Monday, November 10, 2025
முகப்பு பதிவு பக்கம் 76

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் பிப்ரவரி 2024 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2024 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு ரூ.5 : மொத்தம் ரூ.35
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம் – எது கேலிக்கூத்து? நிதிஷ் குமாரின் ’பல்டி’யா, இந்திய ஜனநாயகமா?
  • ராமர் கோவில் திறப்பு: இந்துராஷ்டிரத்திற்கான பட்டாபிஷேகம்
  • அம்பலமாகும் மோடியின் திரைமறைவு வேலைகள்
  • நிதி ஆயோக்-இன் மோசடி அறிக்கை: மோடியின் பாசிச ஆட்சியில் வறுமை ஒழிந்த வேடிக்கை
  • பாசிச மோடி அரசைப் பணியவைத்த லாரி ஓட்டுநர்களின் போராட்டம்
  • பு.ஜ.உடன் ஓர் உரையாடல்..
  • வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: தெற்காசியாவில் சரியும் அமெரிக்க மேலாதிக்கம்!
  • அட்டைப்படக் கட்டுரை விவசாயிகளின் வீரஞ்செறிந்த டிராக்டர் பேரணி
  • இராமர் கோயிலுக்கு முதல் எதிர்ப்பு! தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தோம் நாங்கள்!
    இந்துராஷ்டிரத்தின் முடிவுரையை இனி தமிழ்நாடு எழுதட்டும்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



நேற்று அயோத்தி ! இன்று ஞான வாபி ! தொடரும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் !

02.02.2024

நேற்று அயோத்தி !
இன்று ஞான வாபி !
தொடரும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள்!

பத்திரிகை செய்தி

ஞானவாபி மசூதியின் சுவற்றில் தங்களை வழிபட அனுமதிக்க வேண்டும் என்று இந்து பெண்கள்’ என்று கூறிக் கொண்ட பாசிஸ்டுகள் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றமோ, ஞானவாபி மசூதியை தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்யச் சொல்லி, அந்த மசூதியே இந்து கோயிலின் அடித்தளத்தின் மீது கட்டப்பட்டதாக கூறி, ஞானவாபி மசூதியின் ஒரு பகுதியில் இந்துக் கடவுளை பூசை செய்யவும் பூசை செய்வதற்கான பூசாரியை நியமிக்க உத்தரவு செய்தும் 31.01.2024 -இல் தீர்ப்பு வழங்கி உள்ளது. இஸ்லாமியர்கள் மீதான இன்னொரு தாக்குதலாகும் இது. அயோத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்டு அதன் மீது இராமர் கோயில் திறப்பு விழா என்ற வடு மறைவதற்கு முன்பே, இன்னொரு கொடூர தாக்குதல்.

வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1991 – ஆனது 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு முன்பு இருந்த வழிபாட்டுத் தலங்களின் நிலைமையே தொடர்ந்து நீடிக்கும் என்று வலியுறுத்துகிறது (பாபர் மசூதி நீங்கலாக). அச்சட்டத்தை மீறித்தான் இன்னொரு அயோத்தி போல ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி பாசிச கும்பல் கரசேவை தொடங்குவதற்கான வழியை நீதிமன்றம் உருவாக்கி கொடுத்திருக்கிறது.

நீதிமன்றத்தின் வழியாகவும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிசக் கும்பல் கனவான இந்துராஷ்டிரம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதற்கு இதுவே ஒரு மோசமான எடுத்துக்காட்டு.

படிக்க : ஹேமந்த்  சோரன் கைது ! வெறி பிடித்து அலையும் மோடி அரசு !

