Sunday, January 24, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் கார்ப்பரேட் முதலாளிகள் தமிழ்நாட்டிற்கு தட்டம்மை – ரூபெல்லா தடுப்பூசி திட்டம் அவசியமா ?

தமிழ்நாட்டிற்கு தட்டம்மை – ரூபெல்லா தடுப்பூசி திட்டம் அவசியமா ?

-

நான்காவது தொழிற்புரட்சியும், தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசித் திட்டமும்- பாகம் 1

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி போட்டுக் கொண்ட 9-ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவி பூமிகா இரு நாட்களுக்கு முன் உயிரிழந்தார் என நக்கீரன் ஏடு பிப்ரவரி 27, 2017 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.  பெற்றோரின் சம்மதமின்றி குழந்தைகளுக்கு கட்டாயமாக தடுப்பூசி போடுவதாகக் கூறி ஈரோட்டில் பொதுமக்கள் சுகாதாரத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பிப்ரவரி 6ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த தடுப்பூசி திட்டத்தால் எவ்வளவு குழந்தைகள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றிய எந்த செய்தியும் இதுவரை வெளியே வரவில்லை. தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியால் இது போன்ற பல செய்திகள் ’பரபரப்பு’ என்ற தகுதியை இழந்து விட்டன.  ஒருசில சமூக வலைதளப் பகிர்வுகள் கூட தக்க ஆதாரம் இல்லாததால் புரளி என்ற அடிப்படையில் நிராகரிக்கப்படுகின்றன. ஆனால் தடுப்பூசி விவகாரத்தில் ஊடகங்களின் கள்ளமௌனம் முதுகெலும்பைச் சில்லிடச் செய்கிறது.

இந்நோய்கள் ஒருமுறை வந்தால் இயல்பாகவே இந்நோய்க்கிருமிக்கெதிரான எதிர்ப்பணுக்களை உடலே உற்பத்தி செய்வதால் எதிர்காலத்தில் இரண்டாவது முறை இவை வருவது அபூர்வமானது.
ரூபெல்லா போன்ற அம்மை நோய்கள் ஒருமுறை வந்தால் இயல்பாகவே இந்நோய்க்கிருமிக்கெதிரான எதிர்ப்பணுக்களை உடலே உற்பத்தி செய்வதால் எதிர்காலத்தில் இரண்டாவது முறை இவை வருவது அபூர்வமானது.

ஜனவரி 29 ஆம் தேதி தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி குறித்து தவறான தகவல் பரப்பினால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்போவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மிரட்டினார். அடுத்த நாள் தேசிய நாளிதழ்கள் உட்பட அனைத்து பத்திரிகைகள் வாயிலாகவும் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இதே மிரட்டலை விடுத்தது. இத்தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்கள் வழியாக பரப்புபவர்களைக் கண்காணிக்க சைபர் குற்றத்தடுப்புப் பிரிவு போலீசையும் அரசே களத்தில் இறக்கியுள்ளதாக பொது சுகாதார இயக்குநர் மரு. குழந்தைசாமி அறிவித்தார்.

அதுவரை சமூக வலைதளங்களில் இது குறித்து வந்த செய்திகள், எச்சரிக்கைகள் மீது பாராமுகமாக இருந்தவர்களுக்குக் கூட தமிழ்நாடு அரசின் இவ்வறிக்கைகளால் ”ஒரு தடுப்பூசி எதிர்ப்புக்குப் போய் சிறையா?” என்ற கேள்வி எழத் தொடங்கியது.  எனவே இதுகுறித்த கட்டுரை எழுத அரசின் இணைய தளம், பல்வேறு உயிர் அறிவியல் தொழில்நுட்ப பதிப்பகங்களின் இணைய தளங்கள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகள், கவி தடுப்பூசி கூட்டமைப்பு (GAVI VACCINE ALLIANCE), பில் மெலிண்டா கேட் ஃப்வுண்டேஷன், உலக சுகாதார நிறுவனம், USAID, இந்திய குழந்தைநல மருத்துவர்களின் கூட்டமைப்பு, சீரம் இன்ஸ்டியூட் இந்தியா போன்றவற்றின் இணையதளங்கள், அறிக்கைகள், செயல்திட்டங்கள், ஆண்டறிக்கைகள்  மற்றும் பல்வேறு பத்திரிகை செய்திகள், துறைசார் வல்லுநர்களின் கட்டுரைகள்  ஆகியவற்றிலிருந்து ஆதாரங்கள் பெறப்பட்டுள்ளன.

