ம்மாவுக்கு கேன்சர்.. காப்பாற்ற 15 லட்சம் வேண்டும்.. கையில் பணம் இல்லை. விற்க சொத்து இல்லை. நேர்மையாக வேலை செய்து சம்பாதிக்கலாம் என்றால், பார்ப்பவன் எல்லாம் ‘படுக்க வர்றியா?’ என்று கூப்பிடுகிறான். என்ன செய்வாள் நாயகி? போதைப் பொருள் கடத்துகிறாள். நான்கைந்து முறை தனியாக கடத்தி கிடைத்த அனுபவத்தில் மெருகேறி, பிறகு குடும்பத்தோடு கடத்துகிறாள். எந்தக் குடும்பம்? கேன்சர் வந்த அம்மா, வாட்ச்மேன் வேலை செய்யும் அப்பா, கல்லூரி படிக்கும் தங்கை. மொத்த குடும்பத்தையும் இணைத்துக் கொண்டு போதைப்பொருள் கடத்தி அம்மாவின் கேன்சர் செலவுக்கு பணம் சேர்க்கிறாள். இதுதான் ’கோலமாவு கோகிலா’படத்தின் கதை.

“அறம்”  படத்தில் சமூகத்தின் ஒட்டுமொத்த அற மதிப்பீடுகளையும் ஒரு கலெக்டராக தன் தோளில் தூக்கிச் சுமந்த நயன்தாரா இதில் மாஃபியா ராணியாக வந்து, அறத்தின் கழுத்தைப் பிடித்து கரகரவென அறுக்கிறார். தியேட்டரே கைகொட்டி சிரிக்கிறது.

“அது வேற ஜானர்; இது வேற ஜானர்”  என்பது சினிமாக்காரர்களின் பொழிப்புரை. ஏதாவது ஒரு தமிழ் இயக்குநரை முற்போக்காக படம் எடுத்திருக்கிறீர்கள் என்று பாராட்டி விட்டு ஒரு மசாலா தமிழ்ப்படத்தை விமர்சித்தீர்கள் என்றால் அவர்களுக்கு கோபம் வரும். பிறகு மேற்படி இந்த ஜானர் எனப்படும் சினிமாக்களின் வகைகளை விளக்கி எல்லாமும் வேண்டுமென படுத்தி எடுப்பார்கள்.

ஆனால், “அறம்”  படத்தில் நயன் தாராவின் சீற்றத்தை கண்டு கை தட்டிய அதே சினிமா ரசிகன்தான், “கோலமாவு கோகிலா” வையும் ரசிக்கிறான் என்றால், இது நமக்கு புரியாத ஜானராக இருக்கிறது. அவன் உண்மையா? இவன் உண்மையா?

ஆனால், “அறம்”  படத்தில் நயன் தாராவின் சீற்றத்தை கண்டு கை தட்டிய அதே சினிமா ரசிகன்தான், “கோலமாவு கோகிலா” வையும் ரசிக்கிறான் என்றால், இது நமக்கு புரியாத ஜானராக இருக்கிறது. அவன் உண்மையா? இவன் உண்மையா? பின்நவீனத்துவம் சொல்வதைப் போல, உண்மை என்ற ’பெருங்கதையாடலை’புரிந்து கொள்ளாத ’வன்முறை மனங்களுக்கு’ இந்த வேறுபாடு புரியாதா? எனில் எழவு வீட்டில் பாயாசம் வைக்கவில்லை என்று மக்களை திட்ட முடியுமா?  இல்லை எழவு வீட்டில் பாயாசம் வைக்கக் கூடாது என்பதை மனித நேயம் உருவாக்கிய இயல்பான நேசமாக ஏற்பதில் என்ன சிக்கல்?

போதைப்பொருள் பயன்படுத்தி சீரழியும் மனித உயிர்கள், சித்தரவதைப்படும் குடும்பங்கள், போதையின் பிடியில் நிகழும் வன்முறைகள், போதையில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள், போதையில் வாகனம் ஓட்டி கொல்லப்படும் மனித உயிர்கள், வீணாகும் மதிப்புமிக்க மனித ஆற்றல்… இவை எதுபற்றியும் இயக்குனருக்கு எந்த கவலையும் இல்லை. தப்பித்தவறி சின்னஞ்சிறு குற்றவுணர்ச்சி கூட திரைக்கதையின் எந்த இடத்திலும் எட்டிப் பார்ப்பதை அவர் அனுமதிக்கவில்லை. அப்படி ஒரு நீதியுணர்ச்சி பார்வையாளனின் மனதில் துளிர்விடுமானால், கோலமாவு கோகிலா காலி. அவன் கைதட்ட மாட்டான். அதனால் கோட்டின் அந்தப் பக்கமாக திட்டவட்டமாக ஒதுங்கி நிற்கிறார் இயக்குனர்.

போதைப்பொருள் கடத்தல் என்பது மாபெரும் மாஃபியா நெட்வொர்க். இதனால் பாதிப்படுவதுதான் ஏழைக் குடும்பங்களேத் தவிர, இப்படத்தில் சித்தரிக்கப்படுவதைப் போல இதில் ஈடுபடுவோர் அல்ல.

