Sunday, October 26, 2025

ஈழம் : திருச்சியில் பு.மா.இ.மு. போராட்டங்கள்!

7
ஈழத்தமிழன படுகொலைக்கு நீதிகேட்டு ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும் பங்காளி அய்.நா-வுக்கும் காவடி தூக்குவதை நிராகரிப்போம்! நூரம்பர்க் போர்க் குற்ற விசாரணையைப் போன்றதொரு விசாரணையைத் தவிர வேறு எதையும் ஏற்க மறுப்போம்!

ஈழப் படுகொலை: தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம்!

1
ஈழத்தமிழினப் படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டுமெனில் ஐ.நாவிற்கும், டெல்லிக்கும் காவடி தூக்குவதை நிராகரித்து தமிழகத்தில் மீண்டும் மாணவர் எழுச்சியைத் தோற்றுவிப்போம்.

”இப்படியொரு சோகத்தை நான் கண்டதேயில்லை”

16
கண்டவை கேட்டவைகளில் ஒரு சிறு துளியையாவது நான் எழுத நினைக்கிறேன். ஏனென்றால் நாம் அனைவரும் இதைத் தெரிந்து கொண்டாக வேண்டும். எனக்கும் யாரிடமாவது சுமையைக் கொஞ்சம் இறக்கி வைக்கவேண்டும்.

ராஜபக்சேவை தண்டிப்பது சாத்தியமா? தோழர் மருதையன் நேர்காணல்!

69
வழிமுறையிலும், இலக்கிலும் கொள்ள வேண்டிய பாதை குறித்து எளிமையாக மட்டுமின்றி வலிமையாகவும் முன்வைக்கும் இந்த பார்வை ஈழம் குறித்த தொகுப்பான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும்.

ஈழம் : தேவை முற்றிலும் புதியதொரு கொள்கை – நடைமுறை!

28
உலகின் பிற்போக்கு, பாசிச அரசுகளின் தயவை நம்புவதற்கு மாறாக, ராஜபக்சேக்களின் பாசிசத்துக்கு எதிராகப் போராடும் சிங்கள ஜனநாயகவாதிகள் உட்பட உலகின் முற்போக்கு, புரட்சிகர சக்திகளின் வர்க்க ஒற்றுமையைக் கட்டிப் போராடுவதுதான், சிரமமானது என்றாலும் அவசியமானது, உறுதியானது, சரியானது.

பா.ஜ.க-காங் கூட்டணி அரசுக்காக அப்சல் குரு கொலை – அருந்ததி ராய்

10
காஷ்மீர் மதராசாக்களில் கொட்டும் சவுதி அரேபிய (சவுதி அரேபியா, அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடு ) பணத்தை இந்த அரசாங்கம் கண்டும்காணாமல் இருக்கும் மர்மத்தை எப்படி புரிந்து கொள்வது?

பூபிந்தர் சிங் ஹூடா முதலமைச்சரா, ரவுடியா ?

4
“நான் ஹரியானாவின் மகாராஜா. என் ஏரியாவிலேயே பிரச்சனை பண்ணுவதற்கு உங்களுக்கு என்ன தைரியம்!" என்று முழங்கினாராம் ஹூடா.

துணிகளின் மதிப்பு தொழிலாளிகளுக்கு இல்லை!

0
உடலையும் உயிரையும் சேர்த்துப் பிடித்து வைத்துக் கொள்வதற்கு தேவையான அடிப்படை சம்பளத்துக்கு கூட 37 நாட்கள் வேலை நிறுத்தம் செய்து போராட வேண்டியிருக்கிறது.

இசுலாமிய மதவெறியர்களை எதிர்த்து வங்கதேச எழுச்சி!

26
பெரும்பான்மை மக்கள் இசுலாத்தையும், இசுலாமிய மதவெறியையும் விட ஜனநாயகத்தையும், நீதியையும் பெரிதாக கருதுகிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இந்துத்துவ வெறியை தூண்டி விடும் சங்க பரிவாரங்கள் வரலாற்றின் கல்லறைக்கு போவது உறுதி.

போஸ்கோ எதிர்ப்பு போராளிகள் கொல்லப்பட்டனர்!

3
அரசு, பன்னாட்டு நிறுவனங்களுக்காக சொந்த நாட்டு மக்களை குண்டுவீசிக் கொல்லவும் தயங்காது என்பதற்கு இந்த நால்வரது படுகொலை ஒரு நிரூபணம்.

குடிக்க நீரில்லை, குளியலோ நீச்சல் குளங்களில்! – சாய்நாத்

5
தண்ணீர் எவ்வளவு இருக்கிறது என்பது எந்த அளவு எவ்வளவு முக்கியமோ அந்த அளவு முக்கியம் தண்ணீரை எதற்கு பயன்படுத்துகிறோம் என்பது. தண்ணீர் யாருக்கு சொந்தமானது, யார் அதை கட்டுப்படுத்துகிறார்கள் என்பதும் முக்கியம்.

பிணத்தையும் விட்டு வைக்காத வன்னிய சாதிவெறி!

26
சேரிப்பிணம் என்பதால் சாதி வெறியுடன் தாக்கி கலவரம் செய்த வன்னிய சாதி வெறி - கடலூர் அருகே நடந்த உண்மைச் சம்பவம்!

நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்!

17
உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த சுரண்டல் அமைப்பை தூக்கி எறிய போராட வேண்டும். அந்த ஐக்கியத்துக்கும் நீண்ட போராட்டத்துக்கும் ஒரு பகுதிதான் இந்த இரண்டு நாள் வேலை நிறுத்தம்.
ஈவன் த ரெயின்

Even the Rain (2009) – வியர்வைத் துளிகளையும் திருடுவார்கள் !

5
”அந்நிய முதலீடு இல்லாமல் நாட்டின் தண்ணீர் தேவையை நிறைவு செய்வது சாத்தியமில்லை. பணம் மரத்தில் காய்ப்பதாக மக்கள் நினைக்கிறார்கள்” மன்மோகன் சிங் சொன்ன அதே வசனம்.

மாருதி சுசுகி தொழிலாளர்களுக்கு ஆதரவாக – திருச்சியில் ஆர்ப்பாட்டம் !

1
பயங்கரவாதத்திலேயே மிகக்கொடூரமானது முதலாளித்துவ பயங்கரமே என்பதோடு இது உலகம் முழுவதும் உழைப்பாளி மக்களின் உயிரையும், உடமைகளையும் சூறையாடி வருகிறது.

அண்மை பதிவுகள்