அயோத்தி கோயில் திறப்பு என்பது, இனி சர்ச்சைக்குள்ளான விஷயமாக பார்க்கப்படப் போவதில்லை. அதன் மூலமாக இனி தங்களுடைய ஓட்டு அறுவடையை மிகப்பெரிய அளவில் ஆர் எஸ் எஸ் – பிஜேபி யால் சாதிக்க முடியாது . அதனால் தான் மீண்டும் ஒரு சர்ச்சையை உருவாக்கி அதன்மூலம் கலவரம் நடத்தி, இஸ்லாமியர்களின் ரத்தம் குடித்து இந்தியாவில் ஓட்டுக்களை அறுவடை செய்வதற்காகவே திட்டமிட்டு ஞானவாபி மசூதியில் இந்துக்களை வழிபட செய்திருக்கிறது வாரணாசி நீதிமன்றம்.

இதன் மூலமாக இஸ்லாமிய மக்கள் மீதான இன்னொரு மிகப்பெரிய கலவரத்துக்கு வித்திட்டு இருக்கிறது நீதிமன்றம்.

ஆர்எஸ்எஸ் – பாஜக ; அம்பானி – அதானி பாசிச கும்பலுக்காகவே இந்த நாட்டின் அரசுத்துறைகள் அனைத்தும் திட்டமிட்டு மறுகட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அதில் நீதிமன்றமும் விதிவிலக்கல்ல.

நீதிமன்றத்திடம் சென்று இனிமேல் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும் என்று நம்புவோருக்கெல்லாம் இடியாக விழுந்து இருக்கிறது வாரணாசி நீதிமன்றத்தின் தீர்ப்பு.

படிக்க : நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை | மக்கள் அதிகாரம் கண்டனம்!

இனியும் இந்த அரசு கட்டமைப்பின் மூலம் நாட்டை மீட்டெடுத்து விட முடியாது என்ற நிலைமையை உருவாக்கி விட்டது மோடி – அமித்ஷா பாசிசக் கும்பல்.

மோடியின் பாசிச நடவடிக்கையை இனி ஒருபோதும் நீதிமன்றங்கள் மூலம் தடுத்து நிறுத்த முடியாது. மாபெரும் மக்கள் போராட்டங்களை கட்டியமைப்போம்! ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிச கும்பலுக்கு முடிவு கட்டுவோம் என்று மக்கள் அதிகாரம் அறைகூவி அழைக்கிறது.

தோழமையுடன்
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

ஹேமந்த்  சோரன் கைது ! வெறி பிடித்து அலையும் மோடி அரசு !

02.02.2024

ஹேமந்த்  சோரன் கைது ! வெறி பிடித்து அலையும் மோடி அரசு !

பத்திரிகைச் செய்தி

ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் நேற்றைய தினம் தனது பதவியை இராஜினாமா செய்தார்.அன்றைய தினமே அவர் அமலாக்கத்துறையில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். பாசிச பாஜக அரசால் மேற்கொள்ளப்பட்ட இந்த பழிவாங்கும் நடவடிக்கையை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசத்தின் இந்து இராஷ்டித்திற்கு யார் யாரெல்லாம் தடையாக இருப்பார்களோ அத்தனை பேரையும் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது பாசிச மோடி அரசு. ஜார்க்கண்ட் மாநில அரசை சீர்குலைக்கவும் கலைக்கவும்  பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட பாசிச மோடி அரசு,  அதன் இன்னொரு பகுதியாக அமலாக்கத்துறையை ஏவி ஹேமந்த் சோரனை கைது செய்திருக்கிறது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வடமாநிலங்களில் வெற்றி பெறுவதற்கான பல்வேறு மோசடி வேலைகளை தொடங்கியுள்ளது. நிதீஷ் குமார் போன்றவர்களின் விலைக்கு வாங்கி இந்தியா கூட்டணியை பிளவுபடுத்துவதும் தன்னுடைய வழிக்கு வராத ஹேமந்த் சோரன் போன்றவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதும் தான் தற்போது நடந்தேறி வருகிறது.

