Thursday, July 17, 2025
முகப்பு பதிவு பக்கம் 680

டிசம்பர் 25 : வெண்மணி தீயின் தெறிப்புகள்…

1

ரிக்கும் பார்வையிலிருந்து
இன்னும் தப்பமுடியவில்லை
தாழ்த்தப்பட்ட மக்கள்.

trichy-demonstrationநந்தனைப் பார்த்த
தில்லைவாழ் அந்தணன் முதல்
இளவரசனைப் பார்த்த
திண்டிவனம் ராமதாசு வரை
எரிந்து விழுகிறார்கள்!

அவர்களாகப் பார்த்து
பிச்சையிடுவதை
பிறழாமல் வாங்கிக்கொண்டால்,
பெரிய புராணம்!

தானாகத் தலைநிமிர்ந்து
உரிமைகளை கையிலெடுத்தால்
வெண்மணிப் பிணம்!

கழனி தொடங்கி ஐ.ஐ.டி. வரை
வெண்மணி வெறிநாக்கு
விதம் விதமாக
துப்புகிறது கங்குகளை.

மண்கலம் மட்டுமே
அனுமதிக்கப்பட்ட கைகளில்
வெண்கலமும்.

இடுப்புத்துண்டு மட்டுமே
அனுமதிக்கப்பட்டவர்கள்
ஜீன்ஸ் அணிவதையும்,

பாதை மறுக்கப்பட்ட கால்களில்
பல வித ஷீக்களும்,

எந்நேரமும்
ஆண்டையின் பிம்பம் மட்டுமே
இருத்தப்பட்ட கண்களில்
கூலிங் கிளாசும்… பார்த்து
பற்றிக்கொள்கிறது
ஆதிக்க சாதி மனம்!

தாழ்த்தப்பட்ட பெண்
‘நாப்கின்’ வாங்குவதைப்
பார்த்து கூட,
”பாத்தியா!” என ஜாடை காட்டி
வயிறெரியும் ஊர் தெரு வக்கிரம்,

வெண்மணியில்
கருக்கிய நெருப்பு
இன்னும்,
பலரின் கண் மணிகளில்
புகைந்து கிடக்குது!

வாய்ப்பு கிடைக்கையில்
வர்க்கத் திமிரோடு
வருகிற சாதிவெறி,
இலவச உழைப்பை
சுரண்ட முடியாத கடுப்பில்
தலித்துகள்
உழைத்துச் சேர்த்த செல்வங்களை
எரித்த புகையில்
இதயம் நிறைகிறது!

நாகரிகத்தின் தோற்றத்தில்…
காரிய ஒப்பனைகளில்…
மறைந்துகொள்ளும் சாதீய நகம்
சந்தர்ப்பம் வாய்க்கையில்
எந்த ஊர்?… எந்தத் தெரு?
அப்பா பெயர்?… என
நுட்பமாக சுற்றி வளைக்கிறது.

அடங்கும் இடங்களில்
கையில் விபூதி எறியும்
ஆண்டை சாமிகள்,
திமிறும் இடங்களில்
ஆளையே சாம்பலாக்கும்
அநியாயங்கள்
இன்னும் முடிந்தபாடில்லை!

மூவாயிரம் மைல்கள் தாண்டி
இலக்கைத் தாக்கி அழிக்கும்
அக்னி மூன்றை அனுப்பிவிட்டதாய்
அலப்பறை போடும் அன்பர்களே!
மூணு தெரு தாண்டி
ஊர் பொதுக்குழாயில் நீரெடுக்கவும்,
ஊர் பஞ்சாயத்தின் இலக்கைத் தொடவும்
ஒரு தாழ்த்தப்பட்டோரை அனுப்ப
உங்களிடம் கருவி உள்ளதா காட்டுங்கள்!

தில்லை… வெண்மணி…
குறிஞ்சாண் குளம்… கொடியன்குளம்… மேலவளவு…
உஞ்சனை… விழுப்புரம்… பரமக்குடி
காலந்தோறும் கைமாறி வருகிறது
ஆதிக்க நெருப்பு,

பக்திக்கும் உரிமையில்லை
சொத்துக்கும் உரிமையில்லை
அது நந்தன் காலம்,

விளைநிலங்கள் அழிக்கப்பட்டு
கைத்தொழில்கள் எரிக்கப்பட்டு
அத்துக் கூலிகளாய் தலித்துகளை
அடித்து நகரத்திற்கு துரத்தும் உலகமயம்!

இருஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடுவின்
நெருப்புக்குத் தப்பியவனை
இருங்காட்டுக் கோட்டை பன்னாட்டுக் கம்பெனி
எந்த உரிமையுமின்றி எரிக்கிறது!

ஆண்டையின்
கொலைக்களத்திற்கு தப்பிய
படியாளின் மகனை,
ஹீண்டாயின் காண்ட்ராக்ட் வேலை
கழுத்தறுக்கிறது!

சவுக்கடிக்கும், சாணிப்பாலுக்கும் தப்பிய
நடவாளின் கைகளை,
நோக்கியாவின் மதர்போர்டு
நறுக்கி எறிகிறது!

வெண்மணித் தீ முடியவில்லை
அது மூலதனத்தின் வழி நீள்கிறது,
வெண்மணி ரத்தமும் உறையவில்லை
அது செங்கொடி முழக்கத்தில் எழுகிறது!

உள்ளடக்கத்திலும், வடிவத்திலும்
உருமாறும் ஆதிக்க நெருப்பை
எதிர்கொள்ளும் அரசியலை
ஏற்கனவே தம் பிணத்தின் மீதும்
அடையாளம் காட்டியவர்கள்
அந்த வெண்மணித் தியாகிகள்!

கார்ப்பரேட் ஆண்டைகள்,
மறுகாலனிய சவுக்குகள்,
நீதிமன்ற சாணிப்பால்கள்…
பாராளுமன்ற கிட்டிகள்…

ஏற்க மறுத்து, எதிர்த்து அடித்து
பதிலடி தந்தவர் செங்கொடி தியாகிகள்!
சோற்றுக்கு மட்டுமல்ல
சுரணைக்கும்,
கூலிக்கு மட்டுமல்ல
அரசியல் உரிமைக்கும்,
வர்க்கப்போரைத் தொடுத்ததின்
அடையாளம் வெண்மணி…

எரிய எரிய
சாம்பலாகாமல் – மக்கள்
சங்கமான
ஒரே இயக்கம்… கம்யூனிச இயக்கம்…
வெண்மணி தியாகிகளின்
விடுதலைத் தாகமும் அதுவே!

– துரை.சண்முகம்

முருங்கைக்காய் பறித்தால் சிறை! தங்கம் திருடிய போலீசுக்கு மன்னிப்பு !

11

சென்னை திருவான்மியூரிலுள்ள குடிசைப் பகுதியைச் சேர்ந்த செல்வம், சக்தி ஆகிய இருவரும் இ.பி.கோ. 385-வது பிரிவின் கீழ் கைது செயப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எந்தவொரு நபரையேனும் பணம் பறிக்கும் நோக்கில் தாக்கிக் காயப்படுத்துவதாக மிரட்டினால் தொடரப்படும் வழக்கின் பிரிவுதான் 385 என்பதாகும். இந்த வழக்கில் அதிகபட்சம் 2 ஆண்டு சிறைவாசம் விதிக்கமுடியும்.

குற்றமும் தண்டனையும்
குற்றமும் தண்டனையும்

திருவான்மியூர் பகுதியில் குடியிருப்பவர் முன்னாள் கூடுதல் போலீசு தலைமை இயக்குனர் (ஏ.டி.ஜி.பி.) வெங்கடேசன். அவரது மனைவி ராணிவெங்கடேசன் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராவார். மகள் பியூலா ஒரு போலீசு அதிகாரி. மருமகனோ சென்னை சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனர் ராஜேஷ்தாஸ். செல்வமும் சக்தியும், மழையால் சரிந்து கிடந்த வெங்கடேசன் வீட்டு முருங்கை மரத்திலிருந்து கொஞ்சம் முருங்கை இலையையும் சில காகளையும் பறித்ததும், அக்குடும்பத்தினர் போலீசிடம் புகார் தந்தனர். இந்த மாபெரும் குற்றத்திற்காகத் தரப்பட்ட புகாரை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க மேலிடத்திலிருந்து அழுத்தம் தரப்பட்டது. அதிகாரி வீட்டு கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மிக்கல்லை உடைக்குமே! உடனே இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ.கள், 10 போலீசார் உள்ளிட்ட ஒரு படையே சென்று கைது நடவடிக்கையில் இறங்கியது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ராணிவெங்கடேசன், “நூறு கோடி திருடினா என்ன, முருங்கையைத் திருடினா என்ன,எல்லாமே திருட்டுதானே” என்று ‘நியாயம்’ பேசுகிறார்.

அதே சென்னையில், அடகுக்கடை நடத்தி வந்த நிக்ஷாசந்த் என்பவர் திருட்டு நகைகளை வாங்கியதாகக் கூறி, அவரிடமிருந்து 203 கிராம் தங்கத்தை நான்காண்டுகளுக்கு முன்பு எடுத்துச் சென்றார், மயிலாப்பூர் போலீசு நிலைய தலைமைக் காவலர் சம்பத். இச்செயல் சட்டவிரோதமானதென்றும் சம்பத் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செயவேண்டுமென்றும் நிக்ஷாசந்த் புகார் கொடுத்தார். ஆனால், போலீசாரோ வழக்குப் பதிவு செயாததால், உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார், அடகுக் கடைக்காரர். 2012-இல் தலைமைக் காவலர் சம்பத் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யச் சொல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஓராண்டாகியும் இதனை போலீசு நடைமுறைப்படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றை நிக்ஷாசந்த் தொடுத்தார். தங்கத்தை அபகரிக்க முயன்ற வழக்கிலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலும் நியாயப்படி தலைமைக் காவலரை கம்பி எண்ண வைத்திருக்க வேண்டும். ஆனால் ஓய்வுபெறும் வயதை எட்டிவிட்டதை காரணம் காட்டி அவரை மன்னித்துள்ளது, நீதிமன்றம். போலீசிடம் கருணை காட்டும் ‘சட்டம்-ஒழுங்கு’, ஏழைகளிடம் முருங்கைக்காய் பறித்த அற்பக் குற்றத்தையும் மன்னிக்கத் தயாராக இல்லை.
______________________________________
புதிய ஜனநாயகம், 2013 டிசம்பர்
______________________________________

சாவுகளைத் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதம் – ஓசூரில் பேரணி

1

நவீன கொத்தடிமைக் கூடாரமான ஒசூரில் தொழிலாளர்களைத் திரட்டி பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம்!

“வேலைபறிப்பு – தற்கொலைகள், ஆலைச்சாவுகளைத் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!” என்ற முழக்கத்தின் கீழ் தமிழகம் – புதுச்சேரி மாநிலங்களில் செயல்படும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சார இயக்கத்தின் இறுதியாக, “தொழிலாளர் நலச்சட்டங்களை மீறுகின்ற முதலாளிகள் மீது கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடு!” என்ற முழக்கத்தின் கீழ் தமிழகம் தழுவிய அளவில் பேரணி – ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் ஒருபகுதியாக, ஒசூரில் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் தொழிலாளர்கள் ஆதரவுடன் எழுச்சிகரமாக நடைபெற்றது.

“நவீனத் தொழில்துறையானது தந்தைவழிக் குடும்ப ஆண்டானுடைய சிறிய தொழிற்கூடத்தைத் தொழில் முதலாளியினது பெரிய தொழிற்சாலையாய் மாற்றியுள்ளது. தொழிற்சாலையினுள் நெருக்கமாய்க் கூட்டப்பட்டிருக்கும் திரளான தொழிலாளர்கள் படையாட்களைப் போல் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறார்கள். தொழில் துறைச் சேனையின் படையாட்களாகிய இவர்கள், ஆபீசர்கள் என்றும் சார்ஜெண்டுகள் என்றும் முற்றும் படிநிலைக் கிரமத்தில் அமைந்த படைத் தலைமையின் கீழ் இருத்தப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அடிமைகளாய் இருப்பது முதலாளித்துவ வர்க்கத்துக்கும் முதலாளித்துவ அரசுக்கும் மட்டுமல்ல; நாள் தோறும் மணிதோறும் இயந்திரத்தாலும், மேலாளர்களாலும், யாவருக்கும் முதலாய்த் தனித்தனி முதலாளித்துவ ஆலையதிபராலும் இவர்கள் அடிமைகளாக்கப்படுகிறார்கள். இந்தக் கொடுங்கோன்மை எவ்வளவுக்கு எவ்வளவு பகிரங்கமாய் இலாபத்தைத் தனது இறுதி முடிவாகவும் குறிக்கோளாகவும் பிரகடனம் செய்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமாய் இது இழிவானதாய், வெறுக்கத்தக்கதாய், கசப்பூட்டுவதாய் இருக்கிறது.” –

கம்யூனிஸ் கட்சி அறிக்கையில் மார்க்ஸ், எங்கெல்ஸ் குறிப்பிட்டிருக்கும் ஆலை உற்பத்தியில் தொழிலாளர்கள் அடிமைகளாக இருத்தப்பட்டிருக்கும் நிலைமை, இன்று நாம் காணும் சமகால தொழிலாளர் நிலைமைக்கும் பொருந்தும்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எழுதப்பட்ட பின்னர் இந்த 160 ஆண்டுகளில் ஆலையதிபர்கள் இடத்தில் தற்போது கார்ப்பரேட் முதலாளிகள் வளர்ந்து வந்துள்ளனர். ஆபீசர்கள், சார்ஜெண்டுகள் இடத்தில் சூப்பர் வைசர், எக்சிகியூட்டிவ், எம்.டி., எச்.ஆர்., என்றும் இவர்கள் ஒவ்வொருவரிலும் பல உட்பிரிவுகளோடும் இந்த படைவரிசை மிக பிரம்மாண்டமாக வளர்ந்து தொழிலாளர்கள் மீது அமர்ந்து அவர்களது உழைப்பை ஒட்டச் சுரண்டிக் கொண்டிருக்கிறது. இலாபவெறி மேலும் மேலும் தலைக்கேறி வளர்ந்துள்ளது. தொழிலாளர்கள் அடிமையாக்கப்படுகிறர்கள் என்ற கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் வாசகங்கள் இன்றும் எதார்த்தமாக உள்ளது. முதலாளிகள் தொழிலாளர்கள் மீது செலுத்தி வந்த கொடுங்கோன்மை முதலாளித்துவ பயங்கரவாதமாக இன்று வளர்ந்து நிற்கிறது.

“தொழில் துறை சார்ந்த நகரங்கள் நவீன கொத்தடிமைக் கூடாரங்கள்” என்ற வகைப்படுத்தும் வகையில் ஒசூரும் உள்ளது. தொழிலாளர்கள் மீதான முதலாளித்துவ பயங்கரவாதம் பல வடிவங்களில் ஆழமாகவும் விரிவகற்சியாகவும் தோண்டத் தோண்ட வந்து கொண்டிருக்கும் நீண்ட தொடர் கதையாகவும் உள்ளது. ஒரு ஆலையில் உள்ள தொழிலாளர்களை ஒவ்வொருமுறை சென்று சந்திக்கும் போதும் தங்கள் மீது முதலாளிகள் தொடுத்துவரும் புதிய புதிய அடக்குமுறைகளை சொல்கின்றனர்.

இந்த பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்ட இந்த சில மாதங்களில் ஒசூரில் தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகள் மேலும் தீவிரமடைந்துள்ளன.

  • அசோக் லேலாண்டு, லூக் இன்டியா, கேட்டர்பில்லர், ஆவ்டெக் போன்ற பல ஆலைகள், தொழிலாளர்கள் மீது லேஆப் அடக்குமுறை செலுத்தி வருகின்றன. குறிப்பாக, அசோக் லேலாண்டு தனக்கு தேவையான உற்பத்தியை எல்லாம் எடுத்துவிட்டது. இந்த ஆண்டுக்கான போனசை தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை. இது மட்டுமின்றி அடுத்த ஆண்டு 180 நாட்கள் லேஆப் விடுவதற்கான சதித்திட்டத்தை தீட்டிக்கொண்டிருக்கிறது. லேலாண்டை பின்பற்றி மேற்கண்ட ஆலைகளும் தொழிலாளர்கள் மீது லேஆப் அடக்குமுறையை செலுத்தி வருகின்றன.
  • கார்போரண்டம், வென்ட் இண்டியா, லூக் இன்டியா போன்ற ஆலைகளில் நீண்ட நாட்கள் பணிபுரிந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யவில்லை. தொடர்ந்து தொழிலாளர்கள் வலியுறுத்தியும் பணிநிரந்தரம் செய்யாமல் ஸ்டாஃப் (Staff – ஆலை நிர்வாக ஊழியர்) ஆக மாற்றியுள்ளன. இதனால், தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என்பது மட்டுமல்ல, எப்பொழுது வேண்டுமானாலும் வேலையைவிட்டு விரட்டியடிப்பதற்கான கத்தி தொழிலாளர்கள் மீது தொங்கவிடப்பட்டுள்ளது. மேலும், ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் வேலை என்பதை, அந்த ஆலையில் உள்ள எச்.ஆர். என்ற கங்காணி தீர்மானிப்பதுதான். கூலியும் அதே போலத்தான் வழங்கப்படுகிறது. இந்த வேலையைவிட்டால் அடுத்து என்ன செய்வது என்ற தொழிலாளர்களின் அவலவாழ்க்கை நிலைமை தான் இந்த ஸ்டாஃப் என்ற அடிமை வாழ்க்கையை ஏற்க வைத்துள்ளது.
  • ஆவ்டெக், மிண்டா டூல்ஸ், பிரபா இஞ்ஜினியரிங் போன்ற ஆலைகளில் மட்டும் சுமார் 2000க்கும் அதிகமான ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் யாருக்கும் போனசு இல்லை. குறைந்த பட்ச கூலி என்பது நாளொன்றுக்கு ரூ.200 கூட கிடைப்பதில்லை. கட்டாயம் கூடுதல் நேரம் வேலை செய்தாலும் இந்த நிலைமை தான் என்று சொல்லி தொழிலாளர்கள் கவலைப்படுகின்றனர். இவ்வாலைகள் பெரும்பாலானவற்றில் மதிய உணவு கொடுப்பதில்லை. கேண்டீன் வசதியும் இல்லை.
  • நகரிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் உள்ள நூற்றுக்கும் அதிகமான கேஸ்டிங்க் ஆலைகளில் பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நல்ல சோறு கிடைப்பதால்தான் இங்கு வேலைக்கு வந்துள்ளதாகக் கூறி ரேசன் அரிசியைக் காட்டுகின்றனர். 10அடிக்கு 10 அடி என்ற அளவில் உள்ள ஒரு அறையில் 20க்கும் அதிகமான தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். இவர்கள் எல்லோரும் 12 மணிநேர வேலை என்பதால் பகலில் 10 பேர் அறையில் ஓய்வெடுப்பது, இரவில் 10 பேர் அறையில் ஓய்வெடுப்பது என்று தங்கி தங்களது வாழ்வைக் கழித்து வருகின்றனர். அறை நிலைமையே இதுவென்றால் கழிப்பறை பற்றியோ, தண்ணீர் தேவைபற்றியோ சொல்லத் தேவையில்லை. அவை அறவே இல்லை. ஆலைக்குள்ளேயே குளிப்பது, ஆலையைவிட்டு வரும்போது கேனில் தண்ணீர் எடுத்து வருவது என்பனதான் பெரும்பாலான தொழிலாளர்களின் நிலை.
  • மிண்டா ஆலையில் புதிதாக துவங்கப்பட்ட ஆலை. தருமபுரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 10வது, +2 முடித்த இளம் பெண்களை தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தியுள்ளனர். இவ்வாலை நகரில் இருந்து 20 கி.மீ தொலைவில் ஒரு கிராமத்தில் உள்ளது. இங்கு அடிப்படை வசதிகள், நகருக்கு அடிக்கடி சென்றுவருவதற்கான போக்குவரத்து வசதிகள் குறைவு. இந்த இளம் பெண்களுக்கும் இங்கு பாதுகாப்பு குறைவு. என்ன நடந்தாலும் வெளி உலகிற்கு தெரியக் கூடாது என்ற கோணத்தில் திட்டமிட்டு இந்த ஆலை நிறுவப்பட்டுள்ளது. இது ஆலையா? இளந்தொழிலாளர்களுக்கான நவீன கொத்தடிமை கூடாரமா? என்பதுதான் நமது கேள்வி. ஏனென்றால், இந்த ஆலைக்கு பிரசுரத்தை வினியோகம் செய்ய தோழர்கள் சென்றனர். உயர்நிலைப்பள்ளிகளில் மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது ஒழுங்காக, வரிசையாக வருகிறார்களா என்று கண்காணிக்க தலைமை ஆசிரியர் குச்சியுடன் வாயிலில் நின்று கண்காணிப்பது போல, தொழிலாளர்கள் ஆலைக்குள் நுழைவதை எச்.ஆர். அதிகாரியாக உள்ள பெண் கண்காணித்து வந்தார். தோழர்கள் பிரசுரம் வினியோகிக்கத் தொடங்கியவுடன் பதறியடித்துக்கொண்டு வந்து தொழிலாளர்களிடமிருந்து, “குடுங்கடி” என்று பிரசுரத்தை பிடிங்கினார். மேலும், தோழர்களை நோக்கி ஆத்திரத்துடன் சீறிக்கொண்டு வந்தார். “உங்களுக்கு இங்க நோட்டீசு கொடுக்க அனுமதி கொடுத்தது யார்?” என்று வானுக்கும் பூமிக்கும் தாவினார். இதனை தோழர்கள் முறியடித்து பிரசுர வினியோகம் செய்தனர். அப்போது, அவ்வாலைக்குள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்ற பிரச்சனை இருப்பதாக ஒரு பெண் தொழிலாளி பேச முற்பட்டார். ஆனால், எச்.ஆர். அதிகாரிக்கு பயந்து பின்வாங்கினார்.
  • ஒசூரிலேயே அதிக சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் என்ற அளவில் உள்ள பேட்டா ஆலையில் கூட சில காலமாக தொழிலாளர்கள் மீது அடக்குமுறை செலுத்தத் தொடங்கியுள்ளது. இங்கு தொழிலாளர்களுக்கு இயர்னிங் லீவு கொடுக்க மறுக்கிறது ஆலை நிர்வாகம்.

மின்வெட்டு அதிகரித்திருப்பதால் பல பட்டறைகள் மூடப்பட்டு வருகின்றன. தற்போது மிகவும் மோசமான நிலையில் பட்டறைகள் உள்ளன. அதிக உழைப்பை சுரண்டும் நிலைமை இங்கும் உருவாகியுள்ளது. தற்போது சில மாதங்களாக பட்டறைகளில் கேமரா வைத்து தொழிலாளர்களைக் கண்காணிக்கும் முறை அதிகரித்து வருகிறது. தான் உற்பத்தி செய்த பொருளுக்கான விலையை தீர்மானிக்கும் உரிமையற்ற இந்த சிறுமுதலாளிகள், தங்களுக்கு கீழ் உள்ள தொழிலாளர்கள் மீது அடக்குமுறை செலுத்துவதன் மூலம் தங்களது தொழிலை விரிவுப்படுத்திவிடலாம் என்று கருதுகின்றனர். தனியார்மயம் தாராளமயம் என்பது முற்றிலுமாக பட்டறை தொழிலையே ஒழித்துவிடும் என்பதை உணர்த்தும் வகையில் இவர்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்டது.

நகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. பு.ஜ.தொ.மு.வின் சுவரொட்டி மீது விளம்பர சுவரொட்டிகள் ஒட்டி மறைக்கும் வேலையை தொடர்ந்து மேற்கொண்டு வரும் ஒசூர் முதலாளிகள் சங்கம், இந்த முறையும் எதிர்ப்பார்த்தபடி சுவரொட்டிகள் மீது விளம்பர சுவரொட்டிகளை ஒட்டி தனது ஈனத்தனத்தைக் காட்டிக் கொண்டது. இதனை முறியடிக்கும் வகையில் சுவரொட்டிகள் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் ஒட்டியதன் மூலம் பிரச்சாரம் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

போலீசு  தன் பங்கிற்கு பேரணிக்கு அனுமதி வழங்க மறுத்தது. கடந்த இரு மாதங்களில் இருமுறை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்து தோழர்கள் கைதானதை கணக்கில் கொண்டு இந்த முறை ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும் அனுமதி வழங்கி விட்டது போலும். போக்குவரத்து நெரிசல், போலீசு சட்டங்களைக் காரணம் காட்டியது போலீசு. பிரவீன் தொகாடியா என்ற இந்துமதவெறி பிடித்த ரவுடி ஒசூருக்கு வந்த பொழுது, அவனுக்காக போக்குவரத்தையே திருப்பிவிட்ட போலீசு, தொழிலாளர்கள் தங்களது உரிமைக்காக ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என்று அனுமதி கேட்கும் போது அனுமதி மறுத்து வருகிறது.

பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மாலை 5 மணிக்கு ஒசூர் நகராட்சி முன்பாக எழுச்சிகரமாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 150க்கும் அதிகமான தோழர்கள், தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்து கலந்து கொண்டனர். முன்னதாக, தொழிலாளர்களை பரந்த அளவில் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வைக்கும் பொருட்டு, 40க்கும் மேற்பட்ட சங்கங்களுக்கு பு.ஜ.தொ.மு. சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் சில ஆலைகளில் இருந்து தொழிலாளர்கள் பார்வையாளர்களாகவும் சில ஆலைத் தொழிலாளர்கள் நேரடியாக ஆர்ப்பாட்டத்திலும் வந்து கலந்து கொண்டனர். மேலும், ஒப்பந்தத் தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள் பு.ஜ.தொ.மு.வின் பிரச்சாரத்தை பார்த்து வந்து கலந்து கொண்டனர். பேருந்து நிலையத்திற்கு வந்த பல தொழிலாளர்கள் ஒலிப்பெருக்கியின் சத்தம் கேட்டு ஆர்ப்பாட்டத்தை இறுதிவரை முழுமையாக நின்று கவனித்து ஆதரவளித்தனர்.

குறிப்பாக, உயர்ந்த இரு செங்கொடிகள் ஆர்ப்பாட்டத்தின் இருமருங்கிலும் உயர்த்திப் பிடிக்கப்பட்டன. இது ஆர்ப்பாட்டத்திற்கு கம்பீரத்தை கொடுத்தது. பார்க்கும் மக்களைக் கவரும் வண்ணம் அமைந்தது. செங்கொடிகள், முழக்க அட்டைகளுடன் ஆர்ப்பாட்டம் எழுச்சிகராக தொடங்கியது. தொழிலாளர்கள், பெண்கள், சிறுவர்கள் என பலரும் ஆர்ப்பாட்டத்தில் உணர்வுபூர்வமாக முழக்கமிட்டனர்.

மேலும், அம்பானி – டாடா போன்ற தரகு அதிகார வர்க்க முதலாளிகளை வீதியில் இறங்கி தண்டிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், அம்பானி, டாடா ஆகிய இருவரையும் கட்டி வைத்து அடிப்பது போன்ற காட்சி விளக்கம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஏன், இந்த இரு முதலாளிகளை அடிக்கிறீர்கள் என்று சிலர் விளக்கம் கேட்டு தெரிந்து கொண்டு ஆதரித்தனர்.

தோழர்.செந்தில் குமார், மாவட்ட செயற்குழு, பு.ஜ.தொ.மு. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த இயக்கத்திற்காக மேற்கொண்ட பிரச்சார இயக்கத்தில் கிடைத்த அனுபவங்களை முன்வைத்து முதலாளிகள் சட்டத்தை மீறி அடக்குமுறை செலுத்தி வருவதை அம்பலப்படுத்தினார். மேலும், கமாஸ் வெக்ட்ரா ஆலையில் ஒட்டுமொத்தமாக சட்டவிரோத உற்பத்தி செய்யப்படுவது மட்டுமின்றி தொழிலாளர்கள் மீது 12 வகையான சட்டவிரோத அடக்குமுறைகள் செலுத்தப்படுவதையும் அம்பலப்படுத்தினார்.

இதன் பின்னர் பாகலூர் பகுதி பு.ஜ.தொ.மு பொறுப்பாளர் தோழர்.இரவிச்சந்திரன் தெலுங்கு மொழியில் இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை வலியுறுத்தி பேசினார்.

ஹரிதா ரப்பர் தொழிற்சாலையில் இடைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் சார்பாக திரு.கோபால், டி.வி.எஸ். நிர்வாகம் தங்கள் மீது செலுத்திவரும் சட்டவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி பேசினார்.

இதனை தொடர்ந்து தோழர்.பரசுராமன், மாவட்டத் தலைவர், பு.ஜ.தொ.மு. சிறப்புரையாற்றினார். இந்த ஒருவார காலத்தில் தொழிலாளர்கள், பிற ஆலை சங்க நிர்வாகிகளிடம் பேசியதிலிருந்து கிடைத்த அனுபவங்களை தொகுத்து முதலாளிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி பேசினார்.