“நீ போதைப்பொருள் கடத்தி உன் அம்மாவை கேன்ஸரில் இருந்து காப்பாற்றிவிட்டாய்.. நீ விற்ற போதைப்பொருளால் பல்லாயிரம் பேர் நோய் வந்து சாவார்களே… போதையில் பலரை சாகடிப்பார்களே”  என்பது இயல்பாக நமக்குள் எழும் கேள்வி. ஆனால் இந்த கேள்விக்கு, தான் பதில் சொல்ல வேண்டியது இல்லை என்று நினைக்கிறார் இயக்குனர் நெல்சன். ஏனெனில் ரசிகனின் மனதில் இதற்கான பதில் தயாராக இருக்கிறது. “தனக்கு காரியம் ஆக வேண்டும் என்றால்; தன் பிரச்னையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எந்த எல்லைக்கும் போகலாம்’ என்ற பொதுப்புத்தியை நம்பும் இயக்குனரின் கணிப்பு வீண்போகவில்லை என்பதை தியேட்டரில் ஒலிக்கும் கை தட்டல்களே சொல்கின்றன.

எளிமையாகச் சொல்வதென்றால் ஊழலை ஒழிக்க ஊழல் வாங்கு, திருடனைப் பிடிக்க திருடு, பொய்யை மறுக்க பொய்யுரை, கருப்புப் பணத்தை பிடிக்க கருப்புப் பணம் வாங்கு என்று பட்டியலிடலாம். இதையெல்லாம் மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றால் போதை பொருள் விற்பதையே கேன்சரின் மருந்தாக மக்கள் ஏற்பார்களா என்ன?

அப்படி ஏற்கமாட்டார்கள் என்பது தெரிந்தேதான் இயக்குநர் மலிவான நகைச்சுவையை திரைக்கதையில் இயல்பாக சொருகுகிறார். அதனால்தான் மக்கள் கேன்சரை விட கொடிய விசயமான போதை பொருளை, மெய் மறந்து கடத்தும் நாயகியோடு சேர்ந்து சிரிக்கிறார்கள். நாயகி போதை பொருளை விற்பதையும் ஏற்கிறார்கள். ஒரு முக்கியமான மக்கள் பிரச்சினையை இப்படி நகைச்சுவையில் கடத்தி மறைப்பது என்பது கலையின் பெயரால் செய்யப்படும் கொலையே அன்றி வேறென்ன? வாழைப்பழம் வழுக்கி விழுபவனைப் பார்த்து எவ்வளவு தூரம் சிரிக்க முடியும்? விழுந்தவன் பெரிய அடிபடாமல் பின்புறத்தை தட்டி விட்டு எழுந்து சிரித்தால் மற்றவர்கள் கொஞ்சம் சிரிப்பார்கள். விழுந்தவன் இடுப்பெலும்பு முறிந்து பின் மருத்துவமனையில் செத்தே போனான் என்றாலும் அதை எப்படி சிரிக்க வைப்பது என்று யோசித்திருக்கிறார் இயக்குநர்.

ஆம். இந்த கலைக் கொலைக்கு இயக்குநருக்கு கை கொடுத்த அந்த நகைச்சுவையும் கூட தர்க்க ரீதியாக நாற்றமெடுக்கும் அநாகரீகமாகவே அமைந்திருக்கிறது.

இன்று தமிழ் சினிமாவில் யோகிபாபு என்ற நடிகருக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளுமே அவரது உருவத்தின் நிமித்தம் கிடைப்பவையே. அவரது நடிப்புக்கு கிடைக்கும் வரவேற்பு அனைத்துமே அந்த உருவகேலிக்கு ரசிகர்கள் வழங்கும் அங்கீகாரமே.

“கோலமாவு கோகிலா”  படத்தின் கேவலமான, அருவருப்பான மற்றொரு விசயம் நகைச்சுவை என்ற பெயரில் வரும் உருவ கேலி. சொல்லப் போனால், படத்தின் ஒட்டுமொத்த கதையோட்டமும் இந்த உருவகேலியின் மீதுதான் நகர்கிறது. யோகிபாபுவை கேலிக்குரியவராக சித்தரிக்க எந்த காட்சி அமைப்பும், தர்க்க நியாயமும் கதையில் இல்லை.  அப்படி ஒரு தர்க்கத்தை சிரிப்புக்காக வைத்தாலே கூட அது பிழைதான்.

