உலகைக் குலுக்கிய மே தினம் 2016 – வீடியோ – படங்கள் !
மே தினத்தை முன்னிட்டு உலகெங்கும் தொழிலாளி வர்க்கத்தின் போர்குணமிக்க போராட்டங்களும், பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றுள்ளன.
வறட்சியின் அகதிகள் – மராத்வாடா பயங்கரம் – புகைப்படங்கள் !
வறட்சி மற்றும் அரசுகளின் அலட்சியம் காரணமாக பலர் ஊரை விட்டே சென்றுவிட்டனர். இங்குள்ளவர்கள் தங்களின் கிணறுகளில் தோண்டும் ஒவ்வொரு மீட்டரிலும் வரும் நீரில் கால்சியமும் உப்பும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் மக்களின் சுகாதாரப் பிரச்சினைகளும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
மக்கள் முதல்வர் – கேலிச்சித்திரம்
பள்ளி மாணவர்களிடம் "மக்கள் முதல்வர் - பொருள் விளக்குக" என்று கேட்டால் எப்படி விளக்குவார்கள்? கேலிச்சித்திரம்!
பூமியை அரிப்பதுதான் உலகமயம் – கேலிச்சித்திரங்கள்
கடைசி மரம் வெட்டப்படும் போதும், கடைசி மீனை சாப்பிடும் போதும், நச்சாக்கப்பட்ட கடைசி நீர் காலியாகும் போதும் மட்டும்தான் நீ உணருவாய், பணத்தை சாப்பிட முடியாது என்று!
அம்பேத்கருக்கு தடை போடும் சென்னை ஐ.ஐ.டி
அம்பேத்கரின் 125-வது பிறந்த தினத்தில் கூட ஒரு உயர்கல்வி நிறுவனத்தில் அவரைப் பேசுவதற்கு தடை என்பது அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் இது இப்போது மட்டுமல்ல. அ.பெ.வா.வட்டம் ஆரம்பித்த நாள் முதல் ஐ.ஐ.டி நிர்வாகம் இப்படித்தான் பல்வேறு அடக்குமுறைகளை ஏவிவருகிறது.
மோடியின் ஒற்றைக் கால் ஒன் இந்தியா! கேலிச்சித்திரங்கள்
“யாரெல்லாம் ‘பாரத் மாதா கி ஜே’ என்று சொல்ல மறுக்கிறீர்களோ, அவர்களெல்லாம் இந்தியாவில் வாழ்வதற்கு உரிமையற்றவர்கள்” – மகாராஷ்டிர முதலமைச்சர்!
நமக்கு தேசத்துரோகம், ஜெயாவுக்கு தேர்தல் பிரச்சாரம் – கேலிச்சித்திரம்
"ஜனங்க கேட்டா தேசத் துரோகம்... நீங்க சொன்னா பிரச்சாரமா?"
தற்கொலை விவசாயியும் செல்ஃபி மோடியும் ! கேலிச்சித்திரங்கள்
தூக்கு போடும் விவசாயியிடம் மோடி: ஐயா, ஒரு நிமிடம் பொறுங்கள்! தயவு செய்து கிசான் சௌதா ஆப்-ஐ தரவிறக்கம்செய்யுங்கள். பிறகு நீங்கள் ஃசெல்பி கூட எடுத்து வெளியிடலாம்!
லாகூர் இக்பால் பூங்கா படுகொலை !
பாகிஸ்தானில் ஷியாக்கள், அஹ்மதியாக்கள், கிறித்தவர்கள் மீது வகாபிய பிரிவைச் சேர்ந்த முஸ்லீம் பயங்கரவாதிகள் நடத்தும் படுகொலையினால் அந்நாடே சுடுகாடாகி வருகிறது.
குரங்கு வாலில் கட்டப்பட்ட நாடு – கேலிச்சித்திரங்கள்
காளைமாடுகளை விற்கும் இரண்டு முஸ்லீம் வியாபாரிகள், ஜார்க்கண்டில் அடித்துக் கொல்லப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவன் மாட்டு வியாபாரியின் மகன்,13 வயதுச் சிறுவன்.
நீதிமன்றத்தில் ரவுடி அர்ஜுன் சம்பத்தை விரட்டிய வழக்கறிஞர்கள் !
50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இந்து மக்கள் கட்சியை தடை செய், காவி பயங்கரவாதி அர்ஜுன் சம்பதின் பிணையை இரத்து செய்., பெரியார் பிறந்த மண் இது, பார்ப்பனிய பிசாசே வெளியேறு என்று முழக்கமிட்டவாரே மாவட்ட அமர்வு நீதிபதியிடம் புகார் மனு அளித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறினர்.
கத்தினால் பொய் உண்மையாகுமா ? கேலிச்சித்திரங்கள்
பெண்கள் மீதான வன்முறை, ஜே.என்.யூவிற்கு ஆதரவாக ஹோண்டா தொழிலாளிகள், டொனால்ட் ட்ரம்ப், டைம்ஸ் நவ் - கேலிச்சித்திரங்கள்!
விஷாலின் கருணை, யமுனையின் துயரம் – குறுஞ்செய்திகள்
அடித்தது நியாயம்தான், அடிபட்டது பாவம்தான் என்று அந்த ஒரு இலட்சத்தை கொடுத்து விட்டால் பாவமும் போய்விடும், நியாயமும் சமாதானமாகும் என்கிறார் விஷால்.
மங்காத்தா மல்லையா – கேலிச்சித்திரங்கள்
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மூலம் பொதுத்துறை வங்கிகளின் மக்கள் பணத்தை மல்லையா ஸ்வாகா செய்தது, மேலவை உறுப்பினராக இருந்து கொண்டே நீதிமன்றங்களை தூக்கி ஏறிந்து விட்டு நாட்டை விட்டு ஓடிப் போனது அனைத்தும் பா.ஜ.க ஆசியுடன் நடக்கவில்லை என்று எவர் மறுக்க முடியும்?
தேவர் சாதிவெறி – கேலிச்சித்திரம்
நேற்று இளவரசன், கோகுல் ராஜ், இன்று சங்கர் சாதிவெறிக்கு பலி! இனியும் வேடிக்கை பார்ப்பது அவமானம்!
ஒன்றிணைவோம்! கொலையாளிகளை நாமே தண்டிப்போம்! அரசுக்கு இணையான அதிகாரம் கொண்ட சாதிய கட்டமைத்தைத் தகர்த்தெறிவோம்!