தேர்தலென்று, ஓட்டென்று திரும்பவும் நீ போய்விழுந்தால் இனி தேடினாலும் கிடைக்காது உன் 'பாடி'.
டாட்டாவுக்கும், தீட்சிதனுக்கும் போராடும் நந்தன்களை வழக்கம்போல வாசல் மறிக்கவும் 'ஜோதியில்' எரிக்கவும் காத்திருக்கிறார்கள் உச்சநீதிமன்ற தீட்சிதர்கள் !
இருஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடுவின் நெருப்புக்குத் தப்பியவனை இருங்காட்டுக் கோட்டை பன்னாட்டுக் கம்பெனி எந்த உரிமையுமின்றி எரிக்கிறது!
பாராளுமன்றத்தில் அம்பேத்கர் சிலை, பரமக்குடியில் தலித்துகள் கொலை! இந்தப் போலி ஜனநாயகத்தை தோலுரிப்பதே புரட்சியாளன் வேலை !
பிரம்ம ரகசியத்தை அறியப்போன நசிகேதனின் தலை சுக்கு நூறானதோ இல்லையோ, காஞ்சி பிர்லா மாளிகையின் ரகசியத்தை அறிந்த சங்கர்ராமனின் தலை சுக்கு நூறானது.
தனது இலக்கில் மட்டுமே வாயை மூடிக்கொண்டு குறியாய் இருக்கும் மன்மோகன்சிங் கிரிக்கெட் ஆடினால் நிச்சயம் அவர் பெயர் டெண்டுல்கர்தான்!
வாசகர்கள், பதிவர்கள், சமூக வலைத்தள நண்பர்கள், தோழர்கள் அனைவருக்கும் நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்கள்!
புது நகை வாங்க போகும் வழியில், சாலையோர வியாபாரியின் கால்களைப் பார்த்து கண்களில் எரியும்! "தீபாவளி நேரத்துல இவுனுங்க ஒரு இடைஞ்சல்".
போராடுதல் இயல்பு. உரிமைக்காக போராளியாய் நிற்பதில் இழப்புகளொன்றும் செய்வதில்லை.
ராமஜெயம் ஸ்ரீ ஊழல் மயம்! மோடி என்பது தனியார் மயம்! ராமஜெயம் ஸ்ரீ தனியார் மயம்! மோடியின் கைகளில் உலகமயம்!
பார்ப்பனக் கொலைகாரன் ராமனை செருப்பாலடித்து, பார்ப்பனக் கட்டுக்கதை விநாயகனை தேங்காய்க்கு உடைத்து தமிழகத்தை இந்துத்துவத்தின் கல்லறையாக்கினார் தந்தை பெரியார்.
என் வளையம் ரொம்பப் பெரியது. அதில் நீ உண்டு, அண்ணி உண்டு, ஏகாம்பரம் உண்டு, அவன் தாயுமுண்டு நம் ஊரே உண்டு.
தேசத்தின் மதிப்பை உலகச் சந்தையில் விற்று விட்டு, பணத்தின் மதிப்பை பங்குச் சந்தையில் தேடும் இந்த அயோக்கியர்களே ஒரு அன்னிய முதலீடு!
"முகத்தை கீறிப் பார்க்கும் முட்களை தவிர்த்து விட்டு வயல்களில் பூத்துக் கிடக்கும் மலர் ஒன்றை உன்னால் பறிக்க முடியாது. விரல்களுக்கிடையே வெடித்துச் சிதறாத ஒரு புத்தகத்தையேனும் உன்னால் வாங்க முடியாது"
ஒரு லோடு எல்.கே.ஜி. இரண்டு லோடு ப்ரீ கே.ஜி. எல்லா திசையிலிருந்தும் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன குழந்தைகள்.










