Friday, October 30, 2020
முகப்பு கட்சிகள் பா.ஜ.க சேலம் சிவராஜ் வைத்தியரின் எழுச்சி - மோடியின் வளர்ச்சி !

சேலம் சிவராஜ் வைத்தியரின் எழுச்சி – மோடியின் வளர்ச்சி !

-

மோடி – வாலிப வயோதிக அன்பர்களே.

முன் குறிப்பு – இந்த பதிவினால் லாட்ஜ் டாக்டர்கள் மனம் புண்பட்டாலோ அல்லது மோடி பக்தர்கள் மனம் புண்படாமல் போனாலோ அது எங்களை அறியாமல் செய்த பிழையாக கருதி மன்னிக்கவும்.

சில நாட்களாக நாம் வாசிக்கும் பெரும்பாலான பத்திரிக்கைகள் மோடி புகழ்பாடுவதையே வேலையாக வைத்திருக்கின்றன. தமிழ்நாட்டில் மோடி அலை வீசுவதாக தந்தி டிவியில் ஒருவர் செய்தி சொல்கிறார். பஸ் ஸ்டாண்டு கக்கூசில் நாற்றம் வீசுகிறது என்பதை அந்தப் பக்கம் போன உடனே கண்டுபிடிக்கிறோம் அல்லவா. அதுபோல மோடியை திருச்சியில் பார்த்தவுடன் அந்த செய்தியாளர் மோடி அலை வீசுவதை கண்டுணர்ந்துவிட்டார்.

மோடி
மோடியாரிடமும் எழுச்சிக்கான வழியை நீங்கள் கேட்கக்கூடாது

மோடி திருச்சிக்கு வந்த அன்று நான் தஞ்சைக்கு கிளம்பியிருக்க வேண்டும். அன்றைய தந்தி டிவி செய்தியில் மூன்று லட்சம் பேர் திருச்சிக்கு வந்திருப்பதாக சொல்லிவிட்டார்கள். அத்தனை பேர் திருச்சிக்கு வந்திருந்தால் அவர்கள் சிறுநீர் கழிக்கக் கூட அங்கு வழி கிடையாது. அதனால் ஊர் நாறியிருக்குமோ எனும் அச்சத்தில் பயணத்தை ரத்துசெய்ய வேண்டியதாகிவிட்டது. இல்லாவிட்டால் மோடி போனாலும் நாற்றம் போகவில்லை என ஃபேஸ்புக்கில் எழுதி தெய்வ நிந்தனை குற்றத்துக்கு ஆளாகியிருப்பேன்.

மோடியை உங்களுக்கு ஏன் பிடிக்கிறது என அவரது ஆதரவாளர்களிடம் கேட்பதை ஒரு வழக்கமாகவே வைத்திருக்கின்றன சில துர்சக்திகள் (ஷக்தி என உச்சரித்தல் ஷேமகரமானது). வோடஃபோன் நாயைக் கூடத்தான் பலருக்கு பிடிக்கிறது, அவர்களிடத்தில் போய் உங்களுக்கு ஏன் பிடிக்கிறது என கேட்பீர்களா?

லாட்ஜ் டாக்டர்களை எதற்காக நோயாளிகள் அணுகுகிறார்கள்? வளர்ச்சி, எழுச்சி மற்றும் சக்தி ஆகியவற்றைப் பெறுவதற்காகவே. அது போலவே மோடியையும் வளர்ச்சி, எழுச்சி மற்றும் சக்தி ஆகிய காரணங்களுக்காவே நோயாளிகள் ச்சீசீ… பக்தர்கள் ஆதரிக்கிறார்கள். லாட்ஜ் டாக்டர்கள் வளர்ச்சியை சாதிப்போம் என கிடைக்கும் ஊடகங்களில் எல்லாம் சொந்தக் காசில் ஓயாமல் கூவுகிறார்கள். மோடியாருக்காக வைத்தியசாலையில் முதலாளிகள் கூவ வைக்கிறார்கள்.

எழுச்சியையும் சக்தியையும் எங்ஙனம் சாத்தியமாக்குவோம் என லாட்ஜ் டாக்டர்கள் ஒருபோதும் சொல்வதில்லை, அது ரகசியம். உங்களுக்கு சக்தி வேண்டுமென்றால் வைத்தியத்துக்கு போவதுதான் வழி. அதுபோலவே மோடியாரிடமும் எழுச்சிக்கான வழியை நீங்கள் கேட்கக்கூடாது. ஒன்று அவர் முக்திக்கு வழிகாட்டும் சாமியாராவார் அல்லது சக்திக்கு வழிகாட்டும் டாக்டராவார் என மறுபடியும் ஒரு ச்சீசீ.. தலைவராவார் என அவரது ஜாதகத்திலேயே இருக்கிறது (நன்றி – தினகரன் வசந்தம்). ஆகவே மோடியாராலும் சக்தியை மீட்டுத் தர முடியும், என்ன பாதிப்புக்கு தக்கவாறு மூன்று மாதத்தில் இருந்து ஒரு வருடம் வரை ஆகலாம் (ஒரே மாதத்தில் குணமாக்குவதாக சொல்லும் போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்). வெளிநாட்டில் இருப்போர் இணைய வழியாகவும் சக்தியைப் பெறலாம்.

லாட்ஜ் டாக்டர்கள் தங்களைப் பற்றி தாங்களேதான் பேசுவார்கள், தங்களது கேள்விகளை தங்கள் ஆட்கள் வாயிலாக கேட்க வைத்து பதில் சொல்வார்கள். அவர்கள் பொது விவாதத்துக்கு எப்போதும் தயாராக இருப்பவர்கள் அல்லர். அந்த நேரத்தில் இன்னுமிரண்டு நோயாளிகளின் தூக்கத்தில் சக்தி வீணாகும் பிரச்சனையை சரி செய்யலாமே எனும் நல்லெண்ணம்தான் காரணம். அதுபோலத்தான் மோடியாரும்… அவர் சிங்கிளாகவே சவால் விடுவார். அவர் விரும்பும் கேள்விகளைக் கேட்கும் அர்ணாப் கோஸ்வாமியிடம் மட்டும் பேட்டி தருவதும், குஜராத் கலவரம் என ஆரம்பிக்கும் கேள்வியை கரண் தாப்பர் கேட்டால் தெறித்து ஓடுவதும் இந்த அடிப்படையில்தான். அதனை கோழைத்தனம் என கருதலாகாது.

உலகில் ஆயிரக்கணக்கான வியாதிகள் இருக்க, இந்த லாட்ஜ் டாக்டர்கள் ஆண்மைக் குறைவுக்குக்கு மட்டும் வைத்தியம் செய்வார்கள். சேலம் சிவராஜ் சிவக்குமார் டிவியில் அதட்டி, கெஞ்சி, அழுது மன்றாடுவது எதற்காக? இந்த பாழாய்போன மனிதப் பிறவிகள் கரப்பழக்கத்தால் தங்கள் வாழ்வை வீணாக்கிவிடக்கூடாது என்பதற்காகத்தானே!! அவரிடம் “நீங்கள் ஏன் மலேரியாவுக்கு வைத்தியம் செய்வதில்லை” என உங்களால் கேட்க இயலுமா? அதுபோலத்தான் மோடியும், அவர் பாகிஸ்தானுக்கு சவால் விடுகிறார் என்றால் அவர்கள் அதற்காகவே பிறவியெடுத்தவர்கள். “பலன் பெற்றோர்” பாராட்டுகிறார்களா என்று மட்டும் பாருங்கள், அதை விட்டு விட்டு அவர் ஏன் இதைப் பேசவில்லை அதைப் பேசவில்லை என குற்றம் சொல்லாதீர்கள்.

