ஆப்கானிஸ்தான் குறித்து ஒரு சுருக்கமான பார்வை || சந்திரசேகரன்
ஆப்கன் மக்களுக்காக எந்த ஏகாதிபத்திய ஓநாய்களும் நீலிக்கண்ணீர் வடிக்காமல் ஆப்கனை விட்டு வெளியேறுங்கள் அல்லது உங்களுக்கு ஆப்கன் மக்கள் இன்னொரு புதை குழியை தோண்டுவார்கள்.
கண்காணிப்பு முதலாளித்துவம் : நமது சுய சிந்தனையின் பெரும் எதிரி !
மிகப்பெரிய நிறுவனகளான கூகுள், அமேசான், பேஸ்புக் மற்றும் ஆப்பிள் ஆகியவை நமது செயல்பாடுகள் பற்றிய தரவுகளை சேகரித்து கட்டுப்படுத்தி, அவற்றை பண்டங்களாகவும் சேவைகளாகவும் மாற்றுகின்றன.
இயற்கை அழிவிற்கு காரணம் உழைக்கும் மக்களா ? கார்ப்பரேட் முதலாளிகளா?
பெருவிகித உற்பத்தியே பேரழிவுக்கான காரணம் என்கிற இடத்தை அடைந்துவிட்டோம். பெருந்தேசியமும் முதலாளித்துவமும் பேரழிவுக்கான அடிப்படை காரணங்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
பொருள் புரியாமலேயே பயன்படுத்தப்படும் கேடான வடமொழிச் சொற்கள் || வி.இ.குகநாதன்
நம்மை கீழ்மைப்படுத்தும் வரலாற்றை நமக்குத் தெரியாமலேயே நமது மொழியின் வாயிலாகவே நமது தலையில் சுமத்தி வைத்திருக்கும் பார்ப்பனிய தந்திரத்தை அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை !
இலங்கை : ஆன்லைன் கல்விக்கு மலையேறி மரமேறும் பள்ளி மாணவர்கள் !
இலங்கையிலுள்ள 4.3 மில்லியன் மாணவர்களில் 40 % மாணவர்களுக்கு மட்டுமே ஆன்லைன் வகுப்புகளில் பங்குபெரும் வாய்ப்புகள் உள்ளது. ஏராளமான மாணவர்களுக்குத் தேவையான கருவிகளோ, இணைய வசதிகளோ இல்லை.
பெகாசஸ் : சட்டரீதியாக எதிர்கொள்ள முடியுமா ?
எந்தவித பாதுகாக்கப்பட்ட கருவியையும் அதிநவீன தாக்குதலைக் கொண்டு தகர்க்கும் தன்மை கொண்டது, இந்த பெகாசஸ். அலைப்பேசி உற்பத்தி செய்யும் நிறுவனம் கூட பாதிப்பை கண்டுபிடிக்க இயலாது. இதை ‘0 Day’ பாதிப்புகள் என்கிறார்கள்
RSS-ன் நாஜி பாரம்பரியத்தை அம்பலப்படுத்தும் திரேந்தர் ஜா || முகமது இலியாஸ்
அன்றைய உளவுத்துறை அறிக்கைகளின்படி, ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் ஹெட்கேவார், சாவர்க்கர் ஆகியோரின் வரலாற்றோடு ஹிட்லர், முசோலினி ஆகியோரின் வரலாற்றையும் வாசிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.
பெகாசஸ் ஸ்பைவேர் : உளவு மென்பொருள்களின் அரசன் !!
நீங்கள் பேசுவதை பதிவு செய்வது, மறைமுகமாக உங்களின் கேமராவை ஆன் செய்து உளவு பார்ப்பது, ஜிபிஸ் மூலம் உங்களது இடத்தின் அடையாளத்தை எடுத்து அனுப்புவது என அனைத்தையும் செய்ய வல்லது பெகாசஸ்.
இலங்கை தொழிற்சங்க போராட்டம் – ஒரு மறைக்கப்படும் வரலாறு || கலையரசன்
அரசு இயந்திரம் போரை பயன்படுத்தி தொழிற்சங்கவாதிகளை வேட்டையாடியது. இரகசிய கொலைப் படையினரால் தொழிற்சங்க உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் கண்ட இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்துத்துவத்தை கற்பிக்க தனி கல்வி வாரியம் அமைக்கும் மோடி அரசு !
நவீன கல்வி என்ற பெயரில் இந்து மத புராணங்களையும், அறிவியலுக்கு புறம்பான கட்டுக் கதைகளையுமே பாடத்திட்டமாக அறிவிப்பார்கள். ஏற்கனவே, புதிய கல்வி கொள்கையில், இதற்கான முன்மொழிவுகளை முன்வைத்துள்ளனர்.
பசில் ராஜபக்சேக்கு அமைச்சர் பதவி : ராஜபக்சே குடும்பத்தின் பிடியில் இலங்கை || ரிஷான் ஷெரிஃப்
பசில் பாராளுமன்றம் வராதிருந்த கடந்த காலம் முழுவதும் அரசாங்கத்தின் முக்கியமான தீர்மானங்கள் அனைத்தும் அவரது ஆலோசனைக்கும், ஆசிர்வாதத்துக்கும் ஏற்பவே எடுக்கப்பட்டன
நூல் அறிமுகம் : செல்லாத பணம் || இமையம் || எஸ். காமராஜ்
தனது வர்க்கத்துக்குக் குறைவான ஒரு பர்மா அகதியை சாதி கடந்து திருமணம் செய்து கொள்ளும் ஒரு பெண் தன்னைச் சுற்றியுள்ள சமூக மதிப்பீடுகளுக்கு எப்படி தன்னை பலிகொடுக்க வேண்டி உள்ளது என்பதை ஆழமாக எடுத்தியம்புகிறது இந்நாவல்.
அரியானா : உச்சநீதிமன்ற ஆசியோடு விரட்டியடிக்கப்படும் தொழிலாளர்கள் !
அரியானா அரசால் கோரிக்கான் பகுதியில் 2000-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டுவிட்டன. 20,000 மேலான குழந்தைகள், சிறுவர்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். 5000-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிகளை திறப்பதற்கான காலம் இது !! || Dr. சந்திரகாந்த் லகாரியா
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் கட்டாயமாக உச்சபட்ச கவனம் கொடுத்து மீண்டும் பள்ளிகளை திறப்பதற்கான பருண்மையான திட்டங்களையும் வழிகாட்டுதல்களையும் உருவாக்க வேண்டும்.
ஆனந்த் தெல்டும்டேவைக் கண்டு பாஜக ஏன் அஞ்சுகிறது ? || விஜய தாரணிஸ்
உலகில் எல்லா அரசுகளும் மக்களுக்காக சிந்திக்கும் சிந்தனையாளர்களைக் கண்டு அஞ்சுகின்றன. சுரண்டலை கேள்வி கேட்பவர்களை சிறைப்படுத்துகின்றன. இதையேத்தான் பாஜக அரசும் பீமா கொரேகான் வழக்கிலும் செய்கிறது.