Sunday, November 9, 2025
முகப்பு பதிவு பக்கம் 70

ராமர் கோவில், பக்தியா? கலெக்ஷன் கட்டும் உத்தியா?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த பிப்ரவரி மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: பக்தியின் அடிப்படையில் ராமர் கோவில் கட்டப்படவில்லை என்று பலரும் சொல்கின்றனர். அவ்வாறு சொல்வது சரியா?

மோடி தனது தேர்தல் பிரச்சாரத்திற்காகத்தான் ராமர் கோவில் திறப்பு விழாவை நடத்துகிறார்; இந்த விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காமல் தனது சாதிய, ஆணாதிக்கக் கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறார் என்பதையெல்லாம் எதிர்க்கட்சிகளே அம்பலப்படுத்தியுள்ளன.

வாஜ்பாய் – அத்வானி கும்பல், அயோத்தியில் ராமர் கோவில் இருந்ததாக சொல்லி, இஸ்லாமியர்களை எதிரிகளாகக்காட்டி, பொய்யான காரணங்களைக் கூறி, மதக்கலவரங்களையும் படுகொலைகளையும் அரங்கேற்றியது; இந்து மதவெறியைப் பரப்பியது; இதனைப் பயன்படுத்தி, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. சங்கப்பரிவார அமைப்புகளை விரிவுப்படுத்திக் கொண்டது; பாபர் மசூதியையும் இடித்தது.

அன்று, “ராமராஜ்ஜியம் மேன்மையானது, அங்கு இந்துக்கள் உயர்ந்த அந்தஸ்த்தில் இருந்தனர்” என்று பிரச்சாரம் செய்தது. இந்துராஷ்டிரத்தைப் படைப்போம் என்றது. அப்போது மதவெறிக்கு பலியான பலரும் ராமர் கோவிலை பழைய பக்தியின் அடிப்படையில் நியாயப்படுத்திக் கொண்டனர். ஆர்.எஸ்.எஸ்-இன் மதவெறியில் தங்களது பக்தி உணர்வை இணைத்துப் பார்த்தனர்.

இன்று, நிலைமையே வேறு. 10 ஆண்டுகளாக நாட்டை சூறையாடிக் கொண்டிருக்கும் மோடி-அமித்ஷா கும்பல் அம்பானி, அதானி, வேதாந்தா போன்ற வடநாட்டு கார்ப்பரேட் கும்பலுக்கு நாட்டை தாரைவார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த வடநாட்டுக் கார்ப்பரேட் கும்பலையே இராம – லெட்சுமனர்களாகக் கருதுகிறது. இந்துராஷ்டிரம் என்பது இந்த கார்ப்பரேட் கும்பலின் கொள்ளைக்கேற்ற வகையில் நாட்டில் இருக்கும் பன்முகத்தன்மையை அழித்து ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சட்டம், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே உணவு என்ற  பாசிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதுதான்.


படிக்க: மோடி அரசின் வெள்ளை அறிக்கையையும், ஜி.எஸ்.டி கொள்ளையையும் எப்படி புரிந்துகொள்வது?


ஆகையால், அம்பானி-அதானி வகையறா கார்ப்பரேட் கும்பலின் கொள்ளைக்காகவும் அவர்களது கொள்ளையை மறைப்பதற்காகவுமே ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. இதற்கும் பக்திக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பலரும் உணர்கின்றனர்.

இராமர் கோவிலை மையமாக வைத்து, அயோத்தியை சுற்றுலா மையமாக்கி, கார்ப்பரேட் கொள்ளை நடந்தேறிக் கொண்டிருப்பதை ஆங்கில வணிக இதழ்களில் வெளிவரும் செய்திகளே நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. ராமர் கோவிலை பழனி முருகன் கோவிலைப் போலவோ திருப்பதி ஏழுமலையான் கோவிலைப் போலவோ கருதிவிட முடியாது. திருப்பதியில், பெரும்பாலான அனைத்து இடங்களும் அரசின் கட்டுப்பாட்டில், திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், அயோத்தியிலோ நிலைமையே வேறு.

குறிப்பாக, “உத்தரப்பிரதேசத்தில் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்” என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை ஆங்கில இதழ்கள் புகழ்கின்றன. மதச்சுற்றுலா மூலம் பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கான யோகியின் உழைப்பை ராமர் கோவில் திறப்பில் பார்க்க முடிந்தது என்று அப்பத்திரிகைகள் கூறுகின்றன.

