மெரிக்கவில் நடந்த செப்டம்பர் 11, 2001 இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின் ஆஸ்திரேலியாவில் நிகழும் சமூக ஒட்டுறவு மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த விவாதங்களில் இசுலாம் மையப்புள்ளியாக விளங்குகின்றது.

இசுலாமிய குடியேறிகளுக்கு கட்டுப்பாடுகள் குறித்து வெளிப்படையாகவே விவாதிக்கப்படுகின்றது. சமீபத்தில் தனது பாராளுமன்ற கன்னிப் பேச்சில் செனேட்டர் ஃப்ரேஸர் அன்னிங் இது குறித்துப் பேசியுள்ளார். பலர் இசுலாத்தின் பெயரில் இன்னொரு பயங்கரவாத தாக்குதல் நிகழக்கூடும் என்று நம்புகின்றனர்.

செனேட்டர் ஃப்ரேஸர் அன்னிங்

இந்த எதார்த்த சூழலில் இசுலாம் குறித்து நமக்கு செய்தியளிக்கவும் அந்த செய்திகளுக்கு நமது எதிர்வினைகள் எவ்வாறு இருக்கும் என்பதைத் தீர்மானிப்பதிலும் ஊடகங்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றன. ஆனால் இசுலாத்தைக் குறித்த போதிய அறிவின்மையிலோ அல்லது இசுலாமியர்களை விரோதித்துக் கொள்வோம் என்கிற அச்சத்தின் விளைவாகவே மிக அடிப்படையான ஒன்றை ஊடகங்கள் தவற விடுகின்றன. அதாவது, பயங்கரவாத அச்சுறுத்தலின் வேர் இசுலாத்தில் இருந்து கிளைக்கவில்லை. மாறாக, அது இசுலாமிய மயமான அரசியலில் தான் உள்ளது.

இவ்விரண்டு பதங்களும் கேட்பதற்கு ஒன்று போலத் தெரிவியலாம்.  ஆனால், இசுலாமும் இசுலாமியமயமாதலும் ஒன்றல்ல. இசுலாம் என்பது சுமார் 1.6 பில்லியன் மக்களால் பின்பற்றப்படும் நம்பிக்கை. மாறாக, இசுலாமியமயம் என்பது சில குறுங்குழுக்களின் அரசியல் சித்தாந்தம். இவர்கள் இசுலாத்திடம் இருந்து ஷரியா, ஜிகாத் போன்ற கருத்துக்களை கடன் வாங்கி அவற்றைத் தங்கள் அரசியல் நோக்கங்களுக்கு ஏற்ப மறுவிளக்கம் அளிக்கின்றனர்.

பயங்கரவாதிகளின் லட்சியங்களை ஊடகங்கள்  எவ்வாறு உத்திரவாதப்படுத்துகின்றன?

அல்கைதா அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற இயக்கங்கள் முசுலீம் அல்லாதவர்களின் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலம் ஷரியா சட்டத்தின் அடிப்படையிலான ஒரு அரசியல் அமைப்புமுறையை (கலீபேட்) நிறுவ  முனைகின்றனர். இதற்கான அடிப்படை குரானிலோ அல்லது ஹதீஸிலோ கிடையாது.

கவனமாக தெரிவு செய்யப்பட்ட இசுலாமிய பாடங்களை மறுதொகுப்பு செய்து அவற்றையே மதச் சட்டங்களாக நிறுவும் தந்திரமே ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் வெற்றிக்கான அடிப்படை.

குறிப்பாக, இசுலாமியவாதிகள் ஜிஹாது என்கிற கருத்தாக்கத்திற்கு மறுவிளக்கம் ஒன்றை அளித்து அதையே முசுலீம் அல்லதவர்களின் மீது தாங்கள் கட்டவிழ்த்து விடும் ”புனிதப் போருக்கான” நியாயமாக முன் வைக்கின்றனர். ஆனால், போர் மற்றும் அமைதி குறித்த குரானின் அடிப்படைக் கோட்பாடுகளும்  இவர்களின் விளக்கங்களும் கடுமையாக முரண்படுவதாக ஏராளமான ஆய்வுகள் முன்வைக்கின்றன.

படிக்க :
♦ பின்லேடன்: அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாதம்!
♦இஸ்லாத்தின் பெயரில் இன்னுமொரு அமெரிக்க கூலிப்படை!

