Thursday, April 15, 2021
முகப்பு கட்சிகள் பா.ஜ.க பாரதத்தின் 'கற்பு', இந்தியாவின் 'கற்பழிப்பு' - ஆர்.எஸ்.எஸ் பித்தலாட்டம்!

பாரதத்தின் ‘கற்பு’, இந்தியாவின் ‘கற்பழிப்பு’ – ஆர்.எஸ்.எஸ் பித்தலாட்டம்!

-

தில்லி மாணவி மீதான பாலியல் வன்முறை பல்வேறு தரப்பினரையும் ஏதாவது ஒருவகையில் எதிர்வினையாற்றத் தூண்டியுள்ளது. பரவலான ஜனநாயக சக்திகள் பெண்களைக் குதறும் பாலியல் வன்முறைகளையும் அவற்றைக் களைவது பற்றியுமான விவாதங்களை முன்னணிக்குக் கொண்டு வந்துள்ளனர். சமீப காலமாக தேசிய ஊடகங்களில் இருந்து உள்ளூர் செய்திப் பத்திரிகைகள் வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி முக்கியத்துவம் கொடுத்து எழுதி வருகின்றன.

பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களைத் தடுக்க அதிக பட்ச தண்டனை வழங்குவதா அல்லது இக்குற்றங்களின் சமூக அடிப்படை என்னவென்பதைப் பார்த்து அவற்றைக் களைவதற்கு முன்னுரிமை வழங்குவதா, பாலியல் விழிப்புணர்ச்சிக் கல்வி வழங்கினால் குற்றங்களைத் தடுக்க முடியுமா என்று பரவலாக விவாதங்கள் நடந்து வருவது அனைவரும் அறிந்தது தான். இப்படி நாடெங்கும் மக்களின் விவாதப் பொருளாக மாறி அமளி துமளி ஆகிக் கொண்டிருந்த போது ஓரமாக உட்கார்ந்து ‘மிச்சர் தின்று கொண்டிருந்த’ இந்துத்துவ சங்கப் பரிவாரங்களும் இப்போது வாயைத் திறக்கத் துவங்கியுள்ளன.

அண்டங்காக்காய் வாயைத் திறந்தால் இசையா வழியும்? பல நாட்களாக மலச்சிக்கலால் அடிபட்டவன் அவித்த மொச்சைப் பயிறைத் தின்ற கணக்காக சங்கப் பரிவாரங்களின் கருத்துக்கள் இப்போது மணம் பரப்பிக் கொண்டிருக்கிறது.

மோகன் பகவத்
மோகன் பகவத்

கடந்த ஜனவரி 4-ம் தேதி அசாமில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் “கற்பழிப்புகள் இந்தியாவில் தான் நடக்கும்; பாரதத்தில் கற்பழிப்புகளே நடப்பதில்லை” என்று சொல்லியிருக்கிறார். மேலும், இந்தியாவின் கிராமப்புறங்களிலோ காடுகளிலோ இது போன்ற கற்பழிப்புச் சம்பவங்கள் நடப்பதே இல்லை என்றும், நகரங்களில் மட்டுமே நடப்பதாகவும் பழங்கால பாரதக் கலாச்சாரத்தை மீண்டும் கொண்டு வர வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

பொதுவாக ஆர்.எஸ்.எஸ் மாஃபியா ‘பாஸை’ வெளியில் ஊருக்குள் அனுப்பும் போது வாயின் மேல் இறுக்கமாக ‘டயப்பர் பேடு’ கட்டித் தான் அனுப்புவார்கள். ஆனாலும் சில அசந்தர்பங்களில் இப்படி நடந்து விடுவது வாடிக்கை. தொடர்ந்து அவர்களின் அமைப்பு வழக்கப்படி மோகன் பாகவத்தின் ‘வாய்ப்போக்கிற்கு’ பொழிப்புரை எழுத முன் வந்த ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ், “எங்க தலைவருக்கு பெண்கள் மேல் நிறைய மரியாதை உள்ளது, ஏற்கனவே பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை கூட வழங்கலாம் என்று சொல்லியிருக்கிறோம்” என்கிற ரீதியில் சமாளித்துக் கொண்டிருந்தார்.

ஆங்கில செய்தித் தொலைக்காட்சி விவாதங்களில் ‘பாரதம் என்று அவர் சொன்னது நிலப்பகுதியை அல்ல; அது கலாச்சாரம் பற்றியதாக்கும்’ என்று பின்நவீனத்துவவாதிகள் பேரரசு படத்தில் குறியீடுகளைக் கண்டுபிடித்துச் சொல்வதைப் போல் பாரதிய ஜனதா உள்ளிட்ட பரிவார அமைப்பினர் பாகவத் கக்கிப் போட்டதில் நல்லரிசியைத் தேடிக் கொண்டிருந்த போது இரண்டாவது முறையாக மோகன் பாகவத்தின் மூஞ்சியில் கட்டியிருந்த டயப்பர் பேடு நெகிழ்ந்து விட்டது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கடந்த  6-ம் தேதியன்று பேசிய மோகன் பாகவத், கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இருப்பது ஒரு ஒப்பந்தம் என்றும் இந்த ஒப்பந்தம் ஒழுங்காக கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். அது என்ன அந்த ஒப்பந்தம்? அதாகப்பட்டது, பெண்கள் கணவனின் தேவையை நிறைவேற்றிக் கொண்டு வீட்டை ஒழுங்காக பராமரித்து வர வேண்டுமாம் – அதற்கு பதிலாக ஆண்கள் மனைவியின் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டுமாம். இந்த முறை பொழிப்புரைகளுக்கு வாய்ப்புகள் ஏதும் தராமல் அவரே விளக்கிக் கூறி விட்டார்.

இவைகளெல்லாம் ஏதோ வாய் தவறி வந்து விழுந்த வார்த்தைகள் அல்ல. பெண்களை போகப் பொருட்களாகவும் உடமைகளாகவும் பார்க்கும் பார்ப்பனிய சித்தாந்தம் தசை நரம்பு எலும்பு மூளை என்று உடலின் சகல பாகங்களிலும் ஊரி ஊத்தைக் கொழுப்பெடுத்த ஒருவனின் வாயில் இருந்து தான் இந்த விதமான வார்த்தைகள் வெளிவர முடியும்.

பாரதம் என்பதை மோகன் பாகவத் கிராமப்புறம் எனும் அர்த்தத்தில் சொல்லியிருந்தாலும் சரி பழைய பார்ப்பன கலாச்சாரம் என்கிற பொருளில் சொல்லியிருந்தாலும் சரி, அங்கே பெண்களின் நிலைமை நரகல் தொட்டியின் நாற்றத்தை விட கேடுகெட்ட நிலையில் தான் உள்ளது. ஹரியானாவின் கிராமங்களில் தலித் பெண்களை ஆதிக்க சாதி ஆண்கள் வன்கொடுமை செய்த சம்பவங்களும், காட்டு வேட்டை எனும் பெயரில் தண்டகாரண்யத்தில் ஆதிவாசிப் பெண்களுக்கு எதிராய் நடக்கும் பாலியல் அத்துமீறல்களும், வாச்சாத்தி சம்பவங்களும், அசாமில் ஆயுதப்படையினர் நடத்திய பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களும் நடந்தது மோகன் பாகவத் சொல்லும் பாரதத்தில் தான். தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட ஏழைக் கூலி விவசாயிகளின் வீட்டுப் பெண்களிடம் மைனர்தனம் காட்டும் ஆதிக்க சாதி ஆண்டைகளின் சொர்க்கபுரி தான் மோகன் பாகவத் விரும்பிக் கேட்கும் ‘பாரதம்’

பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத கும்பல் விதந்தோதும் பாரதப் பண்பாட்டின் யோக்கியதையும் அப்படியொன்றும் சொல்லிக் கொள்ளும் விதமாக இல்லை. திரேதாயுகத்தின் ராமன் சம்சாரத்தை சந்தேகப்பட்டு நெருப்பில் தள்ளினான் என்றால் துவாபர யுகத்தின் கிருஷ்ணனோ கேடுகெட்ட பொம்பளைப் பொறுக்கி. ஊரில் இருக்கும் பெண்களின் ஆடைகளைக் களவாடுவதையே ஃபுல் டைம் ஜாபாக வைத்திருந்தவன் தான் கிருஷ்ணன். வெள்ளைக்காரன் இந்தியாவுக்கு வரும் வரைக்கும் ராம ராஜ்ஜியத்தின் நீதி நெறிகளுக்குள் முங்கி முக்குளித்துக் கொண்டிருந்தவர்கள் தான் கைம்பெண்களை நெருப்புக்குள் தள்ளி சதி மாதாக்கள் ஆக்கினர்.

