Saturday, July 5, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4174 பதிவுகள் 3 மறுமொழிகள்

தோழர் சம்புகனிடம் கற்போம் || ம.க.இ.க.

சாதி, மதவெறிப் பண்பாடு, சீரழிவுக் கலாச்சாரத்தின் நடுவே அமைப்பின் பத்திரிக்கைகளையும் துண்டறிக்கைகளையும் மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் மத்தியில் எடுத்துச் சென்று பல இளம் கம்யூனிசப் போராளிகளை உருவாக்கியவர் தோழர் சம்புகன்.

கொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்

இந்த கொரோனா மக்களுக்கு ஏற்படுத்தும் துயரத்தைவிட அரசு மக்களுக்கு ஏற்படுத்து துயரம்தான் அதிகம். உழைக்கும் மக்களை கொண்ட மக்கள் நல அரசு உருவானால் மட்டுமே இது போன்ற பேரழிவில் இருந்து உழைக்கும் மக்களை காப்பாற்ற முடியும்

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 16 அமைப்புகளை தடை செய்த தெலுங்கானா அரசு

தடை செய்யப்பட்ட அமைப்புகள் மக்களின் வாழ்வாதாரத்துக்காகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் மோடி அரசின் பாசிசக் கொள்கைகளை எதிர்த்தும் போராடிய ஜனநாயக, புரட்சிகர அமைப்புகளாகும்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிறந்தரமாக அகற்ற கோரும் விதமாகவும், ஓட்டுக்கட்சிகள் மற்றும் அரசை அம்பலப்படுத்தும் விதமாகவும் மக்கள் அதிகாரம் தர்மபுரி மண்டலம், புரட்சிகர கலைக்குழு தோழர்கள் பாடிய பாடலை காணொளி வடிவில் வெளியிடுகிறோம்!

கொரோனா பொருளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு!

இந்திய அரசாங்கம் 2019-ல் உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கிட்டதட்ட ரூபாய் 1.45 இலட்சம் கோடி தள்ளுபடி செய்திருக்கிறது. இந்தியா கடுமையாகப் பொருளாதார இழப்பில் இருக்கும் நிலையில் இந்த நடவடிக்கையை மோடி அரசாங்கம் எடுத்தது.

கொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் ! அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி !

இந்த அபாயகரமானக் காலகட்டத்தில் எதை செய்திருக்கக் கூடாதோ, இந்த காலகட்டத்தில் எப்படி மக்களைப் பாதுகாத்திருக்க வேண்டுமோ, அதே காலகட்டத்தில் மக்களை நரபலி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பிரதமர் தனது மக்கள் கொடூரமான நோய் தொற்றில் சிக்கி சீரழிந்துக் கொத்து கொத்தாக செத்துக் கொண்டிருக்கும்போது 50 நாட்களை தான் சார்ந்த கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் செலவழித்திருக்கிறார்.

கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை : யார் காரணம் ? பிரச்சனை தீருமா ?

அறிவுசார் சொத்துரிமை பொது உரிமையாக இருக்கும் போது பாரத் பயோடெக் என்ற ஒரு கம்பெனிக்கு மட்டும் தயாரிப்புக்கானப் பிரத்யோகமான உரிமம் வழங்கப் பட்டிருப்பது ஏன்? தடுப்பூசி தயாரிப்பதற்கான பிரத்யோகமற்ற உரிமங்களை பல உற்பத்தியாளர்களுக்கு ஏன் வழங்கப்படவில்லை.

ஆபத்தான புதிய வகை கொரோனா : அறிவியலாளர் குழுவின் எச்சரிக்கையை புறக்கணித்த மோடி

இந்த அறிக்கைகையை 2 வாரங்களுக்கு பின்புதான் அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. மேலும், அந்த அறிவிப்பில் அறிவியலாளர்கள் குழு எச்சரித்த “மிகுந்த கவனம் தேவை” என்ற சொற்கள் இடம்பெறவி

தமிழகம் முழுவதும் நடைபெற்ற மே நாள் விழா !