உதாரணமாக சிவிலியன்களின் மேல் தாக்குதல் நடத்துவதை இசுலாமியக் கல்வி தடை செய்கிறது. மேலும் உலகளவில் இசுலாமியத் தலைவர்களும் மார்க்க அறிஞர்களும் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களைக் கண்டித்து ஃபத்வா (மதக் கட்டளை) பிறப்பித்துள்ளனர்.

ஜிஹாது குறித்த தவறான விளக்கங்களை விரிவாக பதிவு செய்து செய்தியாக்குவதும், அதைக் குறித்த இசுலாமிய தலைவர்களின் கண்டனங்களைப் போதிய முக்கியத்துவமின்றி வெளியிடுவதன் மூலம் இசுலாத்துக்கும் பயங்கரவாதத்திற்குமான தொடர்பு குறித்த பொதுபுத்திக்கு வலு சேர்க்கின்றன மேற்கத்திய ஊடகங்கள்.

சில சந்தர்பங்களில் ஊடக அறிவுஜீவிகள் பயங்கரவாதிகள் தங்களது செயல்களுக்கான அடிப்படையாக இசுலாத்தை முன்வைப்பதைக் குறிப்பிட்டு வெளிப்படையாகவே மதத்தையும் பயங்கரவாதத்தையும் தொடர்பு படுத்துகின்றனர்.

பயங்கரவாதிகளின்  கூற்றையும் அவர்கள் இசுலாத்திற்கு அளிக்கும் விளக்கத்தையும் விமர்சனமற்ற முறையில் ஏற்றுக் கொள்வதன் மூலம் இசுலாமியவாதிகளின் நோக்கங்களுக்கு இவர்கள் சேவை செய்கின்றனர்.

வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், தங்களையே இசுலாத்திற்கும் இசுலாமியர்களுக்குமான பிரதிநிதிகளாக காட்டிக் கொள்ளும் பயங்கரவாதிகளின் திட்டங்களுக்கு ஊடகங்கள் துணை போகின்றன.

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் ஆள்சேர்ப்பு முறை

இசுலாத்திற்கும் மேற்கத்திய உலகத்திற்கும் இடையே ஒரு மனித நாகரீகப் போர் நடப்பதாக மேற்கொள்ளப்படும் நச்சுப் பரப்புரைகளில் இசுலாமியவாத பயங்கரவாதிகளின் போர்தந்திர ரீதியிலான நலன்கள் இருக்கின்றன.

“மேற்குலகில் வாழும் இசுலாமியர்கள் வெகு விரைவில் தங்களுக்கு இரண்டு தேர்வுகளே இருப்பதை உணர்வார்கள்”  என்கிறது ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பிப்ரவரி 2015ல் வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்று.

அதாவது பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிக்க அதிகரிக்க மேற்கத்திய முசுலீம்கள் தாம் சந்தேகத்தோடும் அவநம்பிக்கையோடும் நடத்தப்படுவதை உணர்வார்கள். இதன் மூலம் “சிலுவைப் போர் நாடுகளின் கடுமையான தண்டனைகளில் இருந்து தப்பிக்க ஒன்று அவர்கள் தங்களை மதம் மாற்றிக் கொள்ள வேண்டும் அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு குடியேறியாக வேண்டும்” என்கிறது அந்த செய்திக் குறிப்பு.

படிக்க :
♦ நைஜீரியா போகோ ஹராம்: அமெரிக்க ஆசியுடன் ‘ஜிகாத்’!
♦ ஆப்கான் – மத்திய ஆசியா – எண்ணெய் – இஸ்லாமிய தீவிரவாதம் !

நடந்து கொண்டிருக்கும் போரில் ஏற்படும் மனித இழப்புகளை மேற்கத்திய இசுலாமியர்களைக் கொண்டு ஈடுகட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பிரித்துக் கைப்பற்றும் (Divide and conquer) உத்தியைக் கையாள்கின்றது. விளிம்பு நிலையில் இருக்கும் பாதிக்கப்பட்ட மேற்கத்திய இசுலாமியர்களைக் குறிவைத்து தங்கள் பிரதேசத்தில் சகோதரத்துவமும், பாதுகாப்பும் ஆதரவும் கிடைக்கும் எனப் பரப்புரை செய்கின்றது.

