Wednesday, February 21, 2024
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்மரக்காணம் கலவரம் : உண்மை அறியும் குழு அறிக்கை !

மரக்காணம் கலவரம் : உண்மை அறியும் குழு அறிக்கை !

-

மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
702, ஜங்சன் ரோடு, விருத்தாசலம், கடலூர் மாவட்டம்.
பேச : 9443260164

நாள்: 30-04-13

மரக்காணம் கலவரம் பற்றிய உண்மை அறியும் குழு அறிக்கை
(முதல் நிலை அறிக்கை)

25-4-13 அன்று வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை திருவிழாவிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பா.ம.க.வினர் ஆயிரக்கணக்கான வாகனங்களில் சென்றுள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் மரக்காணம் வழியாக சென்ற போது பகல் 12 மணியளவில் கலவரம் ஏற்பட்டுள்ளது. இக்கலவரத்தில் கட்டையன் தெரு தலித் சமூகத்தை சேர்ந்த சேட்டு என்பவரும், வன்னியர் தரப்பில் விவேக், செல்வராஜ் என்பவரும் உயிரிழந்துள்ளனர். போலீசு துப்பாக்கிச் சூட்டில் (ரப்பர் குண்டு) பா.ம.க. தரப்பில் நான்கு பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பா.ம.க வினரின் தாக்குதலில் தலித்துக்கள் தரப்பில் மூன்று பேருக்கு தலையில் பலத்த காயம் என பத்துக்கும் மேற்பட்டோர் காயம்பட்டுள்ளனர். மூன்று அரசு பேருந்துகள் எரிக்கப்பட்டுள்ளன. நான்கு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இரு சக்கர வாகனம் ஒன்றும், இன்னோவா காரும் கொளுத்தப்பட்டுள்ளன. கட்டையன் தெருவில் பத்து வீடுகளும், கழிக்குப்பத்தில் இரண்டு வீடுகளும், கூனிமேடில் ஒரு கறிக்கடையும் கொளுத்தபட்டதுடன், பல கடைகள் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. பொருள்களும் சூறையாடப்பட்டுள்ளன. டி.வி.எஸ் 50 வண்டி ஒன்றும் அடித்து சேதப்படுத்தப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட காவல்துறை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது ஏழு வழக்குகள் பதிவு செய்துள்ளது. பாதிப்புகள் குறித்தும், கலவரத்திற்கான காரணம் பற்றியும் கண்டறிய மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு 28-4-13 அன்று நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து விசாரித்தோம்.

உண்மை அறியும் குழுவினர் – மனித உரிமை பாதுகாப்பு மையம் ( HRPC )

வழக்கறிஞர்.சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர்
வழக்கறிஞர்.ச.செந்தில்குமார், செயலாளர், கடலூர் மாவட்டம்.
வழக்கறிஞர்.ர. புஷ்பதேவன், இணை செயலாளர், கடலூர் மாவட்டம்
வழக்கறிஞர்.பி.அருள் பிரகாஷ்
திரு.சங்கர்,
திரு.எஸ்.பிரகாஷ்
திரு.சந்திரசேகரன்

மரக்காணம் காவல் நிலையத்திற்கு 1 கி.மீ. முன்பாக மெயின் ரோட்டிலிருந்து உள்புறமாக சுமார் அரை கி.மீ. சென்றால் இருப்பது தான் கட்டையன் தெரு. தலித் மக்கள் சுமார் 4,000 குடும்பங்களுக்கு மேல் இங்கு வசிக்கின்றனர். கட்டையன் தெருவிற்கு செல்லும் சாலையைத் தவிர பிற பகுதியில் தைல மரங்கள் மற்றும் முந்திரி மரங்கள் அடர்த்தியாக உள்ளன. இவை வனத்துறைக்கு சொந்தமானவை.

பகல் 12 மணியளவில் தலித் இளைஞர்கள் நான்கு பேர் மெயின் ரோட்டில் மாநாட்டுக்கு சென்ற வன்னியர்களால் தாக்கப்படுகின்றனர். அதில் ரமேஷ் என்பவர் சுயநினைவிழக்கிறார். இச்செய்தி கேள்விபட்ட தலித் மக்கள் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள சாலை வழியாக மெயின் ரோட்டுக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட முயற்சிக்கின்றனர். இதனால் மாநாட்டுக்கு செல்லும் வாகனங்கள் தடைபடுகின்றன. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் தலித் மக்களை ஊருக்குள் செல்லும்படி விரட்டுகின்றனர். மாநாட்டுக்கு வந்தவர்களை சாலையிலிருந்து கலைந்து போகும்படி எச்சரிக்கின்றனர். இந்நிலையில் வாகனங்கள் கொளுத்தப்படுகின்றன. போலீசார் வானத்தை நோக்கி சுடுகின்றனர், பிறகு கூட்டத்தை பார்த்து ரப்பர் குண்டுகளால் போலீசார் சுடுகின்றனர். பா.ம.க.வினர் 4 பேருக்கு இதில் காயம் ஏற்படுகிறது. இதனால் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் செல்லும் நிலை முற்றிலும் அடைபட்டு போகிறது. பல கி.மீ.மாநாட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன.

இந்த பதட்டமான நிலையில்தான் பா.ம.க.வை சேர்ந்த ஒரு கும்பல் தைல மரத்தோப்பு வழியாக கட்டையன் தெரு தலித் குடியிருப்பிற்குள் கழி, அருவாள், கம்பியுடன் நுழைந்து குடிசைகள் மேல் பெட்ரோல் பாம் போட்டு தீ வைக்கிறது. கண்ணில் பட்டவர்களை கடுமையாக தாக்குகிறது. பலாமரங்கள் முந்திரி மரங்கள் கூட தீக்கிரையாக்கப்படுகின்றன. இதில் சினை மாடு ஒன்று இறந்து விடுகிறது. தலித் சமூகத்தினை சார்ந்த கலைவாணன், ஏகாம்பரம், அல்லிமுத்து ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்படுகிறது. படுகாயமடைந்த சேட்டு என்பவர் 28-4-13 அன்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்து விட்டார். பத்துக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. போலீசு ஆய்வாளர் வானத்தை நோக்கி சுட்ட பிறகுதான் கலவரக்கரார்கள் கலைந்து தைல மரத்தோப்பின் வழியாக ஓடிவிட்டனர். கட்டையன் தெரு தலித் மக்கள் பெரும்பகுதியினர் பெட்ரோல் பங்க் மறியலுக்கு சென்று விட்டதால் சம்பவ நேரத்தில் குறைவான தலித்துக்களே அந்த பகுதியில் இருந்துள்ளனர். இதனால் பெரும் உயிர்ச்சேதம் நிகழவில்லை. அப்போது சுமார் மணி 02.30 இருக்கும்.

சம்பவத்தை பார்த்த பெண்கள் கூறும் போது ”நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்தனர். பலர் மஞ்சள் கலர் பனியன் போட்டிருந்தனர். பெருமளவில் இளைஞர்கள் கையில் தடி. கம்பி, வீச்சரிவாள், பீர்பாட்டில் வைத்திருந்தனர். எங்களை சாதி பெயரைச் சொல்லி அருவருக்கத்தக்க கெட்ட வார்த்தையில் பேசினர். ஜட்டியை அவிழ்த்து தலையில் போட்டு கொண்டு கைலியை தூக்கி வாங்கடி வாங்கடி என கூச்சலிட்டனர். அனைவரும் குடி போதையில் இருந்தனர். நாங்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினோம். பெட்ரோல் பாம் போட்டதால் வீட்டின் மண் சுவரை தவிர அனைத்தும் எரிந்து சாம்பாலாயின. தீயணைப்பு துறையினருக்கு அணைக்கும் வேலையே இல்லை” என்றனர்.

