ஆபத்பாந்தவா… கருப்புப் பண இரட்சகா…!
ஸ்விஸ் வங்கி என்ற ஒன்று உருவாக்கப்படுவதற்கு முன்னரே, பாரதத்தின் மன்னர்களும் புரோகிதர்களும் உருவாக்கிய சுவிஸ் வங்கிகள்தான் கோயில்கள்.
நாளை ஜனநாயக உரிமைகளும் செல்லாக்காசாகும் !
கோடிக்கணக்கான மக்களின் பொதுக்கருத்தைத் தன் விருப்பத்துக்கேற்ப ஒரு பாசிஸ்டால் வளைக்க முடிவது, ரூபாய் நோட்டைச் செல்லாது என்று அறிவிக்கும் பிரச்சினை அல்ல, மக்களின் ஒப்புதலுடன் “ஜனநாயக உரிமைகள் இனி செல்லத்தக்கவை அல்ல” என்று அறிவிக்கப்படுவது தொடர்பான பிரச்சினை.
புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2016 மின்னிதழ்
மோடியின் கருப்புப் பண ஒழிப்பு வித்தை பற்றிய கட்டுரைகள் மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோ : கம்யூனிச புரட்சியாளரா? கட்டுரையுடன்
திருச்சி – துறையூர் வெடிவிபத்து : ஆலையை மூட அணிதிரள்வோம் !
இந்த ஆலை வந்ததிலிருந்து இங்குள்ள நிலத்தடிநீர் கெட்டு போய்விட்டது, தண்ணீர் உப்பு படிதல் அதிகம் ஆகிவிட்டது. ஆலை வருவதற்கு முன்பு இந்த பகுதி விவசாயம் செழித்து இருந்தது. அருகில் உள்ள மக்கள் இங்கு வந்து விவசாய வேலையில் ஈடுபடுவார்கள். இப்பொழுது மழையில்லை. விவசாயம் நசிந்து போயுள்ளது என்றனர்.
காட்டாமணக்கின் பெயரில் ஒரு ஏகாதிபத்திய சதி !
சுற்றுச் சூழலைக் காப்பது என்ற பெயரில் கொண்டு வரப்பட்டுள்ள உயிர்ம எரிபொருட்களால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுமா? இது குறித்து இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகள் அனைத்தும் இதற்கு நேரெதிரான முடிவுகளையே வெளியிட்டுள்ளன.
இந்த உலகம் பார்த்துப் பழகியதுதான் எங்கள் அம்மணம்
தேவதாசிகளின் அவலத்தை சொல்லும் அனுதாரா குரவ்-வின் கவிதை. ஆங்கிலம் வழி தமிழாக்கம் - புதிய கலாச்சாரம், பிப். மார்ச் 1995 இதழிலிருந்து..............
ஃபிடல் காஸ்ட்ரோ – சிறப்புக் கட்டுரை !
சர்வதேசப் பாட்டாளி வர்க்க உணர்வு என்பதை ஒரு அறம் சார்ந்த விழுமியமாகவும், சேவை மனப்பான்மையாகவும் கொண்டிருந்த காஸ்ட்ரோவின் அரசியல், கியூபாவின் தேசிய நலனை மையப்படுத்தியதாகவும், திருத்தல்வாதத்தின் புதிய வடிவமாகவுமே இருந்தது.
விடாது கருப்பு – மோடியின் கபட நாடகம் : புதிய கலாச்சாரம் டிசம்பர் 2016
4ஜி ஆண்டிராய்டு போன், ஆதார்அட்டை, கடன்அட்டை அனைத்தையும் இணைப்பதன் மூலம் குடிமக்களின் எல்லா நடவடிக்கைகளையும் அம்பானியின் கண்காணிப்புக்கும் அரசின்கண்காணிப்புக்கும் உட்படுத்துவது இதுதான் மோடியின் டிஜிடல் இந்தியா அல்லது டிஜிட்டல் பாசிசம்.
மார்க்ஸ் எனும் அரக்கன்
’மார்க்ஸ் எனும் அரக்கன்' பிரிட்டிஷ் வலதுசாரிப் பத்திரிகையின் கட்டுரை தலைப்பு. பி.பி.சி. ‘ரேடியோ 4' அலைவரிசை நடத்திய கருத்துக்கணிப்பில் அதன் நேயர்கள் தங்கள் அபிமான சிந்தனையாளராக கார்ல் மார்க்ஸைத் தெரிவு செய்தனர்.
தாயாக இருந்திராத இந்தப் பூமிக்கு எப்படி வந்து சேர்ந்தோம் ?
’புதிய சூரியனுக்கு அனுமதி இல்லை' - நவீன மராத்தி தலித் கவிதைகலின் ஆங்கில நூலிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட கவிதைகள்.
சாணைக் கல்லில் தீட்டிய ஒரு பாடல்
வாழ்க்கை எனும் சாணைக்கல்லில் தீட்டியது இந்தப் பாடல் எப்படி இது நடுநிலை வகிக்கும்? எப்படி இது எல்லோருக்கும் இன்பம் கொடுக்கும்?
கைத்தடி ஒன்றை எடுத்துக் கொள் !
சூரியன் கண்கசங்கினான் சிதறினான் வழிந்தோடியிருந்தான். கிராமத்துக்கு என்ன வந்தது? நல்ல அறுவடையா? பேரன்மார்கள் தழுவிக் கொண்டார்கள். பறித்த ஆயுதங்களைப் பத்திரப்படுத்தினார்கள்.
காயங்கள் இருக்கத்தான் செய்தன. செய்திகள் பரவின.
ராவணனை எரிக்காதே – ஓங்கி ஒலிக்கும் அசுரர்களின் குரல் !
பார்ப்பனியத்தை மக்களின் தொண்டைக் குழிக்குள் திணிக்கும் முயற்சி அதிகரிக்க அதிகரிக்க எதிர்ப்பும் அதிகரிக்கிறது. அந்த வகையில் தமிழகத்தைத் தொடர்ந்து, வட மாநிலங்களிலும் அசுரர்களைத் தங்களது மூதாதையர்களாகக் கொண்டாடும் கலகப் பண்பாடு முளைவிட்டிருக்கிறது.
நரேந்திர மோடி: “வளர்ச்சியின்” நாயகனா, கொள்ளைக்கூட்டத் தலைவனா ?
பண்டிகை காலங்களில் தனியார் ஆம்னி பேருந்துகளில் நடக்கும் கட்டணக் கொள்ளையை விஞ்சி நிற்கிறது, ரயில்வேயின் சிறப்பு ரயில்கள் கட்டண உயர்வு.
சோசலிசம்: முதலாளிகளின் கொடுங்கனவு ! பாட்டாளிகளின் கலங்கரை விளக்கம் !!
“இத்தனை நாடுகளில் தோல்வியடைந்த பின்னரும் சோசலிசம் என்ற இந்தக் கருதுகோள் வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு நாடுகளில் தலையெடுப்பது ஏன்?" என்று ஆராய்ச்சி நடத்துகிறது அமெரிக்க ஏகாதிபத்தியம்.





















