந்தினியைக் கொன்ற இந்து முன்னணி - ஆவணப்படம்

நந்தினியைக் கொன்ற இந்து முன்னணி – ஆவணப்படம்

-

நந்தினியைக் கொன்ற இந்து முன்னணி – ஆவணப்படம்

யாரோ ஒருவர் வெள்ளுடை போர்த்தப்பட்ட அந்த உடலை நீல நிற தார்பாய் ஒன்றினுள் புரட்டிப் போடுகிறார். தலை குப்புற கிடத்தப்பட்டிருக்கும் அந்த உடல் சில நொடிகள் கண்களில் விழுகின்றது. முழு நிர்வாணமான அந்த உடலின் மேல் முதுகு கருத்துப் போய் அதன் மீது வெள்ளைப் புழுக்கள் நெளிந்து கொண்டிருக்கின்றன. இடது கீழ் முதுகில் காயம் பட்ட அடையாளம் தெரிகின்றது. உடலைப் புரட்டிப் போடுகிறார் அந்த மனிதர். கருநீலத் துணி ஒன்றால் அந்தப் பெண்ணின் வாய் கட்டப்பட்டுள்ளது. சற்றே மேடிட்ட வயிறு.. அவளது பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டுள்ளது.

ஐயோ ஐயோவென்ற ஓலம் அதிகரிக்க, சட்டென்று அந்த உடல் நீலத் தார்பாயால் மூடப்பட்டு அருகில் நின்று கொண்டிருந்த வெள்ளை ஆம்புலஸ் வேனுக்குள் திணிக்கப்படுகிறது. உணர்ச்சியற்ற முகங்களோடு நின்று கொண்டிருந்த போலீசு அதிகாரிகளிடம் ஒருவர் வாதிட்டுக் கொண்டிருக்கிறார்..

“சார்.. இதே ஒரு எஸ்.சி பையன் வன்னியர் பிள்ளைய அழைச்சிட்டுப் போயிருந்தா நடவடிக்கை எடுக்காம இருந்திருப்பீங்களா?” அந்தக் குரலில் வெளிப்பட்ட ஆற்றாமையின் உள்ளேயும் அவருக்கு முகம் கொடுத்து நின்று கொண்டிருந்த காவலதிகாரியின் கள்ள மௌனத்தின் உள்ளேயும் ஏராளமான அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன. பதினேழே வயதான ஒரு சிறுமியின் கனவுகளும் அவளது பெற்றோரின் நிறைவேறாத ஆசைகளும் ஏமாற்றங்களும் மட்டுமின்றி ஆதிக்க சாதித் திமிரும் இந்து பயங்கரவாத வெறியின் ஆணவமும் அந்தக் காணொளித் துண்டின் ஒவ்வொரு காட்சியிலும் உறைந்து கிடக்கின்றன.

அவள்  நந்தினி.

  1. இது போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க, இனி ஆதிக்க சாதியை சேர்ந்த இளைஞர்கள் தயவு செய்து, வேறு சாதியை சேர்ந்த பெண்களை, அதிலும் குறிப்பாக தலித் சமூகத்தை சார்ந்த பெண்களை தங்களின் உடன் பிறந்த சகோதரியாக நினையுங்கள், சொந்த சகோதரியிடம் பழகுவதை போன்று பழகுங்கள். அவர்களை வாழக்கையில் உயர்த்தி விடுவதற்கு தேவையான உதவியை மட்டும் செய்யுங்கள். இனி காதல் என்பது வேண்டவே வேண்டாம். வீட்டில் பார்க்கும் அகமண முறை திருமணத்தையே மேற் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்

    பெற்றோர்களிடமும், சமூகத்திடமும் தான் காதலித்து திருமணம் செய்து கொள்ள போகும் பெண்ணின் அடையாளத்தை(சாதி) கூற வெட்கப்படும் சமூகத்தில் உள்ள இளைஞர்களுக்கு இதை தான் சொல்ல முடியும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க