இந்து ராஷ்டிரத்தை அடித்து நொறுக்குவோம் | தோழர் ரவி வீடியோ

ம.பி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆளே இல்லாமலும் ஆட்சியை கவிழ்த்து, பாஜக ஆட்சிக்கட்டிலில் ஏறிவருகிறது. எனவே இனியும் தேர்தல் ஜனநாயம் என்னும் கேலிக்கூத்தை நம்புவது முட்டாள் தனம்.

மோடியை அம்பலப்படுத்தியது தான் திஸ்தா செதல்வாட் செய்த குற்றம் அதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுபுர் சர்மாவை அம்பலப்படுத்திய ஆல்ட் நியூஸ் பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தபோல்கர், கல்புர்கி, பன்சாரே, கௌரிலங்கேஷ் போன்ற முற்போக்காளர்களை கொலை செய்துவிட்டார்கள் காவி பயங்கரவாதிகள்.

ஸ்டான் சுவாமியை சிறையிலேயே சித்திரதை செய்து கொன்றுவிட்டது அரசு. அடுத்து பலர் சிறையில் சித்தரவதைக்குள் இருக்கிறார்கள். அதவாது மோடி அரசை எதிர்த்து பேசுபவர்கள் அனைவரையும் ஒடுக்குகிறார்கள். அவர்களை பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்று சித்தரிக்கிறார்கள்.

நாட்டின் இசுலாமிய மக்கள் மீது பொய்வழக்குகள், புல்டோசர் நீதிகள் பாய்கின்றனர். காவி பயங்கரவாதிகளால், தாக்குதலுக்குள்ளாகிறார்கள்; கொலை செய்யபடுகிறார்கள்.

மோடி அரசின் கார்ப்பரேட் கொள்கைகளால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து,,, அவர்கள் பயன்படுத்து அதியாவசிய பொருட்களின் விலை விண்ணைமுட்டி வருகிறது. பெட்ரோல் – டீசல் விலை உயர்வு அதை தொடர்ந்து அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. ஜி.எஸ்.டி வரி விதிப்பால் சிறு-குறு தொழில்கள் அழிக்கப்படுவருகிறது.

வேலையில்லாத்திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராடிய இளைஞர்களை அச்சுருத்துவதற்காகவே உ.பி யோகி அரசு புல்டோசர் பேரணி நடத்துகிறது.

ம.பி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆளே இல்லாமலும் ஆட்சியை கவிழ்த்து, பாஜக ஆட்சிக்கட்டிலில் ஏறிவருகிறது. எனவே இனியும் தேர்தல் ஜனநாயம் என்னும் கேலிக்கூத்தை நம்புவது முட்டாள் தன்ம்.

இவை அனைத்தினும் நாம் கூறவருவது என்ன? இந்துராஷ்டிரம் நடைமுறையில் இருக்கிறது. இதனை அடித்து நொறுக்காமல் உழைக்கும் மக்களுக்கு வாழ்க்கை இல்லை என்பதே!

புமாஇமு அமைப்பின் மாநில ஒருங்கிணைப்புக்குழு தோழர் ரவி இந்து ராஷ்டிரத்தின் பாசிச தாக்குதல்கள் பற்றி இந்த காணொலியில் விரிவாக விளக்குகிறார்….

காணொலியை பாருங்கள் ! பகிருங்கள்!!

1 மறுமொழி

  1. அப்ரஹாமிய ராஷ்ட்ரியம் கொண்டு வருவோம் என்று வெளிப்படையாக சொல்லுங்களேன்.

    இந்திய மக்களின் விரோதிகளின் எத்தனையோ சதி திட்டங்கள் அதில் ஒன்று ஹிந்து விரோதம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க