சமூக உளவியலில் ஏற்கெனவே கேலிக்குரியதாக நிருவப்பட்டிருக்கும் உருவ தோற்றமே யோகிபாபுவை கிண்டல் செய்வதற்குப் போதுமானதாக இருக்கிறது. சொல்லப்போனால், இன்று தமிழ் சினிமாவில் யோகிபாபு என்ற நடிகருக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளுமே அவரது உருவத்தின் நிமித்தம் கிடைப்பவையே. அவரது நடிப்புக்கு கிடைக்கும் வரவேற்பு அனைத்துமே அந்த உருவகேலிக்கு ரசிகர்கள் வழங்கும் அங்கீகாரமே. நிஜத்தில் இந்த உருவங்கள், அதன் அழகியல் அனைத்தும் திட்டமிடப்பட்டு பெரும் வணிகமாக இறக்கப்படும் சூழலில்தான் கருப்பு நிறம், ‘அவலட்சணமான’ முகங்கள், பெரும் தலைகள், கறைபடிந்த பற்கள் என்பவை மக்களிடையே அழகின் மேன்மைக்கான எதிர்மறைப் பிரச்சாரங்களாக விதைக்கப்படுகின்றன.

இன்றைய தொலைக்காட்சி விளம்பரங்களை ஒரு குழந்தை ஒரு நாளில் பார்த்தாலே போதும், மேற்கண்ட உருவம், வண்ணமுடையவரை பிடிக்காது என்று ஒரே வார்த்தையில் கூறிவிடும். இத்தகைய அநாகரீக அழகைத்தான் யோகிபாபுவை கிண்டல் செய்யப்படுவதற்கான களமாக கட்டியமைத்து புகுந்து விளையாடுகிறார் இயக்குநர். நமக்கு குமட்டுகிறது.

இந்தப் படத்திலும் யோகிபாபு, நயன்தாராவை காதலிக்கிறார் என்ற தகவலே நகைச்சுவையாக மாறுகிறது. அதே இடத்தில் சிவகார்த்திகேயன் இருந்திருந்தால் அது ஹீரோயிசம். யோகி பாபு இருப்பதால் நகைச்சுவை. செய்யும் செயல்களால் அல்ல, செய்யும் நபர்களால் இங்கு நகைச்சுவையா, ஹீரோயிசமா என்பது தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், ’கோலமாவு கோகிலா’ படக் கதையின்படி, யோகிபாபு, உழைத்து முன்னேறி மளிகை கடை வைத்திருப்பவர். நயன்தாராவோ, போதைப்பொருள் கடத்தும் ‘குடும்பப் பெண்.  இதை ரசிக மனம் கேள்விகளின்றி ஏற்கிறது. ’அடிடா அவளை, கொல்றா அவளை  என பொறுக்கித்தனம் செய்பவனைக் கூட ஹீரோவாக ஏற்போம்… உழைத்து முன்னேறியிருந்தாலும் தாங்கள் கேலிக்குரியதாக நம்பும் உருவத்தில் இருந்தால் கிண்டல் செய்வோம் என்ற ஊடகங்கள் கட்டியமைத்த பொதுப்புத்தி இது. இத்தகைய காட்சிகளுக்கு தியேட்டரில் இடைவிடாமல் கிடைக்கும் கைத்தட்டல்  என்பது, பொதுப்புத்தியின் பொறுக்கித்தனம் என்பதன்றி வேறில்லை. இதை மலிவாக பயன்படுத்தியிருப்பதால் ரசிகர்களை விட இயக்குநரே முதன்மைக் குற்றவாளியாகிறார்.

யோகி பாபுவின் உருவம் கேலிக்குரியதாக… நயன் தாராவின் அப்பாவி முகத் தோற்றம் சந்தேகம் வராத வகையில் போதைப்பொருள் கடத்த ஏற்றதாக… சரண்யாவின் நோய்வாய்ப்பட்ட தோற்றம்… போதைப்பொருள் கடத்தும்போது போலீஸிடம் பரிதாபத்தைக் கோருவதற்காக… – என பல வகைகளில், தனது திரைக்கதையில் மனித வெளித்தோற்றங்களை கையாள்கிறார் இயக்குனர். ஆனால் அதே கதையில் நேர்மையாக இருக்க முயன்று அடிவாங்கி வரும் நயன்தாராவின் வாட்ச்மேன் அப்பா, கேலிக்குரிய ஏமாளியாக சித்தரிக்கப்படுகிறார். மிக திட்டவட்டமாக அறம், நேர்மை, நீதி ஆகியவற்றை எதிர்வரிசையில் நிறுத்தி வைக்கிறார் இயக்குனர். சிரிப்பு எனும் போர்வையில் வரும் இந்த அற்பத்தனங்கள் ஒரு படைப்பாளியின் எழுத்தில் நுழையும் வித்தையை தனியாக ஆய்வு செய்ய வேண்டும் போல!

படத்தின் இறுதிக் காட்சி இதன் உச்சம். வில்லன், நயன் தாராவை வன்புணர்ச்சி செய்ய ஓர் அறைக்கு அழைத்துச் செல்கிறான். நாயகியோ, தான் ரேப் செய்யப்படும்போது தன் குடும்பமும் தன்னைச்சுற்றி இங்கே இருக்க வேண்டும் என்கிறாள். குடும்பம் அழைக்கப்படுகிறது. பிறகு, நயன் தாராவை ரேப் செய்வதற்காக வில்லன்களை ஒவ்வொருவராக அறைக்குள் வரவழைத்து குடும்பம் சகிதமாக கொலை செய்கிறார்கள். உள்ளே சென்ற ஒருவர் கொல்லப்பட்டதும், நயன் தாராவின் தங்கை வெளியில் வந்து ‘தண்ணீ… தண்ணீ’ என்கிறார். உடனே அடுத்த ஆள் உள்ளே செல்கிறார். தியேட்டரே சிரித்து மாய்கிறது.