உலகத்தின் முக்கியமான புனிதத்தலமாக அயோத்தியை மாற்றுவதற்கான முயற்சியின் விளைவாக, அயோத்திக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கையானது 2021-ஆம் ஆண்டில் 3.25 லட்சம் பேராக இருந்தது. இது, 2022-ஆம் ஆண்டில் 2.39 கோடி பேராகவும் 2023-ஆம் ஆண்டில் 3.15 கோடி பேராகவும் உயர்ந்துள்ளது. ராமர் கோவில் திறப்பை ஒட்டிய  ஒரு வாரத்தில் மட்டும் 21 லட்சம் பேர் வந்து சென்றுள்ளதாகவும், தற்போது நாளொன்றுக்கு 2 இலட்சம் பேர் வருகைப் புரிவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் முதலாக நாளொன்றுக்கு ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இவ்வளவு மக்கள் வந்துசெல்வதற்கேற்ப, சர்வதேச விமான நிலையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருக்கும் இரயில்நிலையம் மிக பிரம்மாண்டமாக விரிவாக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான உல்லாச விடுதிகள், ஹோட்டல்கள், தங்குமிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. நகரத்தின் விரிவாக்கத்தைத் திட்டமிட்டு மேற்கொள்ளும் வகையில், நான்குவழி, ஆறுவழி, எட்டுவழிச் சாலைகள் அமைக்கப்படுகின்றன.


படிக்க: பேராசிரியர் சாய்பாபா விடுதலை – களப்போராட்டம் அவசியம்


இந்தியாவின் முன்னணியான பிரபலங்கள் தங்குவதற்கான உயர் வசதிகளைக் கொண்ட பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. சான்றாக, இந்தி நடிகர் அமிதாபச்சன் வீடு அமைந்துள்ள “தி சரயு” என்ற ஏழு நட்சத்திர (Seven Star) தங்குமிடம் 51 ஏக்கரில் அமைந்துள்ளது. மார்ரியோட் (Marriott) இண்டர்நேசனல், சரோவார், வ்யூதம் மற்றும் ஜே.எல்.எல். குழுமம் போன்ற கார்ப்பரேட் ஹோட்டல் நிறுவனங்கள் அயோத்தியை ஆக்கிரமித்துள்ளன.

இவை மட்டுமின்றி,  550 சொந்த வீட்டில் இருக்கும் வகையிலான தன்மைகள் கொண்ட குடும்பங்களுடன் தங்கும் குடியிருப்புகளும் (Homestay centers) உருவாக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுமார் 600 பேர் வரை இங்கு தங்குவதற்கு இப்போது விண்ணப்பித்துள்ளனர். இத்துடன், 1,200 ஏக்கர் பரப்பளவில் குடியிருப்புகள் கட்டப்படுகின்றன.

சுற்றுலா பயணிகளின் வருகையை உத்தரவாதப்படுத்தும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதால், ரியல் எஸ்டேட் தொழில் கொடிகட்டிப் பறக்கிறது. இந்த உள்கட்டமைப்பு வளர்ச்சியின் காரணமாக விளைநிலங்கள் வீட்டுமனைகளாவது அதிகரித்திருப்பது மட்டுமின்றி, வீட்டுமனைகளின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. அயோத்தியின் புறநகர் பகுதியான “14 கோசி பரிக்கிரமா” பகுதியில், 1,350 சதுர அடி உள்ள நிலத்தின் பத்திரப் பதிவு தொகை ரூ.4 லட்சத்திலிருந்து ரூ.65 லட்சமாக உயர்ந்துள்ளதாக ஒரு பத்திரிகை செய்தி குறிப்பிடுகிறது.

இத்துடன், மின்சாரத் தேவைகளும் மிகவேகமாக அதிகரித்துள்ளது. அதற்காக அயோத்தியில், உலகின் பெரிய சூரிய மின்சக்தி நகரம் அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில் எல்லாம் சிறிதும் பெரிதுமாக பல கார்ப்பரேட் கம்பெனிகள் மூலதனமிட்டுள்ளன.

சுற்றுலாவாசிகள் தங்குவதற்கு மட்டுமின்றி அயோத்தி ராமரை மையப்படுத்தி வணிகப் பொருட்களை  உருவாக்கி நாடுமுழுவதும் கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளது. நாளை, லல்லா ராமன் (குழந்தை ராமன்) படம் பொறிக்கப்பட்ட பொருட்கள் சந்தையில் விற்பனைக்கு வரலாம். அதற்கு மாநில அரசு வரிச்சலுகைகள் வழங்க வேண்டும் என நிர்பந்திக்கப்படலாம்.