மறுபுறம், இசுலாமிய சமூகத்தை பயங்கரவாதத்தோடு வெளிப்படையாகவே தொடர்புபடுத்தி எழுதுவதன் மூலமும், இசுலாமிய நம்பிக்கையையும் இசுலாமியவாத அரசியலையும் வேறுபடுத்திப் புரிந்து கொள்ளாததன் மூலமும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் நோக்கங்களை மறைமுகமாக முன் தள்ளுகின்றன மேற்கத்திய ஊடகங்கள்.

உதாரணமாக இங்கிலாந்தில் சிரிய அகதிகளின் முதல் குடியேற்ற அலை நிகழ்ந்த 2015 -ல். உடனடியாக இங்கிலாந்தின் டெய்லி மெய்ல் பத்திரிக்கை “பிரிட்டனின் உள்விரோதிகளின் மோசமான அச்சுறுத்தல்” என்கிற கட்டுரையை வெளியிட்டு அகதிகளை ‘இசுலாமிய தீவிரவாதிகளாக’ சித்தரித்தது.

அதே போல் 2014 -ல் சிட்னியில் நடந்த தாக்குதலின் போது துப்பாக்கி முனையில் பணயக்கைதிகளை பிடித்து வைத்திருந்த இசுலாமியரை ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தோடு தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டது டெய்லி டெலிகிராப் பத்திரிகை. பின்னர் இது உண்மையல்ல என பயங்கரவாதம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வல்லுநர்கள் தெளிவுபடுத்தினர்.

பொறுப்பற்ற ஊடகச் செய்திகளால் உண்டாகும் விளைவு

இம்மாதிரியான எளிமைப்படுத்தப்பட்டு, பரபரப்புக்கான ஊடகச் செயல்பாடுகள் இசுலாமியர்களுக்கு எதிராக முசுலீமல்லாதவர்களை தூண்டி விடுவதன் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் நோக்கங்களுக்கே சேவை செய்கின்றன.

இசுலாமியர்களுக்கும் இசுலாமியவாத பயங்கரவாதிகளுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமல் செய்தி வெளியிடுவது இசுலாமிய மக்களுக்கு எதிராக பிற மக்களைத் தூண்டி விடும் என்கிறது வியன்னா பல்கலைக்கழகம் 2017 -ல் நடத்திய ஆய்வு ஒன்று.

இம்மாதிரியான செய்திகள் குறித்து ஓரளவுக்கு விழிப்புணர்வு வளர்ந்து வருவதால் சி.என்.என் போன்ற சில ஊடகங்கள் “மிதவாத இசுலாம்” “தீவிரவாத இசுலாம்” மற்றும் “இசுலாம்”, “இசுலாமிய தீவிரவாதம்” போன்றவைகளை வேறுபடுத்தி எழுதுகின்றன. எனினும், இவர்களும் கூட இசுலாமியவாத அரசியல் கண்ணோட்டம் குறித்த புரிதலின்றி மத நோக்கங்களை முன்தீர்மானமாக கொண்டே எழுதுகின்றனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் செயல்பட்டு வரும் சுமார் 1200 வெளிநாட்டுப் போராளிகளிடம் நடத்திய ஆய்வு ஒன்றின் படி, அவர்களில் 85 சதவீதம் பேர் முறையான மதக் கல்வி பெற்றவர்கள் இல்லை என்பதோடு அவர்கள் இசுலாமிய கோட்பாடுகளைப் பின்பற்றுபவர்களும் இல்லை என்பது தெரியவந்தது. “இவர்கள் தமது இயக்கம் முன்வைக்கும் ஜிஹாது குறித்த விளக்கங்களை கேள்விக்கு உட்படுத்த மாட்டார்கள்” என்பதாலேயே ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் விரும்பிச் சேர்த்துக் கொண்டிருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

இசுலாமியவாதம் என்பது மதத்தை ஒரு முகமூடியாக கொண்டிருக்கிறது. ஆனால், முகமது நபியின் போதனைகளுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவர்கள் பின் காலனிய சூழலின் அரசியல் அதிருப்திகளின் வெளிப்பாடுகளே. ஷரியா சட்டங்களின் அடிப்படையிலான ஒரு கலீபாவை (இசுலாமிய தேசம்) உருவாக்குவதே லட்சியங்களாக இசுலாமிய பயங்கரவாதிகள் சொல்கின்றனர். எனினும், ஒரு முசுலீமாக இருப்பதற்கு இவை அவசியமே இல்லை. இப்படி ஒரு முசுலீம் அல்லாதவர் சொல்வது இசுலாத்தின் மீதான தாக்குதலும் இல்லை.