சத்குரு-ஜக்கி-வாசுதேவ்-கார்டூன்

இதிகாச காலத்தின் இந்திரன் துவங்கி இண்டெர்நெட் காலத்தின் தேவநாதன் வரை ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கும் ‘பாரதப் பண்பாட்டின்’ யோக்கியதை சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. பேரொளி வீசிப் பிரகாசிக்கும் பாரதப் பண்பாடெனும் சோமபானத்தை அருந்தி மோன நிலையில் சித்தியடைந்தவர்கள் வேறு யாருமல்ல – அவர்கள் தான் காஞ்சிபுரத்தின் பெரிய வால், சின்ன வால், தேவநாதன், நித்தியானந்தா, பிரேமானந்தா, கல்கி சாமியார், கேரளாவின் கண்டரர், சிதம்பரத்தின் தீட்சிதர் போன்ற மகான்கள், ரிஷிகள் மற்றும் முனிகள்.

அன்னார் முன்வைக்கும் பாரதக் கலாச்சாரத்தின் இன்னொரு பிரதிநிதி அசாராம் பாபு என்கிற சாமியார். “கற்பழித்தவர்கள் மட்டுமல்ல, கற்பழிக்கப்பட்ட பெண்ணும் தான் குற்றவாளி. தன்னைக் கற்பழிக்க வந்தவர்களை ‘அண்ணா’ என்று அழைத்து தன்னை விட்டு விடுமாறு அந்தப் பெண் கெஞ்சியிருந்தால் இப்படி ஒரு சம்பவமே நடந்திருக்காது” என்று பேசியிருக்கிறான். தில்லி சம்பவத்தில் குற்றம் இழைத்தவர்கள் செய்த குற்றத்திற்கு சற்றும் குறையாத இந்தப் பேச்சுகளுக்காக இந்த ஆளைத் தூக்கி உள்ளே வைக்காமல் அரசியல் கட்சிகள் ‘பேச்சை வாபஸ் வாங்கச்’ சொல்லி கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சாராம்சத்தில் அசாராம் பாபு பேசியதற்கும் மோகன் பாகவத்தின் கருத்துக்களுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை. பெண்கள் வீட்டுக்குள் தான் இருக்க வேண்டும், வெளியில் செய்ய வேண்டிய வேலைகளை ஆண்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் – அப்படியே வெளியே வந்து யாராவது ‘கற்பழிக்க’ வந்தால் காலில் விழுந்து கெஞ்சுங்கள் என்கிறான் இந்தச் சாமியார்.

தேவதாசி முறை, பொட்டுக்கட்டி விடுவது என்று மிட்டா மிராசுகளுக்கும் பண்ணையார்களுக்கும் பெண்களைப் பாலியல் அடிமைகளாக்கி வைத்து ‘கோயில்தலமனைத்தும் விபச்சாரம் செய்குவோம்’ என்று கூத்தாடிய கலாச்சாரம் தான் ஆர்.எஸ்.எஸ் அமைக்கப் போவதாய்ச் சொல்லும் ராமராச்சியத்தின் கலாச்சாரம். காலச்சக்கரத்தை பின்னோக்கித் திருப்பி மீண்டும் அதே பழைய கலாச்சாரத்துக்கே திரும்பவும் போய் செத்து செத்து விளையாடலாமே என்று கேட்கிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் ஜி பாகவத். பிய்ந்த செருப்புகளைத் தயாராய் வைத்துள்ளீர்களா நண்பர்களே?

இந்தப் பேச்சுக்களும் கருத்துக்களும் வெறும் வாய்க்கொழுப்பு என்று ஒதுக்கித் தள்ளத் தக்கதல்ல. இவர்களின் கையில் நாட்டை ஒப்படைத்தால் என்னவாகும் என்பதன் ஒரு சிறிய முன்னோட்டம் தான் இந்தப் பேச்சுக்கள். தேசத்தை “பாரத மாதாவே” என்று படத்தில் மாட்டி தொட்டுக் கும்பிட்டு விட்டு அதன் வளங்களை கூறு போட்டு விற்க, கக்கத்தில் லெதர் பேக்கோடு அலைந்த பாரம்பரியம் கொண்டவர்கள் இவர்கள் தான். பாரதீய ஜனதாவின் ஆட்சிக் காலத்தில் தான் காங்கிரசை விட வெறி கொண்ட முறையில் தேசத்தின் வளங்கள் அனைத்தும் – ஆறுகள், மலைகள், நிலங்கள் உள்ளிட்டு – பன்னாட்டு முதலாளிகளுக்கு படையல் வைக்கப்பட்டது.

ஆக, இவர்கள் முன்வைக்கும் கலாச்சாரமும் அரசியலும் பொருளாதாரக் கொள்கைகளும் வேறு வேறல்ல. இந்த நச்சுப் பாம்புகளைக் கண்ட இடத்தில் அழித்து ஒழிப்பது தான் மக்களின் உடனடிக் கடமை.

___________________________________________________

– தமிழரசன்

__________________________________________________________

 1. இந்த ஆர்.எஸ்.எஸ். பொறுக்கிகள் பெண்களை வீட்டுக்குள் அடிமையாக வைக்க சொல்லி கொண்டே, மக்களை குண்டு வைத்து கொலை செய்ய பிரக்யா போன்ற பெண்களை பயன்படுத்துவார்கள். இந்த ஆர்.எஸ்.எஸ். நச்சு பாம்புகள் மீண்டும் மீண்டும் தாங்கள் விஷ ஜந்துக்கள் நிரூபிக்கின்றன.

 2. அது சரி! ஆர்.எஸ்.எஸ். சொன்ன ஒரு கருத்துக்கு ஓடோடி வந்து பதிவு போடும் வினவு, எவனோ எடுத்த படத்துக்கு இங்கே சென்னையில் அமெரிக்க தூதரகம் அடித்து நொருக்கப்பட்டு போக்குவரத்து முடக்கப்பட்டதே அதற்கோ, ஓவாஸியை பத்தியோ மட்டும் செலக்டிவ் அம்னீஷியாவா? நல்லா இருக்கு உங்க சமத்துவம்… 😀

  • அது சரி! ஆர்.எஸ்.எஸ் அம்பலப்ட்டுப் போச்சேன்னு பதறியடுத்து ஓடோடி வந்து புண்ணூட்டமிடும் சீனு, இதற்கு முந்தைய ரேசன் கடை ஒழிப்பு, அதற்கு முந்தைய வணிகர் போராட்டம், அதற்கும் முந்தைய பங்காரு, இதற்கும் முந்தைய ஜூ வி சங்கர மட பாசம் பற்றி மட்டும் செலக்டீவ் அம்னீஷியாவா, நல்லா இருக்கு உங்க சமத்துவம்…

   • எனக்கு செலக்டீவ் அம்னீஷியாகவே இருக்கட்டும். என் கேள்விக்கு மட்டும் இன்னும் பதில் இல்லையே?

    • இந்தக் கட்டுரையின் கருத்தை ஒத்துக்கொண்டதால்தான் புதிதாக கேள்வி கேட்கிறீர்களா? இல்லை என்றால் கட்டுரையை மறுப்பதன் காரணத்தை விளக்கவும். ஒருவேளை கட்டுரைக் கருத்தை ஏற்றுக் கொண்டீர்களனால் உங்களுக்கு அந்த கேள்விகளே எழுந்திருக்காது.ஆக உங்கள் கேள்விகளுக்கு பதில் கூற வேண்டுமா என்பது இந்தக் கேள்விக்கு நீங்கள் சொல்லும் பதிலில் அடங்கியிருக்கிறது.