தற்போது ஏற்பட்டுள்ள இந்த கொரோனா ஊரடங்கு காலக் கட்டத்தில் பெரும்பாண்மையான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என்பது நாம் அறிந்த ஒன்று. மேலும், தற்போது நிகழும் இந்த மோடி அரசின் காவி - கார்ப்பரேட்...

இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் என்ன தவறு ஏற்பட்டுள்ளது? || தாமஸ் ஆபிரகாம் || நாகராசு

மற்ற நாடுகளுக்கு தடுப்பூசிகளை உண்மையில் நன்கொடையாக வழங்கிய உலகின் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்: அண்டை நாடுகளுக்கும், ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கும் 10.5 மில்லியன் டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த நாடுகளில் உள்ள மக்கள் அவசரமாக தேவைப்படும் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர் என்ற உண்மையிலிருந்து இது திசைதிருப்பவில்லை.

கம்போடியா : நாட்டு மக்களின் நிலங்களை அபகரித்து சுற்றுச்சூழலை நாசம் செய்யும் அரசு

ஜீன் 2020, உலக வங்கி 93 மில்லியன் டாலரை கம்போடியா நில அனுபோகக் காலதிட்டத்தின் மூன்றாவது கட்டத்திற்கென அறிவித்தது. இந்த முறைமையில் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தப் போதிலும், நில அபகரிப்பு மற்றும் அது ஏற்படுத்திய சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உலக வங்கி உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

போர்கால அடிப்படையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் பொதுத்துறை ஊழியர்கள் !

SAIL Bokaro எஃகு ஆலையிலும், 25 உயர் அதிகாரிகள் உட்பட 145 ஊழியர்கள் இரவு பகல் பார்க்காமல் மருத்துவத் தேவைக்கான ஆக்சிஜன் உற்பத்தி செய்து வருகிறார்கள். மாலை 4 மணியளவில் கூட இத்தொழிலாளர்கள் மதிய உணவினை எடுத்துக் கொள்ளாமல் வேலை செய்து வந்துள்ளனர்.

பெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்

சபரிமலைக்கு மாலை போட்ட சாமிகள் வீட்டிற்கு வந்து பூஜைகளைத் தொடங்குகிறார்கள். அப்போது மந்திரங்களும் சடங்குகளும் நிமிஷாவின் கோபத்திற்கு பின்புலமாக செயல்படுவது கூடுதல் சிறப்பு. உணர்ச்சி குழம்பாக இருந்தாலும் தனது எதிர்ப்பை தெளிவாக திட்டமிடுகிறாள்.

கோவிட் – 19 தடுப்பு மருந்துகளின் அரசியல், பொருளாதாரம் || ஜயதி கோஷ் || கணியன்

செல்வந்த நாடுகள் தடுப்பு மருந்துகளைக் கொள்ளையடிப்பதால் உலகின் பெரும்பாலான நாடுகள் பாதுகாப்பான, முறையான ஒப்புதல் வழங்கப்பட்ட தடுப்பூசியைப் 2022-ஆம் ஆண்டுதான் பெற முடியும் அல்லது சில நேரங்களில் 2024 வரை கூடக் காத்திருக்க நேரலாம்.

‘ஃபோர்பஸ்’ : கொரோனா பெருந்தொற்றில் உயரும் முதலாளிகளின் சொத்து மதிப்பு

ஃபோபர்ஸ் குறிப்பிடும் இந்தத் திடீர் சொத்துக் குவிப்புப் பாய்ச்சல் உலகெங்கும் நடந்து வருகிறது. “கடந்த ஆண்டில் சராசரியாக ஒவ்வொரு 17 மணி நேரத்திற்கும் ஒரு புதிய கோடீசுவரர் உருவாகியிருக்கிறார். மொத்தத்தில், உலகப் பெரும் கோடீசுவரர்களின் சொத்து மதிப்பு முந்தைய ஆண்டை விட 5 இலட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் அதிகரித்திருக்கிறது.”