இந்திய தரகு முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளில் வாங்கியக் கடனைக் கட்டாமல் இருப்பது மட்டுமல்ல, அதனை மறுசீரமைப்பது என்ற வகையில் ஆட்டோ மொபைல் துறையில் உள்ள தரகு முதலாளிகளுக்கு மட்டும் ரூ.3000 கோடி கடன் நிலுவையை மறுசீரமைப்பு செய்ததன் மூலம் தள்ளுபடி செய்ததையும் இதனைத் தொடர்ந்து தற்போது மேலும் ரூ.600 கோடி இத்துறையைச் சேர்ந்த தரகு முதலாளிகள் கோரியிருப்பதைச் சுட்டிக்காட்டி, ஆனால், கடந்த ஒருமாத காலத்தில் மட்டும் தொழிலாளர்கள் நிலைமை மேலும் கீழ் நிலைக்குச் சென்றுள்ளதையும் ஒப்பிட்டுக்காட்டி இந்த அரசு முதலாளிகளுக்கு எந்த அளவிற்கு ஆதரவாக செயல்படுகிறது என்பதை சுட்டிகாட்டினார்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியாக தோழர்.சங்கர், மாவட்ட செயலாளர், பு.ஜ.தொ.மு. நன்றியுரையாற்றினார்.

பு.ஜ.தொ.மு.வின் இந்த ஆர்ப்பாட்டம் ஒசூர் தொழிலாளர்களுக்கு முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக போராடமுடியும் என்ற நம்பிக்கையை வரவழைத்தது என்பது மிகையல்ல. இந்த ஆர்ப்பாட்டம் முடியும் தருவாயில், அசன் சர்க்யூட் என்ற ஆலையில் பணி புரிந்து 10 ஆண்டுகளுக்கு முன்னால் தனது ஒரு கையை இழந்த தொழிலாளி, உடல்நலமின்றி போனதால் இறந்துவிட்டார் என்ற தகவல் தோழர்களுக்கு தொழிலாளர்கள் மூலம் வந்தது. அந்தத் தொழிலாளிக்கு உரிய நிவாரணம் கிடைக்கவும், தொழிலாளர்களுக்கு பாதுகாப்புக்காகவும் அவர்கள் பு.ஜ.தொ.மு.வை நாடினர். அந்தத் தொழிலாளியின் உடலை கொண்டு ஒசூர் சிப்காட் காவல் நிலையத்திற்கு சென்று முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிரான தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர் தோழர்கள்!

ஆர்ப்பாட்ட முழக்கங்கள்:

வாழ்க, வாழ்க, வாழ்கவே!
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வாழ்க
, வாழ்க, வாழ்கவே!

ஓங்குக, ஓங்குக
புதிய ஜனநாயகப் புரட்சி
ஓங்குக
, ஓங்குக

நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!
தொழிலாளர் நலச் சட்டங்களை
மீறுகின்ற முதலாளிகள் மீது
கிரிமினல் சட்டப்படி
நடவடிக்கை எடு
! நடவடிக்கை எடு!

மத்திய அரசே, மாநில அரசே
அமுல்படுத்து
! அமுல்படுத்து!
தொழிலாளர் நலச் சட்டங்களை
கறாராக அமுல்படுத்து
!

பதிவு செய்! பதிவு செய்!
புதிய சங்கம் துவங்குவதற்கு

30
நாட்களுக்குள் பதிவு செய்!

தடை செய்! தடை செய்!
ஒர்க்கர்ஸ் கமிட்டி என்ற பெயரில்
முதலாளிகள் கையாளுகின்ற
அடியாள் படையை தடை செய்
!

நிர்ணயம் செய்! நிர்ணயம் செய்!
குறைந்த பட்ச ஊதியமாக
எல்லா தொழி லாளர்களுக்கும்
பதினைந்தாயிரம் நிர்ணயம் செய்
!

சமத்துவம் வழங்கு! சமத்துவம் வழங்கு!
ஊதியத்திலும் பாதுகாப்பிலும்
பெண் தொழி லாளர்களுக்கு
சமத்துவம் வழங்கு
! சமத்துவம் வழங்கு!

தொழிலாளர்களே! தொழிலாளர்களே!
முறியடிப்போம்
! முறியடிப்போம்!
தனியார்மயம்
, தாராளமயம்
உலக மயம் என்கிற
மறுகாலனியாக்க சதிதிட்டத்தை
முறியடிப்போம்
! முறியடிப்போம்!

கட்டியமைப்போம்! கட்டியமைப்போம்!
தொழிலாளர் வர்க்க ஒற்றுமையை
கட்டியமைப்போம்
! கட்டியமைப்போம்!

***

ஐயோ கொடுமை, ஐயோ கொடுமை!
தொழிற்சாலை என்ற பெயரில்
தொழிலாளருக்கு நடப்பதெல்லாம்
கொடுமை
, கொடுமை, ஐயோ கொடுமை!

நோக்கியா ஆலையின் அம்பிகா,
டிவிஎஸ் ஆலையின் முத்து
,
குளோபல் கம்பெனியின் எல்லீசு
,
பிரிமியர் மில்லில் கிருஷ்ணவேணி
ராஜ்சிரியாவில் நாகவேணி
இவர்கள் யார் உனக்குத் தெரியுமா
?
வேலைக்கு வந்த பாவத்திற்காக
உயிரைவிட்ட தொழிலாளர்கள்
?
மிசினிலே உடல்நசுங்கி
,
பாய்லர் வெடித்து உடல்கருகி
.
வேலை போனதால் தற்கொலை செய்து
இவர்களைப் போல இறந்தவர்கள்
எண்ணிக்கை சொல்லி மாளாது
!

வேலைக்கு வந்த பாவத்திற்காக
விபத்துகளில் கை கால்களை
இழந்தி ஊனமாவும்
தொழிலாளர்களே தொழிலாளர்களே
!

வேலூர், ஆம்புர், ஓசூர் என்று
நாடெங்கும் தொடர்கிறது
தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகள்
!

12 மணிநேர வேலை நேரம்
.டி. என்பது கட்டாயம்,
குறைந்த கூலி
, ஓய்வு இல்லை
போன்ற பல கொடுமைகளை
எதிர்த்துக் கேட்க சங்கம் அமைத்தால்
வேலை நீக்கம்
, இடமாற்றம்!

பயங்கரவாதம் பயங்கரவாதம்
தொழிற்சாலை என்ற பெயரில்
தொழிலாளர்களுக்கு இழைப்பதெல்லாம்
முதலாளித்துவ பயங்கரவாதம்
!

காரணம் யார்? காரணம் யார்?
ஆலைக்குள்ளே இறப்பதற்கும்
தற்கொலை செய்துகொள்வதற்கும்
காரணம் யார்
? காரணம் யார்?

சட்டப்படி கொடுக்க வேண்டிய
பாதுகாப்புகள் கொடுக்காமல்
,
சட்டபடி இருக்கின்ற
பாதுகாப்புகளை நீக்கிவிட்டு
உற்பத்தியைப் பெருக்குகின்ற
லாபவெறி பிடித்தலையும்
முதலாளிகளே குற்றவாளிகள்
?

விபத்து, தற்கொலை என்பதெல்லாம்
முதலாளிகளே திட்டமிட்டு
நடத்துகின்ற படுகொலைகள்
!

அசோக் லேலாண்டு, டிவிஎஸ்
கமாஸ் வெக்ட்ரா
, கார்போரண்டம்
போன்ற பல ஆலைகள்
சட்டவிரோதமாக தொழிலாளர்களை நடத்துது
!
முதலாளிகளின் அடக்குமுறைகளை
ஏற்காத தொழிலாளர்களை
வேலை நீக்கம்
, இடைநீக்கம்,
வெளிமாநிலத்திற்கு இடமாற்றம்
என்று சொல்லி தண்டனை வழங்குது
!

பிணந்திண்ணும் கழுகளைவிட
மலம் திண்ணும் பன்றிகளைவிட
பணந்திண்ணும் முதலாளிகளே
தொழிலாளர்களை கொலை செய்யும்
கொடியவர்கள்
! கொடியவர்கள்!
சட்டத்தை மீறி உற்பத்தி செய்யும்
முதலாளிகளே கிரிமினல்கள்
!

சட்டத்தை மீறும் முதலாளிகளை
தண்டிக்காமல் காப்பது யார்
?
தொழிற்சாலை ஆய்வாளர்
,
தொழிலாளர் அலுவலர்
,
போலீசும்
, நீதிமன்றமும்
முதலாளிகளின் அடியாள்படையே
!

சட்டத்தை மீறும் முதலாளிகளுக்கு
வரிச்சலுகை
, கடன் ரத்து
வரிக்குறைப்பு
, மானியம்
என்ற பெயரில் பல ஆயிரம்கோடி
மக்கள் பணத்தை வாரி இறைப்பது

மத்திய மாநில அரசுகளே!
இயற்கைக்கு
, மனித குலத்திற்கு
எதிரான முதலாளித்துவத்தை

தனியார்மயம் தாராளமயம்
உலகமயம் என்ற பெயரில்
ஊட்டி வளர்ப்பதும் இந்த அரசுகளே
!

தீர்வு என்ன? தீர்வு என்ன?
தொழிலாளர்கள் படுகின்ற
துன்பங்களுக்கு தீர்வு என்ன
?

எப்படி? எப்படி?
சட்டத்தை மீறும் முதலாளிகளை
தண்டிப்பது எப்படி
? எப்படி?

தொழிலாளர் வர்க்க ஒற்றுமை
கட்டியமைப்போம்
! கட்டியமைப்போம்!
முதலாளிகளை தண்டிக்க
இழந்த உரிமைகளை மீண்டும் பெற
வீதியில் இறங்கிப் போராடுவோம்
!

ஓங்குக! ஓங்குக!
தொழிலாளர் வர்க்க ஒற்றுமை
ஓங்குக
! ஓங்குக!

பிற ஆலைகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு:

தோழர்களே!

ஒசூரில் தொழிலாளர்கள் மீது ஆலைக்குள் சட்டவிரோதமான அடக்குமுறைகள் அதிகரித்து வருகின்றன. அசோக் லேலாண்டில் தொழிலாளர்கள் மீது சட்டவிரோத அடக்குமுறைகள் (கடுமையாக வேலைபளு அதிகரித்தல், போதிய பாதுகாப்பு அம்சங்களை கொடுக்க மறுத்தல், பயிற்சி தொழிலாளர்களை உற்பத்தியில் ஈடுபடுத்துதல், ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தர உற்பத்தியில் ஈடுபடுத்துதல்,..) செலுத்தி நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை வி.ஆர்.எஸ்.இல் (ஆட்குறைப்பு) வெளியேற்றுவதற்கு திட்டமிட்டு இயங்குகிறது. கமாஸ் ஆலையில் ஒப்பந்தத்தை மீறுதல், சங்க நிர்வாகிகள் வேலைநீக்கம், இடமாற்றம் போன்றவற்றை சட்டவிரோதமாக செய்கிறது. லேலாண்டு, கார்போரண்டம், எக்ஸைடு உள்ளிட்ட பல ஆலைகள் சட்டவிரோத ஒப்பந்தங்களை போட்டு தொழிலாளர்களை கசக்கி பிழிகின்றன. வெக் இன்டியா, டி.வி.எஸ். குழும நிறுவனங்கள், ராஜ்சிரியா போன்ற பல ஆலைகளில் சட்டவிரோதமான முறைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. வெண்ட் இண்டியா, கார்போராண்டம் உள்ளிட்ட பல ஆலைகள் தொழிலாளர்களை ஸ்டாஃப் ஆக்குவதன் மூலம் சட்டபூர்வ உரிமைகளை பறிக்கின்றன.

தற்போது ஒசூரில் பெரும்பாலான ஆலைகள், மேற்கண்ட சட்டவிரோத முறைகளில் தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்து, தங்களது சந்தைத் தேவையை பூர்த்தி செய்து கொண்டு, சட்டவிரோத லேஆப் விடுவது அதிகரித்து வருகின்றன. இவ்வாறான கொடுமைகளுக்கு ஒசூர் முதலாளிகளுக்கு லேலாண்டு நிர்வாகம் வழிகாட்டியாக உள்ளது.

இவற்றின் விளைவாக, தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்ளுதல், மன உளைச்சலுக்கு ஆளாகி பலவகை உடல் நோய்களுக்கு ஆளாகுதல், ஆலையில் விபத்துக்கள் என்ற பெயரில் தொழிலாளர்கள் கொல்லப்படுதல், உடலுறுப்புகளை இழத்தல், அற்ப கூலிக்கு வேலை செய்ய வேண்டி வருதல் போன்ற பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இவற்றின் ஒட்டுமொத்தத்தில், நிரந்தரத் தொழிலாளர்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, தொழிலாளர்களின் வேலைமுறை நவீன கொத்தடிமை நிலைக்கு தாழ்ந்து வருகிறது.

இவற்றை எதிர்த்து, தொழிலாளர்களின் சட்ட பூர்வ உரிமைகளைக் காக்க, “தொழிலாளர் நலச்சட்டங்களை மீறுகின்ற முதலாளிகளை கிரிமினல் சட்டத்தின் கீழ் கைது செய்!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் 21-12-2013 அன்று மாலை 5.00 மணிக்கு ஒசூரில் பேரணி – ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்துள்ளோம். ஒசூர் தொழிலாளர்கள் மத்தியில் ஒருங்கிணைப்பு – ஒற்றுமையைக் கட்டியமைக்க எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஏற்கனவே ஆதரித்து வருகிறீர்கள். அது போல இந்த எமது முயற்சிக்கும் நூற்றுக்கணக்கில் தொழிலாளர்களை திரட்டி வந்து பங்கேற்க கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!

பேரணி தொடங்கும் இடம்: தாலுக்கா அலுவகம் முன்பு
ஆர்ப்பாட்டம் நடக்கும் இடம்: நகராட்சி அலுவலகம் முன்பு

பிற ஆலைத் தொழிலாளர்களுக்கும், சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட செய்தி ஆங்கிலத்தில்:

Dear Comrades,

In Hosur, illegal oppressions are increased on the workers in factories. Ashok Leyland Company is planning to expel hundreds of workers under VRS (Retrenchment) by illegal oppressions on the workers like increasing the hard work, refused to give proper safety, using apprentice in production, using contract labour in regular production.

Kamas Vectra Company is also doing illegal oppressions like breaking the agreement, termination and transfer of the union bearers. The Management of Carborundum and Exide like companies oppress the workers who are in union by making agreement with traitors among workers.

Now, many industries in Hosur increased oppressions like illegal exploitations on workers by above methods, fulfill the demands in production for the market and illegal layoff. For all these cruelties,  Leyland Management is the role model for Hosur capitalists.

Due to the above cruelties, workers are in many sufferings like suicides, deceases due to mental distortion, murder of workers in the name of accidents, loss of physical parts of the workers, accept to work for poor wages. On the whole, work nature is worsening as bonded labour due to the abolition of permanent workers.

Support the struggle under the slogan “Arrest the owners who break the labour laws under criminal act!” against all the above cruelties imposed on the workers and to secure legal rights of the workers.

செய்தி :

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி – தருமபுரி – சேலம் மாவட்டங்கள்.
தொடர்புக்கு: 97880 11784.

பெண்கள் மீதான வன்முறை : தமிழகத்தின் இழிநிலை !

1

குடும்ப வன்முறை குறித்துக் கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் பதிவான மொத்த புகார்களின் எண்ணிக்கையில், நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது. நாடு முழுவதும் பதிவான 4,547 புகார்களில், பெரியார் பிறந்த மண்ணாகிய தமிழகத்தில் பதிவாகியுள்ள புகார்களின் எண்ணிக்கை 3,838. அதாவது, நாட்டில் பதிவாகியுள்ள மொத்தப் புகார்களில் 80 சதவீதத்துக்கும் மேலானவை தமிழகத்தில்தான் பதிவாகியுள்ளன. கடந்த ஆகஸ்டு 6-ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியின் போது உள்துறை அமைச்சகம் அளித்த தகவல் இது. மற்ற மாநிலங்களில் புகார்கள் பதிவு செயப்படவில்லையே தவிர, குற்றங்கள் நடக்கவில்லை என்று பொருளல்ல. ஜார்கண்டு, கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களின் தகவல்தான் உள்ளதாகவும், இதர மாநிலங்கள் பற்றித் தகவல் கிடைக்கவில்லை என்றும் உள்துறை அமைச்சகம் கூறுகிறது.

சேலம் ஆர்ப்பாட்டம்
திருக்கோவிலூர் அருகே மண்டபம் கிராமத்தைச் சேர்ந நான்கு இருளர் பழங்குடியினப் பெண்கள் மீது பாலியல் வன்முறையை ஏவிய கிரிமினல் போலீசாரைத் தண்டிக்கக் கோரி, சேலத்தில் 15-12-2011 அன்று பெண்கள் விடுதலை முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

பெண்கள் மீதான வன்முறை குறித்து இவ்வளவு புகார்கள் பதிவாகியுள்ள போதிலும், இக்கொடுமைகளுக்கு எதிராகத் தமிழகம் கொதித்தெழுந்து போராடாமல் இன்னமும் அமைதியாகவே இருக்கிறது. வட மாநிலங்களில் இத்தகைய குற்றங்களுக்கு எதிராகச் சாமானிய மக்கள் கிளர்ந்தெழுந்து போராடியுள்ள நிலையில், மிக அதிகமான குற்றங்கள் நடந்துள்ள தமிழகமோ சொரணையற்றுக் கிடக்கிறது.

பெண்ணைப் போகப் பொருளாகப் பார்க்கும் நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கச் சமூகம், பெண்கள் மீதான வன்முறைகளை ஒரு குற்றமாகவே கருதுவதில்லை. மறுபுறம், மறுகாலனியாதிக்கக் கொள்கைகளின் கீழ் திணிக்கப்படும் முதலாளித்துவமோ, இத்தகைய நிலப்பிரபுத்துவத்துடன் இணைந்த வீரிய ஒட்டுரகச் சீரழிவுப் பண்பாட்டை உருவாக்கி வளர்த்து வருகிறது. நுகர்வியமும், நகரமயமாக்கமும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தனிநபர்வாத வெறித்தனத்தை வளர்த்து விட்டிருக்கிறது.

பெண்கள் மீதான வன்முறைகளைக் கொடிய குற்றமாகச் சித்தரித்து அதற்கெதிராகப் போராட வேண்டிய அவசியத்தை உணர்த்தாமல், பரபரப்பூட்டும் வகையிலும் பாலியல் வக்கிரத்தைத் தூண்டும் வகையிலும்தான் இத்தகைய செய்திகள் வெளியிடப்படுகின்றன. பண்பாட்டில் ஒழுக்கமில்லாத நிலை என்பது திட்டமிட்டே உருவாக்கப்பட்டு ஊடகங்களால் பரப்பப்படுகிறது.

இதனால் அநீதி இழைப்பதும், அதைக் கண்டும் காணாமல் இருப்பதும், சகித்துக் கொள்வதும் சகஜமானதாகி வருகிறது. சன் டி.வி அகிலாவுக்கு என்ன நேர்ந்ததோ, அதுவே இன்று எல்லா பெண்களுக்கும் தங்களது பணியிடங்களில் தவிர்க்கவியலாத தொல்லையாக நிலவுகிறது. தமிழகத்தின் கிராமப்புறங்களில் பெண்கள் மீதான தாக்குதல்களுக்கும் சீண்டல்களுக்கும் பஞ்சாயத்துக் கூட்டி அபராதம் விதிப்பதைப் போலத்தான், நகர்ப்புறங்களில் இழப்பீடும் மன்னிப்புக் கேட்பதும் கௌரவமான முறையில் நடத்தப்படுகின்றன.

பெண்கள் மீதான வன்முறை குறித்த பிரச்சினையில் அதீத அக்கறை கொண்டுள்ளதைப் போல ஜெயலலிதா அரசு காட்டிக் கொள்கிறது. ஆனால், குடும்ப வன்முறைக்கு எதிராகத் தமிழக பெண்கள் துணிவுடன் புகார் கொடுக்க முன்வந்துள்ள போதிலும், குடும்ப வன்முறை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதிவாகியுள்ள 3,838 புகார்களில், போலீசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ள புகார்களின் எண்ணிக்கை வெறும் 9 மட்டும்தான். இந்த 9 வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் வெறும் 11 பேர்தான். குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் போலீசிடம் புகார் கொடுத்தாலும், குற்றவாளிகளான கணவன் மற்றும் அவரது உறவினர்களுக்கு தண்டனையைப் பெற்றுத் தருவதில் அதிகார வர்க்கமும் போலீசும் ஆணாதிக்க மமதையுடன் அலட்சியப்படுத்துவதையே இது நிரூபித்துக் காட்டுகிறது.

மிகவும் பின்தங்கிய மாநிலமான ஜார்கண்டில் கடந்த ஆண்டில் பதிவான குடும்ப வன்முறை புகார்களின் எண்ணிக்கை 552. இதில் 108 பேர் தண்டனை பெற்றுள்ளனர். ஆனால், ஜார்கண்டு மாநிலத்தைவிட எண்ணிக்கையிலும் ஆற்றலிலும் அதிகமாக – 1296 போலீசு நிலையங்களுடன், ஏறத்தாழ 250 ஐ.பி.எஸ். அதிகாரிகளும் ஒரு லட்சம் போலீசாரும் கொண்டுள்ள தமிழகத்தில், புகார்கள் மீதான நடவடிக்கை என்பது மிகமிக அற்பமானதாக இருக்கிறது. இதை மூடி மறைத்து, புகார்களை விசாரிக்க கூடுதலாக போலீசார் இல்லாததாலேயே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது என்று தமிழக போலீசு புளுகுகிறது. இத்தகைய போலீசிடம்தான் பெண்கள் மீதான வன்முறைகளைத் தடுப்பதற்கான அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டில் 584 பாலியல் வல்லுறவுக் கொடூரங்கள், 721 பாலியல் சீண்டல்கள், 1379 கடத்தல்கள், 656 பாலியல் தொல்லைப்படுத்தல் வழக்குகளைப் போலீசு பதிவு செய்துள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களாகப் பதிவு செயப்பட்ட 5,861 வழக்குகள் இன்னமும் குற்றப் பத்திரிகை தாக்கல் செயப்படாமலேயே உள்ளன. தமிழகத்தில் பல்வேறு நீதிமன்றங்களில் 1,751 பாலியல் வல்லுறவுக் குற்ற வழக்குகள் உள்ளிட்டுப் பெண்களுக்கு எதிரான 14,545 குற்ற வழக்குகள் இன்னமும் விசாரிக்கப்படாமல், பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கின்றன.

வாச்சாத்தி ஆர்ப்பாட்டம்
கும்பல் பாலியல் வன்முறையை ஏவிய போலீசு, வனத்துறை, வருவாய் துறை அதிகாரிகளைத் தண்டிக்கக் கோரி வாச்சாத்தி பழங்குடியினப் பெண்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்முறை வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும், இத்தகைய வழக்குகளை மாவட்ட போலீசு கண்காணிப்பாளர்கள் ஆய்வு செய்து 15 நாட்களுக்கு ஒருமுறை சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீசு இயக்குநருக்கு அறிக்கை அனுப்பவும், இத்தகைய வழக்குகளை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட 13 அம்சத் திட்டத்தை கடந்த ஜனவரியில் பரபரப்பாக அறிவித்தார் ஜெயலலிதா. ஆனால், இத்தகைய அறிவிப்பு வெற்றுச் சவடால் என்பதையே மேற்கூறிய புள்ளிவிவர ஆதாரங்கள் நிரூபித்துக் காட்டுகின்றன.

இது மட்டுமின்றி, கடந்த ஜனவரி 2009 முதல் ஆகஸ்டு 2013 வரையிலான காலத்தில், தமிழகத்தின் 25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட பெண்கள் தாக்கப்பட்ட சம்பவங்களில் 124-ஐ மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படாததையும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்காததையும், தமது கள ஆய்வின் மூலம் அண்மையில் அம்பலப்படுத்தியுள்ளார், எவிடென்ஸ் என்ற தன்னார்வக் குழுவின் திட்ட இயக்குநரான திலகம்.

இவையனைத்தும் இன்றைய அரசியலமைப்பு முறையே பெண்களுக்கு எதிராக உள்ளதையும், பெயரளவிலான ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும்கூடச் செயல்படுத்த வக்கற்று, தோல்வியடைந்து செல்லரித்துப்போக் கிடப்பதையும் மெப்பித்துக் காட்டுகின்றன. ஆண்-பெண் உறவில் ஜனநாயக விழுமியங்கள் மலர வேண்டுமானால், இன்றைய தந்தைவழி ஆணாதிக்க – இந்துத்துவ சாதியாதிக்க அரசியலமைப்பு முறையை வீழ்த்துவதற்கான புதிய ஜனநாயகப் புரட்சிப் போராட்டங்களில் மக்கள் ஈடுபடுத்தப்பட வேண்டியது மிக அவசியமாகும். எங்கே ஜனநாயகக் கண்ணோட்டம் இருக்கிறதோ, அங்குதான் இத்தகைய கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களும் நடக்கும்; அங்குதான் பெண் விடுதலையும் மலரும். இதற்கு மாறாக, போலீசுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் மேலும் அதிகாரங்களைத் தரும் வகையிலான புதிய கமிசன்களும் சட்டங்களும் கடுமையான தண்டனைகளும் பாம்புக்குப் பால் வார்த்த கதையாகவே முடியும்.

– மனோகரன்

______________________________________
புதிய ஜனநாயகம், 2013 டிசம்பர்
______________________________________

மையஅரசு மாதிரிப் பள்ளிகள் : கேள்விக்குறியாகும் தமிழ்வழிக் கல்வி

4

1985 -இல் புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக நவோதயா வித்யாலயா என்ற பெயரில் ராஜீவ் அரசாங்கம் இந்தியா முழுவதும் 600 பள்ளிகளைத் தொடங்கியது. இப்பள்ளிகள் தாய் மொழிவழிக் கல்வியை ஒழித்துக்கட்டி, இந்தி-ஆங்கிலத்தைத் திணிப்பதை நோக்கமாகக் கொண்டே ஆரம்பிக்கப்பட்டன. தற்போது அதே நவோதயா வித்யாலயாவின் நவீன வடிவமான ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயா என்ற பெயரிலான 2,500 மாதிரி பள்ளிகளை அரசு-தனியார் கூட்டில் நாடு முழுவதும் தொடங்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் 356 பள்ளிகள் தமிழகத்தில் தொடங்கப்படவுள்ளன.

நவோதயா பள்ளிகள்
தாய் மொழிவழிக் கல்வியை ஒழித்துக்கட்டி, இந்தி-ஆங்கிலத்தைத் திணிப்பதை நோக்கமாகக் கொண்ட நவோதயா பள்ளிகள்.

இம்மாதிரிப் பள்ளிகளை அறக்கட்டளைகள், சங்கங்கள், தனியார் நிறுவனங்கள், ஏற்கனவே இயங்கும் தனியார் பள்ளிகள் போன்றவை ஆரம்பிக்கலாம். இந்த பள்ளிகளின் உள்கட்டமைப்புக்கு ஆகும் செலவில் 25 சதவீதத்தை ஆண்டுதோறும் 5 வருடங்களுக்கு மத்திய அரசும், அதன் பிறகு மாநில அரசும் அளிக்கும். இத்தொகை ஆண்டுக்கு 5 சதவீத அளவுக்கு உயர்த்தப்படும். இந்தப் பள்ளிகளில் 40 விழுக்காடு மாணவர்கள் அரசு நுழைவுத்தேர்வு மூலமும், 60 விழுக்காடு மாணவர்கள் பள்ளி நிர்வாகத்தின் வழியாகவும் சேர்த்துக்கொள்ளப்படுவர். இந்த 40 விழுக்காடு மாணவர்களின் கட்டணத்தை ஆண்டு தோறும் தலைக்கு 22,000 ரூபாய் என்கிற முறையில் அரசு செலுத்திவிடும். மீதி 60% மாணவர்களுக்கான கட்டணத்தை பள்ளி நிர்வாகமே நிர்ணயித்துக் கொள்ளலாம் – என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டண நிர்ணயத்திலும், நிர்வாகத்திலும் அரசின் தலையீடு இருக்கக்கூடாது என்று முதலாளிகள் இழுத்தடித்ததால், இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், இப்போதுதான் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களிலெல்லாம் நவோதயா வித்யாலயாக்களை எதிர்ப்பேயின்றி நடத்திவரும் மத்திய அரசு, இப்புதிய மாதிரிப் பள்ளிகளையும் மாநில அரசுகள் வரவேற்றுச் செயல்படுத்த வேண்டுமென்கிறது. ஆனால், ஜெயா அரசோ இதனை எதிர்க்காமல் மவுனம் சாதிக்கிறது.