அரசியல்-சரியா அல்லது நுட்பமான விவாதமா?

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்திற்கான நியாயம் கற்பித்தலை மட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக அவ்வியக்கத்தைக் குறிப்பிடும் போது “இஸ்லாமிக் ஸ்டேட்” என்பதற்கு பதில் “டேயிஷ்” என குறிப்பிட வேண்டும் என இங்கிலாந்து மற்றும் பிரான்சில் உள்ள ஊடகங்களுக்கு அந்நாட்டு அரசுகள் அறிவுறுத்தி உள்ளன. எனினும், இது எல்லா நேரங்களிலும் பின்பற்றப்படுவதில்லை.

இசுலாமிய சமூகங்களைச் சேர்ந்த இசுலாமியவாத கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டவர்களைக் குறிப்பிட இசுலாமியவாத பயங்கரவாதம் (Islamist Terrorism) என்கிற பதத்தைப் பயன்படுத்துகிறார் மால்கம் டர்ன்புல்.

ஆனால், டொனால்ட் டிரம்ப் போன்ற பல அரசியல்வாதிகள் “கடுங்கோட்பாட்டுவாத இசுலாமிய பயங்கரவாதம்” என குறிப்பிட்டு அந்த எல்லைக் கோட்டை தெளிவற்றதாக்குகின்றனர்.

சிலர் நமது அரசியல் சரி நிலைப்பாடுகளே பிரச்சினைக்கு முகம் கொடுப்பதில் இருந்து நம்மைத் தடுக்கின்றது என்கிறார்கள்.

ஆனால், இசுலாமிய மதமே பிரச்சினைகளுக்கான வேர் எனச் சொல்பவர்கள் பெரும் தவறிழைக்கின்றனர். இசுலாத்தின் அடிப்படை கோட்பாடுகள் என்னவென்பதைக் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக ஒரு கலீபேட்டை உருவாக்குவதும், முசுலீம் அல்லாதவர்களின் மேல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதும் இசுலாமிய மதக் கட்டளைகளா, அவ்வாறு செய்வதற்கு இசுலாமிய மதம் கோருகின்றதா என்பதை விவாதிக்க வேண்டும்.

மூலக்கட்டுரை : Why the media needs to be more responsible for how it links Islam and Islamist terrorism
தமிழாக்கம்:

13 மறுமொழிகள்

 1. அடிப்படையில் இஸ்லாத்தின் பால பாடத்தைக்கூட படிக்காதவர் எழுதிய கட்டுரை இது.

  ///அதாவது, பயங்கரவாத அச்சுறுத்தலின் வேர் இசுலாத்தில் இருந்து கிளைக்கவில்லை. மாறாக, அது இசுலாமிய மயமான அரசியலில் தான் உள்ளது.////

  இஸ்லாம் வெறும் இறை நம்பிக்கையல்ல. அது யூத கிருஸ்தவ மதங்களைப்போலவே நிலம் பிடிக்கும் அரசியல் சித்தாந்தம். இஸ்லாத்தை பொருத்தவரை இறைவனையும் அரசியலையும் பிரிக்க முடியாது.

  ///அல்கைதா அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற இயக்கங்கள் முசுலீம் அல்லாதவர்களின் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலம் ஷரியா சட்டத்தின் அடிப்படையிலான ஒரு அரசியல் அமைப்புமுறையை (கலீபேட்) நிறுவ முனைகின்றனர். இதற்கான அடிப்படை குரானிலோ அல்லது ஹதீஸிலோ கிடையாது.////

  வாழ்க்கையில ஒரே ஒரு தடவ ரெண்டையும் படிச்சிருங்கையா. குரானை அப்படியே படித்தால் புரியாது. இப்னு காதீரின் தவ்சீரை படியுங்கள். ஹதீஸ்களில் சஹீ ஹதீஸ்கள் இரண்டையும் படித்தாலே முக்கால்வாசி விளங்கிவிடும். ஐ.எஸ்.ஐ.எஸ் முழுக்க முழுக்க குரான் ஹதீஸ்களை அடிப்படையாக கொண்டே செயல்படுகிறது. இஸ்ரேலை தாக்காமல் இருப்பதும் குரான் அடிப்படையிலேயே. மறுமை நாள் வரைக்கும் இஸ்ரேல் யூதன் கையில்தான் இருக்கும் என்று குரான் சொல்கிறது.