படிக்க : “வேண்டாம் பிஜேபி” பிரச்சாரத்தை தடுத்த காவிகளும் காக்கிகளும்

ஹேமந்த் சோரன் கைது என்பது திட்டமிட்ட பழி வாங்கும் நடவடிக்கை. தோல்வி முகத்தில் இருக்கும் பாசிச ஆர்எஸ்எஸ் – பிஜேபி கும்பல் வெறி பிடித்து அலைந்து கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக வெறும் அறிக்கைகளை மட்டும் இந்தியா கூட்டணியின் தலைவர்கள் வெளியிட்டுக் கொண்டிருப்பது என்பது சரியான நடவடிக்கை அல்ல; மாறாக ஜார்க்கண்ட் மாநில உட்பட பல்வேறு மாநிலங்களிலும் இந்த கைதுக்கு எதிராக மிகப்பெரிய மக்கள் போராட்டங்களை நடத்தி இருக்க வேண்டும்.

மக்கள் போராட்டங்களுக்கு மட்டுமே பாசிச கும்பல் பின் வாங்கும் என்பது மட்டுமல்ல; அந்த மக்கள் போராட்டங்களால் மட்டுமே ஆர்.எஸ்.எஸ் – பாஜக; அம்பானி – அதானி பாசிச கும்பல் வீழ்த்தப்படும்.

ஆகவே,  ஹேமந்த் சோரன் மீதான அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை | மக்கள் அதிகாரம் கண்டனம்!

02.02.2024

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை !
மக்கள் அதிகாரம் கண்டனம்!

தமிழ்நாட்டில் 6-க்கும் மேற்பட்ட இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை செய்த சோதனையை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து இச்சோதனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படத்தை வைத்திருப்பதும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசுவதும் இந்திய அரசியல் சட்டத்திற்கு புறம்பானது அல்ல சட்ட மீறலும் அல்ல என்பதை ஏற்கனவே நீதிமன்றங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.

படிக்க : ஞானவாபி மசூதியும் இந்திய நீதித்துறையும்!

எனினும் தமிழ்நாட்டில் போராடுகின்ற இயக்கங்களை ஒழித்துக் கட்டும் திட்டத்திற்கு முதல் படியாகவே இந்த தேசிய புலனாய்வு முகமை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் சோதனை செய்துள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தொடர்பு என்று தொடங்கும் இந்த சோதனையை நாம் எதிர்க்காவிட்டால் விரைவில் மோடிக்கு எதிராக பேசும், மக்கள் உரிமை இன விடுதலை என்று பேசும் அனைவரின் வீட்டுக்கும் தேசிய புலனாய்மை முகமை சோதனை செய்ய வருவதற்கு அனைத்து வகையான வாய்ப்புக்களும் உள்ளன. ஆகவே தேசிய புலனாய்வு முகமை மேற்கொண்ட இந்த சோதனையை மக்கள் அதிகாரம்  கண்டிக்கிறது.  தமிழ்நாடு அரசு தேசியப் புலனாய்வு முகமைக்கு கொடுத்த அனுமதியை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்,
தோழர் மருது,
செய்தித் தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு –  புதுவை
9962266321

ஞானவாபி மசூதியும் இந்திய நீதித்துறையும்!

0

த்தர பிரதேசத்தின் வாரணாசியில் அவுரங்கசீப் கட்டிய 17 ஆம் நூற்றாண்டு ஞானவாபி மசூதியின் அடித்தளத்தில் ‘இந்துக்கள்’ வழிபாடு நடத்தத் தொடங்கியுள்ளனர். ஜனவரி 31 அன்று வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அதற்கான உத்தரவைப் பிறப்பித்தது. உத்தரவு பிறப்பித்த அடுத்த சில மணி நேரங்களிலேயே அங்கு பூஜை நடத்தப்பட்டுவிட்டதாக காசி விஸ்வநாதா் கோயில் அறக்கட்டளை தலைவா் தெரிவித்தாா்.

தான் ஓய்வு பெறவிருக்கும் கடைசி பணி நாளில் இத்தீர்ப்பை வழங்கி வாரணாசி மாவட்ட நீதிபதி அஜய கிருஷ்ண விஸ்வேஷா (Ajaya Krishna Vishvesha) கரசேவை ஆற்றியுள்ளார்.