ராஜ் டிவியில் சிவராஜ் வைத்தியர் பேசும்போது மிரட்டலாக பேசுவார். சுய இன்பம், வயது மூத்த பெண்களிடம் உறவு இன்னபிற சமாச்சாரங்களை வைத்து அப்படி செய்பவர்களை பயங்கரவாதிகளாக மாற்றிவிடுவார். மோடியோ பாகிஸ்தான் பயங்கரவாதிகளை வைத்து மிரட்டுவதன் மூலம் பார்க்கும் முசுலீம்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக மாற்றிவிடுவார். பயமும், அச்சமும் எந்த அளவுக்கு இவர்களால் ஊதப்படுகிறதோ அந்த அளவுக்கு லாட்ஜ்களிலும், இணையத்திலும் கியூ வரிசை சாதனை படைக்கும்.

சேலம் சிவராஜ் சிவகுமார் வைத்தியர்
சேலம் சிவராஜ் சிவகுமார் வைத்தியர்

லாட்ஜ் டாக்டர்களுக்கும் மோடியாருக்கும் இவ்வளவு ஒற்றுமையிருக்கும்போது தமிழாட்டில் மோடியை மட்டும் ஏன் இந்த கம்யூனிஸ்டுகள் கரித்துக் கொட்டுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை. உங்களைப் பார்த்து கேட்கிறேன், உங்களில் யாராவது ஒருவர் லாட்ஜ் டாக்டர்களுக்கு எதிராக போராடியிருக்கிறீர்களா?? பேப்பரைத் திறந்தால் ஸ்ரீ மருத்துவமனை சாதனை, டாக்டர் ராஜதுரை சாதனை என தினசரி விளம்பரம் வருகிறது. அது என்ன சாதனை என ஒரு குழுவாவது ஆராய்ச்சி செய்திருக்கிறீர்களா? அந்த நியாய தர்மத்தை மோடியிடமும் காட்டவேண்டாமா… குஜராத்தில் வளர்ச்சியை சாதித்தார் என்றால் நம்பித் தொலையாமல் அதென்ன புள்ளி விவரத்தை நோண்டும் கெட்ட பழக்கம்? உள்ளூர் எழுச்சி நாயகர்களுக்கு எதிராக குரல் கொடுக்க முடியாத உங்களுக்கெல்லாம் தேசிய வளர்ச்சி நாயகனுக்கு எதிராக குரல் கொடுக்க எந்த தார்மீக உரிமையும் இல்லை என்பதை இந்த தருணத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.

கொஞ்சம் தமிழ் ஊடகங்களைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள். அவர்கள்தான் பழனி டாக்டர் காளிமுத்துவை வளர்த்து விட்டார்கள், சேலம் சிவராஜ் சிவகுமாரையும் வளர்த்து விட்டார்கள். இப்போது மோடியை வளர்க்கப் போராடுகிறார்கள். என்ன, அப்போது செய்தியை விளம்பரமாக வெளியிட்டார்கள். இப்போது விளம்பரத்தை செய்தியாக வெளியிடுகிறார்கள். மற்றபடி அவர்கள் கடமையில் இருந்து கடுகளவும் தவறவில்லை. அவர்கள் லாட்ஜ் டாக்டர்களுக்கு எதிரான செய்திகளை எப்படி வெளியிடாமல் இருந்தார்களோ அப்படியே மோடிக்கு எதிரான செய்தியையும் அமுக்கி வைக்கிறார்கள். அந்த நியாய உணர்வு உங்களிடம் இல்லையே?

இப்படியே இழுத்துக் கொண்டிருந்தால் மோடியாரை லேகிய டாக்டர்களுக்கு இணையானவராக நீங்கள் கருதிவிடக்கூடும். அந்த பாவம் எனக்கெதற்கு? ஆகவே அவர் அந்த டாக்டர்களை விட எப்படி உயர்ந்தவர் என விளக்கி விடுகிறேன். லாட்ஜ் டாக்டர்களது விளம்பரங்களைப் பாருங்கள். இருபதாண்டுகளாக அவர்களது விளம்பர ஸ்டைல் மாறவேயில்லை. தஞ்சையில் மகாலிங்கம் எனும் மூல பவுந்திர மருத்துவர் இன்னமும் சுவரெழுத்தை நம்பியே காலம் தள்ளுகிறார். நான் வார இதழ்கள் வாசிக்க துவங்கிய காலத்தில் இருந்து இன்று வரை விளம்பரத்தில் சிவராஜ் சிவகுமார் படம் மாறவேயில்லை. இவ்வளவு ஏன், பேருந்து நிலையங்களில் ஒட்டப்பட்டிருக்கும் விரை வீக்க நோட்டீஸ் படமாவது கடந்த முப்பது ஆண்டுகளில் மாறியிருக்கிறதா? ஆனால் மோடியைப் பாருங்கள், காக்கி டவுசரில் ஆரம்பித்த அவரது ஆடையலங்காரம் இப்போது வந்தடைந்திருக்கும் நவீனத்தைப் பாருங்கள். தலைமுடி மாற்ற அறுவை சிகிச்சை தந்த இளமை, தாடியில் இருக்கும் தேஜஸ் இதெல்லாம் நூறு காளிமுத்து வந்தாலும் ஈடு செய்ய முடியாதது.

சிவராஜாவது டிவியில் அவ்வப்போது கோபப்படுகிறார். ஆனால் மோடியோ தனக்கு விசா கொடுக்காத அமெரிக்கா மீதோ இங்கிலாந்து மீதோ எப்போதாவது கோபப்பட்டதை பார்த்ததாக எவனாவது சொல்லமுடியுமா? தன் உயிர் தொண்டர் மாயா கோட்னானியின் தூக்கு தண்டனைக்கு அப்பீல் செய்து சட்டபூர்வமாகவும், இங்கிலாந்து கம்பெனிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு சலுகை கொடுத்து அகிம்சா வழியிலும்தானே தன் விசாவுக்காக அவர் போராடுகிறார்? அந்த தியாக தீபத்தை ஆதரிக்க உங்களுக்கு ஏன் மனம் வரவில்லை? உள்ளூர் லேகிய டாக்டரெல்லாம் எல்லா மாவட்டத்துக்கும் கம்பீரமாக விஜயம் செய்யும்போது தேசிய நாயகனுக்கு அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் போக வழியில்லாதிருப்பது உங்களுக்கு மனசாட்சியை உலுக்கவில்லையா?

நாயை சுருக்கு வைத்து பிடிப்பதுபோல குழந்தைகளை பிடித்து கொன்றார்கள், கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து எடுத்த குழந்தையை வெட்டிக்கொன்றார்கள், வீட்டுக்குள் மின்சாரம் பாய்ச்சி குடும்பத்தையே கொன்றார்கள் என இன்னமும் பத்து வருடத்துக்கு முன்னால் நடந்த கதையையே சொல்லிக் கொண்டிருக்காமல் இந்தியாவின் “எக்ஸ்ட்ரா பவருக்கு” என்ன வழி என்று பாருங்கள். வீரியத்தை விரும்புபவன் சிட்டுக் குருவிக்காக கவலைப்படலாமா?