  ///குறிப்பாக, இசுலாமியவாதிகள் ஜிஹாது என்கிற கருத்தாக்கத்திற்கு மறுவிளக்கம் ஒன்றை அளித்து அதையே முசுலீம் அல்லதவர்களின் மீது தாங்கள் கட்டவிழ்த்து விடும் ”புனிதப் போருக்கான” நியாயமாக முன் வைக்கின்றனர். ஆனால், போர் மற்றும் அமைதி குறித்த குரானின் அடிப்படைக் கோட்பாடுகளும் இவர்களின் விளக்கங்களும் கடுமையாக முரண்படுவதாக ஏராளமான ஆய்வுகள் முன்வைக்கின்றன.////

  எதுவுமே முரண்படவில்லை. புனிதப்போர் என்பது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் அத்தனைப்பேரிடமும் செய்ய வேண்டியது. இது பல இடங்களில் குரானிலும் ஹதீசிலும் உள்ளது.

  பாடம் : 17 (இறைவனுக்கு இணை கற்பிக்கும்) அவர்கள் பாவமன்னிப்புக் கோரி,தொழுகையையும் நிலைநிறுத்தி, ஸகாத்தையும் வழங்கிவந்தால் அவர்களை அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் எனும் (9:5ஆவது) இறைவசனம்.
  25. ‘மனிதர்கள், வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை; முஹம்மத் இறைத்தூதர் என்று உறுதியாக நம்பி, தொழுகையை நிலை நிறுத்தி, ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தம் உயிர், உடைமைகளை என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள்.. இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறனாலே) தவிர! மேலும் அவர்களின் விசாரணை இறைவனிடமே உள்ளது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
  Book : 2

  ///உதாரணமாக சிவிலியன்களின் மேல் தாக்குதல் நடத்துவதை இசுலாமியக் கல்வி தடை செய்கிறது. ////

  அதாவது பார்பேரியன்கள் எப்படி சந்தடி சாக்கில் ஊருக்குள் புகுந்து சுதாகரிப்பதற்க்குள் ஆண்களை கொன்று, பெண்களையும் குழந்தைகளையும் கைது செய்து ஊரையே கொள்ளை அடிப்பார்களே, அதுதான் முகமது செய்த போர். எங்கேயும் சிவிலியன் மேலே தாக்குதல் நடத்த தடை விதித்ததில்லை. அல்லாஹ்வின் எதிரியை கருவறுக்க எல்லா உரிமையும் உண்டு.

  2541. இப்னு அவ்ன்(ரஹ்) அறிவித்தார்.
  நான் நாஃபிஉ(ரஹ்) அவர்களுக்குக் கடிதம் எழுதினேன்; அவர்கள் எனக்கு (பதில்) கடிதம் எழுதினார்கள். அதில் அவர்கள் ‘நபி(ஸல்) அவர்கள் பனூ முஸ்தலிக் குலத்தார் அசட்டையாக (எச்சரிக்கையின்றி) இருந்தபோது அவர்களின் மீது (திடீர்) தாக்குதல் நடத்தினார்கள்; அப்போது அவர்களின் கால்நடைகள் நீர்நிலை ஒன்றில் தண்ணீர் புகட்டப்பட்டுக் கொண்டிருந்தன. அவர்களில் போரிடும் திறன் பெற்றவர்களைக் கொன்றார்கள்; அவர்களின் மக்களை (பெண்கள், பிள்ளை குட்டிகளை) போர்க் கைதிகளாக சிறை பிடித்தார்கள்; அன்றுதான் ஜுவைரிய்யா(ரலி) அவர்களைக் கண்டார்கள். இதை அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) எனக்கு அறிவித்தார்கள். அவர்களும் அந்த (முஸ்லிம்) படையில் இருந்தார்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
  Book :49

  ///இசுலாமியவாதம் என்பது மதத்தை ஒரு முகமூடியாக கொண்டிருக்கிறது. ஆனால், முகமது நபியின் போதனைகளுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ///

  ஹாஹாஹா தமாசு. உங்க கூட்டத்துல உள்ள அறிவு ஜீவிகளின் அறிவு புலப்படுகிறது.