அது போல் ஏகாம்பரம் கூறும் போது ”சாதியை பற்றி கேவலமாக பேசிக் கொண்டே வேகமாக ஓடி வந்தனர். சுமார் 200 பேர் இருக்கும். தலையில் கிரிக்கட் பேட்டால் திரும்ப திரும்ப கடுமையாக தாக்கினர். 30 தையல் போட்டுள்ளேன். 2002 சம்பவத்தை மனதில் வைத்து தான் இந்த கலவரத்தை நடத்தியுள்ளனர்”.

கலைவாணன் என்பவர் கூறும் போது ”வந்தவர்கள் குடி போதையில் எதையும் கேட்காதவர்களாக வெறிபிடித்த மாதிரி நடந்து கொண்டனர். இன்ஸ்பெக்டர் வானத்தை நோக்கி சுட்டதால்தான் அவர்கள் தைல மரத் தோப்பு வழியாக ஓடினர். என்னை தடியால் தாக்கியதால் தலை முழுவதும் தையல் போட்டுள்ளேன். தலையில் அடித்ததால் நாக்கு நசுங்கி விட்டது. அங்கும் தையல் போட்டுள்ளேன். சண்டைக்கு வருவது போல் வந்தனர்”. அல்லிமுத்து என்பவர் ”என் கையில் பீர் பாட்டிலால் கிழித்து விட்டனர்” என்றார். இது போல் சிறிதும் பெரிதுமாக காயங்கள் ஏற்பட்டு பத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

“மரக்காணம் பெட்ரோல் பங்க் அருகில் 2002 ல் கொலைச் சம்பவம் நிகழ்ந்தது அதற்கு பழிவாங்கவே இன்று திட்டமிட்டு எங்களை தாக்கி வீடுகளை கொளுத்தியுள்ளனர். அரை கி.மீ.தைல மரத் தோட்டத்தை கடந்து வந்து பெட்ரோல் பாம் போட்டதும், வந்தவர்கள் எங்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியதும், நன்கு திட்டமிடப்பட்டது” என குற்றம் சாட்டினர். “போலீசார் தங்களையும் கைது செய்வார்கள் என்ற அச்சத்தில் தலித் ஆண்கள் பலர் ஊரை விட்டு வெளியேறி விட்டனர்”, என போலீசை பற்றிய அச்சத்தையும் கூறினர்.

அதுபோல் மெயின் ரோட்டின் அருகில் உள்ள கழிக்குப்பம் என்ற தலித் குடியிருப்பில் இரண்டு வீடுகள் எரிக்கபட்டுள்ளன. கட்சி கொடிக்கம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. சமுதாய கூடத்தின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. மூன்று அரசு பேருந்துகளில் இருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டு கொளுத்தப்பட்டன. முற்றிலும் எரிந்து போனது. சில பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. டோல் கேட்டிலும் தகராறு செய்து கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. அங்கிருந்த ஊழியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்தையும் மாநாட்டிற்கு வந்த பா.ம.க.வினர்தான் செய்துள்ளனர்.

கூனிமேடு இஸ்லாமியர்கள் வாழும் பகுதி. இங்கும் வண்டியின் கூரை மீது அமர்ந்து கொண்டு குடித்து விட்டு ரோட்டில் போகும் பெண்களை ஆபாச வார்த்தைகளால் கிண்டல் செய்வது, பீர் பாட்டிலை குடித்து விட்டு சாலையில் போவோர் மீது வீசுவது என அத்துமீறல்கள் நடந்துள்ளது. பேன்சி கடையில் சிறுவர்கள் விளையாட்டு பொருள், ரெடிமேட் துணி கொள்ளையடிக்கபட்டுள்ளன. குடத்தை இடுப்பில் வைத்து டான்ஸ் ஆடிக் கொண்டு சென்றுள்ளனர். தடி, வீச்சரிவாள், கழி ஆகியவற்றை காட்டி கடையை சாத்த சொல்லி மிரட்டியுள்ளனர். இரு சக்கர வாகனத்தை ரோட்டில் போட்டு சேதப்படுத்தியுள்ளனர். டீ கடையில் உள்ள கிளாஸ் அனைத்தும் உடைக்கபட்டுள்ளன. இப்ராகிம் என்பவர் கறிக்கடையை தீ வைத்து கொளுத்தியுள்ளனர். மதர்சா அரபிக் பள்ளியில் படிக்கும் இஸ்லாமிய பெண்களை பார்த்து கைலியை தூக்கி காட்டியது என பா.ம.க.வினரின் அத்துமீறல் எல்லை தாண்டி தொடர்ந்ததால், ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பா.ம.க. கொடி கட்டிய அனைத்து வாகனங்களையும் அடிக்கத் தொடங்கினர். குறிப்பாக கூனிமேடு வன்னியர்களும், இஸ்லாமியர்களோடு சேர்ந்து பா.ம.க வண்டிகளை அடித்துள்ளனர். மரக்காணம் வழியாக மாநாட்டுக்கு போக முடியாமல் ஊருக்கே திரும்பி செல்ல முயன்ற நூற்றுக்கணக்கான பா.ம.க. வாகனங்கள், போலீசார் கூனி மேடு மக்களை சமாதானம் செய்த பிறகே மாலை 4-30 மணியளவில் பா.ம.க கொடிகளை கழட்டி அவ்வூரைத் தாண்டி அமைதியாக செல்ல அனுமதிக்கபட்டன.

கூனி மேடு இஸ்லாமிய இளைஞர்கள் “ராமதாசு தன் கட்சிகாரர்களை முதலில் திருத்தட்டும். முடிந்தால் குடிகாரர்களை கட்சியை விட்டு நீக்கட்டும், பிறகு மதுவை ஒழித்து மற்ற மக்களுக்காக போராடலாம்” என்றனர். இதுவரை ”இது போன்று சம்பவம் எங்கள் ஊரில் நடந்தது இல்லை. வன்னியர், மீனவர், இஸ்லாமியர், பிற சமூகத்தினர் அனைவரும் ஒன்றாக வாழ்கின்றோம். மகாபலிபுரம் சித்திரை விழாவை இனிமேல் நடத்த தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்” எனக் கூறினர். ”வருடா வருடம் குடித்து விட்டு வாகனத்தின் மேல் அமர்ந்து ரவுடித்தனம் செய்வதனையும் தொடர அனுமதிக்கக் கூடாது” எனக் கூறினர்.

வன்னியர் சங்க விழாவாக இருந்த சித்திரை பெருவிழா இன்று அனைத்து ஆதிக்க சாதியினரையும் இனணத்து நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு குருவின் சாதி வெறிப் பேச்சு தருமபுரி கலவரத்திற்கும், அதைத் தொடர்ந்து வட மாவட்டங்களில் தலித்துகளுக்கு எதிரான வன்முறையும் நிகழ காரணமாக இருந்தது. தற்போது மரக்காணத்திலும் அத்தகைய சாதி வெறிக்கலவரம் நடந்துள்ளது. இவ்வாறு தலித் மக்களுக்கு எதிராக கலவரம் தொடருவதை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்றும் கூறினர்.