அரசு – தனியார் கூட்டு என்ற பெயரில், மாநில அரசுகள் ஆண்டுதோறும் கல்விக்கு ஒதுக்கும் நிதியை அலுங்காமல் அள்ளி, தனியாருக்குத் தாரைவார்க்கும் குறுக்கு வழியே இம்மாதிரிப்பள்ளிகள். மாநில மொழியையே தடை செய்து, இந்தியையும் ஆங்கிலத்தையும் திணித்து, அரசுப் பள்ளிகளை ஒழித்து மறுகாலனியாக்கத்துக்கு ஏற்ப ஒரு புதிய தலைமுறையை உருவாக்குவதே இப்புதியவகை பள்ளிகளின் நோக்கம்.
______________________________________
புதிய ஜனநாயகம், 2013 டிசம்பர்
______________________________________

தனியார்மயம் – தாராளமயம் : கார்ப்பரேட் கொள்ளையர் தேசம்

2

நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கில் சி.பி.ஐ., பிர்லா குழுமத்தின் தலைவர் குமாரமங்கலம் பிர்லா மீது சதிக் குற்றச்சாட்டைச் சுமத்தி முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்த பிறகு வெளிவந்த இந்தியா டுடே இதழ் (நவ.6, 2013) “பயத்தில் தத்தளிக்கும் தொழிலதிபர்கள்” எனத் தலைப்பிட்டு அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்டது. கே.எம்.பிர்லா, தனது பத்திரிகையை வெளியிடும் நிறுவனத்தின் மதிப்பு மிக்க பங்குதாரர்களுள் ஒருவர் என்பதற்காக மட்டும் அக்கட்டுரையை இந்தியா டுடே வெளியிடவில்லை. ஊழல் வழக்குகளில் சிக்கியிருக்கும் அல்லது சம்பந்தப்பட்டுள்ள தரகு முதலாளிகள் – அலைக்கற்றை வழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள சுனில் மிட்டல், ரவி ரூயா, அசிம் கோஷ், சஞ்சய் சந்திரா மற்றும் இவ்வழக்கில் தொடர்புடைய ரத்தன் டாடா, அனில் அம்பானி; நிலக்கரி ஊழல் வழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள நவீன் ஜிண்டால்; கர்நாடகாவில் நடந்த இரும்பு வயல் ஒதுக்கீடில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள சஜ்ஜன் ஜிண்டால்; கே.ஜி. இயற்கை எரிவாயு வயல் முறைகேடு விசாரணையை எதிர்கொள்ளும் முகேஷ் அம்பானி – அனைவருக்கும் அக்கட்டுரையைச் சமர்ப்பித்திருந்தது, இந்தியா டுடே.

குமாரமங்கலம் பிர்லா
நிலக்கரி வயல் ஊழலில் சதிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள தரகு முதலாளி குமாரமங்கலம் பிர்லா.

“யார் மீது கை வைத்திருக்கிறா தெரியுமா?” எனச் சவால்விட்டுப் பேசும் தொனியில் எழுதப்பட்டுள்ள அக்கட்டுரை, மத்தியப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.), மத்திய தணிக்கைத் துறை (சி.ஏ.ஜி.), மத்திய ஊழல் கண்காணிப்பு கமிசன் (சி.வி.சி.) ஆகிய மூன்று அமைப்புகளையும் மூன்று பூதங்களாகச் சித்தரித்தது. “தீவிரக் கண்காணிப்பு ராஜ்ஜியம் மீண்டும் தொடங்கி விட்டது; இதனால் தொழிலதிபர்கள் புதிய முதலீடுகளைச் செய்யத் தயங்குகிறார்கள்; கடந்த 18 மாதங்களில் இந்தியா 1,00,000 கோடி ரூபாய் முதலீட்டை இழந்திருக்கிறது; அனைத்திற்கும் மேலாக, கொள்கை மாற்றம் வந்து விடுமோ எனத் தொழிலதிபர்கள் சந்தேகப்படுகிறார்கள்” என்றவாறெல்லாம் அக்கட்டுரை உடுக்கை அடித்திருந்தது.

“வழக்கைச் சட்டப்படிச் சந்தித்து குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்” என ஊழலில் சிக்கிக் கொள்ளும் அரசியல்வாதிகள் எடுத்து விடும் வசனத்தைச் சொல்லுவதற்குக் கூட கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் தயாராக இல்லை. அவர்களைப் பொருத்த வரை குற்றஞ்சாட்டப்பட்ட பிர்லா நேர்மையான பிசினஸ்மேன். அவருக்கு மட்டுமல்ல, இன்று கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த அவப்பெயருக்கு, நெருக்கடிக்கு அரசின் கொள்கை தடுமாற்றம்தான் காரணம் என்பது அவர்களின் வாதம். மாட்டிக் கொண்டவுடன் கூட்டாளியின் மீது பழிபோட்டுத் தப்பித்துக் கொள்ளும் தந்திரத்தைத் தவிர, வேறு புதுமை எதுவும் இந்த வாதத்தில் இல்லை.

கார்ப்பரேட் முதலாளிகளைப் புனிதர்களாக, செய்யாத குற்றத்திற்குச் சிலுவையில் அறையப்பட்டவர்களாகச் சித்திரிக்கும் இந்த வாதத்தை முதலாளித்துவ அறிஞர்களுள் ஒரு சாரர் ஏற்றுக் கொள்வதில்லை. “கார்ப்பரேட் முதலாளிகள், ஆளுங்கட்சியினர், அதிகார வர்க்கம் ஆகியோர் கூட்டுக் களவாணிகளாக இணைந்து கொண்டு பல முறைகேடுகள் நடத்துவதை” அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். தனியார்மயத்திற்கு முன்பாக லைசென்சு-பெர்மிட் ராஜ்ஜியம் நிலவிய காலத்தில் இவை போன்ற முறைகேடுகள் நடப்பது சகஜமானது. ஆனால், அதனை ஒழிக்கும் மாமருந்தாக முன்னிறுத்தப்பட்ட தனியார்மயத்தில் இந்த முறைகேடுகள் தொடர்வது தம்மைக் கலங்க வைப்பதாகக் கூறுகிறார்கள் அவர்கள்.

“தனியார்மயக் கொள்கையில் குறை காணமுடியாது. ஆனால், முதலாளிகளுக்குள்ளேயே இரண்டு வகையான பேர்வழிகள் உள்ளனர். ஒரு சாரர் அரசியல்வாதிகளோடு கூட்டணி வைத்துக் கொண்டு தமது செல்வத்தைப் பெருக்கிக் கொள்கிறார்கள். இன்னொரு சாரர் நேர்மையானவர்கள்; அவர்கள் போட்டியை விரும்புகிறார்கள். நாம் இரண்டாவது வகை முதலாளிகளை ஊக்குவிக்க வேண்டும்; அதற்கேற்ப தொழிற்கொள்கையை வகுக்க வேண்டும். ஐக்கிய முன்னணி ஆட்சியில் இதில் குளறுபடி இருக்கிறது” என வாதிடுகிறார்கள் இவர்கள்.

விரைவுச் சாலைகள்
விரைவுச் சாலைகள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு அங்கு நடைபெறும் வரிக் கொள்ளைக்கும் சட்டபூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புல்லரிக்க வைக்கும் வாதத்தை ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் பின்வருமாறு கூறுகிறார்: “இந்தியாவில் சமீபத்தில் கோடீசுவரர்களான பலர் நிலம், கனிம வளங்கள் போன்றவற்றை முறைகேடான வழிகளில் சுருட்டிக் கொண்டதன் வழியாகத்தான் செல்வத்தைத் திரட்டியுள்ளனர். அரசியல்வாதிகளுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான கூட்டு தொடர்வதை நாம் அனுமதித்தால், வியாபாரப் போட்டி இல்லாமல் போகும். இது நமது ஜனநாயகத்திற்கும் கேடாக முடியும். எனவே, போட்டி, வெளிப்படைத்தன்மை, அரசு ஒப்பந்தங்களைப் பெறுவதிலும், நிலங்களைக் கையகப்படுத்துவதிலும் இன்னும் கூடுதலான திறந்த கொள்கை ஆகியவற்றில் நாம் கவனம் கொடுத்து வேலை செய்ய வேண்டும்.”

ஊழலே செய்யாத, தமது வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் அரசோடு கள்ளக் கூட்டு வைத்திராத, போட்டி போட்டு முன்னேறக் கூடிய முதலாளித்துவம் இருக்கிறது; இருக்கவும் முடியும் என்ற இந்த வாதம் நாடாளுமன்ற ஜனநாயகம் மக்களுக்கானது எனக் கூறப்படும் மோசடிக்கு நிகரானது. லைசென்சு-பெர்மிட் ராஜ்ஜியமாக இருந்தாலும் சரி அல்லது தனியார்மயப் பொருளாதாரமாக இருந்தாலும் சரி, அரசு-ஆளுங்கட்சியைச் சாராமல், அதனின் துணை, பாதுகாப்பு இல்லாமல் முதலாளித்துவம் ஜீவித்திருக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால், தனியார்மயக் காலத்தில்தான் அரசோடு கூட்டு வைத்துக் கொண்டு முதலாளிகள் சட்டபூர்வமாகவும் சட்டவிரோதமாகவும் அடித்துவரும் கொள்ளை பல்லாயிரம் மடங்கு அதிகரித்திருக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்களும், இந்தியத் தரகு முதலாளிகளும் ஆளுங்கட்சியோடு கூட்டுச் சேர்ந்து கொண்டு முறைகேடான வழிகளில் இலாபம் அடைவது, இயற்கை வளங்களைச் சுருட்டிக் கொள்வதெல்லாம் ஒருபுறமிருக்கட்டும். அவர்கள் எந்த மாநிலத்தில் தொழிலைத் தொடங்க முன்வருகிறார்களோ, அம்மாநில அரசு அவர்களுக்குக் குறைந்த விலையில் நிலம், மலிவாக மின்சாரம், தண்ணீர், வரி விலக்கு, வரி விடுப்பு, குறைந்த வட்டிக்கு வங்கிக் கடன் இவற்றையெல்லாம் ஏற்பாடு செய்து கொடுக்கிறது. இந்தச் சலுகைகளை யாரும் சட்ட விரோதமானது எனக் கூறிவிடக் கூடாதென்பதற்காகவே சட்டங்கள் திருத்தப்பட்டுப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன.

தனியார் ஊழல்
தனியாரின் ஊழல் மற்றும் இலாபத்திற்கு இடமளிக்கும் வகையில்தான் பல்வேறு நலத்திட்டப் பணிகள் தீட்டப்படுகின்றன.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் இந்தியச் சட்டங்கள் செல்லுபடியாகாது என மைய அரசு அறிவிக்கவில்லையா என்ன? 2ஜி அலைக்கற்றைகள் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டதை ஊழலெனக் குற்றஞ்சுமத்தும் நியாயவான்களுள் ஒருவர் கூட, அரசு-தனியார் கூட்டுத் திட்டங்களில் நிலம் போன்ற இயற்கை வளங்களும், சாலைகள், விமான நிலையங்கள் போன்ற அடிக்கட்டுமான வசதிகளும் சட்டபூர்வமான முறையில் தனியாரின் கொள்ளைக்குத் தாரை வார்க்கப்படுவதைக் கேள்விக்குள்ளாக்குவதில்லை.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், அரசு-தனியார் கூட்டுத் திட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்தல், தனியார் பெருந்தொழில் நிறுவனங்களுக்குப் பல்வேறு சலுகைகள் அளிப்பது இவையனைத்துமே அரசுக்கு வர வேண்டிய வருமானத்தைத் தனியார் முதலாளிகள் சுருட்டிக் கொள்வதற்கான ஏற்பாடுகளாகும். “லிப்டிங் மற்றும் லோடிங் காண்டிராக்ட்” என்ற முறையின் மூலம் தமிழ்நாட்டில் மணல் வியாபாரம் தனியார் மயமாக்கப்பட்டிருப்பது இந்தக் கொள்ளைக்குச் சிறந்த உதாரணம். ஆனால், இந்தக் கொள்ளைகள் அனைத்தும் சட்டபூர்வமாக்கப்பட்டிருப்பதால் ஊழல் என்று நீதிமன்றங்கள் கூட முத்திரை குத்துவதில்லை. போட்டி முதலாளித்துவத்திற்கு வக்காலத்து வாங்கும் ரகுராம் ராஜன் போன்றவர்கள் கூட அரசிடமிருந்து இப்படிபட்ட ‘சட்டபூர்வ’ சலுகைகளைப் பெறத் தேவையில்லை என வாதாடுவதில்லை.

பெரு முதலாளிகள் அரசோடு கூட்டு வைத்துக் கொண்டு கொள்ளையடிப்பது நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு, அலைக்கற்றை விற்பனை, மணற்கொள்ளை போன்ற பெரிய பெரிய திட்டங்களில் மட்டும்தானா நடந்து வருகிறது? தெருக்களில் சாக்கடை கட்டுவது தொடங்கி நாட்டின் பாதுகாப்புக்கு ஆயுதம் வாங்குவது வரை அரசின் அனைத்துத் திட்டங்களும், உள்ளூர்க் கட்சிக்காரன், ஒப்பந்ததாரர் முதல் பெரும் முதலாளிகள் உள்ளிட்ட பலரின் இலாபத்தைக் கணக்கிட்டுத்தான் தீட்டப்படுகின்றன. இவையன்றி, முதலாளிகளின் கஜானாவை நிரப்ப வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே தயாரிக்கப்படும் திட்டங்களும் உள்ளன.

கடந்த தீபாவளி சமயத்தில் நுகர்பொருள் கடன் வழங்குவதற்காகப் பொதுத்துறை வங்கிகளுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாயை அரசின் கஜானாவிலிருந்து எடுத்துக் கொடுத்தார், ப.சி. இது அரசுப் பணத்தை நுகர்பொருட்களைத் தயாரிக்கும் கார்ப்பரேட் வர்க்கத்திடம் நடுத்தர வர்க்கம் வழியாக கொண்டு சேர்க்கும் தந்திரம் அன்றி வேறில்லை. கல்விக் கடன் திட்டத்தின் மூலம் கொழுத்தது யார்? கடனாளியாகி அவமானப்படுவது யார்? பூவிற்குள் நாகம் ஒளிந்திருப்பதைப் போல, அரசுப் பணத்தைத் தனியார் கல்வி முதலாளிகளின் கஜானாவில் கொட்டுவதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ள திட்டத்திற்குப் பெயர் கல்வி உரிமைச் சட்டம்.

கல்விக் கடன்
கல்விக் கடனைக் கட்டத் தவறிய மாணவர்களின் புகைப்படங்களை பிளக்ஸ் பேனரில் போட்டு அவமானப்படுத்த தயங்காத வங்கி நிர்வாகம், வாராக் கடன்களை வைத்திருக்கும் முதலாளிகளை இப்படி அசிங்கப்படுத்தத் துணியுமா ?

ஜவஹர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், தமிழக அரசு நடைமுறைப்படுத்தும் இலவச வீட்டுத் திட்டம் போன்றவை இரும்பு, சிமெண்ட் முதலாளிகளின் நலனை மறைத்துக் கொண்டுள்ளன. இத்திட்டங்களை ஒரு கறி விருந்தோடு ஒப்பிட்டால், சதைப் பகுதி முதலாளிகளுக்கு எலும்புத் துண்டு மக்களுக்கு என்பதுதான் விகிதாச்சார சூத்திரம். ஏழை நோயாளிகளின் உயிர் காக்கும் திட்டம் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஸ்டார் இன்ஷூரன்ஸ் நிறுவனம் சம்பாதித்த தொகை ஏறத்தாழ 600 கோடி ரூபாய்க்கும் அதிகம். இலவச மிதிவண்டித் திட்டம், இலவச மடிக் கணினி, இலவச மிக்ஸி, கிரைண்டர் திட்டம் என மக்கள் நலனை முன்னிறுத்தி போடப்படுவதாகக் கூறப்படும் திட்டங்களும்கூட கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனைத்தான் அடிநாதமாகக் கொண்டுள்ளன.

சாலை போடுவது, நடைபாதை கட்டுவது, அதில் கற்களைப் பதிப்பது, மாற்றுவது என எந்தவொரு ‘பொது’த்திட்டத்தின் பின்னும் ஏதோவொரு கும்பலின் நலன்கள் இருப்பதைத் தோண்டிப் பார்த்தால் கண்டு பிடித்து விடலாம். இப்படி அரசின் கஜானாவைச் சுருட்டிக் கொள்ளும் திட்டங்களைத் தயாரித்து முன் வைக்கும் வேலையைத்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் அதிகாரவர்க்கமும் கூட்டாகச் செய்து வருகின்றன. அலைக்கற்றை ஊழல், நிலக்கரிச் சுரங்க ஊழல் போன்றவற்றில் அரசின் கஜானாவுக்குப் போய்ச் சேர வேண்டிய பணத்தை கார்ப்பரேட் கும்பல் முறைகேடாக எடுத்துக் கொண்டதென்றால், இவை போன்ற பொதுத் திட்டங்களில், அரசின் பணம் சட்டபூர்வமான வழிகளில் கார்ப்பரேட் கும்பலின் கரங்களுக்கு, காண்டிராக்டர்களின் கரங்களுக்கு மடைமாற்றி விடப்படுகிறது.

ஊழலற்ற, போட்டியை விரும்பும் முதலாளித்துவம், அரசைச் சாராமல் சுயேச்சையாக இயங்கும் முதலாளித்துவம் என்பதெல்லாம் இருக்க முடியாது என்பதைத்தான் இந்த உதாரணங்கள் எடுத்துக் காட்டுகின்றன. அரசும் கார்ப்பரேட் கும்பலும் கண்ணுக்குத் தெரிந்தும், தெரியாமலும் ஆயிரக்கணக்கான வழிகளில் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. கார்ப்பரேட் முதலாளிகள், அவர்களின் நிர்வாகிகள், அவர்களின் வழக்குரைஞர்கள் நேரடியாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவதோடு, இந்தக் கும்பல்தான் வல்லுநர்கள் குழு என்ற போர்வையில் அரசின் கொள்கைகளை, திட்டங்களைத் தீர்மானிப்பவையாக மாறி விட்டன.

இந்த உறவு அடிப்படையிலேயே மக்கள் விரோதமானது. ஆனால், அரசும் தனியாரும் இணைந்து பணியாற்றுவதன் மூலம்தான் நாட்டை முன்னேற்ற முடியும் என்ற வாதத்தின் மூலம் மக்கள் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள். தனியார்மயமே ஊழலுக்கு அடிப்படையானது என்பது மறைக்கப்பட்டு, ஊழல் என்பது திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏற்படும் இடறல் என்பதாக, ஒரு சிலரின் பேராசையாகக் காட்டப்படுகிறது. நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் இப்பேராசை பிடித்த கும்பலைத் தண்டித்து விட முடியும் என்ற நாடகம் நடத்தப்படுகிறது.

– செல்வம்
______________________________________
புதிய ஜனநாயகம், 2013 டிசம்பர்
______________________________________

சென்னை டூ செங்கோட்டை எக்ஸ்பிரஸ் தயார் , சாவதற்கு யார் தயார் ?

7

‘பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் அம்மா மட்டுமே’ என்று சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானமும், ‘சென்னை எக்ஸ்பிரஸ் இனி செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ஆக மாறும்’ என்று ஜெயா பேசிய வசனமும் கூழை கும்பிடு போடும் ஓபீஎஸ்-ன் மடங்காசனமும் அதை ரசிக்கும் செயாவின் முகமும் அனைத்து ஊடகங்களிலும் முக்கியச் செய்தியாக மின்னியதை நாம் அறிவோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இந்த வருங்கால பிரதமரை வரவேற்று போயஸ் கார்டன் முதல் வானகரம் வரையிலான வழி நெடுக டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதுவும் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் 5 அடிக்கு ஒன்று என ஆயிரக்கணக்கான கட் அவுட்டுக்கள் வைக்கப்பட்டிருந்ததை பார்க்கும் போது இது யார் அப்பன் வீட்டுப்பணம் ? என்ற கேள்விதான் வர வேண்டும்.

செயா வருகிறார் என்றாலே அவர் வருகின்ற சாலை முழுக்க முழுக்க பேனர்கள் நிரம்பி வழிகின்றன. சாதாரண பொது மக்கள் சாலை ஓரத்தில் செல்ல முடியாதபடி வழியை அடைக்கின்றன. பார்வையற்றவர்கள் பலர் அந்தத் தடுப்புக்களில் அடிபட்டு விழுவதை ஊடகங்கள் கூறிய போதும் கட் அவுட்டுக்கள் தொடர்கின்றன. எவன் இருந்தால் என்ன? செத்தால் என்ன? பிரதமராக அம்மா முடிவு செய்து விட்டார் அவ்வளவுதான்.

வைக்கப்பட்டு இருந்த டிஜிட்டல் பேனர்களுக்கும் காட்சி விளக்கங்களுக்கும் பின்னால் இருக்கும் கதைகளையும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கின்றது. எத்தனை கோடிகள் இந்த வரவேற்பு விளம்பரங்களுக்கு செலவிடப்பட்டு இருக்கும் என்பதை எண்ணிட முடியாது. நெடுஞ்சாலையில் அய்ந்து அடிக்கு ஒரு பேனர் என்றால் கோயம்பேடு பாலத்தில் அடிக்கொரு பேனர்கள். மினி பஸ் செல்வதை போல, கணிணி கொடுப்பது போல, அம்மா உணவகம் என மீதமிருந்த இடங்களில் காட்சி விளக்கங்கள். தில்லைக்கோயிலில் தீட்சிதர்களுக்கு தமிழக அரசு மாமா வேலை பார்ப்பதை சித்தரிக்கும் காட்சி விளக்கமும் போலீசு ஸ்டேசன் பாலியல் வன்புணர்வு காட்சிகளும் இந்த கொலுவில் இடம்பெற்றிருந்தால் அம்மா மகிமை முழுமை பெற்றிருக்கும்.

இவ்வாறு நெடுஞ்சாலை முழுவதும் கொக்கி போட்டு மின்சாரத்தை எடுத்து அலங்கார மின்விளக்குகள் எரிவதை பார்க்கும் போது நம் வயிறு எரிகிறது. வீட்டில் மின்சாரம் இல்லாமல் நாம் புழுங்கிக் கொண்டிருக்க “கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான்” என்று செயாவை வரவேற்று எம்ஜியார் பாடிக் கொண்டு இருக்கிறார்.

செயாவின் மனதில் இடம் பிடிக்க அவரின் கடைக்கோடி பார்வையைப் பெற்று, தான் தொடர்ந்து மக்களை கொள்ளையடிக்க ஆசியைத் தேடும் நபர்கள்தான் இந்த விளம்பரங்களையும் பேனர்களையும் வைக்கிறார்கள். ஒவ்வொரு பேனருக்குப் பின்னாலும் மக்களின் கண்ணீர் கதைகள் இருக்கின்றன. ஆம், ஒவ்வொரு கவுன்சிலரும் எம்.எல்.ஏவும் 100 முதல் 150 பேனர்களையும் பல காட்சி விளக்கங்களையும் பல லட்சக்கணக்கில் செலவு செய்து வைக்கிறார்கள் என்றால் அது யாருடைய பணம்? ஊரில் உள்ள நிலங்களை எல்லாம் பிளாட் போட்டு விற்றும் போலீசு நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்தும் ஊரில் உள்ள நிறுவனங்களை எல்லாம் மிரட்டி பணம் பிடுங்கியும் அடிப்படை வசதிகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதியும்தான் இன்று வரவேற்பு விளம்பரங்களாக மின்னுகின்றன. எவன் அப்பன் வீட்டு காசில் யார் வாழ்வது ? அதற்கு ஒரு எடுத்துக்காட்டுதான் மதுரவாயல் பகுதி.

அதிமுக பொதுக்குழு கூடிய வானகரத்திற்கு மிக அருகில் உள்ள இப்பகுதியில் உள்ள கவுன்சிலர்கள் வைத்த பேனர்களுக்கு பின்னால் மக்களின் கண்ணீர் கதைகள் இருக்கின்றன. இப்பகுதியில் எந்த நிலமும் சும்மா இருந்தால் உடனே போலிப் பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு கவுன்சிலர்களின் நிலங்களாகவே மாறிவிடும். இதை எதிர்த்து கேள்வி கேட்டாலே பொய் வழக்கு போட போலீசு தயாராக இருக்கின்றது. எதிர்த்து கேள்விதான் கேட்க வேண்டும் என்று இல்லை, ஆளுங்கட்சியின் உள்ளடி சண்டைகளுக்கும் போலீசுதான் எதிரணியினர் மீது வழக்குகளைப் போட்டு கவுன்சிலர்கள், எம்.எல்.ஏக்களை பாதுகாக்கிறது.

செயலலிதாவை வரவேற்பதற்கென்று கூறிக்கொண்டு பள்ளி மாணவிகளை பல மணி நேரம் வெயிலில் நிற்கவைத்ததும் அருகில் உள்ள எக்ஸ்போர்ட் கம்பெனியை மிரட்டி அதை இரண்டு மணிக்கே இழுத்து மூட வைத்து அந்தத்தொழிலாளிகளை வலுக்கட்டாயமாக பல மணி நேரம் தெருவில் நிற்க வைத்ததும் இந்த அடிப்பொடிகளின் சாதனைகள்.

விளையாட்டு மைதானம் அமைக்க துப்பில்லாத அவர்கள் இளைஞர்கள் எங்கு விளையாடிக் கொண்டு இருக்கிறார்களோ அதை இரவோடு இரவாக வீட்டு மனைகளாக மாற்றுகிறார்கள். இப்பகுதியில் பொதுக் கழிவறைகளோ விளையாட்டு திடல்களோ இல்லாத நிலையில் கவுன்சிலர்களும் ஆளுங்கட்சி பிரமுகர்களும் எந்த நிலத்தையும் விட்டு வைப்பதில்லை.

‘பள்ளி மாணவர்கள் சங்கமாக சேரக் கூடாது’ என்று சீருடை அணியாத போலீசார் காவல் காத்து வருகின்றனர், பள்ளிகளின் முன்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. மாணவர்களுக்கு அரசியல் எதுக்கு என்று யோக்கிய சிகாமணிகள் பத்திரிக்கைகளின் நடுப்பக்கத்தில் ஊளையிடுகின்றன. ஆனால் செயாவை வரவேற்க மாணவர்கள் கால் கடுக்க வெயிலில் நிறுத்தி வைக்கப்படுகின்றனர். யாரும் உரிமைக்காக போராடக் கூடாது? அடிமைகளாக வேண்டுமானால் வரலாம் அதற்கான கடமை மட்டுமே உண்டு.

எவன் கக்கூசு போனால் எனக்கென்ன? தண்ணீர் கிடைக்கவில்லையென்றால் என்ன? சாலை இல்லை என்றால் என்ன? நான் பொறுக்கித் தின்ன வேண்டும் என்ற தமிழக ஆளுங்கட்சி பிரமுகர்களின் கையில் சிக்கி சீரழிந்த பகுதிகளில் இருந்து மதுரவாயல் மட்டும் வேறுபட்டதா என்ன? அடிப்படைப் பிரச்சினைக்கு ஒரு சுவரொட்டி ஒட்ட முடிகிறதா? இல்லை மக்களின் கோரிக்கைகளை வலியுயுறுத்தி ஒரு போராட்டத்திற்கு அனுமதி வாங்க முடிகிறதா? புரட்சிகர – சனநாயக அமைப்புக்கள் வேலை செய்யக் கூடாது என்று சுவரொட்டியைக் கூட மோப்பம் பிடிக்கும் அதே போலீசுதான் இந்த பேனர்களுக்கு பாதுகாப்பு அளித்துக் கொண்டு இருக்கிறது. ஊரில் மக்களுக்கு கழிவறை கட்டித் தர வக்கில்லை, இதில் பெருமையாக பேனர் வேறு! சுதந்திரம் வாங்கியதாகக் கூறுகிறார்கள்,  எதற்கு? தடையின்றி கொள்ளையடிக்கவும் கேள்வி கேட்டால் போட்டுத் தள்ளவும் தானே? இதற்கு பெயர் பயங்கரவாதம் இல்லையா?

ஒவ்வொரு கவுன்சிலரும் 100-க்கும் மேற்பட்ட பேனர்களை வைத்திருந்தார்கள். எதற்கு? நான்தான் அதிகம் கொள்ளை அடித்தேன் என்பதைக் காட்டுவதற்காக. தமிழகத்தை மொட்டையடித்தது போதாது என்று டெல்லி கிளம்பி இருக்கும் ஆத்தாளிடம் சர்டிபிகேட் வாங்க வேண்டாமா என்ன? நீதி நேர்மை நியாயம் என்பதை ஒரு பெயருக்காகவாவது சொல்ல வேண்டும் என்பதெல்லாம் மாறிப் போய் நான் தான் கொள்ளையடித்தேன், அப்படித்தான் கொள்ளையடிப்பேன் என்று சவால் விடுகிறார்கள் இந்தக் கொள்ளைக்காரர்கள். அதன் தலைவியோ மவுனமாக ரசிக்கிறார். நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதுதான் கேள்வி.