  மேலே இருக்கும் பல ஹதீஸ்களும், பல குரான் வசனங்களும் எல்லாக் காலத்துக்கும் பொருந்துபவை அல்ல என்று முஸ்லிம் பொது ஜனங்கள் ஏற்க ஆரம்பித்தாலே அவர்களது முக்கால்வாசி பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.

  • உங்கள் மார்க்கம் உங்களுக்கு அவர்கள் மார்க்கம் அவர்களுக்கு என்று சொல்வதும் குரான் தான், தன் கரத்தாலும் நாவினாலும் மற்றவரை துன்புறுத்தத்தவரே முஸ்லீம் என்பதும் ஹதீஸ் தான்.
   போரின் விதிமுறையை உலகுக்கு தந்தது இஸ்லாம் தான், வழிப்பாட்டு தளம், மரம், விளைச்சல், பெண்கள், வயோதிகர்கள் , சிறுவர்கள் இதையெல்லாம் தொடக்கூடாது என்று போரின் விதிமுறையை உலகுக்கு தந்தது, ஆனால் இந்தியாவில் பல சமண, புத்தகோவில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது, எல்லா மக்களும் கொல்லப்பட்டார்கள், அரசர்கள் காலத்தில் தான் அப்படியென்றால் குஜராத்தை ஆண்ட மடியின் காலத்திலும் அப்படித்தான்

   • Ashak இஸ்லாமிய பண்பாடு பற்றிய உங்கள் வார்த்தைகளில் உண்மையில்லை.

    இஸ்லாமிய ஆட்சியில் இந்தியாவில் நடந்த கொடுமைகளை எல்லாம் அந்த மன்னர்களோடு கூடவே இருந்த மத போதகர்கள் (பெருமையோடும் சந்தோசத்தோடும்) எழுதி இருக்கிறார்கள் படித்து பாருங்கள். காஷ்மீர் சைவ சமயத்தின் தொட்டில் ஆனால் அங்கே இருந்த அனைத்து ஹிந்து கோவில்களையும் இடித்து தரைமட்டமாக்கியவர் ஒரு இஸ்லாமிய மன்னர் (ஒரே வருடத்தில் காஷ்மீரில் இருந்த பல ஆயிரம் ஹிந்து கோவில்கள் இடித்து தரைமட்டம் ஆக்கினார்கள்). பாகிஸ்தானை “Land of Pure” என்று சொல்வதற்கு பின்னால் இருக்கும் ரத்தகரை படிந்த வரலாற்றை படித்து விட்டு வந்து பேசுங்கள். மனித இனத்திலேயே மிக மோசமான அவலத்தை சந்தித்தவர்கள் இந்தியர்கள் மட்டும் தான்… யூதர்கள் கூட ஹிட்லரிடம் ஹிந்துக்கள் பட்ட துன்பங்களை போல் பட்டது இல்லை.

    இந்தியாவை பொறுத்தவரையில் (இஸ்லாமிய படையெடுப்பிற்கு முன்பு) மதத்திற்காக போர் நடந்தது இல்லை… அறிவை பயன்படுத்தி விவாதம் செய்தார்கள், அந்த விவாதத்தில் தோல்வி அடைந்தவர் வெற்றி பெற்றவரின் மதத்திற்கு மாறினார்கள். நம் தமிழகத்திலேயே இந்த மாதிரியான விஷயங்கள் நடந்து இருக்கிறது அதற்கு ஆதாரம் சமணர் கழுவேற்றம் சமந்தரிடம் தோல்வி அடைந்து கழுவேறினார்கள். மேலும் ஆதி சங்கரர் விவாதகங்கள் மூலம் தானே ஹிந்து மதத்தை சாதபித்தார்… கிறிஸ்துவர்களும் வினவு போன்ற மங்கிகளும் சங்கரர் மீதான கோபத்திற்கு இதுவும் ஒரு காரணம்.

    உங்களுக்கு இன்னொரு தகவல் விவாதத்தில் தோல்வி அடைந்தாள் உயிரை விடுகிறோம் என்ற விஷயத்தை இந்தியாவில் கொண்டு வந்தவர்கள் சமணர்கள்.