     • உங்கள் கட்டுரையை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பது எழுதும் நாகரீகத்தில் இருக்கிறது. அந்த நாகரீகம் உங்களிடம் இல்லை.

      நீங்கள் கேள்வி எழுப்பியிருக்கிறீர்கள். நான் இன்னொரு கேள்வி கேட்கிறேன், ஏன் சில சம்பவங்களை கண்டும் காணாமல் இருக்கிறீர்கள் என்று. அதற்கு பதில் சொல்லிவிட்டால், என் கேள்வியே தேவையிருக்காது.

      • எங்கள் கட்டுரையை வேண்டாம் என்று சொல்வதற்குத்தான் எங்களிடம் நாகரீகம் இல்லை என்ற முடிவு பொருந்தும். எங்கள் கட்டுரையை ஏற்பதற்கு எழுதும் நாகரீகம் முதன்மையானது என்றால் அது என்ன என்று விளக்க வேண்டும். அடுத்து எங்கள் கட்டுரை சரி, தவறு என்று பரீசிலப்பதற்கு கூட எங்களிடத்தில் நாகரீகம் இல்லை என்றால் அத்தகைய நாகரீகம் இல்லாதவர்களிடம் புதிய கேள்விகள் கேட்டு என்ன பயன் என்று தோன்றிருக்க வேண்டும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் எங்களிடம் நாகரீகம் இருக்கிறது என்பதுதான் உங்களது முடிவு, இல்லையென்றால் கேள்வி கேட்டிருக்க மாட்டீர்களே, போகட்டும் இந்தக் கட்டுரையை ஏற்கிறீர்கள் அல்லவா!

       • ஏற்றுக்கொள்ளவில்லை.

        சரி! நான் கேட்ட கேள்விக்கு என்ன பதில்.

        (இன்னுமா மற்ற பர்சனாலிட்டிகள் களத்தில் குதிக்கவில்லை 😀 )

        • ஆக, மோகன் பகவத், அசாராம் பாரு ஆகியோரின் கருத்தை ஆதரிக்கிறீர்கள். வன்புணர வருபவனிடம் அண்ணா என்று அழைத்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற உயரிய கருத்து கொண்டவராகிய நீங்களெல்லாம் உலகை வன்புணரும் அமெரிக்காவின் தூதரகம் தாக்கப்பட்டால் ரத்தக்கண்ணீர் வடிப்பதில் ஆச்சரியமில்லை. நாங்கள் ஆர்.எஸ்.எஸ்யும் உதைப்போம், அமெரிக்காவையும் உதைப்போம் – கேள்விக்கு பதில் கிடைத்து விட்டதா?

         • இதுதான் உங்க பிரச்சினையே. உங்கள் கருத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், பகாவத் கருத்தை நான் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது உங்களுக்கு.

          //வன்புணர வருபவனிடம் அண்ணா என்று அழைத்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற உயரிய கருத்து கொண்டவராகிய நீங்களெல்லாம்//

          இது பகாவத் சொன்னதில்லை. இன்னொரு சாமியார் சொன்னது. இருவர் சொன்னதையும் ஒன்றாக்கி, ஒரு பொது கருத்தை உருவாக்க முயல்கிறீர்கள். பகாவத் சொன்னாரா, அந்த சாமியார் சொன்னதை ஏற்றுக்கொள்கிறேன் என்று? இதை நான் ஏற்றுக்கொண்டதாக நான் உங்களுக்கு சொன்னேனா?

          ‘Either you are with usl or against us’ என்னும் உயரிய சிந்தனை உங்களுடையது 😀

          திருந்துங்கள். போராட நிறைய வழி இருக்கிறது.

          • //உலகை வன்புணரும் அமெரிக்காவின் தூதரகம் தாக்கப்பட்டால் ரத்தக்கண்ணீர் வடிப்பதில் ஆச்சரியமில்லை.//

           மீண்டும் மீண்டும் திரிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளீர்கள். நான் சொல்ல வந்தது உங்களுக்கு தெரியும். ஆனாலும், உங்களுக்கு இப்படி திரிப்பது தான் பிடிக்கும் போல.

           அமெரிக்க தூதரகத்தை பாகிஸ்தானில் தாக்கப்பட்டால் விஷயம் வேறு. ஆனால், இங்கு சென்னையில் தாக்கியது தூதரகத்துக்கு மட்டும் பிரச்சினை அல்ல. சட்டம் ஒழுங்கு பிரச்சினை. ஒன்னுத்துக்கும் உதவாத பிரச்சினையை வைத்து அண்ணாசாலையில் அரை நாள் கபளிகரம் செய்தது உங்களுக்கெல்லாம் வெல்லம் திங்கிற மாதிரி.

           ‘துப்பாக்கி’ திரைப்படத்தில் தீவிரவாதியாக காட்டியதற்கு இவ்வளவு பேர் ஒன்னு கூட கண்டிக்கிறாங்களாம். ஆனா, ஒவாஸி பேச்சுக்கு மூடிக்கிட்டு இருப்பாங்களாம்…

          • அமெரிக்கா என்பது பாகிஸ்தானிலும் சரி, சென்னையிலும் சரி ஒரே மாதிரியான ரத்தவெறி பிடித்த டிராகுலாதான். அங்கே ரத்தபலி, இங்கே சாந்த சொரூபி என்று எண்ணுவது அறியாமை. சென்னை தூதரகத்தாக்குதல் என்பது இசுலாமிய மக்கள் மதத்திற்காக நடத்திய தாக்குதலே அன்றி அரசியல் ரீதியான காரணத்திற்கு அல்ல. அமெரிக்காவும் சரி, ஆர்.எஸ்.எஸ்ம் சரி இசுலாமிய மக்களை அப்படி மதவாதத்தில் வைத்திருப்பதையே விரும்புகின்றன. அதனால்தான் தமிழக போலீசு மட்டுமல்ல பலநாட்டு போலிசுகளும் இத்தகைய தாக்குதலை அனுமதித்தன. அரசியல் ரீதியான தாக்குதல் என்றால் அதை எங்கேயும் அனுமதிக்க மாட்டார்கள். இசுலாமிய மதவாத அமைப்புகளும் மதத்தை தாண்டி அம்மக்களை திரட்டத் துணியாது. நாங்கள் இசுலாமிய மக்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவு உழைக்கும் மக்களையும் வர்க்க ரீதியில் அணிதிரட்டி அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் முயற்சியில் உள்ளோம்.

           மற்றபடி சென்னைத்தாக்குதலில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது என்பாதல் சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்பது இந்து பத்திரிகைக்கு வாசகர் கடிதம் எழுதும் அம்பிகளின் மனநிலை. இவர்கள் பொதுவில் ஒரு நகர சுத்தி தொழிலாளர்கள் ஊர்வலத்திற்காக்க பத்து நிமிடம் காக்க வேண்டுமென்றாலும் துள்ளிக் குதிப்பார்கள். அது சகிக்க முடியாத மேட்டிமைத்தனம்.

          • ஓவாசி போன்ற லூசுகள் என்னதான் பேசினாலும் அது நடைமுறையில் வரும் சாத்தியம் கடுகளவு கூட இல்லை. ஏனெனினல் இந்தியாவில் இசுலாமிய மக்கள் சிறுபான்மையினர் என்பதோடு, அரசியல் ரீதியாகவும் தீர்மானிக்கும் சக்தியாக இல்லை, இருக்கவும் முடியாது. ஆர்.எஸ்.எஸ்இன் இந்துத்தவப் பிரச்சாரத்தால் வாடகைக்கு வீடு கூட கிடைக்க முடியாத படி அகதிகளாக வாழும் அம்மக்கள் ஓவாசி போன்ற லூசுகளை எங்கேயும் எப்போதும் ஏற்றதில்லை, எற்க மாட்டார்கள்.