படிக்க: ராமர் கோவில் திறப்பு: இந்துராஷ்டிரத்திற்கான பட்டாபிஷேகம்


தற்போது, மோடி அரசு அயோத்தி நகர விரிவாக்கத்திற்கு 15,700 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேச “2031 மாஸ்டர் பிளான்” திட்டத்தின்படி, ரூ.85,000 கோடிக்கு புதிய அந்நிய முதலீட்டாளர்களை கொண்டுவர திட்டமிட்டப்பட்டுள்ளது. அந்தவகையில், அயோத்தியில், ஒரு உள்ளூர்காரருக்கு 10 சுற்றுலா பயணி என்ற விகிதத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்க இலக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, அயோத்தியை மையமாக வைத்துதான், ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உத்திரப்பிரதேசம் அடையப் போவதாக ஆங்கில ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. ராமர் கோவில் கட்டப்பட்டதை ஒட்டி, அயோத்தியில் இருந்து மட்டும் 2024-25 ஆண்டில் 25,000 கோடி ரூபாய் வரி வசூல் செய்யமுடியும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

கிறித்தவர்கள் வாட்டிகனுக்குச் செல்வதைப் போல, இஸ்லாமியர்கள் மெக்காவுக்கு செல்வதைப் போல, அயோத்தியை மாற்ற திட்டமிட்டுள்ளது மோடி-யோகி கும்பல். அந்தவகையில், இந்துக்களை ஈர்ப்பது ஒன்றே அக்கும்பலின் நோக்கமாகும். ஜக்கி, ராம்தேவ் போன்ற கார்ப்பரேட் சாமியார்கள் ஆன்மீகத்தை சரக்காக்கியதைப் போல, பக்தியை சரக்காகுகிறது மோடி-யோகி கும்பல்.

உலகளாவிய முக்கிய வணிகங்களை ஈர்க்கும் வகையில், “பிராண்ட் உ.பி.”-ஐ (Brand UP) உருவாக்கி வருகிறது மோடி-யோகி கும்பல். அதன் மூலம் உலகின் பிடித்தமான சுற்றுலா மையமாக  உத்தரப்பிரதேசத்தை மாற்ற இருக்கிறது. சுற்றுலா வளர்ச்சி என்றானபோது, சினிமா, உல்லாசம், குடி, கூத்து, விபச்சாரம் போன்றவற்றைப் பற்றி சொல்லத் தேவையில்லை. இவையெல்லாம் உள்ளடக்கியதுதான், இந்த “பிராண்டு உ.பி.”

“இந்திய சமுதாயத்தின் அமைதி, நிதானம், பன்முகத்தன்மை மற்றும் முதிர்ச்சியின் அடையாளம் ராமர் கோவிலாகும். அவர்களது கண்ணோட்டத்தை மறுபரிசீலனை செய்ய நான் இன்று அழைக்கிறேன்” என்று மோடி குறிப்பிடுவதும் இந்தப் பொருளில்தான்.

உத்தரப்பிரதேசத்தில், இந்த சுற்றுலா வளர்ச்சிக்கேற்ப லல்லா ராமர் பாடினார், சிரித்தார் என்று வதந்திகளைப் பரப்புவது; அக்ஷ்ய திருதியை நாளை கார்ப்பரேட் தங்க நகை வியாபாரிகள்  தங்களது வணிகத்திற்காக வளர்த்ததைப் போல, ராமர் கோவில் தொடர்பான விழாக்களும் திட்டமிட்டு நடத்தப்படுவது போன்றவற்றையெல்லாம் நாம் எதிர்ப்பார்க்கலாம்.

ஆக, கார்ப்பரேட் கொள்ளையின் மையம்தான் ராமர் கோவில். புனிதத்தலம் என்ற போர்வையில், சுற்றுலா என்ற பெயரில் உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாச கும்பலுக்கு அயோத்தியை மையமாக்குகிறது, மோடி-யோகி கும்பல்.

மொத்தத்தில், ராமனை பிராண்டாக்கி பாபர் மசூதியை இடித்தது அத்வானி கும்பல் எனில், லல்லா ராமனை பிராண்டாக்கி கலெக்‌ஷ்ன் பார்க்கிறது மோடி – யோகி கும்பல்!


பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

(புதிய ஜனநாயகம் – மார்ச் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பேராசிரியர் சாய்பாபா விடுதலை | வழக்குரைஞர் ப.பா.மோகன் | நேர்காணல்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மோடி அரசின் வெள்ளை அறிக்கையையும், ஜி.எஸ்.டி கொள்ளையையும் எப்படி புரிந்துகொள்வது?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த பிப்ரவரி மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளையறிக்கை தாக்கல் செய்தார். அதில், ஜி.எஸ்.டி. வரிப் பகிர்வில் மாநிலங்களுக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வை வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தனர். இதனை எப்படி புரிந்துகொள்வது?

