கூடங்குளம்: மக்கள் போராட்டத்தை முறியடிக்க மத்திய-மாநில அரசுகளின் சதி!
புலிகள் பிரபாகரனைப் போல ஜெ உதவியுடன் வெற்றி பெற முடியுமென்று உதயக்குமார் நம்பச் சொல்கிறார். முள்ளிவாய்க்காலுக்கு நேர்ந்த முடிவு இடிந்தக்கரையிலும் ஏற்படக் கூடாது என்பதுதான் புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் அக்கறை, எச்சரிக்கை!
குஜராத்-இந்து மதவெறிப் படுகொலைகள்: மறுக்கப்படும் நீதி!
இந்து மதவெறி பயங்கரவாதிகளைச் சட்டப்படி தண்டிக்க முடியாது என்பதை குஜராத் படுகொலை வழக்கு விசாரணைகள் அம்பலப்படுத்துகின்றன
என்கவுண்டர்: துப்பாக்கி குற்றத்தை உருவாக்குவதுமில்லை – ஒழிப்பதுமில்லை!
புலனாய்வு செய்ய முடியாத வழக்குகளை முடிக்க போலீசாருக்கு பிணங்களைப் போல உதவும் நண்பன் இல்லை. ஆனால் பீகார் கிரிமினல்களுக்கு இது மரணபயத்தை ஏற்படுத்துமென்று உறுதி அளிக்க முடியுமா?
அமெரிக்காகாரன் சத்தியமா நான் ஒன்னுமே பண்ணல! – நித்தியானந்தா
சாருவுக்கு காச விட்டெறிஞ்சு பி.ஆர்.வோ வேலைய பாக்கச் சொன்ன மைனர் சாமி அமெரிக்காகாரனுக்கு சில கோடிய வுட்டெறிஞ்சு கிளீயரன்ஸ் சர்டிபிக்கேட் வாங்கியிருக்கான்.
வீடியோ கேம்: கணினித் திரையில் ஒரு ரவுடியிசப் பள்ளி!
உணர்ச்சி எதுவாயிருந்தாலும் அதன் ஆயுள் குறைவாய் இருக்க வேண்டுமென்பதை வீடியோ கேம் விளையாட்டுக்கள் நிலைநாட்டியுள்ளது. குறுகிய நேர அளவில், காதல், காமம், கொலை வெறி, வன்முறை ஆகிய உணர்ச்சிக் கலவைக்குள் சிறுவர்களை பிடித்துத் தள்ளுவதில் எது வெல்கிறதோ அதுவே சந்தையைக் கைப்பற்றுகிறது.
டெல்லி கார் குண்டு வெடிப்பு: பாவம் ஓரிடம், பழி ஓரிடமா?
நீண்டகால நட்பு நாடான இரானுக்கு துரோகம் செய்து, தனது நலனுக்காக அமெரிக்காவின் காலை நக்கிக் கொண்டிருக்கிறது, இந்திய ஆளும் வர்க்கம்.
ஜெயாவின் நிர்வாகத் திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து!
ஜெயாவின் பத்து மாத ஆட்சியில், மின்வெட்டு, கொலை, கொள்ளை எனத் தமிழகம் இருண்ட காலத்திற்குள் சிக்கித் தவிக்கிறது.
மின்வெட்டு: இருளில் மறைந்துள்ள உண்மைகள்
மின்வெட்டை அகற்று! கூடங்குளத்தைத் திற! என்று கோரும் சிறு தொழில் அதிபர்கள், வியாபாரிகள், விவசாயிகள் போன்றவர்கள் தம்மையறியாமல் உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கிறார்கள்
டேய், யாராவது பக்கத்துல உட்காருங்கடா!
அவ்வளவு கூட்டத்திலும் கூட பேருந்தில் ஒரு இருக்கையில் மட்டும் ஒருவருக்குப் பக்கத்தில் யாரும் அமராமல் வந்த வேகத்தில் உட்கார்ந்திருப்பவரை நோட்டம் பார்த்தவாறு நகர்ந்து போயினர்.
வங்கிக் கொள்ளையன் மல்லையாவுக்கு என்கவுண்டர் எப்போது?
வேளச்சேரி என்கவுண்டருடன் சென்னை போலீசின் கடமை முடிவடையவில்லை. இன்னுமொரு வங்கிக் கொள்ளையனின் 'கணக்கை' முடிக்க வேண்டிய பெரும்பொறுப்பு தற்போது அவர்கள் முன் காத்திருக்கிறது.
சென்னை செவிலியர் போராட்டம் – நேரடி ரிப்போர்ட்!
'இழப்பதற்கு இனி எதுவும் இல்லை' எனும் போது போராடுவது ஒன்றே தீர்வு. தங்கள் அடிப்படை கோரிக்கைகளுக்காக போராடி உழைக்கும் மகளிர் தின வாரத்தில் வெற்றி ஈட்டியிருக்கிறார்கள் மலர் மற்றும் MMM மருத்துவமனை செவிலியர்கள்.
புதை சேற்றில் சிக்கியது ஐரோப்பிய ஒன்றியம்!
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமது பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க எடுக்கும் சிக்கன நடவடிக்கைகள், ''பூமராங்'' போலத் திருப்பித் தாக்குகின்றன.
மீனவர் சுட்டுக்கொலை: இத்தாலியின் திமிர்த்தனம்! இந்தியாவின் அடிமைத்தனம்!!
மீனவர்களை கொன்ற இத்தாலியர்களைக் கைது செய்து தண்டிக்காமல், ஏகாதிபத்தியவாதிகளுக்கு அடிபணிந்து வழக்கை இழுத்தடிக்கிறது இந்திய அரசு.
சந்தை வாழும்வரை ஹிட்லருக்கு மரணமில்லை!
வன்முறை பற்றிய பீதியை உருவாக்கினால்தான் துப்பாக்கிகள் விற்க முடியும். பாலுணர்வு வெறியைக் கிளப்பினால்தான் வயாக்ரா விற்கமுடியும். எய்ட்ஸ் பயத்தைக் கிளப்பினால்தான் ஆணுறையை விற்க முடியும்.
சிறுகதை: பிராமீன்
"மாங்கா.... மாங்கா...'' , மீனாட்சி மாமி எட்டிப் பார்த்தவுடன், செல்லத்துரை குரலை மேலும் உயர்த்தினான். ''மாங்கா... மாங்கா... ருசியான மாங்கா''