           ஆனால் ஆர்.எஸ்.எஸ் பேசும் கருத்து செயல் வடிவம் வருமளவுக்கு அதற்கு ஒரு சமூக அடிப்படை இங்கே இருக்கிறது. எனவே இந்த பாசிச அபாயத்தையும், ஓவாசியின் லூசுத்தனமும் ஒன்றல்ல. குஜராத்தில் இசுலாமிய மக்களை இனப்படுகொலை செய்தது போல பதிலுக்கு அவர்கள் திருப்பி செய்ய முடியாது. ஜனயாக அமைப்புகளும், நீதிமன்றமும் இந்துமதவெறியர்களை தண்டிப்பதில்லை என்ற எதார்த்தம்தான் ஒரு சில இளைஞர்களை தீவிரவாதம் பக்கம் தள்ளிவிடுகிறது. அந்த வகையில் அதற்கும் குற்றவாளிகள் இந்து மதவெறியர்கள்தான்.

          • அவசரப்படாதீர்கள் சீனு, கட்டுரையிலேயே,

           //சாராம்சத்தில் அசாராம் பாபு பேசியதற்கும் மோகன் பாகவத்தின் கருத்துக்களுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை. பெண்கள் வீட்டுக்குள் தான் இருக்க வேண்டும், வெளியில் செய்ய வேண்டிய வேலைகளை ஆண்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் – அப்படியே வெளியே வந்து யாராவது ‘கற்பழிக்க’ வந்தால் காலில் விழுந்து கெஞ்சுங்கள் என்கிறான் இந்தச் சாமியார்.//

           என்றுதான் வருகிறது. இல்லை இருவர் பேசியதற்கும் வேறுபாடு உள்ளது என்றால் விளக்குங்களேன் முடிந்தால்! பாகவத், சாமியார் கருத்தை மறுத்துத்தான் இந்த்க் கட்டுரை எனில் இந்தக் கட்டுரையை நீங்கள் மறுக்கும் போது அவர்கள் கருத்தை ஆதரிக்கிறீர்கள் என்றுதானே அர்த்தம். இல்லை என்றால் எங்கள் கட்டுரையை எதிர்ப்பது என்றால் என்ன பொருள்? எங்கள் கட்டுரையில் எந்த வரியை, எந்தக் கருத்தை நிராரகரிக்கீர்கள் என்று சொல்லுங்கள், பிரதர்? ஆக கற்பிதம், முன்முடிவு, மூணுகால் என்று கண்ணை மூடிக் கொள்வது யார்?

          • மறுபடியும் மறுபடியும் எனக்கான பதிலை நீங்களே எடுக்கிறீர்கள். இல்லை, உங்கள் கருத்தை ஒத்துக் கொள்ளவோ/எதிர்க்கவோ வேண்டும் என்கிறீர்கள். நல்லது.

           கடைசி வரை என் கேள்விக்கு பதிலே சொல்லாமல், எப்படியெல்லாம் வளைஞ்சு நெளிஞ்சு போகிறீர்கள்.

          • Greeeeeeeeeaaaaaaaat explanation… 😀

           //அமெரிக்கா என்பது பாகிஸ்தானிலும் சரி, சென்னையிலும் சரி ஒரே மாதிரியான ரத்தவெறி பிடித்த டிராகுலாதான். அங்கே ரத்தபலி, இங்கே சாந்த சொரூபி என்று எண்ணுவது அறியாமை.//

           இது என்ன மாதிரியான பதில்? நான் கேட்டதுக்கும் நீங்க சொல்றதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?

           நான் கேட்டது, எவனோ எங்கோ எடுத்ததுக்கு ஏன்டா ரோட்டுல வந்து அடிச்சு நொருக்கறீங்கங்கிறேன், நீங்க அமெரிக்கா அப்படித்தாங்கறீங்க. 😀

           // சென்னை தூதரகத்தாக்குதல் என்பது இசுலாமிய மக்கள் மதத்திற்காக நடத்திய தாக்குதலே அன்றி அரசியல் ரீதியான காரணத்திற்கு அல்ல. அமெரிக்காவும் சரி, ஆர்.எஸ்.எஸ்ம் சரி இசுலாமிய மக்களை அப்படி மதவாதத்தில் வைத்திருப்பதையே
           விரும்புகின்றன.//

           அப்ப இஸ்லாமிய மக்களுக்கு சொந்த அறிவே இல்லிங்கறீங்களா? அமெரிக்கா தூண்டிவிட்டா இவங்கள எப்படி வேணும்னாலும் யூஸ் பன்னிக்கலாம்கறீங்க. இத கொஞ்சம் இஸ்லாமியர்கள்கிட்ட கேட்டு சொல்லுங்க. அவங்க ஒத்துக்கறாங்களா இல்ல உங்களையும் அடிச்சு நொறுக்கறாங்களான்னு.

           //அதனால்தான் தமிழக போலீசு மட்டுமல்ல பலநாட்டு போலிசுகளும் இத்தகைய தாக்குதலை அனுமதித்தன.//

           என்னாதிது? புதுசா இருக்கு! மதத்துக்காக அடிச்சு நொறுக்குங்கன்னுட்டாங்களா? யம்மாடி, முடியல.

           //மற்றபடி சென்னைத்தாக்குதலில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது என்பாதல் சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்பது இந்து பத்திரிகைக்கு வாசகர் கடிதம் எழுதும் அம்பிகளின் மனநிலை.//

           பாயின்ட்டுக்கு வந்தாச்சு.

          • // குஜராத்தில் இசுலாமிய மக்களை இனப்படுகொலை செய்தது போல பதிலுக்கு அவர்கள் திருப்பி செய்ய முடியாது.//

           வினவு அண்ணே!

           “This in turn prompted retaliatory attacks against Muslims and general communal riots on a large scale across the state, in which 790 Muslims and 254 Hindus were ultimately killed”.

           அந்த 254 இந்துக்களும் தற்கொலை செஞ்சுக்கிட்டாங்களா?

           http://en.wikipedia.org/wiki/2002_Gujarat_violence

          • நீங்கள் கொடுத்த அதே லிங்கில் Times of India claimed that 93 Muslims were killed in Police firing and only 77 Hindus, however Gujarat Police and BJP claimed that majority of 198 Hindus(excluding 59 killed in Godhra) killed were due to the Police firing and not in riots. என்று இருக்கிறது.
           இருந்தாலும் இந்த விசயத்தில் விக்கிபீடியாவின் நம்பகத்தன்மை என்பது இந்துத்தவத்தின் செல்வாக்கிற்கு உட்பட்டும் இருக்க முடியும் என்பதையும் அறிவோம்.
           குஜராத் அரசு, இந்திய அரசு, நீதிமன்றங்கள், வலதுசாரி ஊடகங்கள் என்று அனைத்தும் உங்கள் பக்கம் இருப்பதால் புள்ளிவிவரங்களை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனாலும் உண்மையை மறைக்க முடியாது.

          • //ஓவாசி போன்ற லூசுகள் என்னதான் பேசினாலும் அது நடைமுறையில் வரும் சாத்தியம் கடுகளவு கூட இல்லை.//

           80-90 கோடி பேரில் 2 லட்சம் பேர் உருப்பினராக இருக்கும் ஆர்.எஸ்.எஸ்சுக்கும், 15-20 கோடி பேரில் இருக்கும் அனைவரும் உருப்பினராக இருக்கும் மதாரசாக்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது வினவு.

           முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்கப்பார்க்காதீர்கள்.

          • எனில் அந்த 20 கோடிப்பேரும் அனைத்து இந்துக்களையும் கொன்றுவிட்டு இசுலாமிய ராஜ்ஜியத்தை தொடங்கியிருக்க வேண்டும். ஏன் இல்லை? ஒரு வேளை சீனுவுக்காக பயந்து கொண்டு இருப்பார்களோ?