காங்கிரசின் 2004-2014 ஆட்சி குறித்து மோடியின் பத்தாண்டுகால ஆட்சி  நிறைவடையவுள்ள சூழலில் வெள்ளையறிக்கை தாக்கல் செய்வதே கேலிகூத்தானது. அவ்வறிக்கையில் உள்ள மோசடிகள் குறித்து எதிர்க்கட்சிகள் பல விசயங்களை அம்பலப்படுத்தியுள்ளனர். இதனைவிட முக்கியமாக, பாசிச கும்பல் கொடுக்கும் அறிக்கை, “வெள்ளை” அறிக்கையாக இருக்கும் என்று கருதுவதைவிட ஏமாளித்தனம் எதுவும் இருக்க முடியாது. கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதற்காக இந்திய உழைக்கும் மக்களை வதைத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைப் பற்றி வெள்ளையறிக்கையில் எதுவும் இடம்பெறாததே அதற்கு போதுமான சான்று.

மாநிலங்களுக்கு இடையிலான ஜி.எஸ்.டி. வரிப்பகிர்வு  குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டபோது, மோடி கும்பல் மொன்னையான வாதங்களை முன்வைத்தாலும் அவ்விவாதத்தின் மூலம் மோடி கும்பல் மக்களுக்கு சில செய்திகளை சொல்கிறது.

முதலில், ஜி.எஸ்.டி. வரி வசூலுக்கும் வரிப் பகிர்வுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வைப் பார்ப்போம். ஜி.எஸ்.டி. வரியாக தமிழ்நாடு செலுத்தும் வரியில், ஒரு ரூபாய்க்கு 26 பைசா மட்டுமே ஒன்றிய அரசால் திருப்பி அளிக்கப்படுகிறது. இதே போல கர்நாடகாவிற்கு 16 பைசா, தெலங்கானா 40 பைசா, கேரளா 62 பைசா திரும்ப பெறுகின்றன. அதே சமயத்தில், மத்தியப்பிரதேசம் 1 ரூபாய் 70 பைசாவும், ராஜஸ்தான் 1 ரூபாய் 14 பைசாவும் உத்தரப்பிரதேசம் 2 ரூபாய் 2 பைசாவும் திரும்பப் பெறுகின்றன.

இந்த விவரங்களை தொகையில் சொல்வதாக இருந்தால், சுமார்  8 கோடி மக்கள்தொகையைக் கொண்ட தமிழ்நாட்டில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் வசூலித்த தொகை ரூ.6,00,674.49 கோடி. தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு திருப்பிக்கொடுத்த தொகை ரூ.1,88,145.62 கோடி மட்டுமே.

இதே காலகட்டத்தில், தமிழ்நாட்டைவிட இரண்டு மடங்கு பரப்பளவும், மூன்று மடங்கு மக்கள்தொகையும் (24 கோடி) கொண்ட உத்தரப்பிரதேசத்தில் இருந்து வசூலித்த தொகை ரூ.3,41,817.60 கோடி. உத்தரப்பிரதேசத்திற்கு ஒன்றிய அரசு திருப்பிக்கொடுத்த தொகை ரூ.6,91,375.12 கோடி.


படிக்க: ஜி.எஸ்.டி வரிப்பங்கீடு: அம்பலமான மோடி அரசின் சதி


இது குறித்து, தமிழ்நாட்டின் சிறு குறு தொழில் முனைவோர், வியாபாரிகளிடம் கேட்கும்போது, “இங்கு வரியைக் கட்டச்சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். ஆனால், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் வரியைக் கட்டச்சொல்லி இந்த அளவிற்கு நெருக்கடி கொடுப்பதில்லை. ஆனால், அங்கு மட்டும் வரி வசூல் குறைவாக இருப்பதற்கு காரணம், மோடி அரசு வரியை வசூலிப்பதில் தென்னிந்தியாவிற்கு, குறிப்பாக, தமிழ்நாட்டிற்கு கொடுக்கும் நெருக்கடியை பசுவளைய மாநிலங்களுக்குக் கொடுப்பதில்லை” என்கின்றனர்.

தமிழ்நாட்டைவிட மூன்று மடங்கு அதிக மக்கள்தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் சிறு குறு தொழில்முனைவோருக்கு சலுகை வழங்கி, தனது ஓட்டு வங்கியாக தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதேவேளையில், அம்மாநில அரசுக்கு கூடுதலாக இரண்டரை மடங்கு நிதியைக் கொடுத்ததன் மூலம், அங்கு தொழில் வளர்ச்சி, மக்களுக்கு இலவசங்கள், கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகைகள் சென்று சேர்ந்துள்ளன.