இந்துக்கள் வழிபாட்டு சடங்குகளை நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளை 7 நாட்களுக்குள் செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், தீர்ப்பு வழங்கப்பட்ட அன்றைய நாள் இரவே வழிபாட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதிகாலை 3:30 மணிக்கு பூஜையும் நடத்தப்பட்டுவிட்டது.

முஸ்லீம்கள் தினமும் ஐந்து முறை தொழுகை நடத்துவதோடு போட்டி போடும் விதத்தில் தினம்தோறும் ஐந்து முறை பூஜை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


படிக்க: பாபர் மசூதி இறுதித் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா! | மீள்பதிவு


மசூதியின் அடித்தளத்தில் நான்கு பாதாள அறைகள் இருப்பதாகவும், அவற்றில் ஒன்று அங்கு வசித்து வந்த பூசாரியின் குடும்பத்தின் வசம் இருப்பதாகவும் ’இந்து’ தரப்பினரால் கூறப்படுகிறது. ’பரம்பரை பூசாரிகள்’ என்ற முறையில் அவர்கள் கட்டிடத்திற்குள் நுழைந்து பூஜைகள் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்று அக்குடும்பத்தினர் வாதிட்டனர். 1993-ஆம் ஆண்டு வரை அங்கு பூஜை செய்து வந்ததாக அவர்களால் கூறப்படுகிறது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதையும் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை.

ஞானவாபி மசூதி வழக்கின் மையப் பொருளாக இருப்பது இந்திய தொல்லியல் துறையின் தொல்பொருள் ஆய்வு தான். மசூதி அமைந்துள்ள பகுதியில் இந்து கோயில் இருந்ததற்கான சான்றுகளைத் தேடி இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்து வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கை வழக்கில் தொடர்புடைய இரு தரப்பினரைத் தவிர மற்றவர் கைகளுக்கு கிடைக்கக் கூடாது என்று நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால் கலவர சூழலை உருவாக்க 839 பக்கங்களைக் கொண்ட அவ்வறிக்கையின் சில பகுதிகள் திட்டமிட்டே கசியவிடப்பட்டுள்ளது.

சங்கப் பரிவார கும்பல் பல பத்தாண்டுகளாகவே ஞானவாபி மசூதி பிரச்சினையை எழுப்பி வருகிறது. இராமர் கோவில் திறப்பு உத்வேகம் அளித்துள்ளதால் ஞானவாபி மசூதியை மற்றொரு பாபர் மசூதியாக மாற்ற வேண்டும் என்று துடிக்கிறது காவி பாசிச கும்பல். மேலும் இந்து முனைவாக்கத்தை கூர்மையாக்கி 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக்கொள்ளவும் எத்தனிக்கிறது.


படிக்க: பாசிசத்தை அரசியலமைப்பிற்கு உட்படுத்துங்கள்! – சந்திரசூட்


இப்பிரச்சினையை தற்போது சங்கப் பரிவார கும்பலுக்கு ஏற்ற வகையில் இவ்வளவு பூதாகரமாக வளர்த்து விட்டதில் நீதிமன்றத்தின் பங்கு அளப்பரியது.

எந்தவொரு வழிபாட்டுத் தலத்தின் தன்மையையும் மாற்றுவதை வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 தடைசெய்கிறது. பாபர் மசூதி தவிர மற்ற அனைத்து வழிபாட்டுத் தலங்களும் ஆகஸ்ட் 15, 1947 அன்று எந்தத் தன்மையில் இருந்தனவோ அவை அவ்வாறே தொடர வேண்டும் என்று அச்சட்டம் கூறுகிறது. இது ஒன்றும் நீதிமன்றங்கள் அறியாததல்ல. அறிந்துதான் நீதிமன்றங்கள் தொடர்ந்து கரசேவை ஆற்றி வருகின்றன.