தட்டம்மைரூபெல்லா தடுப்பூசியின் அவசியம் என்ன?

ட்டம்மை மற்றும் ஜெர்மன் தட்டம்மை எனப்படும் ரூபெல்லா போன்ற அம்மை வகைப்பட்ட நோய்கள் தாக்கினால் 3-7 நாட்கள் காய்ச்சல் மற்றும் தோலில் தடிப்புக்கள் ஏற்படும். இந்நோய்கள் ஒருமுறை வந்தால் இயல்பாகவே இந்நோய்க்கிருமிக்கெதிரான எதிர்ப்பணுக்களை உடலே உற்பத்தி செய்வதால் எதிர்காலத்தில் இரண்டாவது முறை இவை வருவது அபூர்வமானது.  இதனால் முதலாளித்துவ நாடுகளில் ஒருவருக்கு ரூபெல்லா வந்தால் அவர் தன் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டுக் குழந்தைகளை விருந்துக்கு அழைப்பார். இதற்கு பேர் ஜெர்மன் மீசெல்ஸ் பார்ட்டி. இது வழியாக நோயைப் பரப்பி இயற்கையாகவே நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்வார்கள்.

இந்தியாவில் தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள தடுப்பூசிகளின் வரிசையில் குழந்தைகளுக்கு முதல் முறை 9 மாதத்திலும் பின்னர் இரண்டு வயதிற்குள் இரண்டாவது முறையும் தட்டம்மை தடுப்பூசி வழங்கப்படுகிறது.  தனியார் மருத்துவமனைகளும் தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி மற்றும் ரூபெல்லாவிற்கான முத்தடுப்பூசிகளை வழங்கி வருகின்றன.  பொதுவாக கர்ப்பிணிப் பெண்களுக்கு அம்மை நோய் ஏற்பட்டால் குழந்தையின் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க ரூபெல்லாவிற்கான தடுப்பூசிகள் பெரும்பாலும் கருத்தரித்தலுக்கு முன் பெண்களுக்கு வழங்கப்படுகிறது.

ஜனவரி 29 ஆம் தேதி தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி குறித்து தவறான தகவல் பரப்பினால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்போவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மிரட்டினார்

இந்தியாவின் தடுப்பூசி திட்டம் ஏற்கனவே முழுஅளவில் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கும் போது தான் பாரிய அளவிலான தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி இயக்கம் நாடு முழுவதும் நடத்தப் போவதாக டிசம்பர் மாதம் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.  இதன் முதற்கட்டமாக தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கோவா, கர்நாடகா, அந்தமான், இலட்சதீவு ஆகிய மாநிலங்களின் 9 மாதம் முதல் 15 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும்  – சுமார் 5 கோடி குழந்தைகள்- தடுப்பூசி பிப்ரவரி 6 முதல் 28 வரை பள்ளிகள் வழியாக கட்டாயமாக வழங்கப் போவதாக நாளிதழ்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வந்தன. இதைத் தொடர்ந்து பல இதழ்களிலும் சமூக வலைதளங்களிலும் இத்தடுப்பூசி குறித்து எதிர்மறைக் கருத்துக்கள் பரவத் தொடங்கியதும், தேசிய நாளிதழ்களும் தமிழ் இந்து போன்ற தமிழ் பத்திரிகைகளும் தடுப்பூசிக்கு ஆதரவாக தலையங்கங்களையும் கட்டுரைகளையும் தீட்டின.

இதில் குறிப்பாக கவனிக்கப்பட வேண்டியது இம்முதற்கட்ட தடுப்பூசி திட்டத்தில் தமிழ்நாடும் கர்நாடகாவும் மட்டுமே பெரிய மாநிலங்கள். மற்றவை குறைந்த மக்கள் தொகை கொண்ட பிராந்தியங்கள். இதில் கர்நாடகாவின் பெரும்பான்மையான தனியார் பள்ளிக்கூடங்கள் பெற்றோர்களுடன் கருத்துக் கேட்கும் சந்திப்புகளை நடத்திய பின்னர் எழுத்துப்பூர்வ ஒப்புதலைக் கேட்டுள்ளனர். அதில் 90%-ற்கும் மேல் எதிர்மறைக் கருத்தை வெளியிட்டதால், பள்ளி நிர்வாகமே இத்திட்டத்தை பள்ளிவளாகங்களில் நடத்துவதற்கு பதில் ஆரம்பசுகாதார நிலையங்களில் நடத்த வேண்டும் என சுகாதாரத் துறைக்கு பரிந்துரை செய்துள்ளன.   அதனால் தற்போதைய நிலவரப்படி கர்நாடக அரசு இத்திட்டத்தை அமுல்படுத்துவதில் அரைகுறை மனதுடன் இருப்பதாகவே செய்திகள் வெளியாகின்றன.