           துவேசம் அறிவை மறைக்கிறது. இந்தியாவில் வாழும் இசுலாமிய மக்கள் மட்டுமல்ல, தலித், பழங்குடி மக்களும் கூட பொருளாதார ரீதியாக சுதந்திரம் இல்லாமல் ‘இந்துக்கள்’ சார்ந்துதான் வாழ்கின்றனர். ஒரு வேளை 20 கோடி தலித்துக்களும் ஒன்று சேர்ந்து ஆதிக்க சாதி இந்துக்களை கொன்று விடுவார்கள் என்றும் நீங்கள் கூறலாமே? முடியாது என்றால் அந்த காரணம் இசுலாமிய மக்களுக்கும் பொருந்தும்,

          • //‘Either you are with usl or against us’ என்னும் உயரிய சிந்தனை உங்களுடையது//

           அப்படியென்றால் உங்கள் நிலை என்ன? I am with both of you என்பதா? அதாவது விவேக் சொல்வது போல் காட்டியும் குடுப்பீர்கள் கூட்டியும் குடுப்பீர்களா?

           சரி இருக்கட்டும்.

           வினவில் இசுலாமிய அடிப்படைவாதம் பற்றி ஏராளமான கட்டுரைகள் வந்துள்ளது. அவைகளில் (மட்டும்) தான் நூற்றுக்கணக்கான பின்னூட்டங்களும் பதிவாகியுள்ளது. நீங்களே கூட சில பதிவுகளின் பின்னூட்டத்தில் குதூகலித்துச் சென்றுள்ளதாகவும் எனக்கு நினைவில் உள்ளது.

           ஆனால், இங்கே Case in point என்பது மோகன் பாகவத் பேசிய பேச்சுக்கள். ஒன்று அதை ஆதரிக்க வேண்டும் – அல்லது எதிர்க்க வேண்டும் – அல்லது ‘நடுநிலை’ வகிக்க வேண்டும் – அல்லது மூன்றாவது ஒரு நிலை எடுக்க வேண்டும்(!?)

           இதில் நீங்களாக ஒரு நிலை எடுக்க கட்டுரையின் மொழி நடை தடுக்கிறது என்பது எழுதியவரின் பிரச்சினையல்ல. உங்கள் பிரச்சினை. ஒரு சம்பவத்தை அவதானித்து சொந்தமாக ஒரு நிலை எடுப்பதற்கோ அல்லது அதை பகிரங்கமாக சொல்வதற்கோ துணிவில்லை.. பேச்சு மட்டும் தூள் பறக்கிறது. “ஏய்…என்னோட ஏரியாவுக்கு வந்து பாருடா” தலைநகரம் வடிவேலு காமெடி தான் நினைவுக்கு வருது.

           பட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் சீனு கொட்டைப்பாக்குக்கு விலை சொல்வார். எங்கே எதைப் பற்றி எழுதியிருக்கிறார்களோ அங்கே அதைப் பற்றி பேச வேண்டும் என்பது ஒரு அடிப்படை நாகரீகம். அது இல்லாட்டா ரொம்பக் கஷ்டம். ஆனால் உங்கள் இந்தத் துன்பத்திற்கு காரணம் வினவு நண்பர்கள் அல்ல; அதற்கு சாட்சாத் மோகன் பாகவத் தான் காரணம். மனுசன் வாய வச்சிகிட்டு சொம்மா இருந்திருக்கலாம்.. பாருங்க ஒங்கள இத்தினி கஷ்டப்பட்டு நெளிய விட்டுப் புட்டாரு 🙁

           வேண்டுமானால் நாம் ஜெயமோகன் பாணியில் முயற்சித்துப் பார்க்கலாம்.

           அதாகப்பட்டது, இந்து ஞான ஒளி மரபின் படி, பெண்கள் எனப்படும் உயிரினங்கள் ஆணின் இடது பாகம் என்று சொல்லலாம். அதற்காக பீச்சாங்கைப் பக்கத்தை ஒதுக்கி விட்டார்களே என்று ஐரோப்பிய மையவாதப் பார்வையில் இதைப் பார்க்கக் கூடாது. அதுவும் கூட எந்தளவுக்கு முக்கியம் என்பதை தினசரி மார்க்சீயர்கள் உள்ளிட்டு அனைவருமே காலை வேளையில் உணர்ந்திருப்பார்கள்.

           பாகவத் பேசியது கொஞ்சம் தவறு தான்… ஆனால், இரண்டாம் நூற்றாண்டிலேயே எழுதப்பட்ட பிரகதாரண்ய உபநிஷத்தில் இவ்வாறு ஒரு முனிவர் தத்துவ விசாரம் செய்துள்ளார். அவரவர்க்கு அவரவர் கடமையென்கிற இந்து தத்துவ மரபை ஐரோப்பிய கிருத்துவ மிஷணரிக் கண்ணோட்டத்தில் வைத்து ஆய்வு செய்து பார்க்கக் கூடாது…..

           சீனி, மேற்கொண்டு அப்படியே நூல் பிடித்தூப் போனீர்கள் என்றால் எங்களுக்கு இன்றைக்கெல்லாம் பொழுது நன்றாகப் போகும். கமான் ஸ்டார்ட் மீசிக்..

          • // அப்படியென்றால் உங்கள் நிலை என்ன? I am with both of you என்பதா? அதாவது விவேக் சொல்வது போல் காட்டியும் குடுப்பீர்கள் கூட்டியும் குடுப்பீர்களா?//

           சொல்லல? உங்க நாகரீகம்.

           மீண்டும் எனக்கான முடிவை எடுக்காதீர்கள்.

           //ஆனால், இங்கே Case in point என்பது மோகன் பாகவத் பேசிய பேச்சுக்கள். ஒன்று அதை ஆதரிக்க வேண்டும் – அல்லது எதிர்க்க வேண்டும் – அல்லது ‘நடுநிலை’ வகிக்க வேண்டும் – அல்லது மூன்றாவது ஒரு நிலை எடுக்க வேண்டும்(!?)//

           இரண்டில் இருந்து இப்ப மூன்று முடிவுகள்.

          • //நாங்கள் இசுலாமிய மக்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவு உழைக்கும் மக்களையும் வர்க்க ரீதியில் அணிதிரட்டி அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் முயற்சியில் உள்ளோம்.//

           இவங்கள்லாம் உழைக்கும் வர்க்கம் இல்லையா?

  • அமெர்க்க தூதரகத்தை தானே தாக்கினார்கள். அன்றைக்கு டிராபிக் ஜாம் பற்றி அக்கறையோடு கவலைப்படும் சீனு அம்பி தினம் தினம் நம்ம முதல்வர் போகும் வழிகளில் டிராபிக் ஜாம் ஆகுதே. விநாயக சதுர்த்தி அன்று சென்னை மற்றும் இந்திய நகரங்களின் ஒட்டுமொத்த போக்குவரத்தும் முடக்கப்படுகிறதே.இதற்கெல்லாம் சீனு அம்பி அழுது புரளுவார்னு நினைக்கிறேன். நாரதர் கலையில் அம்பி தேரியவராக இருக்கலாம். நாரதர் வேலை பார்க்க வரும்போது தன பின்பக்கத்தையும் கொஞ்சம் கவனித்துவிட்டுவரனும் சீனு அம்பி.

  • அந்த ஓவாசி சொன்ன கருத்துக்கு அவன அர்ரெஸ்ட் அண்ணி உள்ள வச்சிடாங்க ஆனா RSS நாதாரி எல்லாம் இன்னும் வெளியதான இருக்குதுங்க … இப்போ சொல்லு சீனு …யார பத்தி எழுதணும் …

 3. ஆர்,எஸ்.எஸ்-அய் தோலுரிக்கும் ஒரு பதிவு. இதனை நாம் படிப்பதோடு ஆர்.எஸ்.எஸ் அம்பிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

 4. // திரேதாயுகத்தின் ராமன் சம்சாரத்தை சந்தேகப்பட்டு நெருப்பில் தள்ளினான் என்றால் //

  சாகமாட்டாள் என்று தெரிந்துதான் செய்திருக்கிறான்..