அம்மா பிரதமர் ஆவதற்கு முன்னரே இப்படி என்றால் பிரதமராகி விட்டால் உலகத்தில் தயாரிக்கப்படும் மொத்த மின்சாரமும் செயாவை வரவேற்பதற்கு போதாமல் கூட போகலாம். இப்போதே காலை முதல் மாலை வரை டிராபிக் ஜாம் என்றால் பிரதமராகிவிட்டால் அவர் வரும் வழியெல்லாம் சுடுகாடாக்கவும் தயங்க மாட்டார்கள் இந்தக் கொள்ளைக்காரர்கள்.

டிஜிட்டல் பேனர்களை வைக்கும் அடிப்பொடிகளே இப்படி என்றால் பிரதமாராகும் ‘மம்மீ’ செயா எத்தனை பேர்களின் வாழ்க்கையை அழித்து இருப்பார்? இப்படி செயா பிரதமராக தகுதியானவர்தான் என்பதையும் அந்தக் கொள்ளைக் கூட்டத்தின் அடிப்பொடிகள் தாங்கள்தான் என்பதையும் மக்கள் பிரதிநிதிகள் தெளிவாக செருப்பால் அடித்தது போல கூறி விட்டார்கள். உண்மைதான், அம்மாவுக்கும் அவரது அடிமைகளுக்கும் தகுதி இருக்கலாம். தன்மானமுள்ள, சுயமரியாதையுள்ள நமக்கு அந்த வரிசையில் சேரத் தகுதி இல்லை என்பதை அந்த எருமைத்தோலில் உரைக்கும்படி கூற வேண்டியதுதான் தற்போதைய அவசியம். சென்னை டூ செங்கோட்டைக்கு ரயில் கிளம்பி விட்டது, டிராகுலா செயாவோ எஞ்சின் டிரைவராக ஆசைப்படுகிறார், அடிப்பொடிகள் நம் மீது தண்டவாளத்தை போட வருகிறார்கள் நமக்கு என்ன வழி இருக்கிறது. தண்டவாளத்தை தகர்ப்பதைத் தவிர.

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, சென்னை

சென்னை கல்லூரி மாணவர் மோதல் – புமாஇமு அறைகூவல் !

12

அன்பார்ந்த மாணவர்களே,

‘‘மாணவர்களா இவர்கள் ? ரவுடிகள் ,பொறுக்கிகள்’’ என்று ஓயாமல் ஒப்பாரி வைக்கின்றனர் ஓட்டுக் கட்சிகள், மாணவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று பத்திரிக்கை -தொலைக்காட்சி ஊடகங்களும் அலறுகின்றன. அரசோ, கல்லூரிகளில் போலீசை நிறுத்தி மாணவர்களை பீதியூட்டுகிறது. கல்லூரியை கலவரப் பகுதியாகக் காட்டுகிறது.

கல்லூரி மாணவர்களிடையே எப்போதாவது நடைபெறும் மோதல்களை வைத்துத்தான் மாணவர்களை ரவுடிகள், பொறுக்கிகள் என்று முத்திரை குத்துகிறார்கள். இம்மோதல்களை போலீசும் – செய்தி ஊடகங்களும் ஊதிப் பெருக்கி வருகின்றன.

கல்லூரி மாணவர்களிடையே நடைபெறும் இந்த மோதல்களால், சில மாணவர்கள் பாதிக்கப்படுவதையும், இதைத் தொடர்ந்து சில மாணவர்கள் சிறையிலடைக்கப்பட்டு கல்லூரி வாழ்வை இழப்பதையும் நாம் மறுக்க முடியாது. இந்த நடவடிக்கைகள் மாணவர் ஒற்றுமையை சீர்குலைப்பவையே. இவைகள் சமூக அநீதிகளுக்கு எதிராக வீரம் செரிந்த பல போராட்டங்களை நடத்திய கடந்த கால மாணவர் வரலாற்றை கறைபடுத்துகின்ற செயல்கள். ஏழைக் குடும்பங்களில் பிறந்து பள்ளிப் படிப்பை முடிக்கவே கடன்பட்டு பல கனவுகளுடன் கல்லூரிக்குள் காலெடுத்து வைத்த நாம், 3 வருட டிகிரி முடிக்கும் முன்பே ’ ரவுடிகள், பொறுக்கிகள்’ என்று அவதூறு பட்டங்களை சுமப்பது கேவலமில்லையா? நண்பர்களாகப் பழக வேண்டிய நாம் ரூட்டுகள் – கல்லூரிகள் எனறு எதிரிகளைப் போல் அடித்துக் கொள்வது எந்த வகையில் நியாயம்? எனவே இதை உடனே கைவிடுவோம். நடந்த தவறுகளில் இருந்து பாடம் கற்போம்.

சூழ்நிலைதான் ஒரு மனிதனின் நடவடிக்கையை தீர்மானிக்கிறது என்பது உண்மையென்றால், சீரழிந்த இந்த சமூகச் சூழலில் ஒரு சிறந்த சமூகப் பற்றுள்ள மாணவன் எப்படி உருவாக முடியும் ? அரசுக் கல்லூரிகளின் சூழ் நிலையும் இப்படித்தான் உள்ளது. ஏழை மாணவர்கள் என்பதற்காகவே, அரசுக் கல்லூரிகளில் குடி நீரும் இல்லை, கழிவறை வசதியும் இல்லை, கேண்டீனும் இல்லை, போதிய ஆசிரியர்களும் இல்லை, ஆசிரியர் திறனை வளர்க்க அரசு முயலுவதும் இல்லை. மாணவர்களுடைய தனித் திறனை வெளிப்படுத்த விளையாட்டோ, கலாச்சார விழாவோ ,கவிதை, கட்டுரைப் போட்டிகளோ அறவே இல்லை. இந்த ஜனநாயக உரிமைகளுக்காகப் போராட மாணவர் சங்கத்திற்கும், அதற்கான தேர்தலுக்கும் தடை. மாணவனுக்கு இருந்த ஓரே ஒரு மகிழ்ச்சி பஸ் டே, அதற்கும் நீதிமன்றத் தடை. இந்த ஆரோக்கியமற்ற சூழ் நிலைக்கு மாணவர்களை தள்ளி விட்ட இந்த அரசுக்கு அவர்களை ரவுடிகள்,பொறுக்கிகள் என்று கூறுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது ?

போதாக்குறைக்கு சினிமா கூத்தாடிகளும் சீரழிந்த ஊடகங்களும் மஞ்சள் பத்திரிக்கைகளும் ’நோட்டு – புத்தகங்கள் வாங்கவே திண்டாடும் அரசுக் கல்லூரி மாணவர்களிடம் சூர்யா-வைப் போல் சிக்ஸ் பேக் காட்டவும், அதற்கேற்ற புதிய, புதிய ஜீன்ஸ், டி –சர்ட், ஷூ போட்டுக் கொண்டு, அந்த நாயகனைப் போன்று பல மாணவிகளை ‘வளைத்துப் போட’ பந்தா பண்ணும் ஆசையை வளர்க்கின்றன. ’தான் ஆசைப்பட்ட மாணவியிடம்’ பிறர் பேசுவது பொறுக்காமல் அடித்துக் கொள்வதும், மங்காத்தா அஜித், வானம் சிம்பு போன்று குறுக்குவழியில் பணம் சம்பாதித்து ஜாலியாக வாழ பணம் பறிப்பதையும் (கட்டிங் போடுவது), பல பெண்களோடு சுற்றித் திரியும் ’டேட்டிங் ‘எனும் பொறுக்கிப் பண்பாட்டையும் பரப்பி வருகின்றன. நண்பனுக்கு துரோகம் செய்து அவன் காதலியை தன்வசப்படுத்திக் கொள்வது, அடுத்தவன் மனைவியை எப்படியாவது அடைய முயற்சிப்பது என்ற நச்சுப் பண்பாட்டை – இதை நியாயப்படுத்தும் ஒரு ’ கொலைவெறிப் பண்பாட்டை ’ – உருவாக்கி விட்டிருக்கும் தனுசை மானசீக ஹீரோவாக ஏற்றுக் கொண்டு வலம் வர கற்றுத் தருகின்றன.

போலீஸ் தாக்குதல்
சுற்றி வளைத்து தாக்கும் போலீசையும், நச்சுப் பண்பாட்டைப் பரப்பி சீரழிக்கும் மஞ்சள் பத்திரிக்கைகளையும், ஊடகங்களையும் நம்மை நெருங்க விடாமல் அடித்து விரட்டுவோம்.

மேலும், புதுப் புது செல்போன்களையும் பைக்குகளையும் காட்டி ஏங்க வைத்து நுகர்வு வெறியை ஊட்டி வருகின்றன. அதோடு, நடிகர் நடிகைகளின் ஆபாச வக்கிரக் கூத்துக்களையும் இலவச இணைப்பாக கொடுத்து மயக்குகின்றன. போதாக்குறைக்கு அரசும் டாஸ்மாக், கிரிக்கெட் என மலிவான விலையில் தரமான போதையை மாணவர்களுக்குக் கொடுத்து சீரழிவுப் பண்பாட்டிற்கு நிரந்தர அடிமைகளாக்கி வருகிறது, போராடும் குணத்தையும் மழுங்கச் செய்கிறது.

ஓட்டுப் பொறுக்கிகளும் தங்களுக்கான அடியாட்களை உருவாக்குவதற்காக சாராயம், பிரியாணி, தலைக்கு இவ்வளவு ரூபாய் என்று போட்டி போட்டுக் கொண்டு மாணவர்களை விலை பேசுகிறார்கள். இந்த சீரழிவுகளில் சிக்கும் மாணவர்கள்தான், “யாருடைய கல்லூரி பெரியது”, “யாருடைய ரூட் பெரியது”, மாப் காட்டுவது, வெயிட் காட்டுவது, கெத்துக் காட்டுவது என்று தங்களுக்குள்ளேயே மோதிக் கொள்கின்றனர். சமீபத்தில் நடந்த மாநிலக் கல்லூரி மாணவர்களின் மோதல் இதற்கு ஒரு உதாரணம்

மாணவர்களோ செயல் துடிப்புள்ளவர்கள், பயமறியாதவர்கள், அநியாயத்தை எதிர்த்துப் போராடுபவர்கள் என்பது உலக வரலாறு. நம் நாட்டிலும் அன்று இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடி வென்றது; ஈழத்தமிழர்கள் மீதான படுகொலைக்கு இந்திய அரசு துணை போவதை கண்டித்து தமிழக அரசை முடக்கியது; தலைமைச் செயலகத்திற்காக ராணிமேரிக் கல்லூரி இடிக்கப்படவிருந்ததை தடுத்து நிறுத்தியது; இன்று மெட்ரோ ரயிலுக்காக பறிக்கப்படவிருந்த பச்சையப்பன் கல்லூரி இடத்தை மீட்டது போன்ற வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தியவர்கள். இத்தகையப் போர்க்குணத்தை இந்த அரசும், போலீசும், அரசியல்வாதிகளும், சினிமா-பத்திரிக்கை–தொலைக்காட்சி ஊடகங்களும் வளர விடுமா ? விடாது.

புமாஇமு
நம்முடைய பெற்றோர்களின் வாழ்வையும், நமது கல்வி கற்கும் உரிமையையும் பறித்துவரும் ’ஆட்சியாளர்களால் அலங்கரிக்கப்படும்’ மறுகாலனியாக்கக் கொள்கையை முறியடிப்போம்.

நம்முடைய போர்க்குணத்தை மழுங்கடிக்கும் ஓட்டுப் பொறுக்கிகளையும் வகுப்புகளுக்குள் புகுந்து சுற்றி வளைத்து தாக்கும் போலீசையும், நச்சுப் பண்பாட்டைப் பரப்பி சீரழிக்கும் மஞ்சள் பத்திரிக்கைகளையும், ஊடகங்களையும் நம்மை நெருங்க விடாமல் அடித்து விரட்டுவோம்.

இதற்கு

  • மாணவர்களாகிய நாம் ஒரே வர்க்கமாக அணிதிரள்வோம்.
  • ரூட் என்று, கல்லூரி என்று, ஏரியா என்று மோதிக் கொள்வதை நிறுத்துவோம்.
  • “நமக்கு எதிரிகள் மாணவர்கள் இல்லை. இந்த அரசும் – ஓட்டுப் பொறுக்கிகளும்-ஊடகங்களும் தான்” என்பதைப் பிரகடனப்படுத்துவோம்.
  • இவர்களுக்கு எதிராக ஒரு போராட்டக் களத்தை அமைப்போம்.
  • இதில் பெற்றோர்- ஆசிரியர்களை இணைப்போம்.
  • மாணவர்களாகிய நம்மீது திணித்துவரும் ரவுடிகள் பொறுக்கிகள் என்ற அசிங்கத்தை அப்புறப்படுத்துவோம்.
  • நம்முடைய பெற்றோர்களின் வாழ்வையும், நமது கல்வி கற்கும் உரிமையையும் பறித்துவரும் ’ஆட்சியாளர்களால் அலங்கரிக்கப்படும்’ மறுகாலனியாக்கக் கொள்கையை முறியடிப்போம்.

அனைத்துக் கல்லூரி மாணவர்களே!

  • கல்லூரி என்றும் ரூட் என்றும் நமக்குள் அடித்துக் கொள்வதை நிறுத்துவோம்!
  • மாணவர் ஒற்றுமையை கட்டியமைப்போம்!
  • போலீசு – ஊடகங்கங்கள்- ஓட்டுப் பொறுக்கிகள்தான் எதிரிகள், மாணவர்கள் இல்லை என்பதை உணர்வோம்!
  • மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும், கல்வியை வணிகமயமாக்கும் , நச்சுப் பண்பாட்டைப் பரப்பும் மறுகாலனியாக்கக் கொள்கையை முறியடிப்போம்!

இவண்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை

அம்மா பஜனையில் அமைச்சர்களை விஞ்சும் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆசாமிகள்

15

ந்தியா மேதகு பிரிட்டிஷ் பேரரசரின் ஆட்சியின் கீழ் இருந்த போது அவ்வப்போது இந்திய சமஸ்தான மகாராஜாக்களின் மாநாடு நடக்கும். அந்த தர்பாருக்கு தமது மகாராஜா தொப்பி, பளபளக்கும் உடைகள் அணிந்து, பாதாதி கேசம் வரை நகைகள் அணிந்து, முன் பக்கம் மேல் வளைந்த செருப்பு அணிந்து போய் பேரரசரின் பிரதிநிதிக்கு மரியாதை செலுத்துவார்கள் சமஸ்தான மகாராஜாக்கள்.

மேதகு பேரரசரின் இந்திய பிரதிநிதி வைஸ்ராயிடம் மண்டியிட்டோ, தண்டனிட்டோ, போற்றி பாடியோ தமது கீழ்ப்படிதலை தெரிவித்துக் கொள்வார்கள். அதைத் தொடர்ந்து அடுத்த மாநாடு வரை தத்தமது சமஸ்தானங்களில், தத்தமது அரண்மனை வாழ்வில் திளைத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள். நிர்வாகத்தையும், ஆட்சியையும், மக்களை சுரண்டுவதையும் பிரிட்டிஷ் பிரதிநிதி கவனித்துக் கொள்வார்.

ஜெயலலிதாஅது போல, ‘புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியில்’ தமிழ்நாட்டின் மாவட்டங்களையும், நகரங்களையும் ஆளும் ஆட்சித் தலைவர்களையும், போலீஸ் அதிகாரிகளையும் ஆண்டுக்கொருமுறை ஒரே இடத்தில் கூட்டி தன் மீதான அவர்களது விசுவாசத்தை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறார் “தாயினும் சாலச் சிறந்த அம்மா”.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு மூன்று நாட்கள் நடந்திருக்கின்றது. அந்த மாநாட்டின் இறுதியில் 322 அறிவிப்புகளை தனது திருவாயால் அருளியிருக்கிறார் அம்மா. அறிவிப்புகளின் கூட்டுத்தொகை ஏழு வருகிறது. முன்பெல்லாம் ஒன்பதாக வரும். தற்போது நியூமரலாஜி மாறிவிட்டதோ என்னமோ?

தி.மு.க ஆட்சி மாநாட்டில் உள்ளது போல அமைச்சர்களின் குறுக்கீடுகள் எதுவும் இல்லாமல் அம்மா சிங்கிளாகவே அனைத்து அறிவிப்புகளையும் வெளியிட்டு முடித்து, அ.தி.மு.கவில் தன்னைத் தவிர மற்ற அமைச்சர்கள் எல்லாமே சைபர்கள்தான் என்ற உலகறிந்த உண்மையை மீண்டும் நிரூபித்திருக்கிறார். பேசாத அமைச்சர்கள் வேடிக்கை பார்த்தர்கள, அயர்ந்து தூங்கினார்களா என்ற கேள்வி எழுவதற்கே வாய்ப்பில்லை. ஏனெனில் அதிகாரிகள் அம்மா என்று ஒவ்வொரு முறையும் கூப்பிடும் போது கைதட்டும் வேலையை இவர்களை விட யார் கச்சிதமாக செய்ய முடியும்?

அதிகார வர்க்க குறுநில மன்னர்கள் கீழ்ப்படிதலை காட்டுவதோடு தமது கோரிக்கைகளை முன் வைக்கவும், அவற்றை பரிசீலித்து அருள் பாலிக்கவும் அனுமதித்திருக்கிறார் அம்மா. உதாரணமாக, நீலகிரி எஸ்.பியான செந்தில் குமார், “நீலகிரியில் பணியாற்றும் போலீஸ்காரர்களுக்கு நீல நிற கோட்டுகள் வழங்கப்படுகின்றன. அதற்குப் பதிலாக நீல நிற கம்பளி உடை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்க வேண்டும்” என்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கோரிக்கையை அம்மாவின் திருச்செவிக்குள் போட, அம்மா உடனடியாக, “உடனே வழங்கப்படும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்ல… மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை” என்று அருள்பாலித்தார். பக்த கோடிகளின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

குளிருக்கு கம்பளி வேண்டும் என்று கேட்பதும், அதை தானம் செய்வதுமான அரசு நடைமுறைகள் இந்த பூவுலகில் வேறு எங்காவது உண்டா என்று தெரியவில்லை. நீலகிரி போலீஸ்காரர்களுக்கு அம்மாவின் ராசியான நிறமாக பச்சை நிறத்தில் கம்பளி உடைகள் வழங்க வாய்ப்பில்லை என்ற குறை இருந்தாலும், மாநாட்டில் கலந்து கொண்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுக்கு தனியாக கொடுக்கப்பட்டிருந்த அடையாள அட்டைகள் பச்சை நிறத்தில் இருந்தது. அடையாள அட்டை நிறத்தில் கூட அதிகார வர்க்கம் கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறது. என்னா ஒரு அம்மா எஃபக்ட்டு!

விழுப்புரம், சேலம், நாமக்கல், தூத்துக்குடி, புதுக்கோட்டை, மதுரை கலெக்டர்களும், சேலம், கன்னியாகுமரி எஸ்.பிக்களும் முதல்வரை அம்மா என்றுதான் அழைத்திருக்கிறார்கள். அம்மாவின் தாயுள்ளம், அ.தி.மு.க தொண்டர்களையும், தண்டனிடும் அமைச்சர்களையும் தாண்டி அதிகாரிகளையும் ஆட்கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்றாக விளங்கியது.

நாம் மேலே கடன் வாங்கியிருக்கும், “தாயினும் சாலச் சிறந்த அம்மா” என்று தமிழ் மொழியை வளப்படுத்தும் வாக்கிற்கு சொந்தக்காரர் புதுக்கோட்டை கலெக்டர் மனோகரன்.

சேலம் கலெக்டர் மகரபூஷணம் “அம்மாவின் பாதம் தொட்டு வணங்குகிறேன்” என்று தனது ஐ.ஏ.எஸ் ஆளுமையை அம்மாவின் காலில் சமர்ப்பித்திருக்கிறார்.

கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு
கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு

திருப்பூர் கலெக்டர் கோவிந்தராஜ், “எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்ற அம்மா செயல்பட்டு வருகிறார்” என்று அன்னலட்சுமி தாயான அம்மாவின் தர்ம குணத்தை கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.

விழுப்புரம் கலெக்டர் தனது ஐஏஎஸ் பயிற்சியையும், நவீன தொழில்நுட்பத்தையும் திறமையாக இணைத்து, அம்மா பல ஆண்டுகளாக கஜானாவில் சேர்த்து வைத்த பணத்தில் வாரி வழங்கிய சீருடைகள், ஸ்கூல் பேக், புத்தகங்கள், ஜாமிட்ரி பாக்ஸ், அட்லஸ், சத்துணவு, இலவச பஸ் பாஸ் இவற்றை எல்லாம் பெற்ற பள்ளி மாணவர்கள் உருகி பேசும் காட்சிகள் இடம் பெற்ற, குறும்படத்தைப் போட்டுக் காட்டியிருக்கிறார்.

“அம்மா.. உங்களால், எங்க வீட்டுக்கு மிக்ஸி, கிரைண்டர்,  ஃபேன், கறவை மாடுகள் எல்லாம் கிடைச்சுது. செலவே இல்லாமல் எங்களுக்கு கல்வியைக் கொடுத்திருக்கீங்க. நீங்கள் எப்ப பிரதமர் ஆகப் போறீங்கன்னு ஆவலாகக் காத்திருக்கிறோம்”. அம்மாவின் எதிர்கால கனவுக்கு அச்சாரம் சொன்ன வசனத்துக்கு கூடியிருந்து ஐபிஎஸ்களும், ஐஏஎஸ்களும் தட்டிய கைத்தட்டல் அடங்கவேயில்லையாம். அம்மாவின் முகத்திலோ ஆயிரம் வாட்ஸ் பிரகாசம் ஒளிர்ந்ததாம். பெங்களூரு சொத்து குவிப்பு வழக்கு குறித்து இதே முகம் எப்படி எதிர்கொள்ளும் என்ற குறுகுறுப்பு ஒரு நல்ல கற்பனை.

ஈரோடு கலெக்டர், தனது பரந்து விரிந்த உலக அறிவைக் கொண்டு ஆய்வு செய்து ஒரு முடிவை அறிவித்தார். “உலகத்துக்கே இந்தியா முன்னிலை வகிக்கப் போகும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் சூழலில், பாரத தேசத்துக்கே முன்னிலை வகிக்கும் சாத்தியக் கூறுகள் தமிழகத்தில் தெரிகின்றன” என்று அம்மாவின் செங்கோல் ஆட்சியின் கீழ் தமிழகம் அடைந்துள்ள உன்னத நிலையை விளக்கியிருக்கிறார். “நடமாடும் வாகனங்கள் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன” என்று சண்முகம் சொன்ன போது குறுக்கிட முதல்வர் அம்மா அவர்கள், “கால்கள் இருந்தால்தான் ஒருவர் நடமாட முடியும்” என்ற அரிய அறிவியல் கண்டுபிடிப்பை வெளியிட்டு, சண்முகம் போன்ற ஆய்வாளர்களுக்கே தான் முன்னோடி என்பதை நிறுவினார். தொடர்ந்து, “அதனால், நடமாடும் என்று சொல்லக் கூடாது. நகரும் மருத்துவமனை என்று குறிப்பிடுங்கள்” என்று திருத்தினார். முச்சங்கம் கண்ட தமிழில் அம்மாவுக்கு இருக்கும் ஆழமான புலமையைக் கண்டு ஐஏஎஸ், ஐபிஎஸ் வர்க்கங்கள் திகைத்துப் போயின.

சேலம் எஸ்.பியான சக்திவேல் அம்மாவின் ஆட்சியில் இடைத்தேர்தல்களில் கூட அம்மா வன்முறையை ஒழித்துக் கட்டி விட்டது குறித்து தனது வியப்பை வெளியிட்டார். “தி.மு.க. நிர்வாகி மின்சாரம் தாக்கி இறந்த நிலையில் கூட ஏற்காடு தேர்தலில் எந்த வன்முறையும் ஏற்படாத வகையில் அம்மாவின் ஆட்சி சட்டம் ஒழுங்கை கடைப்பிடித்தது” என்ற அவதானிப்பை பதிவு செய்த அவர், தேர்தலில் “அம்மா மாபெரும் வெற்றி பெற்று இந்தியாவுக்கே சாதனையை நிகழ்த்திக் காட்டினார்” என்று  தேர்தல் நடத்துபவரும் தானே, சட்ட ஒழுங்கை பராமரிப்பவரும் தானே, தேர்தலில் போட்டியிடுபவரும் தானே, வெற்றி பெற்றதும் தானே என்ற அம்மாவின் சர்வவியாபகத் திறனை உணர்ந்த உண்மையான பக்தனாக மிளிர்ந்தார்.

டிஜிட்டல் பேனர்கள், விளம்பரப் பலகைகள் வைப்பது தொடர்பாக, “எனக்காக வைக்கப்படும் பேனர்களை விழா முடிந்ததும் அகற்றச் சொல்லி விட்டேன். அதையும் மீறி அகற்றாமல் இருக்கும் பேனர்களை நீங்கள் எந்த தயவு தாட்சணியமும் பார்க்காமல் அகற்றலாம்” என்று  அந்த விஷயத்தில் அ.தி.மு.கவினரிடம் போலீஸ்காரர்கள் கறாராக நடந்து கொள்ளலாம்; ‘போலீஸ் என்றால் அவ்வப்போது விறைப்பு காட்டினால்தானே மதிப்பு, ஒரேயடியாக குழைந்து கொண்டே இருந்தால் காவல் துறையின் தன்னம்பிக்கை என்ன ஆகும்’ என்பதை உணர்ந்து கருணை பாலித்தார் அம்மா. ஆனால் விழா முடிந்த பிறகுதான் பேனர்களை அகற்ற வேண்டும் என்று கூறியுள்ள படியால் அவர் தொண்டர் அடிமைகளையும் கைவிடவில்லை, அதிகார அடிமைகளையும் கைவிடவில்லை என்பதை புரிந்து கொள்க.

திருநெல்வேலி கலெக்டர் கருணாகரன், “நான் உங்களோடு நிற்பேன்” என்று உள்ளாட்சி தேர்தலுக்குப் பின்னரும், சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிந்த உடனேயே அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸ் படையை இடிந்தகரைக்கு திருப்பி விட்டு மக்களைத் தாக்கிய அம்மாவினை டைனமிசத்தை உணர்ந்து, அவருக்கு டைனமிக் லீடர் என்று நாமம் சூட்டி மகிழ்ந்தார்.

கோவை கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கும், திருச்சி போலீஸ் கமிஷனர் சைலேஷ் யாதவும் அம்மாவின் இதயத்துக்கு நெருக்கமான இந்துத்துவ நிகழ்வுகளைப் பற்றிய சாதனைகளை குறிப்பிட்டார்கள். திருச்சியில் மோடி வருகைக்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்தது, கோவையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்திக் கொடுத்தது என்று தொடரும் அம்மா அரசின் சாதனைகளை விளக்கினர்.

அம்மாவுக்கு பழைய லாட்டரி வியாபாரி மார்ட்டின் பற்றி நினைவு வந்து விட, கோவையில் சட்ட விரோத லாட்டரி வியாபாரம் நடக்கவில்லை என்று உறுதி செய்து அம்மாவை மகிழ்வித்தார் அர்ச்சனா.

“சி.பி.சி.ஐ.டி.யின் நரேந்திரபால் சிங், சைபர் கிரைம் அதிகரித்துக்கொண்டே போவதால் அது தொடர்பான விசாரணைக்கு சாஃப்ட்வேர், ஹார்ட்வேர்கள் எல்லாம் தேவைப்படுகின்றன. அதற்கு அரசு உதவ வேண்டும்” என்று அம்மாவிடம் கோரிக்கையை முன் வைத்தார். அம்மாவுக்கு கோப்புகளில் எழுதி அனுப்பி இத்தகைய கோரிக்கைகளை கேட்பதை விட நேரில் கேட்பதற்கு பவர் அதிகம் என்பதை, புட்டபர்த்தி சாயிபாபாவை படத்தை வைத்து வழிபடுவதை விட நேரில் சந்தித்து பாதம் பணிவது அதிக பலனளிப்பது என்பதுடன் ஒப்பிட்டுப்பார்த்து ஆன்மீக அன்பர்கள் மகிழலாம்.

சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் சென்னையில், கொலைகள், கொள்ளைகள், திருட்டுகள் முந்தைய ஆண்டுகளை குறைவாக உள்ளது என்று பெருமைப்பட்டிருக்கிறார். ஆனால், ஆட்சிப் பொறுப்பு ஏற்றுவுடனேயே கொலைகாரர்கள், கொள்ளையர்கள், திருடர்கள் ஆந்திராவுக்கு ஓடி விட்டார்கள் என்று அம்மா அறிவித்திருந்தும் இன்னமும் கொலைகள், கொள்ளைகள், திருட்டுகள் நடப்பது ஏன்? ஒருவேளை கிரிமினர்களும் அம்மா ஆட்சியை விரும்புகிறார்களோ என்னமோ!