“பெண் என்றாலே உலகம் செக்ஸுக்கான பண்டமாக பார்க்கிறது. அதையே பயன்படுத்திக்கொண்டு, ஒவ்வொருவராக தன்னை ரேப் செய்ய வரவழைத்து, குடும்பம் சகிதமாக சேர்ந்து கொலை செய்கிறார்கள். இதில் என்ன தப்பு?’ என இதற்கு வேறொரு கோணம் சிலர் சொல்கின்றனர். அது கற்பு என்ற புனித கண்ணோட்டத்தில் இருந்து இதை அணுகுவோருக்கான பதில். மாறாக, ஒரு பெண் பாலியல் வல்லுறவு செய்யப்படும் கொடூரத்தை சிரித்து ரசிப்பதற்கு உரிய காட்சியாக அமைத்திருக்கும் வக்கிரத்தை எப்படி ஏற்க முடியும்? ஒரு பெண் அடுத்தடுத்து பல ஆண்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதை ஒரு நகைச்சுவை காட்சியாக்கி சிரிக்கச் சொல்கிறார்கள். ஒரு பெண்ணை இதைவிட வக்கிரமான காட்சி அமைப்புகளால் கேவலப்படுத்த முடியாது.

“பெண்களின் முடிவெடுக்கும் திறன்” என புகழும் பி.பி.சி., போதைப்பொருள் கடத்துவதை மிகவும் நேர்மறையில் சித்தரிப்பது குறித்தோ, அருவருப்பான உருவகேலி குறித்தோ ஒரு வார்த்தையும் குறிப்பிடவில்லை. நரகலில் நல்ல நரகலைத் தேடும் நல்லவர்களாக பிபிசியை வாழ்த்துவோம்!

ஆனால், இந்தப் படத்துக்கு மிகவும் நேர்மறையில் பாராட்டித் தள்ளி விமர்சனம் எழுதியிருக்கும் பி.பி.சி., “படத்தில் முக்கிய முடிவுகளை பெண்கள் எடுக்கிறார்கள்” என்று சொல்லியிருக்கிறது. “நான் போதைப்பொருள் கடத்துகிறேன்” என்ற முடிவை நயன்தாரா எடுக்கிறார்.  “ஓ.கே., வா, என்னை ரேப் பண்ணு” என வில்லனை அறைக்குள் செல்லும் முடிவை நயன் தாரா எடுக்கிறார். “குடும்பத்தோடு கொலை செய்யலாம்” என்ற முடிவை நயன் தாரா எடுக்க, முதல் ஆளாய் ஆயுதத்தை பயன்படுத்தும் முடிவை எடுக்கிறார் கேன்சர் நோயாளியான சரண்யா. இத்தகைய முடிவுகளை  “பெண்களின் முடிவெடுக்கும் திறன்” என புகழும் பி.பி.சி., போதைப்பொருள் கடத்துவதை மிகவும் நேர்மறையில் சித்தரிப்பது குறித்தோ, அருவருப்பான உருவகேலி குறித்தோ ஒரு வார்த்தையும் குறிப்பிடவில்லை. நரகலில் நல்ல நரகலைத் தேடும் நல்லவர்களாக பிபிசியை வாழ்த்துவோம்!

உண்மையில் கோலமாவு கோகிலா என்ற இந்தப் படத்தின் கதையைவிட, இதை ரசித்து பார்க்கும் ரசிகர்களின் மனநிலைதான் அச்சம் தருவதாக இருக்கிறது. இந்த மனநிலைதான் அனைத்தையும் எளிமைப்படுத்தி உணர்ச்சிவசப்பட்டு கரணம் தப்பினால் மரணம் என பிற்போக்கில் சிக்கிக்கொள்ளும்.

லைக்காவின் தயாரிப்பில் வந்திருக்கும் இத்திரைப்படம் தயாரிப்பாளர் சுபாஷ்கரண் அல்லிராஜாவின் ’பெருமை மிகு’ ஐரோப்பிய தொழில் மோசடிகளுக்கு பொருத்தமானதுதான்.

கோலமாவு கோகிலா வாழ்க்கை எனும் பெருங்கோலத்தை அலங்கோலமாக்கும் ஒரு அயோக்கியத்தனமான அற்பத்தனம் என்பதே இதற்கு நாம் அளிக்கும் அதிகபட்ச நாகரீக விமரிசனம்!

