privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஅமெரிக்காகாரன் சத்தியமா நான் ஒன்னுமே பண்ணல! - நித்தியானந்தா

அமெரிக்காகாரன் சத்தியமா நான் ஒன்னுமே பண்ணல! – நித்தியானந்தா

-

நித்தியானந்தா

மக்கா,

நாட்டுக்குள்ள பல சங்கதிக சூடா நடக்கது தெரியுமுல்லா! இன்னைக்குத்தாம்லே பிரணாப் முகர்ஜி நம்ம நாட்டோட பட்ஜட்ட தாக்கல் செய்யுதாறு! அதுல எத்தன மக்க தாலிய அறுக்கப் போறாரோ தெரியல. முந்தா நேத்து ரயில்வே பட்ஜெட்டுல சாதாரண மக்கமாரு டிக்கெட்டை எக்குத் தப்பா ஏத்திவிட்டுறுக்காகடே. அதுல அது கட்சி மந்திரிய மாத்தணும்னு ஆத்தா மம்தா பானர்ஜி அம்சமா காமடி பண்ணிக்கிட்டு இருக்கத பாத்தேயில்லா!

சங்கரன் கோவில்ல பிரச்சாரம் முடிஞ்சாலும் 32 மந்திரிமாரு அவனவனுக்கு வாக்கப்பட்ட வட்டத்துல வாக்கு குறைஞ்சா அம்மா பிரிச்சு மேஞ்சுருமேனு பஸ் ஸ்டாண்டு பாய் கடை பிரியாணியை தின்னு செரிக்காம கிடக்கானுகல்லா! இதுல நாங்களும் பஜாருல்ல கடை வச்சுருக்கம்லான்னு தி.மு.க தாத்தா, ம.தி.மு.க மாமா, தே.மு.தி.க சித்தப்புன்னு அல்லா தலைவருமாரும் அங்கனேயே சுத்தி சுத்தி வந்தாகல்லா!

இதெல்லாம் வுட்டுட்டு நித்தி மாமாவைப் பத்தி எழுதணுமான்னு அண்ணாச்சின்னு வினவுக்காரவுக கேட்டாக. இருந்தாலும் பயபுள்ள ஓவரா பிலிம் காட்டுதான், அவன சும்மா வுடலாமான்னு நாந்தேன் எடுத்துச் சொன்னேன்.

இலங்கைக்காரன் முள்ளி வாய்க்கால்ல கொன்னதுக்கு அவனே விசாரித்து அவனே நடவடிக்கை எடுக்கணும்னு அமெரிக்காரன் செனிவாவுல தீர்மானம் கொண்டு வரப்போறான்னு ஊர் பூறா பேச்சாக் கிடக்கு. கொலைய வேடிக்கை பாத்தவன் கொலைகாரனையே நீதிபதின்னு நியமிச்சுட்டு குய்யோ முய்யோன்னு சவுண்டு வுடுதான். இதுதாம்லே அமெரிக்காகாரனோட நீதி! இந்த லட்சணத்துல மைனர் சாமி நித்தியானந்தா அமெரிக்காரனோட ஆதாரம், கீதாரம்னு அறிவாளி பத்திரிகை ஹிந்துவுல ஏதோ பினாத்தியிருக்கான்னு கொஞ்சம் எட்டிப் பாத்தேன். அந்தக் கதயை கேளுலே!

2010-ல அந்த வூடியோவை அல்லா மச்சிங்களும் எத்தன தபா பாத்திருப்பான். அக்கா ரஞ்சிதாவோட மச்சி நித்தி அடிச்ச லூட்டிய பாத்து திருப்பதி வெங்கட்டோட பிரம்ம தரிசனம் மேறி கன்னத்துல போடாத குறையா அட்சிக்கிட்டவன் எத்தன பேரு! இப்புடி ஊரு பூறா, நாடு தாண்டி நாறுன நாஸ்திய இப்போ ஒண்ணுமே இல்லேங்குறான் இவன்!

அதாவது இந்த வூடியோ ஒரிஜினல் இல்லயாம். அல்லாம் மார்பிங் செஞ்சு ரீலீஸ் பண்ணிக்கிறான்னு அட்ச்சு வுடுறான். அத்த உலகப் புகழ்பெற்ற சில அமெரிக்க நிபுணருங்கோ பல நாள் ஆய்வு செஞ்சு, பீறாஞ்சு அல்லாம் கப்சா வீடியோன்னு கிளியரன்ஸ் கொடுத்துட்டானாம். இவுனுங்கோ லேசுப்பட்ட ஆளுங்க இல்லியாம். அமெரிக்காவுல எப்.பி.ஐயோட பல சிக்கலான வாய்தா கேசுங்களையெல்லாம் இவுனுங்கதான் பீறாஞ்சு விடை கொட்த்தானுங்களாம்.

இந்தியாவுல எந்த கோர்ட்டுல வந்துன்னாலும் சாமி சத்தியமா அந்த வூடியோ மேட்டரெல்லாம் மார்பிங்கின்னு சொல்லுறத்துக்கு பயலுவ ரெடியாம்.