கோட்டக்குப்பம், பிள்ளைச்சாவடி பகுதி கடைகளில் சாப்பிட்டுவிட்டு சரியாக பணம் கொடுக்காமலும், குடித்து விட்டு தகராறு என வழி நெடுகிலும் பிரச்சினை செய்ததால் ஊர் மக்கள் வரிசையில் நின்றிருந்த அனைத்து வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.

பா.ம.க.வை சேர்ந்த விவேக் பேருந்தில் இருந்து விழுந்து விபத்தில் இறந்து போனதாக அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். செல்வராஜ் கலவரத்தில் தாக்கபட்டு இறந்தாரா? அல்லது விபத்தின் காரணமாக இறந்தாரா என்பதை மருத்துவ பிரேத விசாரணை அறிக்கை வந்த பிறகுதான் உறுதியாக கூறமுடியும் என்ற நிலை உள்ளது.

மரக்காணம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்களிடம் கலவரம் தொடர்பாக பதிவு செய்யபட்ட வழக்கு விபரங்களை கேட்டோம். ”உயர் அதிகாரிகளை கேட்காமல் கொடுக்க முடியாது.கேட்டுச் சொல்கிறேன் என கூறி பிறகு தொடர்பு கொள்ள முடியவில்லை” எனக் கூறிவிட்டார்.அந்த பகுதியில் பா.ம.க. தரப்பில் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. கலவரம் தொடர்பாக மருத்துவர் ராமதாசின் அறிக்கைகள் ஊடகங்களில் வெளி வந்துள்ளதை இக்குழு ஆராய்ந்துள்ளது.

முடிவுகள்

 1. மாநாட்டுக்கு வந்த பா.ம.க. தொண்டர்கள் பெருமளவில் குடி போதையில் இருந்துள்ளனர். வாகனத்தின் மேல் அமர்ந்து பயணித்ததுடன், ரோட்டில் போகும் பெண்களை ஆபாச வார்த்தைகளால் கிண்டல், கேலி செய்துள்ளனர். வாகனங்களில் ஆயுதங்கள், பெட்ரோல் பாம் எடுத்து சென்றுள்ளனர். பீர், பிராந்தி வாகனங்களில் போதுமான அளவில் கொண்டு வந்துள்ளனர்.
 2. 2002-ல் நடந்த சாதி பிரச்சினைக்கு பழி வாங்கும் நடவடிக்கையாகவே மரக்காணம் கட்டையன் தெரு தலித் மக்கள் மீதான தாக்குதல் பா.ம.க. வினரால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது.
 3. தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் சித்திரை திருவிழா, போதையேற்றும் புதுச்சேரியை கடந்து செல்வது என்ற கூடுதல் முக்கியத்துவம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான சாதி வெறியூட்டும் அரசியலை இராமதாசு எடுத்துள்ள சூழலில், மரக்காணம் ஏற்கனவே பிரச்சனைக்கு உரிய பகுதி என்பது தெரிந்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது கண்டிக்கத்தக்கது.
 4. காவல்துறையினர் மிக அருகாமையில் இருக்கும் போதுதான் கட்டையன் தெரு தலித் மக்கள் தாக்கப்பட்டுள்ளனர் அவர்களின் வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளன.
 5. மாநாட்டுக்கு சென்ற பா.ம.க.வினர் குடித்து விட்டு காலித்தனம் செய்ததால்தான் தலித் மக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் வன்னியர்கள் என பொது மக்கள் ஒன்று சேர்ந்து பா.ம.க. வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பரிந்துரைகள்

 1. மரக்காணம் கலவரத்தில் பாதிக்கபட்ட தலித் மக்கள் அனைவருக்கும் வன்கொடுமை தடுப்பு சட்ட விதிகளின் அடிப்படையில் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
 2. பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மரக்காணம் துணை கண்காணிப்பாளர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 3. மகாபலிபுரம் சித்திரை திருவிழா வன்னியர் சங்க விழா என்பதை கடந்து அனைத்து ஆதிக்க சாதியினரும் தலித் மக்களுக்கு எதிராக ஒன்று சேரும் விழாவாக மாறியுள்ளது. எனவே வருங்காலத்தில் சித்திரை திருவிழா போன்று எந்த ஒரு ஆதிக்க சாதி விழாவினையும் நடத்த தமிழக அரசு அனுமதிக்க கூடாது. மேலும் வன்னியர் சங்கம் உள்ளிட்ட அனைத்து ஆதிக்க சாதி சங்கங்களையும் தடை செய்ய வேண்டும்.
 4. தங்களது பதவி ஆசைக்காக அடித்தட்டு மக்களிடையே சாதிவெறியை தூண்டி தமிழகத்தில் சாதிய மோதல்களை ஏற்படுத்தி தொடர்ந்து பதட்டத்தை உருவாக்கி வரும் மருத்துவர் ராமதாஸ், காடு வெட்டி குரு ஆகியோரை தமிழக அரசு கைது செய்து அமைதியை ஏற்படுத்த வேண்டும்.

வழக்கறிஞர் ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்.

தகவல் :
மனித உரிமை பாதுகாப்பு மையம்.

 1. மானக்கெட்ட அரசு இதை எங்கே செய்யப்போகிறது. உழைக்கும் மக்களாய் ஒன்றிணைந்து போராடினாலே ஒழிய எதற்கும் தீர்வு கிடைக்கப்போவதில்லை.

 2. மரம் வெட்டி ராமதாஸ்.காடுவெட்டி குரு.மோடுமுட்டி அன்புமணீ உள்ளிட்ட கயவாளிகளை குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளநடவடிக்கை எடுக்கணும்!

 3. இந்த மானம் கெட்ட முதலாளிகள் பொரிக்கித்தின்ன நம்மை சாதி எனும் போதை ஊட்டி வளர்க்கிறர்கள்.இதை புரிந்துகொண்டாள்

 4. பின்னூட்டப் பெட்டி தவறுதலாக மூடப்பட்டிருந்தது திறக்கப்பட்டு விட்டது. சிரமத்திற்கு வருந்துகிறோம்.

 5. \\சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் தலித் மக்களை ஊருக்குள் செல்லும்படி விரட்டுகின்றனர். மாநாட்டுக்கு வந்தவர்களை சாலையிலிருந்து கலைந்து போகும்படி எச்சரிக்கின்றனர். இந்நிலையில் வாகனங்கள் கொளுத்தப்படுகின்றன.\\
  வாகனங்கள் எப்படி யாரால் கொளுத்தப்பட்டன என்பது உண்மை அறியும் குழுவுக்குத் தெரியுமா அல்லது தெரிந்தும் மறைக்கப்படுகின்றதா? இறந்துபோன இரு வன்னிய இளைஞர்களில் ஒருவர் கத்திக்குத்தால்தான் இறந்திருப்பதாக அண்மைய செய்திகள் தெரிவிக்கின்றன. இதையும் உண்மை அறியும் குழு ஏன் மூடிமறைக்கிறது?