ஞானவாபி மசூதி பிரச்சினை உச்ச நீதிமன்றம் வந்தபோது, அதற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் இந்தியாவின் தலைமை நீதிபதி சந்திரசூட் ”ஒரு வழிபாட்டுத் தலத்தின் தன்மையைக் கண்டறிவதை சட்டம் (வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991) தடுக்கவில்லை; அதன் தன்மையை மாற்றுவதை மட்டுமே சட்டம் தடை செய்கிறது” என்று ஒரு வியாக்கியானத்தை முன்வைத்தார். தனது சட்ட வியாக்கியானத்தின் மூலம் சங்கப் பரிவார கும்பலின் செயல் திட்டத்திற்கு புத்துயிர்ப்பு அளித்தார்.

மசூதி குழு உச்சநீதிமன்றத்தின் அவசர தலையீட்டைக் கோரியது. ஆனால் உச்சநீதிமன்றம் அதை நிராகரித்துவிட்டது. கீழ் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு கூறிவிட்டது.

அயோத்தியைப் போலவே வாரணாசியிலும் கரசேவையில் தங்களது பங்கை நீதிமன்றங்கள் சிறப்பாக ஆற்றிவிட்டன!


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பட்ஜெட்! மோடி சுட்ட வடை | தோழர் அமிர்தா

பட்ஜெட்! மோடி சுட்ட வடை… நிர்மலா கொடுத்த அல்வா | தோழர் அமிர்தா

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



வதைக்கப்படும் ஷர்ஜீல் இமாம்!

வஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) பிஎச்.டி மாணவரான ஷர்ஜீல் இமாம் (Sharjeel Imam) சிறையில் அடைக்கப்பட்டு,  இந்த ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதியுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது.

CAA/NRC சட்டமானது -அமல்படுத்தப்பட்டால் பெரும் எண்ணிக்கையிலான இந்த நாட்டின் முஸ்லீம் குடிமக்களை நாடற்றவர்களாக ஆக்கிவிடும் என்ற செய்தி தான் ஷர்ஜீல் இமாமை, CAA/NRC சட்டத்திற்கு எதிரான போரட்டக்களத்திற்கு உள்ளே அழைத்து வந்தது.

CAA/NRC சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது ஜனவரி 16, 2020 அன்று அவர் பேசிய பேச்சுக்கள் தொடர்பாக அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களின் போலீசு ஷர்ஜீல் இமாம் மீது ஜனவரி 26, 2020 அன்று முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு (ஜனவரி 28 அன்று), டெல்லியில் பதியப்பட்ட எஃப்ஐஆர் தொடர்பாக அவர் தனது வழக்கறிஞருடன் சரணடையச் சென்றபோது டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசத் துரோக வழக்கு போடப்பட்டது. அதனைத்தொடர்ந்து, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் (UAPA) வழக்குப் பதியப்பட்டது; டெல்லி கலவர வழக்கிலும் அவரது பெயர் சேர்க்கப்பட்டது.

ஆனால் இமாம் எந்த வழக்கிலும் தண்டனை பெறாமல் நான்கு ஆண்டுகளாக சிறையில் விசாரணைக் கைதியாக இருந்து வருகிறார். 2019 டிசம்பரில் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்திற்கு அருகே நடந்த வன்முறை தொடர்பான இரண்டு வழக்குகளிலும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மீதான எட்டு வழக்குகளில், அவர் ஐந்தில் ஜாமீன் பெற்றுள்ளார், அவர் மீதான UAPA வழக்கு மட்டுமே இன்னும் மீதமுள்ளது.

இந்த நான்கு ஆண்டுகளில் அவர் தொடுத்த ஜாமீன் மனுக்கள் டெல்லியின் பல்வேறு நீதிமன்றங்களில் திட்டமிட்டு நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.

அவர் கைது செய்யப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, டெல்லி உயர் நீதிமன்றம் இமாமின் ஜாமீன் மனுவை 46 முறை பட்டியலிட்டுள்ளது; ஆனால் வழக்கு விசாரணை நடைபெறவில்லை. தற்போது எஃப்ஐஆர் 59/2020 இன் கீழான டெல்லி கலவர வழக்கு பிப்ரவரி 22 அன்று விசாரணைக்கு வரவுள்ளது. இருந்தாலும் இமாமுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படாமல் இருக்கிறது.