ஆகையால், நிதிப்பகிர்வில் இருக்கும் ஏற்றத்தாழ்வு மூலமாக வடமாநில மக்களுக்கு சலுகை அளிப்பதை மோடி அரசு வெளிப்படையாகவே தெரிவிக்கிறது. பா.ஜ.க. கும்பல் உத்தரப்பிரதேச மக்களை இந்து மதவெறியால் மட்டுமே தனது செல்வாக்கில் நிலைநிறுத்திக் கொள்ளவில்லை. மற்ற மாநிலங்களைக் கொள்ளையடித்து அம்மாநிலத்திற்கு வாரி வழங்குவதன் மூலமும் இதனை செய்கிறது.

இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற தென்மாநிலங்களில் வளர்ச்சி இருக்கக் கூடாது என்பதற்குத்தான், மாநிலங்கள் கடன் வாங்குவதற்கும் கட்டுப்பாடுகளை விதித்து நிதி நெருக்கடிக்குத் தள்ளுகிறது. இந்த பட்டவர்த்தனமான  கொள்ளைதான், இந்துராஷ்டிரம்.


பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

(புதிய ஜனநாயகம் – மார்ச் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



உயர்நீதிமன்றத்தில் தமிழ் || தி.லஜபதி ராய்

உயர்நீதிமன்றத்தில் தமிழ்

யர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக பயன்படுத்த வேண்டி எட்டாவது நாளாக சென்னையில் தொடர் உண்ணவிரத போராட்டத்தில் வழக்கறிஞர் பகத்சிங், அவரது தந்தை, மகன் மற்றும் ஒத்த சிந்தனையாளர்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

”தமிழை வழக்காடு மொழியாக்கு” என்ற பதாககைகள் தமிழ்நாடு முழுவதும் எழுந்துள்ளன. தமிழ்நாடு முழுக்க வழக்கறிஞர்களும் ஆங்காங்கே மாணவர் அமைப்புகளும் போராடத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்கும் அதிகாரம் யாருக்கு என்றக் கேள்வி பிறக்கிறது.

1963 ஆம் ஆண்டு அலுவல் மொழிச் சட்டப்படி உயர்நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகளை அம்மாநிலத்தின் அலுவல் மொழியில் வழங்க இயலும். அவ்வாறு வழங்கும் போது ஆங்கில மொழி பெயர்ப்பையும் இணைக்க வேண்டுமென அலுவல் மொழிச் சட்டப் பிரிவு 7 கூறுகிறது. அவ்வாறான உத்தரவை பெற குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இது தவிர அரசியலமைப்பு சட்ட உறுப்பு 348 ன்படி அம்மாநில ஆளுநர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் உயர்நீதிமன்ற நடவடிக்கைகளை அம்மாநில மொழியிலேயே நடக்க அனுமதிக்கலாம்.எனவே மாநில அரசு தீர்மானித்தால் கூட இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது.


படிக்க: “உயர்நீதிமன்றத்தில் தமிழ்” – உண்ணாநிலை போராட்டத்தை ஆதரிக்கும் தமிழ்நாடு வழக்குரைஞர்கள்!


பிமாரு (BIMARU) மாநிலங்கள் என்று கூறக்கூடிய பீகார், மத்திய பிரதேசம், இராஜஸ்தான், உத்திரபிரதேசம் ஆகிய மாநில உயர்நீதிமன்றங்களில் வழக்கின் தீர்ப்புகளிலும் உத்தரவுகளிலும் இந்தி பயன்பாடு கொண்டு வரப்பட்டு பல வருடங்களாகிறது.

ஆனால் மேற்குவங்கம், கர்நாடகம், தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து அம்மாநில மக்களின் மொழியை உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்த மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்த போது 1965 ஆம் ஆண்டு அமைச்சரவை முடிவை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்ற முழு நீதிபதிகள் குழுவில் கருத்துரைக்காக மத்திய அரசு அனுப்பியது. முதலில் 2012 ஆம் ஆண்டிலும் பின்னர் 2014 ஆம் ஆண்டிலும் மாநில மொழிகளை மேற்சொன்ன நீதிமன்றங்களில் பயன்படுத்த கூடாது என்று உச்சநீதிமன்றம் கருத்துரைத்தது.

உச்சநீதிமன்ற கருத்துரை 1965 மத்திய அமைச்சரவை முடிவின் அடிப்படையில் வழங்கப்பட்டதே தவிர அதற்கு வேறு சட்ட அடிப்படை எதுவுமில்லை.

மத்திய அரசு விரும்பினால் ஒரிரு நாட்களில் தமிழை நீதிமன்ற மொழியாக அனுமதிக்க இயலும்.

