சூரத்: மோடியின் மண்ணில் ஜி.எஸ்.டி வரியை எதிர்த்து இலட்சம் பேர் பேரணி !
மோடியின் பக்தர்களான குஜராத் வணிகர்களும் தற்போது நேரில் சிக்கினால் மோடியின் கழுத்தைப் பிடிக்கும் அளவிற்கு கடுங்கோபத்துடன் இருக்கின்றனர்.
திமுக அரசின் கார்ப்பரேட் ஆதரவு திட்டமும், RSS-BJP-யின் தொழிற்சங்கப் பிரிவான BMS-ன் எதிர்ப்பும்!
பாசிச பாஜக-வை முறியடிப்பதுதான் இன்று நமது இலக்கு; அதனால் திமுக உள்ளிட்ட மாநில கட்சிகளை விமர்சித்தால் பாஜக உள்ள வந்துவிடும் என்று, திமுக அரசின் கார்ப்பரேட் நலத் திட்டங்களை எதிர்க்காமல் விட்டால் BMS போன்ற பாசிச சக்திகள்தான் வளர்ச்சியடையும்.
ஆஸ்திரேலியாவில் மோடியை எதிர்த்து போராட்டம்
அவர்கள் ஏந்தியிருந்த பதாகைகளில், 'மோடி உங்கள் கரங்களில் ரத்தம் தோய்ந்திருக்கிறது', 'பொய் ஒருபோதும் உண்மையாகாது', 'தவறு எப்போதும் சரியாகாது', 'தீமை நல்லதாக மாறாது' என்று எழுதப்பட்டிருந்தன.
ஐ.ஐ.டி கோட்டைக்குள்ளே APSC ஆர்ப்பாட்டம் – படங்கள்
இன்று 2.6.2015, சென்னை ஐ.ஐ.டி அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட மாணவர்கள் ஐ.ஐ.டி உள்ளேயே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதை முடக்குவதற்கு ஐ.ஐ.டி நிர்வாகம் மறைமுகமாக பல்வேறு முயற்சிகளை செய்தது - ஆர்ப்பாட்ட படங்கள்
மோடி ஒரு முகமூடி – சென்னை கூட்டம் – தோழர் மருதையன் உரை – ஆடியோ
சென்னையில் நடைபெற்ற “மோடி : வளர்ச்சி என்ற முகமூடி” நூல் வெளியீட்டு விழாவில் தோழர் மருதையன் ஆற்றிய உரையின் ஆடியோ பதிவு.
ஒடிசா: பா.ஜ.க ஆட்சியில் அதிகரித்து வரும் பெண்கள் மீதான பாலியல் கொடூரங்கள்!
“கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 44,000 பெண்கள் மற்றும் குழந்தைகள் காணாமல் போயுள்ளனர் என முதலமைச்சரே ஒப்புக்கொண்ட ஒரு மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்காதது பெண்களுக்கு எதிரான அட்டூழியம்”
தீவிரமடையும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவல்: வேடிக்கை பார்க்கும் தி.மு.க.
இன்றைக்குத் தமிழ்நாட்டில் தலித் மக்கள் மீதும் இஸ்லாமிய சிறுபான்மையின மக்கள் மீதும் அதிகரித்துவரும் அடக்குமுறைகளுக்கு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலே காரணமாகும். குறிப்பாக, சாதிய சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவி இருப்பதன் விளைவாகவே தலித் மக்கள் மீது சாதிய தாக்குதல்கள் தீவிரமடைகின்றன.
நந்தினியைக் கொன்ற இந்து முன்னணி – ஆவணப்படம்
பதினேழே வயதான ஒரு சிறுமியின் கனவுகளும் அவளது பெற்றோரின் நிறைவேறாத ஆசைகளும் ஏமாற்றங்களும் மட்டுமின்றி ஆதிக்க சாதித் திமிரும் இந்து பயங்கரவாத வெறியின் ஆணவமும் அந்தக் காணொளித் துண்டின் ஒவ்வொரு காட்சியிலும் உறைந்து கிடக்கின்றன.
தண்டவாளத்தை புதுப்பித்து விட்டு ரயில்களை தனியாருக்கு அளிக்கும் மோடி அரசு
நமது வரிப்பணத்தில் அரசு தண்டவாளம் போட, தனியார் முதலாளிகள் அதில் இரயிலை விட்டு நம்மிடமே கொள்ளை இலாபம் வைத்துச் சுரண்டுவார்கள். அதுதான் இந்த தண்டவாளப் புதுப்பிப்புத் திட்டம்.
எதுக்குடா இங்க ரத யாத்திரை ? ம.க.இ.க பாடல்
ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இர(த்)த யாத்திரையின் நோக்கத்தையும், இராம இராச்சியத்தின் இரகசியத்தையும் அம்பலப்படுத்துகிறது மகஇகவின் இப்பாடல் வீடியோ
சோபியாவின் நான்கு சொற்கள் – அடக்கப்படும் தமிழ் மக்களின் பெருங்குரல் !
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னால், எட்டுவழிச் சாலைக்கு ஆதரவாக யாரேனும் வாய் திறந்தாலே நடக்கும் கைதுகளுக்குப் பின்னால்…சோபியாவின் ‘பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக’என்ற நான்கு சொற்கள் எதை வெளிப்படுத்துகின்றன?
ஓசூர் விவசாயி சேகர் தற்கொலை !
தனது நிலத்தைச் சுற்றியுள்ள பலரும் நிலத்தை பிளாட் போட்டு விற்றுவிட்ட நிலையிலும் விவசாயத்தை கைவிடக்கூடாது என்று உறுதியுடன் இருந்துள்ளார் சேகர். தான் ஒரு விவசாயி என்பதில் பெருமிதம் கொண்டிருந்தார். ஆனால் இன்று நெருக்கடி தாளாமல் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
மணிப்பூர்: இரண்டு ஆண்டுகளைக் கடந்து தொடரும் பாசிச கும்பலின் நரவேட்டை!
தற்போது வரை வன்முறை தாக்குதலில் 260-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 70,000-ரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சொந்த நாட்டிற்குள்ளாகவே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். மருந்து, நிவாரண பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
விவசாயிகளின் வாழ்வைப் பறிக்கும் மின்திட்டங்கள்!
ஒரிசாவிலும் சட்டிஸ்கரிலும் பழங்குடியின மக்களை விரட்டியடித்துவிட்டு கனிமவளங்களைக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகள், விதர்பாவில் விவசாயிகளின் அவலத்தை மூலதனமாகக் கொண்டு கேள்விமுறையின்றிக் கொள்ளையடித்து வருகின்றனர்.
அதானியின் லஞ்ச ஊழல்: அம்பலமாவது அதானியின் மின்சாரத்துறை ஆதிக்கம்
பத்தாண்டுகால பாசிச ஆட்சியில் இந்திய உழைக்கும் மக்களை உறிஞ்சிக் கொழுத்து வளர்ந்த அதானி குழுமம், இன்று உலகின் பல நாடுகளில் தனது ஆக்டோபஸ் கரங்களை விரிவுப்படுத்தி வருகின்றது.



