– வழுதி

21 மறுமொழிகள்

  1. நாம் பலமுறை சொல்லிவிட்டோம், எல்லாவற்றிக்கும் ஒரு நடுநிலைமை தேவை, ஒரு வரைமுறை தேவை, ஒரு கட்டுப்பாடு தேவை, இதெல்லாம் இல்லாத பட்சத்தில் கொள்ளையடிப்பவன் நாலு பேருக்கு நல்லது செய்து கைதட்டல் வாங்குவான், நாம் கைதட்டுவோம், அதனால் தான் சொல்கிறோம் இஸ்லாத்தை படியுங்கள், நன்மை தீமைகளை எடை போடுங்கள், நன்மை தீமை இல்லை என்று சொல்லாதீர்கள்

  2. மனிதனாக பிறந்த எல்லோரும் ஏதோ ஒருவிதத்தில் அல்லது யாரோ ஒருவருக்கு அழகுதான், மனிதன் எல்லோரும் சமம், நிறத்தியோ, மொழியையோ, பணத்தையோ வைத்து மனிதர்களை வகைப்படுத்தக்கூடாது என்பது இஸ்லாம்

  3. இஸ்லாம் மட்டுமே பெண்ணை பெருமைப்படுத்துகிறது, சில கட்டுப்பாடுகளை வித்தித்தாலும் அது நல்லதுக்குத்தான் என்பது இனி வரும் காலம் பதில் சொல்லும்,

    • பர்தா அணிவது ஒன்றே போதும்.. இதான் சாக்குன்னு இஸ்லாத்தை தூக்கி பிடிக்க வேண்டாம்

      • பர்தா என்பது அவயங்களை மறைப்பதற்க்கே , உலக அளவில் பர்தா என்பது ஆண்களுக்கு மட்டுமே என்ற ஒரு தவறான கருத்து உண்டு ஆனால் பர்தா என்பது ஆணுக்கும் பெண்ணுக்குமானது, பர்தா அணிவதால் பெண் தன் அவயங்களை மறைக்கிறாள், எந்த இஸ்லாமிய பெண்ணும் பர்தாவை கசப்போடு அணிவதில்லை மாறாக சந்தோஷமாகவே அணிகிறாள், பெண்ணை கடவுளாக பார்க்கும் பார்ப்பனிய இந்து மதம் தான் அரைகுறை ஆடையுடன் பெண்ணை ஆடவிட்டு வேடிக்கை பார்க்கிறது, உங்களுக்கு பிரச்னை இல்லாத பட்சத்தில் உங்கள் வீட்டு பெண்களை அரைகுறை ஆடையுடன் நடக்கவிட்டு எல்லோரின் கண்ணுக்கு விருந்தளியுங்கள், எங்களுக்கு பிரச்சனை இல்லை.
        இஸ்லாம் மட்டுமே பெண்ணை உயர்வாக மதிக்கிறது
        1. இஸ்லாம் பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்கிறது
        2. மஹர் என்ற மணக்கொடை கொடுக்கச்சொல்கிறது
        3. திருமணம் ஆன பிறகு மனைவிக்கான உணவு உடை உறைவிடத்துக்கு கணவனே பொறுப்பாளன்
        4. தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது என்கிறது இஸ்லாம்
        5. பெற்றோரை சீ என்று கூட சொல்லாதே என்கிறது
        6. பெண்ணுக்கு மனவிலக்குக்கான உரிமையை கொடுக்கிறது

  4. ஆம் நானும் இதை உணர்ந்தேன் ….படம் பார்க்கையில்..இந்த மாதிரியான படங்களை ரசிக்கும் மனநிலையை உருவாக்குவதே முதலாளித்துவத்தின் நோக்கம்.

  5. இந்த மாதிரியான படங்கள் சாதரணமாக எடுக்கபடுவதில்லை. இவற்றிற்கான ஆலோசனைகள் ஊக்குவிப்புகள் என்பன உற்பத்தியாவது யூதர்களிடம் இருந்து. மனித குலத்தையே சீரழிக்கும் வேலையில் இறங்கி உள்ளனர். முன்பெல்லாம் இஸ்லாமியர் காரணமே இல்லாமல் வெறுப்பதாக எண்ணினேன். ஆராய்ந்து பார்த்தால் புரிகிறது. இன்று வெளிப்படையாக யூத முதலாளிகளின் கைக்குள் சென்றுவிட்ட ஸ்டார் விஜய் போன்ற வற்றில் வரும் நிகழ்சிகளை கூட பாருங்கள், கட்டுமரத்தின் மானாட மயிலாட எவ்ளோ தேவலாம்னு தோணும். திட்டமிட்டு மனிதரின் எண்ணத்தை கேவலமான போக்கில் (perversion) மாற்றும் வேலையே. வெறுமனே இதை முதலாளித்துவ சீரழிவு என முடித்து விட முடியாது. அறிவியல் விடயங்களில் அசாக்கின் இஸ்லாமிய விளக்கங்களை நான் ஏற்று கொள்ளாவிடினும் மனிதர்க்கு நாகரிகத்தை , பெண்களுக்கு கண்ணியத்தை வழங்கும் இஸ்லாமே ஒரு சிறந்த வழி என்றே என்ன தோன்றுகிறது. இன்று தனியாக நாம் தூக்கி பிடிக்கும் பெண்ணியம் என்பது அதே யூத முதலாளிகளின் சதி வடிவமைப்பே என எண்ணுகிறேன், ஏனெனில் அது பெண்களை கண்ணியபடுத்துவதை விட்டு இந்த கேவலங்களை பெண்களே இதுதான் தமது விடுதலை என எண்ணி ஏமாறும்படி வடிவமைக்க பட்டுள்ளது. இன்று உண்மையில் நான் இஸ்லாம் வெகு விரைவில் பரவ வேண்டுமென விரும்புகிறேன், ஏனெனில் இவர்களை வீழ்த்த வேறு வழியில்லை என்றே எண்ணுகிறேன், இஸ்லாத்தை கண்டு பயப்படும் இந்த கும்பல் கோடி பிடிக்கும் நம்மை பார்த்து சிரிக்க தான் செய்வார்கள் அல்லது காக்காய் நாய் போல சுட்டு தள்ள உத்தரவு போடுவார்கள். எனக்கு இன்னமும் இஸ்லாத்தில் பல விடயங்களில் முரண்பாடு உண்டு, ஆனால் இந்த யூத கும்பலை பற்றி இஸ்லாமியர்கள் கூறுவது அத்தனையும் உண்மை என் உறுதியாக கூற முடியும் என்னால். இங்கே தமிழ்நாட்டில் ஒரு மூலையில் ஓடும் கோலமாவு கோகிலா கதையில் கூட யூதனின் நலனும் அடுத்தவரின் கெடுதலும் ஒளிந்திருக்கும், யூதனுக்கு சொம்படிப்பவர்கள் அவனின் கட்டளைகளை நிறைவேற்றுபவர்கள் அம்பிகள்.