  • சரியான வினா. இதற்கு வினவின் பதில் என்ன?. ஜாதி மறுப்பு என்ற பெயரில், மற்ற ஜாதி மக்களின் பழக்க வழக்கங்களை கொச்சை படுத்துவதும், ஜாதி சண்டையே இல்லாத ஊர்களில் ஜாதி கலவரத்தை தூண்டியதும் திருமா போன்ற இந்திய அரசின் கைபாவைகள் தான். ஏரி பெருகினாலும் நாய் நக்கி தானே குடிக்கும். ஏற்கனவே கடந்த ஆண்டு சில சம்பவங்கள் நடந்துள்ளன. அங்கு போதுமான பாதுகாப்பு அளிக்காதது அரசின் தவறு. அதை பற்றி இந்த அறிக்கை எதுவும் சொல்லாதது ஏன்?. வினவு பதில் சொல்லுமா?. அல்லது எனது பின்னூட்டத்தை இரட்டடிப்பு செய்யுமா?.

   • /ஏரி பெருகினாலும் நாய் நக்கி தானே குடிக்கும்./

    ஆமா நாய் நக்கி குடிக்கும, புலி அண்டால மோந்து குடிக்கும், சிங்கம் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சு குடிக்கும், சிறுத்தை தண்ணிய கடிச்சு திங்கும்….
    ஸப்பா முடியல…..

    கொஞ்சமாவது அறிவை வளர்த்துக்கங்கயா…..

    இப்பட மனிதனை இழிவுப்படுத்தி பேசும் உன் மீது வன் கொடுமை தடப்பு சட்டத்தில் கேஸ் கொடுக்காமல் —————–?

    • அந்த சட்டம் தவறாக பயன்படுத்தபட்டு வருவதுதானே இன்றைய பிரதான விவாதம். அறிவை நீயும் உன்னை சார்ந்தவர்களும் வளர்த்துகொள்ளுங்கள். இன்று தமிழ்நாடே ஜாதிகலவரங்களால் கட்டுண்டு கிடப்பதற்கு நீங்களும் உங்கள் அமைப்புகளும் தான் காரணம். தலைவன் என்று சொல்லிகொள்ளும் பலர் கலவரத்தில் ஒளிந்து கொள்கிறீர்கள். அப்பாவி சாவுரான். பின்னாடி அவன் பிள்ளையை போராளியாக்குவது. இந்த ஈன பிழைப்பை நடத்தும் உங்களை நாய் என்று சொல்லாமல் புலி அல்லது சிங்கம் என்றா சொல்ல முடியும்?.முன்பு முதலாளிகள் இன்று நீங்கள். கடைசி வரை அவர்கள் அடிமையாகவே இருக்கிறார்கள். உங்களை முன்னிருத்த அப்பாவி சாவ வேண்டுமா?. கலவரத்தை தூண்டும் அரசியல் வாதிகளின் கைபாவைகளே!. உங்களின் கொட்டம் அடங்கும் நேரம் பிறந்துவிட்டது. இன்னுமா அதை அறியவில்லை.

     • யோவ் எதையும் புரிஞ்சுகாம பேசுரதுதான் உன்னுட ஸ்டைலா?

      அந்த கட்சிக்கும் ஏன் அந்த சாதிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமே இல்லை ஆனால் இந்த பழமொழியின் அர்த்தம கட்சிரீதியாக இல்லை ”சாதிரீதியாக இழிவுபடுத்தவே” சொல்லுரது. அதை சொன்னவனை உதைக்காமல் என்னமா கூவுர, முதலாளிங்கர, அதுங்குர, இதுங்கர என்னதான் உன் பிரச்சனை? சாதி என்ற ஒன்றே வேணுங்குரீயா இல்லை ராமதாஸ் தான் மக்களுக்கு நல்லது செய்யரார்னு சொல்லவர்ரியா?

      • தன் இழிவு நிலையில் இருந்து தன்னை மாற்றிக்கொள்ள விரும்பாத சிலறை பற்றியது இந்த பழமொழி. “இழிவு நிலை” உனக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். தன்னை தானே தாழ்ந்தவன் என்று சொல்லிக்கொள்பவன் பற்றியது இந்த பழமொழி.

       • சரி ஒருவர் தன்னை தாழ்த்திக்கொண்டார் அதற்கு நாய் என்று சொல்லீரிவுயா இப்படி நீ பேசுனது அப்பட்டமான வன் கொடுமை தாக்குதல் இதற்கு இந்த சட்டத்தின் கீழ் உன் டவுசர நாளு நாள் கலட்டிருக்கனும் ஆனா முடியாது காரணம் வன் கொடுமை தடுப்பு சட்டம் சரிவர இல்லை இன்னும் சட்டத்தை கடுமையாக்க வேண்டும் இழிவா பேசுரவன அங்கனயே தூக்கி போட்டு மிதிச்ச தான் அடங்குவானுங்க

        • தம்பி… உங்கிட்ட போதுமான அறிவு இல்லன்னு இந்த பதிவு சொல்லுது. ஆறாம் அறிவற்றவன் மிருகத்திற்கு தான் சமம்… நெறிபடுத்த படவேண்டிய கிராமங்கள் நிறைய இருக்கு உன்னோட வாழ்க்கையை அதற்கு அற்பனிக்க முடியுமா?… உன்னால் முடியாது… எவனாவது இளிச்ச வாயன் கிடைத்தால் தூண்டிவிட மட்டுமே உன்னால் முடியும். போயி வீட்ல பெரியவங்க இருந்தா வர சொல்லு.நான் அவங்க கிட்ட பேசிக்கிறேன். சில்லர பசங்களா…

         • ஐயா வாந்திரியர், மனுஷன மனுஷனா நடத்தக் கத்துக்கோ. உன்னை விட சீப்பா பேச எங்களுக்கும் தெரியும்.

     • வன் கொடுமை வழக்கை பதியும்,வழக்கை விசாரிக்கும் அனைவரும் தாழ்த்த பட்டவர்களா என்ன?
      ஆதிக்க சாதியினருக்கு எதிராக செயல் பட…நீங்களாம் என்றைக்கு எங்களுடைய பெயரை சொல்லி அழைத்து இருக்கீங்க…சக்கிலி பைய போறான் பாரு..,பர பய வரான் பாரு … இப்படித்தானே சொல்றீங்க…உங்களுடைய தரம் தாழ்ந்த இந்த செயலை சட்டம் கண்டிச்சா “ஐயோ ஐயயோ வன்கொடுமை சட்டம் தவறா பயன் படுத்த படுகிறது ” நு நல்லவன் போல் இங்கு நடிப்பது…ஆனா உங்களை நீங்க திருதிக்க மாட்டீங்க ..உங்களுடைய தகுதியையும், மன பாங்கையும் விளக்க உங்கள் பழ மொழியே போதும்…