ஆகவே வாலிப வயோதிக அன்பர்களே உங்கள் ரகசிய வியாதிகளுக்கு அணுகவேண்டிய முகவரி,

டாக்டர் நமோ,
சனாதனா கிளினிக்.

(டாக்டரின் ஊர்வாரியான விஜயத்தைப் பற்றி அறிய பிரபல தினசரி மற்றும் வார இதழ்களைப் பாருங்கள். எங்கள் சிறப்பு நிகழ்ச்சிகளை எல்லா பிரபல டிவிக்களிலும் காணத்தவறாதீர்கள்).

– வில்லவன்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. னாஙல்லாம் ஸ்கூல் பசங்க,ந்த லேகியம் விக்கறது,அந்தமாதிரி டி விநிகழ்சி பாக்குரது,அதுக்கு டீட்டைலு போடுர அளவுக்கு எங்ககிட்ட சரக்கும் இல்ல, அதுல பி எச் டி அளவுக்கு ஆறாச்சி பண்ண நேரமுமில்ல.நேரடி பதில தில்லா போடனும்.
  மோடி குஜராத் கலவரத்தை தடுக்கவில்லை… மோடி முஸ்லீம்களுக்கு எதிரானவர்… மோடி முஸ்லீம்களின் ரத்தம் குடிப்பவர்… என்று விதவிதமாக பரப்புரை செய்பவர்களுக்கு ம், மோடியை மதவாதியாக எதிர்ப்பவர்களுக ்கும் ஒரே கேள்விதான்…
  பதினைந்து வருடமாக மோடி ஆளும் குஜராத்தில் இப்போது ஒரு முஸ்லீம்கூட இல்லாமல் முற்றிலும் கொன்றொழிக்கப்பட ்டு அது சுத்தமான இந்துத்வா மாநிலமாக மாற்றப்பட்டுவிட ்டதா என்ன?…

  y this kolaveri…….kool down

  • Even muslims in gujarat are voting for modi. For the last 10 years there is not even a riot based on communal principles. If hundreds of people from other communities die this websites will not mention the news, let alone condemning that.

   They will condemn only if these is a loss of blood( Muslims) and will not care if there is a loss of tomato sauce ( non Muslims)

  • //பதினைந்து வருடமாக மோடி ஆளும் குஜராத்தில் இப்போது ஒரு முஸ்லீம்கூட இல்லாமல் முற்றிலும் கொன்றொழிக்கப்பட ்டு அது சுத்தமான இந்துத்வா மாநிலமாக மாற்றப்பட்டுவிட ்டதா என்ன?…//

   இந்த ஒற்றை வாக்கியத்தில் இருந்தே மோடி ஆதரவாளர்களின் மனநிலையை புரிந்துகொள்ளலாம். மூன்றாயிரம் பேர் கொல்லப்பட்டது பற்றியெல்லாம் அவர்களுக்கு கொஞ்சமும் கவலையில்லை. மத்தெவனெல்லாம் உயிரோட இருக்காங்கல்ல அப்புறமென்ன எனும் அலட்சியமான அர்த்தம்தான் அதிலிருக்கிறது.

   • ”2002-ம் ஆண்டு நடந்த வன்முறையில் பலியானோரின் எண்ணிக்கை, ‘2000… 3000’ என்றெல்லாம் மீண்டும் மீண்டும் பொய்யாகத் திரித்துக் கூறப்படுகிறது. ஆனால், கணக்கெடுப்பின்படி அந்த வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 856 பேர்தான். இதில் 254 பேர் இந்துக்கள். ஆக, இறந்த அனைவருமே இஸ்லாமியர்கள் அல்ல. இந்த உண்மைகளை மறைத்துவிட்டு நரேந்திர மோடிதான் அந்த வன்முறைகளை முன்னின்று நடத்தினார் என்று சொல்வது பொய்ப் பிரசாரம். அந்தச் சம்பவத்துக்கும் பா.ஜ.க-வுக்கும் மோடிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை!’ (ஆதாரம்: Census 2011, Reserve Bank of India, National Sample Survey Organisation, The Economic Times, Narendra Modi: The Man, The Times – Nilanjan Mukhopadhyay) @ வானதி ஸ்ரீனிவாசன்

    • Hello Man, Modi has shown Green Signal to Kill Indian citizen on 2002 at Gujarati.

     His own police gave this confession at court!!!

     His own minister is also involved in this genocide at Gujarat.

     Now she is in the jail!!!

     • K.Senthil kumaran…..If any one in your family was killed in 2002 Gujarath riot my sincere sympathy and condolences. May the almighty save all Indian citizens from those all sort of evils.

      Keep up your good work! after 6 days still the comments are going up because of you. Well done. But try giving strong points as answer will make it more catchy.

      I am not a BJP supporter but as I said before, I Give chance to all. All are equal except who commit violence,Terrorism,Genocide,Crime in my court(I don`t even trust IPC).

      I respect all!! Thanks again K.Senthil kumaran!!!

   • கடந்த, 1947ம் ஆண்டு வங்கக் கலவரத்தில், 5,000 பேர் கொல்லப்பட்டனர். 1964ல் ரூர்கேலா கலவரத்தில், 2,000 பேர்; 1987ல் ராஞ்சியில், 200 பேர்; 1969ல் ஆமதாபாத்தில், 512 பேர் பலியாகினர். 1970, 1985ல் பிவந்தி கலவரத்தில், 226 பேர்; 1980ல் மொராபாத் கலவரத்தில், 2,000 பேர்; 1983ல் அசாம் கலவரத்தில், 5,000 பேர்; 1984ல் டில்லி கலவரத்தில், 2,738 பேர் இறந்தனர்.கடந்த, 1985ல் குஜராத் கலவரத்தில், 300 பேர்; 1986ல் ஆமதாபாத் கலவரத்தில், 59 பேர்; 1982ல் மீரட் கலவரத்தில், 81 பேர்; 1992ல் சூரத் கலவரத்தில், 175 பேர் இறந்தனர்.கம்யூனிஸ்ட் ஆட்சியில், 1979ல் ஜாம்ஷெட்பூரில், 125 பேர் இறந்தனர்.காங்கிரஸ் கட்சி, தன் ஆட்சியில் நடந்த கலவரங்களை மறந்துவிட்டு, தங்கள் ஊழல்களை மூடி மறைப்பதற்காக, குஜராத் சம்பவம் ஒன்றை மட்டுமே, மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. காரணம், வேறு எதையும் குறிப்பிட்டு, அவர்களால் கூற முடியவில்லை.

    குஜராத்தில், மோடியின் சாதனையை ஒதுக்கித் தள்ளும், காங்கிரஸ் கட்சியும், அதன் தோழமை கட்சிகளும், பொய்களை மட்டுமே தினமும் பரப்பி வருகின்றன. இவர்களை மீறி மோடி வெற்றி பெறுவது, அரசியல்வாதிகளை மீறி, “மக்கள்’ வெற்றி பெறுவதாகும்.