  6. ஏகாதிபத்தியத்தை விட அதன் அடியாளிடம் கவனமாக இருக்க வேண்டும் என்கிறாரா சின்னா ?

    • இல்லை நண்பர் கார்த்திகேயன், நாம் இதுவரை புரிந்து கொண்ட ஏகாதிபத்தியம் என்பது பிரமிடின் 2 ஆம் நிலை மட்டுமே, உச்சியில் இருப்பது யூதர்களே (அவர்களின் வங்கி ஆதிக்கம்). அரசுகள் எல்லாம் அவர்களின் தாளத்துக்கு ஆடும் பொம்மைகளே அது பாகாசுர வல்லரசு அமெரிக்காவாகட்டும் சுண்டைக்காய் இலங்கை ஆகட்டும். வங்கி கட்டுப்பாடு போக பல வர்த்தக துறைகளின் உச்சியில் இருப்பதும் பெரும்பாலும் யூதர்களே. நீங்கள் கூறும் ‘அடியாள் தேசம்’ ‘ஆண்டை தேசம்’ என்பவை உண்மையில் எதிர்மாறானவை. அமெரிக்காவின் அடியாள் ‘ஆண்டவரின் தேசம்’ அல்ல, ‘ஆண்டவரின் தேசத்தின்’ அடிமையே அமெரிக்க நலமடித்த எருமை. அமெரிக்க மட்டுமல்ல பெரும்பாலான நாடுகளின் அரசுகள் அவர்கள் அமைப்பதே. வேண்டுமானால் நீங்கள் சற்று ஆராய்ந்து பாருங்கள். சதாம் ஹுசைன் , கடாபி, பிரபாகரன் ,ராபர்ட் முகாபே, கென்னடி , இடி அமின்,கிம்ஜங் உன், அசாத்..என இவர்களின் வங்கிகளின் பிடிக்குள் நாட்டை விடமறுத்து சுயசார்பு பொருளாதாரத்தை முன்னெடுத்த தலைவர்கள் அனைவரும் சர்வாதிகார அல்லது தீவிரவாத பட்டம் கட்டப்பட்டு கொல்லபடுவார்கள் அல்லது ஓரம்கட்ட படுவார்கள். ஆனால் எதையும் நேரடியாக செய்ய மாட்டார்கள். செய்வது எல்லாம் சதிவேலை. ஒரு நாடு தமது கட்டுபாட்டுக்குள் வர மறுத்தால் அனைத்து சதிவேலைகளும் அரங்கேறும், ஆனால் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களோ பழியை வேறுயார்மேலும் போடும் வேலையை செவ்வனே செய்வார்கள். தான் கடவுளின் தலையால் பிறந்தவன் , உயர்ந்தவன் என அடுத்தவரை பிரித்து அடிமைபடுத்தி கொழுக்கும் பார்ப்பனன் போலே தாம்தான் ஆசீர்வதிக்க பட்டவர்கள் மற்றைய மனிதர்கள் தாம் பயன்படுத்தி கொள்ளும் மந்தைகளே என்னும் எண்ணம் கொண்டவர்களே இவர்கள். இருவரும் அடிப்படையில் ஒன்றே. தமது நலனுக்கு தேவை என்றால் அமெரிக்க ஜனாதிபதி என்றாலும் சரி உம்மையோ என்னையா போன்ற குப்பனோ சுப்பனோ , போட்டு தள்ள தயங்காத கொடியவர்.