  // துவாபர யுகத்தின் கிருஷ்ணனோ கேடுகெட்ட பொம்பளைப் பொறுக்கி. ஊரில் இருக்கும் பெண்களின் ஆடைகளைக் களவாடுவதையே ஃபுல் டைம் ஜாபாக வைத்திருந்தவன் தான் கிருஷ்ணன். //

  கிருஷ்ணன் அப்போது வயசுக்கு வராத ஒரு குயந்தை.. ஃஃபுல் டைம் பொம்பளைப் பொறுக்கி என்றால் ஊர்ப் பெண்கள் யாரும் ஆற்றில், அதுவும் ஆடையில்லாமல் குளிப்பார்களா..?!

  // வெள்ளைக்காரன் இந்தியாவுக்கு வரும் வரைக்கும் ராம ராஜ்ஜியத்தின் நீதி நெறிகளுக்குள் முங்கி முக்குளித்துக் கொண்டிருந்தவர்கள் தான் கைம்பெண்களை நெருப்புக்குள் தள்ளி சதி மாதாக்கள் ஆக்கினர். //

  அக்கால கட்டத்தில் ராமனின் விதவைத் தாயார்கள் யாரும் தசரதனின் சிதையில் தள்ளப்படவில்லை..

  RSS Vs நீங்கள் நடத்தும் சித்தாந்த மோதல்களில் இரு தரப்பிலும் ராம ராஜ்ஜியம் படும் பாடு… பரிதாபம்..

 5. பிரச்சனையின் மைய கருவை விட்டு சீனு வேறு பகுதிக்கு எடுத்து செல்கிறார்.அதற்கு வினவும் கூடவே வால் பிடித்து செல்கிறது….. ஏம்பா? சீனு மோகன் பாகவத் சொன்னத பத்தி உன் கருத்து என்னனு சொல்லு? முஸ்லீம பத்தி வினவுல் ரொம்ப கட்டுரை வந்திருக்கு எடுத்து படிச்சுக்க…. இப்போ டவுசட் பாண்டி சொன்ன கருத்துக்குவா? என்ன சொல்ற அதுக்கு?

  • பகாவத் சொன்னதை வினவு நேர்மையோடு அனுகும் என்று நான் நினைக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ். கூறும் ஒரு கருத்துக்கு டார்ச் லைட் அடிக்கும் வினவு, இதை விட எரியும் பிரச்சினைக்கு ஏன் டார்ச் லைட் அடிக்கலங்கிறது தான் என் கேள்வி.

   //முஸ்லீம பத்தி வினவுல் ரொம்ப கட்டுரை வந்திருக்கு எடுத்து படிச்சுக்க//

   அப்படியா? அமெரிக்க தூதரக தாக்குதல் / ஒவாஸி பத்தி வந்திருக்கா? சொல்லவேயில்ல…?

   • //பகாவத் சொன்னதை வினவு நேர்மையோடு அனுகும் என்று நான் நினைக்கவில்லை.// சரி நீங்க நேர்மையோடு அணுகி கருத்து சொல்லுங்க!

   • //பகாவத் சொன்னதை வினவு நேர்மையோடு அனுகும் என்று நான் நினைக்கவில்லை.// நினைக்கிறது, கனவு காண்கிறது என்று உங்களை கஷ்டப்படுத்தாமல் வினவு தெளிவாக இன்னதுதான் என்று எழுதிய பிறகும் நான் நினைக்கவில்லை என்று சொல்வது எப்படி சரி? எழுதியதில் என்ன தவறு என்று குறிப்பாக சொல்ல வேண்டும். மாறாக என்ன எழுதுனாலும் என் கருத்து இதுதான் என்றால் முயலுக்கு மூணு கால் கொள்கையாளன் என்று விட்டு விடுவோம்.

   • உங்களால் பொது வெளியில் ஆதரித்து பேச முடியாத அளவுக்கு கேவலமானதாக ஒரு கருத்து இந்து மரபில் உள்ளது..அதை டவுசர் பாண்டி வெளிப்படையாக பேசிவிட்டார்….அதை வினவு சரியாக பயன்படுத்தி அம்பலபடுத்திவிட்டது…… பதில் சொல்ல முடியாமல் பேந்த பேந்த முழித்துவிட்டு வினவு இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஆதரிக்கிறது என்று தனக்கு தானே தேற்றிககொள்வதை தவிர வேறு எதுவும் உங்கள் கருத்தில் இல்லை…..

  • “பிரச்சனையின் மைய கருவை விட்டு சீனு வேறு பகுதிக்கு எடுத்து செல்கிறார்.அதற்கு வினவும் கூடவே வால் பிடித்து செல்கிறது…. இதுதானே அவாளின் சிறப்பு தகுதியே.. பக்கத்து இலைக்கு பாயசம் கேட்பார்கள் அக்கறையோடு. அதன் நோக்கம் நமக்கு புரியாதா ???

   • உம் உறவைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்ய முயலும் போது, அண்ணா என்று சொல்லச் சொல்வீரா? அல்லது அரிவாளை எடுத்துச் செல்வீரா?

 6. //பகாவத் சொன்னதை வினவு நேர்மையோடு அனுகும் என்று நான் நினைக்கவில்லை// நேர்மையான அனுகுறதுனா எப்படி? டவுசரு ரொம்ப நல்லவரு, அவரு பொண்கள் ஆணுக்கு சேவை செய்து வாழனும்னு சொல்லலநு சொல்லனுமா? சரி நீங்க நேர்மையா அணுகி பொழிப்புரை கொடுங்க பாப்போம்

 7. //ஓவாசி போன்ற லூசுகள் என்னதான் பேசினாலும் அது நடைமுறையில் வரும் சாத்தியம் கடுகளவு கூட இல்லை.//

  // எனில் அந்த 20 கோடிப்பேரும் அனைத்து இந்துக்களையும் கொன்றுவிட்டு இசுலாமிய ராஜ்ஜியத்தை தொடங்கியிருக்க வேண்டும். ஏன் இல்லை? ஒரு வேளை சீனுவுக்காக பயந்து கொண்டு இருப்பார்களோ? //

  வினவு,

  நீங்கள் ஒவாய்ஸியை கண்டிக்க உங்களுடைய நிலைப்பாட்டிலேயே அதிக காரணமிருக்கிறது.. சிறுபான்மை முசுலீம்களுக்காக நீங்கள் இந்து மதவெறியர்களை எதிர்த்து போராடிக்கொண்டிருப்பதாகக் கூறிக்கொண்டிருக்கும் போது, போலீசை 15 நிமிடம் வேடிக்கை பார்க்க சொல்லி சவடால் விடும் ஒரு நபர் முஸ்லீம்களை ஆபத்துக்குள் தள்ளும், இசுலாமிய சமுகத்தின் விரோதியாகத்தான் இருக்க முடியும்..

  // ஒரு வேளை 20 கோடி தலித்துக்களும் ஒன்று சேர்ந்து ஆதிக்க சாதி இந்துக்களை கொன்று விடுவார்கள் என்றும் நீங்கள் கூறலாமே? முடியாது என்றால் அந்த காரணம் இசுலாமிய மக்களுக்கும் பொருந்தும், //

  சரியான காரணம் அல்ல.. தலித் தலைவர்கள் போலீசு பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றுதான் கூறுகிறார்களே தவிர போலீசை விலகி நிற்கச் சொல்லி ஆதிக்க சாதிவெறியர்களுக்கு சவால் விடும் முட்டாள்களல்ல..

  • ஓவாசியின் கருத்தை அனைத்து முசுலீம்களும் ஏற்பதைப் போல சித்தரிக்கிறது உங்களது புரிதல். ஓவாசியின் கட்சி ஹைதராபாத்தில் பெரும்பான்மையாக வாழும் இசுலாமியர் பகுதிகளில் உள்ள கட்சி என்பதால் அங்கே இத்தகைய சவுடால்களை அடிக்க முடியும். இதற்கு முன்பும் பலமுறை இவர் இது போன்று பேசியிருக்கிறார். மற்றபடி பெரும்பான்மை இசுலாமிய மக்கள் இத்தகைய கருத்தை கொண்டிக்கவில்லை என்பது வலிந்து சொல்ல வேண்டியது இல்லை. ஆனால் ஆர்.எஸ்.எஸ் வானரப்படையைச்சேர்ந்த பலர் இந்தியா முழுவதும் சிறுபான்மையின மக்களை ஒழித்து விடுவதாகவும், பாக்கிற்கு துரத்துவதாகவும், இன்னும் பல கோணங்களில் பாசிசத் திமிருடன் பேசினர், பேசி வருகின்றனர். இதுதான் உண்மையிலே கவலைப்படத்தக்க விசயம்.