  • //பதினைந்து வருடமாக மோடி ஆளும் குஜராத்தில் இப்போது ஒரு முஸ்லீம்கூட இல்லாமல் முற்றிலும் கொன்றொழிக்கப்பட ்டு அது சுத்தமான இந்துத்வா மாநிலமாக மாற்றப்பட்டுவிட ்டதா என்ன?…//

   Hi man , In case if Modi gang killed u r family member at 2002 then you will not write like this!!!!

   Modi killed Indian citizen at Gujarati and u support modi…. Why!

  • will u care only after wiping out a whole community from tat state..? I think even after that u wont care. Even Muslims also have the same colour blood like urs concern about them too.

 2. உங்களுக்கு முத்திருச்சுனு தெரியும். இவ்ளோ முத்துனது இப்பதான் தெரியும். எதுக்கு இந்த பயம்.

  அவர் ஆட்சியில கண்டிப்பா உங்களுக்கு களி தான். உங்கள ஆட்டுவிச்சுட்ருக்க அமெரிக்கா கு ஓட

  ரெடியா இருங்க.

  • //அவர் ஆட்சியில கண்டிப்பா உங்களுக்கு களி தான். உங்கள ஆட்டுவிச்சுட்ருக்க அமெரிக்கா கு ஓட

   ரெடியா இருங்க.//

   ha ha Who have applied for American visa!! We or Modi!!

   Modi application for American visa. That has been rejected many time by US GOv.!!!

   Why? ya genocide at Gujarati on 2002

   • கே செந்தில் குமரன் …. அமெரிக்காவுக்கு என்ன யோக்யத இருக்கு, மோடி 850,அமெரிக்கா 40,0000 முஸ்லீம்கல கொன்னுருப்பான்,யார் யாருக்கு வீசா தரனும்னு நீயே சொல்லு தம்பி(இராக்ல தினம் 50 பேர் யாரால சாகரான்……ஆப்கான்ல…..தினம்… யாரால? மோடியாலவா?

 3. லாட்ஜ் டாக்டர்களை எதற்காக நோயாளிகள் அணுகுகிறார்கள்? வளர்ச்சி, எழுச்சி மற்றும் சக்தி ஆகியவற்றைப் பெறுவதற்காகவே. அது போலவே மோடியையும் வளர்ச்சி, எழுச்சி மற்றும் சக்தி ஆகிய காரணங்களுக்காவே நோயாளிகள் ச்சீசீ… பக்தர்கள் ஆதரிக்கிறார்கள்.—-எனக்கு அப்பவே புரிங்சு போச்“சுங்கோ

 4. லாட்ஜ் டாக்டர்களை எதற்காக நோயாளிகள் அணுகுகிறார்கள்? வளர்ச்சி, எழுச்சி மற்றும் சக்தி ஆகியவற்றைப் பெறுவதற்காகவே. அது போலவே மோடியையும் வளர்ச்சி, எழுச்சி மற்றும் சக்தி ஆகிய காரணங்களுக்காவே நோயாளிகள் ச்சீசீ… பக்தர்கள் ஆதரிக்கிறார்கள்.

 5. யோவ், சும்மா இருக்கரவன கூட,நீங்க மோடியை பத்தி ஒவரா எழுதி சப்போர்ட் பன்ன வச்சுடுவிங்க போல இருக்கு.நான் ஒரு தாழிந்த் சமுதாயத்தில் பிறந்தவன் ஆனால் இந்த தளதில் தனிநபர் தாக்குதல் அதிகமாக இருக்கிரது.இதை நான் கன்டிகறன்

  • என்னுடைய சாதி சான்றூ, மற்றூம் முழு கிராம முகவரி கொடுத்து,நிருபித்தால் எழுதுவதை நிருத்தி கொள்ள தயரா? நான் நிருபிக்கவில்லை எண்றால் தூக்கு போட்டு சாக தயார். உலகில் நீங்கல் மட்டும் தான் உண்மை மற்றாவர் எல்லம் உண்மை இல்லை என்ற தவரான என்னைதை விட்டு அரொக்கியமாக விவாதிக்கவும்.

  • Will u write like this if u r family members are affected by Gujarat Genocide at 2002!??

   Tell me man!!!

   What is u r cast is not a matter here!!!

   But will u support Modi and his evils? This is the matter ya!

   If u support Modi that means u support the killing of Indian citizen at 2002 at Gujarati .

   • My answer was for the following comment from Jothi. I didn’t support Modi in my post. My blood related peoples were killed in laksh 100 miles away, what is your response for that? supporting sonia again?

    ஏய் பாடிஸ்டுடா அம்பி போயி கொண்டைய மறைச்சிட்டு வாயா

    • @all kind of terrorist should go to Pakistan pls

     1. Tamil Eelam killllllllller Sonia

     2. Gujarat Indian citizan killlllllllller Modi

     3. Punjab people killllllllllller at Delhi during Indra association

     4. Hindu killller பக்ருதீன்

     5. O I forgot Mr Advani!!!!

     All u killlers pls go to Pakistan and fight with each other and die!!!!

     We Indians are hard workers and we have lot of work to construct this nation to
     killlll poverty and malnutrition amoung our humble people.

     U GUYS ARE MISS LEADING IN THE NAME OF RELIGION

     No religion will provide food and shelter only hard work can!

 6. நாங்க ஒரு நானூறு பல்ப பீஸாக்கி இருப்போம். மோடி 4000 பேரை பீஸ் பீஸா போட்டவறு. அவரபோய் எங்ககிட்டே கம்பேர் பண்ணி எழுதிட்டீங்களே…..

  • ஆனா 1லட்ஷம் இலங்கை தமிழர்கள் ஆழிக்கப்பட்டதை எந்த வடிவில் எழுத?

   • Is there is any different in the Tamil-an blood and Muslim Blood!!

    Try to understand!!!

    Every one blood is same color!!

    So do not support Modi who killed Muslims

 7. தன இமேஜை உயர்த்த தீவிரவாதி என்று சொல்லி போலி என்கவுண்டர்கள்.

  உத்தரகாண்டுல மோடி சிங்கிளா போயி 15000 மக்களை காப்பாற்றிட்டாறு — பார்பன ஊடகங்களின் செய்தி.
  இராணுவமே 4000 பேரை தான் காப்பாற்ற முடிஞ்சுது இது எப்படியா முடிந்தது ?

