“இந்தியாவைக் காக்க இந்து ஆண்கள் முசுலீம் பெண்களை கும்பல் வல்லுறவு செய்வது ஒன்றே வழி” : பாஜக மகளிர் அணி தலைவி சொல்கிறார்

ந்திய சமூகத்திலிருந்து முசுலீம்களை தனிமைப்படுத்த வெளிப்படையான திட்டங்களுடன் களம் இறங்கிவிட்டது காவிப் படை. முசுலீம்கள் மீதான கும்பல் வன்முறை நோயாக பரவிவரும் நிலையில், முசுலீம் பெண்களை வல்லுறவு செய்யுங்கள் என வெளிப்படையாக அறிவிக்கிறார் ஒரு பாஜக நிர்வாகி. அதுவும் ஒரு பெண் அப்படி சொல்லியிருக்கிறார்.

காவிகள் நடத்திய கலவரங்களில் முசுலீம் பெண்கள் வல்லுறவு செய்யப்பட்ட வரலாறு மிகத் துயரமானது. உத்தர பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணித் தலைவியாக உள்ள சுனிதா சிங் கவுர், அவரது முகநூலில் எழுதிய பதிவு பலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

உத்தர பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி தலைவியாக உள்ள சுனிதா சிங் கவுர்.

“முசுலீம்களுக்கு ஒரே ஒரு தீர்வுதான் உள்ளது. இந்து சகோதரர்கள் 10 பேர் சேர்ந்து ஒரு குழு அமைத்து, அவர்களுடைய அம்மாக்கள், சகோதரிகளை கூட்டு வல்லுறவு செய்ய வேண்டும். பிறகு, அவர்களை நடுத்தெருவில் தூக்கிலிட வேண்டும்” என வன்மத்தை கக்கியிருக்கும் சுனிதா,

முசுலீம் பெண்கள் தங்களது மானத்தை இழப்பதைத் தவிர, இந்தியாவைக் காப்பாற்ற வேறு வழியில்லை எனவும் தன்னுடைய வன்மத்துக்கு காரணம் சொல்கிறார். சுனிதாவின் பதிவு வைரலான பின், கண்டனங்கள் எழுந்ததால், பதிவை நீக்கிவிட்டார்.

பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சுனிதாவை பதவியிலிருந்து நீக்கிவிட்டதாகப் பாஜக அறிவித்துள்ளது. மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றவாளியான பிரக்யா சிங், மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, கோட்சேவைப் புகழ்ந்து பேசினார். பாஜக அதைக் கண்டிப்பதாக நாடகம் ஆடியது. இது குறித்து விசாரிக்கக் குழு அமைக்கப்படுவதாகச் சொன்னது. இரண்டு மாதங்களாகியும் எந்தக் குழுவும் அமைக்கப்படவில்லை. காவிப் படை கோட்சே-வை புகழ்வது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

படிக்க:
கும்பல் வன்முறைக்கு எதிராக சட்டம் இயற்றக்கோரி முசுலீம்கள் போராட்டம் !
♦ முசுலீம்களுக்கு விடிவைத் தருமா மத்தியப் பிரதேச அரசின் பசுவதை சட்டதிருத்தம் ?

அதுபோல, முசுலீம் பெண்கள் வல்லுறவு செய்து பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும் என எழுதியவரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக வெளிவேடம் போடுகிறது பாஜக. இதற்குப் பிராயச்சித்தமாக இன்னும் சில மாதங்களில் சுனிதாவுக்குப் பெரிய பதவி கொடுத்து கவுரவிப்பார்கள் என்பது மட்டும் உறுதி.

ஆயுத பயிற்சி, குண்டுவெடிப்பு உள்ளிட்ட பயங்கரவாத செயல்களில் ஆண்களுக்கு ‘நிகரான’வர்களாக இந்துத்துவத்தால் வளர்க்கப்படும் பெண்களும் உள்ளனர்.

பெண்களை கூட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்க வேண்டும் என ஒரு பெண்ணால் சொல்ல முடிகிறதென்றால் அவரை செரித்த ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் எத்தனை கொடூரமானதாக இருக்கும்?


அனிதா
செய்தி ஆதாரம்: சப்ரங் இந்தியா. 

3 மறுமொழிகள்

  1. திருமாவளவந் கூட தான் சரக்கு மிடுக்குனு பேசுரார அப்ப அமைதியா இருக்கீங்களே

  2. பெண் உருவில் பேய், ஈனப்பிறவிகளுக்கு தான் இப்படி சிந்தனை தோன்றும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க