ஏறு தழுவுதல் என்ற ஜல்லிகட்டை உச்சநீதிமன்றம் தடை செய்தது. உச்சநீதிமன்ற நீதிபதி இராதாகிருஷ்ணன் அளித்த அத்தீர்ப்பு மே, 2014 ஆம் ஆண்டு வழங்கப்பட்டு ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது எனினும் தமிழ்நாட்டில் நடந்த மிகப்பெரும் போராட்டத்தின் விளைவாக பின்னாட்களில் மத்திய அரசால் விலங்கு வதை சட்டத்தில் செய்யப்பட்ட 2017 தமிழ்நாடு சட்ட திருத்தம் உச்ச நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளான போது உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் ஐந்து நீதிபதிகள் அச் சட்டம் சரியானது என்று கூறிய தீர்ப்பு நம் நினைவுக்கு வரும், அச்சட்டம் உருவாக ஒட்டுமொத்த தமிழர்களின் போராட்டம் காரணம் என்றால் மிகையாகாது.


படிக்க: “உயர்நீதிமன்றத்தில் தமிழ்” வழக்குரைஞர் போராட்டம் வெல்க! | துண்டறிக்கை


அரசியலமைப்புச் சட்ட எட்டாவது பட்டியலில் அஸ்ஸாமிய, பெங்காலி, போடா, டோக்ரி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், கஷ்மீரி, கொங்கணி, மலையாளம், மராத்தி, மைதிலி, மணிப்பூரி, ஒடியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி, சந்தாலி, தமிழ், தெலுங்கு, உருது என 22 மொழிகள் இடம் பெற்றுள்ளன இதில் இந்திக்கு சிறப்பிடமளிக்க சட்டமின்றி வேறு காரணம் ஏதுமில்லை. தென்னிந்திய மொழிகள் அனைத்தும் வட இந்திய மொழிகளுக்கு ஈடாக சொல் வளமும், இலக்கிய வளமும், தொன்மையும் கொண்டவையே.

இந்தியா எனும் நாடு பல்வேறு தேசிய இனங்களின் ஒன்றியம் என்ற பாடத்தை சோவியத் யூனியனிடமிருந்து மைய அரசு பெறுவது அவசியம்.

சோவியத் யூனியன் சிதைந்து பல நாடுகளை உருவாக்கியதைப் போல இந்தியாவிலும் நிகழாமலிருக்க, அனைத்து மாநில மொழிகளுக்கும் சம உரிமை வழங்குவது அவசியம்.

இந்நிலையில் தமிழை நீதிமன்ற மொழியாக்கு என்ற முழக்கங்களுக்கு முன்னால் மத்திய அரசே! என்ற சொற்களை சேர்ப்பது அவசியம்.

மத்திய அரசே! தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்கு!! என்ற தீவிர முழக்கம் தமிழை நேசிப்பதாகக் கூறும் மத்திய ஆட்சியாளர்கள் காதில் விழுமா எனத் தெரியவில்லை.


தி.லஜபதி ராய்
உலகனேரி
06.03.2024

disclaimer

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



வெல்லட்டும் விவசாயி போராட்டம் | ம.க.இ.க ”சிவப்பு அலை” கலைக்குழு | புதிய பாடல்

வெல்லட்டும் விவசாயி போராட்டம் | ம.க.இ.க ”சிவப்பு அலை” கலைக்குழு
| புதிய பாடல்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



“உயர்நீதிமன்றத்தில் தமிழ்” – உண்ணாநிலை போராட்டத்தை ஆதரிக்கும் தமிழ்நாடு வழக்குரைஞர்கள்!

“உயர்நீதிமன்றத்தில் தமிழ்” – உண்ணாநிலை போராட்டத்தை ஆதரிக்கும் தமிழ்நாடு வழக்குரைஞர்கள்!

மதுரை:

உண்ணா நிலை போராட்டத்தை ஆதரிக்கும் மதுரை வழக்குரைஞர்கள்

உயர் நீதிமன்றத்தில் தமிழ் | வழக்குரைஞர் போராட்டம் | வழக்குரைஞர் ஐயப்பன்

உயர் நீதிமன்றத்தில் தமிழ் | வழக்குரைஞர் போராட்டம் | வழக்குரைஞர் சரவணன்

0-0-0

தர்மபுரி மாவட்டம்:

உயர் நீதிமன்றத்தில் தமிழ் | வழக்குரைஞர் போராட்டம் | வழக்குரைஞர் மகாலிங்கம்

0-0-0

கடலூர் மாவட்டம்:

உயர் நீதிமன்றத்தில் தமிழ் | வழக்குரைஞர் போராட்டம் | செ.சுரேஷ்

0-0-0

பாண்டிச்சேரி:

