privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஇதரபுகைப்படக் கட்டுரைமூடு டாஸ்மாக்கை - மதுரவாயல், பென்னாகரம், கோவில்பட்டி - படங்கள்

மூடு டாஸ்மாக்கை – மதுரவாயல், பென்னாகரம், கோவில்பட்டி – படங்கள்

-

மதுரவாயல் போராட்டத்தில் போலீசு கொலைவெறித்தாக்குதல்.

மே 5 ஆம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் மூட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் அமைப்பு கெடு விதித்திருந்தது. குறிப்பிட்ட தேதிக்குள் மூடாவிட்டால் மக்களை அணிதிரட்டி நாங்களே மூடுவோம் என்றும் கூறியிருந்தது.

அதன்படி இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூடும் போராட்டம் காலை துவங்கியது. சென்னையில் மதுரவாயல், பொன்னேரி, மீஞ்சூர்..  மூன்று இடங்களில் போராட்டம் நடந்தது. மதுரவாயல், பொன்னேரி, மீஞ்சூர்.. மதுரவாயலில் போலீசு கும்பல் மக்களை மிகவும் கொடூரமான முறையில் தாக்கியுள்ளது.

மதுரவாயல் நொளம்பூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி பகுதி மக்களுடன் இணைந்து காலை 11.30 மணிக்கு மக்கள் அதிகாரம் தோழர்கள் போராட்டத்தை துவங்கினர். இன்று போராட்டம் என்று அறிவித்திருந்தும் திமிருடன் கடைக்கு முழுப் பாதுகாப்பு போட்டு திறந்து வைத்திருந்தது ஜெயா அரசு. தோழர்களும் மக்களும் கடையை மூடக்கோரி முழக்கமிட்டவாறே பூந்தமல்லி சாலையை கடந்து கடையை நோக்கி முன்னேறத்துவங்கியதும், இதற்காகவே காத்திருந்த வெறிகொண்ட மிருகம் போல அனைவரையும் காட்டுமிராண்டித்தனத்துடன் தாக்கத் துவங்கியது போலீசு.

பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் என்று அனைவரையும் கொடூரமாக தாக்கினர். லத்திக்கம்புகளைக் கொண்டு நாலா பக்கங்களிலிருந்தும் நிராயுதபாணிகளான தோழர்களையும் மக்களையும் சுழற்றி சுழற்றி அடித்தனர். இந்த தாக்குதலில் அனைவருக்கும் மிகக்கடுமையான காயங்கள் ஏற்பட்டது. சத்யா என்கிற பெண்ணின் மண்டையை உடைத்துவிட்டனர். தற்போது அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஆகாஷ் என்கிற 16 வயது பள்ளி சிறுவனை வயிற்றிலும், நெஞ்சிலும் கடுமையாக தாக்கியதில் முச்சுத்திணறல் ஏற்பட்டு அவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

வண்டியில் ஏற்றிய பிறகும் உள்ளுக்குள் வைத்து தாக்கியுள்ளனர். அனைவரும் தற்போது கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கின்றனர். கைதானவர்களை பார்க்கச் சென்ற தோழர்களையும் உறவினர்களையும் கூட போலீசு தாக்கியுள்ளனர்.

பிற்சேர்க்கை: மாலை 5.00 மணி

இன்று காலை மதுவரவாயல் டாஸ்மாக் மூடும் போராட்டத்தில் ஈடுப்பட்டு சிறைபிடிக்கப்பட்ட மக்கள் அதிகாரம் மற்றும் மக்கள் உண்ணாநிலை போராட்டம்!

