Sunday, July 6, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4177 பதிவுகள் 3 மறுமொழிகள்

தனியார்மயக் கொள்கையால் புழுத்து நாறும் இந்திய மருத்துவக் கட்டமைப்பு !!

புதிய தாராளவாதக் கொள்கைகளின்படி மருத்துவம், மக்களின் அடிப்படை உரிமையாக பார்க்காமல் கடைச்சரக்காக மட்டுமே பார்க்கப்பட்டது. அரசு நிதி பெருமளவில் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் தனியாருக்கு திருப்பிவிடப்பட்டது.

நீட் தேர்வு : தமிழக அரசை நம்பி இருப்பது தீர்வல்ல ! போராட்டமே தீர்வு !

தமிழக அரசு, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலும், அவசர சட்டம் கொண்டு வந்தாலும் மத்திய அரசின் ஒப்புதல், கவர்னர் ஒப்புதல், ஜனாதிபதி ஒப்புதல், வழக்கு என பல பத்தாண்டுகளுக்கு பாஜக கிடப்பில் போட்டுவிடும்.

கொரோனா துயரத்திலும் மாளிகை கேட்கிறதா ? மோடியை சாடிய மேனாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் || பி.பி.சி

நீங்களும் உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களும் தேர்தல் நேரத்தில் மிகப்பெரிய கூட்டங்களை கூட்டியதன் மூலம் எத்தகைய ஆபத்துக்கு மக்களை ஆட்படுத்துகிறோம் என்பதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேலை புறக்கணித்த ஆப்பிரிக்க துறைமுகத் தொழிலாளர்கள் !!

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான ஆயுதங்கள் இருப்பதால், ”லிவோர்னோ துறைமுகம் பாலஸ்தீனிய மக்கள் படுகொலைக்கு ஒருபோதும் துணையாக இருக்காது” என்று இத்தாலியின் யூ.எஸ்.பி (Union Sindacale di Base) தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது

பாலஸ்தீனம் : ஷேக் ஜர்ராவில் அரங்கேறும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு !

“இது ஒரு சொத்து இழப்பு என்ற அளவில் தொடங்கி முடிவதல்ல. மனரீதியான தொல்லைகள், பொருளாதாரம் வறண்டு போதல் ஆகியவைகளையும் உள்ளடக்கியது. இது ஒரு வெறும் சட்டப் போராட்டம் மட்டும் அல்ல. அரசியல் போராட்டம்”

கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகின் மிக மோசமான ஐந்து தலைவர்கள் !!

அமெரிக்காவில் கொரோனா தொற்று மிக மோசமான போது, லத்தீன் அமெரிக்கர்களுக்கு 17.6% ஆகவும், ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு 16.8% ஆகவும், ஆசிய அமெரிக்கர்களுக்கு 15% ஆகவும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது.

கொரோனா பெருந்தொற்றை ஆளும்வர்க்கம் எதிர்கொள்ள முடியாதது ஏன் ?

இந்தியாவில் கொரோனா, மக்களின் வாழ்வாதாரத்தை பறித்துவரும் வேளையில் முகேஷ் அம்பானியோ இலண்டன் அருகில் உள்ள மிகப் பழமையான ஸ்டோக் பார்க் எஸ்டேட்டை 79 மில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளார்

கொரோனா : கண்டுகொள்ளாமல் விடப்படும் ஆஷா பணியாளர்கள் !

போதிய பாதுகாப்பு வசதிகள் இன்றி பணி செய்ய நிர்ப்பந்திக்கப் படுவதால் இதுவரை நாடு முழுதும் 80 ஆஷா பணியாளர்கள் இறந்துள்ளதாக ஆஷா பணியாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது

இந்திய பொதுவுடைமைக் கட்சி (மா- லெ) முதலாவது மாநாட்டின் 51-ம் ஆண்டு நிறைவு !

நக்சல்பாரி எழுச்சி ஓர் உண்மையான, புரட்சிகரமான கம்யூனிஸ்டு கட்சிக்கு அடித்தளமிட்டது. ஆளும் வர்க்கங்கள் அச்சத்துடனும், வெறுப்புடனும், ஆத்திரத்துடனும் குறிப்பிடும் நக்சல்பாரிகளின் கட்சி, ஏப்ரல் 22, 1969 அன்று உதயமானது.

கொரோனா : கணக்கில் கொண்டு வரப்படாத மரணங்கள் !

கொரோனா பெருந்தொற்றால் மரணமடைபவர்களின் உண்மையான எண்ணிக்கை பதிவுகளில் காட்டப்படுவதில்லை. கோவிட்-19 மரணங்களைக் குறைத்துக் காட்டும் நோக்கம் மட்டும் காரணமல்ல. முறையான வழிமுறைகள் இல்லாததும் தான்.

கொரோனா : கார்ப்பரேட் – சனாதன வைரஸுக்கு எதிரான இருமுனைப் போராட்டம் தேவை !

குறுந்தொழில்கள் இழுத்து மூடப்பட்டு விட்ட அதே நேரத்தில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கு தடை இல்லாமல் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. அம்பானி, அதானி கும்பலின் நலன்காப்பதையே தாரக மந்திரமாக கொண்டுள்ளார் மோடி.

தடுப்பூசி வணிகம் : மக்களின் மரணத்தில் நடத்தப்படும் கொள்ளை !

அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா 100 சதவீதம் பொது நிதியைப் பெற்று ஒரு தடுப்பூசியை உருவாக்கியது. முன் ஆர்டர்கள் ஒரு டோஸ் ஒன்றுக்கு 31 டாலர்கள் விலையில் 2400 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிற்கு 78 கோடி டோஸ்களை விற்றுள்ளது.

இந்தியப் புரட்சியின் இடிமுழக்கமான நக்சல்பாரி எழுச்சியை நினைவுகூர்வோம் !

நக்சல்பாரிகள் சமரசமற்ற, போர்க்குணம் ததும்பும் உண்மையான கம்யூனிஸ்டுகள்; உழைக்கும் மக்களின் விடுதலைக்காக தமது வாழ்வை அர்ப்பணித்து, எத்தகைய அடக்குமுறையிலும் லட்சியத்தை விட்டுக் கொடுக்காதவர்கள்.

பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு !!

செப்டம்பர் 17, 1861 அன்று பல்வேறு பகுதிகளிலிருந்து 1,500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் புலாகுரிக்கு அருகில் உள்ள நாம்கர் என்னும் கோயிலின் அருகே கூடி போராட்டத்திற்குத் தயாராகினர்.

உலக அளவில் கொரோனாவை மோசமாகக் கையாண்ட தலைவர்களில் மோடி முதலிடம் !

பாசிச மோடி கும்பல், கொரோனா தொற்றின் துவக்கத்தில் இருந்தே, கொரோனாவைக் கட்டுப்படுத்த அறிவியலுக்கு புறம்பான வழியில் பல்வேறு வழிகாட்டுதல்களைக் கொடுத்ததை உலகமே காறி உமிழ்ந்தது.