    முதலில் இந்தியாவின் வரலாற்றை ஒழுங்காக தெரிந்து கொண்டு வந்து பேசுங்கள்…

 2. ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் செயல்பட்டு வரும் சுமார் 1200 வெளிநாட்டுப் போராளிகளிடம்

  பயங்கரவாதிகள் என்பதற்கு பதிலாக போராளி என்று தவறுதலாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்

 3. தங்களை இந்துக்கள் என்று கருதும் சாதாரண மக்களுக்கும் இது பொருந்தும் என்று நினைக்கிறேன். பொதுவில் இந்து மதத்தை ஒழிப்போம் என்று பேசுவது இக்கட்டுரையில் கூறுயுள்ளது போன்று எதிர்மறையாகத்தான் புரிந்து கொள்ளப்படும். சரியான வார்த்தை பிரயோகம் இந்துக்கள் விசயத்லும் அவசியம்.

 4. I have never seen a Muslim or Muslim leader or any Islamic state opposed any of the atrocities done by the so called Jihadists/ or ISIS in public. Their silence is the main reason for the non Muslims to believe that the Muslims are hardliners or Muslims are supporting the ISIS. Even you can see that when a Sunni Muslim kill another non Sunni Muslim, not a single Muslim spoke against it (Generally). But if anyone other than a Muslim say a word about or against them, immediately they flock together and fight against them.

  This type of behaviour generalize every Muslim as a hardliner or ISIS supporter. (This is my observation0

  • you are wrong. I nave never seen a Muslim who supports isis or jihadists.
   It’s unnucessary for a muslim to always prove themselves by condemn every crazy act done by some fanatics. That is not their job. indian judiciaty and system only owe an apology to muslims for destroying babri masjid and intimidation tactics. By expecting apology or condemn for some others wrong doing you are humiliating Muslims.

   • Hello Manoj, I am not wrong and not humiliating Muslims in any way.

    I assume that your opinion is on the experience of Tamil Nadu Muslims but I am talking about the Muslims who are living around the world. (Generally)

    ‘I nave never seen a Muslim who supports isis or jihadists.’

    Did you ever seen a Muslim speak against the ISIS or Jihadists

    what I am telling here is that THEY DO NOT SPEAK AGAINST IT.

    • I too never speak against isis or jihadists to any one.Does it mean i support them?. your argument does not make sense.
     They are living their life like everybody. Why they need to comment on ISIS or some other craps. Do you want all muslims to wear placards condemning isis. பொழுதனைக்கும் கற்பை நிரூபிப்பதுதான் அவர்கள் வேலையா?

 5. பொதுவாக எல்லா தீவிர வாத இயக்கங்களும் இஸ்லாமிய நாட்டில் தான் வன்முறைகளை நடத்துகிறார்கள் ISIS அல்குவைதா போன்ற இயக்கங்கள் எங்கே இருக்கிறது அமெரிக்காவிலா அல்லது இங்கிலாந்தில்லா அல்லது ஐரோப்பிய நாடுகளிலா

  இஸ்லாமிய பெயர்களுடன் திரியும் தீவிரவாத இயக்கங்கள் உண்மையில் யாரை அழிக்கிறார்கள். மனசாட்சியை தொட்டு அனைவரும் பதில் சொல்லுங்கள். அவர்கள் அனைவரும் அழிப்பது இஸ்லாமியர்களை தான் .

  ஆக இது போன்ற இயக்கங்களால் அழிக்கப்படுவது இஸ்லாமிய மக்கள்தான் அதிகம். எனவே இதை பின்னால் இருந்து இயக்குவது யார் ?

  ஒசாமா பின்லேடன் கூட உருவாக்கியது அமெரிக்கா தான் என்பது மறுக்க முடியாத உண்மை .

  • அப்படியா?பாரீசிஸ் நூறுபேர் மேல வேன விட்டு ஏத்துனனானுங்க.லண்டன் சப்வே நாக்குதல் ஜெர்மனி தாக்குதல் ஆஸி தாக்குதல் இதெல்லாம் மதவெறியால் கண் தெரியாததால் தெரியல போல

 6. இசுலாமையும் முகமதையும் பற்றி செங்கொடி தளத்தில் இருக்கும் ஒரு பதிவைவ்வாவவது படிச்சிருந்தா இப்படியொரு Run of the mill brain washed உளறல் பதிவு வந்திருக்காது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க