மதுரவாயல் ரேசன் கடை அருகில் உள்ள டாஸ்மாக் கடையை மூடும் போராட்டத்தில் ஈடுப்பட்ட அப்பகுதி மக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல் 24 பேர் படுகாயம். பெண்களுக்கு மண்டை உடைப்பு. தற்போது மதுரவாயல் பாக்கிய லட்சுமி மண்டபத்தில் சிறைவைப்பு. படுகாயம் அடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்காததை எதிர்த்து மதிய உணவு சாப்பிட மறுத்து  உண்ணாநிலை போராட்டம்.

image6

 

image5

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு
———————————————————————————–
மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெளியிடும் கண்டன அறிக்கை
மீஞ்சூர் அருகில் உள்ள நாப்பாளையம் மற்றும் மதுரவாயலில் டாஸ்மாக் கடையை மூடு என்று போராடிய மக்கள் மீதும் மக்கள் அதிகாரம் தோழர்கள் மீதும் போலீசார் கொலைவெறி தாக்குதல் நடத்தியதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

பெறுநர்: ஆசிரியர்/நிர்வாகி அவர்கள் பத்திரிக்கை/தொலைக்காட்சி

அன்புடையீர்,

வணக்கம். கடந்த ஒரு வருட காலமாக டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பு தொடந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மே 5ம் தேதிக்குள் கடையை மூட வேண்டும் என்று எச்சரித்து மனு கொடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் மதுரவாயல் நொளம்பூர் பகுதியிலும், மீஞ்சூர் அடுத்த நாப்பாளையம் பகுதியில் உள்ள இரு டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வேண்டும் என்று மக்கள் மனு கொடுத்து இருந்தனர். அதன் பின்னும் கடை அகற்றப்படாததால், அப்பகுதி மக்கள் இணைந்து கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறை கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளது. பெண்கள் என்றும் பாராமல், அவர்களின் ஆடைகளைக் கிழுத்தும், அவர்களைக் கீழே தள்ளி பூட்ஸ் காலால் உதைத்தும், வக்கிரமாக நடந்து கொண்டுள்ளனர். மதுரவாயலில் நடந்த போராட்டத்தில் சிறுவன் ஆகாஷ் மீது நடத்திய தாக்குதலில் அவர் படுகாயமடைந்து மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சத்யா என்ற 50 வயது மதிக்கத்தக்க பெண்மணியை மண்டையை உடைத்து இரத்த காயம் ஏற்படுத்தினர். மீஞ்சூரில் நடந்த போராட்டத்தில் ஒரு பெண்ணை ஆண் போலீசு வக்கிரமாக தாக்கியுள்ளார். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். ஜெயா போலீசின் இந்த நடவடிக்கைகளை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டிய காவல்துறை இன்று டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி போராடுகின்ற மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்துகிறது. முழுக்க முழுக்க மக்களுக்கு எதிரானதாக மாறிப்போய் உள்ளது. காவல்துறை மட்டும் அல்ல இந்த ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்புமே திவாலாகி, தோற்றுப்போய், நிலைகுலைந்து, எதிர்நிலை சக்தியாக மாறிவிட்டது. இவற்றை அகற்றிவிட்டு மக்கள் தங்களுடைய கையில் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஜெயா போலீசின் இந்த காட்டுமிராண்டித் தாக்குதலால், ஒரு நாளும் மக்கள் அதிகாரம் அமைப்பும், மக்களும் பின்வாங்கப்போவதில்லை. டாஸ்மாக் கடைகளை முழுமையாக அகற்றும் வரை இந்த போராட்டங்கள் தொடரும்.

இவண்
வெற்றிவேல் செழியன்
மண்டல ஒருங்கிணைப்பாளர்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள்

__________________

பென்னாகரம்

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் இருக்கும் டாஸ்மாக்கை மூட கோரி போராடிய
நான்கு பெண்கள், இரண்டு கைக்குழந்தைகள் உட்பட போராடிய மக்கள், தோழர்கள் கைது !
பாசிச ஜெயா போலீசின் கொடுரமான காட்டு மிரண்டித் தாக்குதல் !