படிக்க: CAA-வுக்கு எதிராக பேசியதாக மருத்துவர் கஃபீல் கான் மீது தேசத்துரோக வழக்கு !


இமாம் மீது UAPA சட்டத்தின் பிரிவு 13-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்பிரிவின்படி அதிகபட்ச தண்டனையே 7 ஆண்டுகள் தான்.

இது குறித்து அவரது வழக்கறிஞர் அஹ்மத் இப்ராஹிம் கூறுகையில் “அதிகபட்ச தண்டனையில் பாதியை முடித்துவிட்டாலும், இன்னும் அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. பொதுவாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் எந்த ஜாமீன் மனுவும் நிலுவையில் இருக்கக்கூடாது. அந்த நபர் ஜாமீனுக்குத் தகுதியானவர் இல்லை என்றால், அந்த நபரின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டால், அந்த நபர் உயர் நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ சென்று நீதிக்கான போராட்டத்தை தொடர முடியும். ஆனால் இரண்டு ஆண்டுகளாக இமாமின் ஜாமீன் மனுவை நிலுவையில் வைத்திருப்பது குற்றவியல் நீதித்துறையின் செயல்முறைக்கு முரணானது,” என்றார்.

மேலும்” இந்த தாமதமானது அரசாங்கத்தின் வழிகாட்டுதலின் பேரில் உள்ளது. அரசாங்கத்தின் அழுத்தத்தின் கீழ் நீதித்துறை இயங்குகிறது. இந்தியாவில் இது முதல்முறையாக நடக்கவில்லை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், பாஜக ஆட்சியில் இருந்தாலும் இதேதான் நடக்கிறது. டெல்லி கலவர வழக்குகளில் ஷர்ஜீல் இமாமின் ஜாமீன் விசாரணை இரண்டு ஆண்டுகளில் 46 முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்டே நடத்தப்படும் அரசியல் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது,” என்று அவர் கூறினார்.

CAA/NRC சட்டமானது மக்கள் போரட்டங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போதிலும், CAA/NRC சட்டத்திற்கு எதிராக போராடியவர்களை நீதித்துறையின் துணைகொண்டு பாசிச கும்பல் வேட்டையாடிக்கொண்டு இருக்கிறது.

கைது செய்யப்பட்ட ஷர்ஜீல் இமாம் பாசிச கும்பலுக்கு வேண்டப்பட்ட அடிவருடியாக இருந்திருந்தால், அர்னாப் கோஸ்வாமிக்கு விடுமுறை தினத்தன்று கூடி விசாரித்து உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைப் போல், இவருக்கும் ஜாமீன் வழங்கியிருக்கும். ஆனால் இவரோ பாசிஸ்டுகளின் தாக்குதலை எதிர்த்தல்லவா போராடியிருக்கிறார்.


ஆதன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



இம்ரான்கானுக்கு சிறைத்தண்டனை: அமெரிக்க ஏகாதிபத்தியத்தை விமர்சித்ததுதான் குற்றமாம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை –
அமெரிக்க ஏகாதிபத்தியத்தை விமர்சித்தது தான் குற்றம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மறுநாளே மேலும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022-இல் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இம்ரான்கான், ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஏற்கனவே மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் இருந்தபோது அமெரிக்க தூதரகம் வாயிலாகப் பெறப்பட்ட ரகசியங்களை பகிரங்கப்படுத்தியதாக எழுப்பப்பட்ட புகாரின் அடிப்படையில் அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தை மீறிய நடவடிக்கை என அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது ஆட்சிக் காலத்தில் வெளியுறவு அமைச்சராக இருந்த ஷா மஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இத்தண்டனை விதிக்கப்பட்ட அடுத்த நாளே ஓர் ஊழல் வழக்கில் மேலும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தனக்கு எதிரான பல வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என இம்ரான்கான் கூறியுள்ளார். அதாவது இதன் பின்னணியில் அமெரிக்க ஏகாதிபத்தியம் இருக்கிறது என்பதே அவர் கூற வருகின்ற விசயம்.