      • ஆளுமை உள்ள மனிதர்களை பார்த்து அய்யா தலைவர்னு சொன்னதில்லையா?.சுய லாபத்துக்காக அப்ப பேசிட்டு இப்ப என்ன புதுசா வழக்காடுறீங்க. இப்ப ஏதோ சில்லரை பசங்க கூட சேர்ந்துகிட்டு எதுக்கிறேன் எதுக்கிறென்னு சொல்லிகிட்டு திரியிரது நாங்க இல்ல…நாடே கம்பெனிகள் பெயரில் அடிமை பட்டுகொண்டிருப்பது உனக்கும் உனக்கு பாடம் படிக்கும் சில்லரை பசங்கலுக்கும் அது தெரியவில்லையே ஏன்?…நாடு மீண்டும் அடிமை பட போகுது… அப்ப அன்னியனிடம் நாட்டை அடகு வைப்பது முதலில் நீங்களாகதான் இருப்பீர்கள்… ஒட்டுமொத்த இந்திய மக்களுக்காக குரல் கொடுத்த முத்துராமலிங்க தேவரை இழிவுபடுத்தும் உங்கள் ஈன புத்தியை வேறு எப்படி வர்னிப்பது…

       • “நாடு மீண்டும் அடிமை பட போகுது… அப்ப அன்னியனிடம் நாட்டை அடகு வைப்பது முதலில் நீங்களாகதான் இருப்பீர்கள்…”
        ஓந்திரியரே!!! இவ்வளவு நேரம் ரூபாய் நோட்டுக்காரர் மாதிரி பேசி விட்டு தீடீரென்று சில்லறைத்தனமா பல்டி அடிக்கிறீரே. மேலே நீங்கள் சொன்னதை எங்களுக்கு விளக்கமாக சொல்கிறீர்களா? உழைத்து விட்டு சரியான சாப்பாடு கூட இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டு சேரியிலும், கிராமங்களின் வெளியிலும் ஒதுங்கி வாழும் இவர்களால் நாடு எப்படி அடிமையாகும்? இன்னுமொரு சந்தேகம். என்னடா இது சில்லறைத்தனமா இருக்கேன்னு சொல்லாதீங்க ரூபாய் நோட்டுக்காரரே. ஆமா அது என்ன ஓந்திரியர்?

        • ஓந்திரியர்- என் சொந்தங்கள் என்னையும் என் பிறப்பையும் அடையாளம் கண்டுகொள்வதற்கான பெயர்.(பட்டம்னு சொல்வேன்னு நினைத்தாயா?-படித்து வாங்கிய பட்டமான்னு ஒரு வினாவோடு காத்திருந்திருப்பாய்-பல்பு). கிராமங்களுக்கு வெளியிலா?… இதுதான் ஊர் என்றும் அது ஊருக்கு வெளியில் என்றும் உங்களுக்கு வரைபடம் தந்தது யார்? எல்லாமே ஊர்தான் தம்பி! தம்பி அதுவும் ஒரு தெரு என்பதை உங்களுக்கு அறிவுருத்த விரும்புகிறேன். உள்ளாட்சி அமைப்பு அனைத்திலும் அனைவருக்கும் சம உரிமை இருக்கிறது. அடிமை சாசணம் யாரும் யாருக்கும் எழுதி தரவில்லை. யாரும் எழுதி வாங்கவும் இல்லை. முதலாளித்துவம் என்ற முழக்கம் கொண்ட காங்கிரசின் கைப்பாவைகளாக தானே நீங்கள் செயல்படுகிறீர்கள். அந்த முழக்கம் கொண்ட அரசை எதிர்த்த முத்துராமலிங்க தேவருக்கு எதிராக ஜாதி கலவரத்தை தூண்ட துணை போனவர்கள் தானே நீங்கள். சந்து பொந்துகளிலெல்லாம் சாதி உணர்வை தூண்டிவிட்டுவிட்டு இங்கு என்ன இதுக்கு வரிந்து காட்டிகிட்டு சுத்துகிராய். சாப்பாட்டுக்கு கஷ்ட படுகிறார்களா? அது எந்த ஊரில் தம்பி!… உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்றால் சட்டம் துணை செய்யுமே?… இதை அவர்களூக்கு நீங்கள் சொல்லித்தர முன்வரவில்லையா?…

         • அடையாளத்திற்கு அர்த்தமில்லாத ஒரு பெயர் – ஓந்திரியர். அதற்கு டியூப் லைட் எவ்வளவோ பெட்டர். டியூப் லைட், படித்தால் படிப்பிற்கு ஓந்திரியர், உட்கார்ந்திரியர் என்ற பட்டம் கொடுப்பதில்லை என்பது எனக்குத் தெரியாத டியூப். ஊரின் மையப்பகுதியில் உழைக்கும் மக்கள் வசிக்கிறார்கள் என்பதை உதாரணத்தோடு விளக்கமுடியுமா? அல்லது நீங்கள் அனுபவிக்கும் அனைத்து வசதிகளும் அவர்களுக்கு கிடைத்துத் தான் விடுகின்றதா? உள்ளாட்சி அமைப்பில் அனைத்திலும் அனைவருக்கும் உரிமை இருக்கிறது என்பதை வாயாலாவது சொல்கிறீர்களே நொன்னே!! பஞ்சாயத்து தலைவராக பதவி ஏற்கவிடாமல் கொன்றதும் அந்த உரிமையில் தானோ? அடிமை சாசனம் எழுதித் தராமலேயே இந்த பாடு படுத்துகிறீர்களே!!! எழுதி வாங்கியிருந்தால் என்ன செய்வீர்கள் நொன்னே? காங்கிரஸோ அல்லது பி.ஜே.பியோ எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான் என்பது எங்களுக்குத் தெரியும். கைப்பாவையாக இருந்து கொண்டு தலைவர்களின் காலை நக்கி மானத்தை மறந்து பணம் சேர்த்து ஊரில் அதிகாரத் தோரணையோடு நடைபோடுவது யார்? முத்துராமலிங்கத்தைப் பற்றி நிறைய வந்து விட்டது வினவில். ஆகையால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. உழைப்பிற்கேற்ற ஊதியத்தை நீங்கள் தரமாட்டீர்கள். அதற்கும் உதவாத சட்டத்தைத் தான் பிடித்து தொங்கவேண்டும்.

          • யோவ் அரிகுமாரு, என்னிடம் ஒருநாள் ‘உன்னுடைய உண்மையான பெயர் என்ன முதலில் அதை சொல்லுனு’ சொல்லிபுட்டு இன்றைக்கு என்ன பெயர் வைத்துக்கொண்டாள் உங்களுக்கென்ன என்ற கேட்குரீங்க ராமதாஸ் மாதிரி உங்களுக்கும் இரண்டு நாக்கா?

           அப்புறம் இதையும் பாரு கண்ணு:
           /18. Abolition of titles. – (1) No title, not being a military or academic distinction, shall be conferred by the State./

          • adapaavi,

           ippo en muzhu perey surname serthu naan vachikitta, enna prachanai?

           atha thaan naanum solran,unga peru ennannu kettadhukkum,avuru peru edhuva iruntha enna endru solrathukkum enna sambandham?

           Malik is a name which means landlord in arabic,but anybody can keep that name whether he is a malik or not.