  7. சின்னாவின் சிந்தனையை புறந்தள்ள முடியாது. இதுபற்றி வினவு விளக்கினால் நல்லது. அல்லது சின்னாவே இது குறித்து ஒரு கட்டுரை வினவில் எழுதலாம்

    • கார்த்திகேயன் இந்த சின்னா யார் என்று தெரியவில்லை. வினவு தளத்தில் முன்பு விவாதித்த சின்னா இவர் இல்லை. ஆனால் சின்னா பெயரில் வரும் இவர் இலுமினாட்டி சதி கோட்பாட்டிற்கு பலியானவர் என்பது மட்டும் உறுதி! யூதர்கள் எனும் தனிநபர்கள் அல்லது இனம் இந்த உலகை கட்டி ஆள்கிறது என்பதை இலுமினாட்டிகள் மட்டுமல்ல, கடுங்கோட்பாட்டு முசுலீம்கள் – கிறித்தவர்கள் போன்றோர் கூட தங்களது பிரச்சினைகளுக்கான காரணங்களாக பேசுகின்றனர். ஆகவே ‘சின்னா 2.0’ பின்புலத்தில் இருப்பவர் ஒரு வகாபி பக்தராக கூட இருக்கலாம். முதலாளித்துவ சமூக அமைப்பின் சுரண்டலை மறைத்து இப்படி தனிநபர்கள் – இனமாக திரித்துக் காடடுவதன் மூலம் பலன் ஏகாதிபத்தியங்களுக்குத்தான் போய்ச் சேர்கிறது!

      • மிக்க நன்றி வினவு நண்பரே !

        எனக்குக் கூட ஒரு சந்தேகம் வந்தது. முன்னர் ஒரு விவாதத்தின்போது ஒரு இஸ்லாமிய அன்பர் இஸ்லாத்தைப் போற்றி பதிவிட்டபோது கடுமையாக எதிர்த்த அவர் இப்போது இஸ்லாம் வெகுவிரைவில் பரவ வேண்டும் என்று கூறுகிறாரே என்று கேட்கலாம் என நினைத்தபோது உங்கள் விளக்கம் கிடைத்தது.

        உடனடியாக எனக்கு விளக்கியதற்கு நன்றிகள் பல !

        போலிகள் இங்கும் புகுந்துவிட்டார்கள் போலிருக்கிறது.

      • வினவு நண்பரே,
        தயவு செய்து நீங்க கூட காவிகள் போல உண்மையை சொன்னதும் இஸ்லாமிய பட்டம் கட்டுவது வேதனை. சரி நான் வேற சின்னா என்றே வைத்து கொள்ளுங்கள். முதலில் உங்கள் பிழையான புரிதல் பற்றி பார்ப்போம் ,

        //யூதர்கள் எனும் தனிநபர்கள் அல்லது இனம் இந்த உலகை கட்டி ஆள்கிறது என்பதை இலுமினாட்டிகள் மட்டுமல்ல, கடுங்கோட்பாட்டு முசுலீம்கள் – கிறித்தவர்கள் போன்றோர் கூட தங்களது பிரச்சினைகளுக்கான காரணங்களாக பேசுகின்றனர்//

        என்று கூறியுள்ளீர், ஆனால் பொதுவாக யூதர்களும் இல்லுமிநாட்டி கும்பலில் இருப்பதாக கூறுவார்கள், நீங்கள் என்னவென்றால் இல்லுமினட்டிகள் யூதர்களை குற்றம் சாட்டுவதாக கூறுகிறீர்கள். உண்மை என்னவென்றால் உண்மையான இல்லுமினாடி என்பது மத்தியகால ஐரோப்பாவில் மத அதிகாரத்தை எதிர்த்து அறிஞர்கள் அமைத்த ஒரு இரகசிய அமைப்பு, அதற்கு உலகை ஆளும் நோக்கமோ மக்களை சுரண்டும் நோக்கமோ இருந்ததில்லை, அந்த அமைப்பும் அழிந்து விட்டது. தற்போது கதை கட்டிவிடப்படும் இல்லுமினாடி என்பது சுத்த புனைகதை!! ஆனால் வெகு சாமர்த்தியமாக யூதர்களை காப்பற்றும் வேலையை செய்கிறது. இப்போ கூட உலக பிரச்சினைக்கு இல்லுமினாடி தான் காரணம் என யாரும் வந்தால் செருப்பால் அடிப்பேன். நான் கூறும் யூதர்களின் சதிகளையே மற்றையோர் (பாரிசாலன் போன்றோர்) இல்லுமினாட்டி என தெரிந்தோ தெரியாமலோ கூறுகின்றனர்.

