Thursday, May 1, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்
712 பதிவுகள் 1 மறுமொழிகள்

மனவளர்ச்சி குறைபாடுடைய பெண் மீதான பாலியல் வன்கொடுமையும் விருதாச்சலம் போலீசின் செயல்பாடும் | உண்மை அறியும் குழு அறிக்கை

தூய்மைப்பணியாளரான தாய், புற்று நோய் பாதிக்கப்பட்ட தந்தை, பாதிக்கப்பட்ட பெண் ஆகியோரை கடந்த ஐந்து மாதங்களாக விருத்தாச்சலம் காவல் நிலைய அதிகாரிகள், மாவட்ட துணைக் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் அலைக்கழித்து மனரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர்.

சாம்சங் தொழிலாளர்கள் மீதான திமுக அரசின் அடக்குமுறையை தகர்த்தெறிவோம்!

சமூகநீதி, சமத்துவம் என்று பேசிய திமுக அரசு, சங்கம் வைக்கும் அடிப்படை உரிமையை மறுப்பது உழைக்கும் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம் ஆகும்.

லெபனான் மக்களை கொன்றொழிக்கும் இஸ்ரேலின் பாசிச பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவோம்!

பாலஸ்தீனம் இல்லாமல் ஆக்கப்பட்டு கொண்டிருக்கிறது, லெபனான் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக ஈரானையும் அழிப்பதற்கு அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் முனைந்து கொண்டிருக்கிறது.

லெபனான் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாசிச இஸ்ரேல் | மக்கள் அதிகாரம் கண்டனம்

தங்கள் உயிர் இழந்தாலும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இருப்போம் என்று போராடும் லெபனான், ஏமன் உள்ளிட்ட நாட்டு மக்களின் போராட்டங்களை ஆதரிப்போம்! பாசிச இஸ்ரேல் மற்றும் பாசிச அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்களை உலகம் முழுவதும் கட்டி எழுப்புவோம்!

லெபனான் மீதான இஸ்ரேலின் பயங்கரவாதம் – மக்கள் அதிகாரம் கண்டனம்

பாலஸ்தீனத்துக்கு ஆதரவான மக்கள் இயக்கங்களை குலைக்கவும் திசை திருப்பவும் பாலஸ்தீனத்துக்கு எதிரான போரை உலகப்போராக மாற்றுவதற்கான சதி வேலைகளிலும் இஸ்ரேல் ஈடுபட்டிருக்கிறது.

காலாவதியான-சட்டவிரோத சுங்கச் சாவடிகளை உடனே மூடு! | மக்கள் அதிகாரம் பத்திரிகைச் செய்தி

காலாவதியான மற்றும் சட்டவிரோத சுங்கச்சாவடிகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை போலீசுத்துறை மூலம் தமிழ்நாடு அரசு ஒடுக்கக்கூடாது என்றும் இப்படிப்பட்ட சுங்கச்சாவடிகளின் உரிமையாளர்கள் மீதும் அதற்கு உதவி செய்த அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசை மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

ராணிப்பேட்டை ஆணவப் படுகொலை | மக்கள் அதிகாரம் கண்டனம்

மக்கள் அதிகாரம் இதை வன்மையாகக் கண்டிப்பதுடன், சம்பந்தப்பட்ட சாதி வெறியர்களையும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் கைதுசெய்து கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.

தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதியை குறைத்த பாசிச மோடி அரசு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

வெறும் ஆயிரம் ரூபாய் வைத்துக் கொண்டு எப்படி இருப்புப் பாதை திட்டத்தை மேற்கொள்ள முடியும்? தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு வரிகளைப் பெற்று கொழுத்து திரியும் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு பிச்சைகாசாக ஆயிரம் ரூபாயை வீசி இருப்பது கேவலமானதாகும்.

78வது சுதந்திர தினம் | வீடுதோறும் தேசியக் கொடியை ஏற்றுங்கள் என்கிறார்கள்! எதற்காக?

உண்மையான சுதந்திரத்திற்காக மக்களுக்கு அதிகாரம் வழங்க கூடிய பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசு நோக்கி பயணிப்போம் !

இஸ்லாமியரின் மத உரிமைகளைப் பறிக்கும் வக்ஃபு சட்டம் (திருத்தம்)!

சிதம்பரம் நடராஜர் கோயிலின் மீது தமிழ்நாடு அரசுக்கு எவ்வித உரிமையும் இல்லை. ஆனால் வக்ஃபு வாரிய சொத்துகளின் மீது மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க உரிமை பெற்றவர் என்பது எவ்வளவு பெரிய முரண்?

சர்வாதிகாரி ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பி ஓட்டம்! வங்கதேச மாணவர் – மக்கள் போராட்டம் வெல்க!

ஷேக் ஹசீனாவை விரட்டியடித்த வங்கதேச மாணவர் - மக்கள் போராட்டத்தை மக்கள் அதிகாரம் வாழ்த்துகிறது. வங்கதேச மக்களின் இந்த மாபெரும் எழுச்சி இந்தியாவில் உள்ள மக்களுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் பாசிச மோடி - அமித்ஷா கும்பலை விரட்டியடிக்க முடியும் என்ற நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கிறது.

Bangladesh Students’ Uprising! Dictator Sheikh Hasina chased away!

Bangladesh Students’ Uprising! Dictator Sheikh Hasina chased away! 05-08-2024 Bangladesh students’ uprising against undemocratic elections, unemployment and severe economic crisis ousts dictator Sheikh Hasina! Military dictatorship took advantage...

வங்கதேச மாணவர் எழுச்சி! சர்வாதிகார ஷேக் ஹசினா விரட்டியடிப்பு!

வங்கதேச மாணவர் எழுச்சி! சர்வாதிகார ஷேக் ஹசினா விரட்டியடிப்பு! 05-08-2024 ஜனநாயகமற்ற தேர்தல், வேலையின்மை, கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிரான வங்கதேச மாணவர் எழுச்சியால் சர்வாதிகாரி ஷேக்ஹசினா விரட்டியடிப்பு! மாணவர் எழுச்சியைப் பயன்படுத்தி அரங்கேறியது இராணுவ சர்வாதிகார ஆட்சி! எதிர்க்கட்சியான...

கொள்ளிடத்தில் உடனடியாக தடுப்பணைகள் கட்ட வேண்டும்! மக்கள் அதிகாரம் கோரிக்கை

ராசி மணல் பகுதியில் அணை கட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக விவசாய சங்கத்தினரும் மக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதனை தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளாமல் மக்களுக்கு இன்னல் விளைவித்து வருகிறது.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை! பாசிச இஸ்ரேல் அரசு ஒழிக!

எத்தனை பேர் இறந்தாலும் விடுதலை உணர்வு ஒருபோதும் அடங்கப் போவதில்லை.