சட்டமன்றத்தில் மட்டுமல்ல, ஊடகங்களின் தலையங்கத்தில் மட்டுமல்ல, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகார வர்க்க மாநாடுகளிலும் அம்மா பஜனைதான் என்பதை நிரூபித்த இந்த மாநாட்டிற்கு நாம் நிறையவே நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். இனி இந்த படிச்ச கோமான்கள் நாட்டை திருத்துவார்கள் என்று கருத்து கந்தசாமிகளும், கருத்து காயத்ரிக்களும் டார்ச்சர் செய்ய மாட்டார்கள் அல்லவா?

–    அப்துல்

நன்றி : ஜூனியர் விகடன் 22-12-13 தேதியிட்ட இதழில் வெளியான ரிப்போர்ட்

பிரிக்காமல் அழகு பார்த்தால் பிஸ்கட் தின்ன முடியுமா – வெங்கடேசன்

13

என்னை செதுக்கிய ஆசிரியர்கள் – 15

த்தொடரில் நல்லாசிரியர்கள் பற்றி இது வரை வெளியான நண்பர்களின் பதிவுகளில் இருந்து இக்கட்டுரை சற்று மாறுபட்டதோர் கோணத்தில் அமைந்து விட்டது என நினைக்கிறேன். மாணவர்கள் பால் பரிவும், அக்கறையும் கொண்ட ஒரு நல்லாசிரியரை பற்றி பேசுவது ஒரு வகை. வினவு பாணியிலானது. ஒரு செடி தன் மீது பரிவும், அக்கறையும் கொண்டு தன்னை வளர்த்த ஒரு தோட்டக்காரரை பற்றி எழுதுவது போல. மாறாக, ஒரு செடி தனக்கு ஒளி தந்த சூரியனை போற்றி ஆதித்ய ஹிருதயம் பாடும் வைகையில் பேசுவது மற்றொரு வகை . இந்த இரண்டாவது வகையில், எனக்கு கல்விப்புல ரீதியாக வழிகாட்டிய நல்லாசான்கள் பற்றியது இப்பதிவு.

பள்ளிப் படிப்பு முழுதும் செங்கல்பட்டில் படித்தேன். முதலில் ராமகிருஷ்ணா பள்ளி. பின்பு புனித சூசையப்பர் பள்ளி. இரண்டும் அரசு உதவி பெறும் நிறுவனங்கள். ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி. பின்பு ஆங்கில வழியில். பள்ளிக் கூடத்தில் எனக்கு கிடைத்த பல நல்ல ஆசிரியர்கள் மனதில் நிழலாடுகின்றனர். கணித ஆசிரியர் ராகவ சிம்மன், அறிவியல் ஆசிரியர் ராமகிருஷ்ணன், இயற்பியல் ஆசிரியர் மகாலிங்கம், தமிழாசான் மரிய ஜோசப். கட்டுரையின் நோக்கம் எனது கல்லூரிப் பருவம் பற்றி ஆதலால், விரிக்காமல் மேலே செல்வோமாக.

பள்ளியில் பாடங்களை ஆர்வத்தோடு, உள்வாங்கிப் படித்ததாக சொல்லிக் கொள்ள முடியாது. தேர்வு சமயத்தில் மதிப்பெண்களை குறி வைத்து முக்கிய கேள்விகளை படிக்கும் பாணி படிப்புதான் பெரிதும் நடந்தது. குறிப்பாக பனிரெண்டாம் வகுப்பு. ஒவ்வொரு பாடத்தையும் அக்கு வேறு ஆணிவேராக பிரித்து போட்டு படித்தால் எந்த கேள்விக்கும் பதில் எழுத முடியும். இப்படி எல்லாம் தேர்வுக்கு தயார் செய்தால் மதிப்பெண்கள் அருவி மாதிரி கொட்டும். பக்கெட்டில் பிடித்துக் கொள்ளலாம். பொதுக் கருத்துக்கு மாறாக, இவ்வாறு தயாராக தனிப்பயிற்சி (tuition) எதுவும் தேவையில்லை. நமக்கு நாமே திட்டத்தின் மூலம் சொந்தமாக கூட செய்ய முடியும்.

இவ்வாறு டெக்னிகலாக பின்னிப் பெடலெடுத்து படித்ததில், அண்ணா பல்கலை கிண்டி பொறியியல் கல்லூரியில் கணிணியியல் துறையில் இடம் கிடைத்தது. அங்கு கிடைத்த நண்பர்களின் பயனால், தேர்வுகளை மீறி புரிந்து படிப்பது, சிந்திப்பது போன்ற விஷயங்களும் உள்ளன என தெரிய வந்தது. இத்தகு சமயத்தில் முன்ஜென்ம புண்ணியத்தின் பலனாக என் கல்விப்புல வளர்ச்சியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இருவர் தொடர்பு ஏற்பட்டது.

கணிணியியல்முதலாமவர் எனது ஆத்ம நண்பர் வெங்கட்ராகவன். இவர் பாடங்களை உள்வாங்கி, சிந்தித்து படிக்கும் படிக்கும் பரம்பரையை சார்ந்தவர். துறை சார்ந்த கல்வி என்பதையும் கடந்து பல விஷயங்களும் அறிந்த சூரப் புலி. எங்களது பின்புல வேறுபாடுகளையும் மீறி நட்பு வளர்ந்ததில் அறிவு ரீதியாக பாடங்கள் படிக்கும் வழக்கம் பிறந்தது. அந்தப் பூவோடு சேர்ந்ததில் இந்த நாருக்கும் சற்று வாசனை கிடைத்தது. கல்லூரி பாடங்கள் தவிரவும் மற்ற பல விஷயங்களும் விவாதிப்பதுண்டு. அவரது வீட்டிலேயே தங்கி, உண்டுறங்கி, கல்லூரி செல்லும் வழக்கமும் இருந்தது. இருபது வருடங்கள் கடந்தும் மழுங்காமல் இன்றும் நட்பு தொடர்கிறது..

இந்த வேளையிலே எங்களுக்கு Computer Organization என்றொரு பாடம். சொல்லித்தந்தவர் பேராசிரியர் ஸ்ரீதர் கந்தசாமி. ஒரு கணிணியிலே முக்கிய உறுப்பு (component) CPU. இதன் அடிப்படைகூறு கேட்டுகள் (gates) எனப்படுபவை. இந்த கேட்டுகள் எவ்வாறு இயங்குகின்றன என்பது மின்னணுவியல் (electronics) துறையின் கீழ் சென்று விடும். அதைப்பற்றி பேசாமல் கேட்டுகளை தென்னாடுடைய ஈசன் படைத்தான் என வைத்துக் கொண்டு ஒரு எளிய வகை CPU வடிவமைப்பது பாடத்தின் நோக்கம். ஒரு விஷயத்தை முற்றுணர்ந்த ஒருவர் பாடம் நடத்தினால் எப்படி இருக்கும் என உணர்ந்த முதல் தருணம். முதல் நாள் “ஆதியில் கேட்டுகள் இருந்தன” என்று தொடங்கியவர் படிப்படியாக வளர்த்து சில மாதம் கடந்து “ஆமென்” என்று சொல்லி முடித்த போது என் கையில் ஒரு CPU இருந்தது. மதிப்பெண்கள், தேர்வுகள் பற்றி மட்டுமே அக்கறை என்பதை மாற்றி, வாழ்க்கையில் முதல் முதலாக ஒரு விஷயத்தை உள்வாங்கி சிந்திக்க வைத்தவர். தேர்வுக்கு தயாராவது என்பது அலட்டல் இல்லாத வேலை ஆனது. தேர்வுக்கு முன்னால் அவரது வகுப்பில் வெங்கட்ராகவன் எடுத்த குறிப்புகளை சில மணி நேரம் புரட்டி விவாதிப்பது மட்டுமே தயாராகும் வழிமுறை. முதல் தீப்பொறி கொடுத்தவர் என்ற வகையில் மறக்க முடியாத ஆசிரியர்.

கல்விப்புல ரீதியாக எனக்கு அடுத்து உதவியது ஒரு புத்தகம். ஜான் ஹாப்கிராப்ட் (John Hopcroft) மற்றும் ஜெப்ரி உல்மன் (Jeffrey Ullman) என்ற இரு புகழ் பெற்ற பேராசிரியர்கள் எழுதிய கிளாசிக் வகையிலான ஒரு நூல். கணிணியியல் துறைகளை எளிமைப்படுத்தி இரண்டு வகையில் பிரிக்கலாம். ஒன்று கணிணி வடிவைமப்பு, பல்வேறு மென்பொருள் வடிவமைப்பு என பயன்பாடு என்பதை முக்கிய நோக்கமாக கொண்டு உலகாயதமாக செல்வது. இவற்றை systems என அழைக்கக் கூடும். இரண்டாவது வகையில் பயன்பாடு என்பதை இரண்டாம் பட்சமாக்கி, கணிணியியலின் அடிப்படை கேள்விகளை கணித ரீதியில், ஒரு தத்துவ நோக்கில் ஆராய்வது. இதை theory என அழைப்பர். இதில் இரண்டாவது வகையான Theory of Computing என்ற துறைக்கு பால பாடம் நடத்துவது இந்த புத்தகத்தின் நோக்கம். உச்சி மோந்து நிலாச்சோறு கதை சொல்லும் புத்தகங்களுக்கு மத்தியில், உச்சி மண்டையில் ஓங்கி அடித்து ஆழமாக பேசும் வகையிலான புத்தகம். குறிப்பாக பாடங்களின் பின் கொடுக்கப்படும் கேள்விகள். சாதாரண பயிற்சி கேள்விகள் முடிந்தபின் மண்டை காய வைக்கும் பல புதிர்களும், கேள்விகளும் இருக்கும். தியரி துறை பால் எனக்கு மிகுந்த ஆர்வத்தை உண்டாக்கிய நூல். என் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய ஒரு ஆசானாகவே இந்நூலைக் கருதுகிறேன்.

ஐஐடி,  சென்னை
ஐஐடி, சென்னை

கல்லூரி படிப்பு முடிந்தபின் முதுகலை படிப்புக்காக போய்ச் சேர்ந்த இடம் சென்னை ஐஐடி. அங்கே அறிமுகமானவர் பேராசிரியர் கமலா கீர்த்திவாசன். முதல் செமஸ்டரிலேயே அவரிடம் பாடம் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் தியரி துறையில் ஆழ்ந்த புலமை பெற்று, பல ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதியவர். பழகுவதற்கு இனிமையானவர். ஆர்ப்பாட்டம் ஏதுமற்று, பூரண அமைதி கொண்டவர். அவரது மேற்பார்வையில் ஆராய்ச்சி கட்டுரைகள் படித்தல், சொந்தமாக புதிய பொருள்களை ஆராய்தல் என அடுத்த கட்ட நகர்வு நிகழ்ந்தது. விவாதங்கள் செய்ய அவரது அறை எப்போதும் திறந்திருக்கும். விடுதியில் இருந்து ஒரு போன் கால் போட்டு விசாரித்து விட்டு நேரே அவரது அறைக்கு சென்று விடலாம். ஓரிரு முறை, வார இறுதி நாட்களில் திங்கட்கிழமை வரை காத்திருக்க பொறுமை இன்றி, அவரது வீட்டில் விவாதித்து இருக்கிறோம். அவரது மேற்பார்வையில் எனது முதல் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினேன். இத்துறையில் எனது ஆர்வத்தை முழுமையாக்கி, “இனி நமக்குத் தொழில் தியரி” என முடிவு செய்ய வைத்தவர்.

மற்றொரு வகையிலும் அந்த ஐஐடி வாழ்க்கை மறக்க முடியாததாய் அமைந்தது. சுற்றிலும் மரங்கள் சூழ்ந்த ரம்மியமான சூழலில் விடுதி அறை. மத்திய அரசு புண்ணியத்தில் கிடைத்த கல்வி உதவித் தொகையில் கையில் புரண்ட காசு. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த, பல தரப்பட்ட நண்பர்கள். கணிணியில் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விவாதிக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது. இந்த இனிய சூழலில் கணிணியியலுக்கு வெளியேயும் ஆர்வம் பிறந்து, இன்று வரை தொடர்கிறது. கணிதம், மானுடவியல், தாவரவியல், சங்க இலக்கியம், நாலாயிரம் என கண்டதையும் கலந்து கட்டி படித்த காலம். இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகமாளும் அச்சுவை பெறினும் வேண்டேன் என்றொரு வாழ்வு. அதன் பிறகு, அவ்வளவு சந்தோஷமான காலம் அமையவில்லை. இப்படிப்பட்ட சூழல் எனது அறிவுப்புல ரீதியில் வளர பெரிதும் உதவியது.

இங்கே ஒரு விஷயம் சுள்ளென்று உறைக்கிறது. சமீபத்தில், வினவில் அரசு ஆதிதிராவிட மாணவர் விடுதி பற்றி புகைப்படங்களுடன் சில கட்டுரைகள் வந்திருந்தன. இந்த விடுதிகளுக்கும், மேலே சொன்ன ஐஐடி விடுதியின் தரத்துக்கும், சூழலுக்கும் ஏன் இத்தனை வித்தியாசம்? எங்கே பிழை? சிந்திக்க வேண்டிய விஷயம். கட்டுரை திசை மாறுகிறது என்பதால், இத்துடன் நிறுத்தி மேலே செல்கிறேன்.

அடுத்து முனைவர் பட்டம் படிக்க அமெரிக்காவில் விஸ்கான்சின் (Wisconsin) மாகாண பல்கலைக்கு போய் சேர்ந்தேன். அந்நாட்டின் முன்னணிப் பல்கலைகளுள் ஒன்று. மாடிசன் (Madison) என்னும் நகரில் அமைந்தது. அழகான அமைதியான ஊர். சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஒரு ஆய்வுப்படி அமெரிக்காவில் வாழச் சிறந்த நகரங்களுள் ஒன்று என சொல்லப்பட்டது. கல்லூரியை விட எனக்கு அதிகம் பிடித்தது அங்கிருந்த ஓர் ஏரி. அருகிலேயே, கல்லூரியின் பல நூலகங்களில் ஒன்று. பிரம்மாண்டமானது. உலக இலக்கியம் எல்லாம் கிடைக்கும். தமிழ் கூட. தொல்காப்பியம் தொடங்கி, தமிழன்பன் வரை. நவீன தமிழ் கவிதைகள் இங்கு தான் படிக்க தொடங்கினேன். சில்லென்ற ஏரிக்காற்று! கூடவே தமிழ்! இனிமை! இனிமை! (அண்ணா நூலகத்தை விட இது அளவில் பெரியது என்பது என் கணிப்பு என சொல்லி சைக்கிள் கேப்பில் கலைஞரை சீண்டிக் கொள்கிறேன் 🙂

மின்னணுவியல்
மின்னணுவியல்

அங்கிருந்த கணிணியியல் துறை பேராசிரியர்கள் கல்விப்புல ரீதியாக முக்கிய ஆய்வுகள் செய்து, தத்தம் துறைகளில் உலக அளவில் அறியப்படும் ஆளுமைகள். இவர்களிடம் பாடம் படித்தது என் அதிர்ஷ்டம். எனது ஆய்வுப் படிப்பில் நேரடித் தொடர்பு கொண்ட மூன்று பேராசிரியர்கள் பற்றி சொல்லி விட்டு, கதையை முடிப்போம்.

முதலாமவர் பேராசிரியர் ஆன் கான்டன் (Anne Condon). முதல் பத்தியில் சொன்ன வினவு பாணி கட்டுரை எழுதினால் அவசியம் குறிப்பிட வேண்டியவர். கல்விப்புல ஆளுமை என்பதை தாண்டி, தமது மாணவர்கள் மீது அதிக அக்கறை காட்டுபவர். பழகுவதற்கு இனிமையான, மென்மையானவர். கையைப் பிடித்து என்னை கல்விப்புலத்தின் அடுத்த தளத்துக்கு அழைத்து சென்றவர். எனக்கு தியரி துறையின் உட்பிரிவான computational complexity theory என்பதை அறிமுகப் படுத்தி பால பாடம் சொல்லித்தந்தவர். கணிணியல் என்பதில் இருந்து விலகி, மேலும் இருகிப் போய், கணிதவியளுக்குள் நுழைந்து விடும் துறை இது. முனைவர் பட்டத்துக்கான எனது ஆய்வுகள் இத்துறையில் அமைந்தன. இவரது மேற்பார்வையில் ஒரு வருடம் படித்து வந்தேன். துரதிர்ஷ்டவசமாக, இவர் வேறொரு பல்கலைக்கு மாற்றலாகிப் போனதில் மேய்ப்பரற்ற ஆடாக சில காலம் சுற்ற வேண்டி வந்தது.

இரண்டாமவர் பேராசிரியர் டீட்டர் வான் மெல்கபீக் (Dieter van Melkebeek). வயதில் இளையவர் என்பதால், ஒரு நண்பரோடு பழகுவது போன்ற உணர்வு இருந்ததுண்டு. அங்கு படித்த காலம் முழுதும், எனக்கு பல வகையிலும் ஆதரவும், ஊக்கமும் அளித்தவர். சர்வாகம பண்டிதர் என சொல்லத்தக்க வகையில், மேலே சொன்ன உட்துறையில் ஆழ அகலம் முழுதும் அறிந்தவர். எனக்கு நேரடி பழக்கம் உள்ளவர்களுள் இத்துறையில் மிகப் பரந்த ஞானம் கொண்டவர் இவர் என்பேன். எந்த சிறு செயலிலும் அதில் இவர் காட்டும் சிரத்தை அதிசயிக்கத் தக்கது. மிகக் கடினமான பாடங்களைக் கூட ஒரு சிறு பிறழலும் இன்றி இவர் சொல்லித் தருவது மலைக்க வைக்கும்.

மூன்றாமவர் பேராசிரியர் ஜின்-யி சாய் (Jin-Yi Cai). எனது முனைவர் பட்ட ஆய்வு மேற்பார்வையாளர். கணிதவியல் பாடங்கள் இரண்டு விதங்களில் சொல்லித்தர முடியும். முதலாவது, சுஜாதா வார்த்தையில் சொல்வதானால், ஆஸ்பத்திரி சுத்தத்தோடு, கணிதத்துக்கே உரிய கறார்தனத்தோடு பேசுவது. இவரது பாணி இரண்டாவது வகையிலானது. கறார் தனத்தை சற்று குறைத்துக் கொண்டு, பாடத்தின் உட்கருவை (intuition) உயிருடன் கொண்டு வந்து கண்முன் நிறுத்தும் முறை. ஒரு முறை பயின்றால் ஜென்மத்துக்கும் மறக்காது. நான் பாடம் பயின்றவர்களுள் இந்த இரண்டாவது பாணி ஆசிரியர்களில் இவரையே முதன்மையானவராக கருதுகிறேன். இத்தனைக்கும் இவர் சொல்லித் தந்தவை மிகச் சிக்கலான பாடங்கள். பாட விஷயங்கள் முற்றுணர்ந்து உடம்பில் ஊறிப் போனால் தான் இப்படி செய்ய முடியும். இத்துறையில் பயின்ற பாடங்களில் மனதில் பதிந்து போனவை பெரும்பாலும் இவர் சொல்லித் தந்தவை என சொல்லி குரு வணக்கம்!

பிஸ்கட்
“பிரித்தால் தான் பிஸ்கட் தின்ன முடியும்”

எந்த விஷயத்திலும் உட்கருவை உய்த்துணர வேண்டும் என்பதில் அசாத்திய உறுதி கொண்டவர். ஒரு நிகழ்வு பற்றி குறிப்பிட விருப்பம். ஆரம்ப காலத்தில், ஒரு ஆய்வுக் கட்டுரையை படித்து வந்து விளக்க சொல்லி இருந்தார். நான் மேம்போக்காக படித்து விட்டு செல்ல, அவர் அடுத்த கட்ட கேள்விகள் கேட்கத் தொடங்கினார். “அதெல்லாம் தெரியாது சார்” என சொல்ல அவருக்கு மிகுந்த கோபம் வந்து விட்டது. மேஜை மேல் இருந்த பிரிக்கப்படாத பிஸ்கட் பாக்கட்டை எடுத்தவர், “இப்படியே பிரிக்காமல் அழகு பார்த்தால் பிஸ்கட் தின்ன முடியுமா” என்றார். “முடியாது சார்”. “பின்பு என்ன செய்ய வேண்டும்?”. “பிரிக்க வேண்டும் சார்”. “ஆமாம், பிரித்தால் தான் பிஸ்கட் தின்ன முடியும்” என்றவர் ஆக்ரோஷமாக பாக்கட்டை பிரிக்க அறை எங்கும் பிஸ்கட் சிதறியது! அதிர்ச்சி அடைந்தாலும், எனது ஆய்வுத்துறை தொடர்பாகவாவது, மேம்போக்காக படித்தல் என்பது விலகிய தருணம்! மறக்க முடியாதது!

இதைப் படி, அதை பற்றி யோசி என அறிவுரை சொல்லிவிட்டு சும்மா இருந்துவிட மாட்டார். தானும், ஏர்பிடித்து சேற்றில் இறங்கும் ஜாதி! ஒரு முறை, நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த ஒரு கணிதவியல் புதிரை நாம் தீர்க்க முயல்வோம் என சொல்லி குண்டு தூக்கி போட்டார்! அது தொடர்பாக படித்து சிந்தித்து, ஒரு ஆறு மாதம் போன பின், புதிருக்கு விடை கிடைத்து விட்டதாக ஒரு பிரமை! இரண்டு நாட்கள் முழுதும், வேறு வேலை வெட்டி ஏதுமின்றி, விடை சரிதானா என விவாதித்துக் கொண்டிருந்தோம். முடிவில், “ஆம்! தீர்ந்தது இது” என முடிவு செய்து விட்டோம். அடுத்த பத்து தினங்கள் வானத்தில் மிதந்து கொண்டிருந்தேன். அவர் ஏதும் பேசவில்லை. பிறகு, ஒரு நாள் இரவு இரண்டு மணிக்கு தொலைபேசி அழைப்பு! “உமது தீர்வில் குற்றம் இருக்கிறது” என நக்கீரர் போல சொல்லி பலூனில் ஊசி குத்தி விட்டார்! நான் சும்மா இருந்த பத்து நாளும், மனிதர் சிந்தித்து கொண்டு இருந்திருக்கிறார்! பிறகு, குற்றத்தை பற்றியும், இடிந்து வீழ்ந்த மணல் மாளிகையில், கல்லு, மண்ணு, ஜல்லி என ஏதாவது ஒப்பேத்த முடியுமா என்பது பற்றியும் இரண்டு நாள் விவாதித்துக் கொண்டிருந்தார்! முடிவில், தேத்த முடிந்ததை பொறுக்கி எடுத்து கட்டமைத்ததில் எனது ஆய்வு ஏட்டின் (thesis) முக்கிய அத்தியாயம் கிடைத்தது!

ஒரு சாதாரண மாணவனாக இருந்த எனக்கு கணிதம், கணினியியல் துறைகளில் உள்ளார்ந்த ஆர்வம் ஏற்படுத்தி என்னை உயர்த்திய இந்த ஆசான்களுக்கு ‘ஆசார்ய தேவோ பவ’ என சொல்லி குரு வந்தனங்கள். நான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுமாறு, இவர்கள் போலவே நல்லதோர் கல்லூரி ஆசிரியராகி கல்விப்பணி செய்ய வேண்டும் என்ற ஆசை துளிர்த்துள்ளது. மேலும், இன்றளவும் மேற்சொன்ன துறைகளில் ஆய்வு என்ற பெயரால் ஏதோ ஒரு மூலையில் எலி பிடித்துக் கொண்டிருக்கிறேன். இந்த செயலை ஒரு கல்வி நிறுவன சூழலில் இன்னும் சிறப்பாக செய்ய முடியும் என்ற எண்ணமும் தோன்றுகிறது. இப்போது தொங்கிக் கொண்டிருக்கும் கிளையை விட்டு விட்டு மேலே சொன்ன கிளைக்கு தாவுவது சில பல காரணங்களால் தடை பெற்றுள்ளது. முக்கியக் காரணம் காந்தியடிகள். வாய் நிறைய ஜோரா புன்னகையை ஏந்திச் சிரிப்பாரே அவரேதான்! இப்போதிருக்கும் கிளையில் அதிகம் சிரிப்பவர், கிளை தாவினால் குறைவாக சிரிப்பார் என்றொரு தயக்கம்! தயக்கங்களும், தடைகளும் விரைவில் விலக திருமால் அருள் புரியட்டும்!

வெங்கடேசன்

தாழ்த்தப்பட்டோரின் உயிர் கிள்ளுக்கீரையா ?

5

வ்வொரு ஆண்டும் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாளையொட்டி, தேவர் சாதியினரின் அபிமானத்தைப் பெற பல அறிவிப்புகள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் வெளியிடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு தேவர் சாதிவெறிக்கு வக்காலத்து வாங்கும் சம்பத் கமிசன் அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பரமக்குடியில் நடந்த தாழ்த்தப்பட்டோரின் தலைவரான இம்மானுவேல் சேகரன் குருபூசையின் போது, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆறு பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு குறித்து கள ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்ட பல உண்மையறியும் குழுக்கள், இந்தப் படுகொலையானது அரசின் ஆதரவுடன், போலீசாரால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை அம்பலப்படுத்தியுள்ளன.

08-caste-atrocity-1ஆனால், படுகொலை நடந்த இரண்டாவது நாளன்றே தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி சம்பத் தலைமையிலான விசாரணை கமிசன், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர கலவரத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு அவசியமானது” என இப்படுகொலையை நியாயப்படுத்துவதுடன், பதற்றமான சூழலில் விவேகத்துடன் செயல்பட்டதாக போலீசாரைப் பாராட்டுவதோடு, தனது ஆதிக்கசாதி மனோபாவத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

“தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்களுள் ஒருவரான ஜான் பாண்டியன், 11.9.2011 அன்று பரமக்குடியில் உள்ள இம்மானுவேல் சேகரனின் சமாதிக்குச் செல்வதாக இருந்தார். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பழனிகுமார் என்ற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சிறுவன், வேறு சாதியைச் சேர்ந்தவர்களால் கொலை செய்யப்பட்டான்.அந்த இறப்பு குறித்தும் விசாரிக்க ஜான் பாண்டியன் பரமக்குடிக்கோ,பச்சேரிக்கோ சென்றால், அவரது ஆதரவாளர்களுக்கும், தேவர் சாதியினருக்குமிடையே மோதலை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் போலீசுக்கு ஏற்பட்டது.

எனவே, தூத்துக்குடி உயர் போலீசு அதிகாரிகள் உத்தரவுப்படி 11.9.2011 அன்று ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டார். இதற்கெதிராக அவரது ஆதரவாளர்கள் 200 பேர் பரமக்குடி – ஐந்துமுனை சந்திப்பில் சாலை மறியல் செய்தனர். இந்நிலையில், அவ்வழியே தாழ்த்தப்பட்டவர்களின் இன்னொரு தலைவரான கிருஷ்ணசாமி செல்லவே, இவருக்கு மட்டும் அனுமதியளித்துத் தங்களது தலைவரைத் தடுத்து விட்டதாகக் கோபமடைந்த ஜான்பாண்டியன் ஆதரவாளர்கள் கிருஷ்ணசாமியையும் அவரது ஆதரவாளர்களையும் வாகனங்களையும் தாக்கினர். இதனைத் தடுக்க முயன்ற பரமக்குடி துணை போலீசு கண்காணிப்பாளர் கணேசனும் மற்ற போலீசாரும் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், போலீசார் தடியடி நடத்தி கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர். ஆனால் கலவரக்காரர்கள் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தைத் தாக்கி, அங்கிருந்த போலீசாரை உள்ளே வைத்துப் பூட்டினர். இதனால் கமுதி வட்டாட்சியர் சிவக்குமார் துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்டார். வன்முறையைக் கட்டுப்படுத்தவும், மற்ற சாதியினர் வசிக்கும் பகுதிக்கு வன்முறை பரவுவதைத் தடுக்கவும் இந்தத் துப்பாக்கிச் சூடு அவசியம் என்று கமிசன் கருதுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தப்படாமலிருந்தால் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் அதிகமாக ஏற்படுவதோடு, தென்மாவட்டங்களுக்கும் வன்முறை பரவியிருக்கும். எனவே, இந்தத் துப்பாக்கிச் சூடு அவசியமானது” என்று சம்பத் கமிசன் அறிக்கை கூறுகிறது.

2011-ஆம் ஆண்டில் இம்மானுவேல் சேகரன் குருபூசை அரசு விழாவாக அறிவிக்கப்படும் என்று தாழ்த்தப்பட்டவர்கள் பெரிதும் நம்பியிருந்த சூழலில், அதனைத் தடுக்க வேண்டும் என்று ஆப்பநாடு மறவர் சங்கம் உள்ளிட்ட தேவர் சாதிவெறி அமைப்புகள் பகிரங்கமாகப் பேசி வந்ததுடன், அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தனர். கலவரத்தைத் தூண்ட வேண்டுமென்றே இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் பூசப்பட்டிருந்த கான்கிரீட் தளத்தில் ‘தேவர் பேரவை’ என்று எழுதி, அதில் மலம் கழித்து அசிங்கப்படுத்தித் தாழ்த்தப்பட்டோரை ஆத்திரமூட்டியுள்ளனர்.