ஆனால் மோடியின் பினாமி – ஓபிஸ், ஏபிஎஸ் அரசாங்கங்கள், தமிழ்நாட்டு மக்களை அழிக்க துணிந்து இறங்கியதாலோ என்னமோ, எங்குமே பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தைப்பட்டதாகவோ, பெற்றோர்களின் அச்சத்தை போக்க அறிவியல்பூர்வமான விளக்கத்தை அளித்தாகவோ ஆதாரமே இல்லை. இதுகுறித்தான அரசாணைகளோ, சுற்றறிக்கைகளோ அரசாங்க இணையதளத்தில் இதுவரை தரவேற்றவுமில்லை. ஆனால் இதற்கெதிராக பேசினால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்போவதாகவும், அனைவரும் கண்காணிக்கப்படுவதாகவும் பத்திரிகை செய்திகள் வாயிலாக அரசு தரப்பிலிருந்து மிரட்டல்கள் மட்டும் விடப்படுகின்றன. மேலும் இத்திட்டத்தை சுகாதாரத்துறையும், சுகாதார அமைச்சகமும் நடைமுறைப்படுத்தும் விதம் சிறிதளவாவது மூளை செயல்பாட்டில் இருக்கும் எவராலும் செரிக்க முடியாததாக உள்ளது.

தமிழ்நாட்டில் 1.8 கோடி குழந்தைகளுக்கு 22 நாட்கள் தடுப்பூசி போட மொத்தம் 1000 மருத்துவர்களும் 12,000 செவிலியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பள்ளிக்கூடமும் 3 அறைகளை இவர்களுக்கு ஒதுக்க வேண்டும். தடுப்பூசி போடுவதற்கு முன் 9-15 வயதிலான குழந்தைகளை முதல் அறையில் உட்கார வைத்து 15-45 நிமிடங்கள் இத்தடுப்பூசியின் வல்லமை குறித்து விளக்கமளிக்கப்படும். அதன் பின்னர் அவர்கள் அடுத்த அறைக்கு இட்டு செல்லப்பட்டு ஊசி போட்டபின்னர், கையில் மை வைக்கப்பட்டு மூன்றாவது அறையில் 15 நிமிடம் கண்காணிக்கப்படுவர். காய்ச்சலுக்கான மாத்திரை வழங்கப்படும். ஏற்கனவே காய்ச்சல் இருந்தாலோ அல்லது வராமல் இருந்தாலோ, மோப்-அப் டிரைவ் எனப்படும் துடைத்தழித்தல் இயக்கத்தின் போது அவர்களுக்கும் போடப்படும்.  இப்படி 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களுக்கு போடப்படும் தடுப்பூசி குறித்து அவர்களுக்கே விளக்கமளித்து ஊசியையும் போட்டுவிடும் நிகழ்வுகள் உலகில் எங்காவது நடந்ததுண்டா?

தடுப்பூசியை எதிர்ப்பவர்கள் எழுப்பும் எச்சரிக்கையும் கேள்விகளும்

 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களுக்கு போடப்படும் தடுப்பூசி குறித்து அவர்களுக்கே விளக்கமளித்து ஊசியையும் போட்டுவிடும் நிகழ்வுகள் உலகில் எங்காவது நடந்ததுண்டா?
15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களுக்கு போடப்படும் தடுப்பூசி குறித்து அவர்களுக்கே விளக்கமளித்து ஊசியையும் போட்டுவிடும் நிகழ்வுகள் உலகில் எங்காவது நடந்ததுண்டா?

