கமலஹாசன் – சிபிஎம் கட்சியை அறிய உதவும் அன்பே சிவம் !
மாதவனின் வர்க்கத்தைப் “பன்னாட்டு நிறுவனத்தின் கூலி” என்று நல்லசிவம் சாடுகிறார். ஒண்ணாம் நம்பர் கைக்கூலிக் கட்சியான பாரதீய ஜனதாவின் தலைவர் இல.கணேசனோ படத்தைப் பாராட்டுகிறார்.
பிர்லா – சஹாரா ஆவணங்கள் : மோடியின் உத்தமர் வேடம் கலைந்தது !
லஞ்சம் வாங்குபவர் பிரதமர், அதை மூடி மறைத்தவர், லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் தலைவர்; அதை விசாரிக்க மறுப்பவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்; மொத்த விவகாரத்தையும் இருட்டடிப்பு செய்பவை ஊடகங்கள்.
கீழடி அகழாய்வு : பழந்தமிழர் நாகரிகத்தின் கருவூலம் !
கீழடியில் இதுவரை கிடைத்துள்ள பொருட்களை ஆய்வுசெய்கையில் ஒன்றில்கூட மதம் தொடர்பான அடையாளங்கள் இல்லை என்பது. "தமிழ் மொழியைச் சமயச்சார்பற்ற மொழி" என்று மதிப்பீடு செய்த அறிஞர் கால்டுவெல்லின் கருத்தை உறுதி செய்கின்றன.
ஜெயா எப்படிச் செத்தால் நமக்கென்ன ?
அடிமைத்தனத்தின் முடை நாற்றத்தில் தமிழகம் மூச்சுத்திணறியது போதும். ஜெயலலிதா என்பவர் தமிழகத்தின் பொதுச்சொத்தைக் கொள்ளையிட்ட ஒரு கிரிமினல். மரணத்தின் காரணமாக தண்டனையிலிருந்து தப்பிய ஒரு குற்றவாளி.
குற்றவாளி ஜெயலலிதா : குப்பைக்கு எதற்கு ஒளிவட்டம் ?
தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் பொதுச் சொத்துக்களை அபகரித்துக் கொள்ளும் கொள்ளைக்காரியாக, சதிகாரியாக, மேல்தட்டுப் பொறுக்கியாக, ரவுடியாகவே வாழ்ந்து மறைந்தவர்தான் ஜெயலலிதா. அவருக்கு எதற்கு ஒளிவட்டம் ?
புதிய ஜனநாயகம் – மார்ச் 2017 மின்னிதழ்
புதிய ஜனநாயகம் மார்ச் 2017 இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்: ஜெயா குற்றவாளி, ஹைட்ரோ கார்பன், நெடுவாசல், பணமதிப்பிழப்பு, கீழடி ஆய்வு, பிர்லா சஹாரா ஆவணங்கள்.......
நெடுவாசல் சிறப்புக் கட்டுரை : சங்கிலித் திருடர்கள் பேசும் வளர்ச்சி
நெடுவாசல் போராட்டத்தில் மக்கள் எழுப்பும் கேள்வி, அறிவியலின் நம்பகத்தன்மையைப் பற்றியதல்ல. அறிவியலாளர்கள், வல்லுநர்கள், பொறியாளர்கள் எனப்படுவோரின் நம்பகத்தன்மை பற்றியது. சுருங்கக் கூறின் இந்த அரசமைப்பின் நம்பகத்தன்மை பற்றியது.
அடிக்கடி சிறைக்கு வருவோம் !
சிறைக்கு பலமுறை சென்றுள்ளதால் வீட்டில் ஒரு புரிதல் உள்ளது. எனக்கு இரண்டு பெண்பிள்ளைகள். தோழர்கள் தான் கவனித்துக் கொண்டார்கள். மக்களுக்காக போராடுறோம். போராளிகளுக்கு மக்கள் தான் பாதுகாப்பு.
எதிர்த்து நில் ! புதிய கலாச்சாரம் மார்ச் 2017
நெடுவாசல், மெரினா, உனா, கிரீஸ், ருமேனியா, துனீசியா, பெங்களூரூ ஆயத்தை ஆடை தொழிலாளிகள், வால் ஸ்ட்ரீட் என கடந்த 10 ஆண்டுகளாக உலக அளவில் நடக்கும் போராட்டங்களின் தொகுப்பு! மிக முக்கியமான ஆவணம்!
விவசாயி வீட்டில் இழவு : யார் குற்றவாளி ? இயற்கையா ? அரசா ?
தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அடிப்படை கட்டுமான வசதிகளை இலவசமாகவோ, மானியமாகவோ செய்து கொடுத்து, அவர்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்துவரும் ஆட்சியாளர்கள், விவசாயிகளைத் தம் சொந்தக் கையை ஊன்றி கரணம் போடும்படிக் கைகழுவி விடுகிறார்கள்.
வறட்சி நிவாரணம் : காகிதத்தில் எழுதி நக்கச்சொல்லும் அரசாங்கம் !
தமிழக அரசு அறிவித்திருக்கும் பயிர் இழப்பீடு தொகையும், காப்பீடு தொகையும் கைக்குக் கிடைப்பதற்குள் விவசாயிகள் செத்துச் சுண்ணாம்பாகி விடுவார்கள்.
விவசாயி பயிரை வளர்க்கவில்லை பிள்ளையை வளர்க்கிறான் !
கடன்காரன் வந்து வீட்டு வாசல்படியில் நின்று கத்தும்போது நாண்டுகிட்ட சாகலாம் போலத் தோணும். வேறு வேலைக்குப் போவோம், அல்லது வீட்டை விற்று, கடனை அடைத்துவிட்டு வாடகை வீட்டுக்குப் போவோம்
நுண்கடன் நிறுவனங்கள் : தனியார்மயம் உருவாக்கிப் பரப்பும் விஷக்கிருமிகள் !
"அடுத்த விவசாயம் செய்வதற்கு வரவிருக்கும் பருவமழைக்காக பத்து மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரையில் இந்த வறட்சியை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?" என்ற கேள்விக்கு பெண்களிடமிருந்து வரும் ஒரே பதில் “தெரியலைங்க” என்பது மட்டும்தான்.
பயிர்க் காப்பீடு : விவசாயிக்கு சுண்ணாம்பு காப்பீட்டு நிறுவனங்களுக்கு வெண்ணெய் !
விவசாயிகளை விட, ஐ.சி.ஐ.சி.ஐ.,லாம்போர்டு, ஹெச்.டி.எஃப்.சி., இஃப்கோ-டோக்கியோ போன்ற 16 தனியார் பயிர் காப்பீட்டு நிறுவனங்களின் இலாபத்தை மட்டுமே கொள்கையாகக் கொண்டதுதான் மோடியின் தேசிய வேளாண் காப்பீட்டுக் கொள்கை.
பன்னீர் VS சசி : முன் விட்டையா, பின் விட்டையா ?
இவர்கள் காட்டுகின்ற கட்டத்தில் டிக் அடிப்பதைத் தவிர நமக்குத் தெரிவு இல்லை என்றோ, இவர்கள் கூறுகின்ற சட்ட வரம்புகளுக்கு அப்பாற்பட்ட தீர்வுகள் இல்லையென்றோ சிந்தித்திருப்போமானால், மெரினா எழுச்சியே சாத்தியமாகியிருக்காது.