உயர் நீதிமன்றத்தில் தமிழ் | வழக்குரைஞர் போராட்டம் | தோழர் சாந்தகுமார்

காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



வெல்லட்டும் விவசாயி போராட்டம் | ம.க.இ.க ”சிவப்பு அலை” | புதிய பாடல் | டீசர்

வெல்லட்டும் விவசாயி போராட்டம் | ம.க.இ.க ”சிவப்பு அலை”
| புதிய பாடல் | டீசர்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



உயர் நீதிமன்றத்தில் தமிழ்! | வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | காணொளிகள் | நாள் 4

உயர் நீதிமன்றத்தில் தமிழ்! | வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் |
காணொளிகள் | நாள் 4

உயர் நீதிமன்றத்தில் தமிழ் | வழக்குரைஞர் போராட்டம் | வழக்குரைஞர் புகழ் வேந்தன்

உயர் நீதிமன்றத்தில் தமிழ் | வழக்குரைஞர் போராட்டம் | சட்டக்கல்லூரி மாணவர் சந்தோஷ்

உயர் நீதிமன்றத்தில் தமிழ் | வழக்குரைஞர் போராட்டம் | மகேஷ்

காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



உயர் நீதிமன்றத்தில் தமிழ்! | வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | காணொளிகள் | நாள் 3

உயர் நீதிமன்றத்தில் தமிழ்! | வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் |
காணொளிகள் | நாள் 3

உயர் நீதிமன்றத்தில் தமிழ் | வழக்குரைஞர் போராட்டம் | ஆவடி நாகராசன்

உயர் நீதிமன்றத்தில் தமிழ் | வழக்குரைஞர் போராட்டம் | தோழர் புவன்

உயர் நீதிமன்றத்தில் தமிழ் | வழக்குரைஞர் போராட்டம் | வழக்குரைஞர் செஞ்சுடர்

உயர் நீதிமன்றத்தில் தமிழ் | வழக்குரைஞர் போராட்டம் | தோழர் துணைவேந்தன்

காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | நாள் 6

சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டு அரங்கம் முன்பு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று கோரி 24 வழக்கறிஞர்கள் தொடர் உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இணைப்பு 1:

இணைப்பு 2:

இணைப்பு 3:

இணைப்பு 4:

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கு. தொடர் 6 ஆம் நாள் பட்டினி போராட்டத்தில் தோழர் மருது அவர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்லப்படும் காட்சி.

காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube


 

🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | நாள் 5

சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டு அரங்கம் முன்பு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று கோரி 24-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தொடர் உண்ணா நிலை போராட்டத்தை துவங்கியுள்ளனர்.

இணைப்பு 1:

இணைப்பு 2:

இணைப்பு 3:

இணைப்பு 4:

இணைப்பு 5 :

இணைப்பு 6:

இணைப்பு 7:

இணைப்பு 8:

இணைப்பு 9:

இணைப்பு 10:

இணைப்பு 11:

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கு.தொடர் 5ஆம் நாள் பட்டினி போராட்டத்தில் தோழர் மருது அவர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்லப்படும் காட்சி.

காணொலிகளை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube


 

புதிய ஜனநாயகம் – மார்ச் 2024 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் மார்ச் 2024 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800

புதிய ஜனநாயகம் – மார்ச் 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு ரூ.5 : மொத்தம் ரூ.35
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம் – மக்களுக்கான களம் போராட்டமே!
  • டெல்லி சலோ 2.0: பாசிசத்தை வீழ்த்தும் பாதை!
  • கல்வித்துறைய விழுங்கத் துடிக்கும் கார்ப்பரேட்மயம்! தீர்வு என்ன?
  • பு.ஜ.உடன் ஓர் உரையாடல்…
  • உத்தராகண்ட் பொது சிவில் சட்டம்: இந்துராஷ்டிரத்திற்கு அடித்தளமிடும் பாசிஸ்டுகள்!
  • ஒளிபரப்பு சேவை(ஒழுங்குமுறை) மசோதா 2023: கருத்து சுதந்திரத்திற்கு கட்டப்படும் கல்லறை!
  • மக்கள் கல்வி கூட்டியக்கத்தின் நூல் வெளியீடு மற்றும் மாநில கலந்தாய்வரங்கம் – புமாஇமு
  • உத்தராகண்ட் கலவரம்: இஸ்லாமிய மக்கள் மீது ஏவப்படும் அரச பயங்கரவாதம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



வேதாந்தாவின் மனு தள்ளுபடி – ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற கோரும் தூத்துக்குடி மக்கள்!

வேதாந்தாவின் மனு தள்ளுபடி
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற கோரும் தூத்துக்குடி மக்கள்!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | நாள் 4

🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்!
வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | நாள் 4

சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டு அரங்கம் முன்பு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று கோரி 24-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தொடர் உண்ணா நிலை போராட்டத்தை துவங்கியுள்ளனர்.