          • என் பெயரை ஏச உண்மை பெயர் சொல்லாத உனக்கு தகுதி இல்லை. இது போல் நாகரீகமில்லாமல் பேசி உணர்வை தூண்டி உதை வாங்கிகொண்டு காவல்துறையை நாடும் உன் திட்டம் புரிகிறது தம்பி… சட்டம் நான் படிக்கவில்லை என்றாலும் உன் போன்ற நரிவேலை செய்பவர்களை இந்த சமுதாயம் நிறைய பார்த்துவிட்டது. இனி உங்கள் ஜம்பம் பளிக்காது. சிங்கத்தை பார்த்து சிறு நரிகள் வினவு போல சந்து பொந்துகளில் தான் பேச முடியும். மேடை போட்டு பேச தைரியம் உள்ளவன் யாருன்னு சொல்ல முடியுமா?…

          • முரளி வாங்க, முதல்ல இருந்து பேசிப்பார்ப்போம், உங்க பிரச்சினைதான் என்ன?

          • முரளி தம்பி, இந்த உலகத்திலே எல்லாவற்றிற்கும் ஒரு அர்த்தம் உண்டு. அது பொருளாக இருந்தாலும், பெயராக இருந்தாலும் சரி. கேட்டதற்கு பதில் சொல்லாமல் கோபப்படுவதில் அர்த்தம் இல்லை. உங்கள் பூச்சாண்டித் தனத்தை வேறு எங்காவது வைத்துக் கொள்ளுங்கள். ஊருக்கு வெளியே என்று சொன்னால் அப்படி வரையறுத்தது யார் என்கிறீர்கள்? பொது இடத்தில் தோழர்கள் நடத்தும் கூட்டத்தை சந்து பொந்துகளில் நடக்கும் கூட்டம் என்கிறீர்கள். என்னமோ போங்கள். முதலில் நீங்கள் இருக்கும் மாய உலகத்தில் இருந்து வெளியே வாருங்கள்.

  • திருவண்ணாமலையில் தலித் குடிசைகளைக் கொளுத்த பெட்ரோல் குண்டுகள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் வந்த பாமகவினர் 300 பேர், தலித்துகளின் எதிர்ப்பு காரணமாக தப்பியோடினர்.

   திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகில் உள்ள கிராமங்கள் செம்பூர், அத்திப்பாக்கம். செம்பூர் பகுதியில் பெரும்பான்மையாக வன்னிய ஜாதி மக்கள் வசித்து வருகின்றனர். சிறிய அளவில் தலித்துகளும் உள்ளனர். ஆனால் அத்திப்பாக்கத்தில் தலித்துகளின் பெரும்பான்மையாக உள்ளனர்.

   இன்று மாலை சுமார் 4 மணி அளவில் செம்பூர் பகுதியை சேர்ந்த பா.ம.கவினர் 200 பீர் பாட்டில்களை வாங்கிவந்து அதில் பெட்ரோல் குண்டுகளை தயாரித்துள்ளனர். அதனை எடுத்துக்கொண்டு இன்று இரவு 7.30 மணியளவில் சுமார் 300 பேர் கொண்ட வன்முறை கும்பல் பெட்ரோல் குண்டுகளையும் ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு அத்திப்பாக்கம் தலித் குடியிருப்பு பகுதிக்குள் வந்துள்ளனர்.

   இதனை எதிர்கொண்டு அப்பகுதி தலித்துகள் போராட அந்த கும்பல் பின்வாங்கி ஓடி உள்ளது. தருமபுரி போன்று உங்கள் வீடுகளை கொளுத்துவோம். உங்களையும் கொள்ளுவோம் என்று அந்த கும்பல் மிரட்டி கூச்சலிட்டுள்ளது. குழந்தைகள் அழுதுகொண்டு ஓடிசென்று கான்கிரீட் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

   தற்போது அங்கு காவல்துறையினர் 50 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்

 6. ஒரு சின்ன கேள்வி. இரண்டு தரப்புகளுக்கிடையே நடந்த மோதலில் ஒரு தரப்பு அங்கேயே வசிக்கிறது இன்னொரு தரப்பில் உள்ளவர்களின் ஜாதி தெரியும் ஆனால் எங்கெங்கிருந்து எல்லாம் வந்தார்களா் யார் யார் என்று அறிவது மிகக்ககடினம். எனவே உண்மை அறியும் குழு ஒரு தரப்பிடம் எளிதாக சென்று அவர்கள் கருத்தை அறிய முடியும். இன்னொரு தரப்பு கருத்தை அறிய அவர்களை எங்கு தேடுவார்கள், யாரிடம் கேட்பார்கள் அல்லது கேட்டீர்கள்?

  • ரொம்ப சிரமம் படாதீங்க ஏதேனும் தினசரியை படிங்க பாமாகவினர் பேருந்தை எரித்தனர் ஊட்டுனர் படுகாயம், பாமாகவினர் பெட்ரோல் எரிகுண்டு வீசி இரண்டு பெண்கள், குழந்தைக்களுக்கு அடிபட்டது, லாரிமீது எரிகுண்டு வீசி லாரி மரத்தில் மோதி டிரைவர் கவலைக்கிடம், 20 லட்சம் பொருள் நாசம், etc……, இதெல்லாம் வருவது தினத்தந்தி, தினமலர், புதியதலைமுறை, சத்தியம் தொலைகாட்சி, ஜீடிவி போன்ற ஊடகங்களில் தான்….

   ……..தெரியும் நீங்க நம்பமாட்டிங்க, பாமாகவினர் என்றாலே தியாகிகள் தானே!
   😀

   • சேம் சைட் கோல் போடுவதுபோலத் தெரிகிறது. அனைத்து ஊடகங்களின் நம்பகத்தன்மை குறித்தான கவலையில்தான் வாசகர்கள் வினவின் பக்கம் வருகிறார்கள். அவர்களுக்கு இது சரியான பதில் அல்ல எனக் கருதுகிறேன்.

    • /அனைத்து ஊடகங்களின் நம்பகத்தன்மை குறித்தான கவலையில்தான்வாசகர்கள் வினவின் பக்கம் வருகிறார்கள்./

     இது உண்மைதான் அதற்காக அவர்கள் (அனைத்து ஊடகங்கள்) சொல்லும் அனைத்தும் உண்மைக்கு மாறாக தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லையே, அதிக பொய்பேசும் புதியதலைமுறைக்கூட முயலுக்கு நான்கு கால் என்று தானே சொல்ல வேண்டும்.

 7. என் பெயருக்கு அர்த்தம் கேட்டு பிச்சை எடுத்த உனக்கு விளக்கம் சொல்லிவிட்டேன். பெயர் இருப்பவன் சொல்கிறான் எழுதுகிறான். ஆதி எதுவென்று தெரியாத உனக்கு எங்கு எரிகிறது. வினவு அவர்களே!… உங்கள் கட்டூரையில் தலித்துகள் தாக்கியது பற்றி தகவல் இல்லை. வன்னியர்கள் பற்றி மட்டும் எழுதியுள்ளது உண்மையை மறைக்கும் கயவாளித்தனம். செத்துப்போன இரண்டு வன்னியர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அது பற்றி தகவல் ஏன் தரவில்லை. சாலையில் வாகனங்கள் நகர முடியாதிருக்கும்போது ஆயிரம் நபர்கள் விமானத்தில் இருந்து குதித்தார்களா?…

  • முரளி, உங்கள் கேள்விக்கு கட்டுரையிலேயே பதில் உள்ளது. வன்னிய இளைஞரின் மரணம் விபத்தா, கொலையா என்பது போஸ்ட் மார்ட் ரிப்போர்ட் வந்த பிறகே முடிவு செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது. மற்றபடி இது வன்னிய சங்கத்து தரப்பிலிருந்து எறிந்த கல், ஏறிய வாகனம் மூலம் நடந்திருக்கவே நிறைய வாய்ப்பிருக்கிறது. அடுத்து ஒரு சந்தேகம் ஓந்திரியர் வகையறாக்கள் வன்னியர்களோடு பெண் கொடுத்து எடுத்து மண உறவு வைத்துக் கொள்வீர்கள் அல்லவா? ‘வன்னியர்கள்’ குறித்து இவ்வளவு பாசம் காண்பிப்பதால் அப்படித்தான் இருக்குமென்று யூகிக்கிறேன். இல்லை இதுவும் நாடகக் காதலில் வருமென்றால் எப்படி பஞ்சாயத்து செய்வீர்கள்? அப்போது நீங்கள் யார் பக்கம்?