  நவீன வசதிகளுடன் கூடிய ‘ஹைடெக் தெரு’ அகமாதாபாத்தில் இல்லை. அந்தப் புகைப்படத்தில் உள்ள தெரு சீனாவில் இருக்கிறது.
  – கூகுள் சர்ச் மூலம் அம்பலம்

  ரஜினி படத்துடன் ஒட்டப்பட்ட போஸ்டர்களுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. இதிலிருந்து விலகியிருக்கவே நாங்கள் விரும்புகிறோம்.
  – லதா ரஜினிகாந்த்

  மோடிக்கு ஆதரவாக நான் பேசவேயில்லை. அந்த வீடியோ போலியானது.
  – அமிதாப் பச்சன்

  மோடிக்கு விசா வழங்குவது தொடர்பாக நாங்கள் எந்தக் குழுவையும் குஜராத்துக்கு அனுப்பவில்லை.
  – அமெரிக்க அரசு

  மோடியை இங்கிலாந்துக்கு வருமாறு நாங்கள் அழைக்கவே இல்லை. அந்தத் தகவல் தவறானது.
  – இங்கிலாந்து அரசு

  முன்னேறிய மாநிலங்களின் பட்டியலில் குஜராத் இல்லை. பல வகையிலும் பின்தங்கியுள்ளது.
  – ரகுராம் ராஜன் குழு அறிக்கை

  இந்த பிழைப்புக்கு…. போறவங்க வரவங்ககிட்டே… ………..
  ஐ மீன்………… லேகியம் வித்து பிழைசிக்கலாமேன்னு சொல்ல வந்தேன்.. .. ஜகப்பிராடுக்கு பிரதமர் பதவி ஒரு கேடு . விளங்கிடும்…

  • எனது 2 க்கான பதில் பிறகு உமது அடுத்த கேழ்வி. Because we are from Government primary school(engleese medium)

  • எல்லா பித்தலாட்டமும் அம்பலமாகியும் கொஞ்சம் கூட இந்த கே(மோ)டி கூச்சமே இல்லாமல் வெக்கத்தை தூக்கி கக்கத்துல வச்சிக்கிட்டு பேனர் கட்டவுட்டுல நடைய பாருங்கள் ரேம்போ சில்வஸ்டர் ஸ்டோலன் தோற்றான் போங்கள். அப்படி ஒரு கம்பீரம்

   • // எல்லா பித்தலாட்டமும் அம்பலமாகியும் கொஞ்சம் கூட இந்த கே(மோ)டி கூச்சமே இல்லாமல் வெக்கத்தை தூக்கி கக்கத்துல வச்சிக்கிட்டு //

    இது கே(மோ)டிய தூக்கி பிடிக்கிற பார்பனர்களுக்கும், பார்பன அடிமைகளுக்கும் இது பொருந்தும்.

  • //”உத்தரகாண்டுல மோடி சிங்கிளா போயி 15000 மக்களை காப்பாற்றிட்டாறு — பார்பன ஊடகங்களின் செய்தி.
   இராணுவமே 4000 பேரை தான் காப்பாற்ற முடிஞ்சுது இது எப்படியா முடிந்தது ?” //

   எடத்துல போய் நிக்கரதுக்கு மனசு வரனும், அந்தமாதிரி நேரத்துல லன்டொன்,இத்தாலி போய்டகூடாது!

   //அமெரிக்காவில் உள்ள ஆப்கோ வேர்ல்டு வைடு (ஆப்சொ Wஒர்ல்ட் நிடெ)என்ற மக்கள் தொடர்பு நிறுவனம், மோடியைப் பிரபலப்படுத்தும் வேலையைச் செய்கிறது. இன்று மோடி ஒரு பெரிய பிராண்ட் ஆக நிறுவப்பட்டிருப்பதன் பின்னே, இந்த நிறுவனத்தின் ‘லாபி’ உள்ளது. வெளிநாட்டு முதலீடுகளை குஜராத்தை நோக்கி ஈர்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள ‘துடிப்பான குஜராத்’ (Vஇப்ரன்ட் Gஉஜரட்) என்ற திட்டத்தை, உலகளவில் மார்க்கெட் செய்வது இந்த நிறுவனம்தான்.//

   தப்பெல்லாம்,தப்பல்ல

   இந்திய மக்களாகிய நாம் இதாலிய பிரஜயய் கூட ஆதரித்து வாக்களித்தோம்……எதற்காக….அவர்கள் படிப்போ,அல்லது அறிவையோ பார்த்து அல்ல,வந்தாரை வாழவைக்கும் தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவும் தான்.

   • //இந்திய மக்களாகிய நாம் இதாலிய பிரஜயய் கூட ஆதரித்து வாக்களித்தோம்……எதற்காக….அவர்கள் படிப்போ,அல்லது அறிவையோ பார்த்து அல்ல,வந்தாரை வாழவைக்கும் தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவும் தான்.//

    That is why u (BJP) are avoiding Pakistan born Indian citizen Mr Advani Ji!!!! And now u are supporting Modi!!!

   • இந்தியாவின் எந்த மாநிலத்திலாவது ஐ.ஜி., டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகள் சிறைக்குள் இருக்கிறார்களா? ஆனால், குஜராத்தில் 32 பேர் இருக்கிறார்கள். அனைவரும் 2002 -ம் ஆண்டு குஜராத் இனப் படுகொலைகளைத் தொடர்ந்து நடத்தப்பட்ட போலி மோதல் வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள். இத்தனை அதிகாரிகளே சிறையில் இருந்தால், அப்புறம் அது என்ன சிறந்த நிர்வாகம்?”

   • 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி குஜராத்தில் மின்சாரம் இல்லாத வீடுகளின் எண்ணிக்கை என்பது 11 இலட்சங்கள் ஆகும்.

    2011 ஆம் ஆண்டு தேசிய கணக்கெடுப்பின் படி குஜராத்தில் கிட்டத்தட்ட 67% வீடுகளுக்கு கழிப்பறை வசதிகள் கூட இல்லை..

    இந்த வறுமையிலும் கோடி மோடி அரசு டாடாவுக்கு 10000 கோடி வெறும் 0.01 % வட்டிக்கு நீண்ட கால காடனாக கொடுத்தள்ளது ..

 8. Modi is not a brahmin. Actually he s from a backward community that s why even M.K and K.V of TN are keeping quiet and not commenting. You are in TN . Concentrate on our mother tongue , its development. Don’t waste time on Modi. I have not found a DK man praising Sathyamurthy , mentor of K.Kamaraj who entered temple with dalits which periyar did in Vaikom.As per Avvaiyar there are two castes good and bad and now haves and have nots.

  • 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி குஜராத்தில் மின்சாரம் இல்லாத வீடுகளின் எண்ணிக்கை என்பது 11 இலட்சங்கள் ஆகும்.

   2011 ஆம் ஆண்டு தேசிய கணக்கெடுப்பின் படி குஜராத்தில் கிட்டத்தட்ட 67% வீடுகளுக்கு கழிப்பறை வசதிகள் கூட இல்லை..

   இந்த வறுமையிலும் கோடி மோடி அரசு டாடாவுக்கு 10000 கோடி வெறும் 0.01 % வட்டிக்கு நீண்ட கால காடனாக கொடுத்தள்ளது ..