ன்பார்ந்த உழைக்கும் மக்களே

டாஸ்மாக்கை மூட போராடினால் தேசத்துரோகம் என்கிறது அரசு. போராடுபவர்கள் மீது காட்டுமிரண்டி தாக்குதலை தொடுத்து வருகிறது போலீசு. பென்னாகரம் பேருந்து நிலையத்திற்கு சுற்று வட்டார பகுதியில் இருந்து  தினமும் ஆயிரக்கனக்கான மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் மக்கள் இப்படி நெருக்கமாக கூடும் பேருந்து நிலையத்திலேயே டாஸ்மாக்கை திறந்து வைத்திருக்கிறது அரசு. இதனை மூட கோரி மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பாக பென்னாகரம் நகரம் மற்றும் அதனை சுற்றி இருக்கின்ற கிராமங்களில் உள்ள மக்களை சந்தித்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து  கடந்த 2/5/2016 தேதி தாசில்தார்/ தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் மனு கொடுக்கப்பட்டது. நாங்கள் மூடுவதாக  கூறி வாக்குறுதி கொடுத்தனர் அதிகாரிகள். 5 – ம் தேதிக்குள் மூடவில்லை எனில் மக்களை திரட்டி நாங்கள் மூடுவோம் என பகுதி வாழ் மக்கள் எச்சரித்து இருந்தனர்.

அப்போது பேசிய தேர்தல் அதிகாரி கண்டிப்பாக நடவடிக்கை இருக்கும் என்று வாக்குறுதி கொடுத்தார். ஆனால் 5/5/2016 அன்று வரை அந்த கோரிக்கை நிறைவேறவில்லை என்பதாலேயே மக்கள் அதிகாரம் சார்பாக டாஸ்மாக்கை மூட சென்றனர். ஆயிரக்கணக்கான பெண்களின் தாலியை அறுக்கும் டாஸ்மாக்கை மூடுவற்கு பதிலாக நூற்றுக்கணக்கான வந்திருந்த  துணை ரானுவ படையினரை கொண்டு பேருந்து நிலையத்தில் குவித்திருந்தனர் அதிகாரிகள். ஆயிரக்கனக்கான மக்கள் கூடி இருக்கும்  பேருந்து நிலையத்தில் டாஸ்மாக்கை மூடு என போராடிய பெண்கள், கைகுழந்தைகள் என்று பாரபட்சம் பாராமல் எடுத்த எடுப்பில் தாக்குதல் தொடுத்தனர்.

போராட்டத்திற்கு கூடியிருந்த பொது மக்களை மிரட்டுகிற வேலையையும்  மக்களை கலைக்கும் வேலையையும் உள்ளூர் போலீசு   செய்தனர். போலீசு பட்டளத்தை கண்டு மிரளாத தோழர்கள் முழக்கமிட்டவாறே இருந்தனர். கைது  செய்ய முயற்ச்சித்த போது எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டதால் தரதரவென இழுத்து சென்றனர். தோழர் முத்துக்குமார், மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் டாஸ்மாக் அதிகாரிகளை வரச்சொல்லுங்கள் என்று பேசி கொண்டு இருக்கும் போதே நூற்றுக்கணக்கான போலீசு  நான்கு பக்கமும் இழுத்து காட்டுமிரண்டித்தனமாக தாக்கினர். துணிந்து எதிர்கொண்ட தோழர்கள் பெண்கள் 35 பேர் கைதாகினர். இதில் 7 தோழர்களுக்கு ரத்த காயம் ஏற்ப்பட்டது நான்கு தோழர்களை பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தேர்தலில் ஓட்டுக்காக ஊருக்குஊரு எல்லா கட்சிகளும் பணத்தை வினியோகம் செய்து வருகின்றனர். இதற்கு பாதுகாப்பாக இருப்பது தேர்தல் அதிகாரிகள் தான், மாலை கொடுக்கிற பணத்தை மீண்டும் காலையே டாஸ்மாக்கில் வசூல் செய்து கொள்கின்றனர். இந்த மானகெட்ட வேலைக்கு பெயர் தேர்தல் அதிகாரியாம் ? தோற்றுபோன இந்த அரசமைப்பை காறி உமிழ்வோம்.  டாஸ்மாக்கை மூடும் வரை போராட்டத்தை போராடுவோம்.

மக்கள் அதிகாரம்
தருமபுரி.
8148573417

______________________

 

20160505_111526_13665

20160505_112142_3137

 

 

மக்கள் அதிகாரத்தின் துண்டுப் பிரசுரங்களை பிடுங்கி கழிப்பறையில் வீசியிருக்கும் தருமபுரி போலீசு!

police-use-toilet-paper

 

கோவில்பட்டி போராட்டம் – படங்கள்:

கோவில்பட்டி