   • ஒவாய்சியின் பேச்சை முஸ்லீம்கள் அனைவரும் ஏற்கமுடியாது என்பதுதான் எனது புரிதல்.. இந்துக்கள் அனைவரும் அதை புறந்தள்ளுவார்கள் என்றும் கூறமுடியாது.. அதனால்தான் அதை நீங்கள் கண்டிக்க வேண்டிய அவசியத்தை குறிப்பிட்டேன்.. அதையே சீனுவின் கேள்வியும் உணர்த்துகிறது..

    • இப்படி வளச்சு வளச்சு கேள்வி கேட்டு னீங்களும் சீனுவும் மடக்குனீங்கன்ன அப்புறம் வினவு அப்பீட்டாயிருவார்,

   • When you say the statement of ‘Ovasi’ is not accepted by Majority of muslims, then we have to accept. But when we say RSS is having few laksh members in a country of 80 crore hndus and majorty of hindus don’t support then then you are not ready to accept. Still giving a projection in TN(where they literally does not exists) that RSS will loot the entire nation. Agan I am repeating – Muslim fundamentalism cannot be tolerated at any cost. Can’t they ignore that movie? Don’t they have such patience in so called ‘samadana margam’; If they want to show ther agitation, then they could have go for 1 day ‘fastng’ !! – why across world they take ‘violence’ as mode of their ‘agitation’ !

    • ///பெண்கள் கணவனின் தேவையை நிறைவேற்றிக் கொண்டு வீட்டை ஒழுங்காக பராமரித்து வர வேண்டுமாம்///
     ஒரு வேளை ஆர் எஸ் எஸ் தனி பெருபான்மை பெற்று ஆட்சிக்கு வந்தால் பெண்கள் பள்ளிகளில் வெடி குண்டு வெய்ப்பார்களோ (தாலிபான்கள் போல்)

      • why should an RSS leader should make comments like ///பெண்கள் கணவனின் தேவையை நிறைவேற்றிக் கொண்டு வீட்டை ஒழுங்காக பராமரித்து வர வேண்டுமாம்///

       if he really mean that he is in an aim to close or bomb all the girl schools

       and your kind of people will talk about wahabi and taliban but won’t even face the comment of an RSS leader

       further ///சீனு:பகாவத் சொன்னதை வினவு நேர்மையோடு அனுகும் என்று நான் நினைக்கவில்லை.///

       நேர்மையோடு அணுகி கருத்து சொல்லுங்க!

 8. இந்து மதம் என்பது அகில உலகத்திலேயே இந்தியா, நேப்பாளம் ஆகிய இரண்டு நாடுகளில் (மட்டும் தான்) பெரும்பாண்மை மதம். இந்த இரண்டு நாடுகளும் உலக நிலப்பரப்பில் வெறும் 2.5% மட்டுமே. உலகில் உள்ள பெரும்பாண்மை நாடுகள் கிறிஸ்த்தவ அல்லது முஸ்லீம் பெரும்பாண்மை நாடுகளே. சுருங்க சொன்னால் இவ்வுலகின் மிகப்பெரிய மத அடையாளம் ஆபிரகாமிய மத அடையாளம் தான். ஒருவர் இந்தியாவை விட்டு வெளியே போனால் கிறிஸ்த்தவ அல்லது இஸ்லாமிய பெரும்பாண்மை நாட்டில் தான் கால் வைக்க வேண்டி வரும். விதி விலக்காக சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகள் புத்த மத அடையாளத்தை கொண்டவையாக இருந்தாலும் இதனால் எந்த அரசியல் ரீதியான ஆதரவினையும் இந்து மதம் (ஏன் இந்தியாவே கூட) எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் புத்த மதம் இந்தியாவில் தோன்றியிருந்தாலும் மேற்கண்ட நாடுகளில் அந்தந்த மண்ணின் தன்மைக்கு ஏற்ப மாறிய வடிவம் தான் பின்பற்றப்படுகிறது (உதாரணமாக ஜப்பானில் அம்மண்ணுக்கு உரித்தான ஜென் வடிவ புத்தமே பின்பற்றப்படுகிறது. அதற்கும் இந்து மதத்துக்கும் அல்லது இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை). மேலும் இந்துக்கள் எனப்படுவோர் சிறுபாண்மையினராக வாழும் பாக்கிஸ்தான், அப்கானிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, மலேசியா ஆகியவற்றில் அவர்களுக்கு என்ன விதமான மரியாதை கிடைக்கிறது என்பது விவரம் அறிந்தவர்களுக்கு தெரியும். பாரசீக மொழி அகராதியில் இந்து என்றால் திருடன் என்றே பொருள் கூறப்பட்டுள்ளது. மேற்கத்திய உலகில் தியானம், யோகாசனம், ஆயுர்வேதம் ஆகியவற்றை இந்து மதத்தில் இருந்து பெறுவதை விட புத்த மதத்தில் இருந்து பெறுவதையே வெள்ளை இனத்தவர் விரும்புகிறார்கள். ஆக இந்து மதம் மட்டுமல்லாது அதை பின்பற்றுபவர்களும் இந்த ஆபிரகாமிய உலகில் தனிமைப்படுத்தப்பட்டவர்களே!. இதையெல்லாம் மறைக்கும் விதமாகத்தான் இந்து மதம் உலக மதங்களுக்கு எல்லாம் தாய் என்று இந்த இந்து மதவெறி அரை டவுசர் கா(லி)வி கும்பல் வாய் கூசாமல் கப்சா விட்டு வருகிறது. மேற்காசியாவில் தோன்றிய ஆபிரகாமிய மதங்களுக்கும் அப்கானிஸ்தான் பாக்கிஸ்தான் எல்லையில் தோன்றிய இந்து மதத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? சுருக்கமாக சொன்னால், அரசியல் ரீதியாக பார்க்கும் போது இந்து மதமானது இந்த உலகில் இரண்டே இரண்டு நாடுகளில் மட்டுமே இருக்கிறது. கிறிஸ்த்தவர்களும் இஸ்லாமியர்களும் இந்தியாவில் வேண்டுமானால் சிறுபாண்மையினராக இருக்கலாம். உலகளவில் அவர்கள் தான் பெரும்பாண்மையினர். ஆகையால் இந்தியாவில் இந்து மனுதர்ம வெறி கும்பல் ஒரு கிறிஸ்த்தவனை தாக்கும் போது அது இவ்வுலகின் 126 கிறிஸ்த்தவ பெரும்பாண்மை நாடுகளில் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. ஒரு இஸ்லாமியனை தாக்கும் போது அது 50 இஸ்லாமிய பெரும்பாண்மை நாடுகளில் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. மேலும் ஐரோப்பா மற்றும் அமெரிக்க கண்டத்தில் இருக்கும் கிறிஸ்த்தவ பெரும்பாண்மை நாடுகள் கல்வி, பொருளாதாரம், சமூக வளர்ச்சி, தொழில்நுட்பம், இராணுவ வலிமை ஆகியவற்றில் மிகவும் முன்னேற்றம் அடைந்து உலகையே கட்டுப்படுத்துபவை. இந்தியா பயன்படுத்தும் பெட்ரோலியத்தில் கணிசமான அளவு அரபு நாடுகளில் இருந்து வருபவை. இஸ்லாமிய மத அடையாளம் கொண்ட இந்த அரபு நாடுகளில் பல லட்சம் இந்தியர்கள் நாலாவித தொழில்களிலும் இருந்து கொண்டு பணம் சம்பாதிக்கிறார்கள். இந்த இந்தியர்கள் அனுப்பும் அன்னிய செலாவணியை நம்பி இந்தியாவில் பல மாநிலங்கள் உள்ளன (குறிப்பாக கேரளம்). பல கிறிஸ்த்தவ பெரும்பாண்மை நாடுகள் (குறிப்பாக மேற்கத்திய நாடுகள்) மத சார்பற்றதன்மை (Secular) தன்மை கொண்டவைகளாக உள்ளன. சில இஸ்லாமிய பெரும்பாண்மை நாடுகளும் பிற மத விவகாரங்களில் நீக்குப்போக்கு தன்மை கொண்டவைகளாக உள்ளன. ஆகையால் தான் இவ்வுலகில் இந்தியா, நேப்பாளம் ஆகிய நாடுகள் இந்து பெரும்பாண்மை நாடுகளாக சொல்லிக்கொண்டு காலம் தள்ள முடிகிறது. இந்தியாவை சேர்ந்த பல லட்சம் பேர் உலகின் ஏனைய பகுதிகளில் பணி புரியவோ (குறைந்த கூலிக்காவது) அல்லது குடியிருக்கவோ முடிகிறது. இந்தியாவில் இருக்கும் இந்து மத வெறிக்கும்பல் பின்பற்றும் அரசியலையும் அவர்களின் மத சிறுபாண்மையினரை தாக்கும் பாணியையும் அனைத்து ஆபிரகாமிய நாடுகளும் பின்பற்ற ஆரம்பித்தால் இவ்வுலகில் இந்துக்களும் இந்து மதமும் சுத்தமாக துடைத்தெறியப்படுவது மட்டுமன்றி இந்தியா, நேப்பாளம் ஆகிய நாடுகளும் பேரழிவுக்கு ஆட்படும். மேலும் இந்து மதவெறி கும்பலின் ஆபிரகாமிய மதங்களுக்கு எதிரான துவேஷத்தால் கிறிஸ்த்தவர்களையும் இஸ்லாமியர்களையும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில் ஆபிரகாமிய மதங்கள் உலகளவிலானவை. இந்தியாவில் பெரும்பாண்மையாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த நாட்டின் அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றில் தங்கள் பங்கு குறித்து தற்போது தான் கவலைப்பட ஆரம்பித்துள்ளார்கள். இந்த மக்களின் உரிமைக்கான உணர்வினை திசைதிருப்ப தான் இந்துத்துவ அரசியல் திட்டமிட்டு பயன்படுத்தப்படுகிறது.