 9. மோடி மேஜிக் !
  வெற்றி வியூகமா…வெற்று கோஷமா ?

  http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=46286

  ”மோடி பிம்பம்… அத்தனையும் இட்டுக்கட்டிய பொய்கள்!”
  நரேந்திர மோடிக்கு எதிராக தொடர்ந்து பிரசாரம் செய்துவருகிறது கம்யூனிஸ்ட் அமைப்பான மக்கள் கலை இலக்கியக் கழகம். இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் மருதையனிடம் பேசினேன்…
  ”மோடி, பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளர். நீங்களோ, அவரை ‘கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆள்’ என்கிறீர்கள். எப்படி?
  ”அண்மையில், இந்தியாவின் டாப்-100 நிறுவனங்களின் சி.இ.ஓ-களிடம், ‘எக்கனாமிக் டைம்ஸ்’ ஒரு சர்வே நடத்தியபோது, ‘இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும்?’ என்ற கேள்வியை முன்வைத்தது. டாடா, அம்பானி, பிர்லா, மிட்டல், அடானி… உள்ளிட்ட பெரும் முதலாளிகள்தான் அந்த சர்வேயில் பங்குகொண்டவர்கள். அவர்களில் 74 சதவிகிதம் பேர் மோடி பிரதமராக வேண்டும் என்றே விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள். ராகுல்காந்தி உள்ளிட்டோருக்கு சேர்த்து 26 சதவிகிதம்தான்.
  ஏன் அவர்கள் மோடியை விரும்புகின்றனர்? ஏனென்றால், மோடி குஜராத்தில் சுமார் ஐந்து லட்சம் ஏக்கர் நிலத்தை, விவசாயிகளிடம் இருந்தும், மீனவர்களிடம் இருந்தும் பிடுங்கி, இந்தப் பெரிய நிறுவனங்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்திருக்கிறார். பல்லாயிரம் கோடி சலுகைகளை வரைமுறையின்றி வாரி வழங்கி இருக்கிறார். மோடி, மொத்த இந்தியாவுக்கும் பிரதமராக வந்தால் இந்தச் சுரண்டலை நாடு தழுவிய அளவில் செயல்படுத்தலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். மோடியை மாற்றத்தின் நாயகனாக அவர்கள் முன்னிறுத்துவதன் பின்னுள்ள அரசியல் இதுதான். மன்மோகன் சிங்கும் கார்ப்பரேட்டுகளுக்கு விசுவாசமானவர்தான் என்றபோதிலும், அவர் இப்போது செல்லாக் காசாகிவிட்டார். அந்தப் படம் இப்போது ஓடாது. ஆகவேதான் ‘மோடி’ என்கிற புதிய ஹீரோவைக் களம் இறக்குகிறார்கள் கார்ப்பரேட்டுகள்.
  மோடி எப்படிப்பட்டவர் என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். டாடா நானோ தொழிற்சாலையை மேற்கு வங்கத்தில் இருந்து குஜராத்துக்கு அழைத்து வந்ததைப் பற்றி மோடி குறிப்பிடும்போது, ‘பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டை வெறும் ஒரு ரூபாய் செலவில் அழைத்து வந்தேன்’ என்பார். அதாவது, இவர் டாடாவுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினார். அவர் குஜராத் வந்துவிட்டார். அந்த ‘ஒரு ரூபாய் செலவின்’ உண்மை முகம் என்ன? 1,100 ஏக்கர் நிலத்தை சந்தை விலையைவிட 100 மடங்கு குறைவான விலையில் டாடாவுக்குக் கொடுத்தார் மோடி. 2,900 கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீட்டுக்கு 9,570 கோடி ரூபாய் கடன் கொடுத்தார். அதற்கு வெறும் 0.1 சதவிகிதம்தான் வட்டி. கடனை 20 ஆண்டுகள் கழித்து திருப்பிச் செலுத்தினால் போதும். இது எந்த ஊரிலாவது நடக்குமா? மோடி பிரதமராவதில் அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், முரளி மனோகர் ஜோஷி போன்ற பா.ஜ.க. தலைவர்களிடம் மாற்றுக் கருத்து இருக்கிறது. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களோ ஒருமித்த குரலில் மோடியை ஆதரிக்கின்றன.
  அதேபோல, வெளிநாட்டு முதலீடுகள் குஜராத்தில் அதிகம் என்ற சித்திரம், திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. ஏனெனில், மற்ற மாநிலங்களில் பெயரளவுக்கு உள்ள சம்பிரதாயங்கள்கூட குஜராத்தில் கிடையாது. ‘1000 கோடி ரூபாய் கான்ட்ராக்ட்டை ஆன்லைனிலேயே முடித்தோம்’ என்று அவர்கள் பெருமையுடன் சொல்வது இதைத்தான். இப்படிப்பட்ட மாநிலத்தை எந்த முதலாளிக்குத்தான் பிடிக்காது? சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (Special Economic Zones) இந்தியாவில் இருப்பது நமக்குத் தெரியும். குஜராத்தில் மட்டும்தான், சிறப்பு முதலீட்டு மண்டலங்கள் (Special Investment Zones)இருக்கின்றன. அதுபோலவே, மோடியை ‘சிறந்த நிர்வாகி’ என்கிறார்கள். இந்தியாவின் எந்த மாநிலத்திலாவது ஐ.ஜி., டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகள் சிறைக்குள் இருக்கிறார்களா? ஆனால், குஜராத்தில் 32 பேர் இருக்கிறார்கள். அனைவரும் 2002 -ம் ஆண்டு குஜராத் இனப் படுகொலைகளைத் தொடர்ந்து நடத்தப்பட்ட போலி மோதல் வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள். இத்தனை அதிகாரிகளே சிறையில் இருந்தால், அப்புறம் அது என்ன சிறந்த நிர்வாகம்?”