ஆனால், ஜான்பாண்டியன் கைது செயப்பட்டது போல, தேவர் சாதியைச் சேர்ந்த தலைவர்கள் எவரும் ஏன் கைது செயப்படவில்லை என்ற கேள்வியே கமிசன் அறிக்கையில் இல்லை.

ஜான்பாண்டியனை பரமக்குடிக்குள் வர விடாமல் தடுத்துக் கலவரத்தைத் தூண்டும் நோக்கத்திற்காகவே முத்துராமலிங்கத் தேவரை ஒன்பது என சுவற்றில் எழுதியதாக அவதூறு பரப்பி, பச்சேரியில் சிறுவன் பழனிகுமாரைத் தேவர் சாதி வெறியர்கள் கொலை செய்தனர். சிறுவன் பழனிகுமாரைக் கொன்றவர்களை ஏன் இது வரை கைது செய்யவில்லை என்றும் சம்பத் கமிசன் கேட்கவில்லை.

ஜான்பாண்டியன் ஆதரவாளர்கள் ஏறத்தாழ 50 பேர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தபோதே, போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி இப்பிரச்சினையைத் தீர்த்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல், கூட்டம் அதிகரிக்கும் வரை காத்திருந்து விட்டு, திடீரென தடியடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போலீசார் கண்ணீர்ப் புகைகுண்டு போடவில்லை என்றும், முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரெனக் கூட்டத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர் என்றும் நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். பத்திரிகைகளில் வந்த புகைப்படங்களின்படி, போலீசார் பெரும் கற்குவியல்களைச் சாக்குப்பையில் வைத்துக்கொண்டு போராட்டக்காரர்கள் மீது வீசுகின்றனர். எனில், போலீசார் இவ்வளவு கற்களைக் முன்கூட்டியே கொண்டு வந்து குவித்தது ஏன்?

முதலில் துப்பாக்கியால் சுட்டவர் கணேசன் என்கிற உதவி போலீசு கண்காணிப்பாளர். இவர்தான், ஜான்பாண்டியன் ஆதரவாளர்களால் படுமோசமாகத் தாக்கப்பட்டவர் என கமிசன் அறிக்கை கூறுகிறது. தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவர் எவ்வாறு துப்பாக்கிச் சூட்டிற்கு வந்து முதல் ஆளாகச் சுட்டார் என நீதிபதி சம்பத் கேட்கவில்லை. சென்னை அடையாறில் துணை ஆணையராக இருந்த செந்தில்வேலன், பரமக்குடிக்கு ஏன் கொண்டுவரப்பட்டார் என்றும் விசாரிக்கவில்லை.

துப்பாக்கிச் சூடு நடந்துமுடிந்த பிறகு, போராட்டக்காரர்களை விரட்டிவிட்டுத் தங்களது “வஜ்ரா” வாகனத்திற்கும் பிற வாகனங்களுக்கும் போலீசார்தான் தீ வைத்தனர் என்று இப்பகுதிவாழ் மக்கள் கூறுகின்றனர். இதைப் பற்றி சம்பத் கமிசன் வாய் திறக்கவேயில்லை.

மதியம் இரண்டு மணிக்குத் தொடங்கிய போலீசின் தாக்குதல் மாலை 5 மணி வரை தொடர்ந்தது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள், துடிதுடித்து இறந்து கொண்டிருக்கையில் அவர்களை அப்படியே கொளுத்தும் வெயிலில் போட்டு வைத்திருந்ததுடன், உயிரிழந்த ஒருவருடைய சடலத்தை மனிதாபிமானமே இல்லாமல் நாயைத் தூக்குவது போலத் தூக்கிச் சென்று போலீசார் வீசியெறிந்தனர். கண்ணில் பட்ட தாழ்த்தப்பட்டோரை சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தி இரத்தம் வரும்வரை அடித்துத் துவைத்துள்ளனர். போலீசின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பயந்து அருகிலிருந்த மருத்துவமனைக்குள் தஞ்சம் புகுந்தவர்களையும் விடாமல் விரட்டிச் சென்று, வெளியே இழுத்து வந்து அடித்துள்ளனர்.

இவை அனைத்தும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளின் உண்மையறியும் அறிக்கைகளில் பதிவாகியுள்ளன. இவ்வாறு இந்தப் படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதற்குப் பல ஆதாரங்களும் சாட்சிகளும் இருக்கும் போது, அவற்றில் ஒன்றைக் கூட விசாரிக்காத நீதிபதி சம்பத், நடந்த எல்லாவற்றிற்கும் தாழ்த்தப்பட்டவர்களே காரணம் என்கிறார். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களைப் பற்றிக் கூறும் போது “கலவரங்களில் ஈடுபடும் வகையில் தவறாக வழி நடத்தப்பட்டு அதனால் பலியானவர்கள்” என்று கூறுகிறார். கொல்லப்பட்டவர்களது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கிய அரசின் பெருந்தன்மையை வேறு பாராட்டியுள்ளார்.

இறுதியாக, இது போன்ற சாதித் தலைவர்களின் குருபூசையைத் தடை செய்ய வேண்டும் என்று நீதிபதி சம்பத் அரசிற்குப் பரிந்துரைக்கிறார். இதற்காக “இம்மானுவேல் சேகரனின் குருபூசையை ‘டம்பம் அடிப்பதற்கான நிகழ்ச்சி’ எனப் பலரும் கூறியுள்ளனர்; அந்த விமர்சனங்களுக்கு அடிப்படைக் காரணம் உள்ளது” எனத் தனது அறிக்கையில் கூறியுள்ளார். ‘தேசியத் தலைவர்’ என்ற பெயரில் முத்துராமலிங்கத்தின் குருபூசையை அரசு விழாவாகக் கொண்டாடும்போது, தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களது தலைவரான இம்மானுவேல் சேகரனின் குருபூசை நடத்தினால், அது டம்பம் அடிப்பதற்கான நிகழ்ச்சியாம்! அதனைத் தடை செய்ய வேண்டுமாம்!

“மாடு தின்னும் புலையா, உனக்கு மார்கழி தரிசனம் ஒரு கேடா?” எனக் காலம்காலமாகக் கேட்கப்படும் ஆதிக்கசாதியின் அதே குரல்தான் சம்பத் கமிசனின் அறிக்கையிலும் எதிரொலிக்கிறது.

– கதிர்
______________________________
புதிய ஜனநாயகம், 2013 டிசம்பர்
______________________________

தொழிலாளர் நலச்சட்டங்களை மீறுகின்ற முதலாளிகள் மீது நடவடிக்கை எடு !

2

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

சூர் குளோபல் ஃபார்மா டெக் என்ற மருந்துக் கம்பெனியில் வேலை செய்து வந்த எல்லேசு குமார் என்கிற கண் பார்வையற்ற தொழிலாளி சமீபத்தில் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 18 ஆண்டுகளாக விசுவாசமாக வேலை செய்து வந்த அவரை, நிர்வாகம் ஈவிரக்கமில்லாமல் வேலையை விட்டே விரட்டியது. இதனால் மனமுடைந்து தன்னேயே மாய்த்துக் கொண்டார். அவர் தன்னுடைய மரண வாக்கு மூலத்தை செல்போனில் பதிவு செய்து வைத்ததால் இந்தக் கொடூரம் வெளி உலகுக்குத் தெரிய வந்தது. இல்லையெனில் முதலாளித்துவ பயங்கரவாதம் மறைத்து வருகின்ற பல படுகொலைகளைப் போலவே இதுவும் இருட்டில் புதைக்கப்படிருக்கும். எல்லேசு குமார் போலவே பல்லாயிரம் தொழிலாளர்களது வேலையை தினம் தோறும் பறித்து வருகிறது, முதலாளித்துவம். புதுப்புது உத்திகளைக் கையாண்டு வேலை பறிப்பு, தற்கொலைகள் மற்றும் ஆலைச்சாவுகளைத் தீவிரமாக்கி வருகின்றனர், முதலாளிகள்.

நிரந்தரத் தொழிலாளியை வைத்துக் கொண்டால் கொள்ளை லாபத்தைச் சுருட்ட முடியாது என்பதற்காக எல்லா வேலைகளிலும் காண்ட்ராக்ட், பயிற்சித் தொழிலாளர்களை புகுத்தி நிரந்தரத் தொழிலாளர்களை வேட்டையாடுகிறது முதலாளித்துவம். உதாரணமாக, ஒசூர் அசோக்லேலாண்டில் ஒரே ஒரு கையெழுத்தில் 599 நிரந்தரத் தொழிலாளர்களை உபரித் தொழிலாளர்களாக அறிவித்து, வேறு இடத்துக்கு துரத்திவிட்டது ஆலை நிர்வாகம். இனிமேல், இவர்களது வேலைச்சுமை அனைத்தையும் காண்டிராக்ட் தொழிலாளர்களும் ட்ரெயினி தொழிலாளர்களும் தான் சுமந்தாக வேண்டும். மேலும், இந்த காண்டிராகட் – ட்ரெயினி தொழிலாளர்களை 10-12 மணிநேரம் கசக்கிப் பிழிந்து தன்னுடைய லாபத்தை மேலும், மேலும் குவித்துக் கொண்டு, கொழுத்து வருகின்றனர் முதலாளிகள்.

லாபவெறி பிடித்தலையும் முதலாளித்துவம், தொழிலாளி வர்க்கத்தின் உயிரைப் பற்றி மயிரளவுக்கு கூட கவலைப்பட்டதில்லை. ஓடுகின்ற எந்திரத்தில் வைக்கப்படும் சென்சார் கருவியால் உற்பத்தி வேகம் குறைந்துவிடும் என்று சொல்லி, சென்சாரை டம்மியாக்கி விடுகின்றனர். இதனால், உடல் நசுங்கி செத்தவர்கள் பலர்.

  • இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன்பாக நோக்கியா கம்பெனியில் தலை நசுங்கிச் செத்தார், அம்பிகா என்றொரு தொழிலாளி.
  • சமீபத்தில் புதுச்சேரியில் உள்ள திருபுவனம் சிப்காட்டில், சூப்பர் ஃபீல்டு என்கிற ஆலையில் சென்சாரை நீக்கி, குணசேகரன் என்கிற தொழிலாளியின் உயிரைப் பறித்தான் முதலாளி.
  • சில நாட்களுக்கு முன்பு கூட கும்மிடிப்பூண்டியில் உள்ள ‘துல்சியான்’ என்கிற இரும்பு உருக்கு ஆலையில் பாய்லர் வெடித்து 3 தொழிலாளர்கள் கொடூரமாக செத்தனர்.
  • ஆம்பூர் போன்ற பகுதிகளில் இருக்கும் எண்ணற்ற தோல் தொழிற்சாலைகளில் தோலை சுத்தம் செய்யும் அமிலத்தில் காலுறையோ, கையுறையோ இல்லாமல் வேலை செய்து வெந்து மடிகின்றர் தொழிலாளர்கள். பலருக்கு புற்றுநோய் வந்து தவிக்கின்றனர்.

பல “அம்பிகா”க்களை பலிவாங்கி செல்போன் தயாரிப்பில் கொடி கட்டிப் பறந்த நோக்கியா கம்பெனிக்கு நெருக்கடி வந்த போது ரூ. 45,360 கோடிக்கு விலை வைத்து மைக்ரோ சாஃப்ட் என்கிற அமெரிக்க கம்பெனிக்கு விற்று விட்டான் முதலாளி. கம்பெனியை வாங்கிய மைக்ரோ சாஃப்ட் முதலாளியோ, கம்பெனி கைமாறிய சில நாட்களிலேயே ’’நோக்கியா மியூசிக் ஸ்டோர்’’ கிளைகளை மூடி விட்டான். இதனால், பல தொழிலாளர்கள் வேலையை இழந்தனர். மேலும், நோக்கியாவுக்கு உதிரி பாகங்கள் சப்ளை செய்த பி.ஒய்.டி (BYD) போன்ற கம்பெனிகளும் வேலை பறிப்பு வேட்டையைத் துவங்கி விட்டன. ஆட்குறைப்பு, வேலை பறிப்பு வேட்டையைத் துவங்கி விட்டன. ஆட்குறைப்பு செய்து லாபத்தை காப்பாற்றிக் கொண்டன. லாபமோ அவனுக்கு; இழப்போ நமக்கு! இதுதான் முதலாளித்துவத்தின் நீதி!

வேலையை பறி கொடுத்த தொழிலாளர்கள் மீண்டும், எங்காவது ஒரு கம்பெனியில் காண்டிராக்ட் தொழிலாளியாகவோ, ட்ரெயினிங் தொழிலாளியாகவோ பிழைப்பை ஓட்ட வேண்டியுள்ளது.

இவ்வாறு வேலைக்குப் போகும் காண்டிராக்ட் / ட்ரெயினிங் தொழிலாளிக்கு வெறும் 6000, 7000 ரூபாய் மட்டுமே சம்பளமாக தரப்படுகிறது. இந்த அற்ப சம்பளத்தை வைத்துக் கொண்டு வீட்டு வாடகைக்கும், அரைகுறை சோத்துக்கும் திண்டாடி வருகின்றனர் தொழிலாளர்கள். முதலாளிகளிடம் நியாயமான சம்பளம் கேட்டாலோ, வேலை நிரந்தரம் பற்றி கேட்டாலோ, வேலை பறிப்பு என்கிற கத்தியைச் சொருகுகின்றான் முதலாளி.

வேறு வழியில்லாமல் இவ்வாறு கொத்தடிமை போல வேலை செய்தாலும் துன்பங்களிலிருந்து மீள முடியவில்லை. இதனால்தான் பள்ளிப்பாளையம், குமாரபாளையம் பகுதியில் உள்ள நெசவுத் தொழிலாளர்கள் முதலாளியிடம் சிறுகச் சிறுக வாங்கிய கடனை அடைக்க சிறுநீரகத்தையே விற்கின்றனர். இல்லையெனில் தங்களை மாய்த்துக் கொள்கின்றனர்.

வேலையைக் கொடுப்பதல்ல முதலாளித்துவம்; மாறாக, தொழிலாளி வர்க்கத்தின் வேலையைப் பறித்து உயிர் வாழ்கிற பயங்கரவாதமே முதலாளித்துவம். ‘’குறைவான ஆட்கள்; மலையளவு லாபம்’’ என்பதுதான் முதலாளித்துவக் கொள்கை. பிரம்மாண்ட ஆலைகள்; பிரம்மாண்ட சந்தை; ஒவ்வொரு கார்ப்பரேட் முதலாளியும் எண்ணற்ற தொழில்களில் செய்துள்ள முதலீடு போன்றவைகள் முதலாளிகளது திறமையால் கிடைக்கப் பெற்ற வளர்ச்சி அல்ல. அவனது வளர்ச்சியின் ஒவ்வொரு படிக்கட்டிலும் தொழிலாளி வர்க்கத்தின் ரத்தம் கொட்டியிருக்கிறது.

முதலாளிகளுக்கு அரசு செய்து வரும் உதவிகள், அவர்களது அசுர வளர்ச்சியை மேலும், மேலும் துரிதப்படுத்துகிறது. இதற்கேற்பவே, தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற மறுகாலனியாக்கக் கொள்கைகளைத் தீவிரமாக்கி வருகிறது. மேலும், எண்ணற்ற தாராளமாகத் தரப்படும் கடன்கள்; தேசிய நெடுஞ்சாலை – மேம்பாலங்கள் முதல் தங்கு தடையற்ற மின்சாரம் வரையிலான உள்கட்டுமான வசதிகள் ஆகியவற்றை நமது வரிப்பணத்தில் இருந்துதான் செய்து கொடுக்கிறது அரசு.

உதாரணமாக, கடந்த 8 ஆண்டுகளில் 31 லட்சத்து 11 ஆயிரம் கோடிக்கு வரிச்சலுகைகளை வாரி வழங்கியுள்ளது. பத்தே முதலாளிகள் மட்டும் வாங்கியுள்ள கடன் தொகை 5.4 லட்சம் கோடி. எஞ்சிய முதலாளிகள் வாங்கியுள்ள கடன்களோ சொல்லி மாளாது. முதலாளிகள் இந்தக் கடன்களைத் திருப்பிக் கட்டா விட்டால், அதனை தள்ளுபடி செய்து அவர்களை கவுரவிக்கிறது, அரசு. கடந்த 3 மாதங்களில் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன் ரூ. 14,549 கோடிகள்.

இதுமட்டுமல்லாமல், முதலாளிகளது தயாரிப்புகளை தங்கு தடை இல்லாமல் எடுத்துச் செல்வதற்காக தங்க நாற்கரசாலைகள் மற்றும் மேம்பாலங்கள் கட்டுவதற்காக ரூ.1,46,626 கோடிகளை வாரி இறைத்துள்ளது. முதலாளிகளுக்கு சேவை செய்வதற்காக கடந்த 8 ஆண்டுகளில் அரசு செலவிட்ட தொலையானது ரூ. 40 லட்சம் கோடிகளைத் தாண்டி விட்டது. இவை அனைத்தும் மக்களுடைய வரிப்பணம்தான்.

மக்களுடைய சொத்தைத் தின்று கொழுத்துள்ள ஈனப்பிறவிகளான இந்தியத் தரகு முதலாளிகளும், பன்னாட்டு முதலாளிகளும் உழைக்கும் மக்களுக்கு மட்டும் எந்த சலுகைகளையும் தராதே என்கின்றனர். அரசோ, உழைக்கும் மக்களாகிய நமக்கு வழங்கப்படும் அற்ப சலுகைகளையும் மானியங்களையும் பறித்து வருகிறது.

அரசானது, பன்னாட்டு முதலாளிகள் மற்றும் உள்நாட்டு தரகு முதலாளிகளின் ஏவல்நாய் தான் என்பதையும் தினந்தோறும் நிரூபித்து வருகிறது. தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற மறுகாலனியாக்க நடவடிக்கைகளைத் தீவிரமாக்கி, அதன் மூலம் இந்தியத் தரகு முதலாளிகளும், பன்னாட்டு முதலாளிகளும் கொழுத்து வருவதற்கு துணை நிற்கிறது. மறுபுறத்திலோ, தொழிலாளி வர்க்கம் மற்றும் ஏனைய ஒடுக்கப்படும் வர்க்கங்களின் வாழ்வுரிமையைப் பறித்து அவர்களை மரணக் குழியில் தள்ளிவருகிறது.

நமக்கு வேண்டியது, கவுரவமான வாழ்க்கை. வறுமையும் வேலைபறிப்பும் தற்கொலைகளும் ஆலைச்சாவுகளும் இல்லாத நிறைவான வாழ்க்கை. இது, மறுகாலனியாக்கத்தையும் முதலாளித்துவ பயங்கரவாதத்தையும் அதற்கு அடியாள் வேலை செய்து வரும் அரசின் ஒடுக்குமுறையையும் முறியடிக்காமல் சாத்தியமில்லை. இதற்கு தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையைத் தவிர குறுக்கு வழி ஏதுமில்லை.

மத்திய, மாநில அரசுகளே!

  • பணிநிரந்தரச் சட்டம், காண்டிராக்ட் முறை ஒழிப்புச் சட்டம் உள்ளிட்ட தொழிலாளர் நலச்சட்டங்களை கறாராக அமுல்படுத்து!
  • தொழிலாளர் நலச்சட்டங்களை மீறுகின்ற முதலாளிகள் கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடு!
  • புதிய தொழிற்சங்கம் துவங்க விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் பதிவு செய்! முதலாளிகள் கையாளுகின்ற ‘’ஒர்க்கர்ஸ் கமிட்டி’’ என்கிற சதியினை தடை செய்!
  • எல்லா தொழில்களிலும் குறைந்த பட்ச ஊதியமாக ரூ. 15,000 நிர்ணயம் செய்!
  • பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பும், ஊதிய சமத்துவமும் வழங்கு!
  • தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற மக்கள் விரோத, மறுகாலனியாக்கக் கொள்கைகளைக் கைவிடு!

[நோட்டிசைப் பெரிதாகப் பார்க்க படங்களின் மீது கிளிக் செய்யவும்]

ஓசூர் ஆர்ப்பாட்டம்

முதலாளித்துவம் கொல்லும்! கம்யூனிசமே வெல்லும்!
தொழிலாளர் நலச்சட்டங்களை மீறுகின்ற முதலாளிகள் மீது கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடு!

பேரணி – ஆர்ப்பாட்டம்

தொடங்கி வைப்பவர் : தோழர். செந்தில் குமார், மாவட்ட செயற்குழு, பு.ஜ.தொ.மு.
ஆர்ப்பாட்டத் தலைமை : தோழர். பரசுராமன், மாவட்ட தலைவர், பு.ஜ.தொ.மு.
உரைகள் : பல்வேறு தொழிற்சங்க தலைவர்கள்
நன்றியுரை : தோழர். சங்கர், மாவட்ட செயற்குழு, பு.ஜ,தொ,மு,

21-12-2013

பேரணி : மாலை 5 மணிக்கு, ஒசூர் தாலுக்கா அலுவலகம் முதல்
ஆர்ப்பாட்டம் : மாலை 6 மணிக்கு, ஒசூர் நகராட்சி அலுவலகம் முன்பு

புஜதொமு ஆர்ப்பாட்டம்

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிருஷ்ணகிரி – தருமபுரி – சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு – 9788011784 –ஒசூர்.

தேவயானியை கைது செய்ததில் என்னடா தவறு ?

155

தேவயானி கோப்ரகடேயின் தந்தை உத்தம் கோப்ரகடே மகாராஷ்டிரா மாநில இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். மும்பையில் பிறந்து வளர்ந்த தேவயானி மவுண்ட் கார்மல் பள்ளியில் படித்து சேத் ஜி எஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பட்டம் பெற்றார். மருத்துவராக பணி புரிவதை ‘தியாகம்’ செய்து, அவரது உறவினரான 1985-ம் ஆண்டு இந்திய வெளியுறவுப் பணி அதிகாரி அஜய் எம் கோண்டானேவின் அடியொற்றி 1999-ம் ஆண்டு இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்தார்.

தேவயானி கோப்ரகடே
தேவயானி கோப்ரகடே

பாகிஸ்தான், இத்தாலி, ஜெர்மனி நாடுகளில் இந்திய தூதரகங்களின் அரசியல் பிரிவில் பணியாற்றிய பிறகு, பெரிதும் விரும்பப்படும் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணி நியமனம் பெற்றார்.

2012-ம் ஆண்டு நியூயார்க்கில் இந்திய தூதரகத்தின் அரசியல், பொருளாதாரம், வணிகம் மற்றும் பெண்கள் விவகாரங்களுக்கான துணைத் தூதராக நியமிக்கப்பட்டதும், அங்கு தனக்கு வீட்டு வேலை செய்வதற்காக ஆள் தேட ஆரம்பித்திருக்கிறார் தேவயானி.

சங்கீதா ரிச்சர்ட் என்ற பெண் மும்பையில் உள்ள தேவயானியின் வீட்டில் அவரை சந்தித்திருக்கிறார். அமெரிக்காவில் தனது வீட்டில் தங்கி குழந்தைகளை பார்த்துக் கொள்ளவும், வீட்டு வேலைகள் செய்யவும் ஆள் தேடிக் கொண்டிருப்பதாகவும் ரூ 25,000 சம்பளமும், ரூ 5,000 ஓவர் டைம் ஊதியமாகவும் தருவதாக சொல்லியிருக்கிறார். சங்கீதாவின் வீட்டு வேலை செய்யும் திறனை மதிப்பிடும் விதமாக தேவயானி தனது வீட்டில் அவரை பல நாட்கள் வேலை வாங்கியிருக்கிறார்.

தூதரக பாஸ்போர்ட் பெறப் போவதாக சொல்லி சங்கீதாவின் சாதாரண இந்திய பாஸ்போர்ட்டை தேவயானி வாங்கிக் கொண்டிருக்கிறார்.

அக்டோபர் (2012) மாதம் சங்கீதாவின் சார்பாக தேவயானி அனுப்பிய விசா விண்ணப்பத்தில், சங்கீதாவுடன் பேசியிருந்த சம்பளத்துக்கு மாறாக, வீட்டு வேலைகள் செய்வதற்கான மாதச் சம்பளமாக சங்கீதாவுக்கு $4,500 வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். நவம்பர் 1-ம் தேதி விசா நேர்முகத்துக்கு சென்ற சங்கீதாவிடம் பணி ஒப்பந்தம் முதலான ஆவணங்களை கொண்டு வரும்படி கூறியிருக்கிறார் அமெரிக்க தூதரக அதிகாரி.

அமெரிக்க வெளியுறவுத் துறையின் விதிமுறைகளின் படி அமெரிக்காவில் பணி புரிய நியமிக்கப்படும் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் தமது தனிப்பட்ட ஊழியர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், அல்லது வேலையாட்களை அமெரிக்கா அழைத்து வருவதற்காக ஏ-3 விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்ப நடைமுறையின் போது வேலைக்கு அமர்த்தப்படுபவரை நேர்முகம் கண்டு, அவர் வேலை செய்யவிருக்கும் அமெரிக்க பகுதியில் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக வாழ்வதற்கு போதுமான சம்பளம் அவருக்கு வழங்கப்படும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

அதற்காக பணிக்கு அமர்த்தப்பபடுபவரும், பணிக்கு அமர்த்துபவரும் கையொப்பமிட்ட ஒப்பந்தம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அந்த ஒப்பந்தத்தில், என்ன வேலை செய்யப் போகிறார் (வீட்டு வேலை, தோட்ட வேலை, குழந்தைகளை பார்த்துக் கொள்ளுதல்) என்ற விபரம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். வேலை நேரத்தையும், ஒரு வாரத்துக்கு வேலை செய்யும் கால அளவையும் வரையறுத்திருக்க வேண்டும். வீட்டு வேலை செய்பவர்கள் வாரத்துக்கு 35 – 40 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். வாரத்துக்கு குறைந்தது ஒரு நாள் விடுமுறையாக வழங்கப்பட வேண்டும். சம்பளத்துடன் கூடிய விடுப்புகள், மருத்துவ விடுப்புகள், விடுமுறை விடுப்புகள் விபரங்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

அமெரிக்க விசா
அமெரிக்க விசா நடைமுறைகளை ஏமாற்றினார் தேவயானி.

வேலைக்கான ஊதியம் அமெரிக்க மத்திய மற்றும் உள்ளூர் சட்டங்களின் படியான குறைந்த பட்ச ஊதியத்தை விட அதிகமாக இருக்க வேண்டும். தங்குமிடம், மருத்துவச் செலவு, மருத்துவக் காப்பீடு, பயணம், உணவு போன்றவற்றுக்காக சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படக் கூடாது.

வழக்கமான வேலை நேரத்துக்கு அதிகமாக  வேலை செய்தால் அந்த நேரத்துக்கு ஓவர் டைம் சம்பளம் கொடுக்கப்பட வேண்டும். சம்பளம் ஊழியரின் வங்கிக் கணக்கில் போடப்பட வேண்டும். அந்த வங்கிக் கணக்கை வேலை கொடுப்பவரோ அவரது குடும்ப உறுப்பினர்களோ கட்டுப்படுத்தக் கூடாது. ஊழியரின் பாஸ்போர்ட், பணி ஒப்பந்தம் முதலான எந்த ஆவணத்தையும் வாங்கி வைத்துக் கொள்ளக் கூடாது.

இந்த விதிகளின்படி தேவயானி ஒரு பணி ஒப்பந்தத்தை தயாரித்திருக்கிறார். அதன்படி சங்கீதா வாரத்துக்கு 40 மணி நேரம் மட்டும் வேலை செய்வார் என்றும், ஒரு மணி நேர வேலைக்கு $9.75 ஊதியம் (நியூயார்க் சட்டப்படி குறைந்த பட்ச ஊதியம்) வழங்கப்படும் என்றும் விசா நேர்முகத்தில் சொல்லுமாறு  தேவயானி சங்கீதாவுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். வேலை நேரம் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் மதியம் 12 வரை, மாலை 6.30 முதல் 8.30 வரை சனிக்கிழமைகளில் காலை 8.00 முதல் மதியம் 1 மணி வரை என்று சொல்ல வேண்டும். ஞாயிற்றுக் கிழமை முழு நாளும் விடுமுறை வழங்கப்படும் என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அமெரிக்க சட்டப்படி  வழங்கப்பட வேண்டிய சம்பளத்துடன் கூடிய விடுப்பு நாட்கள், மருத்துவ விடுப்பு நாட்கள், ஆண்டு விடுமுறை விடுப்பு நாட்கள் போன்ற விபரங்களும் சேர்க்கப்பட்டிருந்தன. ரூ 30,000 சம்பளம் குறித்து அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்றும் தேவயானி கூறியிருக்கிறார்.

இந்த பணி ஒப்பந்தத்தின் அடிப்படையில், நேர்முகத்திற்கு பிறகு நவம்பர் 14, 2012 அன்று அமெரிக்க தூதரகம் சங்கீதாவுக்கு விசா வழங்கியிருக்கிறது.

