மார்க்ஸ் நூலகம் கண்ணன் அவர்களுக்கு சிவப்பஞ்சலி !
மண்ணும் மக்களும் பயனுற வாழ்ந்த அரியதொரு மனிதரை, தோழரை நாம் இழந்திருக்கிறோம். அவரது வாழ்க்கையை நம் நினைவில் போற்றுவோம்.
சென்னை மாவட்ட மக்களிடம் லெனின் பிறந்த நாள் விழா !
மக்கள் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டுதான் இருக்கிறது. எதிர்த்து கேட்பவர்கள் தேசத்துரோகிகள் என முத்திரைக் குத்தப்படுகிறார்கள். போலீசைக் கொண்டு தாக்கப் படுகிறார்கள். அமைப்பு தலைமையின் கீழ் போராடுகிற மக்களை கண்டு தள்ளி நிற்கிறது போலீசு.
இந்திய போலி ஜனநாயகத்தின் முகத்தில் காறி உமிழ்ந்த காஷ்மீர் மக்கள் !
காஷ்மீரின், ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 9, 2017 அன்று நடைபெற்றது. முன்னதாக, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களைக் கண்டித்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக காஷ்மீர் மக்கள் அறிவித்தனர்.
இனி தங்கம், வெள்ளி போல தினசரி பெட்ரோல் விலை நிலவரம் !
இனிமேல் தங்க வெள்ளி விலை நிலவரங்களைப் போல் அன்றன்றைக்கான சர்வதேச விலை அன்றன்றைக்கே உள்ளூர் சில்லறை மையங்களில் அமல்படுத்தப்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான பலன்கள் கிட்டவுள்ளதாக பத்திரிகைகள் வியாக்கியானங்கள் எழுதி வருகின்றன.
விவசாயிகளுக்காக சென்னை ஐ.டி – ஊழியர்கள் நாளை ஆர்ப்பாட்டம் !
சட்லெஜ் நதிக்கரையில் புதைக்கப்பட்ட பகத்சிங்கும் அவரது தோழர்களும் தூக்கிப் பிடித்த காலனிய ஆதிக்க எதிர்ப்புக் குரல் இன்று தமிழக உரிமைகளுக்காக, கார்ப்பரேட் கொள்ளையை எதிர்த்து போராடும் இளைஞர்களின் குரலாக உயிர்த்தெழுகிறது!
வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் யமுனை பாவக் கணக்கு !
பத்தாண்டுகளில் இந்த பாதிப்பை மீட்கும் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வேலையையும் நிபுணர் குழு கூறுகிறது. முன்னதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்த நால்வர் குழு, வாழும் கலை கம்பெனியிடம் யமுனை பழுது பணிகளுக்காக 100 கோடி ரூபாயை இழப்பீடாக கேட்டிருந்தது.
களச்செய்திகள் : கல்விக் கொள்ளை – குடிவெறி அரசு – தீண்டாமை
குடிவெறிகொண்டு அரசே ஆடுகிறது ! நெடுஞ்சாலை டாஸ்மாக் ஊருக்குள் ! தாய்மார்களே ... விடாதீர்கள் விளக்கமாற்றால் விரட்டுங்கள் ! - மக்கள் அதிகாரம்
விவசாயிகளுக்காக களம் இறங்கிய மாணவர்கள் ! களச்செய்திகள்
துப்பாக்கிக் சூட்டுக்கு மீனவர்கள் பலி, காவிரி துரோகத்திற்கு விவசாயிகள் பலி, கோகோ கோலாவிற்கு தாமிரபரணி பலி, ஹைட்ரோ கார்பனுக்கு நெடுவாசல் பலி… எனத் தொடரும் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து மீண்டும் ஒரு மெரினா எழுச்சியை தமிழகத்தில் உருவாக்குவோம்!
ஈரான் சிறையில் தமிழக மீனவர்கள் – நாங்கள் இந்தியர்கள் இல்லையா ?
திரையரங்கில் தேசியகீதம் பாடவில்லை என்றால் ஊளையிடும் இவர்கள் ஏழை இந்தியர்கள் சிறைவைக்கப்படும் போது அந்த தேசபக்தியை எங்கே கோவணத்திலா ஒளித்து வைத்தார்கள்?
பகத்சிங் ஓவியக் கண்காட்சி – அனைவரும் வருக !
பார்ப்பன பாசிசத்திற்கு எதிராக பகத்சிங் நினைவுநாளில் சென்னையில் கருத்தரங்கம், ஓவியக் கண்காட்சி. நாள்: மார்ச் 23 மாலை 5 மணி இடம் ஸ்ரீ கிருஷ்ணா திருமண மாளிகை (வானகரம் பேருந்து நிறுத்தம் அருகில்) அனைவரும் வருக!
மண்டபத்தில் தியாகி பகத்சிங் நினைவுநாள் ஓவியக் கண்காட்சியும் நடைபெறுகிறது. அனைவரும் வருக!
மார்ச் 23 கருத்தரங்கம் : ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிச கூட்டத்தை வீழ்த்துவோம் !
காவி இருள் நாட்டையே கவ்வியிருக்கிறது. நாம் என்ன செய்ய போகிறோம்? ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் காட்டியப் பாதையை வரித்துக் கொள்வோம். இப்பாதையில் மாணவர்கள் இளைஞர்கள் தொழிலாளர்கள் இதர உழைக்கும் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவோம்.
ஓசூர் விவசாயி சேகர் தற்கொலை !
தனது நிலத்தைச் சுற்றியுள்ள பலரும் நிலத்தை பிளாட் போட்டு விற்றுவிட்ட நிலையிலும் விவசாயத்தை கைவிடக்கூடாது என்று உறுதியுடன் இருந்துள்ளார் சேகர். தான் ஒரு விவசாயி என்பதில் பெருமிதம் கொண்டிருந்தார். ஆனால் இன்று நெருக்கடி தாளாமல் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
தமிழக ஒரு வரிச் செய்திகள் 15/03/2017
நீதி: ஏ1 மறைவுக்குப் பிறகு, ஏ2 சிறைவாசத்திற்கு பிறகு, ஏ1,2-க்களின் சார்பில் ஏகமனதாக அறிவிக்கப்பட்டுள்ள சிங்கப்பூர் குடிமகன் டி.டி.வி தினகரனுக்கு இந்தியக் குடிமக்கள் வாழ்த்து தெரிவிக்கலாமா?
உலகம் – இந்தியா ஒரு வரிச் செய்திகள் 15/03/2017
மராட்டிய நீர்ப்பாசன ஊழலில் துள்ளிப் பாய்ந்தவரும் குடும்ப திருமணத்திற்கு அள்ளி அள்ளி செலவழித்தவருமான கட்காரி, சோரம் போன குதிரைகளை உடனுக்குடன் ரேட் போட்டு வாங்கியதால் இன்று முதல் அவர் கோவாவின் சிறந்த குதிரைத் தரகர் என்று அழைக்கப்படுகிறார்.
கேள்வி கேட்கக் கூடாத புனித ஆவி மோடி !
மடியில் கனமில்லாதவனுக்கு வழியில் பயமில்லை என்பார்கள். கடந்தகாலம், நிகழ்காலம் என முழுக்க முழுக்க அயோக்கியத்தனங்களையே வரலாறாகக் கொண்டுள்ள மோடிக்கு, இன்னும் நூறு அமித்ஷாக்களும், சதாசிவங்களும், மாத்தூர்களும் தேவை.
