        மற்றையது நண்பரே, ரோம பேரரசில் இருந்து ஹிட்லர் வரை இவர்களை உலகெங்கும் விரட்டி விரட்டி வெளுத்ததட்கு தக்க காரனங்கள் உண்டு, அவற்றை அதே சேற்றில் முளைத்த செந்தாமரைகள் கூறியும் உள்ளனர், அதற்காக கொல்லபட்டும் ஒதுக்கபட்டும் உள்ளனர் (இயேசு கிறிஸ்து, கார்ல் மார்க்ஸ், ஐன்ஸ்டீன், சார்லி சாப்ளின்…) முதலில் இவர்களை பற்றி முழுமையாக அறிந்து விட்டு என்னை வஹபி பக்தர் என கூறுங்கள் (அதே வாஹபி மத்திய கிழக்கு நாடுகள் இப்போது இவர்கள் கையில் என்பது வேறு கதை). நரி பார்ப்பான்கள் பற்றி சரியாக புரிந்து வைத்திருக்கும் நீங்கள் உலக பார்ப்பன்களான யூதர்களை அப்பிராணிகள் என நம்புவது வேடிக்கையாக உள்ளது. தேவையானால் மேலும் ஆதாரங்களுடன் விவாதிக்க நான் தயார்.

        • இங்கே கருத்தைவிட , கருத்திட்டவரையே பார்க்கப்படுகிறது, கருத்து இடுபவர் உங்கள் எதிரியாக இருந்தாலும் கருத்து சரியானதாக இருக்கும் பட்சத்தில் ஏன் எதிர்க்க வேண்டும்?

  8. சின்னாவின் கருத்துக்கு நன்றி, யூதர்களின் கொடூரத்திற்கு பாலஸ்தீன பிரச்சனை மட்டுமே சாட்சி
    மக்கள் இன்று பல விஷயங்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள், ஆனால் யூதர்கள் சாமானியர்கள் போல அல்ல, எப்படியெல்லாம் மக்களை அடிமைப்படுத்தி சுகமாக வாழலாம் என்று சதா சிந்தித்துக்கொண்டு செயலாற்றிக்கொண்டும் இருப்பார்கள், நமது பிள்ளைகள் கார்ட்டூன் பார்த்து கெட்டுப்போகும் ஆனால் அவர்கள் பிள்ளைகளோ கார்ட்டூனை உண்டாக்கி பணம் சம்பாரிப்பார்கள்.
    உலகில் எந்த நாட்டில் செலவு செய்தாலும் அவர்களுக்கு பயன் தேவை என்பதால் தான் மாஸ்டர் மற்றும் விசா கிரெடிட் கார்டுகளை தயார்படுத்தி மக்களை வலுக்கட்டாயமாக பயன்படுத்த வைத்து லாபத்தில் கொழிக்கிறார்கள், பல சூழ்ச்சிகளை அவர்கள் செய்கிறார்கள், சொற்பமானவர்களை தவிர எல்லோரும் வீழ்ந்து போகிறோம்

  9. இன்று இந்தியாவின் நிலையையே எடுத்துக்கொள்ளுங்கள், 130 கோடி பேர் உள்ள மிகப்பெரிய நாடு, உலகமக்கள் தொகையில் எழில் ஒருவர் நாம் இருந்தும் அமெரிக்காவுக்கு பயப்படணும் ங்கிற நிலைமை ஏன்? அமெரிக்க டாலரை பயன்படுத்தியே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லையென்றால் ஈரானிடம் குறைந்த விலைக்கு கச்சா எண்ணையை இந்திய ரூபாயை கொடுத்து வாங்கமுடியும். இதுபோல் பல விஷயங்களை பட்டியலிடலாம். இலவசமாக பல் குச்சியை வைத்து பல் தேய்த்துக்கொண்டிருந்த நம்மை பேஸ்ட் பிரஸ் கொண்டு பல் தேய்க்கவிட்டு மாதம் மாதம் ஒரு தொகையை செலவு செய்து, அதனால் வரும் பல் சம்பந்தமான நோய்க்கு செலவிடும் நிலைமைக்கு ஆள்ளாக்கிவிட்டார்கள்.

  10. இந்த மாதிரி படத்துக்கு விமர்சனம் எழுதப்படும் அதே நேரத்தில் “மேற்கு தொடர்சி மலை”போன்ற நல்ல படங்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக விமர்சனம் எழுதப்பட வேண்டும்.

  11. கோலமாவு கோகிலா படத்திற்கு மிகச் சரியான விமர்சனம் எழுதபட்டுள்ளது
    கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்தி மதவாதிகள் மதம் பர்த்தா பிரசாரங்கள் மேற்கொள்வது கண்டக்கபட வேண்டியது.

  12. சினிமா இன்று மன நோயாளிகளின் கைகளில் சிக்கிச் சீரழிந்துவிட்டது.

  13. இப் பதிவில் கூறப்பட்டுள்ள பல விடயங்களில் எனக்கு உடன்பாடுகள் இருப்பினும் ஒரு படத்தின் உள்ளடக்கத்திற்காக அதில் நடித்த நடிகையை வசை பாடுவதில் எந்த பொருளும் இருப்பதாக தெரியவில்லை. அறம் , கோலமாவு கோகிலா ஆகிய படங்களில் நயன்தாரா என்பவர் ஒரு நடிகை என்பதைத் தாண்டி படத்தின் உள்ளடக்கத்திற்கும் அவருக்கும் தொடர்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. சிறிது காலத்திற்கு முன் பத்மாவதி படத்தில் நடித்ததற்காக தீபிகா படுகோனை வசை பாடிய மூடர்களை உங்கள் பதிவு நினைவு படுத்துகிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க