 9. ///பெண்கள் கணவனின் தேவையை நிறைவேற்றிக் கொண்டு வீட்டை ஒழுங்காக பராமரித்து வர வேண்டுமாம்///
  ஒரு வேளை ஆர் எஸ் எஸ் தனி பெருபான்மை பெற்று ஆட்சிக்கு வந்தால் பெண்கள் பள்ளிகளில் வெடி குண்டு வெய்ப்பார்களோ (தாலிபான்கள் போல்)

  • இல்லன்னா ஆர்.எஸ்.எஸ் கற்பழிப்பு சேவா சங் என்று ஆரம்பித்து வீட்டை விட்டு வெளியே வர பெண்களை எல்லாம் கற்பழிக்க சொல்லுவாங்களோ….

 10. ” இந்தியாவில் பெரும்பாண்மையாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த நாட்டின் அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றில் தங்கள் பங்கு குறித்து தற்போது தான் கவலைப்பட ஆரம்பித்துள்ளார்கள். இந்த மக்களின் உரிமைக்கான உணர்வினை திசைதிருப்ப தான் இந்துத்துவ அரசியல் திட்டமிட்டு பயன்படுத்தப்படுகிறது.” மிக மிக மிக சரியான கருத்து இது. நாட்டின் அதிகார உயர் பதவிகளில் 50% பிராமிணர்களிடம் தான் உள்ளது. அதை தக்க வைக்கவும் அதிகப்படுத்தவும் தான் இந்துத்துவா பயன் படுத்தப்படுகிறது. சும்மா இந்துத்துவா என்று சொன்னால் ஆரியர்களின் பின்னால் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் வந்துவிடுவார்களா என்ன ? இதோ இந்து மதத்தையும் இந்துக்களையும் அழிக்க இன்னொரு மதத்துக்காரன் முயல்கிறான் பாருங்கள் என்கிற ரீதியில் சீன் கிரியேட் பண்ணுகிறார்கள்.இப்படி பண்ணுபவர்கள் யாரு???? ஆரியர்களை தவிர வேறு எந்த மக்களும் இல்லை.இவர்களுக்கு ஆரிய சார்பு மீடியாக்கள் பெரும்பலம். இந்த யுக்திக்காக உருவாக்கப்பட்டது தான் அயோத்தி ராமர் கோயில் பிரச்னை,இதன்மூலம் முஸ்லீம்களின் மீது பெரும்பான்மையினர்களிடம் விரோத போக்கு ஏற்படுத்துவது. இதன் தொடர்ச்சியாக இவர்களின் செயல் எந்த அளவிற்கு சென்றுவிட்டது என்றால்(சம்ஜயோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, சபர்மதி எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்காகுண்டுவெடிப்பு,கோவா குண்டுவெடிப்பு, மாலேகான் குண்டுவெடிப்பு, இப்படி நிறைய) தன சகோதரர்களையே பொது இடங்களில் குண்டு வைத்து கொன்று குவித்து அந்த பலியை முஸ்லீம்கள் மீது சுமத்தும் அளவிற்கு சென்றுவிட்டது. கோத்ரா ரயிலேரிப்பும் இவர்கள் கைவரிசைதான். எவ்வளவு கொடூரமான அருவருப்பான செயலையும் செய்யவும் துணியுது இந்த காவிக்கூட்டம். இவர்களின் முகத்திரை கிழிந்துக்கொண்டிருக்கிறது.

  • //கோத்ரா ரயிலேரிப்பும் இவர்கள் கைவரிசைதான்.//

   உங்களை போன்றவர்களின் இப்படிப்பட்ட கருத்துகளுக்காகவே ‘வாழ்க ஆர்.எஸ்.எஸ்; வாழ்க பாஜக’

   • பெரியசாமி, இந்தியன், சொன்னதை மறுக்க முடியாமல் விரக்தியில் டவுசர்பாண்டிகளை வாழ்த்திவிட்டு போய்விட்டார் சீனுஅம்பி. நியாயங்கள் புரிகிறது. பார்பானியம் ஏற்க தடுக்கிறது.

 11. ஆர்.எஸ்.எஸ் ஐ ஆதரிக்கும் டவுசர் பாண்டிகளிடம் இருந்து பார்ப்பனீயம் ஒழிக! என்ற கோஷத்தையா எதிர்பார்க்க முடியும்?

 12. ஏக பத்தினி விரதன் (?) இராமனைப் போற்றும் தேச பக்தியாளர்கள் 60,000 மனைவிமார்களைக் கொண்டிருந்த தசரதனையும் (?) ஏற்றுக்கொண்டவர்கள் தானே!! ஆக முரண்பாடான சித்தாந்தத்தில் மூழ்கிக் கிடக்கும் இவர்களிடமிருந்து இப்படிப்பட்ட தத்துவங்களை எதிர்பார்ப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. இவர்கள் திருந்த மாட்டார்கள்.

 13. ஆர்.எஸ்.எஸ் ஐ ஆதரிக்கும் டவுசர் பாண்டிகளிடம் இருந்து பார்ப்பனீயம் ஒழிக! என்ற கோஷத்தையா எதிர்பார்க்க முடியும்?நச்

 14. பழிக்குப் பழி என்று ஏண் சண்டை போடுகிறீர்கள்? இனிமேலாவது எல்லோரும் சமம் என்று ஒப்புக்கொள்ளுஙகளேன் ! சட்டஙகள் எல்லாம் ஆண் பெண் விதியாசமில்லாமல் இருக்க திருத்தப்படுகின்ற்னவே! சாதி வித்தியாசமில்லாதிருக்க மதநூல்கள் திருத்தப்பட்டாலென்ன? உண்மையை ஒப்புக்கொண்டு , வன்முறையை அனைவரும் கைவிடவேண்டும்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க