நிதி ஆயோக் பரிந்துரை : மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகள் தனியார்மயம் !
கடந்த ஐம்பது ஆண்டுகளில் மக்களின் வரிப் பணத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசு மருத்துவக் கட்டமைப்பை தனியாருக்கு தாரைவார்க்க துடிக்கிறது மோடி அரசு.
பிஎம்சி வங்கி முறைகேடு : வெளியே தெரியும் பனிமுகடு !
இந்திய வங்கித் துறை எந்தளவிற்கு கார்ப்பரேட்டுகளின் கைப்பாவையாக இயங்கி வருகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது, பி.எம்.சி. வங்கியில் நடந்திருக்கும் நிதி முறைகேடுகள்.
மோடிக்குப் பிறந்த நாள் ! மக்களுக்கு இழவு நாள் !
மோடியின் பிறந்த நாளைப் பிரம்மாண்டமாகக் கொண்டாடுவதற்காக நர்மதை நதிக் கரையோர விவசாயிகள், மீனவர்கள், பழங்குடியின மக்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்கிவிட்டது, குஜராத் மாநில அரசு.
காஷ்மீர் போர் குறித்த பாஜக-வின் வரலாற்று மோசடி !
''அன்று மட்டும் இந்திய இராணுவத்தை ஜவஹர்லால் நேரு, சுதந்திரமாக இயங்க அனுமதித்திருந்தால், ஒன்றுபட்ட காஷ்மீரே இந்தியாவின் வசம் வீழ்ந்திருக்கும்" என சங்கப் பரிவாரங்கள் பல காலமாக வாதிட்டு வருவதை, இந்திய இராணுவத்தின் ஆவணங்களே அம்பலமாக்குகிறது.
அரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை : மோட்டார் வாகன சட்டத் திருத்தம் !
இச்சட்டத் திருத்தம் ஒருபுறம் மக்களைக் கொள்ளையிடுகிறது. மற்றொருபுறம் ஆட்டோமொபைல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிறுதொழில் முனைவோரை அழிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
காஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் !
துக்கமென்றால் அழ முடியாது; மகிழ்ச்சியென்றால் கொண்டாட முடியாது. இதுதான் மோடி உருவாக்கியிருக்கும் புதிய காஷ்மீர்.
பாஜக-வின் ஊழல் எதிர்ப்பு : மாமியார் உடைத்தால் மண்குடம் ! மருமகள் உடைத்தால் பொன்குடம் !
ஊழலைச் சட்டபூர்வமாக்கி வருவதோடு, அ.தி.மு.க., உள்ளிட்ட ஊழல் கட்சிகளோடு கூட்டணியும் வைத்திருக்கும் பா.ஜ.க., ஊழல் ஒழிப்பு குறித்துப் பேசுவதற்குத் தகுதியற்றது.
மோடி அரசின் பரிசு : பொருளாதார நெருக்கடி ! புதிய கலாச்சாரம் நூல்
”எழுபது ஆண்டுகளில் காணாத பொருளாதார நெருக்கடி, மீள வழி தெரியாத பொருளாதார மந்தத்தை எதிர்நோக்கியிருக்கிறோம்” - இன்றைய அபாயத்தை தொகுத்துத் தருகிறது இந்நூல்.
தேசியக் குடிமக்கள் பதிவேடு : ஒரு கேடான வழிமுறை !
மாறுபட்ட மத நம்பிக்கைகள் கொண்ட நாம் எல்லோரும் சமமாய்ச் சொந்தம் கொண்டாடிய, நாம் அறிந்த இந்தியாவின் அழிவுக்காலம் இது என்பதே இதற்குப் பொருள்.
காஷ்மீர் சிறப்புரிமைகள் ரத்து : வெற்றி யாருக்கு ?
காஷ்மீர் பிரச்சினையைச் சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்லத் தொடர்ந்து முயன்றுவரும் பாகிஸ்தானின் நோக்கத்திற்குத்தான் மோடி - அமித் ஷாவின் நடவடிக்கை பயன்பட்டிருக்கிறது.
நீக்கப்பட வேண்டியது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமே தவிர 370 அல்ல !
ஜம்மு காஷ்மீர் மக்கள் தமக்கு நீதி வேண்டும் எனக் கோரிப் போராடுகிறார்கள். மோடி அரசோ அவர்கள் மீது மென்மேலும் அடக்குமுறைகளை ஏவி அநீதி இழைத்து வருகிறது.
காஷ்மீர் நிலச் சீர்திருத்தம் : சிறப்புரிமைகளால் விளைந்த பெரும் பலன் !
இந்திய அரசமைப்புச் சட்டத்திலிருந்து தப்பித்த காரணத்தினால்தான், காஷ்மீர் உழவர்களுக்கு நிலம் கிடைத்தது. அந்த நிலத்தைப் பிடுங்குவதற்குத்தான் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற முழக்கம்.
காஷ்மீரிகளின் நம்பிக்கையும் இந்தியாவின் துரோகமும் !
இந்தியா மதச்சார்பற்ற, ஜனநாயக நாடு என நம்பி அதனுடன் இணைந்த காஷ்மீரிகளின் முதுகில் குத்தியது காங்கிரசு. நெஞ்சில் குத்தியிருக்கிறது, பா.ஜ.க.
காஷ்மீரின் சிறப்புரிமை ரத்து : இந்து ராஷ்டிரத்துக்கான முன்னோட்டம் !
காஷ்மீர் மக்களின் உரிமைகள் ஒரேயடியாகப் பறிக்கப்பட்டுவிட்டன. அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கும் மற்ற மாநிலங்களின் உரிமைகளோ ஒவ்வொன்றாகப் பறிக்கப்படுகின்றன.
அண்டப் புளுகு … ஆகாசப் புளுகு … ஆர்.எஸ்.எஸ். புளுகு !
ஜம்மு காஷ்மீர் மக்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்கு 370-ஆவது சட்டப்பிரிவு தடையாக இருக்கவில்லை, படிக்கல்லாக இருந்திருக்கிறது.