முகப்புசெய்திஅழகிரி அண்ணன் வர்றாரு , எல்லாம் ஒதுங்கி நில்லுங்க !

அழகிரி அண்ணன் வர்றாரு , எல்லாம் ஒதுங்கி நில்லுங்க !

-

கட்அவுட் ஆடம்பர விளம்பரங்களை
கைவிட வேண்டும்!
கையில் தீச்சட்டி ஏந்தி
தீ மிதிக்கும் மூடத்தனம் ஒழிய வேண்டும்!
–  இது கருணாநிதியின் ஊருக்கு உபதேசங்கள்.
“பெருசு அப்படித்தான் வயசான காலத்துல
பேசிவிட்டு திரியும்.
நீ பெருசு பெருசா வைடா என் கட் அவுட்டை,
எடுடா கரகத்தை,
குத்துடா அலகு காவடியை,
வெட்டுடா பிறந்தநாள் கேக்கை
–  இது மு.க. அழகிரியின் மதுரைக் கொண்டாட்டங்கள்.

மனைவி காந்தி கிரிக்கெட் போட்டியைத் துவக்கி வைக்க,
மகன் துரை தயாநிதி பிளக்ஸ் பேனர்களில்
பாட்டன் சொத்துக்கு உரிமை கோர,
மகள் கயல்விழி அப்பாவுக்கு வந்த வாழ்த்துச் செய்திகளை
மலராகத் தொகுத்து வெளியிட்டு வீரவாளைப் பெற,
அழகிரியின் 57ஆவது பிறந்தநாள் படையெடுப்பில்
தங்கை கனிமொழியும் தன் பங்குக்கு
அண்ணா வழியில் போய்
அட்டாக் பாண்டியனைக் கண்டெடுத்த
அண்ணனின் போர்க்குணத்தைப் பாராட்ட
குடும்ப அரசியல் சந்தி சிரித்தது.

ஐம்பத்தியேழாவது பிறந்தநாளையொட்டி
ஐந்து கல்யாண மண்டபங்களில் சாப்பாடு
ஐநூற்று எழுபது பேருக்கு வேட்டி, சேலை
ஐம்பத்தியேழு பேருக்கு தையல் மிஷின்
ஐம்பத்தியேழு பேருக்கு அயர்ன் பாக்ஸ்
ஐம்பத்தியேழு ஜோடிகளுக்கு இலவசத் திருமணம்
ஐம்பத்தியேழு கோயில்களில் அன்னதானம்
இதுகளோடு ஒரு மூன்றை மட்டும் சேர்த்தால்
‘அம்மா’ பிறந்தநாளுக்கும்
அழகிரி ஆர்ப்பாட்டத்திற்கும் வேறுபாடில்லை.

“மதுரையின் ஐந்தாவது அதிசயம் அழகிரி” என்று
வித்தகக்கவி முதுகைச் சொறிய,
“அழகிரி என் தந்தைக்கு இணையானவர்” என்று
தங்கம் தென்னரசு மடியில் கையை வைக்க,
“கழகத்தின் ஆபத்தாண்டவரே” என்று
கம்பம் செல்வேந்திரன் காலைச் சுற்ற,
பழைய பெருச்சாளி ராஜ கண்ணப்பனோ
“தி.மு.க.வின் இதயத்துடிப்பே ” என்று
பதவித் துடிப்பில் பல்லைக் காட்ட,
ஆற்றலரசர் தனது அதிகாரச் செல்வாக்கை
அனுபவித்து மகிழ்ந்தார்.

பிறந்தநாளையொட்டி வேட்டி மட்டுமா,
விளங்காத ஜென்மங்களுக்கு பேட்டியும் கொடுத்தார்:
“நேரு குடும்ப அரசியல் செய்யவில்லையா?
அன்புமணியை ராமதாஸ் அழைத்து வரவில்லையா?
விஜயகாந்த் மச்சானுக்கு பொறுப்பு தரவில்லையா?
அது மாதிரிதான்டா தி.மு.க.வும் எங்கப்பன் சொத்து
இதுக்கும் மேல புரியலைன்னா
என் மவனைக் கேளுடா வெண்ணை!” என்று
பிய்த்து உதறி விட்டார்.

அ.தி.மு.க.வின் அடாவடிகளை எதிர்கொள்ள
இனி அழகிரி தி.மு.க.வாலேயே முடியும்!
அடிக்குற போஸ்டர் அளவை வைத்தே  நாளை
அண்ணன் நிழலில் பொறுக்கித் திங்க முடியும் என்று
ஐம்பத்தி எட்டாவது பிறந்தநாளுக்கு இதை விட
பெரிதாகக் கலக்குவது பற்றி இப்போதே
சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள் உடன்பிறப்புகள்.

தம்பி பரதனுக்காக முடிதுறந்த ராமர் அழகிரி
அம்பினை ஹாத்வே கேபிளுக்குள் நுழைக்க
இந்தியில் புகழ்பாடும் சுவரொட்டிகள்
எந்தப் பதவியிலும் இல்லாத ஏழைப் பங்காளனுக்கு
போலீஸ் துரத்தி, துரத்தி ராயல் சல்யூட்டுகள்.

பிழைப்புவாதிகள், துதிபாடிகள், சாதியக் கழிசடைகள்
அண்ணனின் பார்வையால்
தெருக்கோடியிலிருந்து பல கோடிக்குப் போனவர்கள்
அடித்த கூத்தில் கூச்சமில்லாமல் திளைக்கும்
அழகிரியைப் பார்த்து..
அடக்கி வாசித்த ஜெயலலிதாவே
இனி நமக்கென்ன தயக்கம் என்று
கழட்டிப் போட்ட பட்டுப்புடவையையும்
வைரக் கம்மலையும் மாட்டிக்கொண்டு
களத்தில் குதித்தாயிற்று..

முதலாளித்துவ அரசியல் போக்கை விமர்சித்த
காரல் மார்க்ஸ் இப்படிச் சொன்னார்:
“இனி பொய்ச்சத்தியம்தான் மதத்தைக் காப்பாற்றும்
ஒழுக்கக்கேடுதான் குடும்பத்தைக் காப்பாற்றும்
திருட்டுதான் சொத்தைக் காப்பாற்றும்”.
கழகக் கண்மணிகள் சொல்கிறார்கள்:
“இனி அழகிரிதான் கட்சியைக் காப்பாற்றுவார்.”

புதிய கலாச்சாரம், மார்ச்’ 08 (அனுமதியுடன்)

 1. ///“இனி பொய்ச்சத்தியம்தான் மதத்தைக் காப்பாற்றும்
  ஒழுக்கக்கேடுதான் குடும்பத்தைக் காப்பாற்றும்
  திருட்டுதான் சொத்தைக் காப்பாற்றும்”.
  கழகக் கண்மணிகள் சொல்கிறார்கள்:
  “இனி அழகிரிதான் கட்சியைக் காப்பாற்றுவார்.”////

  Haa… Haa… Haa…..

 2. கொள்கை குன்றுகள்,
  அண்ணாவிலிருந்து அழகிரி வரை எல்லாம் சரியாகத்தான் செயல் படுகிறார்கள்.மக்கள் தான் இன்னமும் கோமாளியாக இருக்கின்றார்கள் அவர்கள் உத்தமர்கள் என்று இன்னமும் நம்பிக்கொண்டு

  கலகம்

 3. //அடித்த கூத்தில் கூச்சமில்லாமல் திளைக்கும்
  அழகிரியைப் பார்த்து..
  அடக்கி வாசித்த ஜெயலலிதாவே
  இனி நமக்கென்ன தயக்கம் என்று
  கழட்டிப் போட்ட பட்டுப்புடவையையும்
  வைரக் கம்மலையும் மாட்டிக்கொண்டு
  களத்தில் குதித்தாயிற்று//

  இதை விட எப்படிச்சொல்ல முடியும்!பொட்டில் அடி!
  அன்புடன்
  கமலா

 4. அழகிரி அண்ணன் வர்றாரு , எல்லாம் ஒதுங்கி நில்லுங்க !

  ஒதுங்கி என்ன? ஓடியே விடுகிறேன். நன்றாக இருந்தது.

 5. //இனி பொய்ச்சத்தியம்தான் மதத்தைக் காப்பாற்றும்
  ஒழுக்கக்கேடுதான் குடும்பத்தைக் காப்பாற்றும்
  திருட்டுதான் சொத்தைக் காப்பாற்றும்”.
  கழகக் கண்மணிகள் சொல்கிறார்கள்:
  “இனி அழகிரிதான் கட்சியைக் காப்பாற்றுவார்.”//

  இப்படியே நாம் மாரித் தவளைகள் போல் கத்திச் சாக அவர்கள் சகல சுகத்துடன் வாழ….
  அருமையான ஜனநாயகம்.

 6. இது கூட ஒரிஜினல் கிடையாது

  கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தாலே மூளை மழுங்கி விடுமா

  சுயபுத்தி அடியோடு போய் விடுமா

 7. அழகிரியால் மதுரையும் தென்மாவட்டங்களும் படுகிற பாடு இருக்கிறதே! சொல்லி மாளாது.

  திமுக தன்னுடைய கொள்கை பிடிப்புகளை விட்டு சீரழிந்து போனதற்கு எடுப்பான எடுத்துக்காட்டு அழகிரி.

 8. //கட்அவுட் ஆடம்பர விளம்பரங்களை
  கைவிட வேண்டும்!
  கையில் தீச்சட்டி ஏந்தி
  தீ மிதிக்கும் மூடத்தனம் ஒழிய வேண்டும்!
  – இது கருணாநிதியின் ஊருக்கு உபதேசங்கள்.
  “பெருசு அப்படித்தான் வயசான காலத்துல
  பேசிவிட்டு திரியும்.
  நீ பெருசு பெருசா வைடா என் கட் அவுட்டை,
  எடுடா கரகத்தை,
  குத்துடா அலகு காவடியை,
  வெட்டுடா பிறந்தநாள் கேக்கை//

  பெரிசு…சில வருடங்களுக்கு முன்.. பி.டி.ராஜன்..மற்றும் திமுக தொண்டர் ஒருவர் ;குங்குமப் பொட்டுக்கு.;
  விளக்கம் கொடுத்துதே!
  பரம்பரைப் பொட்டு…பஞ்சப் பொட்டு.
  கடவுள் இல்லை…ஆனால் சாயி பாவா வந்த போது “நான் கடவுளை ஏற்கிறேனா? என்பது பிரச்சனையல்ல; கடவுள் என்னை ஏற்கிறாரா??
  தண்டவாளத்தில் தலை வைத்தவன்..ஐயோ கொல்லுறாங்க…
  இப்படி எத்தனை உளறல்களைக் கேட்டு காதுச் சவ்வு வெடித்து விட்டது.
  பெரிசை நிம்மதியா..மானாட மயி(ரா)லாட பாக்க விடுங்கையா..இவர் தானாமே..அதுக்கு எடிட்டர்…

 9. //இது கூட ஒரிஜினல் கிடையாது
  கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தாலே மூளை மழுங்கி விடுமா
  சுயபுத்தி அடியோடு போய் விடுமா//

  அத ஏன் அனானியா வந்து சொல்லுற
  டவுசர மாட்டிகிட்டு வா!!!

 10. அழகிரி ஒரு விளம்பரப் பிரியர் என்பது உலகறிந்த உண்மை. முதல்வர் மகன் என்பதைத்தவிர வேறு எந்த தகுதியுமே இல்லாத ஒரே ஆள்தான் இந்த அழகிரி. கருனாநிதியாவது கொஞ்சம் தமிழறிவும், பேச்சாற்றலும் உள்ளவர் (ஆனால் அதைவைத்து அவர் ஒன்றும் சமுதாயத்தொண்டு செய்யவில்லை) ஆனால் அழகரிக்கு கருனாநிதி மகன் மற்றும் ரவுடிகளின் நண்பன் என்கிற தகுதிமட்டும் தான்.

 11. தேர்தல் பாதை என்பதே திருடன் பாதைதான் .

  ரவுடித்தனம், துரோகம் , பித்தலாட்டம் இவையெல்லாம் ஒன்றாய் கலந்ததுதான் ஓட்டு சீட்டு அரசியலே.

  நம் நாட்டில் பல அழகிரிகள் இருக்கிறார்கள்.

 12. போலி கம்யூனிஸ்டுகள் என்பவர்கள் யார்? C.P.M போலிகளின் உண்மை முகம்

  //இது கூட ஒரிஜினல் கிடையாது

  கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தாலே மூளை மழுங்கி விடுமா

  சுயபுத்தி அடியோடு போய் விடுமா//

  ஏய் லூசு,
  உனக்கு முதலில் கம்யூனிஸ்ட் கட்சின்னா என்னன்னு தெரியும்
  கம்யூனிஸ்டுகள்னா என்னன்னு தெரியும் ?

  ஒன்னும் தெரியாதுன்னு நினைக்கிறேன்
  போய் முத்லில் அதை தெரிஞ்சுகிட்டு வாங்க‌ சார்
  அப்புற‌ம் வந்து கம்யூனிஸ்ட் கட்சி பத்தி கேளுங்க.

 13. //நம் நாட்டில் பல அழகிரிகள் இருக்கிறார்கள்//

  இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

  நாட்டில் அழகிரியை விட பொறுக்கித்தனம், ரவுடித்தனத்தில் யாரும் மிஞ்ச முடியாது.

  அதனால் அழகிரி வேறு யாரோடும் ஒப்பிடுவது அழகிரியின் புகழை
  குறைப்பதற்கு ஒப்பாகும்,

 14. இது ஆரம்பம் என்றுதான் நினைக்கிறேன்… கருணாநிதியின் காலத்திற்கு பிறகு இவர்களின் குடும்பத்தில் நடக்கும் சொத்து, அதிகார பிரச்சினைக்காக தமிழகத்தை பிளவு படுத்துவார்கள்… அதற்காக மக்கள் மத்தியில் ஆழம் பார்க்கும் முயற்சிகளில் பலவற்றில் ஒன்றே இது போன்ற கொண்டாடங்கள்…
  தமிழக மக்களே… கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின், அழகிரி, விஜயகாந்த், சரத்குமார், மாறன் குடும்பம் , போலி கம்யுனிஸ்டுகள் … இப்படி பல அரசியல் கூத்தாடிகளை கண்ட பின்பும் ஒவ்வொருவனும் ஏமாற்றுகிறான் என்று தெரிந்தும் இன்னும் இவர்களுக்கு ஒட்டு போடுவது ஏனோ?
  ஒரு மனிதனின் பிறந்த நாள் கொண்டாடத்திர்க்காக சாலையில் போக்குவரத்து நெரிசல், போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் “கட்-அவுட்” கள் , தொண்டர்களுக்கு பிரியாணி, உற்சாக பானம்… இத்யாதி இத்யாதி..
  இந்த கூட்டத்திற்கு பாதுகாப்பு தரும் காவல் துறை.. சாதாரண மக்கள் தங்கள் பகுதிக்கு தண்ணீரோ , சாலை வசதியோ கேட்டு போராடும் போது அவர்களை அடித்து விரட்டுவது ஏன்?
  சில இலவசங்களை கொடுப்பதால் ஒருவன் மக்கள் தலைவன் ஆவதில்லை.. பல கோடி மக்களை இந்த இலவசங்களை பெற்றுக்கொள்ள வேண்டிய எழ்மை நிலையில் வைத்திருபதாலே நம் நாட்டில் ஒருவன் மாபெரும் மக்கள் தலைவன் ஆகிறான்… வெட்கக்கேடு…

 15. ஒரு விஷயம் மறந்து விட்டது

  வாங்கிய பணத்திற்கு விசுவாசமாக திமுகவை திட்ட ஆரம்பித்துள்ளவர்கள்

 16. //ஒரு விஷயம் மறந்து விட்டது

  வாங்கிய பணத்திற்கு விசுவாசமாக திமுகவை திட்ட ஆரம்பித்துள்ளவர்கள்//

  I guess VINAVU critisizes every one, DMK, ADMK, CPI (M), Vijaykanth, Sankarachari, Congress, BJP, Teresa, Modi, REliance and many others. Now tell from whom VINAVU receives money to scold these people.

  People should use VINAVU’s posts to have meaningful discussions. If you do not agree with his views, discuss with evidences.

  VINAVU should keep up his wonderful job.

  NITHIL

 17. ஏனுங்னா யாராவது சேலம் பக்கம் வந்து பார்த்தீங்னா பரவாயில்லை!

  பொறுக்கி தனத்துல, ரவுடி அரசியல்ல எங்க வீரபாண்டி ஆறுமுகத்துகிட்ட
  அழகிரி பிச்ச வாங்குனும்!

  மதுரையவிட சேலத்துக்காரந்தான் பாவம்!

 18. //People should use VINAVU’s posts to have meaningful discussions.//

  அர்த்தமுள்ள விவாதங்களுக்கு வினவு தயாரில்லையே.;

  முதலில் அவர் சொந்தமாக எதையும் எழுதுவதில்லை.

  அடுத்தவரின் எழுத்தை திருடியே ஒன்றுக்கு இரண்டு தளங்களில் பதியும் டைப்பிஸ்ட் வேலை தான்.

  ஒரு கேள்விக்கு கூட பதிலளிக்க வக்கில்லை

  கேள்வி கேட்டால் சில ”அர” வேட்காட்டு ஜன்மங்கள் டவுசர் என்று கூறுமே தவிர பதிலளிக்காது.

  //If you do not agree with his views, discuss with evidences.//

  விவாதம் செய்ய அவர் தயாரில்லையே. கம்யூனிஸ்ட் கட்சியில் சேருவதற்கு முதல் தகுதியே மழுங்கி போன அறிவு தானே.

 19. நீங்கள் குறிப்பிட்ட பின்னூட்டத்திற்கு முன்னர் ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தேன்

  அதில் உள்ள ஆதாரத்திற்கு பதிலளிக்க இயலாத வினவு அதை நீக்கி விட்டார்

  இவரிடம் என்ன விவாதத்தை எதிர்பார்க்க முடியும்

  பதிலளிக்க இயலாத பின்னூட்டங்களை நீக்கு கேவல செயல் எதை நிருபிக்கிறது.,

  கருத்தில் வீரியமும் கொள்கையில் நம்பிக்கையும் அறவே இல்லாததால் தானே இந்த நிலை

  ஒரு பதிவில் எழுதியதை தற்காக்க கூட முடியாத நிலையில் வலைப்பதிவு ஒரு கேடா

  இதுக்கு பதில் வேற தொழில் செய்யலாம்

  தூ

 20. //அத ஏன் அனானியா வந்து சொல்லுற
  டவுசர மாட்டிகிட்டு வா!!!//

  எப்படி சொன்ன உனக்கென்ன
  நீ பதில் சொல்லூடா
  பதில் சொல்ல வக்கில்லை என்றால் ஏன் பதிவு எழுதுற

  வெக்கமாயில்லை

 21. //ஏய் லூசு,
  உனக்கு முதலில் கம்யூனிஸ்ட் கட்சின்னா என்னன்னு தெரியும்//

  தமிழ் நாட்டுல இருந்து கிட்டு கேரளாவை ஆதரிப்பவர்கள்

  வசூல் செய்பவர்கள்

  பணம் வாங்கி காரியம் செய்பவர்கள்

  அடாவடி செய்பவர்கள்

  //கம்யூனிஸ்டுகள்னா என்னன்னு தெரியும் ?//

  சொந்த புத்தி கிடையாது
  மழுங்கிய மூளை
  கேள்விக்கு பதிலளிக்க வக்கின்மை

  கருத்து செறிவின்னை
  கொள்கையின்மை

  //ஒன்னும் தெரியாதுன்னு நினைக்கிறேன்
  போய் முத்லில் அதை தெரிஞ்சுகிட்டு வாங்க‌ சார்//

  சரி அத நீங்க சொல்லூங்க

  //அப்புற‌ம் வந்து கம்யூனிஸ்ட் கட்சி பத்தி கேளுங்க.//

  நீங்க சொல்லுங்க

 22. ஹேய்ய்ய்ய்ய்,

  இங்க ஒரு டவுசர் வந்து ஒரு ஆட்டம் ஆடுது பாரு…யப்பா கீஞ்சு பூடும் போல கீது….!!!!!
  இது கருணாநிதி டவுசரா இல்ல அழகிரி டவுசரான்னு தெரீல…மொத்த்தஃதுல ஒரு இத்து போன டவுசருன்னு மட்டும் தெரீது…!!!!!

 23. //எப்படி சொன்ன உனக்கென்ன
  நீ பதில் சொல்லூடா //

  இன்னா கேள்ளவிய கேட்ட நீயி பதில சொல்ல…
  மொதல்ல நாடாவ டைட் பண்ணு டவுசரு கழன்டுக்க போவுது…

 24. //நீங்கள் குறிப்பிட்ட பின்னூட்டத்திற்கு முன்னர் ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தேன்
  அதில் உள்ள ஆதாரத்திற்கு பதிலளிக்க இயலாத வினவு அதை நீக்கி விட்டார்//

  ‘இத்த’யே போடும் போது அத்த போடாம இருப்பாங்களா..அய்…!!! காமெடி பண்ணாதப்பா…
  ஒக்கே உனக்காவ ஒன் மோர் சான்ஸ்…
  ஆஸ்க் த கொச்டீன் மிஸ்டர் அன்டரவேர்..சாரி டவுசர்!!!!

 25. //கேள்வி கேட்டால் சில ”அர” வேட்காட்டு ஜன்மங்கள் டவுசர் என்று கூறுமே தவிர பதிலளிக்காது.//

  ஜனங்களே அனானி எனப்படும் டவுசர் எனப்படும் இந்தாளு போட்ட பின்னூட்டம் இது

  //இது கூட ஒரிஜினல் கிடையாது
  கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தாலே மூளை மழுங்கி விடுமா சுயபுத்தி அடியோடு போய் விடுமா//

  இதில் குறைந்த பட்சம் ஒரு கேள்வியை கண்டு பிடிப்பவர்களுக்கு ஒரு டவுசர் பரிசாக அளிக்கப்படும்…..!!!!!!!!!
  ஐய புதுசுதாம்பா….!!!!!

 26. /ஒரு கேள்விக்கு கூட பதிலளிக்க வக்கில்லை
  /கேள்வி கேட்டால் சில ”அர” வேட்காட்டு ஜன்மங்கள் டவுசர் என்று கூறுமே தவிர பதிலளிக்காது.//

  டவுசர், டவுசர் கேள்வி கேளு டவுசர்!!!
  ரிப்பீட்டேட்டட்டய்ய்ய்ய்ய்ய!!!!

 27. டவுசரு இப்படி ஆள் தெரியாம மாட்டிகிட்டு முழிக்குறியேப்பா,பாவம்
  அரடிக்கட் கிட்ட மாட்டிகிட்டயே,கதை காலிதான்

  கலகம்

 28. கேள்வி 1 : கம்யூனிஸ்டு கட்சியில் சேருபவர்களுக்கு சுயபுத்தி இல்லாமல் இருப்பதன் காரணம் என்ன

  கேள்வி 2 : தளத்தில் சொந்தமாக எழுதமால் அடுத்தவர்களை காப்பி அடிப்பது ஏன்

  கேள்வி 3 : தமிழகத்தில் கட்சி நடத்து கம்யூனிஸ்டுகள் ஏன் கேரளாவை ஆதரிக்கிறார்கள் (முல்லை பெரியார், சேலம் கோட்டம், நாகர்கோவில் நீர் பிரச்சனை)

  கேள்வி 4 : மகஇக வின் தலைமை அலுவலகம் எங்குள்ளது

  கேள்வி 5 : மக இ க விற்கும் சி பி ஐ க்கும் கொள்கை அளவில் என்ன வேறுபாடு

  கேள்வி 6 : மக இ க விற்கும் சி பி எம்முக்கும் கொள்கை அளவில் என்ன வேறுபாடு

  கேள்வி 7 : மக இ க விற்கும் சி பி எம் எல்லு க்கும் கொள்கை அளவில் என்ன வேறுபாடு

  கேள்வி 8 : ம க இ க இது வரை தமிழகத்தில் செய்துள்ள பொது நலன் சார்ந்த காரியம் ஒரு 10 கூற முடியுமா

  யார் வேண்டுமானாலும் பதிலளிக்கலாம்.

  8 கேள்விகளுக்கும் பதிலளித்தால் பிற சந்தேகங்களை கேட்க தயார்

  • அனைவருக்கும் வண‌க்கம். நாம் அடுத்து நடக்க இருப்பதை பார்கலாம். போராட்ட களத்தையும், மக்களையும் தயார் படுத்துவோம். ஊழல் மட்ரும் அரசு நிர்வாக சீர்கேட்டிர்கு எதிராக போராடுவோம். தாங்கள் ஏதாவது இயக்கதில் இருந்தால் தயவு செயது சொல்லுங்கள். இனணந்து போரடுவொம்.

 29. முதல்ல ஒரு சர்தார்ஜி ஜோக்!!!!

  சர்தார்ஜி என்ன பண்ணாருன்னா விவேக் அன்டு கம்பேனிக்கு போய் வாஷிங் மெஷின் விலையை விசாரிச்சிருக்கார்…

  யோவ் உனக்கெல்லாம் குடுக்கமுடியாது போய்யான்னு சேல்ஸ்மேன் விரட்டிவிட்டான்

  என்ன பண்ணுரதுன்னு யோசனை பண்ணின சர்தார்ஜி அடுத்தநாள் சேவிங் பண்ணிட்டு மச்சம் ஒட்டிகிட்டு அதே கடைக்கு போய் வாஷிங் மெஷின் விலையை விசாரிச்சிருக்கார்…

  யோவ் உனக்கெல்லாம் குடுக்கமுடியாது போய்யான்னு சேல்ஸ்மேன் விரட்டிவிட்டான்

  ஒரு வேள நம்ம மூஞ்சி நல்லால்லையோன்னு யோசிச்சி யோசிச்சி ஒரு புர்காவை மாட்டிகிட்டு
  அதே கடைக்கு போய் வாஷிங் மெஷின் விலையை விசாரிச்சிருக்கார்…

  இன்னா புர்கா போட்டா உன்னை தெறியாதா, இனிமே இந்த பக்கம் வந்தீன்னா மவனே உத படுவேன்னு சேஸ்ல் மேன் சொல்ல, சர்தார்ஜி மென்டலாயிட்டாரு,, யோவ் ஏன்யா எனக்கு வாஷிங் மெஷின குடுக்கமாட்ட? எப்படியா என்ன கண்டு புடிச்சன்னு சேல்ஸ்மேன் சொக்காவ பிடிச்சு கேக்க…

  டோமரு நீ இத்தினி நாளா வாஷிங் மெஷின்னு கேட்டது ஒரு பிரிட்ஜ பாத்துய்யா………..

 30. இப்பத்தான்யா போன கட்டுரையை பாத்தேன்!!!!
  அதே பின்னூட்டம், பேரு மட்டும் வேற!!!!

  ஜனங்களே இது திமுக டவுசரில்ல சிபிஎம் டவுசர் (உவ்வே) ……

  அடப்பாவி மக்கா மகஇக வை திட்ட கம்யூனிஸ்டு கட்சியையே திட்டுரியே…. அதிமுக காரன் கூட இவ்வளுவு எச்சத்தனமா நடக்க வெக்கப்படுவான்யா…

  நீ பேருல டவுசர வச்சுகிட்டாலும் அம்மனமாத்தான் இருக்கே…

 31. சிபிஎம் சாயம் வெளுத்து போச்சு
  டும் டும் டும் டும்

  டவுசர் இப்ப கழன்டு போச்சு
  டும் டும் டும் டும்

  *****************************************

  ஓகே கலகம் ஸ்டார்ட் மீஜிக்……!!!!!

 32. ஐயா டவுசர்,

  சென்ற பதிவுகளில் எல்லா முகவரிகளையும் வினவு தந்திருக்கிறார். அதில் எதிலாவது ஒன்றில் சென்று உங்களின் கேள்வி மூட்டையை கொட்டுங்கள். அவர்கள் தகுந்த பதிலை தருவார்கள்.

  தோழர் அர டிக்கெட்டு தன்னுடைய வடிவில் உங்களுக்கு பதில் தந்திருக்கிறார். ஆனால் அது உங்களுக்கு புரியாது என்பது உங்கள் கேள்விகளிலேயே வெளிப்படையாக தெரிவதால், நான் நேரடியாக பதில் தந்திருக்கிறேன்.

  இதுவும் புரியவில்லையென்றால்………

  தோழமையுடன்
  செங்கொடி

 33. அண்ணே டவுசர் பாண்டி..

  உங்களைப் போல் நாங்கள் எல்லாம் பிறப்பிலேயே அறிவாளிகள் அல்ல… எங்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச சுய புத்தியை கொண்டு மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், பெரியார் இன்னும் பல மக்கள் தலைவர்களின் சிந்தனைகளைப் படித்து சமூக நலனுக்காக பாடு படுகிறோம்…

  பெரியாரின் சிந்தனைகளை வலைப் பதிவில் வெளியிட அவருடைய அனுமதி பெற்று இருக்க வேண்டுமா? இந்த வலை தளத்தில் வினவின் சொந்த கட்டுரைகளும், அனுமதியுடன் வெளியிடப்பட்ட பிறரின் கட்டுரைகளும் உள்ளன.. வினவு, அனுமதியுடன் வெளியிடும் கட்டுரையினால் உனக்கு என்ன பிரச்சினை..?
  கொஞ்சமாவது தெளிவு கொள்.. இது “கட்டற்ற மென்பொருட்களின்” (Open Source Software) காலம்.. ஒவ்வொருவரின் அறிவையும் இந்த சமூகத்திற்கு பயன்படுத்த முயற்சி எடுக்கும் காலம்.. இதில் ஒரு ஆசிரியரின் கட்டுரையை வினவு வெளியிட்டால் .. நீ ஏன் குறைக்கிறாய்..?

  கேரளாவை ஆதரிப்பதை பற்றி CPI, CPM கட்சிக்காரர்களிடம் சென்று கேள்….

  ம.க.இ.காவின் அலுவலக முகவரி சென்ற பதிவில் வினவு குறிப்பிட்டு உள்ளார். அது சரியா தவறா என்று விசாரித்து சொல்..

  கொள்கை வேறுபாட?.. அடடா.. CPI, CPM அவர்களுக்கு கொள்கை என்று ஒன்று உள்ளதா.. முதலாளித்துவத்தை எதிர்கிறேன் என்று மேற்கு வங்கத்தில் விவசாயிகளின் வாழ்வை நாசம் பண்ணுவது.. அவர்களுக்கு எதிராக போராடும் பழங்குடி மக்களை ஒடுக்குவது.. தமிழகத்தில், ஒரு காலத்தில் அவர்களுக்கு பாசிச ஜெயாவாக இருந்த அம்மா.. இன்று அவர்களுக்கு பாசமிகு அம்மாவாக மாறி இருப்பது…
  முக்கியமாக அவர்களைப் போல் இந்த கேடுகெட்ட ஓட்டு பொறுக்கி அரசியலில் கலந்து சாக்கடையாய் ம.க.இ.க மாறவில்லை..

  எனக்கு தெரிந்து உண்மையாக மக்களின் பிரச்சினைக்காக மக்களுடன் இணைந்து போராடுவது வெகு சிலரே.. அதில் ம.க.இ.க வும் ஒன்று..
  1. தாமிரபரணி கோகோ கோலாவிற்கு எதிரான போராட்டம்..
  2. தில்லை கோவிலில் தமிழில் பாட அனுமதி மறுக்கப் பட்டதற்கு எதிரான போராட்டம்
  3. தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக தென் மாவட்டங்களில் நடந்த போராட்டம்
  4. இறால் பண்ணைகளுக்கு எதிரான போராட்டம்
  5. இணையத்தளத்தில் நடக்கம் ஊக பெற வணிகத்துக்கு எதிரான போராட்டம்
  6. இராமன் பாலம் என்பது புரட்டு! பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு! என்று நடந்த போராட்டம்
  7. தஞ்சையில் நடந்தும் தமிழ் மக்கள் இசை விழாவின் மூலம் பல தமிழ் இசை மேதைகளை கொண்டு கர்நாட இசை என்பது களவாடிய தமிழ் இசைதான் என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டியது.. தாய் மொழி உரிமை பற்றிய விழிப்புணர்வு..
  8. கருவறை நுழைவு போராட்டம் நடத்தியது..
  9. குஜராத் படுகொலைக்கு எதிராக மக்களிடம் நடத்திய விழிப்புணர்வு பிரச்சாரம்/போராட்டம், மறுகாலனி ஆக்கத்திற்கு எதிராக நடத்தும் போராட்டங்கள், தேர்தல் பாதையின் போலித்தனங்களை எதிர்த்து நடக்கும் போராட்டம், விவசாயத்தை அளிக்க வரும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள், உணவுப் பொருட்களுக்கு எதிரான போராட்டம்….

  மேற்கூறிய அனைத்தும் எனது அறிவுக்கு எட்டிய ஒரு சிலதுதான்..

  அண்ணே டவுசர் பாண்டி அண்ணே.. உங்களுக்கு மரியாதை கொடுத்து இவ்வளவு பெரிய பதிலை அளித்து உள்ளேன்..
  உனக்கு தைரியம் இருந்தால் வினவு வெளியிடும் கட்டுரையில் உள்ள நிறை குறைகளை பற்றி விவாதி.. அதை விட்டு விட்டு.. வீணாக எங்களின் நேரத்தை வீணாக்க வேண்டாம்..

 34. நன்று பகத். மகஇக-வின் போராட்டங்கள் பற்றியே தனி பதிவு இடலாம்.

  ம.க.இ.க போராட்டங்கள் தொடர்ச்சி…

  . சிறுவணிகத்தில் ரிலையன்ஸை (Reliance Fresh) எதிர்த்து போராட்டம்
  . சங்கரராமன் கொலையையொட்டி சங்கராசாரியை அம்பலபடுத்தியத்து
  . பெரியார் சிலையுடைப்பை எதிர்த்து களத்தில் ஆர்ப்பாட்டம்
  . பள்ளி கட்டாய நன்கொடை எதிர்த்து போராட்டம்
  . சாராய கடைகளை அகற்ற கோரி போராட்டம்
  . ஈழ மக்களை கொல்லும் சிங்கள அரசுக்கு இராணுவ உதவி அளிக்கும் இந்திய அரசை எதிர்த்து போராட்டம்

  இப்படி மகஇக-வின் மக்களுக்கான போராட்டகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இது எனக்கு தெரிந்த அளவிலானதாகும்.

 35. யோவ்,
  டவுசரு,நான் அப்பாலேயே சொன்னேன் இல்ல,அரடிக்கெட்கிட்ட,மாட்டிக்கிட டவுசர உருவிவிவிட்டுருவாருன்னு.கேட்டியா கேட்க மாட்டேங்குறீயே.உங்கப்பன் விடுதலைக்கு பாடுனது போல உனக்கும் பாடுனாத்தான் போவியோ,இந்தாபிடி

  டவுசரு வந்து ஆட்டம்
  போட்டது ஜிங் ஜிங் ஜிங்

  அத அண்ணரு உருவிவிட்டாலும்
  அம்மணம்ம ஆடுது ஜிங் ஜிங் ஜிங்

  இன்னைக்கு ஞாயிற்று கிழமை ஜிங் ஜிங்
  போய் உங்க பாருல ஆடு
  காசாவது கெடைக்கும் ஜிங் ஜிங் ஜிங்

  அப்படியே டவுசரு கலகத்துல சீபிஎம் அம்மணமா நிக்குதே வந்து டவுசர மாட்டீட்டு போறீயா.

  கலகம்
  http://kalagam.wordpress.com/

 36. கேட்கப்பட்ட கேள்விகள் – 8

  விடை வந்த கேள்விகள் – 3, 8

  இன்னமும் விடை வராத கேள்விகள்

  1,2,4,5,6,7,

 37. //சென்ற பதிவுகளில் எல்லா முகவரிகளையும் வினவு தந்திருக்கிறார்.//
  சுட்டி தாருங்கள்
  இந்த கேள்விக்கு இந்த சுட்டியில் விடை இருக்கிறது என்று தாருங்கள்

  // அதில் எதிலாவது ஒன்றில் சென்று உங்களின் கேள்வி மூட்டையை கொட்டுங்கள். அவர்கள் தகுந்த பதிலை தருவார்கள்.//
  அப்படி என்றால் பதில் அளிக்க அளவு உங்களிடம் கருத்து செறிவு இல்லை

  //தோழர் அர டிக்கெட்டு தன்னுடைய வடிவில் உங்களுக்கு பதில் தந்திருக்கிறார்.//

  உண்மைதான் பதிலளிக்க அறிவில்லாமல் டவுசர் என்று கூறியுள்ளார்

  // ஆனால் அது உங்களுக்கு புரியாது என்பது உங்கள் கேள்விகளிலேயே வெளிப்படையாக தெரிவதால், நான் நேரடியாக பதில் தந்திருக்கிறேன்.//

  எங்கு தந்துள்ளீர்கள்

 38. //டவுசரு,நான் அப்பாலேயே சொன்னேன் இல்ல,அரடிக்கெட்கிட்ட,மாட்டிக்கிட டவுசர உருவிவிவிட்டுருவாருன்னு.கேட்டியா கேட்க மாட்டேங்குறீயே.//

  டவுசர் உருவாரா… .அவனாடா நீ 🙂 🙂

  டவுசர் உருவதை தவிர கேள்விக்கு பதில் குடுக்க வக்கில

  அதுக்கு சிங்கி அடிக்க நாளு பேரு

  வெட்கக்கேடு

  மக இ க பற்றி தெளிவாக விளக்கி வருகிறீர்கள்

  மிக்க நன்றி

 39. பகத், சுனா பானா

  மிக்க நன்றி

  உங்களை போல் தெளிவானவர்கள் இருக்கும் கட்சியில் / இயக்கத்தில் ஏன் சில மனவியாதியஸ்தர்களுக்கு சிகிச்சை அளிக்காமல் வைத்துள்ளீர்கள்

  சென்னை கீழ்ப்பாக்கம் அனுப்பவும்

 40. மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில முகவரி:

  இரா.சீனிவாசன்,
  என்.4, ஐந்தாவது தெரு, செகந்நாதபுரம்,
  சேத்துப்பட்டு, சென்னை – 600 031
  தொலைபேசி 044- 2836 0344
  செல்பேசி – 94446 48879

  ம.க.இ.கவின் மாத இதழான புதிய கலாச்சாரத்தின் முகவரி:

  இரா.சீனிவாசன்,
  16, முல்லை நகர் வணிக வளாகம்,
  2வது நிழற்சாலை,
  ( 15வது தெரு அருகில் ),
  அசோக் நகர், சென்னை – 600 083.

  044 – 23718706
  செல்பேசி 99411 75876

  அலுவலக நேரம் காலை 10 முதல் மாலை 5 வரை.

  மேற்கூறிய இரு அலுவலகங்களிலும் சென்று , வினவு நீங்கள் எழுதும் கட்டுரையை காப்பி அடிக்கிறார் என்று சொல்லவும்… பிறகு அவர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்று பின்னூட்டம் இட்டால் நலம்.. அப்படியே உங்களின் இது போன்ற சந்தேகங்களையும் கேட்டு தெளிவு பெறவும்… இங்கு கட்டுரைக்கு ஒட்டிய விவாதம் மட்டுமே இருந்தால், யாருக்கும் தொந்தரவு இல்லை.. உங்களுக்கு அந்த அளவுக்கு சுய புத்தி இருக்கும் என்று நம்புகிறேன்..

  முதலில் CPI, CPM கட்சிகளுக்கு என்ன கொள்கை என்று சொல்?
  பிறகு என்ன வேறுபாடு என்று விவாதிக்கலாம்…

 41. //மேற்கூறிய இரு அலுவலகங்களிலும் சென்று , வினவு நீங்கள் எழுதும் கட்டுரையை காப்பி அடிக்கிறார் என்று சொல்லவும்… பிறகு அவர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்று பின்னூட்டம் இட்டால் நலம்.. //

  காப்பி அடிப்பதற்கு சீனிவாசன் சம்மதிக்கிறாரா இல்லை என்பது பிரச்சனை அல்ல

  பிரச்சனை. சுயமாக சிந்தித்து எழுதும் அளவிற்கு வினவிற்கு உங்கள் இயக்கத்தினருக்கு இருக்கிறதா இல்லையா என்பதே

  புதிய கலாச்சாரம் என்ற பெயரில் பதிவு ஆரம்பித்து. அனைத்து கட்டுரைகளையும் வலையில் ஏற்றுவது வேறு. அப்படி செய்யுங்கள்.

  அதை விடுத்து ப்ளாக்கரில் ஒன்று, வோர்ட்பிரஸில் ஒன்று என்று இரு தளங்களை வைத்து வெறும் காப்பி ஏன்

 42. //முதலில் CPI, CPM கட்சிகளுக்கு என்ன கொள்கை என்று சொல்?
  பிறகு என்ன வேறுபாடு என்று விவாதிக்கலாம்…//

  இது நான் கேட்ட கேள்வி.

  தெரியாமல் தானே கேட்கிறேன்

  உங்களுக்கு தெரிந்தால் கூறுங்கள்
  உங்களுக்கு தெரியவில்லை என்றால் “தெரியாது” என்று ஏற்றுக்கொள்ளுங்கள்.

  அதன் பிறகு சிபிஎம் இடம் நான் கேட்டுக்கொள்கிறேன்

  மக இ க பற்றி தெளிவாக விளக்கம் அளித்து “நாங்கள் இப்படித்தான் “ என்று ஏற்கனவே சிலர் விளக்கி விட்டனர் 🙂 🙂

  அப்படியா இல்லையா என்று நீங்கள் விரும்பினால் விளக்கலாம்

 43. தோழர்களே,

  சமீப காலமாக வினவு தளத்தில் சீபிஎம் காமரேடுகளை அம்பலபடுத்தி வந்திருக்கிற கட்டுரையும் அதன் பின்னூட்டங்களும் அவர்களின் அரசியல் ஓட்டான்டித்தனத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

  அந்தக்கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்களை கண்டு அரண்டு போனவர்கள் தீக்கதிரில் எழுதினர், அவர்களின் பிளாகுகளில் எழுதினர் ( அதை ஒருவரும் சீண்டவில்லை என்பது வேறு விசயம்) வினவு தளத்தில் பல பெயர்களில் ஒருவரே பின்னூட்டம் போட்டார், கிசு கிசு பரப்பினார். இதிலும் அவர்களின் கயமைத்தனம் அம்பலமாகியது. அவர்கள் மேல் இரக்கப்பட்டு வினவு அந்த பதிவின் பின்னூட்டத்தை நிறுத்திய பின்னரும் சற்றும் சம்ம்ந்தமேயில்லாத தெரசா பதிவில் வந்து அதே பழைய பல்லவியை பாடி வாங்கிக்கட்டிக்கொன்டனர்.

  சரி மகஇக வை விமர்சனம் செய்தால் கண்டு பிடித்து விடுகிறார்கள் அதனால் நடுநிலை நாட்டாமையாகிவிடலாம் என முடிவு செய்து இந்தப் பதிவில் தங்களை தாங்களே திட்டிக்கொண்டு அப்படியே மக இகவையும் திட்டுகின்றனர். இதிலும் அம்பலப்பட்டு போனாலும் ‘நெஸ்ட் மீட் பண்லாம்’
  என்பது போல தோழர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு போகிறார் இந்த ‘நல்லவர்’.

  முதுகெலும்பற்ற இது போன்ற மண்புழுக்களுக்கு பதில் சொன்னால் அவை பரினாம வளர்ச்சியடைந்து மனிதனாக போவதில்லை ஆதலால் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துங்கள்.

 44. “முதுகெலும்பற்ற இது போன்ற மண்புழுக்களுக்கு பதில் சொன்னால் அவை பரினாம வளர்ச்சியடைந்து மனிதனாக போவதில்லை ஆதலால் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துங்கள்.”

  “பட்டய கிளப்பிட்டீங்க”

 45. //பிரச்சனை. சுயமாக சிந்தித்து எழுதும் அளவிற்கு வினவிற்கு உங்கள் இயக்கத்தினருக்கு இருக்கிறதா இல்லையா என்பதே
  புதிய கலாச்சாரம் என்ற பெயரில் பதிவு ஆரம்பித்து. அனைத்து கட்டுரைகளையும் வலையில் ஏற்றுவது வேறு. அப்படி செய்யுங்கள்.//
  அட.. நம்ம டவுசர் அண்ணனுக்கு என்ன பிரச்சினைன்னு இப்போ தெரிஞ்சு போச்சு.. இவருக்கு வினவு என்று பெயர் விதத்தில் உடன்பாடு இல்லை.. புதிய கலாசாரம் என்று பெயர் வைக்க சொல்கிறார்… நீர் என்ன சோசியகாரரா?
  நீ டவுசர் என்று பெயர் வைத்தது எனக்கு பிடிக்கவில்லை.. வேண்டும் என்றால் “சொரணை அற்றவன்” என்று பெயர் வைத்து விட்டு வா, பின் விவாதிக்கலாம்…

  சுயமாய் சிந்தித்து எழுத இந்த இயக்கத்தினருக்கு அறிவு இருக்கிறதா என்றா கேட்கிறாய்.. அட முட்டாளே இந்த இணையதளம், வலைத்தளம் போன்றவைகள் இப்பொழுது வந்தவை… இதற்க்கு பல காலம் முன்பு இருந்தே “புதிய ஜனநாயகம்” மற்றும் “புதிய கலாசாரம்” என்ற இதழ்களை ம.க.இ.க வெளியிட்டு வருகிறது… அந்த இதழ்களை வாங்கி படித்து பார்..

  டவுசர் அண்ணே, உங்களிடம் டார்வீனின் பரிமாண கோட்பாடை பற்றி எழுத சொன்னால் அந்த துறை சார்ந்த நபர்களின் உதவி இன்றி சொந்தமாக எழுதி கிழித்துவிடுவீர்கள் தானே..? நீங்கள் தான் “ஆல்-இன்-ஆல் அழகுராஜவாயிற்றே” …

  அட முட்டாளே.. எப்படி பெயர் வைத்தால் உனக்கு என்ன.. உள்ளே இருக்கும் கட்டுரையை பார்.. அதில் உனக்கு என்ன கருத்து வேற்றுமை என்று சொல்.. இப்படி இங்கு வந்து எதோ நீ “காப்புரிமை” செய்த பெயரை பயன்படுத்தியதை போல் பிதற்றுகிறாய்…
  முடிந்தால் ஒரு முறை வினவின் அறிமுகத்தை படித்து பார்…

  http://vinavu.wordpress.com/we/

  அழகிரியை பற்றி எழுதி இருக்கும் கட்டுரைக்கு உன்னுடைய கருத்து என்ன என்றால்? இதுவரை அதை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்ல வில்லை.. நீயெல்லாம்…

  தோழர் அர டிக்கெட்டு, நீங்கள் சரியாய் சொன்னீர்கள்… நம்முடைய நேரத்தை மிச்சப் படுத்தும் நேரம் இது..

 46. //“முதுகெலும்பற்ற இது போன்ற மண்புழுக்களுக்கு பதில் சொன்னால் அவை பரினாம வளர்ச்சியடைந்து மனிதனாக போவதில்லை ஆதலால் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துங்கள்.”
  //

  பதில் அளிக்க எங்களால் இயலவில்லை என்று நேராக சொல்லுங்கள்

  என்னவோ நீ பெரிய பிஸ்கோத்துன்னு உன் அல்லக்கை சொன்னான்

  நீ கேள்வி கேட்டா பதில் சொல்ல வக்கில்லாம இப்படி அழுது வடியுற
  வெட்கமா இல்லையா

  இதுக்கு பதில ……. தூ

 47. //wow, good replies from Kalagam, அர டிக்கெட்டு and பகத்.//

  யாராவது எதிர்த்து கேள்வி கேட்டால் அந்த கேள்விக்கு பதிலளிக்காமல், பதிலளிக்க வக்கில்லாமல் கேள்வி கேட்டவரை திட்டும் உங்கள் கொள்கை செறிவு வியக்க வைக்கிறது.

  இது தான் ம.க.இ.க வா

 48. //இவருக்கு வினவு என்று பெயர் விதத்தில் உடன்பாடு இல்லை.. புதிய கலாசாரம் என்று பெயர் வைக்க சொல்கிறார்… நீர் என்ன சோசியகாரரா?//

  வினவு என்ற பெயரில் வினவு சொந்தமாக கட்டுரை எழுது

  புதிய கலாச்சாரத்தில் வரும் கட்டுரைகளை அந்த பெயரில் போடுங்கள் என்றூ தான் சொன்னேன்

 49. //சுயமாய் சிந்தித்து எழுத இந்த இயக்கத்தினருக்கு அறிவு இருக்கிறதா என்றா கேட்கிறாய்.. அட முட்டாளே இந்த இணையதளம், வலைத்தளம் போன்றவைகள் இப்பொழுது வந்தவை… இதற்க்கு பல காலம் முன்பு இருந்தே “புதிய ஜனநாயகம்” மற்றும் “புதிய கலாசாரம்” என்ற இதழ்களை ம.க.இ.க வெளியிட்டு வருகிறது… அந்த இதழ்களை வாங்கி படித்து பார்..//

  அதில் எழுதுபவர்களின் உழைப்பையும் அறிவையும் மதிக்கிறேன்

  நான் அறிவிருக்கிறதா என்று கேட்டது அவர்களை பார்த்து அல்ல


  ஆனால் இங்கு எழுதும் சிலருக்கு அறிவு இருக்கிறதா என்ற என் கேள்விக்கு தெளிவாக விடை அளித்தவர்களுக்கு நன்றி

 50. என்னருமை கோவை மக்களே சமீப காலமாக கோவையில் அங்கும் இங்குமாக மதுரை யின் வேதனை அழகிரி அவர்களின் கட்அவுட் களை காண்கிறேன். மதுரை சீரழிந்தது போதும் . நம் நகர் அந்த ரௌடி கும்பல் தலைவன் கையில் வந்தால் இங்கு தொழில் நசிந்து போகும் சாலைகள் சகாரா பாலைவனம் போல் ஆகும். எச்சரிக்கை

 51. அண்ணா ஒரு தேர்தல் அப்ப காங்கிரஸ் ஐந்து ரூபாய் கொடுக்குறாங்க நீங்க அதை வாங்கிட்டு ஜனநாயகத்த தோற்க அடிச்சு திடாடீங்க ஆனால் அழகிரி ரூபாய் கொடுத்தூ நீங்க அதை வாங்கிட்டு ஜனநாயகத்த தோற்க அடிங்க,
  அண்ணா நீ வளர்த்த தி.மு.க கழகம் இப்போது திரு. மு.கருணாநிதி கழகம் ஆனது.

 52. திரு. என்ன வேண்டி கிடக்கு… திரு ன்னா திருவாரூர். திருவாரூர் முத்துவேலர் கருணாநிதி => தி.மு.க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க