   • விவேகம் உள்ளவனிடம் விவாதம் செய்யலாம். அது கிஞ்சித்தும் இல்லாதவனிடம் பேசுவது வெட்டி வேலை. புரிந்தும் புரியாதது போல் வீம்புக்கு ______ கிறவனிடம் பேசுவதும் விவாதிப்பதும் வீண் வேலை வினவு தோழர்களே. ஆகவே இதற்கு பதில் சொல்வது தேவையில்லாதது. ஓந்திரியரை அப்படியே விட்டு விடுங்கள். (முரளியை விட ஓந்திரியருக்குத் தான் அதிக மதிப்பு என்பதால் அவ்வாறு விளித்தேன்.)

    • உன் விவேகத்தால் விலைந்தவற்றை உன்னால் பட்டியலிட முடியுமா?…நான் சொல்கிறேன். தன் வேலை உண்டு தான் உண்டு என இருந்த கோடிகணக்கான இளைஞர்களிடம் ஜாதி உணர்வை தூண்டி விட்டது உன் போன்றவர்கள்தான். தனது 15 வயது வரை சமுதாய பழக்கவழக்கங்களாக இருந்த உணர்வு. இன்று ஜாதி வெறியாக மாறி விட்டது. விவேகம் பற்றி பேச உங்கள் தகுதி நீங்களே ஆராய்ந்து கொள்ளுங்கள்.

 8. போஸ்ட் மார்ட் ரிப்போர்ட் தயாரிக்க இரண்டு யுகம் ஆகுமா?… உலக அரசியலையே உங்கள் யூகத்துக்குள் அடக்கும் உங்கள் கட்டூரைகளை நிறைய படித்துவிட்டேன். அதை என்னிடமும் அவிழ்த்து விட வேண்டாம். எங்கள் சமுதாய பழக்க வழக்கங்களை தெரிந்துகொள்ளும் நோக்கத்தில் இந்த வினா இருக்குமெனில் அதற்கு பதில் சொல்லும் கடமை எனக்கு இருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து எழுதும் உமக்கு ஓந்திரியர் பற்றி தெரியாதிருப்பது சற்று ஆச்சர்யம் தான். தலித்துகளுக்கு நீங்கள் பாசம் கான்பிப்பது போன்றதுதான் இதுவும். காதல் நாடகம் ஆடி கட்ட பஞ்சாயத்து வரை கொண்டு வரும் வேசி மகனை காதலிப்பவர்கள் சம்பந்தபட்ட விசயம் இது. மற்ற சமுதாயப் பெண்களை காதலித்து பின்பு கட்ட பஞ்சாயத்து செய்வது எப்படி என்ற நோக்கதில் கேட்டிருப்பதால் இதற்கு பதில் நீங்கள் ஆதரிக்கும் அவர்களிடம் நிறைய கிடைக்கும் என நினைக்கிறேன். உழைப்பை சொல்லித்தர யாரும் முன்வர வில்லை.

  • ஓந்திரியர் அவர்களே, கேட்ட கேள்விக்கு நீங்கள் விடையளிக்கவில்லை என்பதை பணிவுடன் தெரிவிக்கிறேன். மீண்டும் கேள்வி, ஓந்திரியரும், வன்னியரும் 21 வயதைக் கடந்தவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் உண்டா, இல்லையே, ஏன்?

 9. 21 வயதை கடந்த ஓந்திரியர் காதலிப்பதும் காதலிக்காததும் அவரவர் விருப்பம். அடுத்த சமுதாயத்தினரை திருமணம் செய்யும் வழக்கம் எங்களுக்கு இல்லை. எங்கள் சமுதாயத்திலும் வன்னியர் என்ற ஒரு பிரிவு இருப்பதால் அது ஆய்வுக்கு உரியது. ஒத்த கருத்தும் ஒத்த பண்பும் உடையவர்கள் காதலிப்பது இயல்பு. பருவம் எனும் போதை பொருளை மருந்தாக மாற்ற விடாமல் காதல் வலை வீசி போதையை அனுபவித்து புண்ணாக்கி கட்ட பஞ்சாயத்து வரை கொண்டு வரும் கயவர்கள் பற்றிதான் ராமதாசு பேசுகிறார். மற்ற மத உணர்வை மதிப்பதுபோல் மற்ற சமுதாய மக்களின் உணர்வையும் மதிக்க வேண்டும்.

  • ஐயா, உங்கள் சமுதாயம், அடுத்த சமுதாயம் என்று பிரித்து பேசுகிறீர்களே, அப்படி என்றால் என்ன? உங்கள் சமுதாயம் அடுத்த சமுதாயத்திலிருந்து என்னென்ன விதத்தில் வேறு பட்டது என்று விளக்க முடியுமா? ஓந்திரியரில் வன்னியர் உட்பிரிவு வருகிறது என்பதை ஒரிஜினல் வன்னியர்கள் ஏற்கிறார்களா? இப்படி உட்பிரிவுக்குள் வருவதால் எங்களிடையே மண உறவு உண்டு என்றோ இல்லை என்றோ நீங்கள் கூறவில்லை. உண்மை நிலை என்ன? பிறகு அந்த உண்மை நிலைக்கு காரணம் என்ன?

 10. பழக்க வழக்கங்களில் நாங்கள் மற்ற சமுதாயத்தில் இருந்து வேறுபட்டவர்கள். எடுத்துகாட்டாக ஓந்திரியர் ஓந்திரியரையே திருமணம் செய்வதில்லை. மற்ற உட்பிரிவுகளில்தான் மண உறவு கொள்வோம்.உணவு பழக்க வழக்கங்களில் வேறுபட்டவர்கள்.அவ்வாறாக வளர்க்கப்பட்ட நாங்கள் மற்ற சமுதாய வழக்கங்களை சட்டென ஏற்றுக்கொள்வதில்லை. எங்கள் சமுதாயத்தில் உள்ள வன்னியர் உட்பிரிவுகளுடன் எங்களுக்கு மண உறவு உண்டு. நாங்கள் வன்னியர் சமுதாயத்தில் மண உறவு கொள்வதில்லை. வன்னியர் உட்பிரிவு ஆய்விற்குரியது என கூரியது உங்களுக்கு புரியவில்லையோ?. ஆய்வு துவங்கி முடிந்தபின் உமக்கு தெரிவிக்கிறேன்.

