விளைநிலத்தின் நாளத்திற்குள் ஓடும் நீரை அத்துமீறி உறிஞ்சிடும் கோக்கையும் பெப்சியையும் கண்டு கொதிக்காத கௌரவம்
காதலின் தவிப்புக்கு ‘ரெட்டைக்குவளை’ வைக்கிறது. - தோழர் கோவன் கவிதை
ராமனுக்கு கோயில் கட்ட சூலங்கள்! அந்நிய மூலதனத்துக்கு தேசத்தையே வாரிக் கொட்ட துடைப்பங்கள்! நாட்டையே அமெரிக்கக் குப்பையாக்கி விட்டு நாடகமாடும் தர்ப்பைகள்!
எனக்கு, புண்ணாக்கும், பருத்திக்கொட்டையும் மானியத்தில் தந்ததால் - ஆவின் அழிந்ததென்று அவிழ்க்கும் பொய்நாக்கைப் போல ஒரு அருவருப்பை என் சாணிப் புழுவிலும் சத்தியமாய் நான் பார்த்ததில்லை!
அம்மாவின் தினசரிக் கும்பல் அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா லேப்டாப்.. என்று கத்துவது உன் காதுகளுக்குக் கேட்கவில்லையா? அதை நினைத்தாவது அழுதுவிடு!
"கடந்த காலத்தை மறந்துவிடுங்கள்; மிகப் பழைய கவிஞர்களை மறந்து விடுங்கள்; ஆயுதப் புரட்சியை உயர்த்திப் பிடிக்கும் புதிய போர்க்குணம் மிக்க கவிஞர்களைப் போற்றுங்கள்."
தலையில் ஓடும் வியர்வை மூக்கு நுனியில் சூரிய முட்டையாய் உடையும், உச்சி சூரியனை பிடிவாதக் கால்கள் மிதித்து மேலேறும் கொத்தாகப் பேப்பர் பார்க்கையில் படிக்கல் சூடு மனதில் குளிரும்.
காய், கனிச் சந்தையில் கருவாடு விற்கலாமா? என வக்கணை பேசும் அக்கிரகாரமே! செய்திப் பத்திரிகை என்று அரசு சலுகையை அள்ளிக் கொண்டு விளம்பரத்திலும் விலைக்கு செய்தி போட்டும் நீ கடை நடத்தலாமா?
விளைந்து கொடுத்த காவிரிப் படுகைமேல் வெட்டு விழுந்தால், வெளியேறப் போவது மீத்தேன் அல்ல - எங்கள் விவசாயி வர்க்கத்தின் நெருப்பு! உழவு நடந்தால் ஊரே வாழும் - மீத்தேன் இழவு நடந்தால் ஊரே சுடுகாடாகும்!
"தெற்கோதும் தேவாரத் தேனிருக்க செக்காடும் இரைச்சலென வடமொழியா?" என, பார்ப்பனத் திமிருக்கு பதிலடி தந்தார் பாரதிதாசன்!
தமிழச்சி மார்பை மறைக்கவும் சேலை அணியத் தடை, இதுதான் நிலப்பிரபுத்துவ நிலை, "முழங்காலுக்கு கீழே சேலையை இழுத்துவிட்டது யாரு? மணலி கந்தசாமி பாரு" என தாழ்த்தப்பட்ட கூலி விவசாயப் பெண்களின் நடவுப் பாடல் கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டத்தால் விளைந்தது!
சங்கு சக்கரங் கதிகலங்கிடச் சனாதனத்தின் குலைநடுங்கிட கங்கை வார்குழல் 'திங்குதிங்'கெனச் சைவாதீனம் பதை பதைத்திட அசுர கானம் முழங்குகின்றது அசுர வித்துகள் முளைவிட்டெழுந்தன.
ரிலையன்பிரெஷ் அம்பானியிடம் வாயை மூடிக்கொண்டு கேட்டதைக் கொடுத்தவன், தலைச்சுமை வியாபாரப் பெண்ணிடம் தத்துவம் பேசினான்!
போதுமான வசதிகள் இல்லாமலே, பள்ளி இறுதித் தேர்வு முடிவுகளில் சாதித்த அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் வாழ்த்து சொல்லும் கவிதை
மெல்லிய வண்ணத்துப்பூச்சிகளின் நிறங்கள் உன் உழைப் பூ வில்தான் கரைகின்றன. சில்லிடும் காற்றின் இனிமை உன் தோல்களில்தான் தன்னைத் தொலைக்கின்றன. இயற்கையின் உதடுகள் விரும்பும் இன்சொல் தொழிலாளி!
பூணூல் அறிக்கைக்கு பல கோடி, படித்த பையன் கேட்கிறான் வானிலை மையம், வானிலை அறிக்கை நாட்டுக்கு எதுக்கு டாடி?
