திர்ப்பாளர்கள் பொதுவாக பாரிய அளவிலான இத்தடுப்பூசி ஏற்படுத்தப்போகும் பின்விளைவுகள் குறித்து முதன்மையாக அச்சத்தை வெளியிடுகின்றனர். குறிப்பாக ஆட்டிஸம் போன்ற நீண்டகால பாதிப்புகளும் ஒவ்வாமை போன்ற உடனடி பாதிப்புகளும் ஏற்படும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கின்றனர்.  இத்தடுப்பூசி ஏற்கனவே கிளினிக்கல் ட்ரயல் எனப்படும் மருத்துவ முன்னோட்டம் செய்யப்பட்டது என்பதற்கான சான்றிதழை தமிழக அரசு வழங்க வேண்டும் என்கின்றனர். அதாவது நம் குழந்தைகள் சோதனை சாலை எலிகளல்ல என்பதை நிறுவ அரசாங்கத்தைக் கோருகின்றனர்.

அடுத்த முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்று அன்னிய நிறுவனங்களின் இலாபத்திற்காக இத்தடுப்பூசி போடப்படுகிறது என்பது தான்.  கடைசி கேள்வி தவிர மற்றவற்றிற்கான பதில்கள் தடுப்பூசி ஆதரவு அலோபதி மருத்துவர்களின் கட்டுரைகளில் நிரம்பி வழிகின்றது. கடைசி குற்றச்சாட்டான அன்னிய நிறுவனங்களின் இலாப வேட்டை என்னும் குற்றசாட்டை அவர்கள் எதிர்கொள்ளும் விதம் இன்னும் அலாதியானது.

இத்தடுப்பூசியை உலகிலேயே ஒரே ஒரு நிறுவனம் மட்டும் தான் கடந்த 17 ஆண்டுகளாக தயாரிக்கிறது. சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா என்கிற இந்திய தரகு முதலாளியின் நிறுவனம் தான் அது.  உலக சுகாதார நிறுவனத்திடம் 2000-த்தில் பிரீ-குவாலிஃபைட் எனப்படும் முன் – அங்கீகாரம் பெற்ற தடுப்பூசி இது.  ஒரு டோஸ் ரூ. 125 விலையுள்ள இம்மருந்தை வெறும் ரூ. 25-ற்கு அரசிற்கு வழங்கும் அளவிற்கு நல்லுள்ளம் படைத்தவர் இந்நிறுவனத் தலைவர் பூனாவாலா.

மேலும் உலக சுகாதார நிறுவனத்துடன் இந்நிறுவனம் போட்டுக் கொண்ட ஒப்பந்தப்படி கவி நாடுகள் எனப்படும் 49 ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு இம்மருந்தை யூனிசெஃப் வழியாக குறைந்த விலைக்கு எதிர்காலத்தில் வினியோகிக்கப்போகிறது. போதாக்குறைக்கு இதே தடுப்பூசியை சீரம் நிறுவனத்திடம் யூனிசெஃப் வாங்கி வியட்நாம் அரசு வழியாக வியட்நாம் குழந்தைகளுக்கு ஏற்கனவே கொடுத்துள்ளது. அப்படியிருக்கையில் தடுப்பூசி எதிர்ப்பாளர்களின் பெரும்பாலான அச்சங்களுக்கும் கேள்விகளுக்குமான விடைகள் ஏதோ ஒரு விதத்தில் கிடைத்துவிட்டது என நடுநிலையாளர்கள் நினைக்கலாம் அல்லவா? எனில், இவ்வளவு எளிமையான விடைகளை ஏன் தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்டு மக்களின் மிகசாதாரண அச்சத்தைக் கூட போக்க முன்வரவில்லை என்பதும் எதிர்மறைக் கருத்துக்களுக்கு இவர்கள் ஏன் அஞ்சுகிறார்கள் என்பதுமே இங்கு விவாதிக்கப் போகும் முக்கியமான பொருட்கள்.

(தொடரும்)

செய்தி ஆதாரம்:

ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொண்ட பள்ளி மாணவி பலி
தடுப்பூசியும் அதன் பின் இருக்கும் அரசியலும்…!
Gates Foundation may fund Pune institute
Bill & Melinda Gates Foundation Vaccine Empire on Trial in India
Calls in India for legal action against US charity
“Mass Sterilization”: Kenyan Doctors Find Anti-fertility Agent in UN Tetanus Vaccine
‘Can’t penalise US NGO for violating drug trial norms’
GAVI – The Vaccine Alliance
Gates Foundation continues to support national health mission, no links terminated: Govt
‘Conflict of interest’: NHM panel raises questions on Bill Gates Foundation
Nigeria: WHO Begins Vaccination of 4.7 Million Children in North-East

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க