ஏலேய் நித்தி, அமெரிக்காகாரனுகிட்ட ஒன்னரையனா காச விட்டெற்ஞ்சா டாக்டர் பட்டம் கொடுப்பான், ரெண்டு ரூபாய காட்டுனா ஊரப் பொளந்த கபோதின்னு விருது கொடுப்பான், எங்கூர்ல எண்ணெய் இருக்குன்னு சொன்னா படையெடுத்து கூட வருவான்.  இராக்குல பேரழிவு அயுதம் இருக்குன்னு சொன்னதோடு, அதுக்கு சி.ஐ.ஏவோட பலமான ஆதாரம் இருக்குன்னு சொல்லி ஊர ஏமாத்தி கடசீல என்னாச்சு? அங்கன பேரழிவும் இல்லை, ஆயுதமும் இல்ல, இவன்தான் அங்கன போய் ஆயுதத்த போட்டு பேரழிவ கொண்டு வந்தான்னு ஒலகமே காறித்துப்பிச்சு. இதுதாம்டே அமெரிக்காகாரனோட இன்டலிஜென்ஸ் தரம். இதப்போய் உலகத்தரம்னு சொன்னா எவம்டே நம்புவான்?

சாருவுக்கு காச விட்டெறிஞ்சு பி.ஆர்.வோ வேலைய பாக்கச் சொன்ன மைனர் சாமி அமெரிக்காகாரனுக்கு சில கோடிய வுட்டெறிஞ்சு கிளீயரன்ஸ் சர்டிபிக்கேட் வாங்கியிருக்கான். காவி உடை உடுத்துன கபோதி கலர் டீ சர்ட் போட்டு உலகத்த தாலியறுக்கும் யுனிவர்சல் ரவுடிகிட்ட விருது வாங்குணா, அத நம்புறதுக்கு நாம என்ன ஆக்கங் கெட்ட மூதியா? வுட்டா ஒபாமாவே இந்தியா வந்து நித்தி மாமாவுக்காக வக்கிலா வேசம் கட்டப் போறாரான்னு அவுத்து வுடுவான் போலிருக்கே.

தமிழ்நாட்டுல மாமி ஆட்சி நடுக்குதுன்னு ஐயருங்கோ மட்டும் துள்ளல இந்த மைனர் மாமாவும்தான் ஹை ஜம்பு கணக்கா துள்ளுறான். இவனோட ஜல்சாவ வெளியே கொண்டாந்த லெனின் கருப்பன், மேட்டரை வுட வேண்டாம்னா பணம் கொடுன்னு பேரம் பேசுனானாம். இவன் ஒத்துக்கலியாம். அதான் அவன் மார்பிங் வூடியோவை ரீலிஸ் செஞ்சான்னு இப்புடி நல்ல புள்ளையாட்டாம் அளக்கறான் இந்த அக்கீஸ்டு. இந்த பிரஸ் மீட்டிங்குல ரஞ்சிதா அக்காவும் “ஆமாம் அல்லாரும் மிரட்டுனாங்கன்னு” பால் வடியும் பச்ச புள்ளயாட்டம் கோரஸ் பாடுது.

இவுனுங்க அந்தப்புற மேட்டரோ இல்லை ஆசிரமத்து கஜனா மேட்டரோ அல்லாத்துலயும் உள்குத்து உண்டுன்னு தெரியாதா இன்னா? ஆனா இவுனக உள்குத்து பொலிட்டிக்சுல அந்த மேட்டரு வந்ததும், அதுல உள்ள ஒரிஜினாலிட்டி உண்மைங்குறதும் அல்லாருக்கும் தெரிஞ்சதுதான். அத்தப்போய் இந்த மாமா இப்போ நைசா பொய்யுன்னு அவுத்து வுடுதான்னா அல்லாம் கன்னடத்து ஐயங்கராம்மா ஆட்சியோட டானிக்குதான வேல செய்யுது?

தூங்குறவன்தான் ஹிந்து பேப்பர படிப்பான்னு டைம்ஸ் ஆஃப் இந்தியா ஒரு வெளம்பரத்தை வுட்ட வுடனே லபோ லபோன்னு அட்சிக்கிட்ட ஹிந்துக்காரன் அதுக்கு போட்டியா டைம்ஸ் ஆஃப் இந்தியாவ மேயுறவனெல்லாம் மேனா மினுக்கி பீட்டருங்கோ, ஹிந்து பத்திரிகைய படிக்கிறவுனெல்லாம் அறிவாளிங்கிற மேறி ஒரு வெளம்பரத்தை போட்டிக்கின்னு வெளியிட்டான்.

ஆனா, பாத்துக்கிடுங்க, காறித்துப்ப வேண்டிய நித்தியானந்தவோட அக்மார்க் பொய்யை ஐஞ்சு காலம் செய்தியா போட்டிருக்கான்னா இதுல யாரு அறிவாளி, யாரு முட்டாள்னு புரியுதாடா போக்கத்த மூதிகளா?