நவம்பர் 23-ம் தேதி விமான நிலையத்துக்கு போவதற்கு முன்பு சங்கீதாவையும் அவரது கணவர் பிலிப்பையும் தனது வீட்டுக்கு அழைத்த தேவயானி சங்கீதாவை இன்னொரு ஒப்பந்தத்தில் கையொப்பமிட சொல்லியிருக்கிறார். அதன் படி சங்கீதாவுக்கு ரூ 25,000 மாதச் சம்பளமும், ஞாயிற்றுக் கிழமைகளிலும், கூடுதல் மணிகளிலும் வேலை செய்வதற்கு ரூ 5,000 ஓவர்டைம் ஊதியமும் வழங்கப்படும். சம்பளமும் ஓவர்டைமும் சேர்த்து ரூ 30,000-ஐ தாண்டக் கூடாது. ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறை என்பதைத் தவிர்த்து வேலை நேரம், வார வேலை நேர வரம்பு, சம்பளத்துடன் கூடிய விடுப்பு நாட்கள், விடுமுறை விடுப்பு நாட்கள் பற்றி இந்த ஒப்பந்தத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தூதரக விசா விதிகள்
‘தூதரக விசா விதிகளின்படி அப்படி செய்வது அமெரிக்க சட்டங்களுக்கு விரோதமானது’

நவம்பர் 24-ம் தேதி தேவயானியும், சங்கீதாவும் நியூயார்க் போய் சேர்கின்றனர். நவம்பர் முதல் ஜூன் வரை தேவயானியின் வீட்டில் வேலை செய்த சங்கீதா 40 மணி நேர வரம்பை விட பெருமளவு அதிக நேரம் வேலை (ஒரு நாளுக்கு 18 மணி நேரம் வரை) செய்திருக்கிறார். அவருக்கு ஒத்துக்  கொண்ட ரூ 30,000-ஐ விட குறைவாகவே சம்பளமே கொடுக்கப்பட்டிருக்கிறது. போகப் போக வேலைச் சுமையும், எதிர்பார்த்த ஊதியம் கிடைக்காததும் தாங்க முடியாமல் ஆகியிருக்கிறது.

தனது வாராந்திர ஓய்வு நாளில் வெளியில் வேலை செய்யப் போவதாக அனுமதி கேட்டிருக்கிறார். சங்கீதா. ‘தூதரக விசா விதிகளின்படி அப்படி செய்வது அமெரிக்க சட்டங்களுக்கு விரோதமானது’ என்று அதை தடை செய்திருக்கிறார் தேவயானி. தனக்கு சாதகமாக இருந்தால், அமெரிக்க சட்டங்களை மீறி குறைந்த சம்பளம் கொடுக்கலாம், அதிக நேரம் வேலை வாங்கலாம், விசா விண்ணப்பத்தில் பொய்யான தகவல்களை கொடுக்கலாம், அமெரிக்க தூதரக அதிகாரியிடம் பொய் சொல்லும்படி கற்றுக் கொடுக்கலாம். ஆனால், சங்கீதா ஒரு நாள் வெளியில் வேலை செய்தால் அமெரிக்க சட்டம் மீறப்பட்டு விடும் என்ற அவரது அக்கறை சுயநலமே அன்றி வேறல்ல.

ஜூன் மாதம் பொருட்கள் வாங்க கடைக்குப் போன சங்கீதா வீட்டுக்குத் திரும்பவில்லை. ஜூலை 8-ம் தேதி சங்கீதா நியூயார்க்கின் மன்ஹாட்டனில் உள்ள ஒரு குடியேற்றங்கள் தொடர்பான வழக்கறிஞரின் அலுவலகத்துக்குப் போயிருக்கிறார். அதைத் தொடர்ந்து இந்திய தூதரகத்திலிருந்து 4 அதிகாரிகள் அங்கு போய் சேர்ந்திருக்கின்றனர். பேச்சு வார்த்தையின் போது தான் செய்த வேலைக்கான சம்பளமாக ஒரு தொகையையும், தனது சாதாரண இந்திய பாஸ்போர்ட்டையும் தந்து விடும்படி சங்கீதா கேட்டிருக்கிறார்.

இதற்கிடையில் தேவயானியின் தந்தையான ஐஏஎஸ் அதிகாரியின் செல்வாக்கில் இந்தியாவில் சங்கீதாவின் கணவர் பிலிப்பும் குழந்தையும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். அமெரிக்காவிலிருந்து அவர்களுடன் தொலைபேசியில் பேசிய சங்கீதா, வழக்கறிஞர் அலுவலகத்தை விட்டு போக மறுத்திருக்கிறார். இந்திய தூதரக அதிகாரிகள் அவர் வெளி வருவதை எதிர்பார்த்து காத்திருந்திருக்கின்றனர். பின்னர், அமெரிக்க காவல் துறைக்கு புகார் கொடுக்கப்பட்டு அவர்கள் சங்கீதாவை அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

யஷ்வந்த் சின்ஹா
“அமெரிக்க தூதரக ஊழியர்களின் ‘துணைவர்களாக’ விசா வழங்கப்பட்டவர்கள் ஓரினச் சேர்க்கையை தடை செய்யும் சட்டப் பிரிவின் கீழ் கைது செய்ய வேண்டும்”.

அதே நாளில் இந்திய அரசு சங்கீதாவின் இந்திய பாஸ்போர்ட்டை ரத்து செய்தது. அமெரிக்காவில் சட்ட விரோத குடியேறி ஆகி விட்ட அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் படி அமெரிக்க அரசிடம் இந்திய தூதரகம் கோரிக்கை விடுத்தது.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேவயானி சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட முறையீட்டின் அடிப்படையில் தேவயானிக்கு எதிராக இந்தியாவிற்கு வெளியில் எந்த வழக்கும் தொடரக் கூடாது என்று சங்கீதாவுக்கு தடை விதிக்கும் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது. சங்கீதாவின் கணவர் பிலிப்புக்கும் சம்மன் அனுப்பியது நீதிமன்றம். சங்கீதா மீது இந்தியக் குற்றப் பிரிவு 387, 420 மற்றும் 120 B-ன் கீழ் தெற்கு டெல்லி  மாவட்டத்தின் மாநகர போலீஸ் வழக்கு பதிவு செய்து கைது வாரண்ட் பிறப்பித்தது. சங்கீதா இந்தியா திரும்பினால் அவர் உடனே கைது செய்யப்படுவார்.

இதைத் தொடர்ந்து அமெரிக்க அரசு தேவயானிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது. நியூயார்க் நகரின் நீதித்துறை தலைவர் பிரீத் பராரா தேவயானியை கைது செய்ய உத்தரவிட்டிருக்கிறார். டிசம்பர் 12-ம் தேதி தனது குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு திரும்பும் போது, அவரை அமெரிக்க அரசு மார்ஷல்கள் கைது செய்து அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

தேவயானியை அவரது குழந்தைகள் முன்பு கைது செய்த்தாகவும், கை விலங்கு இட்டு அழைத்துச் சென்றதாகவும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. போதை மருந்து பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுடனும், பாலியல் குற்றவாளிகளுடனும் சேர்த்து வைத்திருந்ததாகவும், நிர்வாணமாக்கி சோதனை செய்ததாகவும் தேவயானி குற்றம் சாட்டியிருக்கிறார். தனக்கு தூதரக ஊழியர்களுக்கான விதி விலக்கு இருப்பதாக பல முறை கூறியும் அமெரிக்க அதிகாரிகள் அதற்கு செவி சாய்க்கவில்லை என்று தேவயானி கூறியிருக்கிறார்.

பிரீத் பராரா
நியூயார்க் நகர நீதித் துறை அரசு வழக்கறிஞர் பிரீத் பராரா

நியூயார்க் நகர நீதித் துறை அரசு வழக்கறிஞர் பிரீத் பராரா, “தேவயானி குழந்தைகள் முன்பு கைது செய்யப்படவில்லை. அவருக்கு கை விலங்கு இடப்படவில்லை. அவரது தொலைபேசி கைப்பற்றப்படவில்லை. சுமார் இரண்டு மணி நேரத்துக்கு பல இடங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள அனுமதித்திருக்கின்றனர். தமது காரில் அமர வைத்து தொலைபேசி அழைப்புகளை செய்ய ஏற்பாடு செய்த காவலர்கள், அவருக்கு காபி கொண்டு கொடுத்ததுடன், சாப்பிடுவதற்கான உணவும் வாங்கித் தருவதாக கூறியிருக்கின்றனர். அமெரிக்க காவல் துறை நடைமுறையின்படி தேவயானி தனி அறையில் ஒரு பெண் அதிகாரியால் முழுமையாக சோதனை செய்யப்பட்டார். தனக்கோ, சக கைதிகளுக்கு ஊறு விளைவிக்கும்படியான எந்த பொருளையும் உடலில் மறைத்து வைத்திருக்கக் கூடாது என்பதை உறுதிப் படுத்தும் விதமாக இந்த சோதனை செய்யப்பட்டது” என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இது இந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் கர்ஜித்திருக்கிறார்கள். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழுவை சந்திப்பதற்கு நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமார் மறுத்திருக்கிறார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும், பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் அவர்களை பார்க்க மறுத்து விட்டிருக்கின்றனர். இந்திய தூதரகப் பெண் ஒருவருக்கு அமெரிக்காவில் இழைக்கப்பட்ட அநீதியைத் தொடர்ந்து தான் இந்த நிலையை எடுத்ததாக மோடி டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்காவில் இந்தியத் தூதர் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக இந்தியாவில் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கான சிறப்பு சலுகைகளை ரத்து செய்திருக்கிறது இந்திய அரசு. அமெரிக்க தூதரக அதிகாரிகளும், அவர்களது குடும்பத்தினரும் சிறப்பு தூதரக அடையாள அட்டைகளை திரும்பக் கொடுத்து விடுமாறு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க தூதரகங்கள் இறக்குமதி செய்யும் வெளிநாட்டு மதுவகைகள் இனிமேல் அனுமதிக்கப்படாது என்றும் அறிவித்திருக்கிறது. அமெரிக்க  தூதரக அதிகாரிகளுக்கான சிறப்பு விமான நிலைய அனுமதிச் சீட்டும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, “எங்க ஆள் மேல் கை வைச்சா உங்களுக்கு தருகிற மேட்டுக் குடி சலுகைகளை எல்லாம் பிடுங்கிக் கொள்வோம்” என்று செல்லமாக மிரட்டுகிறார்களாம்.

அமெரிக்க தூதரகங்களில் பணி புரியும் இந்திய ஊழியர்கள், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் இவற்றின் விபரங்களை கேட்டிருக்கிறது மத்திய அரசு. இந்தியாவில் உள்ள அமெரிக்க பள்ளிகளில் பணி புரியும் ஊழியர்களின் பட்டியலையும் கேட்டிருக்கிறது. அமெரிக்க தூதரக அதிகாரிகளின் மனைவி/கணவர் முறையான பணி விசா இல்லாமலேயே பள்ளிகளில் பணி புரிவது இது வரை இந்திய அரசுக்கு தெரியாதாம்.

அமெரிக்க குறைந்த பட்ச ஊதியச் சட்டத்தின் கீழ் தேவயானி கைது செய்யப்பட்டது போலவே, இந்தியாவில் அமெரிக்க தூதரக ஊழியர்களின் ‘துணைவர்களாக’ விசா வழங்கப்பட்டவர்கள் ஓரினச் சேர்க்கையை தடை செய்யும் சட்டப் பிரிவின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.

“நூறு டாலரை விட்டெறிந்தால், நம் வீட்டு வேலைகளை எல்லாம் செய்து, காலடியில் உத்தரவுக்கு காத்திருக்கும் வீட்டு வேலை செய்யும் பெண்கள் கிடைப்பது தெற்கு ஆசியாவின் வரம். ஒரு சுல்தானைப் போல வாழ்வதற்கு உலகில் வேறு எந்த இடத்திலும் சாத்தியமில்லை”.

வீட்டு வேலை செய்யும் பெண்
வீட்டு வேலை செய்யும் பெண்

இந்தியாவுக்கு வரும் மேற்கத்திய நடுத்தர வர்க்கத்தினரின் புகழுரை இது. வீட்டு வேலைகளை எல்லாம் செய்து, குழந்தையை பார்த்துக் கொண்டு, மிஞ்சியிருக்கும் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு, கொடுத்த இடத்தில் தூங்கிக் கொண்டு வீட்டோடு வேலை செய்யும் பெண் என்பது இந்திய நடுத்தர வர்க்கத்தின், குறிப்பாக வட இந்தியர்களின் கனவு வாழ்க்கையின் ஒரு இன்றியமையாத பகுதி. ஓய்வு நேரம், வார இறுதி, வருடாந்திர விடுமுறை என்பதெல்லாம் தேவைப்படாத உழைக்கும் செக்கு மாடுகள் போல பயன்படுத்தப்படும் வர்க்கம் அது.

சம்பளத்தைக் கூட மொத்தமாக  பின்னர் கொடுத்தால் போதும். பண்டிகை, திருமணம் என்று வரும் போது ஒரு புடவை வாங்கிக் கொடுத்து அடிமையை மகிழ்விப்பதோடு ஆண்டைகளின் கடமை முடிந்து விடுகிறது. “குறைந்த பட்சம், இங்கே நல்ல சாப்பாடாவது கிடைக்கிறது. கிராமத்தில் இருந்தா அரைப் பட்டினியாக இருந்து கஷ்டப் படக் கூடியவங்களுக்கு இது சொர்க்கம்” என்று தன்னைத் தானே பாராட்டிக் கொள்கிறவர்கள் நவீன இந்தியாவின் இந்த நவீன ஆண்டைகள்.

இந்த நவீன ஆண்டைகளின் பிரதிநிதிதான் இந்திய தூதரக அதிகாரி தேவயானி. வட இந்திய ஊடகங்களிலும், நாடாளுமன்றத்திலும், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்களின் அறிக்கைகளிலும், இணையத்திலும், பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி நிலையங்களிலும் தேவயானிக்காக வெளிப்படும் தேசப்பற்றை இந்த பின்னணியிலிருந்துதான் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களது ‘தேச’த்தில் சங்கீதாக்களுக்கு உரிமை இல்லை.

கையால் மலம் அள்ளுவதையே யோகமாக செய்யச் சொல்லும் மோடி போன்றவர்களுக்கு சங்கீதாக்கள் தமது ஆண்டைகளுக்கு சேவை செய்யும் இந்து கர்ம யோகத்திலிருந்து பிறள்வது மன்னிக்க முடியாத குற்றம். அதற்காக சங்கீதாவை தண்டிப்பது, அவரது கணவரையும் குழந்தையையும் கைது செய்வது, அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிப்பது தேவயானிகளின் பிறப்புரிமை. சங்கீதாவின் சார்பில் அமெரிக்க நீதித் துறை தேவயானியை கைது செய்வது இந்திய தேசப் பெருமைக்கு கொடுக்கப்பட்ட அடி. தேவயானி மீதான வழக்கின் முக்கிய சாட்சிகளான சங்கீதா குடும்பத்துக்கு அமெரிக்கா விசா வழங்கி அமெரிக்காவில் புகலிடம் கொடுப்பது இந்திய தேசத்துக்கு எதிரான நடவடிக்கை. இப்படியெல்லாம் பொங்குகிறார்கள் இந்திய தேசபக்தர்கள்.

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்கின் ஹோட்டல் அறை முதல், இந்தியத் தூதரின் பாத்ரூம் வரை ஒட்டுக் கேட்டு உளவு பார்ப்பது பிரச்சனையில்லை.

ஆனால் அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் எனும் அடிமை ஒப்பந்த்தை நிறைவேற்றியே ஆக வேண்டுமென்று அமெரிக்கா மிரட்டிய போதும், வால்மார்ட்டை திறந்தே ஆக வேண்டுமென்று கொலை மிரட்டல் விட்ட போதும் அதை தலைமேல் ஏற்றுக் கொண்டு அனுமதித்ததும் இந்த தேசபக்தர்களின் தேசபக்திக்கு ஒரு சான்று. இவையெல்லாம் நாட்டின் இறையாண்மை, சுயமரியாதை, ஆக்ரமிப்பை எதிர்ப்பதாக இவர்களுக்கு கொஞ்சம் கூட தோன்றவில்லை.

அமெரிக்க உளவுத் துறை மன்மோகன் சிங்கின் ஹோட்டல் அறை முதல், இந்தியத் தூதரின் பாத்ரூம் வரை ஒட்டுக் கேட்டு உளவு பார்ப்பது குறித்த ஆதாரங்களை ஸ்னோடன் வெளியிட்ட போது, இந்த தேச பக்தர்கள் வாலை சொருகிக் கொண்டார்கள். இதெல்லாம் ஊர் உலகத்தில் நடக்காத்தா என்ன என்று அசடு வழிய அடிமைத்தனத்தை நியாயப்படுத்தினார்கள். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கும் போதும், கைது செய்து அழைத்துச் செல்லும் போதும் இவர்களின் தேசபக்தி காணாமல் போயிருந்தது. இன்னும் சிங்கப்பூரில் கைது செய்யப்படும் இந்திய தொழிலாளிகள், வளைகுடா நாடுகளில் வதைபடும் இந்தியர்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தாலும் இந்திய அரசோ இல்லை, இந்த தேசபக்தர்களோ மூச்சு கூட விடுவதில்லை.

பாரதப் பெண் ஒருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது குறித்த இவர்களது ஆவேசம் சத்தீஸ்கரில் சோனி சோரி என்ற பழங்குடி பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்டு, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, அவரது பிறப்பு உறுப்பிலும், ஆசன வாயிலும் கற்களை சொருகப்பட்ட போது அவர்களது பூஜை அறைகளுக்குள் பதுங்கி இருந்திருக்கிறது.

எனவே தேசபக்தியிலும் கூட வர்க்கம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. தேவயானிக்கு ஆதரவாக எழுப்பப்படும் குரல் மேட்டுக்குடியின் நலனை முன்வைத்து மட்டும் பேசுகிறது. அதனால்தான் இங்கே சங்கீதா வில்லியாக உருவாக்கப்படுகிறார். ஒன்று மட்டும் புரிகிறது, இவர்களது இந்தியாவிலும், தேசபக்தியிலும் உழைக்கும் இந்திய மக்களுக்கு இடமில்லை.

தேவயானிக்கு ஆதரவாக ஏகப்பட்ட லா பாயிண்டுகளை எடுத்து அடுக்குகிறார்கள். அதில் ஒன்று அவர் தலித் என்பது. மாயாவதி அப்படித்தான் அமெரிக்காவை கண்டித்திருக்கிறார். ஐஏஎஸ் அப்பாவுக்கு பிறந்து டாக்டர் படிப்பு படித்து, ஐஎஃப்எஸ் முடித்து துணைத் தூதராக வேலை செய்யும் தேவயாணி வாழ்வில் தலித் என்ற ஏழை சாதியின் அடையாளம் எங்கே இருக்கிறது? இல்லை ஒரு சாதாரண தலித்துக்கு இந்த வாய்ப்பு கிடைக்குமா என்ன? தலித்துக்களில் வசதி வாய்ப்புகளுடன் செட்டிலாகி விட்ட சில கருப்பு பார்ப்பனர்களை தலித் என்று அழைத்து மரியாதை செய்வது உண்மையில் தலித் மக்களை அவமதிப்பது ஆகும்.

அடுத்து தேவயானிக்கு வியன்னா உடன்படிக்கையின் படி தூதராக கருதப்பட்டு கைது செய்யப்பட்டிருக்க கூடாது என்கிறார்கள். தூதரக நடவடிக்கைகள் மட்டுமே வியன்னா உடன்படிக்கையில் வரும். இங்கே தேவயானி செய்திருப்பது சட்டத்தை ஏமாற்றுவது, ஒரு தொழிலாளரை சுரண்டுவது ஆகிய கிரிமினல் குற்றங்களாகும். தூதரகத்தில் வேலை செய்யும் ஒருவன் பாலியல் வன்முறையோ இல்லை கொலையோ செய்து விட்டால் அவனுக்கு விலக்கு உண்டு என்று வாதிட முடியுமா என்ன?

அடுத்து கைவிலங்கு, நிர்வாண சோதனை என்று மானம் போய்விட்டதாக பேசுகிறார்கள். இந்தியாவில் கூட போலிசால் கைது செய்யப்படும் நபர் நீதிமன்ற காவலுக்கு முன்னர் காவல் நிலைய லாக்கப்பில் வெறுமனே ஜட்டியுடன்தான் தங்க வைக்கப்படுவார். காரணம் அந்த நபர் இதர உடைகளை வைத்து தற்கொலைக்கு முயலக் கூடாது என்பதுதான். இப்படித்தான் அமெரிக்காவில் கைவிலங்கும், உடை களைந்த சோதனையும் போடுகிறார்கள். இதில் என்ன தவறு?

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்திய அரசின் கோரிக்கை என்ன? நீங்கள் கொள்ளையடிக்க எங்கள் நாட்டை உங்களுக்கு திறந்து விடுகிறோம், ஆனால் எங்கள் அதிகாரிகளை கொஞ்சம் மதிப்போடு நடத்துங்கள் என்பதே. இதைத்தாண்டி இந்திய அரசுக்கோ இல்லை மேட்டுக் குடிக்கோ துளியளவும் தேசபக்தியோ இல்லை சுயமரியாதையோ கிடையவே கிடையாது.

இதனால் அமெரிக்கா ஏதோ தொழிலாளருக்கு முழு உரிமை அளிக்கும் நாடு என்று கருது முடியாது. முதலாளிகளின் நலன்களுக்காக அவர்களும் பல்வேறு சட்டவிரோத குடியேற்றங்களையும், வேலை நிலையங்களையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். மேலும் சட்டப்படியே ஒரு தொழிலாளரை சுரண்ட முடியும் என்பதற்கு வால்மார்ட் உள்ளிட்டு பல்வேறு தொழிலாளர் சங்கங்கள் நடத்தும் போராட்டச் செய்திகளை பார்க்கலாம்.

இறுதியாக பொருளாதார ரீதியாக இந்தியாவை கொள்ளையடிக்கும் அமெரிக்காவை இப்படி வெத்து வேட்டு பிரச்சினைகளுக்காக எதிர்ப்பது போல ஒரு வடிகால் இருக்கட்டும் என்று ஆண்டையும் அடிமையும் பேசி வைத்து செய்கிறார்களோ தெரியவில்லை.

எது எப்படியோ தேவயானி கைதுக்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கத் தேவையில்லை. ஆனால் சங்கீதா குடும்பத்தினரை அச்சறுத்தும் இந்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

–    செழியன்

லோக்பாலா, மக்களை ஏமாற்றும் ஜோக்பாலா ?

6

2011-ம் ஆண்டு டிசம்பரில் லோக்பால் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறினாலும்  மாநிலங்களவையில் நிறைவேறவில்லை. அங்கே காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பது ஒரு காரணம். தற்போது டில்லி சட்டமன்ற தேர்தலில் ஊழல் எதிர்ப்பை முக்கியமாக முன் வைத்து ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றிருப்பது பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. 2ஜி, நிலக்கரி, வெஸ்ட்லேண்ட், காமன்வெல்த், ஆதார் என்று அன்றாடம் அணிவகுக்கும் ஊழல் செய்திகள் நாட்டு மக்களிடம் வெறுப்பையும் தோற்றுவித்திருந்தன.

லோக்பால் மசோதா
லோக்பாலை எப்படியாவது நிறைவேற்றியாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் காங்கிரஸ் மற்றும் பாஜக இருவருக்குமே இருந்தது.

அதன் பொருட்டே அண்ணா ஹசாரே முதலான காந்தியக் கோமாளிகளின் போராட்டத்திற்கு ஆரம்பத்தில் கொஞ்சம் வரவேற்பு இருந்தது. இதனால் லோக்பாலை எப்படியாவது நிறைவேற்றியாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் காங்கிரஸ் மற்றும் பாஜக இருவருக்குமே இருந்தது. அதனாலேயே அவர்களது முரண்பாடு இந்த விசயத்தில் அழிய வேண்டும் என்ற சூழல் உருவானது. இருப்பினும் இந்த உண்மையை அவர்கள் மசோதாவில் திருத்தங்கள் செய்து நிறைவேற்றிக் கொள்வதாக சமாதானப்படுத்திக் கொண்டார்கள். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையாம்.

எனினும் நிறைவேற்றப்பட்ட லோக்பால் மசோதா உண்மையில் இத்தகைய பெருச்சாளிகளின் ஊழல் அமைப்பு முறையை மாற்றி விடாது என்று அவர்களுக்குத் தெரியும். மசோதாவின் ஷரத்துக்களை கொஞ்சம் ஆய்வு செய்து பார்த்தாலே இந்த உண்மையை விளங்கிக் கொள்ளலாம்.

லோக்பால் அமைப்பில் உள்ள எட்டு உறுப்பினர்களை யார் தெரிவு செய்வார்கள்? தெரிவு செய்யும் தேர்வுக் கமிட்டியில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதி, குடியரசுத் தலைவர் நியமிக்கும் 4 சட்ட உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். அதன்படி மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி நியமிக்கும் நால்வர் என காங்கிரசுக்கு ஐந்து இடங்களும், பாஜகவிற்கு ஓரிடமும், நீதிபதிக்கு ஓரிடமும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆக ஏழில் ஐந்து காங்கிரசு பெருச்சாளிகள் அல்லது அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தால் பாஜகவிற்கு ஐவர் என்றான பிறகு லோக்பால் அமைப்பு யாருக்காக செயல்படும்?

ஆக ஆளும் கட்சியால் தெரிவு செய்யப்படும் லோக்பால் அமைப்பிற்கு இருக்கும் அதிகாரங்கள் அனைத்தும் ஏற்கனவே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அதிகார அமைப்புகளோடு பத்தோடு ஒன்றாக கூடுமே அன்றி இதில் மக்களுக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாக நினைப்பது அபத்தம்.

ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பு ஊழல் தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையில் 12 பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தன. அதில் முன்னாள் மராட்டிய முதல்வர் அசோக் சவாணும் ஒருவர். ஆனால் தன்னை விசாரிப்பதற்கு ஆளுநர் அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு போட்டு வெற்றி பெற்றார் சவாண். அதன்படி சிபிஐ ஆளுநரிடம் அனுமதி கேட்ட போது மறுக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஆதர்ஷ் வழக்கில் சவணை சேர்த்து விசாரிக்க சிபிஐக்கு உரிமை இல்லை. இவ்வளவிற்கும் வழக்கின் போது சவாண் முன்னாள் முதல்வர்தான். இதன்படி பார்த்தால் நாளைக்கு ஒரு வழக்கில் ஒருவரை விசாரிப்பதற்கு முகாந்திரம் இல்லை என்று லோக்பால் சொல்லும்பட்சத்தில் இதே அமைச்சர் பெருச்சாளிகள் தப்பிக்க மாட்டார்களா? ஏனெனில் ஆளுநர் மட்டுமல்ல, லோக்பால் அமைப்பில் இருப்போரும் ஆளும் கட்சியின் ஜால்ராக்கள் எனும் போது என்ன வேறுபாடு?

லோக்பால் அமைப்பில் 50% நீதித்துறையை சேர்ந்தவர்களும், மீதிப்பேர் பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டவர்களும் இருப்பார்கள் என்று இதற்கு ஒரு சமூக நீதி அலங்காரத்தையும் அளித்திருக்கிறார்கள். உண்மையில் ஆளும் கட்சியில் இத்தகைய சமூகப் பிரிவுகளோடு பொறுப்பில் இருக்கும் நபர்களே இங்கும் இடம் பெறப் போகிறார்கள். லோக்பால் அமைப்பில் இருக்கும் பெண்களுக்குரிய இடத்தை காங்கிரசே தீர்மானிக்கும் என்றால் அதில் ஜெயந்தி நடராஜனைப் போன்ற சீமாட்டிகளன்றி வேறு யார் இடம் பெறுவர்?

தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கும் நீதிபதி வி.எம்.வேலுமணி நேற்று புதன்கிழமை 18.12.13 அன்று ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்றாராம். காரணம் கடந்த பத்தாண்டுகளில் அவர் அரசு வழக்குரைஞராக பணியாற்றியிருக்கிறார்.  ஜெயா ஆட்சிக்காலத்தில் அரசு வழக்குரைஞராவதற்கு என்ன தகுதி வேண்டும் என்பதை விளக்க வேண்டியதில்லை.

லோக்பால் அமைப்பு
லோக்பால் அமைப்பு கார்ப்பரேட் ஊழல் குறித்தும், பன்னாட்டு மற்றும் தரகு முதலாளிகளை விசாரித்து தண்டிப்பதற்கும் எந்த உரிமையையும் பெற்றிருக்கவில்லை.

மாநிலத்திலேயே இதுதான் கதி என்றால் மத்தியில் ஆளும் கட்சியினால் லோக்பாலில் நியமிக்கப்படும் முன்னாள் நீதிபதிகளின் நேர்மையும், நடுநிலைமையும் எப்படி இருக்கும்?