  ”குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து என்ன சொல்வீர்கள்?”
  ”மோடியின் வளர்ச்சியைப் பற்றிப் பேசுபவர்களுக்கு புள்ளிவிவரங்கள் குறித்து அக்கறை இல்லை. அவர்கள் துணிந்து பொய்களைப் பரப்புகின்றனர். அல்லது ‘மின்சார உற்பத்தியில் குஜராத் தன்னிறைவு பெற்றுவிட்டது’ என்கிறார்கள். ‘என்ன விலை கொடுத்தாலும் தங்கு தடையற்ற மின்சாரம் வேண்டும்’ என்பது எந்த வர்க்கத்தின் கோரிக்கை? அது செலவு செய்ய முடிபவர்களின் குரல். பெரும்பான்மை மக்களின் நலன்களைப் புறக்கணித்து, சில நூறு முதலாளிகள் மட்டுமே லாபம் அடைவதற்குப் பெயர் ‘வளர்ச்சி’ அல்ல. லாபத்தை மட்டுமே அளவுகோலாகக் கருத, மோடி நடத்துவது மளிகைக்கடையும் அல்ல!”
  ”புள்ளிவிவரங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். மோடிக்கு என இந்தியா முழுக்க ஒரு இமேஜ் உருவாகியிருப்பது பொய் இல்லை. அதற்கு உங்கள் பதில் என்ன?”
  ”மோடியைச் சுற்றி எழுப்பப்படும் இந்த பிம்பம் எதேச்சையாக வந்தது அல்ல. அமெரிக்காவில் உள்ள ஆப்கோ வேர்ல்டு வைடு (Apco World wide)என்ற மக்கள் தொடர்பு நிறுவனம், மோடியைப் பிரபலப்படுத்தும் வேலையைச் செய்கிறது. இன்று மோடி ஒரு பெரிய பிராண்ட் ஆக நிறுவப்பட்டிருப்பதன் பின்னே, இந்த நிறுவனத்தின் ‘லாபி’ உள்ளது. வெளிநாட்டு முதலீடுகளை குஜராத்தை நோக்கி ஈர்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள ‘துடிப்பான குஜராத்’ (Vibrant Gujarat) என்ற திட்டத்தை, உலகளவில் மார்க்கெட் செய்வது இந்த நிறுவனம்தான். ஊடகச் செய்திகள், வெளிநாட்டு முதலாளிகள் மற்றும் தூதுவர்களின் குஜராத் வருகை எல்லாவற்றுக்கும் பின்னால், இந்த நிறுவனத்தின் லாபி இருக்கிறது. மோடி எப்படி ஆடை அணிய வேண்டும்? எப்படிப் பேச வேண்டும்?.. என்பன ஒரு திரைக்கதையைப் போல முன்பே தயாரிக்கப்படுகிறது. மன்மோகன் சிங்கை UNDERACHIEVER என்று வர்ணித்த அமெரிக்காவின் ‘டைம்’ பத்திரிகை, மோடியை MODI MEANS BUSINESS என்று அட்டைப் படத்தில் வெளியிட்டது. இவற்றை இணைத்துப் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே, நரேந்திர மோடி பற்றி இன்று உருவாக்கப்பட்டுள்ள பிம்பம் அசலானது அல்ல. அது ஒரு பொய்த் தோற்றம்; அது ஒரு மோசடி!”
  ”சரி… உங்களைப் போன்றோரின் பிரசாரங்களையும் மீறி மோடி பிரதமர் ஆகிவிட்டால்..?”
  ”எந்தக் காரணத்தால் மோடி குஜராத்தில் வெற்றி பெற்றாரோ, அதே காரணத்தால் அவரால் இந்தியாவில் வெற்றிபெற முடியாது. இந்து மதவெறி, முஸ்லீம் எதிர்ப்பு… என்ற அவரது குஜராத் ஃபார்முலா, தேசிய அளவில் உதவாது. ‘மோடி மேனியா’ என்பது, நகர்ப்புற நடுத்தர வர்க்கத்திடம் மட்டும்தான் இருக்கிறது. நகர்ப்புற உழைக்கும் வர்க்கம் மற்றும் கிராமப்புற மக்களிடம் இது எடுபடவில்லை. ஆக, தனிப் பெரும்பான்மை என்பதை பா.ஜ.க-வால் கனவிலும் நினைக்க முடியாது. கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்றால், அதற்கு நரேந்திர மோடிதான் வில்லன். ஆகவே, மோடியின் பிரதமர் கனவு நிறைவேறும் வாய்ப்பு மிகவும் குறைவு. இது நிறைவேற வேண்டுமெனில், மிகக் கேவலமான சந்தர்ப்பவாதிகளாக மற்ற அரசியல் கட்சிகள் மாற வேண்டும். அதற்கான வாய்ப்பு இல்லை என்றும் சொல்ல முடியாது!”
  ஆதாரம்!
  நரேந்திர மோடியின் ‘மைனஸ்’ குறித்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் அரசின் பல்வேறு துறைகளின் அதிகாரபூர்வமான அறிவிப்புகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. அவருடைய ‘ப்ளஸ்’ குறித்த புள்ளிவிவரங்கள் அனைத்தும், பா.ஜ.க-வின் வானதி சீனிவாசன் நம்மிடம் கூறியவையே.
  இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநர் ரகுராம் ராஜன், இதற்கு முன் பிரதமரின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்தார். அப்போது ரகுராம் ராஜன் தலைமையிலான நிபுணர்கள் குழு, இந்திய மாநிலங்களின் வளர்ச்சிகுறித்து ஆய்வு செய்தது. சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்தக் குழுவின் அறிக்கையில், வளர்ச்சி அடைந்த மாநிலங்களின் பட்டியலில்… கோவா, கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப், மஹாராஷ்டிரா, உத்தர்காண்ட், அரியானா… ஆகிய ஏழு மாநிலங்கள் உள்ளன. மிகவும் பின் தங்கிய மாநிலங்களின் பட்டியலில் பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட 10 மாநிலங்கள் உள்ளன. பின்தங்கிய மாநிலங்களில் மேற்கு வங்கம், மணிப்பூர், நாகாலாந்து ஆகியவற்றோடு குஜராத்தும் இடம் பிடித்துள்ளது!

   • Hi Man,
    if vikadan is a yellow magazine then …………..
    WHY DID பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் GAVE A INTERVIEW ON VIKADAN?

    NOw u r the comedy piece!!!

    Why do not u change u r name to Power Star!!!!(comady pice)

 10. வினவு _______…மோடி பயத்துல ஒண்ணுக்கே போய்டுவீஙக போல இருக்கு… 🙂

   • HI POWER STAR !!! U R A GREAT COMADY PICE NOW!!!

    if u have no word to talk then only u can say one bath room and two bath room!!!!

    your politics (BJP) is very weak!!!

    Hi karthik & pOWER sTAR …, If you do not know how to think then go to school and learn from a b c d…

    Tambi POWER STAR!!!!! …. When u come tomorrow it is better to think first and come to this place HA HA HA

  • If u have no word to talk then only u can say one bath room and two bath room!!!!

   your politics (BJP) is very weak!!!

   Hi karthik …, If you do not know how to think then go to school and learn from a b c d…

   Tambi karthi …. When u come tomorrow it is better to think first and come to this place

 11. சிவாராஜ் வைத்தியர் வினவு மீது அவதூறு வழக்கு தொடுத்தாலும் ஆச்சரியமல்ல

 12. Villavan’s sattire is beautiful. Modi is made to be believed that he is the only alternate choice.
  Let the people divide well and be supportive of their local political parties except bjp and congress.
  Let the coalition come with whomever be playing.
  We don’t need any stable government now. We need a government that has to fear for people’s anger. Stable governments don’t fear for people. Unstable, coalition governments fear for the contributing parties. In a way that is better than taking worst decisions like FDI or Ram temple.

 13. சிறுநீர் கழிக்க இடம் இருக்காதோ என்ற பயத்திலேயே திருச்சிக்குப் போகாத வினவுக்கு ஒவ்வொரு பஸ் ஸ்டாண்டாக சிறுநீர் கழிக்கும்போதெல்லாம் சேலம் சிவராஜ், மூலம், பவுத்திரம், விரை வீக்க நோட்டீஸ் படம், போஸ்டர்களை பார்த்துப் பழக்கப்பட்ட வினவுக்கு அது பற்றித்தானே எழுதத் தோன்றும் !

  “மோடியோ பாகிஸ்தான் பயங்கரவாதிகளை வைத்து மிரட்டுவதன் மூலம் பார்க்கும் முசுலீம்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக மாற்றிவிடுவார்” என்று கூறும் வினவு இப்படி எழுதியே கோவையில் குண்டு வைத்த அல்-உம்மா தீவிரவாதிகளையும், பெஙகளூருவில் குண்டு வைத்த போலீஸ் பக்ருதீன் வகையறாக்களையும் வளர்த்து வருகிறார்! வினவு இப்படி எல்லாம் எழுதுவதால்தான் தமிழ்நாட்டு முஸ்லீம்களும், கேரளத்து முஸ்லீம்களும் குண்டு வைக்கும் கொலை செய்யும் தீவிரவாதிகளாக மாற்றப் படுகிறார்கள். அல்-உம்மா, சிமி, பாப்புலர் fரண்ட் ஆF இந்தியா, தவுகீத் ஜமாத், மனிதநேய மக்கள் கட்சி என்றெல்லாம் பரிணாம வளர்ச்சி, எழுச்சி எல்லாம் அடைகின்றார்கள். வினவு எழுதிய “மூலம் பார்க்கும் முசுலீம்கள்” என்பதைத் தஞ்சாவூர் மகாலிஙக “மருத்துவர் பார்க்கும் மூலம்” என்று எண்ணிவிட வேண்டாம், அது வேறு, இது வேறு.