கடந்த மார்ச் 2022-இல் அமெரிக்காவில் அந்நாட்டு உயர்மட்ட அதிகாரிகளுடன் பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் முக்கியமான பேச்சுவார்த்தை ஒன்றில் பங்கேற்றார். அப்போது அங்கு பேசப்பட்ட முக்கிய விவகாரங்கள் உள்ளடங்கிய ரகசிய ஆவணங்களை இஸ்லாமாபாத்திற்கு அனுப்பி வைத்தார். அதே மார்ச் 2022-இல் இம்ரான்கான் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் தனது ஆட்சியை கவிழ்க்க வெளிநாட்டு சக்திகள் திட்டம் போடுவதாகக் கூறி ஒரு காகிதத்தை எடுத்துக் காட்டினார். ”இம்ரான்கான் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டால் (நீங்கள்) அனைவரும் மன்னிக்கப்படுவீர்கள்” என அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறினார்.

எந்த நாடு இதற்குப் பின்னணியில் இருக்கிறது என்று இம்ரான்கான் சொல்லாவிட்டாலும் அமெரிக்காதான் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள முடியும். அதே சமயம் அமெரிக்காவை விமர்சிக்கவும் அவர் தவறவில்லை. இந்த சம்பவம் இம்ரான்கான் பதவி விலகுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு நடந்தது.


படிக்க: மக்களை வாட்டும் பொருளாதார நெருக்கடி: நேற்று – இலங்கை, இன்று – பாகிஸ்தான்!


இம்ரான்கானின் பதவி பறிபோன பின், ஜூலை 2023-இல் அதிகாரப்பூர்வ ரகசிய சட்டம் 1923-இன் படி அரசு ரகசியங்களை பொதுவெளியில் கசிய விட்டதாகக் குற்றம்சாட்டி பாகிஸ்தான் அரசு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில்தான் தற்போது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பிப்ரவரி 8 ம் தேதி பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலிலும் இம்ரான்கான் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆட்சியில் இருந்த காலத்தில், அமெரிக்காவை வெளிப்படையாகவே விமர்சித்தார் இம்ரான்கான். இன்னொரு பக்கம் சீன – இரசிய அரசியல் பொருளாதார உறவை வலுப்படுத்திக் கொண்டார்.

ஒரு பக்கம் பாகிஸ்தான் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பதும், குறிப்பாக ஐ.எம்.எஃப் இன் கடன் வலையில் பாகிஸ்தான் சிக்கிக் கொண்டிருப்பதும், இந்த நிலைமை மேலும் மேலும் அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு வழிவகுக்கும் என்பதும், இது பாகிஸ்தானை மிக மோசமான சூழ்நிலைக்குத் தள்ளிவிடும் என்பதும்தான் இம்ரான்கான் அமெரிக்கா மீது வெளிப்படையாகக் கூறிய விமர்சனங்கள்.

தான் கொடுக்கும் கடனுக்கு நிகராக மக்களுக்கு வழங்கும் சலுகைகளை வெட்ட வேண்டும் என்பதே எல்லா நாடுகளுக்கும் அமெரிக்கா தலைமையிலான ஐ.எம்.எஃப் முன்வைக்கும் நிர்ப்பந்தம்.

சில ஆண்டுகளுக்கு முன்னதாக சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின் ஒரு அங்கமாக, பாகிஸ்தான் வழியாக சீனா – பாகிஸ்தான் பொருளாதாரத் தாழ்வாரம் (CPEC) என்ற பெரும் பொருளாதாரத் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

இவையெல்லாம் தான் இம்ரான்கானின் மீதான தற்போதைய அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு காரணமாக உள்ளது. தற்போது ஆட்சியில் இருக்கும் ஷபாஸ் ஷெரிப் தலைமையிலான கும்பலும் அமெரிக்க அடிவருடியாக இருக்கும் வரை தான் ஆட்சியில் நீடிக்க முடியும்.

