கந்து வட்டி கொடுமைக்கு தமிழகமே பலி!
ஒவ்வொரு மாவட்டத்திலும் பணத்தை வசூலிப்பதற்கென்று தனி பாணியை கையாளுகிறார்கள். அனைத்து இடங்களிலும் வெளிப்படையாகவே கந்து வட்டித் தொழில் நடைபெறுகிறது.
கந்துவட்டி படுகொலையைக் கண்டித்தால் சிறை ! கரூர் போலீசின் அராஜகம்
கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் பிருத்திவிராஜ் மற்றும் மாவட்ட காவல் துறையினர் மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது தொடர்ந்து அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வதும், தொடர்ந்து பொய் வழக்கு போடுவதும் வாடிக்கையாக உள்ளது.
நெல்லை : இசக்கிமுத்துக்களின் மரணத்திற்கு எப்போது பழி தீர்ப்போம் ?
தான் வளர்த்த பயிர்கள் கருகியதைக் கண்டு நெஞ்சு வெடித்து செத்த தஞ்சை விவசாயிகளாலும், பொறியியல் படித்த மகனுக்கு வேலை கிடைக்காத நிலையில் அவனது கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த வழியின்றி தூக்கில் தொங்கிய தாய்மார்களாலும் தான் இசக்கிமுத்துவின் முடிவைப் புரிந்து கொள்ள முடியும்.
டெங்கு குற்றத்தைக் கண்டித்தால் சுறுசுறுப்பாக வழக்கு போடுமாம் செயலற்ற அரசு !
தமிழகத்தில் முழுமையாக செயலற்றுப் போன அரசு போராடுபவர்களை குறிவைத்து வழக்கு போடுவது அவர்களின் போராட்டங்களை முடக்குவது ஆகியவற்றை மட்டும் செய்கிறது.
மணல் கொள்ளையை நிறுத்து ! – கூடலையாத்தூர் பொதுக்கூட்டம் !
கடந்த மூன்று மாதகாலமாக வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கத்தோடு எமது மக்கள் அதிகார தோழர்களும் இணைந்து வெள்ளாற்றில் இயங்கி வரும் கூடலையாத்தூரில் மணல் குவாரியை மூடியாக வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தினோம்.
தொழிலாளர்களை மிரட்டும் ஜேப்பியார் கல்லூரி நிர்வாகம் !
ஒருபக்கம் தொழிலாளிகளை போலீசு அதிகாரத்தைக் கொண்டும் மற்றொரு பக்கம் ரவுடிக்கே உரிய பாணியில் மிரட்டியும் பார்க்கிறது நிர்வாகம்.
இளம் தலைமுறையை சீரழிக்கும் கஞ்சா !
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை தீவிரமாக அதிகரித்துள்ளது. கஞ்சா போதையில் சாலையில் சுற்றும் மாணவர்கள், இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
பாஜகவின் பதவி வெறி: இளம் பத்திரிக்கையாளர் சந்தனு படுகொலை !
இந்தியாவில் கலவரம் என்றாலே பாஜக-வின் ஆதரவோ பங்களிப்போ இல்லாமல் எதுவும் நடக்க முடியாது என்ற நிலை தான் இப்போது நிலவுகிறது. திரிபுராவில் சந்தானுவைக் கொன்ற ஐ.பி.எஃப்.டி கட்சி மோடியின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளது.
வெள்ளாற்று பாதுகாப்புக் குழுவினர் மீது பொய் வழக்கு !
திருமுட்டம் காவல் ஆய்வாளர் திரு. பீர்பாஷா, மணல் லாரி மேட்டரில் தலையிடாதே, ஜெயிலுக்கு போக வேண்டியிருக்கும் குண்டாசில் உள்ளே தள்ளி விடுவேன், உன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என போராடுபவர்களை மிரட்டுகிறார்.
அனிதாவுக்கு நீதி கிடைக்க நீட் தேர்வை ரத்து செய் ! – தொடரும் மாணவர் போராட்டங்கள் !
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டியும், கோவூர் செயிண்ட் ஜோசப் கல்லூரி மாணவர்களும் விருதை கொளஞ்சியப்பர் கல்லூரி மாணவர்களும், விழுப்புரம் அண்ணா கலைக் கல்லூரி மாணவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் !
நீட்: நுங்கம்பாக்கம் – கோவூர் – அரசுப் பள்ளி மாணவிகள் போராட்டம் !
“திங்கக் கிழமை பள்ளிக்கு எங்கள சேக்க மாட்டார்களாம் ரொம்ப நல்லது போராட்டம் நடத்த வசதியா இருக்கும். நாங்க இன்னைக்கு இல்லைன்னாலும் தொடர்ந்து போராடுவோம்.”
மோடிக்கு செருப்படி ! – கோவில்பட்டி மக்கள் அதிகாரம் சாலை மறியல் !
மக்கள் அதிகாரத்தின் உறுப்பினர்கள் எழுச்சிகரமாக முழங்கியதைக் கேட்ட பொதுமக்கள் திரண்டு நின்று கவனித்தனர். போராட்டத்தின் போது மோடியின் படத்தை செருப்பால் அடித்ததை பலரும் ஆதரித்தனர்.
அண்ணாமலைப் பல்கலை – தர்மபுரியில் கைது – போலீஸ் அராஜகம் !
அண்ணாமலை பல்கலையில் இரண்டாவது நாளாகத் தொடர்ந்த போராட்டத்தின் முன்னணியாளர்கள் 6 பேரைக் கைது செய்து போராட்டத்தைக் கலைக்க முயல்கிறது போலீசு. தர்மபுரியில் புமாஇமு தோழர்களான மலர்கொடி மற்றும் அன்பு ஆகியோரைக் கல்லூரி வாயிலில் பிரச்சாரம் செய்ததற்காகக் கைது செய்தது.
வெள்ளாற்றை பாதுகாப்போம் ! கூடலையத்தூர் மணல் குவாரி முற்றுகை !
வெள்ளாற்றை காக்க விவசாயத்தை காக்க மக்கள் தானே களத்தில் இறங்கி போராட முடியும். அதற்கு போலீசு பாதுகாப்பு கொடுக்காமல், ஏன் மக்களை அச்சுறுத்துகிறது? நடப்பது சுதந்திர ஆட்சியா? ஆங்கிலேய காலனி ஆட்சியா?
பள்ளிக்கரனை ராம்நகர் டாஸ்மாக் – பெண்கள் முற்றுகை – வீடியோ
சோழிங்கநல்லூர் தாசில்தார் ஜெயப்பிரகாசை பார்த்தவுடன் சார் உங்க கையெழுத்துக்குதான் மரியாதையே இல்லையே நீங்க ஏன் சார் வீணா வரீங்க என்றவுடன் அவர் முகத்தை தொங்க போட்டுக் கொண்டுஉதவி கமிஷனரின் பின்னால் நின்றவர் ஆர்ப்பாட்டம் முடியும் வரை மக்களை பார்க்காமலேயே குனிந்தபடி நின்றார்.
