இணைப்பு 1:

இணைப்பு 2:

இணைப்பு: 3

இணைப்பு 4:

இணைப்பு 5:

இணைப்பு : 6

இணைப்பு : 7

இணைப்பு 8 :

இணைப்பு 9 :

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



“உயர்நீதிமன்றத்தில் தமிழ்” – உழைக்கும் மக்களே! வழக்குரைஞர் போராட்டத்திற்கு துணைநிற்போம்!

02.03.2024

“உயர்நீதிமன்றத்தில் தமிழ்” வழக்குரைஞர் போராட்டத்தை ஆதரிப்போம்!

உழைக்கும் மக்களே! வழக்குரைஞர் போராட்டத்திற்கு துணைநிற்போம்!

மோடியே, உலகம் முழுவதும் தமிழைப் புகழ்ந்து பேசும் நாடகத்தை நிறுத்து!
தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்கு என்று முழங்குவோம்!

பத்திரிகைச் செய்தி

“தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்கு!” என்ற கோரிக்கையை முன் வைத்து தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தை சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வழக்குரைஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என 24 பேர் தொடங்கியுள்ளனர். இது நீண்டப் போராட்டம். நான்காவது நாளாக போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்று இந்த போராட்டம் சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த போரட்டத்தை ஆதரித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக மக்கள் மத்தியில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறோம்.

இப்போராட்டத்தில் வழக்குரைஞர் பகவத்சிங், மக்கள் அதிகாரம் அமைப்பின் செய்தி தொடர்பாளர் வழக்குரைஞர் மருது, வழக்குரைஞர் புளியந்தோப்பு மோகன், 91 வயது, 73 வயது முதியவர்கள், பெண்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்டு 24 பேர் உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாட்டு உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. கோயில் கருவறையிலும் தமிழ் மறுக்கப்படுகிறது, நீதிமன்றத்திலும் தமிழ் மறுக்கப்படுகிறது.

படிக்க : வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டத்தை ஆதரிக்கும் மதுரை வழக்கறிஞர்கள்

தனது இந்துராஷ்டிர கனவை நினைவாக்க சமஸ்கிருதத்தையும், இந்தியையும் தூக்கி பிடித்து மாநில மொழிகளை அழிக்கத் துடிக்கும் மோடி – அமித்ஷா பாசிசக் கும்பலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

பிரதமர் மோடி எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் திருக்குறளையும், தமிழ் மொழியையும் உயர்த்தி பேசுவதுபோல் நடிக்கிறார். இந்த நாடகத்தை நிறுத்தி கொள்ள வேண்டும். உடனே தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

இந்தியாவிலேயே ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களில் இந்தி உயர்நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக்கப்பட்டுள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் கூட இந்தியில் மனு தாக்கல் செய்யலாம் என அந்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் வழக்காட அனுமதியில்லையென்பது தமிழ்நாட்டின், தமிழ்மொழியின் மீதான தீண்டாமை. ஒரு கண்ணில் சுண்ணாம்பு, ஒரு கண்ணில் வெண்ணை (இந்திக்கு ஒரு நீதி? தமிழுக்கு ஒரு நீதியா?) என்பதே மோடி அரசின் அணுகுமுறையாக உள்ளது. ஒன்றிய அரசு உடனடியாக தமிழை உயர்நீதி மன்றத்தின் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

சென்னையில் நடக்கும் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு தமிழ்நாடு போலீசுத்துறை தற்போது தடை விதித்திருக்கிறது. மக்கள் அதிகாரத்தின் சார்பாக கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.

படிக்க : உயர் நீதிமன்றத்தில் தமிழ்! | வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | காணொளிகள் | நாள் 2

2006-ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை அமல்படுத்த வேண்டுமென்றுதான் இந்த போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டின் போலீசுத்துறையோ போராடுபவர்களுக்கு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. பேச்சாளர்களின் பட்டியலை தர வேண்டும் என்றும் தொடர்ச்சியாக தொந்தரவு செய்கிறது. நெருக்கடிகளை கொடுத்துவரும் போலீசுத்துறையின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கட்டுப்பாட்டில் தான் போலீசுத்துறை இயங்குகிறதா? ஆளும் திமுக அரசு பதில் கூற வேண்டும்? தமிழை வழக்காடு மொழியாக்கப் போராடினால் போலீசை கொண்டு நெருக்கடியை கொடுப்பதுதான் உங்களின் தமிழ் பற்றா? சமூக நீதியா? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுகிறது. ஆகவே தமிழ்நாடு அரசு உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

தோழமையுடன்,
தோழர் அமிர்தா,
செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்,
91768 01656