உலகை தனது அரசியல் பொருளாதார ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்க வேண்டும், தன்னை மீறி இந்த உலகத்தில் எதுவும் நடந்து விடக்கூடாது என்ற ஆதிக்கவெறி, அப்படி மீறி யார் நடந்து கொண்டாலும் அவர்களை அடக்கி ஒடுக்க வேண்டும்; மீறினால் அழித்து விட வேண்டும் என்று துடிக்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். சதாம் உசேன் தொடங்கி இம்ரான்கான் வரை இதுதான் நிதர்சனமான உண்மை.

தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியம் எப்படிப்பட்ட நிலைமைகளை உருவாக்கியது என்பது உலகறிந்ததே.

தனது அடிவருடிகளை ஆட்சியில் அமர்த்தி அதன் மூலம் தனது சுரண்டலையும், ஆதிக்கத்தையும் பல்வேறு வழிகளில் நிறுவிக் கொள்ளத் துடிக்கிறது அமெரிக்கா.

இந்தியாவின் மோடி தலைமையிலான காவி – கார்ப்பரேட் கும்பல் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அடிமை கும்பலாகவே உள்ளது.

உலகையே அச்சுறுத்தி தனது காலடியில் வைத்திருக்க வேண்டும் என்று கொக்கரிக்கின்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வீழ்த்தாமல் உலக மக்களுக்கு விடிவில்லை என்பதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை.


சிவக்குமார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



“வேண்டாம் பிஜேபி” பிரச்சாரத்தை தடுத்த காவிகளும் காக்கிகளும்

”2024 நாடாளுமன்றத் தேர்தல்: வேண்டாம் பிஜேபி; வேண்டும் ஜனநாயகம்” என்ற இயக்கத்தின் ஒரு அங்கமாக செய்யாறு பகுதியில் தெருமுனைக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதனையொட்டி ஜனவரி 28 அன்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொழிற்சங்க உறுப்பினர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்த பிஜேபி நகரச் செயலாளர் நமது தோழர்கள் பிரச்சாரம் செய்வதைத் தடுத்துள்ளார். மேலும் போலீசை அழைத்தும் அச்சுறுத்தியுள்ளார்.

அப்பகுதியைச் சேர்ந்த ஜமுமுக (JMMK), மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய அமைப்பினர் நமது தோழர்களுக்கு ஆதரவாக சம்பவ இடத்திற்கு வந்தனர்.

இன்றைய பிரச்சாரத்தை முடித்துக் கொள்ளுமாறு போலீசு நிர்ப்பந்தத்தை தொடர்ந்து பிரச்சாரம் முடித்துக்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டின் போலீசுத்துறை ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி; அம்பானி – அதானி பாசிஸ்டுகளின் அடியாளாகத்தான் வேலை செய்கிறது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.


தகவல்
புதிய தொழிலாளி முகநூல்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



நிதிஷ்குமார் – “INDIA” கூட்டணி – பாசிச எதிர்ப்பு | தோழர் சிவா

நிதிஷ்குமார் – “INDIA” கூட்டணி – பாசிச எதிர்ப்பு | தோழர் சிவா

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



போலீசு அடக்குமுறை | சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் | தரமணி

போலீசு அடக்குமுறை | சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் | தரமணி

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



NEP 2020 being implemented in Kerala with a different name | Prof. Francis Kalathungal | AISEC

NEP 2020 being implemented in Kerala with a different name | Prof. Francis Kalathungal | AISEC

Watch, share and comment!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



Education is a political activity | V.P. Nandha Kumar | AISEC

Education is a political activity | V.P. Nandha Kumar | AISEC

Watch, share and comment!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



First opposition against Ram temple in Tamil Nadu is from us! || Comrade Amirtha

First opposition against Ram temple in Tamil Nadu is from us! || Comrade Amirtha

Watch, share and comment!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



புஷ்பக விமானம் வைத்திருந்த ராமன்? | பேராசிரியர் அ.கருணானந்தன்

புஷ்பக விமானம் வைத்திருந்த ராமன்? | பேராசிரியர் அ.கருணானந்தன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube