Saturday, July 20, 2024
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்வறுமைக்கோடு வரையறை: ஏழைகளை ஒழித்துக்கட்ட ஓர் எளிய வழி!

வறுமைக்கோடு வரையறை: ஏழைகளை ஒழித்துக்கட்ட ஓர் எளிய வழி!

-

வறுமைக்கோடு

கடந்த மார்ச் 19ஆம் தேதியன்று மத்திய அரசின் திட்டக் கமிசன் புதிய வறுமைக்கோடு குறித்த மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது. உணவிற்கான உரிமை குறித்த வழக்கொன்றில் உச்சநீதிமன்றம், வறுமைக்கோட்டை வரையறுக்குமாறு மத்திய அரசைக் கேட்டிருந்தது. மாதமொன்றுக்கு நகர்ப்புறங்களில் ரூ. 4824/க்கும், கிராமப்புறங்களில் ரூ.3905/க்கும் குறைவான வருமானம் கொண்ட 5 பேர் அடங்கிய குடும்பங்களெல்லாம் வறுமைக்கோட்டுக்குள் வருவனவாகும் என்று  இது தொடர்பாகத் திட்ட கமிசன் தாக்கல் செய்த உறுதியளிப்பு மனு குறிப்பிட்டுள்ளது. அதாவது, ஒரு மனிதன் நாளொன்றுக்கு நகரத்தில் ரூ.32/க்கும், கிராமப்புறத்தில் ரூ.26/க்கும் அதிகமாக சம்பாதித்தால், அவன் வறுமைக்கோட்டுக்கு மேலானவன் என்கிறது, திட்டக்கமிசன்.

“முந்தைய வெள்ளிக்கிழமை மதிய உணவைச் சாப்பிட்டுவிட்டு, பிறகு இரு நாட்கள் உணவில்லாமல்,  பற்றி எரியும் வயிறுடன் பள்ளிக்கு வரும் சோர்வடைந்த  குழந்தைகளுக்கு எப்படி பாடம் நடத்துவது” என்கிறார்கள் மும்பை மற்றும் தானாவின் புறநகர்ப் பகுதிகளின் பள்ளி ஆசிரியர்கள். திங்கட்கிழமை தரப்படும் மதிய உணவை இரு மடங்காக்கித் தரவேண்டும் என்கிறார்கள், அப்பகுதிகளின் தாய்மார்கள். இப்படி  ஏழைகளும் பசித்த வயிறுகளும் நிறைந்த நாட்டில், நாளொன்றுக்கு ரூ.32/க்கு மேல் சம்பாதிக்கும் ஒருவரை ஏழை அல்ல என்று திட்ட கமிசன் சொல்வது கொடூரமான வக்கிரம்.

திட்ட கமிசனின் துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா,  “2004 ஆம் ஆண்டில் மக்கள் தொகையில் 37.2 சதவீதம் பேர் வறுமையில் இருந்தார்கள். 200910 இல் இது 30 சதவீதமாகக் குறைந்துவிட்டது. முந்தைய காலத்தைவிட கடந்த ஐந்தாண்டு காலத்தில் 7.3 சதவீத அளவுக்கு  இரட்டிப்பு வேகத்தில் வறுமை குறைந்து வருகிறது” எனக்கூறியிருக்கிறார்.

மேட்டுக்குடி உலகில் வாழும் உலகவங்கியின் வளர்ப்புப் பிராணியான அலுவாலியாவுக்கு மக்களைப் பற்றியோ, வறுமையைப் பற்றியோ, பசியைப் பற்றியோ என்ன தெரியும்? அலுவாலியா  போன்ற மேட்டுக்குடி வர்க்கத்தைப் பொறுத்தவரை மக்கள் என்பவர்கள் அவர்களது புளித்த ஏப்பக் கூட்டம்தான். சாமானியர்களை அவர்கள் மக்களாகவே என்றுமே மதிப்பதில்லை. புழு, பூச்சிகளைப் போலத்தான் பார்க்கிறார்கள். அத்தகைய திமிரும் வக்கிரமும் நிறைந்த கண்ணோட்டம்தான் அலுவாலியா கும்பலின் வறுமை பற்றிய மதிப்பீட்டிலும் வெளிப்படுகிறது.

இன்றைய விலைவாசியில் இந்த ரூ.32/க்குள் ஒரு மனிதன் உயிர்வாழத்தான் முடியுமா? தனது குடும்பத்தைக் காப்பாற்றத்தான் முடியுமா? ஒருக்காலும் சாத்தியமே இல்லாத இந்த வரையறையைக் காட்டி வறுமை குறைந்துவிட்டது என்று புளுகுவதை ஏற்கத்தான் முடியுமா?

இதே காங்கிரசு கூட்டணி அரசின் தேசிய மாதிரிக் கணக்கீடு  துறை ரூ.20/க்கும் கீழாகத் தினசரி வருவாய் பெறுவோர் எண்ணிக்கை மட்டும் மொத்த மக்கள் தொகையில் 45 சதவீதமாகும் என்று புள்ளிவிவரப் பட்டியலிடுகிறது. அமைப்பு சாரா நிறுவனங்களுக்கான தேசிய கமிசனோ  77 % பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வதாகக் கூறுகிறது. என்.சி.சக்சேனா தலைமையில் அரசு நியமித்த வறுமைக் கோட்டுக்கான நிபுணர் குழுவோ இதனை 50 சதவீதம் என்று சொல்கிறது. ஆனாலும், “வறுமை பற்றிய மதிப்பீட்டில் வேறுபாடுகள் இருந்தபோதிலும், நாட்டில் ஏற்றத்தாழ்வுகள் பெருகியிருந்த போதிலும், வறுமை குறைந்து விட்டது” என்று அடித்துச் சொல்கிறார் அலுவாலியா.

வறுமைக்கோடு குறித்த இந்த அளவுகோல் சரியானதா, ரூ.32/க்குள் ஒருவர் வாழ இயலுமா என்று ஊடகங்கள் காரசாரமான விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கின்றன. இந்த அற்பத் தொகைக்குள் ஒரு இந்தியக் குடிமகன் வாழ முடியுமா என்பதல்ல, எதற்காக இந்தப் புதிய வரையறை என்பதுதான் மையமான கேள்வி.

வறுமைக்கோடுஏழைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டி  நலத் திட்டங்களை ஒழிப்பதுதான், அரசின் திட்டமாக உள்ளது.  குறிப்பாக, உணவு மானியத்தை படிப்படியாக ஒழித்துக் கட்டுவது, இறுதியில் ரேசன் முறையை தனியாருக்கும், உணவுக் கொள்முதலை பன்னாட்டு  உள்நாட்டு தரகு முதலாளிகளிடமும் ஒப்படைப்பது எனும் உலக வங்கி செயல்திட்டத்தின் ஒருபகுதிதான் இப்புதிய வறுமைக்கோடு வரையறை. மானியங்களை வெட்ட வேண்டுமானால் வறுமை குறைந்துள்ளதாகவும் வறியவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும்  புள்ளிவிவர ஆதாரம் காட்ட வேண்டியிருக்கிறது.  அதற்கேற்ப  புள்ளிவிவரப் புளுகுகளையும் தகிடுதத்தங்களையும் அலுவாலியா கும்பல் செய்து கொண்டிருக்கிறது.

உலகமயம்,தனியார்மயம்,தாராளமயம் கொண்டுவரப்பட்ட 1990களிலிருந்தே ஆட்சியாளர்கள் இதனைத்தான் படிப்படியாக செயல்படுத்தி வருகின்றனர். 199394இல் மன்மோகன்சிங்  நிதி அமைச்சராக இருந்தபோது, ஒரு மனிதன் உண்ணும் உணவின் கலோரி மதிப்பின்படி வறுமைக்கோட்டைக்  கணக்கிடும் முறையைக் கொண்டுவந்து, 198788 இல் 25.5% ஆக இருந்த வறுமை 199394 இல் 19% ஆகக் குறைந்ததாகச் சொன்னார்கள். 2000க்குப் பின் பல வண்ணங்களில் ரேசன் அட்டைகளைப் பிரித்து இதனைச் செயல்படுத்தினர். இந்த கலோரி கணக்கீடே அப்பட்டமான மோசடி வரையறையாகும். கணினிமயமான மேலை நாடுகளில் அலுவலகத்தில் இலகுவான வேலை செய்யத் தனிமனிதனுக்குத் தேவையான சக்தியின் மதிப்பை எடுத்துக்கொண்டு, அதனை அப்படியே இந்தியாவில் பொருத்தி,  நகர்ப்புற ஏழைக்கு 2100 கிலோ கலோரி என்றும் கிராமப்புற ஏழைகளுக்கு 2400 கிலோ கலோரி என்றும் வரையறுத்து, வறுமையை ‘வெளியேற்றி’னார்கள்.

பின்னர், கலோரி மதிப்பீட்டு முறை சரியில்லை என்று கூறி டெண்டுல்கர் கமிட்டியை நிறுவி, சுகாதாரம், கல்வி, உட்கொள்ளும் உணவின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில்  ஏழ்மையைக் கணக்கிடுவதாகக் கூறினர். முடிவாக நாளொன்றுக்கு ரூ. 32/ என வறுமையை வரையறுக்க, 30 ஆயிரம் குடும்பங்களில் சர்வே எடுக்கப்பட்டதாம். 300 கேள்விகள் கேட்கப்பட்டனவாம். வாட்டும் வறுமையை விட 300 கேள்விகளுக்குப் பதில் சொல்லியே ஏழைகள் களைத்திருப்பார்கள் எனப் பத்திரிகையாளர் சாய்நாத் இக்கேலிக்கூத்தை வேதனையுடன் குறிப்பிடுகிறார். கடுமையான எதிர்ப்புகள் வந்ததால், டெண்டுல்கர் குழுவின் அறிக்கையை ஒதுக்கிவிட்டு இப்போது புதிய அளவுகோலின்படி வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளோரைக் கணக்கிட புதிய ஆய்வுக் குழுவையும் ஏற்படுத்தியுள்ளனர்.

ஈராக் மீதான படையெடுப்பை முன்கூட்டியே முடிவு செய்த ஜார்ஜ் புஷ், அதற்கு முன் பேரழிவு ஆயுதங்களைத் தேடுவதாகச் சொன்னார். தூக்கிலேற்றுவது என்பதை முன்னரே முடிவு செய்துவிட்டுத்தான் சதாம் உசேன் மீதான விசாரணையைத் தொடங்கியது, அமெரிக்கா. அதேபோல மானியங்களைச் சுருக்கி ஏழைகளை ஒழிப்பது என்பதை முடிவு செய்துவிட்டு, அதற்கு முகாந்திரம் தேடிக் கொள்வதற்காகவே வக்கிரமான முறையில் வறுமைக்கோட்டை வரைகிறது, மன்மோகன் சிங்  மாண்டேக்சிங் அலுவாலியா கும்பல்.

_________________________________________

– புதிய ஜனநாயகம், மே-2012

__________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. உலக வங்கி : ரூ.56

  வளர்ப்பு பிராணி மாண்டெக்சிங் : ரூ.32

  சீனியர் செல்லப் பிராணி : நை..நை.. நோ..நோ.. ரூ.10 க்கு ஒரு பொறையோடு, டீ யும் சாப்பிடுவர்கள் எப்படி ஏழை ? சோனியாஜி வீட்டில் எனக்கு பொறை மட்டும்தான் போடுகிறார்கள், நான் ஏழையா ? ரூ.10.. ரூ.10.. ரூ.10

 2. எந்த அளவுகோல் படி பார்த்தாலும் இந்தியாவில் வறுமை குறைந்து கொண்டுதான் வருகிறது. அளவுகோல்களை பற்றி தான் சர்ச்சை. ஆனால் பொருளாதார வளர்ச்சி, வறுமையை குறைக்கிறது என்பதில் மாற்று கருத்தில்லை. 1950 முதல் 1980 வரை இருந்த வறுமை நிலை. விகிதங்களை விட கடந்த 15 ஆண்டுகளில் கணிசமான அளவில் வறுமை குறைந்துள்ளது. பார்க்கவும் ஒரு விவாதம் :

  http://www.cato.org/publications/commentary/rapid-gdp-growthbest-antidote-poverty

  இருந்தாலும் இந்தியாவில் வறுமை அதிகம் தான். இதை குறைக்க சோசியலிசம் அல்லது கம்யூனிசத்தால் முடியாது. அல்லது anti-capitalistic கொள்கைகள் மூலம் முன்பு முயன்று தோற்றதை பற்றி பெரிய அறியாமை உள்ளது. அது போன்ற எல்லா வழிமுறைகளையும் பல நாடுகளில், பல விதங்களில் முயன்று தோற்றதால் தான் இந்த தாரளமயமாக்கல் வழிமுறைகள். (இவை சரியாக செயல்படுத்தபடவில்லை என்பது வேறு விசியம்). 35 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் ஒலித்த கோசங்கள், political climate, economic policy and conditions பற்றி பெரிய அறியாமை உள்ளது.

 3. Earlier, thanks to slower GDP growth, the absolute number of poor in India fell very little on a consistent basis. But once India’s GDP growth accelerated to 8% per year, matching China’s growth between 1978 and 2001, India reduced poverty as fast as China. Caveat: the poverty lines in India and China are not identical, so the comparison may not be exact. Still, the fact remains that fast growth in both countries has been poverty-reducing.

  We can certainly criticise India (as Amartya Sen and Jean Dreze did recently) for achieving less in most social indicators than not just China but even south Asian neighbours like Bangladesh. Thanks to misdirected subsidies and a refusal to discipline corrupt, absentee staff, the Indian government has achieved less on the social side than Bangladesh, let alone China.

  Record GDP growth has produced record revenues for the government to use in improving social sectors. Alas, it has funked all the fundamental reforms needed for improved service delivery, so increased outlays do not produce correspondingly better outcomes.

  Indeed, economist Lant Pritchett calls India a flailing state. “In police, tax collection, education, health, power, water supply — in nearly every routine service — there is rampant absenteeism, indifference, incompetence and corruption. In many parts of India, in many sectors, the everyday actions of the field-level agents of the state — policemen, engineers, teachers, health workers — are increasingly beyond the control of the administration at the national or state level.”

 4. Great post Adhiyaman,

  The biggets reason for poor bureaucracy is bad politics,absolutely bad politics and high level of inflation and lack of good salaries for the same.

 5. “எந்த அளவுகோல் படி பார்த்தாலும் இந்தியாவில் வறுமை குறைந்து கொண்டுதான் வருகிறது. அளவுகோல்களை பற்றி தான் சர்ச்சை”

  ஆஹா- கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்கொருகொடுமை அம்மணமா நின்னுச்சாம்!!!!

 6. அண்ணா அதியமான் அண்ணா,

  சதா சுவாமினாமிக்சை படிச்சுட்டு கேப்பிட்டலிசம்தான் சூப்பர், வறுமையெல்லாம் குறைஞ்சுடுத்துன்னு சொல்லாதீங்கோண்ணா. வறுமைக்கோட்டுக்கு அளவு சொல்ற அலுவாலியா தாடிவாலாவின் அயல்நாட்டு பயணச்செலவு ஒரு நாளைக்கு சராசரியா 2.02 லட்சமாம் இதைப்படிச்சேளா?

  http://www.thehindu.com/opinion/columns/sainath/article3439624.ece

  இதைப்பாத்துட்டு அலுவாலியா அண்ணாச்சி தத்துப்பித்துன்னு பதில் சொன்னார், அதற்கும் சேர்த்து வெளுத்துட்டார் நம்ம சாய்நாத் இதையும் படிங்கோ
  http://www.thehindu.com/opinion/op-ed/article3449609.ece
  http://www.thehindu.com/opinion/op-ed/article3449607.ece

  அய்யா நானும் அதியமான் மாதிரி லிங்கு போட்டுட்டேனே?

  • Adhukkum idhukkum yenna sambandhan,

   Just one question.If India tries to be a socialist economy where we dont have any foreign goods in the country and everything is locally done,can we produce enough food to feed the people?

   Why is Montek Singh Ahluwalia a big reference here or ManMohan Singh for that matter?

   Dont get stuck in these small level silly politics,i dont think you have enough knowledge to debate economics.

 7. நாட்டின் மொத்த சனத்தொகையில் 70 சதவீதத்திற்கும் மேல் அன்றாடங்காய்ச்சிகளாக, தினக்கூலிகளாக இருக்கிற நாட்டுல வறுமை குறைஞ்சிண்டே வருதுங்கறது எப்படியிருக்கு தெரியுமா?

  ஒரு கல் ஒரு கண்ணாடி

  உதயநிதி- எங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்து உயிர்போனா பார்த்தா குடும்பத்திற்கு யார் பதில் சொல்வா, என் குடும்பத்திற்கு யார் பதில் சொல்வா

  ஏர்ஹோஸ்டஸ்- ஒண்ணும் கவலைப்படாதீங்க உங்க உயிருக்கு ஆபத்து வந்தா பாராசூட் தருவோம்

  சந்தானம்- உயிர் போற நேரத்தில தேங்காண்ணையை வைத்துக் கொண்டு என்ன செய்யறதாம் ?!!?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க