  “தமிழாட்டில் மோடியை மட்டும் ஏன் இந்த கம்யூனிஸ்டுகள் கரித்துக் கொட்டுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை” என்று சொல்லும் வினவு இப்படி இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருக்கும் கம்யூனிஸ்டுகளை ஏன் கரித்துக் கொட்டுகிறது? அவர்கள் மோடியைக் கரித்துக் கொட்டவில்லை என்று வினவு சொல்வது அவர்கள் மனத்தைப் புண்படுத்துகிறது!

  • Hello அஞ்சன் குமார்,

   Let the things be clear!
   ————————-

   Hindu Fundamental Groups are RSS, BJP,VHP

   Muslim Fundamental Groups are அல்-உம்மா, சிமி, பாப்புலர் fரண்ட் ஆF இந்தியா, தவுகீத் ஜமாத்.

   u r supporting Hindu Fundamental Groups!!! WHy?

   You are not a neutral person why?

   Both Hindu and Muslim forgot the resent HISTORY.
   ************************************************

   During the uprising of Hindu kingdom (Sivaji) , Hindu and Muslim fight lot in central India!!!

   What is the consequence?

   We (Hindu and Muslim) lost our mother nation to British!!!(Mogul empire was too week due to Hindu Muslim war)

   STILL WE ARE FOOL , SO WE (hINDU mUSLIM FIGHT WITH EACH OTHER)

   iF WE CONTINUE THIS FIGHTING THE HISTORY WILL BE REPEATED!!!

   • Learn the history properly. Muslim rulers are invaders.

    British had liberated you from them and brought modern education,railway …
    Do you have any idea, why Sikh religion is formed?

    • Britishers gave Modern education to create good clerks for their empire and brought Railways for better movement of raw materials for export to Britain and import of finished products from Britain.Just because they gave education and railways,you will not call them invaders.Is it not?Your logic is strange.

   • Hello Senthilkumar

    Your question: u r supporting Hindu Fundamental Groups!!! WHy?

    Ans: I am not supporting Hindu Fundamental group. Your definition of Hindu fundamental group is wrong!

    You are not a neutral person why?

    Your definition of neutrality is wrong. How do you call Muslim League as secular? How do you justify Mumbai blasts, Kovai blasts, Godhra Train burning and all the killings of BJP leaders that go on Tamilnadu, while you decry Gujarat riots? If you speak in one voice against both, I will surely be one with you. It is only to point out your partiality, I write all these.

    My reply “on your call to bring unity of Hindus and Muslims to fight British” !!!!:

    Ans: The British are gone now. The Persian Muslims are invaders. This Nation did not have Muslims till the arrival of invading Muslim Kings from Persia. Your oft repeated phrase “Those who came via the Kyber Pass” suits the Muslims more than any one else!!!

    As to caste divisions and placing some as Upper castes, my view is that is a sin to say the least. All are equal. Not only Hinduism has this “upper” and “lower” castes, almost all religions have this. In whatever form it prevails it must be condemned and eliminated.

    Elimination of Hinduism will not result in removal of discrimination as all men are greedy and they will swindle the weaker section by one means or the other.

 14. மோடியை கம்-பரிவார் கரித்துக் கொட்டவே இல்லை, தமிழ்நாட்டு கம்யூனிஸ்டுகள் மட்டும்தான் கரித்துக் கொட்டுகிறது என்று வினவு எழுதியதால் கம்-பரிவார் மனம் புண்பட்டுள்ளது.

  புண்பட்டுள்ள கம்-பரிவாரின் அஙகத்தினர்கள்:
  அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பு
  அனைத்திந்திய இளைஞர் கூட்டமைப்பு
  தேசிய மகளிர் கூட்டமைப்பு
  அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (இது சொக்கத்தங்கம் தியாகத் திருவிளக்கு அன்னை சோனியாவின் இத்தாலிக் காங்கிரஸ் அல்ல)
  அனைத்திந்திய விவசாய மஸ்தூர் சங்கம்
  அனைத்திந்திய கிசான் சபா
  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
  அனைத்திந்திய கிசான் சபா
  இந்திய ஜனநாயக மகளிர் சங்கம்
  மத்திய இந்திய தொழிற்சங்கம்
  கணமுக்தி பரிஷத் (சங்க பரிவார் போலவே பெயர் இருக்கிறது இல்லை? ஆனால் இது கம்-பரிவார் அமைப்புதான்!)
  கத்தாரின் பொதுவுடமை இயக்கம்
  நக்சல் இயக்கம்
  ஜனசக்தி இயக்கம்
  தெலங்கானா புரட்சி சமிதி
  மக்கள் கலை எழுத்தாளர் கழகம்
  முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
  இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாவோயிஸ்ட்)
  இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்ஸிஸ்ட்- லெனினிஸ்ட்)

 15. மோடி செய்தது சேலம் எழுச்சி சித்த வைத்தியம் என்றே வைத்து கொள்வோம்.

  ####

  இளைஞர்கள் அனைவரும் எழுச்சியுடன் கற்பழிக்க போகும் ஒரு பொருள் வினவு போன்ற ஒற்றை சாதி, ஒற்றை மத எதிர்ப்பு தரப்புகள் ஆகும்

  • Hi Man,
   if vikadan is a yellow magazine then …………..
   WHY DID பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் GAVE A INTERVIEW ON VIKADAN?

   NOw u r the comedy piece!!!

   Why do not u change u r name to Power Star!!!!(comady pice)

  • Hi MaN power star!!!!!
   if vikadan is a yellow magazine then …………..
   WHY DID வானதி சீனிவாசன்(BJP) GAVE A INTERVIEW ON VIKADAN?

   NOw u r the comedy piece!!!

   Why do not u change u r name to Power Star!!!!(comady pice)

 16. Hi MaN power star!!!!!
  if vikadan is a yellow magazine then …………..
  WHY DID பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் GAVE A INTERVIEW ON VIKADAN?

  NOw u r the comedy piece!!!

  Why do not u change u r name to Power Star!!!!(comady pice)

 17. Whenever Modi meets Ahluwalia regarding plan allocation,he used to create big fuss stating that Gujarat is being neglected since it is under BJP rule.But,out of Rs51000 crore allocated by Central Govt for Gujarat for the fiscal 2012-13,a whopping 21% either remained unspent or diverted for non-plan expenditure.Since the plan allocation is made for satisfying the developmental needs of the state in fields such as Education,Health,Social Justice,Women and Child Development and amelioration of the backward areas,Modi never bothered.The allocation of Rs51000 crore by Planning Commission was Rs401 crore higher than the annual plan fixed by the Gujarat govt in state”s budget session in Feb,2012.While making the allocation,Ahluwalia insisted that Gujarat govt should pay “more attention in achieving more sustainable growth in agriculture and for addressing the problems of malnutrition and out of school children”For the fiscal 2013-14,the Gujarat govt has risen its annual plan even higher to Rs59000 crore,which is higher by 15.68% compared to the previous year.

 18. சிவராஜ் சித்த வைத்தியர் எந்த கல்லூரியில் சித்த மருத்துவம் படித்தார்?
  எப்போது பட்டம் வாங்கினார்>
  அவராகவே டுபாக்கூர் “பட்டம்” விட்டுக் கொண்டார்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க