__________________________________________________

– காளமேகம் அண்ணாச்சி

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 1. அண்ணாச்சி, கட்டுரையில பூந்து விளையாடில்லா இரக்காரு. அண்ணாச்சி அதிகமா ஊருல இல்லையாடே கட்டுரையில அங்கங்க வெளியூர் பேச்சுநடை இருக்குடே அதாம்லெ விசாரிச்சேன்.

  • யக்கோவ் ஏரியாவுக்கு புச்சா ? நம்ம அண்ணாச்சி ஆல் டைம் இப்டிதான் கதம்ப சோறு மேரி கலந்து கட்டி வுடுவாரு, ஏதோ கொஞ்சம் பாத்து போட்டுக் குடுக்கா 🙂

   • அண்ணாச்சி பாணி, தனிப் பாணி ஓய்.. கலக்கறார் போங்கோ..!!! ஆனா அம்மா ஆட்சில நித்திக்கு டானிக்கு கிடைக்குதுங்கறாரே அதான் புரியலே. தேர்தல் சந்தடியில நித்தி சாமி மலையிறங்கி ஆடுது.. அப்புறந்தான் தெரியும், மலையேறுமா, சிறையேகுமான்றது..

   • கேள்விக்குறி அண்ணே! கதம்பமா பேசர, எழுதுர மனுசன் ஆல்ரௌன்டு அண்ணாச்சின்னு பேரு வச்சுக்கிட்டுல்ல எழுதனும். சாரு முதல் ஜக்கி வரை கலந்து கட்டி பிரிச்சு மேயரவர், சரியான பேச்சு மொழி வழியில் போவனுமில்ல. தருமி போல எவ்வளவு பிழையிருக்கோ அவ்வளவு குறைத்துக்கொல்லுங்கள் என்றால் எப்படி அண்ணே….

 2. சிவராத்திரி அன்னிக்கி, பாதிப் புண்ணியமாவது கிடைக்கட்டுமேன்னு கண்ண முழிச்சுண்டு உக்காந்தா, அன்னிக்கிப் பாத்து வராத தூக்கமெல்லாம் மொத்தமா வந்து விடுவேனா உன்னன்னு மல்லுக்கட்டினதால, டி.வி.ல சிவராத்திரி ஸ்பெசல் நேரடி ஒளிபரப்பு பாக்கலாம்ன்னு சானலை மேஞ்சால், ஒண்ணுல ஜக்கி ஆடிண்ட்ருக்கார், அடுத்ததுல இவன் சிவனப் போல வேசங்கட்டி மூஞ்சில தெய்வீகப் புன்னகை வழிய உக்காந்துண்டு அருள்பாலிக்கறான். இவனுக்கு முன்னால பல பக்தாள் சேர்ல சும்மா உக்காராம எம்பி எம்பி குதிச்சுண்ட்ருக்கா.. மிதக்க ட்ரைப் பண்றாளா இல்ல மிதப்புல வீடியோ நினப்புக்கு வந்து உணர்ச்சி வசப்பட்டுட்டாளான்னு தெரியல்ல.. புண்ணியந்தேடப் போய் இந்தக் கண்றாவியப் பாத்துப் பாவத்தக் கட்டிண்டுட்டேனே, பகவானேன்னு என்னப் புலம்ப வச்சுட்டன் இந்தக் காமாந்தகன்..

 3. ஏ அண்ணாச்சி… இந்த பத்திரிகைகாரனுவ அலப்பறை தாங்கலை… காச குடுத்து எதை எழுதச் சொன்னாலும் எழுதுவாவ போலுக்கு…

 4. அண்ணாச்சி நித்தியானந்தாவைப்பற்றி பொளந்து கட்டியிருக்கீங்க

 5. Nithyananda Kattule Mazhai Peyurathu….Madurai athinathile erukkum kadai varumanamellam nithya pala thaimarkaleyum, Pengaleyum than vasam ezhukka payan paduthalam…CDs velivarapokuthenmo onmai than…

 6. First we will have to blam the ladies only…as they are blindly believe Nithya for every small problems in their life,
  if married also, they are going to him without the knowledge of their husbands/ family members…
  Not only rhey loosing mental peace but also sometimes their chastity…

 7. // இதெல்லாம் வுட்டுட்டு நித்தி மாமாவைப் பத்தி எழுதணுமான்னு அண்ணாச்சின்னு வினவுக்காரவுக கேட்டாக. இருந்தாலும் பயபுள்ள ஓவரா பிலிம் காட்டுதான், அவன சும்மா வுடலாமான்னு நாந்தேன் எடுத்துச் சொன்னேன். //

  தமிழக அரசு, வினவுக்காரவுகன்னு ஏகப்பட்ட ஆதரவாளருங்க இருக்க, இப்ப கர்நாடக அரசு போட்ட போட்டுல நித்தி தமிழ் நாட்டுக்கு வராம ஆந்திராவுக்கு ஒடிட்டார்ன்னு நியூஸ் வந்து குழப்புதே அண்ணாச்சி.. சீக்கிரமா ஒரு கட்டுரையப் போடுங்க..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க