ஆக லோக்பால் அமைப்பில், தெரிவு செய்யப்படும் ஜனநாயகம் துளியும் இல்லை. நிலவுகின்ற அதிகார அமைப்புகளின், நபர்களின் ஆசியுடனும், ஆதரவுடனும் நியமிக்கப்படும் இந்த உறுப்பினர்கள் எந்த ஊழலை என்னவென்று விசாரிப்பார்கள்?

பிரதமரையே விசாரிக்கும் அதிகாரம் படைத்தது லோக்பால் எனும் உண்மைக்கு பின்னே பிரதமர்தான் இந்த லோக்பாலை கட்டுப்படுத்துகிறார் என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். எனினும் இந்த பூச்சாண்டி அம்சத்தைக் கூட ஜெயாவின் அதிமுகவும், முலாயமின் சமாஜ்வாதியும் ஏற்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை ஒரு பெயரளவு விசாரணைக்குக் கூட முதல்வர்களும், பிரதமர்களும் உட்பட்டவர்கள் இல்லையாம். சொத்துக் குவிப்பு வழக்கின் ஆவி அந்த அளவுக்கு ஜெயாவை தொல்லைப்படுத்துகிறது. ஒரு வேளை லோக்பாலும், லோக் ஆயுக்தாவும் வந்துவிட்டால் ஜெயாவைப் போன்றோரின் ஊழல் வழக்குகள் 20, 30 ஆண்டுகளுக்கு பதில் இரண்டு, மூன்று மாதங்களில் முடிந்து விடுமா என்ன? லோக்பால் விசாரணைக்கு காலவரம்பு உண்டு என்று கூறினாலும் அந்த வரம்பை தள்ளிப் போடும் உரிமையும் அதற்கு உண்டு.

லோக்பால் சட்டம் அமலாக்கப்பட்ட ஓராண்டிற்குள் மாநில அரசுகள் லோக் ஆயுக்தா அமைக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்று குறிப்பட்டிருந்தாலும் அப்படி கொண்டு வரவில்லை என்றால் என்ன நடவடிக்கை என்பதற்கு பதில் இல்லை. இதுதான் ஜெயாவிற்கு பிடித்த உள்குத்தாக இருக்குமோ தெரியவில்லை.

சிபிஐ உள்ளிட்ட அனைத்து விசாரணை அமைப்புகளையும் கண்காணிக்கவும், உத்திரவிடவும் லோக்பாலுக்கு உரிமை உள்ளதாம். இதனால் சிபிஐ உள்ளிட்ட போலிஸ் அமைப்புகளுக்கு இருக்கும் எஜமானர்களோடு வேறு புதிய எஜமானர்களும் சேர்ந்து கொள்ளுகிறார்கள். ஆனால் எஜமானனின் எண்ணிக்கை கூடினாலும் ஒரே ஆள்தான் மாறு வேடத்தில் மாறி மாறி வருகிறார் என்றாலும் ஆளுக்கு ஒரு பதில், கடிதம் என்ற வகையில் சிபிஐயில் உள்ளவர்கள் தலையில் அடித்துக் கொள்வார்கள். இதனால் ஊழல் வழக்குகளில் சிபிஐயின் குற்றப்பத்திரிகையை ஆளும் கட்சியின் அமைச்சர்களும், அதிகாரிகளும், முதலாளிகளும் சேர்ந்து தயாரிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

பிரதமர் தலைமையிலான தேர்வுக் குழுதான் சிபிஐயின் இயக்குநரை பரிந்துரைக்குமாம். தற்போதும் இதுதானே அய்யா மறைமுகமாக நடந்து வருகிறது? அதற்கு ஒரு சட்ட வடிவம் கொடுத்து விட்டதாலேயே சிபிஐ எனும் ஆளும் கட்சியின் வேட்டை நாய் இனி நடுநிலைமை சைவ நாயாகி விடுமா என்ன?

லோக்பாலால் மத்தியில் ஆளும் கட்சிக்கு வேறு ஒரு ஆதாயம் இருக்கிறது. மத்தியில் மாநிலக் கட்சிகளின் தயவில்தான் கூட்டணி ஆட்சி அமைக்க முடியும் என்ற காலத்தில் அத்தகைய மாநிலக் கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கும், பணிய வைப்பதற்குமான பேரங்களை நடத்த லோக்பால் பயன்படும். ஒரு வகையில் மாநில அரசுகளின் உரிமையில் இது தலையிடும் அதிகாரம் என்றும் சொல்லலாம். இதனால் மத்தியில் ஆளும் தேசியக் கட்சியோடு நட்பில் இல்லாத மாநில கட்சிகள் மற்றும் அரசுகளுக்கு லோக்பால் என்பது பூச்சாண்டி காட்டவும் பயன்படும்.

மிக மிக முக்கியமாக லோக்பால் அமைப்பு கார்ப்பரேட் ஊழல் குறித்தும், பன்னாட்டு மற்றும் தரகு முதலாளிகளை விசாரித்து தண்டிப்பதற்கும் எந்த உரிமையையும் பெற்றிருக்கவில்லை. ஊழல் என்றால் கலெக்டர் ஆபிஸ் பியூன் என்று பொது மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டிருக்கும் கருத்தோடு தற்போது அரசியல்வாதிகள், கொஞ்சம் அதிகாரிகள் சேர்ந்திருக்கிறார்களே அன்றி முதலாளிகள் யாரும் இந்த பட்டியலில் இல்லை. ஊடகங்களும், அறிஞர்களும், ஊழல் எதிர்ப்பு என்ஜிஓக்களும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊழல் முறைகளை திட்டமிட்டு மறைக்கின்றனர்.

தற்போது நாடு கண்ட ஊழல்கள் அனைத்திலும் மிக முக்கியமான பங்கு கார்ப்பரேட் நிறுவனங்களுடையதுதான் என்றான பிறகு லோக்பால் அமைப்பு அமைச்சர்களையும், அதிகாரிகளையும் மட்டும் விசாரிக்கும் என்றால் இது யாரை ஏமாற்ற?

அண்ணா ஹசாரே உண்ணாவிரதம்
லோக்பாலை கொண்டு வந்து வரலாற்றில் இடப் பிடித்து விட்டதாக ராலேகான் சித்தியில் 9 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த அண்ணா ஹசாரே தன்னுடைய ‘போராட்டத்தை’ முடித்திருக்கிறார்.

உண்மையில் கார்ப்பரேட் நிறுவனங்களையும் லோக்பால் விசாரிக்கும் என்று யாராவது பேசினாலே பங்குச் சந்தையை விழ வைத்து பேசியவரது நாக்கை ப.சிதம்பரத்தை வைத்தே அறுத்து விடுவார்கள். பன்னாட்டு நிறுவனங்களின் சக்தி அத்தகையது.

இலட்சம் கோடிகளில் செய்தியாக வரும் ஊழல் வழக்குகள் குறித்து நாட்டு மக்கள் அரசியல், அதிகார அமைப்புகளின் மீது கடும் வெறுப்பில் இருக்கிறார்கள் என்பதால் அதை தணிப்பதற்கு மட்டுமே லோக்பால் பயன்படும்.

மேலும் ஊழலும், நாட்டு மக்களின் பொதுச் சொத்த்துக்களும், இயற்கை வளங்களும் கொள்ளையடிக்கப்படுவது சட்டப்படியே நடக்கலாம் என்று மாறிவரும் காலத்தில் லோக்பால் இருந்தால் என்ன, இல்லாவிட்டால்தான் என்ன?

நிலைமை இப்படி இருக்க லோக்பாலை கொண்டு வந்து வரலாற்றில் இடப் பிடித்து விட்டதாக ராலேகான் சித்தியில் 9 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த அண்ணா ஹசாரே தன்னுடைய ‘போராட்டத்தை’ முடித்திருக்கிறார். ஊடகங்களும், நடுத்தர வர்க்கமும் இனி வரும் நாட்களின் அண்ணாவின் சாதனை என்று அழுது தீர்க்கும். அப்போது நட்சத்திர விடுதிகளின் காக்டெயில் பார்ட்டிகளில் முதலாளிகள் நமட்டுச் சிரிப்புடன் அதை கேலி செய்வார்கள். ஊழல் பணமோ பாதுகாப்பாக சுவிசிலும், அட்லாண்டிக் கடலில் உள்ள் ஆளில்லா தீவுகளின் வரியற்ற சொர்க்கத்திலும் பாதுகாப்பாக இருக்கும்.

நம்மைப் பொறுத்தவரை லோக்பால் எனும் ஜோக்பால் மசோதாவை அண்ணா ஹசாரே எனும் ஜோக்கர் கொண்டு வந்தார் என்பதை மறுக்க வேண்டியதில்லையே?

கிரிமினல் போலீசைக் காப்பதற்கு பாசிச ஜெயாவின் சீர்திருத்தச் சட்டம் !

0

டந்த மார்ச் மாதம் பஞ்சாபிலுள்ள தரண்தரண் மாவட்டப் பகுதியில் நடந்த சம்பவம் இது. தனது தந்தையோடு சாலையில் சென்று கொண்டிருந்த 22 வயதான இளம் பெண், தன்னைச் சிலர் கேலி செய்வதைப் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசாரிடம் சென்று முறையிட்டார். போலீசு பாய்ந்து சென்று அப்பெண்ணைக் கேலி செய்தவர்களைப் பிடிக்கவில்லை. மாறாக, அப்பெண்ணை நடுரோட்டிலேயே, பல பேர் கண்ணெதிரேயே, எவ்வித அச்சமோ, கூச்சநாச்சமோ இன்றி மிருகத்தனமாகத் தாக்கியது. இச்சம்பவம் தொலைக்காட்சிகளின் வழியே ஒளிபரப்பப்பட்டு நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியபோதும், அந்த போலீசு மிருகங்கள் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு அப்பால் தண்டிக்கப்படவில்லை.

கிரிமினல் போலீசு
தன்னை வக்கிரமாக சிலர் கேலி செய்வதாக புகார் சொன்ன பெண்ணை நடுத்தெருவிலேயே மிருகத்தனமாக தாக்கும் பஞ்சாப் போலீஸ்

”போலீசு உங்களின் நண்பன்” என ஆட்சியாளர்கள் கதைப்பதெல்லாம் வடிகட்டிய பொய் என்பதற்கு இந்தச் சம்பவம் இன்னொரு சான்று. ரவுடிகள், மாஃபியா குற்றக்கும்பல்களைக் கண்டு பொதுமக்கள் அச்சம் கொள்வது போலவே, போலீசைக் கண்டும் அவர்கள் மிரளுகிறார்கள். ஏதாவதொரு தேவைக்கு போலீசு நிலையத்திற்குச் செல்ல வேண்டுமென்றால் கூட, ஒரு வெறி பிடித்த மிருகத்தை நெருங்குவதைப் போலவே அச்சத்துடன் செல்கிறார்கள். கொட்டடிக் கொலை, சித்திரவதை, பாலியல் வன்முறை உள்ளிட்டு எந்தவொரு பஞ்சமா பாதகத்தையும் செய்யத் தயங்காத போலீசின் நடத்தை, பொதுமக்களைப் பெரும் பீதிக்குள்ளாக்கியிருக்கிறது.

பஞ்சாபில் நடந்த இந்தச் சம்பவத்தை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதி மன்றம், ”2006-இல் தான் அளித்த ஒரு தீர்ப்பில் குறிப்பிட்டிருந்த வழிகாட்டுதல்கள்படி எந்தெந்த மாநிலங்கள் போலீசு சீர்திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளன?” என்ற கேள்வியை எழுப்பியது. அத்தீர்ப்பு வெளியாகி ஏழு ஆண்டுகள் ஆகி விட்டாலும், தமிழ்நாடு உள்ளிட்டுப் பெரும்பாலான மாநிலங்கள் போலீசு சீர்திருத்தச் சட்டத்தை உருவாக்கவில்லை என்பதை அறிந்த உச்சநீதி மன்றம், இது குறித்த விசாரணையை அக்.20-க்குத் தள்ளி வைத்தது.

அவசர நிலை பாசிச காட்டாட்சிக்குப் பிறகு அமைந்த ஜனதா கட்சி கூட்டணி ஆட்சியில் போலீசு துறையில் கொண்டுவர வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றிப் பரிந்துரைகள் அளிக்க தேசிய போலீசு கமிசன் அமைக்கப்பட்டது. அக்கமிசன் அடுத்த மூன்றரை ஆண்டுகளில் இது குறித்து எட்டு அறிக்கைகளை அரசிடம் அளித்தாலும், ஜனதாவிற்குப் பின் வந்த எந்தவொரு அரசும் இப்பரிந்துரைகளை அமல்படுத்த முன்வரவில்லை. இந்நிலையில் பிரகாஷ் சிங், என்.கே.சிங் என்ற இரண்டு முன்னாள் போலீசு அதிகாரிகள் போலீசு கமிசனின் பரிந்துரைகளை அமல்படுத்த உத்தரவிடக் கோரி 1996-இல் உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்தனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முகம்மது இத்தீஸ் என்ற உடல் ஊனமுற்ற இளைஞரை மிருகத்தனமாக அமுக்கிப் பிடிக்கும் போலீசு
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முகம்மது இத்தீஸ் என்ற உடல் ஊனமுற்ற இளைஞரை மிருகத்தனமாக அமுக்கிப் பிடிக்கும் போலீசு

இவ்வழக்கை எடுத்துக்கொண்ட உச்சநீதி மன்றம் விசாரணையின் போக்கில் போலீசு சீர்திருத்தம் குறித்து ஆராய மேலும் மூன்று குழுக்களை அமைத்தது. இதற்கிடையே மைய அரசு புதிய போலீசு சட்டத்தை உருவாக்க சோலி சொரப்ஜி தலைமையில் குழுவொன்றை அமைத்தது. இக்குழுக்கள் அனைத்தும் கொடுத்த அறிக்கைகள் அடிப்படையில், ”மைய மற்றும் மாநில அரசுகள் புதிய போலீசு சட்டத்தை உருவாக்க வேண்டுமென்றும்; அதற்குக் காலதாமதம் ஆகும் என்பதால், போலீசு துறையில் உடனடியாகச் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஏழு வழிகாட்டுதல்களை” உருவாக்கி 2006-இல் தீர்ப்பளித்தது, உச்சநீதி மன்றம்.

போலீசு துறையை ஆளுங்கட்சியின் பிடியிலிருந்து விடுவித்து, அதனைச் சுதந்திரமானதாகவும், எவ்வித பாரபட்சமின்றி சட்டப்படி நடந்துகொள்ளும் பொறுப்புமிக்கதாகவும் சீர்திருத்துவதற்கு இந்த ஏழு வழிகாட்டுதலைகளைப் பிறப்பித்திருப்பதாகக் கூறியது, உச்சநீதி மன்றம். ”டி.ஜி.பி., எஸ்.பி. உள்ளிட்ட உயர் அதிகாரிகளைப் பணியமர்த்துவது, அவர்களை இடமாற்றம் செய்வது உள்ளிட்டவற்றை நிர்வகிப்பதற்கு மாநில பாதுகாப்பு ஆணையம், போலீசு பணியமைப்பு வாரியம் ஆகியவற்றை அமைக்க வேண்டும்; சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றப் புலனாவு ஆகிய இரண்டையும் தனித்தனியாகப் பிரிக்க வேண்டும்; போலீசின் அத்துமீறல்களை விசாரிக்க மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் காவல் புகார் பிரிவுகளை அமைக்க வேண்டும்” ஆகியவை இந்த ஏழு வழிகாட்டுதல்களுள் முக்கியமானவை.

‘‘உச்சநீதி மன்றத்தின் ஏழு வழிகாட்டுதல்களின் சாராம்சமே காவல்துறையை அரசு, அரசியல்வாதிகள், அதிகாரிகள் பிடியிலிருந்து விடுவித்து தன்னாட்சி தருவதும், அப்படித் தன்னாட்சி பெறும் அமைப்பைக் கடும் கண்காணிப்புக்கு உட்படுத்த தன்னாட்சி பெற்ற இன்னோர் அமைப்பை உருவாக்குவதுமே ஆகும்” என வாதாடுகிறார் பத்திரிகையாளர் ஞானி.

போலீசைத் தமது ஏவல் நாயாக ஆளுங்கட்சி பயன்படுத்தி வருகிறது என்பது எவ்வளவு உண்மையோ, அந்தளவிற்கு போலீசும் தன்னிச்சையாகவே பாலியல் வன்முறை, கொட்டடிக் கொலைகள், சித்திரவதை உள்ளிட்ட பல்வேறு அத்துமீறல்களிலும்; திருட்டு உள்ளிட்ட பல்வேறு மோசடிகளிலும் ஈடுபட்டு வருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. கீழ்நிலை போலீசார் மட்டுமின்றி, ஐ.பி.எஸ். அதிகார வர்க்கம் கூட பல்வேறு மனித உரிமை மீறல்களிலும் மோசடிகளிலும் ஈடுபட்டிருப்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. இப்படிபட்ட அத்துமீறல்களில் ஈடுபடும் போலீசாரை, அரசியல் தலைமை மட்டுமின்றி, பல்வேறு சமயங்களில் உச்சநீதி மன்றமும் தண்டிக்காமல் காப்பாற்றியிருப்பதற்கு பல்வேறு உதாரணங்களை -கே.பி.எஸ். கில் வழக்கு, ரத்தோர் வழக்கு, பிரேம்குமார் வழக்கு – காட்டலாம்.05-criminal-police-4

ஒருவரைக் கைது செயும்பொழுது என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என உச்சநீதி மன்றம் ஏற்கெனவே பதினோரு கட்டளைகளைப் பிறப்பித்திருக்கிறது. பெரும்பாலான கைதுகள் இந்தக் கட்டளைகளுக்குப் புறம்பாகத்தான் நடந்து வருகின்றன எனும்பொழுது, உச்ச நீதிமன்றத்தின் இப்புதிய வழிகாட்டுதல்களை போலீசு மதித்து நடந்து கொள்ளும் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? கைது தொடர்பான உச்சநீதி மன்றத்தின் கட்டளைகளை அரசும் போலீசாரும் பின்பற்றுவதில்லை என்பது மட்டுமல்ல பிரச்சினை, கீழமை நீதிமன்றங்களே உச்சநீதி மன்றத்தின் கட்டளைகளை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு அடக்குமுறைச் சட்டங்கள் போலீசின் அத்துமீறல்களை நிறுவனமயமாக்கி வைத்திருக்கும்பொழுது, அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து போலீசை விடுவித்து விட்டாலே போலீசார் பாரபட்சமின்றி நடந்து கொள்வார்கள் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது. இதுவொருபுறமிருக்க, தன்னாட்சி கொண்ட போலீசு அமைப்பைக் கண்காணிக்க அமைக்கப் பெறும் தன்னாட்சி பெற்ற அமைப்பு தவறே செயாத உத்தம ராசாக்களைக் கொண்டிருக்கும் என்பதற்கு ஏதாவது உத்தரவாதம் உண்டா? இந்த அமைப்பு தவறு செய்யும்பொழுது எங்கே போவது? நீதிமன்றத்திற்கு என்றால், கீழமை நீதிமன்றம், உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் எனப் பல படிகளில் ஏறி இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை. போலீசு அமைப்பைச் சீர்திருத்துவது குறித்து உச்சநீதி மன்றம் அளித்துள்ள இந்த ஏழு கட்டளைகளும் அரைகுறையானவை; நடுத்தர வர்க்கத்தின் உபதேசத்தைத் தாண்டிச் செல்லவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

ஆனால், இந்த அரைகுறையான சீர்திருத்தத்தைக் கொண்டுவருவதைக் கூட எந்தவொரு ஓட்டுக் கட்சியும்/அரசும் விரும்பாமல், தேசிய போலீசு கமிசனின் பரிந்துரைகளை 35 ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டு வைத்துள்ளன. குறிப்பாக, தமிழ்நாடு அரசு இச்சீர்திருத்தங்களுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வாதாடி தோற்றுப் போனது. போலீசு சீர்திருத்தம் குறித்த வழக்கு மீண்டும் அக்.20-இல் விசாரணைக்கு வரவிருந்ததால், உச்சநீதி மன்றத்தின் கண்டனத்திலிருந்து தப்பிக்கும் நோக்கத்தில் ஜெயா அரசு அவசரஅவசரமாக போலீசு சீர்திருத்தச் சட்டத்தை தற்பொழுது கொண்டு வந்திருக்கிறது.

இச்சட்டத்தை உருவாக்குவது குறித்து மனித உரிமை அமைப்புகள், எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் என யாருடைய கருத்தையும் கேட்காமல், ஆளுநரின் ஒப்புதலை மட்டும் பெற்று ஒரு அவசர மசோதாவாகக் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் அறிவித்தது ஜெயா அரசு. அதன் பின்னர் அக்டோபரில் நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, விவாதத்திற்கு இடம்தரக் கூடாது என எதேச்சதிகாரத் தோரணையிலும் சதித்தனமாகவும் கூட்டத்தொடரின் கடைசி நாளன்று மசோதாவைச் சட்டமன்றத்தில் வைத்ததோடு, த.மு.மு.க. எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா முன்வைத்த திருத்தங்களை முற்றிலுமாக ஒதுக்கித்தள்ளிவிட்டுச் சட்டமாக நிறைவேற்றி விட்டது. இச்சட்டம் உச்சநீதி மன்றத்தின் கட்டளைகளை முற்றிலுமாகப் புறக்கணித்திருப்பதோடு, அதற்கு நேர் எதிராகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

எடுத்துக்காட்டுக்குச் சொன்னால், மாநில காவல் புகார் பிரிவின் தலைவராக ஓய்வுபெற்ற உச்சநீதி மன்ற அல்லது உயர்நீதி மன்ற நீதிபதியை நியமிக்க வேண்டும். உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி பரிந்துரைக்கும் பட்டியலில் இருந்துதான் தலைவரை மாநில அரசு தெரிந்தெடுத்து நியமிக்க வேண்டும். மாவட்ட காவல் பிரிவின் தலைவராக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியை நியமிக்க வேண்டும். உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி அல்லது உயர்நீதி மன்ற நீதிபதி பரிந்துரைக்கும் பட்டியலில் இருந்துதான் தலைவரை மாநில அரசு தெரிந்தேடுத்து நியமிக்க வேண்டும் என உச்சநீதி மன்றம் தெளிவாக வழிகாட்டியிருந்தது. ஆனால், ஜெயா இந்த வழிகாட்டுதல்களை ஒதுக்கித் தள்ளிவிட்டுச் சட்டத்தை உருவாக்கியிருக்கிறார்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடும் இடிந்தகரை மக்கள் மீது போலீசு நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்தவர்
கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடும் இடிந்தகரை மக்கள் மீது போலீசு நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்தவர்

இக்கமிட்டிகளுக்குத் தலைவர்களையும் உறுப்பினர்களையும் பரிந்துரைக்கும் பொறுப்பை நீதிமன்றத்திடம் ஒப்படைக்காமல், அவர்களைத் தெரிந்தேடுப்பதைத் தன்வசமே எடுத்துக் கொண்டுள்ளது, பாசிச ஜெயா அரசு. மேலும், மாநில புகார் பிரிவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிப்பதற்குப் பதிலாக உள்துறைச் செயலரும் அதன் உறுப்பினர்களாக டி.ஜி.பி., கூடுதல் டி.ஜி.பி. ஆகிய இருவரும் நியமிக்கப்படுவர்; மாவட்ட புகார் பிரிவின் தலைவராக மாவட்ட நீதிபதி அல்லது மாவட்ட ஆட்சியரும், அதன் உறுப்பினர்களாக எஸ்.பி., கூடுதல் எஸ்.பி. ஆகிய இருவரும் நியமிக்கப்படுவர் என இச்சட்டம் வரையறுக்கிறது.

இந்த இரண்டு புகார் பிரிவுகளையும் ஒப்பீட்டளவில் சுதந்திரமாகச் செயல்படக்கூடிய தன்மை கொண்டதாக உருவாக்க வேண்டும் என்ற உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டுதலுக்கு மாறாக, ஜெயா அரசு இரண்டு புதிய தலையாட்டி பொம்மை அமைப்புகளை உருவாக்க முயலுகிறது என்பது வெளிப்படை. ”போலீசால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களது உறவினர்கள் மட்டுமே இக்கமிட்டிகளிடம் புகார் அளிக்க முடியும்; புகார் கொடுப்பவர்கள் தமது சொந்தப் பெயரில் மட்டுமே புகார்களை அளிக்க வேண்டும்; மேலும், புகார் அளிப்பவர்கள் அரசின் அங்கீகாரம் பெற்ற நோட்டரி பப்ளிக் ஒருவரிடம் சான்றொப்பம் பெற்றுதான் புகார் அளிக்க வேண்டும்” என போலீசின் அத்துமீறல்களைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்ட புதிய விதிகளும் இச்சட்டத்தில் புகுத்தப்பட்டுள்ளன.

நோட்டரி பப்ளிக் ஒருவரிடம் சான்றொப்பம் வாங்கித்தான் போலீசுக்கு எதிரான மனுக்களை அளிக்க வேண்டுமென்பது, அப்புகார்களை முளையிலேயே முடக்கிவிடும் சதித்தனம் தவிர வேறில்லை.

2011-இல் ஜெயா ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 29 கொட்டடிக் கொலைகள் நடந்துள்ளன. தேனி மாவட்டத்தின் போடிக்கு அருகிலுள்ள ஒரு சிற்றூரில் பேருந்துக்காக காத்திருந்த ஒரு பெண்ணை, போலீசு நிலையத்திற்கு இழுத்துச் சென்ற போலீசார், அவரைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதோடு, அதனை மறைக்க அவர் மீது திருட்டுப் பட்டம் கட்டிச் சிறைக்குள் தள்ளினர். இவை போன்ற மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், தமக்கு இழைக்கப்பட்ட அநீதியை அச்சத்தின் காரணமாகவும், மான -மரியாதைக்கும் பயந்தும் எதிர்த்துப் போராடாமல் இருந்து விடுகிறார்கள் என்பதுதான் எதார்த்தம். இவை போன்ற வழக்குகளைப் பொதுநலன் கருதி மனித உரிமை அமைப்புகள்தான் நீதிமன்றத்திற்கும், மனித உரிமை கமிசனின் விசாரணைக்கும் எடுத்துச் செல்லுகின்றன.

பாசிச ஜெயா கொண்டு வந்துள்ள சட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களது உறவினர்கள் மட்டும்தான் புகாரே கொடுக்க முடியும் என விதிகளை உருவாக்கி வைத்திருப்பதன் மூலம், போலீசின் அத்துமீறல்களுக்கு எதிராகப் போராடி வரும் மனித உரிமை அமைப்புகளின் செயல்பாடுகளைச் சதித்தனமான முறையில் முடக்க முயலுவதோடு, குற்றமிழைத்த போலீசாரைக் கடும் தண்டனையிலிருந்து பாதுகாப்பதையும் உத்தரவாதப்படுத்தியிருக்கிறார், ஜெயா.

‘‘போலீசின் அத்துமீறல்களை விசாரிக்க அரசு ஏற்கெனவே சில நடைமுறைகளை-விசாரணை கமிசன்கள், ஆர்.டி.ஓ. விசாரணை போன்றவற்றைப் பின்பற்றி வருவதால், நீதிபதிகளின் தலைமையில் புகார் கமிட்டிகளை அமைக்க வேண்டிய அவசியமில்லை” எனச் சட்டமன்றத்திலேயே பதிலளித்து, உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டுதல்களை அகங்காரத்தோடு புறக்கணித்திருக்கிறார், ஜெயா. விசாரணை கமிசன்களும், ஆர்.டி.ஓ. விசாரணையும் போலீசின் குற்றங்களை மூடிமறைக்கும் மோசடிகள் என்பது பல வழக்குகளில் அம்பலமான பிறகும், துணிந்து பொய் சொல்கிறார் அவர்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் போலீசின் அத்துமீறல்களும் கிரிமினல் குற்றங்களும் பெருகி வரும் நிலையில், கொஞ்சத்துக்குக் கொஞ்சமாவது பொதுமக்களை போலீசின் அத்துமீறல்களிலிருந்து பாதுகாக்க வேண்டும்; போலீசைப் பொதுமக்களுக்குப் பொறுப்புமிக்கதாக நடந்துகொள்ளும்படி மாற்ற வேண்டும் என்ற நோக்கில் உச்சநீதி மன்றம் இந்த வழிகாட்டுதல்களை அளித்திருக்கிறது. ஆனால் ஜெயாவோ, மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக போலீசு தண்டிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கத்தோடும், அதற்கு மேலும் மேலும் அதிகாரங்களை வழங்கும் வகையிலும் சட்டத்தைக் கொண்டு வந்து, உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டுதல்களைத் தனக்கேயுரிய தன்னகங்காரம், பாசிச வழிமுறைகளின் மூலம் தோற்கடித்திருக்கிறார்.

-குப்பன்
______________________________________
புதிய ஜனநாயகம், 2013 டிசம்பர்
______________________________________