Saturday, May 8, 2021
முகப்பு இதர கேலிச் சித்திரங்கள் காடுவெட்டி சத்குரு ! நாட்டை விற்கும் மோடி !! கேலிச்சித்திரங்கள்

காடுவெட்டி சத்குரு ! நாட்டை விற்கும் மோடி !! கேலிச்சித்திரங்கள்

-

நாங்க ஆளையே அசால்ட்டா வெட்றோம்.. நீ மரத்தை வெட்னதுக்கா தமிழ்நாட்ல இந்த … கத்து கத்துறானுங்க ?

விவசாயிகள் சாவால் தமிழ்நாடே எழவு வீடா இருக்கும் போது.. காட்டை அழிச்சி சிவராத்திரி கொண்டாடுற இவனுங்கதான் உண்மையான ஆன்டி சோஷியல் எலிமெண்ட்ஸ். உதைச்சி விரட்டுங்க மக்களே இவனுங்கள..

ஓவியம் : முகிலன்
palachennaitn@gmail.com
பேச: 95518 69588

இணையுங்கள்:

 1. puthukorrai puthukottai il janaakayam olikirathu ,makkal viruppathirku mathippalikatha yemartru kaara arasu.jallikaatu pirachanai pola intha pirachanaiku, maanavargar vanthal nalla irukum.athuvum illama intha mathiri kadavul pera solli yemathuravangalauum makkal ethirkanum

 2. சிவன் சொத்து குல நாசம் என்பார்கள்.ஜக்கியும் மொக்கியும் சிவனை வைத்து நாட்டைக் கொள்ளையடிக்கிறார்கள்.விவசாயிகள்,தொழிலாளர்கள்,பாட்டாளிகளின் குலம் தான் நாசமடைகிறது.ஜக்கி ஒரு சந்தி சிரித்த கிரிமினல்.மோடி உலகறிந்த கிரிமினல். எல்லா எதிர்ப்பையும் துச்சமாக்கிவிட்டு சிவன் ராத்திரி கொண்டாடுகிறார்கள்.ஆனந்த அலையில் கண் மூடி மோனத்தில் இருந்த சிவனே இந்தக் கிரிமினல்கள் வருவதை ஓரக் கண்ணால் பார்த்து அதிர்ச்சியடைகிறார்.ஓவியர் முகிலன் போல் நாமும் இதை உணரவேண்டும்.இவிங்களுக்கு தமிழ் நாடு ஆடுகளமாப் போச்சு பாருங்க!

 3. காடு,மலை, கல், பொருள் என
  காணும் இடமெல்லாம்ஆதியோகி
  ===========
  காடு,மலை, கல், பொருள் என
  காணும் இடமெல்லாம்
  பரவி கிடக்கும்
  பரம்பொருள் நான்.

  எனக்கு மானிட உருவளித்தாய் மனிதா
  மிக மகிழ்ச்சி.

  முரட்டு பக்தன் ஒருவன்
  காட்டுப்புலியின் தோலைஉரித்து
  மானம்காக்க உடுப்பு தைத்தான்.
  நன்றியுரைத்தேன்

  நீலவண்ண மேனியழகை
  கலைஞனொருவன் கடன் கொடுத்தான்.
  கற்பனையை வியந்தேன்.

  சம்சார கடலினிலே மூழ்கிய ஒரு பக்தன்
  திருமணங்கள் செய்துவைத்து
  சில பிள்ளைகளும் பெற வைத்தான்.
  ரசித்தேன்.

  குறும்புக்கார பக்தனொருவன்
  கழுத்தில் பாம்பை சுற்றிவிட்டு
  கட்டுக்கதை எதையோ விட்டான்.
  சிரித்தேன்.

  கபாலத்தின்மேலே கங்கைநதி
  ஓட விட்டான் ஒருவன்.
  நெளிந்தேன்.

  கையில் சூலம் ஒன்றைகொடுத்து
  அழிக்கும் கடவுள் நீ தான் என்றான்.
  அதிர்ந்தேன்.

  இதுபோல் பலபல..
  குழந்தையின் கிறுக்கலை
  ரசிக்கும் தகப்பன்போல்
  கோபம் ஏதும்கொள்ளாமல் -உங்கள்
  கோமாளிதனங்களை ரசித்துவந்தேன்.

  ஆனால்
  இன்று
  நெற்றிகண் எனஒன்றிருந்தால்
  திறந்திருப்பேன் உலகழிக்க,
  ஜக்கி எனும்
  பக்தி பதரால்.

  ஆக்கிரமிப்பு நிலத்திலா
  ஆதிபகவன் குடியிருப்பு?
  ஆயிரம் மரங்கள் பலிகொடுத்தா
  ஆன்மிகசின்னம் எனக்கு?
  அழகுமலைகள் சிதைத்தா,
  ஆனந்த பரவசம்?
  அவமானம்.

  ஆயிரம் மரங்களை வெட்டியெறிந்து
  அதன்மேல் ஒருகல்சிலை வைத்து
  ஆதியோகியென புதுப்பெயர் சூட்டி
  ஆனந்ததாண்டவம் ஆடுகிறான்.
  விளம்பரப்படுத்தி – என்னையும்
  வியாபாரப்பொருளாய் மாற்றிவிட்டான்
  யாரும் இங்கு வர வேண்டாம்
  கடவுளின் முகவரி இதுவல்ல.

  இவனை
  தண்டிக்க ஏதும் தேவையில்லை
  கர்மவினைகளின் கணக்குப்படி
  அடுத்தபிறவியில் இவன் மரமே.

  என்னை
  கல்சிலை எதிலும் தேட வேண்டாம்
  சுவாமிகள் காலடி நாட வேண்டாம்
  காணும் எதுவும் கடவுள்தான்.
  உன்னுள் நான் இருக்கின்றேன்
  உணர கொஞ்சம் முயற்சிகள் செய்!!

  வெட்டுபட்ட மரங்களினால்
  காயப்பட்டு கிடக்கின்றேன்
  அர்ச்சனை செய்யும் காசைவைத்து -ஒரு
  ஆயிரம் மரங்கள் நட்டுப்போ,
  அவை வாடாமல் நீருற்றி
  பரம்பொருள் காலடி தொட்டுபோ…
  பரவி கிடக்கும்
  பரம்பொருள் நான்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க