  • அய்யா ஒரு சந்தேகம், இந்த ஓந்திரியர் எனும் உட்பிரிவு பெயர் ஆண்களுக்கு மட்டும்தான் சொந்தமா, ஏனெனில் பெண்கள் யாரும் ஓந்திரியர் என்று போட்டு கொண்டு பார்த்ததில்லை. ஆக ஓந்திரியர் பிரிவில் பெண்கள் வராத பட்சத்தில் அவர்கள் திருமணம் செய்யும் உரிமையை ஓந்திரிய ஆண்கள் ஏற்றுக் கொள்வது அநீதியல்லவா! அடுத்து உங்கள் பழக்க வழக்கம் என்ன என்பதை வெறும் மண உறவு என்போடு முடித்துக் கொண்டீர்கள், மாறாக காலை முதல் இரவு வரையிலான வாழ்க்கையில் ஓந்திரியர் மற்ற பிரிவு, சமூகம், சாதிகளில் இருந்து என்னென்ன விதத்தில் வேறுபட்டவர்கள் என்பதை உணவு, உடை,தொழில், இருப்பிடம் என்று அனைத்து விசயங்களையும் உள்ளிட்டு விளக்கினீர்கள் என்றால் எங்களைப் போன்ற பாமரர்களுக்கு தெளிவு பிறக்கும். வன்னிய உட்பிரிவு, வன்னிய சமுதாயம் என்று இரண்டு வன்னியர்கள் இருப்பதை தற்போதுதான் தெரிந்து கொண்டோம். வன்னிய உட்பிரிவு ஒன்று உங்கள் சமுதாயத்தில் இருப்பதால்தான் நீங்கள் வன்னியர் சங்கத்தை ஆதரிக்கிறீர்களா, அப்படி இருக்கும் பட்சத்தில் மண உறவு கொள்வதில் என்ன சிக்கல்?

 11. தஞ்சாவூரில் இருந்து எழுதும் உமக்கு திருச்சி சாருபாலா தொன்டைமான் தெரிந்திருக்க வேண்டும். பெண்கள் இப்பெயர்களை பயன்படுத்துவது அதிகம். உங்கள் ஊரை சொன்னால் அங்கு யாராவது இருந்தால் என்னால் உதாரணம் தர முடியும். பசுவை தெய்வமாக வணங்கும் நாங்கள் அதன் மாமிசத்தை உண்பதில்லை. வன்னியர்களுடன் மண உறவு வேண்டுமா… வேண்டாமா என்பது எங்கள் தனிப்பட்ட விருப்பம்.

  • அய்யா, ஓந்திரியரில் பெண்கள் உண்டென்றால் ஒரு பிரபலமான ஓந்திரிய பெண் உதாரணத்தை கூறுவதற்குப் பதில் சாருபாலா தொண்டைமான் என்று ஏன் திசை திருப்புகிறீர்கள்? மாட்டுக்கறியை சாப்பிடாதவர்கள் என்று பார்த்தால் தலித் மக்களைத் தவிர அனைத்து சாதிகளும் வருவார்கள். அதன்படி தலித் அல்லாத அனைத்து சாதிகளும் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும்? பிறகு ஏன் ஓந்திரியர் என்று தனிப்பிரிவு, பேசாமல் உங்களது சாதி தலித் சாதிகளற்ற சாதி என்று கூறலாமே? இல்லையென்றால் ஓந்திரியருக்கு என்ன ஸ்பெஸல் என்று கூறவேண்டும். வன்னியருடன் மண உறவு எனது விருப்பம் என்று கூறுவதற்குப் பதில் எங்களது விருப்பம் என்று கூறுகிறீர்களே அந்த எங்கள் யார்? அவர்களுக்கு என்ன உரிமை உள்ளது? யாராவது ஒரு ஓந்திரியர் பெண் (ஓந்திரியரில் பெண்கள் உண்டா, இல்லை என்று தெரியாத நிலையில்) ஒரு அருந்ததி இளைஞரை காதலித்து திருமணம் செய்தால் என்ன செய்வீர்கள்? உங்கள் ஓந்திரியர் ஆண்கள் எல்லாம் கூட்டாக சேர்ந்து போய் வெட்டுவீர்களா? அப்படி மாட்டோம் எனில் நீங்கள் ஓந்திரியர் சார்பாக பேசுவதறு முறையன்று.

 12. சாருபாலா தொன்டைமான் எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர். ஒந்திரியர் போல் தொன்டைமானும் ஒர் உட்பிரிவு என்பதை உமக்கு அறிவுருத்த விரும்புகிறேன். எனது முந்தைய பதிவுகளை முறையாக படித்து பிரசுரித்திருந்தால் உமக்கு இந்த வினா வந்திருக்காது. பெண்களை பற்றி பேசி உசுப்பேற்றும் உங்கள் நரி வேலை எனக்கு புரிகிறது. எங்கள் பெண்களுக்கு சமுதாய வழக்கம் சொல்லிதான் வளர்க்கப்படுகிறார்கள். பேசாமல் இந்த ஆய்வில் நீங்கள் ஈடுபடலாமே!… தாத்தாவின் ஜீன் தான் பேரனுக்கு வரும் என அறிவியலே சொல்கிறது.

  • புதுக்கோட்டை தொண்டைமான்தான் கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த துரோகி! உங்கள் ஜீன் தத்துவப்படி தொண்டைமான் உங்களது சமுதாயம் என்பதால் எல்லோருக்கும் துரோக ஜீன் பரம்பரை பரம்பரையாக வரும் என்றாகிறது. ஓந்திரியர் அவர்களே என்ன பேசுகிறோம் என்று புரிந்துதான் பேசுகிறீர்களா? மற்றபடி உங்களது சமுதாயம், உட்பிரிவுக்கு என்ன ஸ்பெஷல் என்ற கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை என்பதால் உங்களுக்கு என்று தனித்துவமான எதுவுமில்லை, விரைவில் நீங்களும் இதை புரிந்து கொண்டு திருந்துவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் விவாதத்தில் இருந்து கனத்த நெஞ்சுடன் விடைபெறுகிறேன்.

   • ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாமல் பேசும் உன்னை எங்கு சேர்ப்பது… அதற்கு பல பதில் சொல்லிவிட்டேன்… கண்ணை மூடி கொண்டா எல்லவற்றையும் பிரசுரித்தாய். துரோகிகளால் வளர்க்க பட்டவர்கள் தானே நீங்கள். துரோகம் செய்ய ஜீன் தேவையில்லை. உன் போன்ற கூடா நட்பிருந்தாளே போதும்.

  • /தாத்தாவின் ஜீன் தான் பேரனுக்கு வரும்என அறிவியலே சொல்கிறது./

   சரி உங்கள் அறிவியல் படி தாத்தா எங்கிருந்து வந்தார்?
   ராமதாஸ் சொல்லுவதைப்போல் அக்னியில் இருந்தா? பிரம்மாவின் தொடையில் இருந்தா? 😀

   /சாருபாலா தொன்டைமான் எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்./

   /எங்கள் பெண்களுக்கு சமுதாய வழக்கம் சொல்லிதான் வளர்க்கப்படுகிறார்கள்./

   இது நல்ல முரணாக உங்களுக்கு தெரியவில்லை? :p

   உழைக்கும் பெண்களை திட்டுங்கள் அதைக் கூட சகித்துக்கொள்ள முடியும், இப்படிபட்ட பெண்களுடன் இணைத்துப் பேசவேண்டாம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க