மோடி அறிவிப்பால் மக்கள் படும்பாடு ! பு.மா.இ.மு தெருமுனைக் கூட்டம்
நாம் வங்கியில் போட்ட பணம், ஏதோ நம் பெயர் போட்டு அக்கவுண்டில் பூட்டி வைத்திருக்கிறார்கள், நாம் சென்றால் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என படித்தவர்கள் கூட நினைக்கிறார்கள். ஆனால், நாம் வங்கியில் போட்ட பணத்தை எடுக்க கூடாது என உத்தரவு போட்டிருக்கிறார் மோடி.
மோடியின் சிலந்தி வலையில் சிக்கும் சிறு வணிகம் – சிறு தொழில் !
சிறு தொழில், சிறு வணிகத்தை நவீனப்படுத்துவது என்ற போர்வையில் அவர்கள் மீதான வரி விதிப்புகளை விரிவாக்கவும் அதிகப்படுத்தவும் திட்டமிடுகிறது, மோடி அரசு.
மண்டியிட்டது யார் ? கருப்புப் பணக் கும்பலா சூரப்புலி மோடியா ?
வருமான வரிச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் மோடி அரசு கருப்புப் பணக் கும்பலிடம் சரணடைந்துவிட்டதைக் காட்டுகிறது.
இந்தியன் வங்கி கொள்ளையில் மோடியின் டிஜிட்டல் இந்தியா – ஆதாரங்கள் !
ஏற்கனவே, ஏ.டி.எம் கடவு எண்களைத் திருடுவது, செல்ஃபோன் பாஸ்வேர்டுகள் திருடுவது எல்லாம் சர்வசாதாரணமாகிவிட்ட நிலையில், இந்தக் கொள்ளையை நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இது எவ்வளவு பெரிய ஆபத்து என மக்கள் உணர வேண்டும்
மக்கள் சேமிப்பை ரத்தமாய் உறிஞ்சும் மோடி ‘அட்டை’ !
பணமற்ற பொருளாதாரம் கருப்புப் பணத்தை, ஊழலை ஒழிக்காது. மாறாக, பொதுமக்களை, சிறு வணிகர்களைப் பன்னாட்டு முதலாளிகள், உள்நாட்டு தரகு முதலாளிகளின் இலாப வேட்டைக்கான தீனியாக மாற்றும்.
சிறப்புக் கட்டுரை : சேலம் உருக்காலையை விழுங்கும் ஜிண்டால் !
ஒரு பொதுத்துறை நிறுவனம்; ஆயிரக்கணக்கான விவசாயிகளின் விளைநிலத்தில் நிற்கும் நிறுவனம்; மக்களின் வரிப்பணத்தில் தொடங்கப்பட்ட நிறுவனம்; ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வியர்வையில் உயர்ந்த நிறுவனம்.
நாளை ஜனநாயக உரிமைகளும் செல்லாக்காசாகும் !
கோடிக்கணக்கான மக்களின் பொதுக்கருத்தைத் தன் விருப்பத்துக்கேற்ப ஒரு பாசிஸ்டால் வளைக்க முடிவது, ரூபாய் நோட்டைச் செல்லாது என்று அறிவிக்கும் பிரச்சினை அல்ல, மக்களின் ஒப்புதலுடன் “ஜனநாயக உரிமைகள் இனி செல்லத்தக்கவை அல்ல” என்று அறிவிக்கப்படுவது தொடர்பான பிரச்சினை.
கேரளாவின் மோடியா பினரயி விஜயன் ?
மலையாள எழுத்தாளரும் நாடக செயற்பாட்டளருமான கமல்ஸி பிராணா (18.12.2016) ஞாயிறு அன்று கைது செய்யப்பட்டிருக்கிறார். செய்த குற்றம் என்ன ? ஃபேஸ்புக் மறுமொழி ஒன்றில் தேசிய கீதத்தை அவமதித்துவிட்டார் என்று குற்றம் சாட்டியிருக்கும் கேரள போலீசு, அவர் மீது 124 ஏ தேசத்துரோக வழக்கு போட்டுள்ளது.
செத்தும் கொடுத்தார் சீதக்காதி – செத்தும் கெடுக்கிறார் ஜெயா !
விரைவிலேயே துதி பாடலின் முதன்மை இடம் சின்னம்மாவிற்கு சென்று விடும் என்றாலும், சின்னம்மா வரும் வரைக்கும் முதலமைச்சர் பணியே அம்மாவின் நினைவை பரப்புவது என்றாகிவிட்டது.
பேசப் பயப்படும் மோடி – கேலிச்சித்திரம்
பாராளுமன்றத்தில் என்னை பேச அனுமதிப்பத்தில்லை - மோடி
அமளியே உங்கள பேச வைக்கத்தான் நடக்குது... வாயை தொறங்க பாஸ்!
சில்லறை வணிகத்தை கொல்லத் துடிக்கும் ரிலையன்ஸ் ஜியோ !
சில்லறை வர்த்தகத்தை ஒழித்துக் கட்டும் ரிலையன்சின் முந்தைய ரிலையன்ஸ் ஃபிரஷ் போன்ற முயற்சிகளை விடவும் தற்போதைய திட்டம் முழு வெற்றியடையும் என்பது அம்பானியின் எதிர்பார்ப்பு.
மோடியின் ராஜகுரு சோ ராமசாமி : சில குறிப்புகள்
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை அவர் எப்போதுமே விட்டுக் கொடுக்காமல் ஆதரித்தற்கும், திராவிட இயக்கம் – தி.மு.கவை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து விமரிசித்தத்ற்கும் பார்ப்பனியத்தால் ஊறிப்போன திமிரெடுத்த கொழுப்புதானே காரணமன்றி வேறு அறமோ குறமோ எதுவுமல்ல.
அம்பேத்கர் தினத்தில் ஆர்.எஸ்.எஸ்-க்கு என்ன வேலை ? களச்செய்திகள்
தற்போது ‘டிசம்பர் ஆறு வெற்றித்திருநாள்’ என்று சுவரெழுத்து மயிலாடுதுறை நகரில் முளைத்திருக்கின்றன. இஸ்லாமியர்கள் கணிசமாக வாழும் பகுதியைத் தேர்ந்தெடுத்து பார்ப்பன இந்து மதவெறியர்கள் குறிவைக்கிறார்கள்.
விதியே என்று வாழ்பவர்களே ! வீதிக்கு வாருங்கள் !! அழைக்கிறார் மோடி !!!
உண்மையில் இது கருப்புப்பணத்தை,கள்ளப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையா? இல்லவே இல்லை. யாரெல்லாம் கருப்புப்பணத்தின் ஊற்றுக்கண்களாக இருக்கிறார்களோ அவர்களுக்காக மோடி அரசு மக்கள் மீது நடத்தும் மாபெரும் தாக்குதல் தான் இந்தச் செல்லா நோட்டு நடவடிக்கை.
அண்ணலும் நோக்கினான் அதானியும் நோக்கினான்
சீதை சுவிஸ் வங்கியில், அனுமன் கையில் பார்ட்டிசிபேட்டரி கணையாழி, ராமன் அம்பை விடுவதோ பாரத வங்கியில்!
என்னடா இது இராமாயணம்?























